PDA

View Full Version : ரசிகர்களை ஏமாற்றும் இந்தியக் கிரிக்கெட்!.

ராஜா
13-06-2007, 06:53 AM
அன்புள்ளம் கொண்டோரே !

நமது அணியை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக தங்களில் பலர் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் உண்மை அதுவல்ல..

உண்மையான போட்டி என்று வந்தால் ந்ம்மால் ஜிம்பாப்வே, கென்யா மற்றும் வங்காள தேச அணிகளை மட்டுமே வெல்ல முடியும்.

பின் எவ்வாறு மற்ற அணிகளை வெற்றி கொள்கிறோம் ?

இந்தியா மிக அதிகமான "வாங்கும் சக்தி" யைக் கொண்டுள்ள நாடு. அது மட்டுமல்ல...மிகப்பெரிய அளவிலான ரசிகர் கூட்டத்தையும் கொண்டுள்ளது. அவர்களில் பெரும்பாலோர் தொலைக்காட்சிப் பெட்டியில் விளையாட்டை ரசிப்பவர்கள். இவர்கள் விளையாட்டை மட்டும் பார்ப்பதில்லை. ஆயிரக்கணக்கான விளம்பரங்களும் கூடவே அவர்களது மூளையில் திணிக்கப் படுகின்றன.
இது நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவு பணம் புழங்கும் வியாபாரமாகும்.
எனவே தான் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை பெற நான், நீ என்று அடித்துக் கொள்கிறார்கள். நீதி மன்றப் படிக்கட்டிலும் ஏறி இறங்குகிறார்கள்.
இந்த உரிமை வழங்கும் அதிகாரம் பி.சி.சி.ஐ. எனப்படும் "இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தி" டம் உள்ளது.
எப்படி இந்தியா ஜெயிக்கிறது என்று சொல்லாமல் ஏதேதோ சொல்கிறானே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது..

சற்றுப் பொறுங்கள். அதைத்தான் சொல்ல வருகிறேன். இந்திய ரசிகர்கள் கடைசிவரை எல்லா விளம்பரங்களையும் பார்க்க வேண்டுமானால் இந்தியா ஜெயிக்க வேண்டும். அல்லது ஜெயிக்க வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையாவது நேயர்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் டி.வி. யை நிறுத்தி விட்டு எல்லாரும் அவரவர் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள prime time எனப்படும் விளம்பர வினாடிகள் பார்வையாளர் இன்றி வீணாகி விடும்.
இப்போது புரிகிறதா, இந்தியா வென்றாலும் தோற்றாலும் போட்டி 50 வது ஓவர் வரையோ அல்லது 5 ம் நாள் வரையோ ஏன் நீடிக்கிறது என்று?. அதாவது, தொலைக்காட்சி விளம்பரங்கள் அனைத்தும் ஒளிபரப்பப் வசதியாக போட்டி இழுத்துச் செல்லப்படுகிறது.

சரி..இதற்கும் இந்தியா மாயையான வெற்றி பெறுவதற்கும் என்ன சம்பந்தம்.? அது எவ்வாறு செயலாக்கம் செய்யப்படுகிறது?

ஒவ்வொரு முறையும் இந்திய அணி வெற்றி பெற இயலாது. நான் முன்னமே சொன்னபடி அதற்கான திறமையும், வலிமையும் கொண்ட அணியாக தற்போது உருவாக்கப் படுவதில்லை. கிரிக்கெட் அதிகமான பணம் புழங்கும் விளையாட்டு. இந்த கற்பக விருட்சத்தை, காமதேனுவைக் கொண்டு வேண்டிய மட்டும் பலனடைய வேண்டும் என்ற பேராசை அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்குமே இருக்கிறது.

ஆகவே தான் கிரிக்கெட் தற்போது WWE போல ஆகீவிட்டது.

மீதிப் பகுதி அடுத்த பதிவில்.. தங்களுடைய மேலான கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் எதிர்நோக்கி ...ராஜா

.

ஓவியன்
13-06-2007, 07:23 AM
அண்ணா!!

வித்தியாசமான அலசல் சுவராசியமாகவும் இருக்கிறது, தொடருங்கள் உங்களுடன் இணைந்து வரக் காத்திருக்கிறேன்.

ஷீ-நிசி
13-06-2007, 07:26 AM
பின் ஏன் பணம் கொழிக்கும் முக்கியமான உலக கோப்பை போட்டியில் இந்தியாவை காலிறுதிக்கு கூட விளம்பரதாரர்களால் அழைத்து செல்ல இயலவில்லை ராஜா சார்???

ராஜா
13-06-2007, 07:57 AM
பின் ஏன் பணம் கொழிக்கும் முக்கியமான உலக கோப்பை போட்டியில் இந்தியாவை காலிறுதிக்கு கூட விளம்பரதாரர்களால் அழைத்து செல்ல இயலவில்லை ராஜா சார்???

நடப்பதெல்லாம் உண்மையானவையே என்று நம்பும் உங்களைப் போன்றோர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளவும் சமாதானப்படுத்திக் கொள்ளவும்தான்..

தொடர்ந்து படித்து வாருங்கள்.. நான் சொல்லப்போகும் உண்மைகள் உங்களையும் சரியென்று உணர வைக்கும்..

அதுவரை....

இதுபோன்ற கேள்விகளைக் கேளுங்கள்.. பதில் தெரிந்தால் சொல்கிறேன்...!

maggi
13-06-2007, 01:40 PM
நீங்கள் சொல்லுவதும் ஒரு வகையில் ஏற்று கொள்ள வேண்டிய விசயமாகவே இருக்கின்றது
எழுதுங்கள் மீதியையும் படித்து விட்டு என் கருத்தை சொல்லுகிறேன்.
நீங்கள் சொல்லுவது எந்த அளவுக்கு உண்மை என்று

அறிஞர்
13-06-2007, 01:55 PM
ஆஹா புது புது செய்திகள்.. ராஜா அண்ணா மூலம் கிரிக்கெட் உலகில் நடக்கும் சில காரியங்கள் வெளிவரட்டும்... நாம் தெரிந்துக் கொள்வோம்.

அமரன்
14-06-2007, 07:19 AM
கிரிக்கட்டைப்பற்றி ராஜா அவர்கள் சொல்கின்றாரே! என்ன என்று பர்ப்போம் என வந்தால் மனுசர் தொடர்ந்து படிக்க வைத்து விட்டார். அடுத்தவெடி எங்கே.

namsec
14-06-2007, 07:27 AM
விளையாட்டை விளயாட்டாக பாருங்கள்

ராஜா
14-06-2007, 07:33 AM
கிரிக்கட்டைப்பற்றி ராஜா அவர்கள் சொல்கின்றாரே! என்ன என்று பர்ப்போம் என வந்தால் மனுசர் தொடர்ந்து படிக்க வைத்து விட்டார். அடுத்தவெடி எங்கே.

நன்றி அமர்.. இன்று அடுத்த பதிவை இடுகிறேன்..!

ராஜா
14-06-2007, 01:38 PM
நல்லது நண்பர்களே..

நாம் இந்த பொருளைப் பற்றி மேலும் அலசும் முன் உங்களுக்கு ஒரு வீட்டுப் பாடம் தருகிறேன். அதற்கு உங்களுடைய பதில் என்னவாக இருக்கும் என்பதை அறிய மிக ஆவலாக உள்ளேன்.

தயவு செய்து அடுத்த வகுப்பு துவங்குமுன் கீழே உள்ள 3 கேள்விகளுக்கு பதிலளித்து உங்கள் வீட்டுப் பாடத்தை சமர்ப்பித்து விடுங்கள் !!!!!!

இதோ.....

1) மைதானத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் காண்பிக்கும் தொலைக்காட்சி காமிராக்கள், மிகவும் முக்கியமான நிகழ்வான toss எனப்படும் காசு சுண்டுதலை ஆதியோடந்தமாக விலாவரியாக ஏன் காட்டுவதில்லை..?

2) பெரும்பாலான சமயங்களில், 50 அல்லது 100 ஒட்டங்கள் எடுக்கும் மட்டையாளர்கள் ஆரம்பத்தில் கொடுக்கும் பிடிகள் (catches) நழுவ விடப்படுவது ஏன்? அவ்வாறு தப்பிப் பிழைக்கும் மட்டையாளர்கள், 50 அல்லது 100 ஓட்டங்கள் எடுத்த பின் உடனடியாக ஆட்டமிழந்து விடுவது ஏன் என்று இது வரை சிந்தித்திருக்கிறீர்களா?

3) பயிற்சியின் போது காயமடைந்ததால் 1 மாதத்துக்கு ஒரு வீரர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப் படுவதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்ந்திருக்கிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு தங்களுக்கு தெரிந்த விடைகளை இங்கு வருபவர்கள் அனைவரிடமும் எதிர் பார்க்கிறேன்..

சரி..இப்போது நமது பொருளுக்கு திரும்புவோம்..

உலகத்திலேயே சர்வ வல்லமை உள்ள அணி என்றால் அது ஆஸ்திரேலியா தான்.. சிறந்த பயிற்சியாளர் ( ஜான் புச்சானன்), சிறந்த அணித்தலைவர் ( ரிக்கி பாண்டிங் ), சிறந்த வேகப் பந்து வீச்சாளர் (க்ளென் மெக்ராத்), சிறந்த சுழற் பந்து வீச்சாளர் (ஷேன் வார்னே), மற்றும் பல்திறன் வீரர்கள், உலகத் தர மட்டையாளர்கள் என எல்லா வகையிலும் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ள அணி அது.

நியாயமான போட்டி என்று நடந்தால் 'அனைத்துப் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தான் வெற்றி பெரும். இது தொடர்ந்து நடந்தால் என்ன ஆகும்? ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஆர்வமுடன் அனைத்துப் போட்டிகளையும் காண்பர். ஆனால் மற்ற நாட்டு ரசிகர்கள் மெல்ல மெல்ல தங்கள் கிரிக்கெட் ஆர்வத்தை இழப்பர். ஏனெனில் ஒவ்வொரு போட்டியின் முடிவும் தெரிந்த விஷயமாகிப் போய்விடும்..அல்லவா ?

இது நடந்தால் நான் முன்னமே சொன்னபடி விளம்பர வருவாய் குறைய ஆரம்பித்து விடும்.இது ஐ.சி.சி க்கு நல்லதல்ல.. ஏன் ஆஸ்திரேலியாவுக்கே கூட வருவாய் குறைந்து விடும். எப்படியும் ஆஸ்திரேலியா அணிதான் வெல்லும் என்பது தெரிந்தால், எல்லா நாட்டு ரசிகர்களுக்கும் ( ஆஸ்திரேலியா உட்பட) கிரிக்கெட் மீது உள்ள மோகம் குறைந்து விடும்..மோகம் குறைந்தால் வேலைகளைத் தள்ளிப் போட்டு விட்டு டி.வி. முன் தவம் கிடப்பது குறைந்து விடும். அது குறைந்தால் டி.ஆர். பி. ரேட்டிங் எனப்படும் பார்வையாள்ர் குறியீடு குறைந்து விடும்.அது குறைந்தால் விளம்பர வருவாய் குறையும். டி.வி. உரிமைகள் குறைந்த தொகைக்கே ஏலம் கேட்கப்படும். சரியாகச் சொன்னால் ஐ. சி. சி. கல்லாப் பெட்டி நிரம்பாது.

அதற்காகத் தான் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒரு முடிவை எடுத்தன..அது என்ன..?

நமது அடுத்த அமர்வில் அதைப் பற்றி அலசலாம்...

வீட்டுப் பாடம் செய்ய மறந்து விடாதீர்கள்..!
_________________

ஷீ-நிசி
14-06-2007, 03:43 PM
அதற்காகத் தான் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒரு முடிவை எடுத்தன..அது என்ன..?

ஆவலுடன்....

தங்கவேல்
15-06-2007, 01:32 AM
ராஜா அட்டகாசம். இதெல்லாம் ஒரு விதமான பணக்கார மாய வலை என்று யாருக்கும் தெரிய போவதில்லை. விளையாட்டுக்களில் என்றோ சூதாட்டம் புகுந்து விட்டது. ஆற அமர்ந்து யோசித்தால் விளங்கிவிடும். ஆனால், யாரும் யோசிப்பதில்லை. சில செய்திகளே நியாயமாய் படும். தொடருங்கள்..

ராஜா
16-06-2007, 10:20 AM
அடுத்த பகுதி இன்றிரவு வெளியிடப்படும்..

lolluvathiyar
16-06-2007, 11:08 AM
[SIZE="3"][B]கேள்விகளுக்கு பதிலளித்து உங்கள் வீட்டுப் பாடத்தை சமர்ப்பித்து விடுங்கள் !!!!!!

இதோ.....

[FONT=Fixedsys]1) மைதானத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் காண்பிக்கும் தொலைக்காட்சி காமிராக்கள், மிகவும் முக்கியமான நிகழ்வான toss எனப்படும் காசு சுண்டுதலை ஆதியோடந்தமாக விலாவரியாக ஏன் காட்டுவதில்லை..?

திரு ராஜா அவர்களே வீட்டு பாடம் என்று நீங்கள் நாங்கள் எப்படி சமர்பிப்பது, இது மிக கஸ்டமாச்சே, என் பாண்டில் இருகிறது
யுனி கோடாக மாற்றி பதியுங்கள்

ராஜா
16-06-2007, 11:43 AM
வாத்தியாரய்யா..!

உங்க பதிலை இங்கேயே பதியுங்க.. எல்லோரும் பார்க்கட்டும்..

[ஹி..ஹி.. யுனிகோடா..? அப்படின்னா..?]

ராஜா
16-06-2007, 06:51 PM
வணக்கம் நண்பர்களே..!

ஒருவர் கூட வீட்டுப் பாடம் செய்யவில்லை...ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்..

போகட்டும். இன்றைய பாடத்தைத் துவக்குவோமா..?

அதற்காகத் தான் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒரு முடிவை எடுத்தன..அது என்ன..?

அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் வெற்றிகளைப் பகிர்ந்து கொள்வது என்பதுதான் அந்த முடிவு..!!

இதன்படி எந்தெந்த அணிகள் எப்போது வெல்லும் என்று உலக "மேலிடமு"ம் அணி மேலிடங்களும் கூடி முடிவெடுப்பர்.

உதாரணமாக, இந்திய அணி ஒரு தொடரில் வெற்றி பெற்வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால், அது நம் மேலிடத்துக்கு தெரிய வரும். நம் மேலிடம் தனக்கு வேண்டிய "ஸ்பான்சர்கள்" வசம் சொல்லி அதிக ஏலத்துக்கு எடுக்கச் சொல்லும். ஏனென்றால்.. கப்சி ஸ்பான்சர் செய்யும் ஒரு தொடர் வெற்றி பெற்றால் அந்த தயாரிப்புகள் மேலும் பிரபலம் அடைந்து தனது போட்டியாளரை விட பல அடி முன்னே சென்றுவிடும். இந்த மேட்டரை ( வெற்றி பெறும் என்ற ரகசியத்தை) சொல்வதற்கு மேலிடப் பெருந்தலைகள் சில கோடிகளை டிப்ஸ் பெற்றுக் கொள்ளும் என்பது தனி விஷயம்..!!!

அப்புறம் தேர்வுக் குழு இந்த விஷயத்தை வைத்து காசு பார்க்கும். எப்படியா..? தனக்கு வேண்டிய வீரர்களை தேர்வு செய்து அவர்களின் மேட்ச் வருமானத்தில் ஒரு பங்கை கபளீகரம் செய்து கொள்ளும்.. கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் "சஞசய் பாங்கர்" எனும் மராட்டிய வீரரையும் தேர்வு செய்தனர். இந்திய அணி சார்பாக ஒரு ஆட்டத்தில் கூட விளையாடாத அவருக்கு கிடைத்த தொகை எவ்வளவு தெரியுமா..? 50 இலட்சம் ரூபாய். அதற்குப் பிறகு நடந்த எந்த பந்தயத்திலும் அவர் சேர்க்கப் படவில்லை.

அதன் பிறகு இது ( அணி வெற்றி ரகசியம்) அணி மேலாண்மை மற்றும் பயிற்சியாளர் ஆகியோரின் அட்சய பாத்திரமாக மாறும். அவர்கள்தானே அதிக விக்கெட் வீழ்த்தும் பந்து வீச்சாளரையும் அதிக ரன் அடிப்பவரையும் நிர்ணயம் செய்பவர்கள்..! உதாரணமாக "கரப்பான் வித்தான்" என்னும் பந்து வீச்சாளர் இரண்டு போட்டிகளில் அபாரமாக பந்து வீசி வெற்றிக்கு காரணகர்த்தாவாகி, ஆட்ட நாயகன் விருது பெறப்போகிறார் (?) என்றால், அந்த பெருமையும் புள்ளி விபரச் சாதனையும் தான் அவரைச் சேரும். மற்றபடி ஆட்ட நாயகன் விருதுத் தொகையோ, உள்ளூர் ஆர்வக்கோளாறுகள் அள்ளி வழங்கும் கணக்கில் வராதப் பெருந்தொகையோ நாயகனுக்குப் போய்ச் சேராது. இதற்கு ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்..
இல்லையெனில் 12வது நபராக தண்ணீர் பாட்டில் தூக்கிக்கொண்டோ, அல்லது ஓரமாக உட்கார்ந்து காமிராக் காரர்களிடம் கதையளந்து கொண்டோதான் இருக்க வேண்டும்.

இப்படியே இந்த வெற்றி ரகசியம் மாநில மேலிடங்களில் இருந்து மைதான காவலாளிகள் வரை காசு காய்க்கும் மரமாக மாற்றப்பட்டு கணிசமான அறுவடையும் நடந்துவிடும்.
இது எதுவுமே அறியாத அப்பாவி ரசிகன் கைக்காசை இழந்து கால் கடுக்க வெயிலில் நின்று கசகசக்கும் புழுக்கத்தில் கைகளில் அட்டையை தூக்கிக் காட்டிக் கொண்டும், கத்தி கூப்பாடு போட்டுக்கொண்டும் தன் அணியை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறான்..! அல்லது படபடக்கும் இதயத்துடன் தொலைக்காட்சிப் பெட்டிமுன் பிரசவ அறை வாயிலில் கணவன் போல தவம் கிடக்கிறான்..!!

அப்புறம் 50 ஓட்டங்கள் எடுக்கும் அசகாய சூரர்கள், சதம் அடிக்கும் சாகசக்காரர்கள், 5 விக்கெட் எடுக்கும் அகார்கர்கள் ஆகியோரது பட்டியல் எதிர் அணி மேலாண்மையிடம் அளிக்கப்படும். அப்போதுதானே அந்த திறமைசாலிகள் ஆட்டம் இழக்காதவாறு பந்து வீச முடியும். அப்படியும் அசட்டுத்தனமாக பிடி கொடுத்தாலும் தவறவிட்டு விட்டு பிறகு கைவிரல்களை பார்த்துக் கொண்டு டி,வி. காமிராக்களுக்கு போஸ் கொடுக்க முடியும்.

இந்திய ஆட்டக்காரர்கள் தான் மிகவும் மென்மையான, மேன்மையான பழகும் தன்மை கொண்ட அட்டக்காரர்கள்..ஏன் தெரியுமா...? அடுத்த அமர்வில் இது பற்றி பார்க்கலாம்..

_________________

அமரன்
16-06-2007, 08:24 PM
ஸ்....இப்பவே கண்ணைக்கட்டுதே......

தங்கவேல்
17-06-2007, 02:24 PM
ராஜா பார்த்து இருங்க. எவனாவது ஏதாவது பண்ணிடப்போரானுங்க...

ராஜா
17-06-2007, 03:09 PM
நீங்க உதவிக்கு வரமாட்டீங்களா தங்கம்..?

maggi
18-06-2007, 12:16 PM
ராஜா அவர்களே நீங்க சொல்லுவது எல்லாம் நேரில் பார்த்து சொல்லுவது போல இருக்குது எல்லாம் உண்மைதானா?????? மறுக்கவும் முடியல ஒப்பு கொள்ளவும் மனசு இடம் கொடுக்கல.
தொடருங்கள்.....

தங்கவேல்
18-06-2007, 12:33 PM
வராமல் இருக்க முடியுமா ? எழுதுங்கள் ... படிக்கவும் இதை பரப்பவும் காத்து இருக்கிறேன்.

அக்னி
18-06-2007, 10:56 PM
செய்யக்கூடியதாக வீட்டுப் பாடம் கொடுத்தால் தானே செய்ய முடியும்...
அதற்கும், நீங்களே பதிலளித்து விடுங்களேன்...

சுவாரசியமாகப் போகிறது...
திரையின் பின்னே இத்தனை திரைமறைவு வேலைகளா என்று திகைக்க வைக்கும் பதிவுகள்...

பாராட்டுக்கள்...

