PDA

View Full Version : புத்தகங்களுடன் ஒரு பயணம்



மயூ
13-06-2007, 07:07 AM
கடவுளின் அற்புதப் படைப்புகள் பல பல இவ்வுலகில் இருக்கின்றது. இப்படியான அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் இந்தப் புத்தகங்கள். எனக்கும் புத்தகங்களுக்கும் இடையில் ஒரு இனம் புரியாத பிணைப்பு சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாறு. நான் சிறு வயதில் அம்மாவை அதிகமாக புத்தகங்கள் வாங்கித்தரச் சொல்லித்தான் அடம் பிடிப்பேனாம் :). இங்கே நான் வாசித்த புத்தகங்கள் சில பற்றியும் என் தனிப்பட்ட அனுபவங்கள் பற்றியும் ஏழுதுகின்றேன்.

எல்லாக் குளந்தைகளைப் போலவும் நானும் சிறுவயதில் அம்மா, அப்பா, சித்தி கதை சொல்லக் கேட்டுப் பின்னர் அதனால் உந்தப் பட்டு சிறு சிறு படம் பார் கதை படி புத்தகங்களைப் படித்து வந்தவன்தான். இதன் பின்னர் அம்புலிமாமா, பாலமித்ரா என்று ஒரு படி மேலே போனேன். பாலமித்ராவில் மினிநாவல் என்று ஒரு கதை வரும் அதைத் தவறாமல் படித்துவிடுவேன்.

இதன் பின்னர் ராணிக் காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று சித்திரக் கதைப் புத்தகங்கள் பார் ஒரு ஈர்ப்பு வந்தது. அதிகளவில் பிடித்த கதைகள் என்றால் இரத்தப்படலம், கெள பாய் கதைகள் என்பனவே. இதே வேளையில் வாண்டு மாமா, பாலு 007 போன்ற கதைகளையும் வாசித்ததுண்டு. சுமார் 10 வயது இருக்கும் போது பொன்னியின் செல்வன் வாசிக்க முயற்சி செய்தேன். கதை அடியோடு விளங்காமல் போனதும் புத்தகத்தை தூக்கி ராக்கையில் போட்டுவிட்டேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_smile.gif
11ம் வகுப்பு வரை பெரும்பாலும் சிறுவர் கதைகளையே வாசித்து வந்தேன். இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன். http://mayuonline.com/blog/wp-includes/images/smilies/icon_wink.gif
இதன் பிறகு தமிழ் வாணனின் துப்பறியும் கதைகளுக்கு அடிமையாகி அவர் எழுதின புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். புத்தக சாலையில் நான் படிக்காத தமிழ்வாணணின் புத்தகங்களே இல்லை என்னுமளவிற்கு அனைத்துப் புத்தகங்களையும் வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசித்தேன்.

தமிழ் வாணனின் புத்தகங்கள் முடிந்து விடவே ருசி விடாமல் போக ராஜேஷ் குமாரின் புத்தகங்களை வாசித்தேன். ஆக உருப்படியாக எந்தப் புத்தகமும் வாசிக்காமல் இந்தத் துப்பறியும் நாவல்களில் கிட்டத்தட்ட இரண்டாண்டுகள் காலம் கழித்தேன். இதைவிட ஆனந்தவிகடனில் வந்த சில தொடர் கதைகளையும் வாசித்தேன்.
இதன் பின்னர் உயர்தரப் பரீட்சைகள் வர கதைப் புத்தக வரலாறு ஓய்ந்துவிட்டது. 2002 ல் உயர்தரம் மீண்டும் எடுப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றேன். அங்கே 60 களில் அம்மா வாசித்த பொன்னியின் செல்வன் புத்தகம் கிடைத்தது. அதை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அப்போதுதான் கல்கியின் எழுத்தின் மீது காதல் வந்தது. வாசிக்க வாசிக்க அந்த உலகில் நான் வாழ்வது போல உணர்ந்தேன். ஏதோ நானே போர்க்களத்தில் போராடியதாக உணர்ந்தேன். இப்போதும் அடித்துச் சொல்கின்றேன், பொன்னியின் செல்வனுக்கு நிகராக யாரும் இதுவரை கதை எழுதவில்லை. எங்கள் அம்மா வீட்டில் அனைவரும் பொன்னியின் செல்வன் இரசிகர்கள். நானும் அதே இரத்தம் தானே அதுதான் கடைசியல் நானும் ஒரு பொன்னியின் செல்வன் இரசிகனாகிவிட்டேன்.

பொன்னியின் செல்வன் வாசிக்க முன்னரே பார்த்தீபன் கனவு, சிவகாமியின் சபதம் என்பவற்றை வாசித்து இருந்ததால் பொன்னியின் செல்வன் கதையைப் புரிந்துகொள்ள எந்தக் கஷ்டமும் இருக்கவில்லை. உலகத் தமிழர் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று. தற்போது ஆங்கிலத்திலும் உள்ளதென்று நினைக்கின்றேன்.