அமரன்
19-06-2007, 08:34 AM
ராஜா அண்ணா அடுத்த அமர்வு எப்போ

ராஜா
19-06-2007, 03:09 PM
இந்திய ஆட்டக்காரர்கள் தான் மிகவும் மென்மையான, மேன்மையான பழகும் தன்மை கொண்ட ஆட்டக்காரர்கள்..ஏன் தெரியுமா...?

அவர்கள் அப்படித்தான் இருந்தாக வேண்டும். அடுத்தவர் தயவில் வெற்றி பெறுபவர்கள் வீராப்பு காட்ட முடியுமா..? அதே நேரம் உண்மையான திறமை கொண்ட ஆஸ்திரேலிய அணியினரைப் பாருங்கள்.. ஏதாவது பிரச்னையில் சிக்கிக் கொண்டே இருப்பார்கள். அது நல்ல அம்சம் என்று நான் சொல்ல வரவில்லை.. அவர்கள் தன்னம்பிக்கை அவர்களை அவ்வாறு செய்ய வைக்கிறது.

இந்திய மட்டையாளர் ஆடிக்கொண்டிருக்கும்போது மாற்று அணி பந்து வீச்சாளர்கள் அவர்களை முறைத்துக்கொண்டும் திட்டிக்கொண்டும் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா..?

வேண்டுமென்றே ஒரு இந்திய மட்டையாளர் நான்கு ரன் அடிக்கும் வகையில் பந்தை வீசவேண்டிய நிலையில் இருக்கும் ஒரு பந்து வீச்சாளர் சினம் கொள்வது இயல்புதானே..? எல்லா நாடுகளிலும் திரண்டு வந்து மைதானத்தில் ஆட்டம் பார்க்கும் இந்திய ரசிகர்களையும் டீ வி ரசிகர்களையும் உற்சாகமாக கடைசிவரை ஆட்டம் பார்க்க வைக்க இந்த ஏமாற்று வேலை நடக்கிறது. மொத்த அணியுமே போனோம் வந்தோம் என்று இரூந்தாலும் யாராவது ஒருவரோ இருவரோ வீராவேசமாக ரன் அடிப்பார்கள்.. இந்திய அணியை எப்படியும் இவர் வெற்றிபெற வைத்துவிடுவார் என்ற நப்பாசையை வளர்க்கும் தந்திரம் இது. இதனால் என்ன பலன் என்று நீங்கள் கேட்கக் கூடும்..

நான் முன்பே சொன்னது போன்று டி.வி விளம்பரங்கள் முழுவதும் இலக்கைச் சென்றடைய இந்த வேலைகளைச் செய்து தீரவேண்டிய கட்டாயம்..இந்தியா தோற்கப் போகுதுன்னு தெரிஞ்சா நீங்க டீ.வி.யை நிறுத்திட்டுப் போயிடுவீங்க.. அப்புறம் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு ஒளிபரப்புக் கட்டணம் செலுத்திய விளம்பரங்களை யார் பார்ப்பது..? இந்தியா வெல்ல வாய்ப்பு இருக்குன்னு உங்களை நம்ப வச்சாத் தானே நீங்க கடைசிவரைக்கும் மேட்ச் பார்ப்பீங்க..?

மனோஜ்
19-06-2007, 03:34 PM
ஒரு சந்தேகம் சச்சின் விளையாடுவதும் பொய்தானா ?
இப்படி தான் அவரும் விளையாடுகிறாறா

ராஜா
20-06-2007, 06:10 AM
ஒரு சந்தேகம் சச்சின் விளையாடுவதும் பொய்தானா ?
இப்படி தான் அவரும் விளையாடுகிறாறா

ஆரம்பத்தில் அவர் சிறப்பாக ஆடினார்.. பின்னர் அளவுக்கு மீறிய பணம் அவரது ஈடுபாட்டைக் குறைத்து விட்டது..

அவர் ஆட்டம் இழக்கும் விதத்தையும் ஆட்டம் இழந்த பிறகு டவுன் பஸ்ஸை விட்டு இறங்கி போவது போல படு கேஷுவலாகப் போவதையும் பார்த்தால் தெரியும்.. அவர் எவ்வளவு தூரம் ஆட்டத்தில் இன்வால்வ் ஆகி இருக்கிறார் என்று..!

இந்தத் திரியைப் படித்து வரும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..

அடுத்த முறை ஆட்டத்தை உணர்வுபூர்வமாக பார்க்காமல் அறிவுப்பூர்வமாகப் பாருங்கள்.. பல விஷயங்கள் புரியும்..

சரி..

இந்தியர்கள் வீட்டில் [உள்நாட்டில்] புலிகளாகவும், வெளியில் எலிகளாகவும் விளங்குவது ஏன்..?

அடுத்த முறை அலசுவோம்..!

lolluvathiyar
20-06-2007, 06:24 AM
நம்புவதற்க்கு கஸ்டமாக இருந்தாலும் உன்மையை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்.
உன்மை கசக்கும், அதனால் உன்மையை பலர் ருசித்து பார்பதில்லை

ராஜா
21-06-2007, 04:02 PM
இந்தியர்கள் வீட்டில் [உள்நாட்டில்] புலிகளாகவும், வெளியில் எலிகளாகவும் விளங்குவது ஏன்..?

உள்நாட்டுப் பிட்ச்களில் பந்து பொதுவாக முழங்காலுக்கு மேல் எழும்பாது.அவ்வாறுதான் பிட்ச் தயாரிக்கப்படும். ஏனென்றால் நம் சூரப்புலிகள் அதைத்தான் ஓரளவுக்கு அடிக்க வல்லவர்கள்..அதுவும் பந்து "ஸ்விங்" ஆகாமல் மொட்டை பேஸில் வரவேண்டும்.. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பாதுகாப்பாக விழவேண்டும். [மட்டையாளர் பந்தை மிஸ் செய்து பீட்டன் ஆனால் கூட ஸ்டம்பைப் பதம் பார்க்கக் கூடாது..] இந்தியாவுக்கு பயணம் வரும் அணியின் பந்து வீச்சாளர்கள் இவ்வாறுதான் வீசியாக வேண்டும். அதனால்தான் பெரும்பாலான முன்னணிப் பந்து வீச்சாளர்கள் காயம், ஆபரேஷன் என்று எதையாவது சொல்லி பயணத்தைத் தவிர்த்து விடுவார்கள்...!

அப்படி வீசப்படும் பந்துகளை ஆட்டத்துக்கு ஆட்டம் பங்கு போட்டு நம் சூரப்புலிகள் அடித்து நொறுக்கி தங்கள் இமேஜையும் அணியின் இமேஜையும் உயர்த்திக் கொள்வார்கள்..! அவர்கள் மட்டுமல்ல.. நம் அனில் கும்ப்ளே விக்கெட்டுகளைக் குவித்து தன் எண்ணிக்கையை உயர்த்திக் கொள்வார்.. ஏனென்றால் வரும் மட்டையாளர்களுக்கு உதவாத வகையில் தயாரிக்கப் பட்டிருக்கும் சுழற்பந்து பிட்ச்களின் உதவியால், மூன்றாம் நாள் மாலையில் இருந்து தாறுமாறாக, பந்து திரும்ப ஆரம்பித்துவிடும். அதற்கு வசதியாக டாசில் இந்தியா வென்று [?] முதல் இன்னிங்சில் ரன் குவித்து வைத்திருக்கும்.. பின் என்ன..?

இந்திய அணி ஆட்டங்கள் நடக்கும் மைதானங்கள் ரசிகர்களால் நிரம்பி வழியும்.. மைதானத்தில் உள்ள ஒவ்வொரு அங்குலமும் விளம்பரப் பலகைகளால் நிரப்பப்படும். தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஓவரிலும் 4 அல்லது 5 பந்துகள் மட்டுமே விளையாடுவது காட்டப்பட்டு, மற்ற நேரங்கள் 10 வினாடி விளம்பரங்களாக உங்கள் மூளையில் திணிக்கப்படும். இப்போது இன்னொரு கலாச்சாரம் கூட உருவாகியிருக்கிறது. மேட்ச் ஆரம்பிப்பதற்கு 2 மணி நேரம் முன்பே யாராவது ஒரு டி.வி நடிகையையும் இரண்டு மூன்று கிழட்டு கிரிக்கெட் வீரர்களையும் வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துவது.. அதற்கும் ஸ்பான்சர் பிடித்து காசு பார்ப்பது..

சில வேளைகளில் இன்னும் ஒரு அநியாயமும் நடக்கும்..மேட்ச் நடக்கும் இடத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி மைதானம் குளமாக இருக்கும். தொலைக்காட்சியோ கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அப்பாவி ரசிகனை நம்பவைத்து விளம்பரம் காட்டிக்கொண்டிருக்கும். கடைசியாக அறிவிப்பாளர் மெல்லச் சொல்லுவார்.. "ஒரு கவலையளிக்கும் செய்தி.. இன்று மேட்ச் நடக்கும் இடத்தில் மழை.. என்றாலும் மனந்தளர வேண்டாம்.. 11 மணிக்கு நடுவர்கள் மைதானத்தைப் பார்வையிட இருக்கிறார்கள்.. நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்புவோம் " என்று சொல்லி பழைய மேட்சைப் [ அதுவும் இந்தியா வெற்றி பெற்ற ஆட்டம்]
போட்டு வாங்கிய காசுக்கு வஞ்சகமில்லாமல் விளம்பரங்களை காட்டும்..
அப்பாவி ரசிகனும் பழைய வெற்றியில் மனம் மயங்கி பார்த்துக் கொண்டிருப்பான்.. இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு..

மேட்ச்சைக் காட்டி வருவாய் தேடும் ஏலத்தில் கலந்துகொண்டு வெற்றி வாய்ப்பை இழந்த வேறொரு தொலைக்காட்சி நிறுவனம் அடிக்கொருமுறை இன்று மழை.. மேட்ச் நடக்க வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும்..அதன் வயிற்றெரிச்சலை அப்படி ஆற்றிக்கொள்ளும்..

இப்படி இந்தியா வென்றே தீரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் அப்பாவி ரசிகனை திருப்தி படுத்தும் வகையில் வெளிநாடுகளில் நம் அணி ஏன் ஆடுவதில்லை..? அடுத்தமுறை பார்க்கலாம்..!

ஷீ-நிசி
21-06-2007, 04:16 PM
இதெல்லாம் எவ்வித ஆதாரமுமில்லாமல் இந்திய அணியின் மீது செலுத்தும் அவதூறுகள் என்று மனம் சொல்கிறது....

ராஜா
21-06-2007, 04:20 PM
இதெல்லாம் எவ்வித ஆதாரமுமில்லாமல் இந்திய அணியின் மீது செலுத்தும் அவதூறுகள் என்று மனம் சொல்கிறது....

நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை.!
இந்திய அணியின் மீதான நம்பிக்கையை அப்படியே தொடருங்கள்..! அது உங்கள் விருப்பம்.

ஷீ-நிசி
21-06-2007, 04:33 PM
நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை.!
இந்திய அணியின் மீதான நம்பிக்கையை அப்படியே தொடருங்கள்..! அது உங்கள் விருப்பம்.

எந்த ஆதாரங்களை வைத்து இவ்வளவு ஆணித்தரமாக பதிகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

ஆதாரங்கள் இல்லை.. சொந்த கருத்து என்று சொல்வீர்களானால், ஒரு தேசத்திற்காக விளையாடும் இந்திய அணியை இப்படி குறைத்து மதிப்பிட்டு அவதூறுகளை அள்ளி வீசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.

ராஜா
21-06-2007, 05:38 PM
உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் படிப்பதை விட்டு விடுங்கள் ..
நான் மன்றத்தில் முறையான அனுமதி பெற்றே இந்தத் திரியைத் துவக்கியுள்ளேன்.. அவர்கள் நிறுத்தச் சொன்னால் நிறுத்தி விடுகிறேன்..
நன்றி...!

ஷீ-நிசி
22-06-2007, 03:29 AM
உங்களுக்கு பிடிக்கவில்லையென்றால் படிப்பதை விட்டு விடுங்கள் ..
நான் மன்றத்தில் முறையான அனுமதி பெற்றே இந்தத் திரியைத் துவக்கியுள்ளேன்.. அவர்கள் நிறுத்தச் சொன்னால் நிறுத்தி விடுகிறேன்..
நன்றி...!

நன்றி! எனக்கு இந்த திரியை படிப்பதற்கு பிடிக்கவில்லை... இனி கேள்விகள் எழுப்பமாட்டேன்.. உங்களுக்கு தெரியாததல்ல... பொதுவில் இடும் கருத்துகளுக்கு எதிர் வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் தயாராய் இருந்தால் அது யாவருக்குமே பயன்படும்....

என்றும் அன்புடன்

ஷீ−நிசி

ராஜா
22-06-2007, 07:40 AM

உங்கள் சந்தேகங்களுக்கு எனக்குத் தெரிந்த பதில்களை அளிக்க என்றும் தயார்..

ஆனால் உங்கள் முடிவுகளுக்கு என்னால் பதில் அளிக்க இயலாது. நானும் இந்தியன்தான்.. இந்தியக் கிரிக்கெட் முன்னேறாதா என்று ஆதங்கப் படுபவ்ன்தான்..

தங்கள் முடிவுக்கு நன்றி..!

தங்கவேல்
25-06-2007, 04:39 AM
ஷீ நிஷி - படியுங்கள் முதலில். விவாதம் செய்யலாம் பின்னர். கிரிக்கட் இந்த அளவுக்கு பிரபலம் ஆகியதற்க்கு காரணம் இருக்கும். மேட்ச் பிக்சிங் நடந்தது தெரியும் தானே ? அசார் என்ன ஆனார். அந்த வழக்கு என்ன ஆச்சு ??? கிரிக்கெட் என்று சொல்லி மற்றவர்களை மடையர்கள் ஆக்குரானுங்க... இல்லை என்று மனசாட்ச்சியை தொட்டு சொல்லுங்கள் பார்க்கலாம் ??? முடியாது முடியாது முடியாது....

ராஜா
25-06-2007, 10:32 AM
நன்றி தங்கம்..!

சமீபத்தில் நடந்த இந்தியா− அயர்லாந்து ஆட்டத்தைக் கண்ணுற்றவர்களில் வெகு சிலருக்கு ஒரு சந்தேகம் தோன்றியிருக்கலாம்..

மழை வரும் சாத்தியக்கூறு இருக்கும் நிலையில் அயர்லாந்து வீரர்கள் ஆட்டமிழக்கும் விதத்தில் அதிரடிப் பந்துவீச்சு செய்யாமல் ஏன் இந்தியா அவர்களை ஆட அனுமதிக்கிறது..?

மிக எளிதான கேட்சுகள் பிடிக்க முயற்சிகள் கூட செய்யப்படாமல் கீழே விழுந்து உருள்கின்றனவே.. ஏன்..? உதாரணமாக.. நியால் ஓ ப்ரையன் கொடுத்த கேட்சுகள்..

இறுதி ஓவர்களை ஸ்ரீசாந்த் புல்டாஸ் ஆகவே வீசிக்கொண்டு இருக்கிறாரே ஏன்..?

அயர்லாந்து அணி இறுதிப் பந்து வரை நிலைத்து நிற்கும் வகையில் அவ்வளவு அற்புதமாகவா ஆடினார்கள்..?
இங்குதான் இருக்கிறது தந்திரம்.. அயர்லாந்து 50 ஓவர்கள் வரை ஆட அனுமதிக்கப் பட்டது..விளம்பரங்களுக்காகவே..!

ஒரு ஓவர் குறைந்தாலும் பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரங்கள் முடங்கிப்போகும்..

நான் திரும்பத் திரும்ப விளம்பரங்களைப் பற்றியே பேசுவது உங்களில் சிலருக்கு எரிச்சலைத் தரக்கூடும்..ஆனால் தற்போதைய உண்மை நிலை என்னவென்றால், ஆட்டத்துக்கு இடையில் விளம்பரங்கள் என்பது போய் விளம்பர வருவாய் பெறுவதற்கென்றே கிரிக்கெட் போட்டிகள் நடத்தப் படுகின்றன.

முத்தரப்பு போட்டிகள் இந்த விளம்பர வேட்டைக்கு நல்ல தீனி..!

கடந்த காலங்களில் நடந்த முத்தரப்புப் போட்டிகளையோ அல்லது இனி நடக்க இருக்கீற முத்தரப்பு போட்டிகளையோ கூர்ந்து கவனியுங்கள்.. ஒரு அதிசய ஒற்றுமை தெரியும்..1) இந்தியா, 2) ஒரு வலிமையான அணி.. இவை இரண்டும் இறுதிப்போட்டிக்கு செல்லும் வகையில் 3) ஒரு ஒப்புக்கு சப்பாணி அணி.. இப்படித்தான் அமைக்கப்படும்.

இந்தியாவும் இறுதிப் போட்டிவரை சென்று அந்த வலிமையான அணியிடம் தோற்றுப் போகும்.. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த போட்டிகளை கணக்கெடுத்துப் பாருங்கள்.. பெரும்பாலும் நான் சொன்னது போன்றே நடந்திருக்கக் காண்பீர்கள்..

இது ஏன் தெரியுமா..? நான் சொன்ன விளம்பர வருவாய்க்கான ஏற்பாடு.. உலகில் உள்ள அணிகளிலேயே அதிகமான வாங்கும் சக்தியுள்ள ரசிகர்களைக் கொண்டது இந்திய அணிதான்..! அந்த ரசிக விட்டில் பூச்சிகளைப் பிடிக்க இந்த முத்தரப்பு விளக்குகள் கொளூத்தப் படுகின்றன.

சென்ற முறை எழுப்பிய கேள்விக்கு இம்முறை நான் பதிலளிக்காததற்கு பொறுத்தருளுங்கள்.. அடுத்த முறை பதிலளிக்கிறேன்.. இம்முறை அயர்லாந்து பற்றிப் பேசியதால் விவாதம் திசை திரும்பிவிட்டது..!

lolluvathiyar
25-06-2007, 11:06 AM
ஷீ-நிசி,

எந்த ஆதாரங்களை வைத்து இவ்வளவு ஆணித்தரமாக பதிகிறீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?

அர*சிய*ல்வாதிக*ள், ஊல*லை ஆதார*ம் வைத்தா செய்வார்க*ள்.
ஒரு ஊரில் ரோடு போடுகிறார்க*ள், அங்கு ஊள*ல் ந*ட*ந்த*து என்று ஆதார*ம் கிடைக்காது. ஆனால் ரோட்டின் த*ர*த்தை பார்த்தாலே தெரியும்.

நீங்க*ள் ஆதார*ம் தேடுவ*தை விட* லாஜிக்காக* விள*ம்ப*ர* ச*மாசார*ங்க*ளை வைத்து பார்த்தால் தெரியும். ஆயுத* வியாபாரிக*ளின் வ*ற்புருத்த*லுக்காக*வே ஈராக் மீது ப*டை எடுக்க* ப*ட்ட*து என்று சொல்வார்க*ள், ஆதார*ம் கிடைக்காது ஆனால் ஆயுத*ம் விற்க* ப*ட்ட* தொகையை பார்த்தால் தெரிந்து விடும்
அதுபோல* தான் இதுவும்.

தேசத்திற்காக விளையாடும் இந்திய அணியை இப்படி குறைத்து மதிப்பிட்டு அவதூறுகளை அள்ளி வீசுவது முற்றிலும் ஏற்கத்தக்கதல்ல.
இது அவதூறு அல்ல, தேசத்துக்கு விளையாடட்டும், ஆனால் விளம்பரங்களில் நடிக்காமலா இருகிறார்கள். டீவி வராத காலத்தில் கிரிகேட் இந்த அழவுக்கு பிரபலமாக வில்லை.

ராஜா
26-06-2007, 05:53 AM
[ப்]நன்றி வாத்தியாரய்யா..!

மிகத் துல்லியமான வாதங்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள்..!

இந்தத் தொடர் முடியும்வரை உங்கள் ஆதரவும் வேண்டும்..![/B]

அறிஞர்
27-06-2007, 04:37 PM
ராஜா அண்ணா சொல்வது போல்... தென்னாப்பிரிக்கா 49.4 ஓவர் விளையாண்டதும்.. விளம்பரத்திற்காக தான் என்பது போலுள்ளது.

ராஜா
28-06-2007, 08:13 AM
ஆஹா..!

உன்னிப்பாக திரியைக் கண்காணிக்கிறீர்கள் போலிருக்கிறதே தம்பி..!

நன்றி..!

ராஜா
29-06-2007, 07:14 AM
இந்தியர்கள் வீட்டில் [உள்நாட்டில்] புலிகளாகவும், வெளியில் எலிகளாகவும் விளங்குவது ஏன்..?