இதன் பின்னர் பல தமிழ் புத்தகங்கள் வாசித்தாலும் சொல்லிக்கொள்ளும் படியாக எந்தப் புத்தகமும் ஞாபகத்தில் இல்லை. இனி நானும் ஆங்கிலப் புத்தகங்களும் எப்படி நண்பர்களானோம் என்று பார்ப்போம்.

சிறு வயதில் உறவினர் ஒருவர் வாசித்துச் சொல்ல வாயைப் பிளந்து கொண்டு கேட்ட கதை என்றால் அது டின் டின் கதைதான். ஆனால் நான் பல தடவை வாசிக்க முயன்றாலும் எனக்கு விளங்கவில்லை காரணம் ஆங்கிலம் மட்டம். ஆயினும் பின்னர் 15 அல்லது 16 வயதளவில் சில இலகுவாக்கப்பட் ஆங்கிலப் புத்தகங்களின் பதிப்புகளை வாசிக்கத் தொடங்கினேன். இதில் நான் வாசித்ததுதான் ஒலிவர் டுவிஸ்ட், டேவிட் கொப்பர் ஃபீல்ட், வூத்தரிங் கெயித்ஸ், ஜேன் அயர், டொம் சோயர் போன்றவை. இவற்றில் பெரும்பாலானவை ஆங்கில கிளாசிக் கதைகளே. இதன் பின்னர் எனிட் பிளைட்டனின் புத்தகங்கள் பால் ஆர்வம் திரும்பத் தொடங்கியது. அவர் எழுதிய நாவல்கள் மற்றும் ஃபேமஸ் ஃபைவ், சீக்ரட் செவன் புத்தகங்களை வாசித்துத் தள்ளினேன்.

பல்கலைக் கழகம் வரும்வரை இந்த சிறுவர் நாவல் வாசிக்கும் பழக்கம் விட வில்லை. முதற்காரணம் ஆங்கில நாவல்களை வாசிக்க ஆங்கில அறிவு பற்றாமையே.

பல்கலைக் கழகம் வந்தபின்னர் நான் கொழும்பு வந்தேன். அப்போது தற்செயலாக ஒரு ஹரிப் பொட்டர் புத்தகம் வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது. பின்னர் என்ன ஹரி பொட்டர் இரசிகர் ஆனதுடன் ஹரி பொட்டர் புத்தகங்கள் அனைத்தையும் வாசித்துத் தள்ளிவிட்டேன். இதன் பின்னர்தான் ஹரி வெறியனாகி ஹரி பொட்டர் புத்தகங்கள் பற்றி விமர்சனங்களும் எழுதத் தொடங்கினேன்.

ஆனாலும் அந்த எழுத்தாளர் ரெளலிங் இருக்கிறாறே சொல்லி வேலையில்லை. அத்தனை திறமையான எழுத்தாளர். கற்பனையை எப்படி நிஜத்துடன் கோர்த்து நிசமாகக் காட்டுவது என்பதை அறிந்து அதன்படி கதை எழுதித் தள்ளியுள்ளர். இனி ஜூலையில் கடைசிப் புத்தகம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான். பார்ப்போம் கதை என்ன ஆகின்றது என்று.

ஹரி பொட்டருக்கு அப்பால் நான் வாசித்த ஆங்கில நாவல் என்றால் டான் பிரவுணின் சில புத்தகங்கள். முதலாவது டா வின்சி கோடு, அடுத்து ஏஞ்சல்ஸ் அன்ட் டீமென்ஸ். இதன் பின்னர் மூண்றாவதாக டிசெப்சன் பொயின்ட் புத்தகத்தை வாசித்தேன் ஒரே அலட்டல்.. அலுப்படிக்கவே புத்தகத்தை தூக்கி மூலையில் போட்டுவிட்டேன். டான் பிரவுணின் புத்தகத்தை வாசிக்கும் போது புரியம் ஆங்கில ஆசிரியர்கள் கதை எழுதுவதற்காக எவ்வளவு ஆராய்ச்சிகள் செய்கின்றார்கள் என்பது. நல்ல உதாரணம் டான் பிரவுண்தான்.. அரசியல், நுட்பம், அறிவியல், புவியியல், வரலாறு என்று அனைத்துத் துறைத் தகவல்களையும் அவரது நாவலில் போட்டுத் தூளாவியிருப்பார். விரைவில் இவர் எழுதிய டிஜிட்டல் ஃபோட்ரஸ் வாசிக்கும் எண்ணம் உள்ளது.

தற்போது வாசித்துக் கொண்டு இருப்பது சிட்னி ஷெல்டனின் புத்தகம் ஒன்று. மாஸ்டர் ஒப் த கேம். கதை சொல்லி வேலையில்லை. இந்த எழுத்தாளர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கின்றேன். அண்மையில் காலமாகிவிட்டாலும் இவரின் எழுத்துக்கள் காலா காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. ஒரு பெண்ணின் கதையை அருமையாக மெல்ல மெல்ல ஆரம்பித்து எழுதி வருகின்றமை சிறப்பு. திடீரென கதை ஓரிடத்தில் தொடங்காமல் மெல்ல மெல்ல பழைய காலத்தில் இருந்து தொடங்குகின்றது. வாசித்து முடிந்ததும் வலைப்பதிவில் வரிவான விமர்சனம் போடுகின்றேன்.