வெளிநாட்டில் உள்ள ஆடுகளங்கள் இந்தியத் துணைக் கன்டத்திலிருப்பவை போல அல்ல.. அங்குள்ள சீதோஷ்ண நிலை, களம் அமைப்பாளர்களின் கைவண்ணம் முதலிய அம்சங்களால் அவை வேகப்பந்துக்கு ஏற்ற களங்களாக அமைகின்றன.. நம் வீரர்கள் துணைக்கன்ட ஆடுகளங்களில் முட்டிக்கு மேல் எகிறாத பந்துவீச்சை வெட்டி ஆடுவதில் மட்டுமே கெட்டிக்காரர்கள்.. வேகப்பந்து வீச்சுக்கு தயாரிக்கப்படும் பிட்சுகள் அவர்களுக்கு சிம்ம சொப்பனம்.. அவற்றில் அவ்வளவாகப் பயிற்சி பெறாதவர்கள்.. அவர்களை குறைகூறுவதும் தவறுதான்..

உண்மையில் நல்ல அளவில் விழுந்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே நன்கு ஸ்விங் ஆகி எகிறி வரும் பந்துகளை திறமையுடன் எதிர்கொண்டு ஓட்டங்கள் எடுப்பது எப்படி என்று நம் சூரப்புலிகளுக்கு தெரியவே தெரியாது. அந்தப் பந்துகளை அடிப்பது இருக்கட்டும்.. அவற்றை எப்படி விட்டுவிடுவது [well left ] என்பதைகூட நம்மவர்களில் பலருக்குத் தெரியாது என்பதுதான் சோகம்..!

மூக்கை உரசுவதுபோல் காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும் பந்துகளைக் கண்டதும் அவர்கள் மனதில் தோன்றுவது இதுதான்..

முதல்ல நம்மைக் காப்பாத்திக்குவோம்.. டீமாவது ... ரன்னாவது...

அதனால்தான் மட்டையைத் தூக்கி தூக்கி பந்தைத் தடுக்கப் பார்ப்பார்கள்..மட்டையின் கைப்பிடியிலோ விளிம்பிலோ பந்து பட்டு எகிறும்.. அதைப் பிடிக்க பின்னால் ஒரு கூட்டமே ஸ்லிப்பில் காத்துக் கொண்டிருக்கும்..

லபக்...!

மாஸ்டர் பிளாஸ்டராக இருந்தாலும் சரி.. இரும்புச் சுவராக இருந்தாலும் சரி.. இதுதான் நிலவரம்..! அப்புறம் எப்படி வெளிநாடுகளில் வெற்றி கிட்டும்..?

வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டுமாயின் இந்தியாவில் வேகப்பந்து வீச்சுக்கேற்ற ஆடுகளங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.. அதில் பாரிய அளவில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.. பந்து வீச்சாளர்கள் நன்கு உழைத்து பந்து வீச பயில வேண்டும்.. மட்டையாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும்..!
முக்கியமாக களத்தடுப்புப் பணிகளில் நம் ஆட்கள் இன்னும் முன்னேற வேண்டும்.. நேற்று வந்த கற்றுக்குட்டி அணிகள் கூட ஃபீல்டிங்கில் கலக்கும்போது நம் ஆட்களின் திறன் வருத்தத்தைத் தருகிறது.. குறிப்பாக கங்கூலி..!

ஒரே நாளில் இஃது அடையும் இலக்கு அன்று..! நீண்ட காலம் தேவைப்படும் ஒரு முனைப்பு இயக்கமாக அது இருக்கும்..!

ஆனால் இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லையே.. ஏன் கவலைப்பட வேண்டும்..? சுலபமாக வெற்ரியைப் "பெறும்' வாய்ப்பு வசதிகள் இருக்கும் போது ஏன் அவ்வளவு சிரமப்பட்டு நீண்டகாலத் திட்டம் வகுத்து பணியாற்ற வேண்டும்..? பிற்காலத்தில் வரும் நிர்வாகிகளும் மற்றவர்களும் பயனடைய நாம் உழைக்க வேண்டுமா என்ற எண்ணம்தான் மேலிடத்தில் இப்போது நிலவுகிறது..!

இன்னும் எவ்வளவோ ரகசியங்கள் உள்ளன.. அவற்றை ஒரே நேரத்தில் சீரணிக்க உங்களால் ஆகாது.. பின்னர் கூறுகிறேன்...!

devendira
29-06-2007, 07:29 AM
தற்போதைய அணியில் உள்ள வீரர்கள் மனதளவில் வலு இருந்ததை கூட்டவோ குறைக்கவோ சைக்கோ அனாலிஸ்ட் வைத்து சரி செய்தாலும் முருங்க கட்டையை வைத்து எப்படி உறுதியான கலப்பை செய்யமுடியாதோ அதே போல உடல்திறன் இல்லா நம் வீரர்கள் சர்வதேச முன்னனி விரர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாது.

நம் அணி வீரர்களின் உணவுப்பழக்கம் அவர்கள் புலால் உண்ணும் பரம்பரையினராக இருந்தால் ஓரளவிற்கு தேற வாய்ப்புண்டு.

ராஜா
30-06-2007, 06:19 AM
வலுவான உடல் அமைப்பு தேவை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றே..!

அமரன்
30-06-2007, 09:19 AM
பல விடயங்களை அறியக்கூடியதாக உள்ளது ராஜாஅண்ணா. தொடருங்கள்.

அக்னி
30-06-2007, 03:58 PM
தொடருங்கள் சுவாரசியமாக இருக்கின்றது...
பாராட்டுக்கள்...

ராஜா
05-07-2007, 07:51 AM
நலமா நண்பர்களே..!

கிரிக்கெட்டீல் வடக்கு, தெற்கு பாகுபாடு இருக்கிறதென்று நம் அனைவருக்கும் தெரியும். இதில் தென்னக வீரர்கள் எவ்வாறு பலிகடா ஆக்கப்படுகிறார்கள் தெரியுமா..?

நான் முன்னமே சொன்னபடி, கிரிக்கெட் முடிவுகள் செயற்கையாகத்தான் உருவாக்கப் படுகின்றன. இந்த போட்டித் தொடரில் இன்ன அணிதான் வெல்ல வேண்டும்.. இத்தனைப் பந்தயங்கள் இந்த அணியும் இத்தனைப் போட்டிகள் அந்த அணியும் வெல்ல வேண்டும் என்று முடிவு செய்தே நாடகம் நடிக்க களம் இறங்குகிறார்கள்.

அவ்வாறு ஒரு போட்டியில் இந்த வீரர் 100 அடிக்க வேண்டும், இவர் 50 அடிக்க வேண்டும், இவர் இத்தனை விக்கெட் வீழ்த்த வேண்டும் என்றும் திரைக்கதை உருவாக்கப் படுகிறது. இந்த நாடகத்தில் எப்போதும் நல்ல வாய்ப்புள்ள கதாபாத்திங்கள் வடவருக்கே வழங்கப்படுகின்றன.அதாவது 50, 100 ஓட்டங்களை பல கிச்சாங்களுடன் எடுக்கும் வாய்ப்பு அவர்களுக்கே.

இதில் கடைசிநேர மாறுதல்களும் கூட உண்டு. உதாரணமாக ஒரு வீரர் 90 ஐத் தாண்டி அடித்துக் கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. இங்கே பல இடங்களில் ஒரு சூதாட்டம் நடக்கும். பல பண முதலைகள் செஞ்சுரி அடிப்பார்.. அடிக்க மாட்டார் என்று லட்சக்கணக்கில் பணம் கட்டிவிட்டு பேராசையுடன் காத்திருக்கும்.. அதுவும் டெண்டுல்கர் போன்ற ஆட்டக்காரர்கள் அவ்வாறு சதமடிக்கும் வாய்ப்பில் இருந்தால் கேட்கவே வேண்டாம்.. ஒவ்வொரு ரன் ஏற ஏற இங்கு பந்தயத் தொகையும் விஷம்போல ஏறிக்கொண்டிருக்கும்..

97 வரை போன ஆட்டக்காரர் கொஞ்சம் அமைதி காத்து பந்துகளை வீணாக்கிக் கொண்டிருப்பார்.. அதற்கு அவர் பதட்டத்தில் இருக்கிறார் என்று பொருள் சொல்லப்படும்..[நெர்வஸ் நைண்டீஸ்]. ஆனால் உண்மையில் சூதாட்டக்காரர்கள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.. இந்த ஆட்டக்காரர் சதம் அடித்தால் நமக்கு இலாபமா, அடிக்காவிட்டால் இலாபமா என்று.. அடிக்காவிட்டால்தான் இலாபம் என்றால் மட்டையாளருக்கு சைகை காட்டப்படும்.. அந்த தகவல் முன்புபோல் தண்ணீர் கொண்டுவருபவர் மூலம் அனுப்பப் படுவதில்லை..

இப்போது தொழில்நுட்பம் முன்னேறிவிட்டதல்லவா..? அந்த சைகை மைதானத்தில் ஒரு மூலையில் சிவப்பு பனியன் அணிந்த நபர் எழுந்து நிற்பதாக இருக்கலாம்..[இடத்தைக் காலி பண்ணு..] அல்லது அணி மேலாளர் வைத்திருக்கும் தேநீர் கோப்பையை இடது கையில் மாற்றிக் கொண்டிருப்பதாக இருக்கலாம்..இப்படி ஏதோ ஒன்று..! ஆட்டக்காரரும் உடனே கண்டுகொண்டு ஒரு முட்டாள்தனமான தவறைச் செய்து ஆட்டமிழப்பார். பின் என்ன..? அவருக்கு பங்குக்கு பங்கு.. பிறிதொரு நாளில் சதமடிக்கும் வாய்ப்பு.. அவ்வாறு சதமடிக்கும் நாளில் சூதாட்டங்கள் அளவுடன் நிறுத்தப்பட்டு போதுமான அளவு ஆட்கள் பணம் கட்டியிருப்பதால் சூதாட்டம் மூடப்பட்டதாக சொல்லப்படும்.

சரி.. தென்னக வீரர்களைப் பற்றி சொல்வதாகக் கூறி அலசல் வேறு எங்கோ போய்விட்டது. அந்த விஷயத்துக்கு வருகிறேன்..

இந்தியா எல்லா ஆட்டங்களிலும் வெல்லுவது போன்று திரைக்கதை அமைக்க முடியாது அல்லவா..? என்னதான் பணம் கொடுத்து வென்றாலும் எப்போதும் தோற்க எல்லா அணிகளும் ஒப்ப மாட்டா.. அப்போது இந்தியா சில ஆட்டங்களில் தோற்கவும் வேண்டும்தானே..? அந்த மாதிரி ஆட்டங்களுக்கு ஆசையாக தென்னக வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேணுகோபால் ராவ், முரளி கார்த்திக் போன்ற ஆட்டக்காரர்களை அந்தப் போட்டிகளில் இழுத்துவிட்டு விடுவார்கள்..

தென்னக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம் என்ற பேரும் ஆயிற்று. தோல்வி கண்டதால் வேறு அணி தேர்ந்தெடுத்தோம் என்று அவர்களை ஓரம் கட்டவும் எளிது. இது உங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கலாம்.. கடந்த காலப் பந்தயங்களில் முரளி கார்த்திக் ஆடியது எத்தனைப் போட்டிகள்..? அதில் இந்தியா வென்றது எத்தனை என்று கணக்கெடுத்துப் பாருங்கள்.. உங்களுக்கே புரியும். வேணுகோபால் ராவும் அவ்வாறே..!

போகட்டும்..! சில போட்டிகளில் முக்கியமாக இந்தியா தோற்கப் போகும் போட்டிகளில் எட்டாவது, ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேரும் மட்டையாளர்கள்..[பெரும்பாலும் பந்து வீச்சாளர்கள்..] நான்கும் ஆறுமாக வெளுத்துக் கட்டுவார்கள்.. பார்த்திருக்கிறீர்களா..? அது ஏன் என்று சிந்தித்திருக்கிறீர்களா..?

ஓவியன்
06-07-2007, 09:28 PM
அண்ணா!

வாசிக்க வாசிக்க!

தங்களைக் கிட்டத்தட்ட தெய்வமாகவே மதிக்கும் கிறிக்கட் இரசிகர்களை கிறிக்கற் வீரர்கள் எப்படெயெல்லாம் ஏமாற்றுகிறார்களென்று ஆத்திரம் மேலிடுகிறது.

தொடர்ந்து தாருங்கள் மீதமுள்ள தகிடுத்தனங்களையும் அறிய வேண்டும்.

saguni
07-07-2007, 05:09 PM
வித்தியாசமான சிந்தனையுடன் களமிறங்கி இருக்கிறீர்கள் தொடருங்கள் ராஜா... ஆனால் இறுதியில் வைக்கிறேன் என் கேள்விக்கணையை

அமரன்
07-07-2007, 05:33 PM
ஒவ்வொரு பாகமும் முடியும்போது அதிர்ச்சிகள் தொடரும் என்று பதிங்க. அதிர்ச்சிமேல் அதிர்ச்சி தந்து கொண்டே இருகின்றீர்கள்.
நன்றி ராஜா அண்ணா.

அக்னி
07-07-2007, 05:39 PM
இத்தனை விடயங்களா..? ம்ம்ம்...
தொலைக்காட்சி முன்னமர்ந்து பார்த்து பரவசமும் கவலையும் கொள்ளும் உள்ளங்கள், ஏமாளிகளா..?
உலகில் எதுதான் உண்மை..?

தொடருங்கள் அண்ணா....

saguni
26-08-2007, 07:34 AM
ஆகா தெண்டுல்கரின் தொடர் 99 அவுட்டுக்கும் இப்படி ஒரு காரணம் இருக்கிறதா???

ராஜா
26-08-2007, 08:32 AM
தற்போது கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.

நான் சொல்லும் கருத்துகளை முழுவதும் கருத்தூன்றிப் படியுங்கள்.. எழுதியிருப்பவற்றில் எவை, எவை உண்மை என்று நீங்கள் சரிபார்த்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பு.

போட்டிகள் முடிவடைந்ததும் மீண்டும் தொடர்கிறேன்.. நன்றி.

சக்திவேல்
26-08-2007, 11:50 AM
ராஜா அவர்களெ ஆழ்ந்து அறிந்து உண்மைகளை புட்டு புட்டு வைக்கின்றீர்கள். ஒருகாலத்தில் கிரிக்கட் என்றாலே, சோறு தூக்கத்தை மறந்து தொலைகாட்சியே கதி என்று கிடந்ததை இப்ப நினைத்தாலும் வெக்கம் பிடுங்கித்திங்கிறது.

அக்னி
27-08-2007, 01:51 AM
ராஜா அவர்களே..,
கிரிக்கெட் முடிவுகளை, உங்கள் பதிவுகளிலிருந்து அறிந்து கொண்டிருந்தபோது, உங்களது இந்தத் திரிதான் நினைவுக்கு வந்தது.
விரைவில், மிகுந்துள்ள சூட்சுமங்களையும் வெளிச்சமாக்குங்கள்...

ஓவியன்
07-09-2007, 03:26 AM
ஆமாம் அக்னி!

மாஸ்டர் பிளாஸ்டர் இந்த தொடரிலே 90 ஓட்டங்களிலே பல முறை ஆட்டமிழக்க ராஜா அண்ணாவின் இந்த திரி தான் என் ஞாபகத்திலே வந்தது.

ராஜா
07-09-2007, 07:43 AM
இன்னுமொரு கணிப்பு...

பொய்த்துப் போகுமானால் என்னைத் திட்டாதீர்கள்..

நாளை இங்கிலாந்து வெல்லக்கூடும்.. வெற்றியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெரும்பங்கு ஆற்றக்கூடும்..!

ஆதவா
07-09-2007, 07:47 AM
இன்னுமொரு கணிப்பு...

பொய்த்துப் போகுமானால் என்னைத் திட்டாதீர்கள்..

நாளை இங்கிலாந்து வெல்லக்கூடும்.. வெற்றியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பெரும்பங்கு ஆற்றக்கூடும்..!

அப்படியென்றால் இதற்கான காரணத்தை சொல்லுங்களேன்..

ராஜா
07-09-2007, 07:54 AM
இது நடந்தால் காரணத்தை நிச்சயம் சொல்லுவேன்...

ஹி..ஹி.. நடக்கலேன்னா.... நைசா எடிட் பண்ணிரலாமா..?

ஓவியன்
07-09-2007, 09:53 AM
இது நடந்தால் காரணத்தை நிச்சயம் சொல்லுவேன்...
ஹி..ஹி.. நடக்கலேன்னா.... நைசா எடிட் பண்ணிரலாமா..?

ஆஹா ராஜா அண்ணா!
தனிமடலிலே சொல்லுங்க பிரச்சினையில்லை...........
ஹீ!,ஹீ!!!!

சிவா.ஜி
08-09-2007, 08:21 AM
ஒரு அணி தோற்பது அடுத்த மேட்ச்சில் ஜெயிப்பது எல்லாமே ஒத்திகைப்பார்த்து நடத்தப்படும் நாடகமே.இந்த தொடரில் கண்கூடாகக் கண்ட உண்மை.இன்று நிச்சயம் இங்கிலாந்து வெல்லும்.டெஸ்ட் சீரிஸ் இந்தியாவுக்கென்றால் ஒருநாள் கோப்பை அவர்களுக்கு.இதெல்லாம் முடிவு செய்பவர்கள் புக்கீஸ்கள்.கிரிக்கெட்டே இப்போதெல்லாம் வெறுத்துவிட்டது.ராஜா சார் மிகச்சரியாக சொல்லியிருக்கிறார்.

அக்னி
12-09-2007, 12:06 AM
ராஜா அவர்களே...
பதிவு 10 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=223221&postcount=10) இலுள்ள கேள்விகளிக்கான பதிலையும் (வீட்டுப்பாடம்),
பதிவு 56 (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=267989&postcount=56) இன் ஊகிப்புக்கான விளக்கத்தையும் தந்துவிட்டு,
இத்தொடரைத் தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

arun
21-09-2007, 08:06 PM
ராஜா அவர்களுக்கு வணக்கம்

திரியின் ஆரம்பம் முதல் யார் விளக்கம் கேட்டாலும் பதில் கொடுக்காமல் பதித்து வருகிறீர்கள் பரவாயில்லை எனது கேள்விகளுக்கு பதில் வரும் என்ற நம்பிக்கையில் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்

தாங்கள் சொன்ன சில மேட்டர்கள் உண்மையே அதாவது இந்திய பிட்சுகள் பற்றியும் வெளிநாட்டில் உள்ள பிட்சுகள் பற்றியும் சொன்ன கருத்துக்கள் சரியே

தாங்கள் சொல்வது போல முடிவுகள் முன்பே தெரியும் என்றால் வெளிநாட்டிலும் வெற்றி பெற வேண்டியது தானே? குறைந்த பட்சம் 5 டூருக்கு ஒரு வெற்றியாவது அணிக்கு வாங்கி தரலாமே?

அது மட்டும் இல்லாமல் தொடர்ந்து நாம் இறுதி போட்டியில் தோற்று வருகிறோம் தாங்கள் சொல்வது போல இருந்தால் ஏதேனும் ஒன்றிலாவது வெற்றியை ருசித்து இருக்கலாமே?

முழுக்க முழுக்க கற்பனை என்று தங்களின் திரியை சொல்ல வரவில்லை ஆனால் கற்பனை கலந்து தான் படைத்து உள்ளீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

தங்களின் பதிலை எதிர்பார்த்து பதிக்கிறேன்

கேட்டதில் தவறு இருப்பின் மன்னிக்கவும்

நன்றி

என்னவன் விஜய்
21-09-2007, 09:22 PM

நானும் இதனையே யோசித்துக்கொண்டிருந்தேன்

ராஜா
22-09-2007, 08:20 AM
நன்றி நண்பர்களே..!

20/20 தொடர்போட்டியும், தொடர்ந்து வரும் ஆஸ்திரேலியா தொடரும் முடியட்டும்.. பின்னர் நான் இந்தத் திரியைத் தொடர்வேன்.. அப்போது உங்கள் அனைவரின் கேள்விகட்கும் என்னால் இயன்ற விளக்கத்தைத் தருவேன்..

arun
23-09-2007, 05:10 PM

ஆரம்பம் முதல் இதை தான் சொல்லி வருகிறீர்கள் காத்திருக்கிறோம் தங்களின் பதிலுக்காக.

ராஜா
23-09-2007, 05:40 PM
ஆரம்பம் முதல் இதை தான் சொல்லி வருகிறீர்கள் காத்திருக்கிறோம் தங்களின் பதிலுக்காக.

காத்திருங்கள்..

உங்கள் கேள்விகள் என்னென்ன என்பதையும் அப்போது தெரிவியுங்கள்..

ராஜா
23-09-2007, 05:44 PM
முழுக்க முழுக்க கற்பனை என்று தங்களின் திரியை சொல்ல வரவில்லை ஆனால் கற்பனை கலந்து தான் படைத்து உள்ளீர்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?

நன்றி

இவ்வாறு நீங்கள் நினைக்கக் காரணங்கள் என்னென்ன என்பதையும் தெரிவியுங்கள்..!