சில புத்தகங்களை இங்கே தவற விட்டிருக்காலாம் ஆனாலும் இவைதான் என் நினைவில் நீங்கா இடம் பிடித்த புத்தகங்கள். இத்துடன் என் சுய புராணத்தை முடித்துக்கொள்கின்றேன். நீங்கள் ரசித்த புத்தகம் ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் விட்டுச் செல்லுங்களேன்.

ஓவியன்
13-06-2007, 07:20 AM
மயூரேசா உங்கள் புத்தகப் பயணம் அருமையாக உள்ளது.

நீங்கள் வந்த பாதை கிட்டத் தட்ட நான் வந்த பாதையாகவே உள்ளது, சித்திரக் கதைகள், ராஜேஸ்குமார், கலகி ஆனந்தவிகடன் என்று......

லயனில் வந்த இரத்தப் படலத்திற்கு நானும் அடிமையாக இருந்தேன், அதனைப் பற்றி மோகன் அண்ணா தொடக்கிய ஒரு திரியில் சொல்லியும் இருக்கிறேன்.

அதுசரி இப்போது சிட்னி ஷெல்டனா??

நடக்கட்டும் நடக்கட்டும்.........

ஓவியன்
13-06-2007, 07:25 AM
அடே மயூரேசா உனக்கு ஆங்கில நாவல்கள் வாசிக்க முடியுமடா என்பது.

:icon_shout: :icon_shout: :icon_shout:

ஓவியன்
13-06-2007, 07:32 AM
இப்போ நினைத்தாலும் சிரிப்பு வருகின்றது.. அதாவது 16 வயது வரைக்கும் சிறுவர் கதைகள் வாசித்து இருக்கின்றேன்.

இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே!!!:smartass:

விகடன்
13-06-2007, 07:57 AM
வணக்கம் மயுரேசா.

உமது வாசிப்பு வரலாற்று ஏட்டை எமக்கு சற்று திருப்பி புரட்டிக் காண்பித்திருக்கிறீர்கள். அதன் மூலம் எமக்கு ஒரு வாசிப்பின் மீதான ஊக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஹரிப்போட்டர் முதலிரண்டு புத்தகங்கள் மட்டுமே வாசித்தேன். அந்தக் காலங்களில் எனக்கு அந்தப்புத்தகத்தின் விலையோ அகோர விலை. ஆதலால் அதன் பின்னர் வாங்கவில்லை. உங்களின் பதிவைக்கண்டபின்னர்தான் விட்டதை தொடரலாம் என்றெண்ணியுள்ளேன். ஆனால் எவ்வளவிற்கு சாத்தியப்படும் என்றுதான் தரியவில்லை.

படங்களிலே "ஆட்டோக்கிராஃப் வந்து பலை இதயங்களை கிளறிச் சென்றது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போலத்தான் உங்களின் இந்த பதிப்பும். உங்களிற்கும் சேரனிற்கும் சின்ன வித்தியாசந்தான். சேரன் கிளரத் தொடங்கியது கிட்டத்தட்ட 16 வயதிலிருந்து. ஆனால் தாங்கள் கிளரத்தொடங்கியது கிட்டத்தட்ட 5 வயது காலத்திலிருந்து.
துறையிலும் மாற்றமுண்டுதான்.

இருந்தாலும் உங்களின் இந்த அத்திவாரம் பலரது இதயங்களை அருட்டி அவர்களது பழைய சுவையான நினைவுகளை இங்கே கொண்டு வருமென்பதில் ஐயமில்லை.

மீண்டும் உங்களின் இந்த பதிவிற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறும் நபர்

ஜாவா

சிவா.ஜி
13-06-2007, 07:58 AM
இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே!!!:smartass:
நானும்தான் ஓவியன். எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத கதைகள்.பள்ளிப்பிராயத்தில் இரும்புக்கை மாயாவியின் கதைகளை உணவை மறந்து படித்திருக்கிறேன். அந்த புத்தகங்கள் ஒரு பையனிடமிருப்பதாக கேள்விப்பட்டு இதற்கு முன் பார்த்தே இராத அவன் வீட்டுக்குப்போய் அங்கேயே உட்கார்ந்து படித்துவிட்டு வந்த அனுபவமும் இருக்கிறது. இப்போதும் எனக்கும் என் மனைவிக்கு எப்போதும் ஊடல் வருவது புத்தகங்களால்தான் சாப்பிடும்போது கையில் ஒரு புத்தகம் இருக்கவேண்டும் எனக்கு. ஜூனியர்விகடனை அந்த பத்திரிக்கை ஆரம்பித்த அன்றிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். பொன்னியின் செல்வனுக்கு நான் கப்பம் கட்டாத அடிமை. இப்போதும் மின் புத்தகமாக என் கணிணியில் உள்ளது.கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் உடனே படிக்க ஆரம்பித்துவிடுவேன். அதேபோலத்தான் சாண்டில்யன் அவர்களின் கடல்புறாவும் யவனராணியும். சுஜாதாவின் மிகப்பெரிய ரசிகன் நான். கணேஷ் வசந்த்துக்கு ரசிகர் மன்றமே வைக்குமளவுக்கு அவர் எழுத்துக்கள்மேல் காதல். புத்தகங்கள்தான் மனிதனை மனிதனாக வைத்திருக்குமென்று உறுதியாக நினைப்பவன் நான்.

விகடன்
13-06-2007, 08:02 AM
எத்தனை முறை படித்தாலும் அலுக்கவே அலுக்காத கதைகள்.பள்ளிப்பிராயத்தில் இரும்புக்கை மாயாவியின் கதைகளை உணவை மற்ந்து படித்திருக்கிறேன். ஆமாம். எனக்கு இதை வாசிக்கும்போது சமயப் புத்தகந்தான் ஞாபகம் வருகிறது. பாடசாலையோ வீட்டிலோ, சமயப்புத்தகத்தின் நடுவே வைத்து படிப்பேன். கேட்டால் தேவாரம் பாடமாக்குவதாக சொல்லிக் கொள்வேன்.

முத்திரை சேகரிப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நானோ மாயாவி கதைப் புத்தகங்கள் சேர்த்திருக்கிறேன். அதெல்லேம் அந்தக்காலம்.

ம்ம்ம்ம்ம்ம்ம்

ஓவியன்
13-06-2007, 08:09 AM
ஆகா சிவாஜி!

நீங்களும் நம்ம கட்சிதானா?

இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லாரன்ஸ் டேவிட் போன்ற பாத்திரங்களை மறக்க முடியுமா?

சுஜாதாவின் கணேஸ் வசந், பட்டுக் கோட்டைப் பிரபாகரின் நரேன் வைஜேந்தி, ராஜேஸ்குமாரின் விவேக் ரூபலா என்று நானும் ஆவலாய்த் தேடித் தேடிப் படித்த காலங்கள் எல்லாம் உண்டு.

இன்றும் என் மேசையில் இருக்கும் ஒரு புத்தகம் யவன ராணி - எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது.

மனோஜ்
13-06-2007, 08:17 AM
எனக்கு புத்தகம் வாசிப்பதில் அவ்வளவாக பிரியம் இல்லை
விருப்பமாக ஒன்று இரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளேன்
மயு உங்கள் புத்தக பயணம் அருமை நண்பரே
வாழ்த்துககள் தொடர்ந்து படித்து மகிழ

சிவா.ஜி
13-06-2007, 08:23 AM
ஆமாம் ஓவியன் அந்த கதாப்பாத்திரங்களை மறக்கவே முடியாது. அதே போல சுவையுள்ள காமிக்ஸ்கள் இப்போது வருவதில்லை. குமுதத்தில் தொடராக வந்த பட்டாம் பூச்சியும் எனக்குப்பிடித்த கதைகளுள் ஒன்று. சுபாவின் நாவல்களும் அவர்களின் வித்தியாசமான கதைசொல்லும் விதமும் நன்றாக இருக்கும். எண்டெமூரி வீரேந்திரநாத்தின் அமானுஷ்ய கதைகள் சுவாரஸ்யாமாக இருக்கும். இந்த வயதிலும் சுஜாதா அவர்கள் என்ன போடு போடுகிறார். கிரேட்.

மயூ
13-06-2007, 08:26 AM
மயூரேசா உங்கள் புத்தகப் பயணம் அருமையாக உள்ளது.

நீங்கள் வந்த பாதை கிட்டத் தட்ட நான் வந்த பாதையாகவே உள்ளது, சித்திரக் கதைகள், ராஜேஸ்குமார், கலகி ஆனந்தவிகடன் என்று......

லயனில் வந்த இரத்தப் படலத்திற்கு நானும் அடிமையாக இருந்தேன், அதனைப் பற்றி மோகன் அண்ணா தொடக்கிய ஒரு திரியில் சொல்லியும் இருக்கிறேன்.

அதுசரி இப்போது சிட்னி ஷெல்டனா??

நடக்கட்டும் நடக்கட்டும்.........
ஆமாம் ஓவியன்.. அனேகமானோரின் பாதை ஒன்றாகத்தான் இருக்கும். கல்கி, ஆ.வி வாசித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆமாம் இப்போது சிட்னி ஷெல்டன்தான்... ஏன் அந்தக் கேள்விக் குறி??:smilie_abcfra:



:icon_shout: :icon_shout: :icon_shout:
சரி சரி... சிரியுங்க


இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது நான் இப்போதும் வாசித்து வருகிறேனே!!!:smartass:
காதைக் கிட்டக் கொண்டு வாங்க... நானும் நேரம் கிடைக்கும் போது வாசிப்பது உண்டுதான்.. :grin:

ஆதவா
13-06-2007, 08:29 AM
இரப்பா. நான் பிறகு வாசித்துக் கொள்(ல்)கிறேன்...