நன்றி..

arun
28-09-2007, 06:25 PM
இவ்வாறு நீங்கள் நினைக்கக் காரணங்கள் என்னென்ன என்பதையும் தெரிவியுங்கள்..!

நன்றி..

1) மைதானத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் காண்பிக்கும் தொலைக்காட்சி காமிராக்கள், மிகவும் முக்கியமான நிகழ்வான toss எனப்படும் காசு சுண்டுதலை ஆதியோடந்தமாக விலாவரியாக ஏன் காட்டுவதில்லை..?

2) பெரும்பாலான சமயங்களில், 50 அல்லது 100 ஒட்டங்கள் எடுக்கும் மட்டையாளர்கள் ஆரம்பத்தில் கொடுக்கும் பிடிகள் (catches) நழுவ விடப்படுவது ஏன்? அவ்வாறு தப்பிப் பிழைக்கும் மட்டையாளர்கள், 50 அல்லது 100 ஓட்டங்கள் எடுத்த பின் உடனடியாக ஆட்டமிழந்து விடுவது ஏன் என்று இது வரை சிந்தித்திருக்கிறீர்களா?

3) பயிற்சியின் போது காயமடைந்ததால் 1 மாதத்துக்கு ஒரு வீரர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப் படுவதெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை என்று ஆராய்ந்திருக்கிறீர்களா?

இந்தியா எல்லா ஆட்டங்களிலும் வெல்லுவது போன்று திரைக்கதை அமைக்க முடியாது அல்லவா..? என்னதான் பணம் கொடுத்து வென்றாலும் எப்போதும் தோற்க எல்லா அணிகளும் ஒப்ப மாட்டா.. அப்போது இந்தியா சில ஆட்டங்களில் தோற்கவும் வேண்டும்தானே..? அந்த மாதிரி ஆட்டங்களுக்கு ஆசையாக தென்னக வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
வேணுகோபால் ராவ், முரளி கார்த்திக் போன்ற ஆட்டக்காரர்களை அந்தப் போட்டிகளில் இழுத்துவிட்டு விடுவார்கள்..

இது போல பல கொடுக்கலாம் முதலில் இதனை எப்படி சொல்கிறீர்கள் என்று சொல்லவும்

தென் ஆப்ரிக்கா சென்றது வலுவான அணி தானே? டாஸ் போடும்போது அம்பயர்கள் கூட இருப்பார்கள் அப்போது அம்பயர்களும் இதற்கு உடந்தை என சொல்ல வருகிறீர்களா?

இன்னும் பல இருக்கிறது தாங்கள் சொல்வது போல தொடர் முடியட்டும்

ஜெயாஸ்தா
29-09-2007, 02:38 AM
நம்ப முடியாவிட்டாலும் ராஜா சொல்வதில் 90 சதவீதம் உண்மையாகத்தான் உள்ளது. 20/20 மேட்சில் 5500 கோடி சூதாட்டம் நடைபெற்றதாக பத்திரிக்கைச் செய்தி.

நல்ல ஒரு புலனாய்வு கட்டுரை. தொடருங்கள் ராஜா.

Joe
26-10-2007, 10:22 AM
இந்த இழையில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலை எதிர்பார்த்திருப்பவர்களில் நானும் ஒருவன்...
ராஜா.. உங்களின் விளக்கங்களை எதிர்பார்த்திருக்கிறேன்..

ஜோ..

ராஜா
26-10-2007, 01:06 PM
நன்றி நண்பர்களே..!

விரைவில் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் தருகிறேன்.. இதற்காக பல பழைய போட்டிகளை "ரெஃபெர்" செய்து வருகிறேன்.. எனக்கிருக்கும் வேலைப்பளுவுக்கிடையில் இந்த நெடிய உழைப்புக்கு நேரம் அதிகம் தேவை..

கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.. விரைவில் வருகிறேன்..!

நன்றி..!

xavier_raja
27-10-2007, 08:22 AM
நீங்கள் சொல்ல வருவது எது என்று ஒரளவு புரிகிறது, ஆனால் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் விளையாடும்பொழுது இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று புரியவில்லை. காரணம் ஆஸ்திரேலியா கிரிகெட் ஒரு Professionalஆன அணி. நீங்கள் மற்றதை சொன்னவுடன் நான் என்னுடைய கருத்தை சொல்கிறேன்.

நேசம்
27-10-2007, 09:36 AM
ராஜா அண்ணன் சொல்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லையேன்றால் நாம் கிரிக்கெட் மீது அளவு கடந்த பைத்தியமாக இருக்கிறோம் என்று அர்த்தம்

pasaam
27-05-2008, 05:41 AM
ஏன் ராஜா!
நம்ப அந்திய கிரிக்கட் அணி ஜிம்பாவேயிடமும், கடைசி உலகக்கோப்பையில் வங்காளதேசத்திடம் செம அடி வாங்கியதையும்
மறந்துட்டீங்களே!
பாசம்

pasaam
27-05-2008, 05:43 AM
மன்னியுங்கள் ராஜா இந்தியா அந்தியாவா மாறியதற்கு.
பாசம்

கண்மணி
27-05-2008, 06:29 AM
அதாவது உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் தோற்றதற்குப் பரிசுதான் 20/20 க்கான உலகக் கோப்பை வெற்றி பரிசளிக்கப் பட்டது. அதாவது 20/20 மேட்சுகளை இந்தியாவில் நடத்தினால் நல்ல காசு பார்க்கலாம் என்று ஒரு வருடத்திற்கு முன்பே வியாபாரத்திட்டம் ஆரம்பமாகி விட்டது.

ஐ பி எல் மேட்சுகள் கூட மும்பை அணி மூன்று போட்டிகளில் கடைசிப் பந்துகளில் வெற்றி வாய்ப்பை இழக்க இதுதான் காரணமோ? சென்னை பங்களூரிடம் தோற்று மல்லையாவுக்கு நஷ்டத்தை குறைக்க அதற்காக மும்பை இரு போட்டிகளில் தோற்று டென்ஷனை உண்டாக்க..

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்றால் கிரிக்கெட் வாரியம் கடவுள்தான். மாயையில் சிக்கிய உலகம் தான் ரசிகர்கள்.

நீங்கள் சொல்வதை ஒரு எக்ஸார்டினரி ஜோக்காக எடுத்துக் கொள்ள இயலவில்லை. பலமுறை இறுதிப் போட்டிக்கு யார் வரவேண்டும் என முன்பே தீர்மானிக்கப் பட்டப் போட்டிகளையும் பார்த்து இருக்கிறேன். 20/20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா பாகிஸ்தான் மேட்ச்தான் என்பது 50/50 உலகக் கோப்பையின் போதே புரிந்து விட்ட ஒன்று..

சரி ஐ.பி.எல் இறுதிப் போட்டியைக் கவனிப்போம்..உங்க கண்ணோட்டப்படி பாக்கட்டுமா?

1. மும்பை ரொம்பவே விட்டுக் கொடுத்து இருக்கு, அதனால அவங்க செமி ஃபைனல்ஸ் போகணும். தோணி இன்று டெக்கான் சார்ஜர்ஸ் கிட்ட தோத்துப் போவார்.

2. டெல்லி - ராஜஸ்தான் போட்டியில டெல்லி ஜெயிக்கும்.
3. பஞ்சாப் - மும்பை போட்டியில மும்பை ஜெயிக்கும்

டெல்லி - மும்பை போட்டியில மும்பை ஜெயிக்கும்

ஆக அம்பானி வெற்றிக் கொடி நாட்டுவார்,

ராஜஸ்தான் அடடா பேட்-லக் என அடுத்த வருஷத்திற்கு தயாராகும்.
பஞ்சாப் தோத்தாலும் யுவராஜ் ரன் குவிப்பார். டெல்லி மும்பை மேட்ச் 200+ ரன்களைத் தாண்டும்,,

பார்ப்போம் ராஜாண்ணா..!!!!

அப்ப 1983 உலகக் கோப்பையும் அப்படித்தானா?

ராஜா
27-05-2008, 06:44 AM
நான் இந்தத் திரியின் முற்பகுதியில் கூறியுள்ளபடி... கிரிக்கெட் போட்டி நிகழ்வுகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மிகத் திறமையாக நடத்திக் காட்டப்படுபவை.. WWE சண்டைகள் போல..

மும்பை அணி கடைசி போட்டியில் வெற்றி பெற்றால்தான் அரை இறுதியில் நுழைய முடியும்.. அதே நிலைதான் சென்னை அணிக்கும்.. இப்படிப்பட்ட நிலையை உருவாக்க சில தோல்விகள் தவிர்க்க முடியாதவை.. அப்போதுதான் கடைசி போட்டிவரை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி காசு பார்க்க முடியும்.. உள்ளபடியே ஆட்டம் நடந்தால் மிக வலிமையான 4 அணிகள் பாதித் தொடர் நடக்கும்போதே தகுதி பெற்றிருக்கும்.. மீதி போட்டிகள் ஈயடிக்கும்..!

ராஜா
27-05-2008, 07:00 AM
அப்ப 1983 உலகக் கோப்பையும் அப்படித்தானா?

இல்லை கண்மணி..!

1983 அணி அதிகப் பட்ச ஆல்ரவுண்டர்கள் அடங்கிய மிகத் திறமையான அணி.. கபில்தேவின் செம்மையான, துணிவான வழிநடத்தலில் வெற்றி கண்ட அணி.. ஆனாலும் அதிர்ஷ்டமும் இந்திய அணிக்கு துணை நின்றது.

மேட்டர் அதுக்கு அப்புறம்தான் ஆரம்பமாச்சு.. இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றிக்குப் பின் அகில இந்தியாவும் கிரிக்கெட்டை திரும்பி, விரும்பிப் பார்க்க துவங்கியது. அப்போது பிரபலமாகி வந்த தொலைக்காட்சிப் பரவலும் இதற்கு பெரிதும் துணை நின்றது.

வாரியமும் இப்படி ஒரு பொன் முட்டையிடும் வாத்து இருப்பதைக் கண்டுபிடித்தது. இருந்தாலும் ஆரம்ப கால செயல்திட்ட கோளாறுகளாலோ, அல்லது சரியான நடைமுறைப்படுத்தல்கள் இல்லாததினாலோ, கிரிக்கெட் வியாபாரத்தில் பின்னடைவு ஏற்பட்டது.. 1987 ரிலையன்ஸ் கோப்பை தோல்வி கூட இந்தப் பின்னடைவுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.. பின்னர், 80களின் இறுதியில் இந்தியக் கிரிக்கெட்டுக்கு, சச்சின் என்னும் தேவ குமாரன் கிடைத்தான்.. அனைவரையும் இந்தியக் கிரிக்கெட்டின்பால் ஆர்வம் கொள்ளச் செய்தான்.. இரண்டாம் வாய்ப்பை சரியாகக் கவ்விக்கொண்ட வாரியம், துல்லியமாக காய் நகர்த்தி, கோடிகளை அள்ளுகிறது.

இன்று முதுமையிலும், உடல்நோவுகளிலும் சிக்கித் தவிக்கும் சச்சினை நாம் இன்னும் கிரிக்கெட் கடவுள் என்று நம்பும்படி ஆட்டம் வடிவமைக்கப் படுகிறது.

தொடர்ந்து 2 ஓட்டங்கள் ஓடமுடியாத நிலையில் இருக்கும்... சச்சின்...

ஆஃப் ஸ்டம்ப் அளவில் வரும் பந்துகளை கணிக்கும் திறனை இழந்துவிட்ட சச்சின் தான் இப்போது இந்திய கிரிக்கெட்டின் கடவுள்.. அடுத்த கடவுள் கண்டுபிடிக்கப்படும்வரை..!

ஷீ-நிசி
27-05-2008, 12:49 PM
தொடர்ந்து 2 ஓட்டங்கள் ஓடமுடியாத நிலையில் இருக்கும்... சச்சின்...

இன்றைய இளைஞர்களின் ஓட்டத்திற்கு எவ்வகையிலும் குறைவில்லாத அளவில் விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் சேர்க்கும் திறமை இன்னும் சச்சினுக்கு மங்காமலேத்தான் இருக்கிறது...

கண்மணி
27-05-2008, 01:02 PM
இப்போதைக்கு 20/20 தேவகுமாரர்கள் தானே அடுத்த வாரிசுகள்..

அப்படியானால் தோணி அல்லவா அரை இறுதிக்கு முன்னேற வேண்டும்..

என்ன ராசா, தேவகுமாரன் என்ற வார்த்தையைப் போட்டு என் கணிப்புகளைக் குலைத்து விட்டீர்களே!!!

ராஜா
27-05-2008, 01:10 PM
இன்றைய இளைஞர்களின் ஓட்டத்திற்கு எவ்வகையிலும் குறைவில்லாத அளவில் விக்கெட்டுகளுக்கு இடையில் ரன் சேர்க்கும் திறமை இன்னும் சச்சினுக்கு மங்காமலேத்தான் இருக்கிறது...

வந்ததற்கு நன்றி ஷீ..!

தனக்கு 2 ஓட்டங்கள் என்றால் ஓரளவுக்கு மல்லுக்கட்டி ஓடிவிடுவார்.. அதுவும் அதற்கு அடுத்த பந்தில் நோ 2 ஓட்டம்..!

எதிராளிக்காக 2 ஓட்டம் ஓடவேண்டுமானால் கொஞ்சம் சந்தேகம்தான்..!

அடுத்தமுறை சச்சின் ஆடும்போது கவனித்துப் பாருங்கள்.. அவர் படும் அவஸ்தை தெரியும்..!

ஷீ-நிசி
27-05-2008, 01:20 PM

நன்றி ராஜா சார்..
உண்மைதான், லக்ஷ்மன் மாதிரியான ஆட்களுக்கு ஓடி ரன் அவுட் ஆவதைக் காட்டிலும் ஒரு ரன்னில் நிற்பது புத்திசாலித்தனம்தானே...

பெங்களூர் ஸ்டேடியம், இந்தியா - ஆஸ்திரேலியா, மெக்ராத் பாலை வறுத்தெடுத்துக்கொண்டிருந்த வேளையில் லஷ்மணால் ரன் அவுட் ஆனது இன்னும் நினைவில் நீங்காமல் உள்ளது... நன்றாக கவனித்தவரையில்தான் கூறுகிறேன் ராஜா சார்...

இளம் வீரர்கள் சச்சினிடம் கற்றுக்கொள்ளவேண்டும், எப்படி இந்த வயதிலும் ஃபிட்னெஸாக உடலை வைத்துக்கொள்வது என்று...

(நேற்றைய காட்சை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்)

ராஜா
27-05-2008, 01:45 PM
ஆட்டத்தில் ரன் அவுட்கள் தவிர்க்க முடியாதவை.. அதற்காக அடுத்தவருக்காக 2 ஓட்டங்கள் ஓடத் தயங்குவதோ, அல்லது 3 ஓட்டங்கள் ஓடவேண்டிய வேளையில் அதை எடுக்கத் தவறுவதோ சரியல்ல..

அவரது ஸ்ட்ரைக் ரேட்டையும் கொஞ்சம் கவனியுங்கள்.. நான் சொல்வது உண்மைதான் என்று புலப்படும்.

அதுமட்டுமல்ல.. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே மொட்டை பேசில் ஒரு மொக்கை பந்தை வீச்சாளர் வீசுவார்.. எவ்வித பயமுறுத்தலும் இல்லாத அந்த பந்தை சச்சின் கவர் திசையில் விரட்டுவார்.. அல்லது சச்சினின் பலமான லெக் ஸ்டம்பில் வந்து விழும் பந்தை காற்றாடி ஸ்ட்ரோக் அடித்து மிட் விக்கெட் பவுண்டரிக்கு அனுப்புவார்.. அதற்கு வசதியாக அங்கே ஃபீல்டிங் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.. சச்சினும் பங்காளியும் கிளவுஸ் பஞ்சிங் செய்துகொள்ளுவார்கள்.. கூட்டம் ஆர்ப்பரிக்கும்.. எல்லாமே செட் அப் தான்..!

அடுத்தமுறை சச்சினுக்கு வீசப்படும் பந்துக்கும் பங்காளி மட்டையாளருக்கு வீசப்படும் பந்துக்கும் உள்ள வித்தியாசத்தை அவதானியுங்கள்.. பாதி உண்மை புரியும்..!

கிரிக்கெட்டை புரிந்துகொள்ள "மனம்" மட்டும் போதாது..!

ஷீ-நிசி
29-05-2008, 02:16 PM

இதற்கு என்னால் சிரிப்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை.

ராஜா
29-05-2008, 05:55 PM
இதற்கு என்னால் சிரிப்பதை தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை.

தங்களை சிரிக்க வைக்க முடிந்தது குறித்து எனக்கும் மகிழ்வே..!

என்றாவது ஒருநாள் உண்மையை உணர்வீர்கள்.. அப்போது எவ்விதத் தயக்கமும் இல்லாமல் பெருந்தன்மையுடன் என்னைப் பாராட்டுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு ஷீ..!

பூமகள்
29-05-2008, 06:00 PM
ராஜா அண்ணா...
நாம சொல்ல வருவதை ஒருவர் சொல்கையில்.. குதூகலப்படுமே.. அந்த குதூகலத்தோடு உங்க பதிவைப் படிக்கிறேன் அண்ணா...!!

இன்னும் நிறைய படிக்கனும்.. பொறுமையாக வந்து படித்து குதிக்கிறேன்..!!

முக்கியமாக.. கண் மூடித்தனமாக கிரிக்கெட் மோகமுள்ளவர்களுக்கு சரியான பாடமாக இருக்கும்..!!

பாராட்டுகள் ராஜா அண்ணா. :)

ஷீ-நிசி
30-05-2008, 02:20 PM
:icon_clap::icon_clap:

arun
11-06-2008, 06:17 PM
அதாவது உலகக் கோப்பை ஒரு நாள் போட்டிகளில் தோற்றதற்குப் பரிசுதான் 20/20 க்கான உலகக் கோப்பை வெற்றி பரிசளிக்கப் பட்டது. அதாவது 20/20 மேட்சுகளை இந்தியாவில் நடத்தினால் நல்ல காசு பார்க்கலாம் என்று ஒரு வருடத்திற்கு முன்பே வியாபாரத்திட்டம் ஆரம்பமாகி விட்டது.

ஐ பி எல் மேட்சுகள் கூட மும்பை அணி மூன்று போட்டிகளில் கடைசிப் பந்துகளில் வெற்றி வாய்ப்பை இழக்க இதுதான் காரணமோ? சென்னை பங்களூரிடம் தோற்று மல்லையாவுக்கு நஷ்டத்தை குறைக்க அதற்காக மும்பை இரு போட்டிகளில் தோற்று டென்ஷனை உண்டாக்க..

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்றால் கிரிக்கெட் வாரியம் கடவுள்தான். மாயையில் சிக்கிய உலகம் தான் ரசிகர்கள்.

நீங்கள் சொல்வதை ஒரு எக்ஸார்டினரி ஜோக்காக எடுத்துக் கொள்ள இயலவில்லை. பலமுறை இறுதிப் போட்டிக்கு யார் வரவேண்டும் என முன்பே தீர்மானிக்கப் பட்டப் போட்டிகளையும் பார்த்து இருக்கிறேன். 20/20 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா பாகிஸ்தான் மேட்ச்தான் என்பது 50/50 உலகக் கோப்பையின் போதே புரிந்து விட்ட ஒன்று..

சரி ஐ.பி.எல் இறுதிப் போட்டியைக் கவனிப்போம்..உங்க கண்ணோட்டப்படி பாக்கட்டுமா?

1. மும்பை ரொம்பவே விட்டுக் கொடுத்து இருக்கு, அதனால அவங்க செமி ஃபைனல்ஸ் போகணும். தோணி இன்று டெக்கான் சார்ஜர்ஸ் கிட்ட தோத்துப் போவார்.

2. டெல்லி - ராஜஸ்தான் போட்டியில டெல்லி ஜெயிக்கும்.
3. பஞ்சாப் - மும்பை போட்டியில மும்பை ஜெயிக்கும்

டெல்லி - மும்பை போட்டியில மும்பை ஜெயிக்கும்

ஆக அம்பானி வெற்றிக் கொடி நாட்டுவார்,

ராஜஸ்தான் அடடா பேட்-லக் என அடுத்த வருஷத்திற்கு தயாராகும்.
பஞ்சாப் தோத்தாலும் யுவராஜ் ரன் குவிப்பார். டெல்லி மும்பை மேட்ச் 200+ ரன்களைத் தாண்டும்,,

பார்ப்போம் ராஜாண்ணா..!!!!

அப்ப 1983 உலகக் கோப்பையும் அப்படித்தானா?

தங்களது கணிப்பு இப்படி ஆகி விட்டதே?