மயூ
13-06-2007, 08:29 AM
வணக்கம் மயுரேசா.

உமது வாசிப்பு வரலாற்று ஏட்டை எமக்கு சற்று திருப்பி புரட்டிக் காண்பித்திருக்கிறீர்கள். அதன் மூலம் எமக்கு ஒரு வாசிப்பின் மீதான ஊக்கத்தை அதிகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று சொன்னால் மிகையாகாது. ஹரிப்போட்டர் முதலிரண்டு புத்தகங்கள் மட்டுமே வாசித்தேன். அந்தக் காலங்களில் எனக்கு அந்தப்புத்தகத்தின் விலையோ அகோர விலை. ஆதலால் அதன் பின்னர் வாங்கவில்லை. உங்களின் பதிவைக்கண்டபின்னர்தான் விட்டதை தொடரலாம் என்றெண்ணியுள்ளேன். ஆனால் எவ்வளவிற்கு சாத்தியப்படும் என்றுதான் தரியவில்லை.

படங்களிலே "ஆட்டோக்கிராஃப் வந்து பலை இதயங்களை கிளறிச் சென்றது கேள்விப்பட்டிருப்பீர்கள். அதே போலத்தான் உங்களின் இந்த பதிப்பும். உங்களிற்கும் சேரனிற்கும் சின்ன வித்தியாசந்தான். சேரன் கிளரத் தொடங்கியது கிட்டத்தட்ட 16 வயதிலிருந்து. ஆனால் தாங்கள் கிளரத்தொடங்கியது கிட்டத்தட்ட 5 வயது காலத்திலிருந்து.
துறையிலும் மாற்றமுண்டுதான்.

இருந்தாலும் உங்களின் இந்த அத்திவாரம் பலரது இதயங்களை அருட்டி அவர்களது பழைய சுவையான நினைவுகளை இங்கே கொண்டு வருமென்பதில் ஐயமில்லை.

மீண்டும் உங்களின் இந்த பதிவிற்கு பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டு விடைபெறும் நபர்

ஜாவா
நன்றி ஜாவா...!!! :medium-smiley-029:
என் அனுபவங்களை எழுதக் காரணமாக இருந்தது பாரதி அவர்களின் தேதியில்லாக் குறிப்புகள்தான். அதை வாசித்தபின்னர்தான் இது போன்ற பரணைத் தோண்டி எடுக்கும் பதிவுகளை எழுதத் தொடங்கினேன். இதுக்குப் போய் சேரன் என்று ஒப்பிடுவது உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியேலயா????

நிச்சயமாகத் தொடர்ந்து ஹரிப்பொட்டர் புத்தகங்களைப் படியுங்கள்...!!!! அது ஒரு சுகானுபவம்..!!!:icon_shades:

மயூ
13-06-2007, 08:32 AM
எனக்கு புத்தகம் வாசிப்பதில் அவ்வளவாக பிரியம் இல்லை
விருப்பமாக ஒன்று இரண்டு புத்தகங்கள் மட்டுமே படித்துள்ளேன்
மயு உங்கள் புத்தக பயணம் அருமை நண்பரே
வாழ்த்துககள் தொடர்ந்து படித்து மகிழ
வாசியுங்ள் நண்பரே...!!! ஒரு தடவை ஆரம்பித்துவிட்டால் பின்னர் நிறுத்த முடியாத சுகமான அனுபவம் இது.. எதற்கும் முயன்று பாருங்கள்.:nature-smiley-008:

மயூ
13-06-2007, 08:38 AM
ஆமாம். எனக்கு இதை வாசிக்கும்போது சமயப் புத்தகந்தான் ஞாபகம் வருகிறது. பாடசாலையோ வீட்டிலோ, சமயப்புத்தகத்தின் நடுவே வைத்து படிப்பேன். கேட்டால் தேவாரம் பாடமாக்குவதாக சொல்லிக் கொள்வேன்.

முத்திரை சேகரிப்பது கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நானோ மாயாவி கதைப் புத்தகங்கள் சேர்த்திருக்கிறேன். அதெல்லேம் அந்தக்காலம்.

ம்ம்ம்ம்ம்ம்ம்


ஆகா சிவாஜி!

நீங்களும் நம்ம கட்சிதானா?

இரும்புக்கை மாயாவி, ஸ்பைடர், டெக்ஸ் வில்லர், லாரன்ஸ் டேவிட் போன்ற பாத்திரங்களை மறக்க முடியுமா?

சுஜாதாவின் கணேஸ் வசந், பட்டுக் கோட்டைப் பிரபாகரின் நரேன் வைஜேந்தி, ராஜேஸ்குமாரின் விவேக் ரூபலா என்று நானும் ஆவலாய்த் தேடித் தேடிப் படித்த காலங்கள் எல்லாம் உண்டு.

இன்றும் என் மேசையில் இருக்கும் ஒரு புத்தகம் யவன ராணி - எத்தனை முறை படித்தேன் என்று எனக்கே தெரியாது.