இரண்டு அணிகளும் இரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற வில்லை :icon_p::mini023::mini023:

கிரிக்கெட்டில் சில போட்டிகளின் முடிவுகள் முன்பே நிர்ணயிக்கபடுகின்றன என்ற கூற்றில் சிறிது உண்மைகள் இருந்தாலும் இது போல கற்பனை செய்வது கொஞ்சம் சிரிப்பாக தான் உள்ளது :lachen001::D:lachen001:

arun
11-06-2008, 06:23 PM
ஆட்டத்தில் ரன் அவுட்கள் தவிர்க்க முடியாதவை.. அதற்காக அடுத்தவருக்காக 2 ஓட்டங்கள் ஓடத் தயங்குவதோ, அல்லது 3 ஓட்டங்கள் ஓடவேண்டிய வேளையில் அதை எடுக்கத் தவறுவதோ சரியல்ல..

அவரது ஸ்ட்ரைக் ரேட்டையும் கொஞ்சம் கவனியுங்கள்.. நான் சொல்வது உண்மைதான் என்று புலப்படும்.

அதுமட்டுமல்ல.. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே மொட்டை பேசில் ஒரு மொக்கை பந்தை வீச்சாளர் வீசுவார்.. எவ்வித பயமுறுத்தலும் இல்லாத அந்த பந்தை சச்சின் கவர் திசையில் விரட்டுவார்.. அல்லது சச்சினின் பலமான லெக் ஸ்டம்பில் வந்து விழும் பந்தை காற்றாடி ஸ்ட்ரோக் அடித்து மிட் விக்கெட் பவுண்டரிக்கு அனுப்புவார்.. அதற்கு வசதியாக அங்கே ஃபீல்டிங் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.. சச்சினும் பங்காளியும் கிளவுஸ் பஞ்சிங் செய்துகொள்ளுவார்கள்.. கூட்டம் ஆர்ப்பரிக்கும்.. எல்லாமே செட் அப் தான்..!

அடுத்தமுறை சச்சினுக்கு வீசப்படும் பந்துக்கும் பங்காளி மட்டையாளருக்கு வீசப்படும் பந்துக்கும் உள்ள வித்தியாசத்தை அவதானியுங்கள்.. பாதி உண்மை புரியும்..!

கிரிக்கெட்டை புரிந்துகொள்ள "மனம்" மட்டும் போதாது..!

தாங்கள் ஒன்றை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும் எப்போதும் நல்ல பந்தை பவுண்ட்ரியாக மாற்ற முடியாது வீரரின் கடமையே பந்தை கணித்து விளையாடுவது தான்

ராஜா
11-06-2008, 06:35 PM
நல்ல பந்தை பவுண்டரியாக மாற்ற முடியுமா முடியாதா என்ற விவாதத்துக்கு பிறகு வருவோம்.

என்னுடைய குற்றச்சாட்டு, வேண்டுமென்றே பந்துகள் சில மட்டையாளருக்குச் சாதகமாக [ அவர் அடித்து விளாசும்படியாக] வீசப்படுகின்றன என்பதே..

அதுகுறித்து தங்கள் மேலான கருத்தை அறிய விரும்புகிறேன்.

arun
12-06-2008, 06:06 PM

எந்த பவுலர் அப்படி பந்தை வீசுகிறார் என்று தெரிந்து கொள்ளலாமா?

ஆறு பந்தையும் துல்லியமாக வீசுவது சிறிது கடினம்

தமிழ் தென்றல்
13-06-2008, 02:47 AM
கிரிக்கெட்டில் முன்கூட்டியத் திட்டமிடலைக் காட்டிலும், பாதிப்புகளைக் கட்டுப்படுத்தத் திட்டமிடல் நடக்கிறது என்பதை ஒப்புக் கொள்ளலாம்..

ஒரு தொடரின் முதல் பந்திலேயே, போட்டியின் முடிவு நிர்ணயிக்கப் படுவதாக நீங்கள் சொன்னால் நானும் நிசியாரோடு சேர்ந்து சிரிக்க நேரிடும்..

There is not pro active planning.. Only re active planning is happening..

வரு முன் காப்போம் என்பதெல்லாம் கிரிக்கெட்டில் இல்லை... வந்த பின் காப்போம் போன்ற முயற்சிகள்தான் உண்டு...

பெங்களூர் அணி சென்னையை வென்றது போல... மற்றபடி சச்சினுக்காகவே, எல்லை திறந்து விடப்பட்டிருக்கும் என்பதெல்லாம்... :)

ராஜா
13-06-2008, 06:52 AM

தொடரின் முதல் பந்திலேயே என்பதுகூட அல்ல.. தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பேயே ஆட்ட முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதே என் குற்றச்சாட்டு.

இந்தத் திரியை ஆரம்பத்திலிருந்தே படித்துப் பாருங்கள்.. உண்மை தெளிவாகும். அப்படி இல்லையெனில் எனக்கு ஒன்றும் இழப்பு இல்லை.. ஏனெனில் உங்களை நம்பவைப்பது என் வேலை அல்ல.. இந்தத் திரிக்கென்றே இரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமே எனக்குப் போதும்.

ராஜா
13-06-2008, 08:09 AM
எந்த பவுலர் அப்படி பந்தை வீசுகிறார் என்று தெரிந்து கொள்ளலாமா?

இந்த வீச்சாளர்தான் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது.

உதாரணமாக சேவாக் 100 ஓட்டங்கள் அடிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அவருக்கு வீசும் எல்லா வீச்சாளர்களுமே அபாயகரமான பந்தை வீசவே மாட்டார்கள். அதே போல சேவாக் தப்பித்தவறி காட்ச் கொடுத்துவிட்டால்கூட, யாரும் அதைப் பிடிக்கமாட்டார்கள்..!

சேவாக் 100 ஓட்டங்கள் அடித்த இன்னிங்ஸ் எல்லாவற்றிலுமே ஒன்று அல்லது இரண்டு பிடிகள் நழுவ விடப்பட்டிருக்கும். இது மறுக்க முடியாத ஒன்று.

பந்து "போட்டு" கொடுப்பதற்கென்றே சில வீச்சாளர்களும் இருக்கிறார்கள்.. ஆஷிஷ் சோப்ரா, முனாஃப் படேல் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்.. இவர்கள் இல்லாதபோது, சிரிசாந்த் அந்த திருப்பணியை மேற்கொள்வார்.

கண்மணி
13-06-2008, 04:43 PM
தங்களது கணிப்பு இப்படி ஆகி விட்டதே?

இரண்டு அணிகளும் இரு அணிகளும் இறுதி போட்டிக்கு தகுதி பெற வில்லை :icon_p::mini023::mini023:

கிரிக்கெட்டில் சில போட்டிகளின் முடிவுகள் முன்பே நிர்ணயிக்கபடுகின்றன என்ற கூற்றில் சிறிது உண்மைகள் இருந்தாலும் இது போல கற்பனை செய்வது கொஞ்சம் சிரிப்பாக தான் உள்ளது :lachen001::D:lachen001:

இப்போதைக்கு 20/20 தேவகுமாரர்கள் தானே அடுத்த வாரிசுகள்..

அப்படியானால் தோணி அல்லவா அரை இறுதிக்கு முன்னேற வேண்டும்..

என்ன ராசா, தேவகுமாரன் என்ற வார்த்தையைப் போட்டு என் கணிப்புகளைக் குலைத்து விட்டீர்களே!!!

வசதியா இதையெல்லாம் படிக்க மாட்டீங்களே.. நானே ராஜா அண்ணன் கிட்ட இப்பதான் பாடம் படிச்சிகிட்டிருக்கேன்!!!

தமிழ் தென்றல்
13-06-2008, 05:25 PM
தொடரின் முதல் பந்திலேயே என்பதுகூட அல்ல.. தொடர் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்பேயே ஆட்ட முடிவுகள் தீர்மானிக்கப்படுகின்றன என்பதே என் குற்றச்சாட்டு.

இந்தத் திரியை ஆரம்பத்திலிருந்தே படித்துப் பாருங்கள்.. உண்மை தெளிவாகும். அப்படி இல்லையெனில் எனக்கு ஒன்றும் இழப்பு இல்லை.. ஏனெனில் உங்களை நம்பவைப்பது என் வேலை அல்ல.. இந்தத் திரிக்கென்றே இரசிகர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமே எனக்குப் போதும்.

நான் இத்திரியினைத் துவக்கத்தில் இருந்து படிக்கவில்லை என்பது உண்மை... இன்னும் கூடப் படிக்கவில்லை.. பொய் புகல விரும்பாமையால் சொல்கிறேன்...

ஆனால், நான் இங்கு முன்னர் என் பதிவினை இட்டது, உங்களை எதிர்த்து வாதம் செய்யவோ அல்லது என்னை நம்ப வைக்க நீங்கள் ஆதாரங்கள் தர வேண்டும் என்பதற்காகவோ அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

நீங்கள் எப்படி உங்கள் கருத்தை சொன்னீர்களோ, அப்படி நானும் சொன்னேன்... இந்தத் திரிக்கென ரசிகர்கள் என்றால் என்னையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.. ஏன் பிரிக்கிறீர்கள்..??

ஆனால் இந்தத் திரியின் ரசிகர்கள் என்பதும், உங்கள் கருத்துக்களை ஆமோதிப்பது என்பதும் ஒன்றா...??

இரண்டும் வெவ்வேறானவை அல்லவா..??

கிரிக்கெட்டில் இன்ன பந்தில் இன்னதுதான் நடக்க வேண்டும் என நிர்ணயிக்க முடியாது... ( அதாவது 100 க்கு 100 சதவிகிதம்....), சில முடிவுகளுக்காய் சில நகர்த்தல்கள் நடைபெறுவதுவும், அது பல நேரங்களில் பலிக்காமல் போனதுவும் கண்கூடு...

ஹன்சி குரோனியே எப்படியெல்லாம் தவறிழைத்தும் இந்தியர்கள் தோற்றப் போட்டிகளைப் பற்றி உலகமே சிரித்தது என்பது உண்மையான உலகறிந்த செய்தி.... அதனால் திட்டமிடல் நடக்கும் எல்லா இடங்களிலும் அவை வெற்றி பெற்றுவிடுவதும் இல்லை...

என் கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன்... நான் உங்களை ஏற்றுக் கொள்ள சொல்லவில்லை.. என் கருத்தை மட்டுமே சொல்கிறேன்..

தமிழ் மன்றத்தில் நீங்கள் உங்கள் கருத்தை ஆமோதிப்பவர்கள் மட்டுமே ( நீங்கள் இத்திரிக்கென ரசிகர்கள் ஏன்று சொன்னதை வேறு விதமாய் அர்த்தப் படுத்திக் கொள்ள முடியவில்லை...) போதும் என்று சொன்னால், கிரிக்கெட்டுக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் உங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்ளாதவர் எண்ணிக்கை மட்டுமே அவ்விளையாட்டுக்குப் போதாதா...??

மேற்கண்ட பத்தியில் சொன்ன கருத்தை நான் கிரிக்கெட் என்ற விளையாட்டுக்காக சொல்லவில்லை... நாம் எப்போதும் ஒரு விரலைக் காட்டினால், மூன்று விரல்கள் நம்மைக் காட்டும் என்ற தத்துவம் நீங்களும் அறிந்த ஒன்றுதானே... அப்படி நீங்கள் சொன்ன கருத்து எப்படி உங்களைக் குறித்துக் காட்டுகிறது என விளக்கினேன்... அவ்வளவுதான்...

ஏதேனும் தவறாக சொல்லியிருப்பின் மன்னிக்கவும்... :cool:

ராஜா
13-06-2008, 05:51 PM
ஒன்றும் தவறு இல்லை தென்றல்..!

அவரவர் கருத்து அவரவருக்கு..! உங்கள் கருத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.. என் கருத்தை நான் சொல்கிறேன். படிப்பவர்கள் நீர் எது பால் எது என்று தரம் பிரிக்கத் தகுந்தவர்கள்..

ஆனால் நீங்கள் உங்கள் கருத்தை சொல்வதற்கும்,

//////ஒரு தொடரின் முதல் பந்திலேயே, போட்டியின் முடிவு நிர்ணயிக்கப் படுவதாக நீங்கள் சொன்னால் நானும் நிசியாரோடு சேர்ந்து சிரிக்க நேரிடும்../////

என்று சொல்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அதுவும் மன்றத்துக்கு புதியவரான ஒருவர் ஒரு திரியை முழுமையும் படிக்காமல் ஒரு பகுதிக்கு இப்படி ஒரு கருத்தைச் சொன்னதால் நான் அவ்வாறு பதிலளிக்க நேர்ந்தது. அவ்வளவே..!

ஏதேனும் தவறிருப்பின் பொறுத்தருள வேண்டியது தற்போது உங்கள் முறை..!

தமிழ் தென்றல்
13-06-2008, 06:05 PM

ஹும்... நான் முழுவதும் படிக்கவில்லை என்பது உண்மை... ஆனால், நான் படித்ததற்கு மட்டும்தானே என் கருத்து எப்படி இருக்கும் என்பதைத் தெரிவித்தேன்...

நான் புதிதான கருத்தை சொல்லி விடவில்லை என்பதற்காகவே நிசியாரைக் குறித்தேன்... நிச்சயமாக, உங்களை நோக்கிய சிரிப்பு என்பதாக அர்த்தம் அல்ல... சிரிப்பும் ஆணவமான சிரிப்பும் அல்ல... ஒரு மெல்லிய புன்னகை.. அவ்வளவுதான்..

எனினும், தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியது தவறு என்று ஒத்துக் கொண்டு மன்னிப்பு கோருகிறேன்...

ஆனால், ஏற்கனவே சொன்னது போல், அனைத்து பந்துகளும் ஏற்பாடு செய்து, பின் அதன்படி நடப்பது அல்ல என்பதில் முன்னைப் போலவே உறுதியாய் இருக்கிறேன்..

நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுவிட்ட ஆஸ்திரேலியா, உடனே ஒரு உலகக் கோப்பையை நடத்தி, அதில் இந்தியா வெற்றி பெற நீங்கள் தோற்றுப் போங்கள் என்று சொன்னால், தங்கள் பெருமையை விட்டுக் கொடுத்து விடுமா...??

அதற்காக, அடுத்தும் ஆஸ்திரேலியாதான் வெற்றியாளர் என நான் சொல்லவில்லை.. நீங்கள், ஸ்டீவ் வா போன்ற அணித் தலைவர்களின் திறமைக்கே கேள்விக்குறி இடுகிறீர்கள்... அடுத்த முறை இந்தியா உட்பட வேறு அணி கோப்பையை வென்றால் ஆச்சரியப் படாதீர்கள்.. ஆஸ்திரேலியா முன்னைப் போல் பலமான அணியல்ல.. ஆனாலும் எந்த அணியும், அவர்களை வெல்ல தங்கள் 100% உழைப்பை இட வேண்டியிருக்கும்...

ராஜா
13-06-2008, 06:12 PM
உங்கள் கடைசி பத்திதான் என் கருத்தும் என்பதை நீங்கள் திரியை முழுமையாகப் படித்தால் உணர்வீர்கள் தென்றல்.. நான் எங்குமே ஆஸி. அணியையோ அவ்வீரர்களையோ குறைத்து மதிப்பிடவில்லை என்பதையும் உணர்வீர்கள்.

முதலில் திரி முழுமையும் படியுங்கள்.. நான் இங்கே தான் இருப்பேன்.. பொறுமையாக விவாதிப்போம்.

arun
13-06-2008, 06:15 PM
இந்த வீச்சாளர்தான் என்று ஒருவரை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது.

உதாரணமாக சேவாக் 100 ஓட்டங்கள் அடிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.. அவருக்கு வீசும் எல்லா வீச்சாளர்களுமே அபாயகரமான பந்தை வீசவே மாட்டார்கள். அதே போல சேவாக் தப்பித்தவறி காட்ச் கொடுத்துவிட்டால்கூட, யாரும் அதைப் பிடிக்கமாட்டார்கள்..!

சேவாக் 100 ஓட்டங்கள் அடித்த இன்னிங்ஸ் எல்லாவற்றிலுமே ஒன்று அல்லது இரண்டு பிடிகள் நழுவ விடப்பட்டிருக்கும். இது மறுக்க முடியாத ஒன்று.

பந்து "போட்டு" கொடுப்பதற்கென்றே சில வீச்சாளர்களும் இருக்கிறார்கள்.. ஆஷிஷ் சோப்ரா, முனாஃப் படேல் போன்றோர் அதில் முக்கியமானவர்கள்.. இவர்கள் இல்லாதபோது, சிரிசாந்த் அந்த திருப்பணியை மேற்கொள்வார்.

தாங்கள் சொல்வது நடக்கவே நடக்காது என சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை

ஆரம்பத்தில் இருந்து இந்த திரியை படிப்பவன் என்ற முறையில் தங்களின் கணிப்பு இது வரை நடந்ததாக தெரியவில்லை

ஆனால் தாங்கள் சொல்வது நடக்கவே நடக்காது எனவும் சொல்ல வரவில்லை

எல்லா துறையிலும் ஒரு சிலர் இப்படி இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால் மொத்த பேரையும் சொல்வதில் தான் சிறிது வருத்தமாக உள்ளது

தவறாக ஏதேனும் சொல்லி இருந்தால் மன்னிக்கவும்

arun
13-06-2008, 06:20 PM
வசதியா இதையெல்லாம் படிக்க மாட்டீங்களே.. நானே ராஜா அண்ணன் கிட்ட இப்பதான் பாடம் படிச்சிகிட்டிருக்கேன்!!!

நன்று கற்று கொண்டு அடுத்த முறை சரியாக கணியுங்கள் :icon_b::icon_b::icon_b:

ராஜா
13-06-2008, 06:27 PM
இது என்னப்பா வம்பாப் போச்சு..!

நீங்க எதுவுமே தப்பா சொல்லலியே.. அப்புறம் எதுக்கு மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம்..!

சுருக்கமா என் திரியின் சாராம்சத்தை சொல்றேன்.. புரியுதா பாருங்க..

1) இந்தியா ஆடும் போட்டிகள் உள்நோக்கத்தோடு கடைசி நாள் வரைக்குமோ அல்லது கடைசி ஓவர் வரையுமோ நீட்டிக்கப்படுகின்றன. காரணம்.. தொலைக்காட்சி விளம்பரங்கள். ( தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை ஏலத்தொகையும், விளம்பரக்கட்டணமும் நாளுக்கு நாள் ஏறுவது இங்கு கவனத்தில் கொள்ளத் தக்கது.)

2. முத்தரப்பு போட்டியோ அல்லது உலகக் கோப்பையோ, இந்தியா இறுதிப்போட்டிவரை "எடுத்துச் செல்ல"ப் படுகிறது. காரணம், அதே டி ஆர் பி ரேட்டிங், விளம்பரம் இத்யாதி.

3. இவ்வாறு நிகழ்வதற்காக போட்டிகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடிக்கப்படுகின்றன.

arun
13-06-2008, 06:51 PM

தாங்கள் சொல்வது போலவே வைத்து கொள்வோம் அதில் கூட சில நெருடல்கள் இருக்க தான் செய்கிறது அவற்றுள் சில

1.நீங்கள் சொல்வது சரியாக இருப்பின் அனைத்து உலக கோப்பையிலும் இந்தியா இறுதி போட்டி வரை முன்னேறி இருக்க வேண்டும் அட்லீஸ்ட் அரை இறுதி போட்டி வரையாவது வந்து இருக்க வேண்டும்

2.முத்தரப்பு போட்டிகளில் சொத்தை அணி மூன்றாவது அணியாக இருக்கும் போது தான் பெரும்பாலும் இறுதி போட்டி வரை முன்னேறி இருக்கிறது

3.அது போல அனைத்து போட்டிகளும் கடைசி வரை நீட்டிக்க படுவதில்லை

4.மேலும் பொதுவாக முண்ணனி ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழந்து விட்டாலே பெரும்பாலும் நமது மக்கள் சேனலை மாற்றி விடுவார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை

நான் சொல்வது சரியா தவறா என்பதை திரியை படிக்கும் நண்பர்கள் சொன்னால் நன்றாக இருக்கும்

தமிழ் தென்றல்
13-06-2008, 07:05 PM
நடப்பதெல்லாம் உண்மையானவையே என்று நம்பும் உங்களைப் போன்றோர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளவும் சமாதானப்படுத்திக் கொள்ளவும்தான்..

தொடர்ந்து படித்து வாருங்கள்.. நான் சொல்லப்போகும் உண்மைகள் உங்களையும் சரியென்று உணர வைக்கும்..

அதுவரை....

இதுபோன்ற கேள்விகளைக் கேளுங்கள்.. பதில் தெரிந்தால் சொல்கிறேன்...!

நடப்பதெல்லாம் உண்மையானவையே என்று நம்பும் ரகமில்லைதான்.. ஆனால், 1983 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபிறகு கணக்கில் எடுத்துக் கொள்வோம்...