ஆமாம் ஓவியன் அந்த கதாப்பாத்திரங்களை மறக்கவே முடியாது. அதே போல சுவையுள்ள காமிக்ஸ்கள் இப்போது வருவதில்லை. குமுதத்தில் தொடராக வந்த பட்டாம் பூச்சியும் எனக்குப்பிடித்த கதைகளுள் ஒன்று. சுபாவின் நாவல்களும் அவர்களின் வித்தியாசமான கதைசொல்லும் விதமும் நன்றாக இருக்கும். எண்டெமூரி வீரேந்திரநாத்தின் அமானுஷ்ய கதைகள் சுவாரஸ்யாமாக இருக்கும். இந்த வயதிலும் சுஜாதா அவர்கள் என்ன போடு போடுகிறார். கிரேட்.

மொத்தத்தில் யாவரும் ஒரே மாதிரியாகப் மாயாவி, சமயப் புத்தகத்தினுள் கதைப் புத்தகம் என்று இருந்திருக்கின்றோம்... ஹி... ஹி....:icon_shok:

ஓவியன்
13-06-2007, 08:38 AM
காதைக் கிட்டக் கொண்டு வாங்க... நானும் நேரம் கிடைக்கும் போது வாசிப்பது உண்டுதான்.. :grin:

காதைக் கடித்து விட மாட்டீரே?:icon_shok:

மயூ
13-06-2007, 08:41 AM
:icon_cool1:
இரப்பா. நான் பிறகு வாசித்துக் கொள்(ல்)கிறேன்...
உன் அன்பைப் பார்த்தால் புல்லரிக்குதப்பா...
வாசித்துக்கொ(ல்)ள்ள அட்வான்ஸ் வாழ்த்துக்கள்....!!!!!

மயூ
13-06-2007, 08:46 AM
காதைக் கடித்து விட மாட்டீரே?:icon_shok:
ஹி.. ஹி.. நக்கலு... ஒரு தடவை கதைத் தந்து பாக்கிறது!!! :music-smiley-010:

ஓவியன்
13-06-2007, 08:49 AM
ஹி.. ஹி.. நக்கலு... ஒரு தடவை கதைத் தந்து பாக்கிறது!!! :music-smiley-010:
இருப்பதோ இரண்டு தானே - அதையெல்லாம் பணயம் வைக்க நான் தயாரில்லையப்பு.:food-smiley-008:

இதயம்
13-06-2007, 08:59 AM
புத்தகங்கள் மீதான என் தாகம் என் நினைவு தெரிந்த நாளிலிருந்தே துவங்கிவிட்டது போல் ஒரு உணர்வு. என் வாசிப்பு ஆர்வத்திற்கு அடித்தளம் போட்டவர் என் தாய் வழி தாத்தா. சிறுவயதில் நான் அங்கு பிறந்து வளர்ந்தவன் என்பதால் தாத்தாவோடு, அவரின் புத்தகங்களோடு வளர்ந்தேன். அவரை நான் பெரும்பாலும் படித்துக்கொண்டே படுத்திருக்கும் நிலையில் தான் அதிகம் பார்த்திருக்கிறேன். அந்த நேரங்களில் நான் அவரின் வயிறில் ஏறி அமர்ந்து விளையாடுவதுண்டு. படித்துக்கொண்டே இருக்கும் அவர் அந்த புத்தகத்தை தன் நெஞ்சின் மேல் கவிழ்த்து வைத்தபடியே உறங்கிவிடுவார். அப்போது கழற்றி வைக்காத அவரின் மூக்குக்கண்ணாடியை நான் பத்திரமாக கழற்றி வைத்ததுண்டு. சில நேரங்களில் அதை என் கண்ணில் அணிந்து படிக்க முயற்சித்து ஏன் முடியவில்லை என்று குழம்பியதுண்டு. அவர் படித்த வெகுஜன பத்திரிக்கைகளான குமுதம், ஆனந்த விகடன் புரிந்த மாதிரி கனமான, பக்கங்கள் மிகுந்த புத்தகங்கள் புரியவே இல்லை. அப்படிப்பட்ட ஒரு புத்தகம் புரிந்து, பிடித்தது என்றால் அது சிந்து நதிக்கரையினிலே என்ற புத்தகம்.

என்னுடைய பால்ய பருவத்தில் 4-வது படிக்கும் காலங்களில் பள்ளியின் மாணவர் தலைவன் நான் என்பதால் தலைமை ஆசிரியர் கொண்டு வரும் தினமலர் நாளேட்டுடன் கூடிய இலவச இணைப்பான சிறுவர் மலரை உரிமையுடன் எடுத்துப்படிக்க அனுமதிக்கப்பட்டிருந்தேன். வெள்ளிக்கிழமை எப்போது வரும், சிறுவர் மலர் எப்போது படிக்கலாம் என்று ஏங்கிய நாட்களை நினைத்தால் சிரிப்பு வருகிறது. அந்த நாட்களில் ராணி காமிக்ஸில் இரும்புக்கை மாயாவி, ஜேம்ஸ்பாண்ட் 007, ஸ்பைடர் மேன், டெக்ஸ்வில்லர் என்று ஒவ்வொரு கதாபாத்திரங்களும் என் ஆதர்ச மனிதர்கள். அதனை ஒட்டி அம்புலி மாமா, இரத்னபாலா என்று அலைந்தேன். எனக்கு கிடைக்கும் சிறுசிறு அன்பளிப்புகளை புத்தகங்களுக்கு தான் செலவு செய்தேன். வேடிக்கை தான்..! சின்ன சின்ன விஷயங்களுக்காக ஏங்கி தவித்த தருணங்கள் அவை. அவை சின்ன விஷயங்கள் தான் என்னை முழுதும் திருப்திபடுத்துபவையாக இருந்தன. எதிர்ப்பார்ப்புகள் அதிகம் இல்லாத பருவம் அல்லவா..?

உயர்நிலைப்பள்ளி நாட்களில் மாத நாவல்களின் மேல் பைத்தியம் ஏற்பட்டது. அம்மா வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்க அனுப்பும் போது அதில் மிச்சம் பிடித்து பழைய புத்தகக்கடைகளை தேடி, தேடி கட்டுகட்டாக மாத நாவல்களை வாங்கி ஒன்றன்பின் ஒன்றாக படித்து தீர்த்ததை நினைத்தால் இப்படியெல்லாமா இருந்தோம் என்று வியப்பாக இருக்கிறது. அவர்களின் கதைகளில் வரும் கதாபாத்திரங்களான

ராஜேஷ்குமார் - விவேக்-ரூபலா
பட்டுக்கோட்டை பிரபாகர் - பரத்-சுசீலா
சுபா - நரேன்-வைஜெயந்தி
ராஜேந்திரக்குமார் - ராஜா- ஜென்னி

ஆகியோர் அடிக்கும் கூத்துக்கள், உண்மையை கண்டுபிடிக்கும் விதம் எல்லாம் பரபரப்புடன் என்னை படிக்க வைக்கும். புத்தகங்களால் நான் என் அம்மாவிடம் வாங்கிய திட்டுக்கள் கொஞ்சநஞ்சமல்ல.எல்லா மாத நாவல் எழுத்தாளர்களின் படைப்புகளை படைத்தாலும் ராஜேஷ்குமார் நாவல் என்றால் பைத்தியம் எனக்கு. அவரின் எளிமையான, இயல்பான நடை, ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் வைக்கும் திடுக் திருப்பம், விஞ்ஞானம், துப்பறிதல், கொலை என்று கலந்து கட்டி எல்லாவற்றிலும் வெற்றி கொடி நாட்டும் அருமையான எழுத்தாளர் அவர். இன்றும் மாத நாவல் உலகில் அவர் தான் முடி சூடா மன்னனாக திகழ்கிறார் விவசாயப்படிப்பு படித்த இந்த கோயமுத்தூர் காரர். அவரின் படைப்புகளில் வரும் விவேக், அவர் மனைவி ரூபலா, அவர்கள் மகன் பாரத் ஆகியோர் என் குடும்பத்தில் ஒன்றிவிட்டது போல் அவர் கதைகளை படிக்கும் போது ஒரு உணர்வு ஏற்படும் .

கல்லூரி நாட்களில் இன்ன புத்தகம் தான் என்று பாராமல் எல்லோருடைய கதை, கவிதை என்று படித்து தீர்த்தேன். ஆங்கிலப்புத்தகங்களின் அறிமுகமும் அப்போது தான். திருமணத்திற்கு பிறகு தான் புத்தகங்களை தேடிய ஓட்டம் வேகம் குறைந்தது. இப்போதும் கூட எல்லோருடைய நாவல்களை படிக்கிறேன். ஆனால், அப்போதிருந்த ஆர்வம், உற்சாகம் குறைந்துவிட்டது போல் ஒரு உணர்வு. காரணம், வாழ்க்கை கொடுத்த அனுபவம், வலிகள் கொடுத்த சலிப்பு அல்லது அலுப்பு. மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதிருப்பது என்பது எவ்வளவு பெரிய உண்மை.!!

மயூ
13-06-2007, 09:00 AM
இருப்பதோ இரண்டு தானே - அதையெல்லாம் பணயம் வைக்க நான் தயாரில்லையப்பு.:food-smiley-008:
இரண்டு இருப்பதால் ஒன்றை பணயம் வைக்கலாம் தானே????? :icon_cool1:

ஓவியன்
13-06-2007, 09:02 AM
இரண்டு இருப்பதால் ஒன்றை பணயம் வைக்கலாம் தானே????? :icon_cool1:

உம்முடைய கண்ணில் ஒன்றை இனாமாகத் தந்தால் நான் தயார்!:icon_shout:

சிவா.ஜி
13-06-2007, 09:02 AM
மயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.