1. 1985 உலக சாம்பியன்ஷிப் என்ற பெயரில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்திக் கோப்பையை வென்றது///

2 1987 ஆம் ஆண்டில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோற்றது... உங்கள் ஆஸ்திரேலிய அணி பாச்சா 1975 இல் இருந்து 87 வரை பலிக்கவில்லை..

3. 1992 இல், நமது எதிரி நாடான பாகிஸ்தான், இங்கிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.. இரு நாடுகளும் நமக்கு அப்படி ஒன்றும் உறாவு நாடுகளல்ல... மாறாக மண்டேலா அவர்களின் காரணமாக, தென் ஆப்பிரிக்கர்கள் மேல் கரிசனமே உண்டு.. இருப்பினும் ஒரு பந்தில் 21 ரன்கள் அடிக்கச் சொல்லி அவர்களைப் போட்டியை விட்டு வெளியேற்றியது டக்வொர்த்- லூயிஸ் விதி.... போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா, நம்மோடு சேர்ந்து அரை இறுதிக்குள் கூட நுழையவில்லை...

4. 1996 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் கொல்கத்தாவில் இலங்கையிடம் பரிதாபமாக வெற்றியைப் பறிகொடுத்ததாக அறிவிக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்திய அணி... காம்ப்ளி மைதானத்தில் அழுது கொண்டிருந்தார்....

5. 1999 இல், இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது சொந்த மண்ணில்.. தட்டுத்தடுமாறி அடுத்த சுற்றில் நுழைந்த இந்திய அணி, அச்சுற்றோடு நாட்டுக்குத் திரும்பியது..

6. 2003 இல், நியூசிலாந்தில் ஏற்பட்டக் காயம் ஆறுவதற்குள், ஹாலந்திடம் தோற்றுவிடுவோமோ என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது... பிறகு நடந்த போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ரா ( நீங்கள் ஓரிடத்தில் அவருக்கு வேறு நாமகரணம் சூட்டியுள்ளீர்கள்...) இங்கிலாந்துக்கெதிராக எடுத்த விக்கெட்டுகள், அந்த நேரத்தில் இந்திய அணிக்கு பிட்சிலிருந்து கிடைத்த அனுகூலம் காரணமாகவும், அவரது துல்லிய பந்துவீச்சின் காரணமாகவும், அதன் முன்னர் ஸ்ரீநாத், ஜாஹீரின் அட்டகாச்சமான பந்துவீச்சினாலும் கிடைத்தது... ஒவ்வொரு போட்டியிலும் சரியானத் திட்டமிடலோடு அவர்கள் இறுதி வரை சென்றார்கள்.. இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றது, அவர்களிடம் மட்டுமே நாம் லீக் போட்டிகளில் தோற்றிருந்தோம் என்ற பயமும் காரணம்...

7. 2007 இல் முதல் சுற்று கூட தாண்டவில்லை இந்தியா..

ஆக, நான் சொன்ன 7 இல், இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இரு முறை மட்டுமே... ( 1985 ஐத் தவிர்த்து விட்டால் ஒரு முறை மட்டுமே....)

ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணி... உங்கள் கூற்றுப்படி.. இன்னொரு சொத்தை அணி எப்படி இந்தியாவை மீறிவிட்டு இறுதி வரை செல்கிறது...??

இந்தியா ஏன் ஒரே ஒரு முறை தவிர மற்றொருமுறை கூட இறுதிப் போட்டிவரை செல்லவில்லை..??? நீங்கள் சொல்வது உணமையாய் இருக்க வேண்டுமெனில், ஒரு 40 முதல் 50 சதவிகித உலகக் கோப்பைப் போட்டிகளிலாவது, இந்தியா இறுதியை எட்டியிருக்க வேண்டும்... அதில் ஒன்றிரண்டு முறை கோப்பையைப் பெற்றிருக்க வேண்டும்... அவ்வாறு நடக்கவில்லையே...???

பிறகு அதென்ன, இன்னொரு கூற்று... இந்தியா இறுதிப்போட்டி வரை போய் எந்த அணி இறுதிக்கு வருகிறதோ அந்த அணியிடம் தோற்றுவிடும்... இது எப்படி ஒத்துப் போகும்...?? போட்டியை நிர்ணயிக்க சக்தியிருப்பவர் ஒரு 60% சதப் போட்டிகளிலாவது தங்கள் அணி வெற்றி பெறுவது போலதானே காரியம் சாதிப்பார்..??

நாம் எதையும் சொல்லலாம்... ஆனால் எதையாவது ஆதாரமாய் நிரூபிக்க வேண்டும்.. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிட்டுவிட்டு, இரண்டும் உடலில்தான் இருக்கிறது என்ற பொதுவான கருத்தைக் கூறக் கூடாது.... உடலில் இருக்கிறது என்று சொன்னதே சிலருக்குப் போதுமானதாய் இருக்கும்.. ஏனென்றால் அவை உடலில்தானே இருக்கிறது..???

எல்லோரும் விளம்பரங்களைப் பார்க்கிறோம்... எல்லோருக்கும் அறிவு என்று ஒன்று உண்டு... எல்லோரும் சில நேரங்களில் இந்திய அனீ தோற்றால் ஆதங்கப் படுவதுண்டு....

பார்த்தறியாத, இப்படியெல்லாம் யாரும் யோசித்தறியாத விவரங்களை நீங்கள் தருவதாக எண்ணினால், என் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகை.. :)

போட்டிகளின் நம்ம்பகத்தன்மை குறித்து நானும் கூட சிந்தித்திருக்கிறேன்.. ஆனால், அதே சமயத்தில் போட்டிகளின் நம்பகத் தன்மையை உணர்ந்துமிருக்கிறேன்..

எங்கேயோ ஒரு மூலையிலிருந்து துல்லியமாக எறியப்படும் பந்து, ஒரு வீரரை ரன் அவுட் ஆக்குவது, திட்டம் போட்டு நடத்தவியலாதது.. ஜான்டி ரோட்ஸும், ஏ.பி.டிவில்லியர்ஸ், யுவ்ராஜ்சிங், கைஃப், கிப்ஸ், பாண்டிங் போன்றவர்கள் பாவம்.. உயிரைக் குடுத்து அவர்கள் அணிக்கு விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தால், அவர் ஒரு ஸ்டம்பைப் பார்த்து எறிந்த பந்தும் ஸ்டம்பை அடிக்கவில்லை.. அப்படி அடித்ததாக நம் கண்களுக்கு மாய வித்தை காட்டுகிறார்கள் என சொல்வீர்கள்...

இன்னும் என்னால் சொல்ல முடியும்.. தூக்கம் கண்களை சுழற்றுகிறது.. நாளை தொடர்கிறேன்...

ராஜா
14-06-2008, 04:31 AM
நடப்பதெல்லாம் உண்மையானவையே என்று நம்பும் ரகமில்லைதான்.. ஆனால், 1983 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றபிறகு கணக்கில் எடுத்துக் கொள்வோம்...

1. 1985 உலக சாம்பியன்ஷிப் என்ற பெயரில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்திக் கோப்பையை வென்றது///

2 1987 ஆம் ஆண்டில் இந்தியா, ஆஸ்திரேலியாவிடம் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோற்றது... உங்கள் ஆஸ்திரேலிய அணி பாச்சா 1975 இல் இருந்து 87 வரை பலிக்கவில்லை..

3. 1992 இல், நமது எதிரி நாடான பாகிஸ்தான், இங்கிலாந்தை வென்று கோப்பையைக் கைப்பற்றியது.. இரு நாடுகளும் நமக்கு அப்படி ஒன்றும் உறாவு நாடுகளல்ல... மாறாக மண்டேலா அவர்களின் காரணமாக, தென் ஆப்பிரிக்கர்கள் மேல் கரிசனமே உண்டு.. இருப்பினும் ஒரு பந்தில் 21 ரன்கள் அடிக்கச் சொல்லி அவர்களைப் போட்டியை விட்டு வெளியேற்றியது டக்வொர்த்- லூயிஸ் விதி.... போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா, நம்மோடு சேர்ந்து அரை இறுதிக்குள் கூட நுழையவில்லை...

4. 1996 ஆம் ஆண்டு சொந்த மண்ணில் கொல்கத்தாவில் இலங்கையிடம் பரிதாபமாக வெற்றியைப் பறிகொடுத்ததாக அறிவிக்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்திய அணி... காம்ப்ளி மைதானத்தில் அழுது கொண்டிருந்தார்....

5. 1999 இல், இங்கிலாந்து அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது சொந்த மண்ணில்.. தட்டுத்தடுமாறி அடுத்த சுற்றில் நுழைந்த இந்திய அணி, அச்சுற்றோடு நாட்டுக்குத் திரும்பியது..

6. 2003 இல், நியூசிலாந்தில் ஏற்பட்டக் காயம் ஆறுவதற்குள், ஹாலந்திடம் தோற்றுவிடுவோமோ என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டது... பிறகு நடந்த போட்டிகளில் ஆஷிஷ் நெஹ்ரா ( நீங்கள் ஓரிடத்தில் அவருக்கு வேறு நாமகரணம் சூட்டியுள்ளீர்கள்...)

சரி... அங்கொன்றும் இங்கொன்றுமாக 1975 முதல் நடந்த 7 சம்பவங்களை சொன்னதன் மூலம் நீங்கள் மெய்ப்பிக்க விரும்புவது என்ன..? ஆஷிஷ் நெஹ்ரா பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.. அவர் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த மிகச் சிறந்த சாதனையை மட்டும் சொல்லி மற்ற நேரங்களில் அவர் தாரை வார்த்த ஓட்டங்களையும் மேட்சுகளையும் சாமர்த்தியமாக மறைத்து விட்டீர்கள். ஒரு போட்டியில் மட்டும் 6/ 21 எடுக்கும் வீச்சாளரை சிறப்பாக சொல்வதன் மூலம் நீங்கள் இந்திய வெற்றிகளை மட்டுமே கணக்கில் வைத்திருக்கிறீர்கள் என்று தெளிவாகிறது.

7. 2007 இல் முதல் சுற்று கூட தாண்டவில்லை இந்தியா..

எப்போதுமே இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றால் உங்களைப் போன்றவர்கள்கூட இது ஏமாற்றுவேலை என்று கண்டுகொள்வார்களே.. ஒருசிலமுறை இப்படி பாவ்லா காட்டத்தான் வேண்டும். மேலும் இந்தியா வாங்கும் சக்தியுள்ள நாடு என்பதற்காக மற்ற நாடுகளை எல்லா நேரங்களிலும் புறக்கணிக்க இயலாதல்லவா..?

ஆக, நான் சொன்ன 7 இல், இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இரு முறை மட்டுமே... ( 1985 ஐத் தவிர்த்து விட்டால் ஒரு முறை மட்டுமே....)

ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணி... உங்கள் கூற்றுப்படி.. இன்னொரு சொத்தை அணி எப்படி இந்தியாவை மீறிவிட்டு இறுதி வரை செல்கிறது...??

இந்தியா ஏன் ஒரே ஒரு முறை தவிர மற்றொருமுறை கூட இறுதிப் போட்டிவரை செல்லவில்லை..??? நீங்கள் சொல்வது உணமையாய் இருக்க வேண்டுமெனில், ஒரு 40 முதல் 50 சதவிகித உலகக் கோப்பைப் போட்டிகளிலாவது, இந்தியா இறுதியை எட்டியிருக்க வேண்டும்... அதில் ஒன்றிரண்டு முறை கோப்பையைப் பெற்றிருக்க வேண்டும்... அவ்வாறு நடக்கவில்லையே...

மெத்தச் சரி.. ஆனால் இதுவரை கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்த தொடர்போட்டிகளில் ( அது முத்தரப்போ, நான்கு முனையோ, ஆறு நாடுகள் போட்டியோ, உலகக் கோப்பையோ.. எதுவாக இருந்தாலும் சரி) அதிக முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி எது தெரியுமா..? இந்தியாதான்.. அதேபோல இறுதிப்போட்டியில் அதிக முறை மண்ணைக் கவ்விய அணியும் உங்கள் ஹீரோக்களின் அணிதான்..!

பிறகு அதென்ன, இன்னொரு கூற்று... இந்தியா இறுதிப்போட்டி வரை போய் எந்த அணி இறுதிக்கு வருகிறதோ அந்த அணியிடம் தோற்றுவிடும்... இது எப்படி ஒத்துப் போகும்...?? போட்டியை நிர்ணயிக்க சக்தியிருப்பவர் ஒரு 60% சதப் போட்டிகளிலாவது தங்கள் அணி வெற்றி பெறுவது போலதானே காரியம் சாதிப்பார்..??

போட்டி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் இவற்றின் நோக்கம் இந்தியா இறுதிப்போட்டி வரை வரவேண்டும். ரசிகர்கள் உற்சாகமும் எதிர்பார்ப்பும் இறுதிவரை நீடிக்கவேண்டும், அவர்கள் மண்டைக்குள் ( 20 வினாடிகளே வந்தாலும் 15 லட்ச ரூபாய் கட்டணம் வாங்கும்) விளம்பரங்களை திணிக்க வேண்டும் என்பதுதான். இந்தியா வென்றாலும் தோற்றாலும் ஆட்டம் இறுதிவரை விறுவிறுப்பாக இருந்தால் சரி என்பதுதானே தவிர இந்தியா மட்டுமே வெல்ல வேண்டும் என்பதல்ல. அவர்களுக்குத் தெரியும்.. இந்தியா ஒரு 20/20 உலகக்கோப்பை வெல்வதாக சீன் காட்டினால் போதும். அதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, கடந்த ஆஸி. பயணத்தில் அடைந்த கேவலமான 20/20 தோல்வி போன்றவற்றை நம் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று..!

நாம் எதையும் சொல்லலாம்... ஆனால் எதையாவது ஆதாரமாய் நிரூபிக்க வேண்டும்.. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிட்டுவிட்டு, இரண்டும் உடலில்தான் இருக்கிறது என்ற பொதுவான கருத்தைக் கூறக் கூடாது.... உடலில் இருக்கிறது என்று சொன்னதே சிலருக்குப் போதுமானதாய் இருக்கும்.. ஏனென்றால் அவை உடலில்தானே இருக்கிறது..???

எல்லோரும் விளம்பரங்களைப் பார்க்கிறோம்... எல்லோருக்கும் அறிவு என்று ஒன்று உண்டு... எல்லோரும் சில நேரங்களில் இந்திய அனீ தோற்றால் ஆதங்கப் படுவதுண்டு....

பார்த்தறியாத, இப்படியெல்லாம் யாரும் யோசித்தறியாத விவரங்களை நீங்கள் தருவதாக எண்ணினால், என் முகத்தில் மீண்டும் ஒரு புன்னகை.. :)
போட்டிகளின் நம்ம்பகத்தன்மை குறித்து நானும் கூட சிந்தித்திருக்கிறேன்.. ஆனால், அதே சமயத்தில் போட்டிகளின் நம்பகத் தன்மையை உணர்ந்துமிருக்கிறேன்..

எங்கேயோ ஒரு மூலையிலிருந்து துல்லியமாக எறியப்படும் பந்து, ஒரு வீரரை ரன் அவுட் ஆக்குவது, திட்டம் போட்டு நடத்தவியலாதது.. ஜான்டி ரோட்ஸும், ஏ.பி.டிவில்லியர்ஸ், யுவ்ராஜ்சிங், கைஃப், கிப்ஸ், பாண்டிங் போன்றவர்கள் பாவம்.. உயிரைக் குடுத்து அவர்கள் அணிக்கு விக்கெட்டுகள் எடுத்துக் கொடுத்தால், அவர் ஒரு ஸ்டம்பைப் பார்த்து எறிந்த பந்தும் ஸ்டம்பை அடிக்கவில்லை.. அப்படி அடித்ததாக நம் கண்களுக்கு மாய வித்தை காட்டுகிறார்கள் என சொல்வீர்கள்...

மீண்டும் மீண்டும் என் கருத்துகளை தவறாகவே புரிந்துகொண்டு கேள்வி எழுப்புகிறீர்கள்..

நான் ரன் அவுட்கள் நடிக்கப்படுபவை என்று எப்போதும் சொன்னதில்லை.. ஆனால் ரன் அவுட் ஆக்கும் வாய்ப்பு இருந்தால் அதைத் தவறவிடுவதும் நடந்துகொண்டு இருப்பதை மறுக்க இயலாது. சமீபத்தில் ஐபி எல் போட்டிகளில் உலக சாதனையாளர் 'கில்லி' எத்தனை ஸ்டம்பிங்குகளையும், ரன் அவுட் வாங்கி அடிப்பதையும் தவற விட்டார் என்று உங்களுக்கு நினைவில் இருந்தால் இதுபோன்று கேட்டிருக்க மாட்டீர்கள். இதுபோன்ற மிஸ் ஸ்டம்பிங்குகளும், கோட்டை விட்ட பிடிகளும் ஹைலைட்ஸ்ஸில் இருட்டடிப்பு செய்யப்படுவதே கிரிக்கெட் நாடகம் என்பதற்கு சாட்சி.

கிப்ஸ், யுவராஜ் கதைக்கு வருகிறேன்.. எந்த ஒரு மட்டையாளரும் நாடகத்தில் அங்கம் வகிக்கவில்லையெனில் ( அதாவது, அவர் ஐம்பதோ நூறோ அடிக்க "பேசி" வைக்கப்படவில்லையெனில்) ரன் அவுட் த்ரோ கூடியவரை சரியாகத்தான் இருக்கும். அப்படி ரன் அவுட் ஆகவில்லை என்றால் கூட பாதகமில்லை.. அடுத்த பந்தை ( தோனி செய்வது போல) லாங் ஆஃப்பில் தூக்கி கொடுத்துவிட்டு போய்விடுவார்.ஒரு ஆட்டத்தில் சேவாக் அல்லது யுவராஜ் சதமோ அரைசதமோ அடிக்க முடிவு செய்யப்பட்டால், மற்ற சில மட்டையாளர்கள் விரைவில் முன்வந்து ஆட்டம் இழப்பதுபோலதான் போட்டி வடிவமைக்கப்படும்.

இதையெல்லாம் நீங்கள் சீரணிக்க கஷ்டம் என்று எனக்குத் தெரியும்.. இன்னும் சொல்லப்போனால் இவர் ஒரு மெண்டல் போல என்று கூட எண்ணுவீர்கள்.. !

என் கருத்துகளின் பின்னால், 15 ஆண்டுகள் மாநில அளவில் 'லீக்' ஆடிய அனுபவம், 30 ஆண்டுகள் உயிருக்கு மேலாக கிரிக்கெட்டை நேசித்த வெறி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் என்ற பெயரில் எதை ஒளிபரப்பினாலும் சோறு, தண்ணீர், தூக்கம் இல்லாமல் பார்த்து பெற்ற அனுபவம், அதே போல நான் கணினியிலும், விடியோ கேசட்களிலும் விசிடி களிலும், சேர்த்து வைத்திருக்கும் ஏராளமான ஆவணங்கள், பேப்பர் கட்டிங்குகள் ஆகியவை இருக்கின்றன என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

தமிழ் தென்றல்
14-06-2008, 05:08 AM
சரி... அங்கொன்றும் இங்கொன்றுமாக 1975 முதல் நடந்த 7 சம்பவங்களை சொன்னதன் மூலம் நீங்கள் மெய்ப்பிக்க விரும்புவது என்ன..? ஆஷிஷ் நெஹ்ரா பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.. அவர் தன் கிரிக்கெட் வாழ்க்கையில் செய்த மிகச் சிறந்த சாதனையை மட்டும் சொல்லி மற்ற நேரங்களில் அவர் தாரை வார்த்த ஓட்டங்களையும் மேட்சுகளையும் சாமர்த்தியமாக மறைத்து விட்டீர்கள். ஒரு போட்டியில் மட்டும் 6/ 21 எடுக்கும் வீச்சாளரை சிறப்பாக சொல்வதன் மூலம் நீங்கள் இந்திய வெற்றிகளை மட்டுமே கணக்கில் வைத்திருக்கிறீர்கள் என்று தெளிவாகிறது.

முதலில் அந்த ஏழு சம்பவங்களும் என்ன சம்பவங்கள் என கவனியுங்கள்... அவை அனைத்தும் உலகக் கோப்பை போட்டிகள் மட்டுமே.. அவை அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பவையா..???

15 ஆண்டுகள் "லீக்" கில் ஆடிய அனுபவம் படைத்தவருக்கு ஆடிக்கொரு முறை அமாவாசைக்கு ஒரு முறை நடப்பதல்ல உலகக் கோப்பை என்பது தெரியாதா..?? பின் ஏன் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த ஏழு சம்பங்கள் என்று சொல்கிறீர்கள்....??? பதில் சொல்ல முடியாத கேள்விகளுக்கு நாம் அக்கேள்வியைத் தட்டிக் கழிக்க ஏதாவது சப்பைக் கட்டுவோம்.. அதைதான் இந்தப் பதிலில் நீங்கள் தந்துள்ளீர்கள்.. அவ்வாறில்லை என நீங்கள் சொல்வீர்கள் என்றால், ஏன் அதை சரியாக உலகக் கோப்பை சம்பவங்களை மட்டுமே குறி வைத்து சொல்லப்பட்டவை என உணர்ந்து அதற்கேற்றார் போல் பதிலிறுக்கவில்லை...????