மயூ
13-06-2007, 09:06 AM
உம்முடைய கண்ணில் ஒன்றை இனாமாகத் தந்தால் நான் தயார்!:icon_shout:
ஆட்டுக்கும் மாட்டுக்கும் முடிச்சுப் போடுறியளே!!!


மயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.
ஹி.. ஹி.. அதுதானே நமக்கு வேண்டும்!!!

இதயம் உங்கள் பதிவு அருமை... பின்னூட்டம் என்பதற்று நீங்களே ஒரு கட்டுரை எழுதியுள்ளீர்களே... அதைத் தனியான கட்டுரையாக நீங்கள் பதியலாம் என்பதே என் எண்ணம்!!!! :4_1_8:

ஓவியன்
13-06-2007, 09:08 AM
மயூரேசன் பிறகு அவருக்கு இன் கமிங் கட் ஆகிவிடும்.அப்புறம் அவுட் கோயிங்கிற்கும் இன் கம்மிங்கிற்கும் கணெக்சன் இல்லாமலும் போய் விடும்.:icon_cool1:

மயூ
13-06-2007, 09:10 AM
அப்புறம் அவுட் கோயிங்கிற்கும் இன் கம்மிங்கிற்கும் கணெக்சன் இல்லாமலும் போய் விடும்.:icon_cool1:
மத்திய கிழக்கில என்ன மொபைல் கம்பனியிலயா வேலை செய்யுறீங்க???:icon_cool1:

rocky
09-01-2008, 02:06 PM
அன்புள்ள தோழர் மயூரேசன் அவர்களுக்கு,

மிகவும் அருமையான பதிப்பை தொடங்கியிருக்கிறீர்கள். புத்தகம் பற்றிய நம் மன்றத்தின் இன்னுமொரு திரி. இங்கேயும் என் பதிப்பை இடுவதில் மகிழ்கிறேன். நம் இருவருக்கும் ஒரு கருத்தில் மிகவும் பொருந்துகிறது, அது "பொன்னியின் செல்வன்" பற்றிய தங்கள் கருத்து. நானும் அதை முழுமையாக ஆதரிக்கிறேன். என்னுடைய புத்தகம் பதிப்பில் நான் கொஞ்சம் கடுமையாகவே கூறியிருந்தேன் ஒரு ஆங்கில நாவலான ஹாரி பாட்டருக்கு கொடுக்கும் மரியாதையை நம் தமிழ் நாவலுக்கு அதைவிட பன்மடங்கு சிறந்த நாவலான "பொன்னியின் செல்வன்" ஏன் கொடுக்கமாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டிருந்தேன், ஆதற்காக மற்ற மொழி புத்தகங்களை வேண்டாம் என்று கூறவில்லை. உங்களைப்போல் இரண்டையும் படிப்பவரானால் எனக்கு மகிழ்ச்சியே (ஒரு வேளை நீங்கள் ம்ட்டும் "பொன்னியின் செல்வன்"னை விட்டி விட்டு ஹாரி பாட்டரை மட்டும் இங்கே பாராட்டியிருந்தால் அவ்வலவுதான் நம் இருவருக்கும் வார்த்தைப்போர் ஆரம்பமாகியிருக்கும்). மற்றபடி ஆங்கில புத்தகங்கள் இதுவரை நான் படித்ததில்லை, ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் நாடகங்களின் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படித்திருக்கிறேன் அதுவும் வெரும் இரண்டு மட்டும். டாவின்ஸி கோட் புத்தகமாக படிக்கவில்லை ஆனால் படம் பார்த்தேன் மிகவும் பிடித்திருந்தது. இப்போது புத்தகத்தையும் பதிவிரக்கம் செய்து வைத்திருக்கிறேன் படிக்கத்தான் நேரமில்லை. தமிழிலேயே நல்ல விருவிருப்பான பயனுள்ள புத்தகங்கள் இருந்தால் சொல்லுங்கள். (ராஜேஷ்குமார் நாவல்கள் என்று சொல்லிவிடாதீர்கள்
அதைத்தவிர வேறு). மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்கள், நன்றி.

மயூ
09-01-2008, 02:13 PM
நன்றி ரொக்கி!
உங்கள் தமிழ் ஆர்வத்தைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. ஆனாலும் தமிழ் ஆங்கிலம் என்று ஒரு வட்டத்திற்குள் நிக்காலமல் பலதையும் வாசிக்க வெண்டும் என்பதே என் வேண்டுகோள்!

மற்றும் படி பொன்னியின் செல்வன் இரசிகர் ஒருவரை மீள சந்திப்பதில் மகிழ்ச்சி! தமிழைத் தமிழன் படிக்காவிட்டால் யார் படிப்பர்!!!!

இப்போது புத்தகங்கள் வாசிக்க நேரம் அவ்வளவாகக் கிடைப்பதில்லை ஆனாலும், விறு விறுப்பு தேடுபவராயிருந்தால் ஆங்கில எழுத்தாளர் ஷிட்னி ஷெல்ட்டனை நான் பரிந்துரைப்பேன்.. ஆனால் ஆங்கிலப் புத்தகம்தான்!