ஆஷிஷ் நெஹ்ராவின் சிறந்த பந்து வீச்சை நான் பலருக்கும் தெரிந்த, எளிதில் அடையாளம் கண்டு கொள்ள ஏதுவான ஒன்று என்ற அடிப்படையில் ஒரு உதாரணமாக சொன்னேன் என்பது புரியாத புதிரா என்ன..??

அவருடைய பெயரையும் நீங்கள் சொல்ல இயலவில்லை.. அதை எடுத்துத் தர ஒருவர் தேவைப்படும்போது, நீங்கள் ஆவணங்களைப் பற்றிப் பேசி என்ன பயன்..???????

எப்போதுமே இறுதிப்போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் சென்றால் உங்களைப் போன்றவர்கள்கூட இது ஏமாற்றுவேலை என்று கண்டுகொள்வார்களே.. ஒருசிலமுறை இப்படி பாவ்லா காட்டத்தான் வேண்டும். மேலும் இந்தியா வாங்கும் சக்தியுள்ள நாடு என்பதற்காக மற்ற நாடுகளை எல்லா நேரங்களிலும் புறக்கணிக்க இயலாதல்லவா..?

அதையேதான் நானும் கேட்கிறேன்... ஒரு சில முறை பாவ்லா காட்டத்தான் வேண்டும் என்று நீங்கள் சொல்வதை கவனத்தில் கொண்டால், ஒரு சில முறைதானே பாவ்லா காட்டப்பட வேண்டும்...????

ஏன் ஒரு சில முறைதான் அரை இறுதிக்கோ, இறுதிப் போட்டிக்கோ இந்தியா தகுதி பெற்றிருக்கிறது...?? நீங்கள் சொல்வது போல் என்றால், முதலிரண்டு உலகக் கோப்பைப் போட்டிகளைத் தவிர்த்து விடுவோம்.. 1983 முதல், 87, 92, 96,99,2003,2007 ஆகிய உலகக் கோப்பைகளில் இந்தியா ஒரு 5 முறையாவது இறுதிப் போட்டிக்கு சென்றிருக்க வேண்டாமோ...??

ஏனென்றால், நீங்கள் சொல்வது ஓரிருமுறை பாவ்லா காட்ட வேண்ட்டும் என்று சொன்னதால் இந்தக் கணக்கு... நீங்கள் மூன்று, நான்கு முறை என சொல்லவில்லையே.... அப்படியே சொல்லியிருந்தாலும் கூட, இந்தியா நாம் எடுத்துக் கொண்ட 7 உலகக் கோப்பைப் போட்டிகளில் 5 முறை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை....

பிறகு என்ன உங்கள் ஓரிரு முறை பாவ்லா...?? எப்படி செல்லுபடியாகும்..???

மெத்தச் சரி.. ஆனால் இதுவரை கடந்த 15 ஆண்டுகளில் நிகழ்ந்த தொடர்போட்டிகளில் ( அது முத்தரப்போ, நான்கு முனையோ, ஆறு நாடுகள் போட்டியோ, உலகக் கோப்பையோ.. எதுவாக இருந்தாலும் சரி) அதிக முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி எது தெரியுமா..? இந்தியாதான்.. அதேபோல இறுதிப்போட்டியில் அதிக முறை மண்ணைக் கவ்விய அணியும் உங்கள் ஹீரோக்களின் அணிதான்..!

உங்கள் ஆவனங்களை சரி பாருங்கள்... கலந்து கொண்ட இறுதிப் போட்டிகளில் அதிகம் தோற்ற அணி நியூசிலாந்து அணி....

அப்படியே இந்திய அணி தோற்றதாகவும், இறுதி போட்டி வரை விளம்பரங்களுக்காகவே வந்து, இந்தியா கோப்பையை வென்றாலும் தோற்றாலும் லாபத்தை பன்னாட்டு நிறுவனங்கள் அல்லது பி.சி.சி.ஐ காப்பாற்றிக் கொள்வதாகவே வைத்துக் கொள்வோம்...

இறுதி போட்டியில் தொடர் தோல்வி வாங்கினால் ரசிகர்கள் எண்ணிக்கை குறையும் என்றொரு ஆரூடம் அவர்களுக்குத் தெரியாதா...??

நீங்கள் உங்கள் கருத்து என்று சொல்வதற்கு எதிராக நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள்... நெடுங்காலத் திட்டம் என்ற ஒன்று, இப்படித் திட்டமிடுபவர்கள் சிந்திப்பார்கள் என நீங்கள் எண்ணவில்லையோ..?? அப்படி நெடுங்காலத் திட்டம் என்ற ஒன்று போட்டால், அவர்களுக்கு வெற்றிதான் ( அதாவது இறுதிப் போட்டி வெற்றி..) ரசிகர்களைத் தக்க வைத்துக் கொள்ளும் வழி எனத் தெரியாதா..??

இது தெரியாத புத்திசாலிகள்தான் பி.சி.சி.ஐயில் உள்ளனர் என சொல்லவருகிறீர்களா..??

போட்டி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் இவற்றின் நோக்கம் இந்தியா இறுதிப்போட்டி வரை வரவேண்டும். ரசிகர்கள் உற்சாகமும் எதிர்பார்ப்பும் இறுதிவரை நீடிக்கவேண்டும், அவர்கள் மண்டைக்குள் ( 20 வினாடிகளே வந்தாலும் 15 லட்ச ரூபாய் கட்டணம் வாங்கும்) விளம்பரங்களை திணிக்க வேண்டும் என்பதுதான். இந்தியா வென்றாலும் தோற்றாலும் ஆட்டம் இறுதிவரை விறுவிறுப்பாக இருந்தால் சரி என்பதுதானே தவிர இந்தியா மட்டுமே வெல்ல வேண்டும் என்பதல்ல. அவர்களுக்குத் தெரியும்.. இந்தியா ஒரு 20/20 உலகக்கோப்பை வெல்வதாக சீன் காட்டினால் போதும். அதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு, கடந்த ஆஸி. பயணத்தில் அடைந்த கேவலமான 20/20 தோல்வி போன்றவற்றை நம் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று..!

இந்தியா 20/20 சாம்பியன் என்பதைக் கட்டிக் காப்பதுதான் திட்டமிடுபவர்கள், திட்டமிட்டு செயல்படுத்துபவர்களின் நோக்கமாக இருக்கக் கூடும்...

மேலும், பல்வேறு சிக்கல்களினூடே நடந்தது அந்த 20/20 போட்டி என்பதை வசதியாக மறைக்கிறீர்கள்...

தாங்கள் 20/20 சாம்பியன் என்பதற்காக வெற்றி பெற வேண்டும் என்பதாகத்தான், உங்கள் கூற்றுப்படி நடப்பதாக இருந்தால், ஒப்பந்தமிட்டு இந்தியா வெற்றியும் பெற்றிருந்திருக்க வேண்டும்.... மறுபடியும் நீங்கள் உங்கள் கருத்துக்கு எதிர் கருத்தைத்தான் சொல்லியிருக்கிறீர்கள்...

மீண்டும் மீண்டும் என் கருத்துகளை தவறாகவே புரிந்துகொண்டு கேள்வி எழுப்புகிறீர்கள்..

நான் ரன் அவுட்கள் நடிக்கப்படுபவை என்று எப்போதும் சொன்னதில்லை.. ஆனால் ரன் அவுட் ஆக்கும் வாய்ப்பு இருந்தால் அதைத் தவறவிடுவதும் நடந்துகொண்டு இருப்பதை மறுக்க இயலாது. சமீபத்தில் ஐபி எல் போட்டிகளில் உலக சாதனையாளர் 'கில்லி' எத்தனை ஸ்டம்பிங்குகளையும், ரன் அவுட் வாங்கி அடிப்பதையும் தவற விட்டார் என்று உங்களுக்கு நினைவில் இருந்தால் இதுபோன்று கேட்டிருக்க மாட்டீர்கள். இதுபோன்ற மிஸ் ஸ்டம்பிங்குகளும், கோட்டை விட்ட பிடிகளும் ஹைலைட்ஸ்ஸில் இருட்டடிப்பு செய்யப்படுவதே கிரிக்கெட் நாடகம் என்பதற்கு சாட்சி.

கிப்ஸ், யுவராஜ் கதைக்கு வருகிறேன்.. எந்த ஒரு மட்டையாளரும் நாடகத்தில் அங்கம் வகிக்கவில்லையெனில் ( அதாவது, அவர் ஐம்பதோ நூறோ அடிக்க "பேசி" வைக்கப்படவில்லையெனில்) ரன் அவுட் த்ரோ கூடியவரை சரியாகத்தான் இருக்கும். அப்படி ரன் அவுட் ஆகவில்லை என்றால் கூட பாதகமில்லை.. அடுத்த பந்தை ( தோனி செய்வது போல) லாங் ஆஃப்பில் தூக்கி கொடுத்துவிட்டு போய்விடுவார்.ஒரு ஆட்டத்தில் சேவாக் அல்லது யுவராஜ் சதமோ அரைசதமோ அடிக்க முடிவு செய்யப்பட்டால், மற்ற சில மட்டையாளர்கள் விரைவில் முன்வந்து ஆட்டம் இழப்பதுபோலதான் போட்டி வடிவமைக்கப்படும்.

இதையெல்லாம் நீங்கள் சீரணிக்க கஷ்டம் என்று எனக்குத் தெரியும்.. இன்னும் சொல்லப்போனால் இவர் ஒரு மெண்டல் போல என்று கூட எண்ணுவீர்கள்.. !

என் கருத்துகளின் பின்னால், 15 ஆண்டுகள் மாநில அளவில் 'லீக்' ஆடிய அனுபவம், 30 ஆண்டுகள் உயிருக்கு மேலாக கிரிக்கெட்டை நேசித்த வெறி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் என்ற பெயரில் எதை ஒளிபரப்பினாலும் சோறு, தண்ணீர், தூக்கம் இல்லாமல் பார்த்து பெற்ற அனுபவம், அதே போல நான் கணினியிலும், விடியோ கேசட்களிலும் விசிடி களிலும், சேர்த்து வைத்திருக்கும் ஏராளமான ஆவணங்கள், பேப்பர் கட்டிங்குகள் ஆகியவை இருக்கின்றன என்பதை நீங்கள் மறந்துவிடலாகாது.

எனக்கு ஆஷிஷ் நெஹ்ராவை, ஆஷிஷ் நெஹ்ரா என சொல்வதற்கு எந்த ஆவணங்களும் தேவைப்பட்டிருக்கவில்லை....

பேப்பர் கட்டிங்குகளும், விசிடிக்களும் நம் கற்பனை வளத்தைப் பெருக்க வல்லவை...

இது வரை உலகக் கோப்பைப் போட்டிகளையும், அதனைச் சுற்றிய நிகழ்வுகளையுமே சொல்லியிருக்கிறேன்..

நேரம் கிடைக்கும்போது மற்றப் போட்டிகளைப் பற்றியும் பேசுவேன்.. அதற்காக உலகக் கோப்பைகளை அங்கொன்றும், இங்கொன்றுமான சம்பவங்கள் என இனி சொல்லாதீர்கள்...:)

ராஜா
14-06-2008, 05:53 AM
அங்கொன்றும் இங்கொன்றுமாக... ( அது உலகக் கோப்பையாக இருந்தாலும் கூட) நீங்கள் மெய்ப்பிக்க விரும்புவது என்ன என்ற என் முதல் கேள்விக்கு உங்களிடமிருந்து இன்னும் பதில் இல்லையே.. அதற்கான பதிலை நீங்கள் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..

நான் சொன்ன கருத்துக்கு எதிராகவே சில கருத்துகள் சொன்னதாகவும் சொல்கிறீர்கள்.. நான் சொன்ன கருத்துகள் என்று எதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள்.. அதற்கு எதிரானவையாக என்ன சொல்லியிருக்கிறேன்..

கொஞ்சம் தொகுத்துத் தாருங்களேன்..!

( கேள்வியை நீங்கள் மட்டும்தான் கேட்கவேண்டுமா என்ன :) )

தமிழ் தென்றல்
14-06-2008, 06:03 AM

உங்கள் கேள்விக்கு நிச்சயம் என்னிடம் பதில் இருக்கிறது... விரைவில் இடுகிறேன்...

ஆனால், நீங்கள் இங்கு வந்து தூங்குவதாய் பாசாங்கு செய்யக் கூடாது... இப்போது மன்றத்தில் மற்ற பகுதிகளைப் பார்வையிட்டுவிட்டு வருகிறேன்...

ராஜா
14-06-2008, 06:12 AM
காத்திருக்கிறேன்..!

:)

தமிழ் தென்றல்
14-06-2008, 02:14 PM
இந்தியர்கள் வீட்டில் [உள்நாட்டில்] புலிகளாகவும், வெளியில் எலிகளாகவும் விளங்குவது ஏன்..?

வெளிநாட்டில் உள்ள ஆடுகளங்கள் இந்தியத் துணைக் கன்டத்திலிருப்பவை போல அல்ல.. அங்குள்ள சீதோஷ்ண நிலை, களம் அமைப்பாளர்களின் கைவண்ணம் முதலிய அம்சங்களால் அவை வேகப்பந்துக்கு ஏற்ற களங்களாக அமைகின்றன.. நம் வீரர்கள் துணைக்கன்ட ஆடுகளங்களில் முட்டிக்கு மேல் எகிறாத பந்துவீச்சை வெட்டி ஆடுவதில் மட்டுமே கெட்டிக்காரர்கள்.. வேகப்பந்து வீச்சுக்கு தயாரிக்கப்படும் பிட்சுகள் அவர்களுக்கு சிம்ம சொப்பனம்.. அவற்றில் அவ்வளவாகப் பயிற்சி பெறாதவர்கள்.. அவர்களை குறைகூறுவதும் தவறுதான்..

உண்மையில் நல்ல அளவில் விழுந்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே நன்கு ஸ்விங் ஆகி எகிறி வரும் பந்துகளை திறமையுடன் எதிர்கொண்டு ஓட்டங்கள் எடுப்பது எப்படி என்று நம் சூரப்புலிகளுக்கு தெரியவே தெரியாது. அந்தப் பந்துகளை அடிப்பது இருக்கட்டும்.. அவற்றை எப்படி விட்டுவிடுவது [well left ] என்பதைகூட நம்மவர்களில் பலருக்குத் தெரியாது என்பதுதான் சோகம்..!

மூக்கை உரசுவதுபோல் காற்றைக் கிழித்துக்கொண்டு விரையும் பந்துகளைக் கண்டதும் அவர்கள் மனதில் தோன்றுவது இதுதான்..

முதல்ல நம்மைக் காப்பாத்திக்குவோம்.. டீமாவது ... ரன்னாவது...

அதனால்தான் மட்டையைத் தூக்கி தூக்கி பந்தைத் தடுக்கப் பார்ப்பார்கள்..மட்டையின் கைப்பிடியிலோ விளிம்பிலோ பந்து பட்டு எகிறும்.. அதைப் பிடிக்க பின்னால் ஒரு கூட்டமே ஸ்லிப்பில் காத்துக் கொண்டிருக்கும்..

லபக்...!

மாஸ்டர் பிளாஸ்டராக இருந்தாலும் சரி.. இரும்புச் சுவராக இருந்தாலும் சரி.. இதுதான் நிலவரம்..! அப்புறம் எப்படி வெளிநாடுகளில் வெற்றி கிட்டும்..?

வெளிநாடுகளில் வெற்றி பெற வேண்டுமாயின் இந்தியாவில் வேகப்பந்து வீச்சுக்கேற்ற ஆடுகளங்கள் தயாரிக்கப்பட வேண்டும்.. அதில் பாரிய அளவில் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.. பந்து வீச்சாளர்கள் நன்கு உழைத்து பந்து வீச பயில வேண்டும்.. மட்டையாளர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும்..!
முக்கியமாக களத்தடுப்புப் பணிகளில் நம் ஆட்கள் இன்னும் முன்னேற வேண்டும்.. நேற்று வந்த கற்றுக்குட்டி அணிகள் கூட ஃபீல்டிங்கில் கலக்கும்போது நம் ஆட்களின் திறன் வருத்தத்தைத் தருகிறது.. குறிப்பாக கங்கூலி..!

ஒரே நாளில் இஃது அடையும் இலக்கு அன்று..! நீண்ட காலம் தேவைப்படும் ஒரு முனைப்பு இயக்கமாக அது இருக்கும்..!

ஆனால் இதைப்பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லையே.. ஏன் கவலைப்பட வேண்டும்..? சுலபமாக வெற்ரியைப் "பெறும்' வாய்ப்பு வசதிகள் இருக்கும் போது ஏன் அவ்வளவு சிரமப்பட்டு நீண்டகாலத் திட்டம் வகுத்து பணியாற்ற வேண்டும்..? பிற்காலத்தில் வரும் நிர்வாகிகளும் மற்றவர்களும் பயனடைய நாம் உழைக்க வேண்டுமா என்ற எண்ணம்தான் மேலிடத்தில் இப்போது நிலவுகிறது..!

இன்னும் எவ்வளவோ ரகசியங்கள் உள்ளன.. அவற்றை ஒரே நேரத்தில் சீரணிக்க உங்களால் ஆகாது.. பின்னர் கூறுகிறேன்...!

உங்களுக்கு ஒரு தகவல்....

இந்திய அணியின் வெளிநாட்டு வெற்றிகளைக் காட்டிலும், தாய்மண்ணில் சில வருடங்களாகப் பெறும் வெற்றிகள் குறைவு என நான் சொல்கிறேன்.. அது உங்கள் ஆவணங்கள் சரியாக இருக்குமானால் தெரிய வரும்....

இந்திய அணி வெளிநாடுகளில் கணிசமான வெற்றிகளை ஐந்து நாள் ஆட்டங்களில் பெறுவதும்..., உள்நாட்டில் திடரை வெல்ல சிரமப்பட்டுக் கொண்டிருப்பதும் நீங்கள் சொல்வது போல் வேற்று வகைகளில் மைதானங்களை பரீட்சித்துப் பார்த்ததால்தான்...

ஆனால், இந்தப் பரீட்சார்த்த முயற்சிகளின் துவக்கத்திற்கு முன்னரே, இந்திய அணி மற்ற நாடுகளில், அது வரை வெற்றி பெறாத இடம் என சொல்லப்பட்ட இடங்களில் கூட ஓரிரு வெற்றிகளைப் பெறத் துவங்கி விட்டது.. உடனே, அந்தக் குறிப்பிட்ட ஆட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டவை என்ற பல்லவிக்குப் போகாதீர்கள்...

ஏனென்றால், வழமையாக வெல்லும் இடங்களில் தடுமாற்றம் அடைய ஆரம்பித்து விட்டது இந்தியா...

உங்களின் ஒவ்வொரு முக்கியக் கருத்துக்கும் நான் பதில் சொல்ல முயற்சி செய்கிறேன்....

முதலில், இந்தியா வரும் வெளிநாட்டு அணிகள் ஏன் தடுமாறுகின்றன என சொல்லுங்கள்... அவர்கள் அவர்கள் வீட்டில் புலியாக இருந்து விட்டு இங்கே வந்து எலியாக மாறுவதாலா...???

அப்படியானால், இது எல்லா அணிகளுக்கும் பொதுவானதுதானா..?? பிறகு என்ன இந்திய அணியைக் குறை சொல்வது..???

2004 இல் இந்தியர்கள் காயத்திலிருந்து வந்த போது, நீங்கள் சொல்வது போன்ற பிட்சுகள் அமைக்கப்பட்டு பரிதாபமாக 35 வருடங்களுக்குப் பிறகு தொடரை இழந்தோம்.. வலிமை வாய்ந்த ஆஸ்ஸ்திரேலிய அணி ஏன் 35 ஆண்டுகளுக்கு இந்திய மண்ணில் எலியாக்க இருந்தது என சொல்லுங்கள்...

ஆச்சோ போச்சோ என சொல்லிவிட்டுப் போகக் கூடாது... இது எல்லா அணிகளுக்கும் உள்ள பிரச்சனை.. இந்திய அணிக்கு மட்டும் உள்ளதல்ல...

இந்திய அணி அப்படி எங்கும் வெல்லவில்லையா.. பாகிஸ்தான் அணியை சமீபத்தில் வென்றோம்.. ( 2006 இல் அவர்கள் வென்றபோதும் கூட நம் ஆட்டம் நன்றாகத்தான் இருந்தது... ) ஒருநாள் போட்டிகளில், அவர்கள் நம்மீது செலுத்தி வந்த ஆதிக்கத்தின் அளவைக் குறைத்துள்ளோம்.. அதாவது அதிகப் போட்டிகளில் அவர்களை வெற்றி கொள்வதின் மூலம்..

இன்றையத் தேதியில் நடக்கும் போட்டியின் முடிவு எதுவாக இருப்பினும், இதில் உறுதியாக இருக்கிறேன்..

மேலும், வெஸ்ட் இண்டீஸில் தொடர் வெற்றி பெற்றுள்ளோம்... நமது ஆட்டம் நன்றாக இருக்கும் என்ற ஒரே காரணத்திற்காகதான், 2002 இல் நியூசிலாந்தில் மட்டையாளர்கள் அடிக்கவே இயலாத அளவில் மைதானத்தை அமைத்தனர்... அவர்களும் சேர்ந்து தடுமாறினர்... 2 விக்கெட், 1 விக்கெட், 3 வித்தியாசங்களிலும், மிகக் குறைந்த ரன் வித்தியாசங்களிலும் வெற்ரி பெற்றனர்..

இலங்கை அணி அங்கு சென்றபோது யாருக்கும் அந்த அளவு சிரமம் இருக்கவில்லை... அவர்கள் அணி மட்டையாளர்களையும் சேர்த்து.. ( கவனியுங்கள்... நம்முடன் விளையாண்டபோது அவர்கள் அணியில் பிளெம்மிங் மட்டுமே நிலைத்து விளையாடினார்.. மற்ற அனைவரும் தடுமாறினர், நம்ம் அணி மட்டையாளர்களைப் போலவே.. ஆனால், இலங்கையுடன் அனைவரும் நன்றாக விளையாண்டனர்..)

தொடர்வேன்.... ( உங்கள் கேள்விக்கான பதில்களுடன்.. )

ராஜா
14-06-2008, 03:08 PM
வாங்க.. வாங்க..!

காத்திருக்கிறேன்..!

அறிஞர்
17-06-2008, 10:29 PM
ராஜா அண்ணா..

முத்தரப்பு போட்டியில் இந்தியா தோல்வி பற்றி புதிய தகவல் ஏதும் உண்டா..

ஷீ-நிசி
18-06-2008, 01:03 AM
ராஜா சாரின் விவாதங்களுக்கு!!
மிக அருமையான பதில்கள் தங்கவேல் மற்றும் தமிழ் தென்றலிடமிருந்து....

தமிழ் தென்றல்
18-06-2008, 02:46 AM
நேரம் கிடைக்கவில்லை... அதனால் பதிலிறுக்கவில்லை...இன்று மாலைக்குள் பதிலிடுகிறேன்...

நன்றிகள் நிசியாரே.....

ராஜா
18-06-2008, 03:49 AM
நிசியில் வீசும் தென்றல் இனிமையானதே..!

தமிழ் தென்றல்
18-06-2008, 06:21 AM
நிசியில் வீசும் தென்றல் இனிமையானதே..!

புரியவில்லையே தாங்கள் சொல்வது..??

தமிழ் தென்றல்
18-06-2008, 07:05 AM
அங்கொன்றும் இங்கொன்றுமாக... ( அது உலகக் கோப்பையாக இருந்தாலும் கூட) நீங்கள் மெய்ப்பிக்க விரும்புவது என்ன என்ற என் முதல் கேள்விக்கு உங்களிடமிருந்து இன்னும் பதில் இல்லையே.. அதற்கான பதிலை நீங்கள் சொல்லுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்..

நான் சொன்ன கருத்துக்கு எதிராகவே சில கருத்துகள் சொன்னதாகவும் சொல்கிறீர்கள்.. நான் சொன்ன கருத்துகள் என்று எதை நீங்கள் புரிந்துகொண்டீர்கள்.. அதற்கு எதிரானவையாக என்ன சொல்லியிருக்கிறேன்..

கொஞ்சம் தொகுத்துத் தாருங்களேன்..!

( கேள்வியை நீங்கள் மட்டும்தான் கேட்கவேண்டுமா என்ன :) )

அது உலகக் கோப்பைப் போட்டிகள்தான் என்பதும், அனைத்து உலகக் கோப்பைப் போட்டிகளும் கவனத்தில் வந்துள்ளது எனும்போது, பிறகு அது எப்படி அங்கொன்றும், இங்கொன்றும் ஆகும்..??

நீங்கள் ஏன் அங்கொன்றும், இங்கொன்றும் என்று ஏன் மாயை வலை விரித்தீர்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்...

ஏனென்றால், நீங்கள் அப்படிக் கேட்ட விதம் தவறென்பதால், கேட்டக் கேள்வியே தவறாகவும், அர்த்தம் அற்றதாகவும் ஆகிவிடுகிறது.... ஒருவரிடம் ஒரு நல்ல பதில் பெற வேண்டுமானால், அதற்கு நாம் கேட்கும் கேள்வியானது நல்ல கேள்வியாக இருக்க வேண்டும்....

அதன்படி உங்கள் கேள்வியே செல்லாததுதான் என்றபோதும், உங்கள் மாயையான கேள்விக்கும் நான் பதிலிறுக்கிறேன்..

உங்கள் கேள்வியின் அர்த்தம் என்ன..???

நான் உலகக் கோப்பைப் போட்ட்டிகளைக் குறிப்பிட்டு சொல்லி, மெய்ப்பிக்க விரும்புவது என்ன என்பதுதானே...??

நான் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேனே.... பதிலை... சரி.. மிகவும் தெளிவாக சொல்கிறேன்....

உலகக் கிரிக்கெட் வரலாற்றில், உலகக் கோப்பைப் போட்டிகள் மிக முக்கியமானது.... சாதனைகளுக்கும் சரி.. வணிக ரீதியாகவும் சரி...

அதனால், உங்கள் முன்னேற்பாடுகள் முக்கியமாய் நடக்க வேண்டிய களம் அதுதான்... மற்றப் போட்டிகளைக் காட்டிலும்...உலகக் கோப்பைப் போட்டிகளை ஒளிபரப்ப ஏலம் கூறுதல், மற்றப் போட்டிகளுக்காக ஏற்பட்ட ஒப்பந்தங்களுக்குப் பொருந்தாது... தொகையும் மிக அதிகம்.... ஒவ்வொரு முறையும் தொகை கூடிக் கொண்டேதான் போகிறது....

அப்படியானால், தொலைக்காட்சி சேனால்களுக்கு, விளம்பரக் கட்டணத்தை ஏற்ற வேண்டியக் கட்டாயம் உண்டு... இந்தியா இறுதி வரை விளையாடினால், சேனலுக்கு வரூவாய் பெருகும்...இல்லையேல் முதலுக்கே மோசம் செய்யும்...

அந்த, அந்தக் காலத்திற்கு ஏற்பதான் விளம்பரக் கட்டணங்களும் இருக்கும்... அதாவது 1992 ஆம் ஆண்டு போட்டிகளை ஓளிப்பரப்பிய சேனல், எடுத்த ஏலத் தொகையையும், போட்டிகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டுதான் கட்டணம் விதித்திருக்குமே அன்றி, 1992 லேயே, 2007 இல் விதிக்கக் கூடிய அளவில் கட்டணம் விதித்திருந்திருக்குமா..??

இல்லைதானே... அப்படியானால், நட்டம் என்று ஏற்பட்டால் 1992 லும், சரி, 2007 லும் சரி, நட்டத் தொகை வித்தியாசப்படுமே தவிர, நட்டத்தின் சதவிகிதம் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருக்கும்.... (1992, 07 முதல் சுற்றோடு வெளியேறியது இந்தியா..)

நட்டப்படும் நிறுவனங்களும் வேறு வேறு.. என்பதால், ஓவ்வொரு முறையுமே லாபம் அடைய முழு முயற்சி எடுக்க அவர்கள் எண்ணுவது இயற்கை...ஆனால், அதற்காக, இந்தியா இறுதி வரை வந்ததா...???

இல்லைதானே... நான் ஓரிரூ உலகக் கோப்பைகளைக் குறிப்பிடவும் இல்லை.. உலகின் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும் உலகக் கோப்பைப் போட்டிகளின் எல்லா போட்டிகளையும் குறிப்பிட்டுள்ளேன்...

வேறு எப்போட்டிகளைக் காட்டிலும், இப்போட்டிகளின் வணிக சக்தி அதிகம்... அதனால்தான் நான் அதில் துவங்கினேன்..... முடிவில், இந்தியா.. இதுவரை இரு தொடர்களில்தான் இறுதிப் போட்டி வரை சென்றிருக்கிறது...... ஓரிரு முறை பாவ்லா தத்துவமும் செல்லாது போய்விட்டதே....?? அதாவது ஓரிரு முறைதான் இந்தியா இறுதி வரை போயே இருக்கும்போது, ஓரிரு முறை பாவ்லா காட்டும் திட்டம் எப்படி ஒத்துப் போகும்...??

உங்கள் அடுத்தக் கேள்வி என்ன..??

உங்கள் கருத்துக்கு எதிராக நீங்களே என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்பதுதானே... பதில் சொல்கிறேன்...

நான் இப்பதிவில் சொன்னதற்கு மட்டும் அல்லாமல் நான் எத்தனைக் கேள்வி உங்களைக் கேட்டிருக்கிறேன்... வரிசையாக ஒவ்வொன்றுக்காய் பதில் சொல்லுங்கள்....:)

ராஜா
18-06-2008, 01:31 PM
தென்றல்... உங்களிடம் பதற்றமும், எதிராளி சொல்வதைப் புரிந்துகொள்ளாமலே அவர் சொல்வதை தவறென்று நிரூபிக்கவேண்டும் என்ற அவசரமும் தென்படுகிறது. இன்னும் நான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமலே குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த அவசரமும், பதற்றமும், எதிராளியை எள்ளி நகையாட முற்படுவதும் உங்கள் முன்னேற்றத்தை சீரழித்துவிடும். ஏதோ சொல்லத் தோன்றிற்று. கேட்டாலும் சரி.. வெள்ளரிக்காய் தின்றாலும் சரி.. உங்கள் விருப்பம்.

. உலகக் கோப்பைதானே பெரிய திருவிழா.. அதில் எத்தனை முறை இந்தியா இறுதிப்போட்டிக்கு வந்தது..? இரு முறைதானே..? ஆக நீங்கள் சொல்லும் காரணங்கள் முற்றிலும் பொருத்தமற்றது என்று நிறுவ முற்படுகிறீர்கள். இதில் உலகக்கோப்பையை, அங்கொன்றும், இங்கொன்றும் என்று நான் சொல்லிவிட்டேன் என்றுகூட வேதனைப்படுகிறீர்கள்..!

உலகக் கோப்பை என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் கவுரவப் பிரச்னை. அதில் எல்லா முறையும் இந்தியாவை இறுதிவரை கொண்டுசென்று அழகு பார்க்க இயலாது. அப்படி இருந்தும்கூட, இந்தியா தன் திறமைக்கு மீறியே 2003 உலகக்கோப்பை இறுதிக்கு சென்றது. அவ்வாறு செல்லவேண்டும் என்றே கென்யா அரையிறுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தியாவுடன் தோற்றது. மறுக்க முடியுமா..?

உடனே ஜிம்பாப்வே நாட்டுச்சூழல் காரணமாக சில நாடுகள் ஆட்டங்களைப் புறக்கணித்தன. அதனால் புள்ளிப்பட்டியல், கென்யாவுக்கு சாதகமாயிற்று.. இதுகூட தெரியாமல் திரி போட முன்வந்துவிட்டீர்களே என்று ஏளனம் செய்ய முற்படலாம்.

இங்குதான் நீங்கள் தவறு செய்கிறீர்கள்.. இதுவெல்லாம் ஒரு செட் அப். இப்படி இப்படி இயங்கவேண்டும், என்று முன்கூட்டியே செயல் திட்டம் வடிவமைக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

இதுபோல இலங்கைக்கு சென்று ஆடமாட்டோம் என்று 1996 உ.கோ.வில்கூட ஒரு கூத்து நடந்தது. அப்போதும் இந்தியா அரை இறுதிவரை சென்று தோற்றது.

நாட்டுச் சூழலுக்கும், பயங்கரவாதத்துக்கும் பயப்படும் கிரிக்கெட் வீரர்கள், சமீபத்தில் ஐ.பி.எல். போட்டி நடந்த போது ஜெய்ப்பூரில் குண்டு வெடித்தும்கூட லீக் போட்டி ஆடினார்களே அது எப்படி..? இதுபற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..?

இத்தனைக்கும் அது நாட்டுக்காக ஆடும் போட்டிகூட இல்லை.. பணத்துக்காக ஆடும் போட்டி.. ஷேன் வார்ன் முதற்கொண்டு, அனைத்து நாட்டு அணியினரும் ஜெய்ப்பூரில் ஆடினார்களே.. அப்போது பயப்படவில்லையா..?

கடந்தமுறை இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாததால் டி.வி நிறுவனங்கள் இழந்த வருவாய் 1800 கோடி ரூபாய் என்று ஒரு தகவல் உண்டு. ஆனால், அடுத்த சுற்றுக்குப் போயிருந்தால், சூதாட்ட முதலைகள் இதைவிட அதிகமான பணத்தை இழந்திருப்பார்கள். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்.லில் 22300 கோடி ரூபாய் சூதாட்டப்பணம் புழங்கியதாக பேச்சு உண்டு.

அந்த உலகக்கோப்பையில் தோற்ற இந்தியா, 20/20 போட்டியில் வென்று (?) இமேஜை தக்கவைத்துக்கொண்டுவிட்டது. அப்படி ஒரு வாய்ப்பு 2007 உலகக்கோப்பைக்கு பின்னால் வருகிறது என்னும்போது, முதல் சுற்றிலேயே வெளியேறி சூதாட்டக்காரர்களுக்கு கொள்ளை இலாபத்தை அள்ளிக்கொடுக்க முடிவு செய்திருக்கலாம்.

தமிழ் தென்றல்
18-06-2008, 05:12 PM
தென்றல்... உங்களிடம் பதற்றமும், எதிராளி சொல்வதைப் புரிந்துகொள்ளாமலே அவர் சொல்வதை தவறென்று நிரூபிக்கவேண்டும் என்ற அவசரமும் தென்படுகிறது. இன்னும் நான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமலே குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த அவசரமும், பதற்றமும், எதிராளியை எள்ளி நகையாட முற்படுவதும் உங்கள் முன்னேற்றத்தை சீரழித்துவிடும். ஏதோ சொல்லத் தோன்றிற்று. கேட்டாலும் சரி.. வெள்ளரிக்காய் தின்றாலும் சரி.. உங்கள் விருப்பம்.

நல்லது.. உங்கள் ஆசிகளுக்கு வணக்கங்கள்... எதைக் கொண்டு நான் புரிந்து கொள்ளவில்லை என சொல்கிறீர்கள்... எதை அவசரம் என்கிறீர்கள்.. நான் சொன்ன நீங்கள் ஒருவரிடம் நல்ல பதிலை எதிர்பார்க்க வேண்டுமானால் என்று ஒரு வாக்கியம் சொன்னேனே அதற்கா..??

அது என் சொந்த சரக்கு அல்ல.. வழிவழியாக வழங்கி வரும் தத்துவம்... நீங்கள் கேட்ட கேள்வி தவறு என்றால், அதைத் தவறு என்று சொல்வது எள்ளி நகையாடுவதல்ல.. அதற்கு தமிழில் வேறு வார்த்தை உண்டு.. அந்த வார்த்தை எடுத்தியம்புவது என்பதாகும்..

இப்படி விளக்கமளிக்க முற்படுத்துவதும் நீங்கள்தான்.. நீங்கள்தான் கடினமான வார்த்தைப் பிரயோகத்தை உபயோகித்திருக்கிறீர்கள் நிசியாரிடம் துவங்கி... என் வரை.. ஆனால் இதையும் நீங்கள் எள்ளி நகையாடுவதாகக் குறிப்பீர்கள்...

.
உலகக் கோப்பைதானே பெரிய திருவிழா.. அதில் எத்தனை முறை இந்தியா இறுதிப்போட்டிக்கு வந்தது..? இரு முறைதானே..? ஆக நீங்கள் சொல்லும் காரணங்கள் முற்றிலும் பொருத்தமற்றது என்று நிறுவ முற்படுகிறீர்கள். இதில் உலகக்கோப்பையை, அங்கொன்றும், இங்கொன்றும் என்று நான் சொல்லிவிட்டேன் என்றுகூட வேதனைப்படுகிறீர்கள்..!

நல்லது.. இதற்கு நான் ஏன் வேதனைப் படப் போகிறேன்...?? எங்குதான் வேதனைப் பட்டேன்..?? நீங்களாக அப்படி ஒரு கற்பனைக்கு சென்றால், நான் என்ன செய்வது..??

அது நீங்கள் செய்த பெரும் தவறு.. அதை உறுதியாகச் தவறு என்று எடுத்துச் சொன்னேன்.. அந்த வார்த்தை அந்தக் கேள்வியை அர்த்தமற்றதாக ஆக்குவதும் உணமை... அதைச் சொல்வது வேதனைப் படுவதாக ஆகாது... ( கவலை என்ற சொல் கூட வேதனை என்று அர்த்தமாகாது..அதைக் கூட நான் சொல்லவில்லை...)

உலகக் கோப்பை என்பது ஒவ்வொரு நாட்டுக்கும் கவுரவப் பிரச்னை. அதில் எல்லா முறையும் இந்தியாவை இறுதிவரை கொண்டுசென்று அழகு பார்க்க இயலாது.

ஒத்துக் கொண்டதற்கு நன்றி... எல்லா நாடுகளுக்கும் அது கவுரவப் பிரச்சனை... எங்கள் வழிக்கு வந்ததற்கு மிகுந்த நன்றிகள்...

அப்படி இருந்தும்கூட, இந்தியா தன் திறமைக்கு மீறியே 2003 உலகக்கோப்பை இறுதிக்கு சென்றது. அவ்வாறு செல்லவேண்டும் என்றே கென்யா அரையிறுதிக்கு கொண்டு செல்லப்பட்டு இந்தியாவுடன் தோற்றது. மறுக்க முடியுமா..?

நீங்கள் இந்தியாவின் திறமையை உரசிப் பார்த்த உரைகல் எது என நாங்கள் தெரிந்து கொள்ளலாமா..?? அதையும் தெரிந்து கொண்டால் அனைவருக்கும் பலன் இருக்கும்... இப்போது உண்மையிலேயே எனக்கு சிரிப்பு வருகிறது.. நீங்கள் வயதில் பெரியவர் என்ற மரியாதை என்னைக் கட்டுப்படுத்துகிறது...நீங்களாக இது போன்ற கேள்விகள் கேட்க வைக்கிறீர்கள்.. பிறகு எள்ளி நகையாடல் என்பீர்கள்..

சொல்லுங்கள்.. உலகத் தரப் போட்டிகளில் மட்டும்தான் இந்திய அணி ஆடி வருகிறது.. சில போட்டிகளில் வெற்றியும், பல போட்டிகளில் தோல்வியும் பெறுகிறது.. அது போலவே, அந்த உலகக் கோப்பையிலும் பல வெற்றிகளைப் பெற்றது.. இரு தோல்விகளையும் அடைந்தது...

இந்த உலகத் தரப் போட்டிகளை நாங்களும் பார்க்கிறோம்.. எங்களுக்கும் கற்பனை சக்திகள் உண்டு.. இந்தியாவின் திறமை இன்னது என்று நாங்களறியாமல் உங்களுக்கு மட்டுமே உரைகல்லிட்டு உரசிப் பார்க்க இந்திய அணியினர் எப்போது வருகை தந்தார்கள்..?? எங்கு வந்தார்கள்..?? இது நிச்சயம் எள்ளி நகையாடல் அல்ல... இதற்கு நீங்கள் பதில் சொல்லத்தான் வேண்டும்..

இந்தியாவின் திறமை இந்த அளவுதான் என்று நீங்கள் ஒரு அளவு நிருத்து வைத்துள்ளீர்கள் அல்லவா...?? அந்த அளவு எது...?? எங்களுக்கு உங்களால் சொல்ல முடியுமா..?? அந்த அளவுதான் அவர்கள் திறமை என நீங்கள் கண்டறிய நீங்கள் பயன்படுத்திய உரைகல்லாக இருந்த அந்தப் போட்டிகள் உங்கள் ஊரில் நடந்ததுவா..?? அதை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி எங்களுக்கும் அந்த உரைகல்லை வெளிப்படுத்தாதது ஏன்..??

இப்படி இந்திய அணியின் திறமையை, பல மாநிலங்களிலிருந்து விளையாடும் வீரர்கள் ஒன்றடங்கி விளையாடுவது, இந்திய அணிக்காக மட்டும்தான் என்கையில், அவர்களை நீங்கள் தரம் நிர்ணயித்த ரகசியத்தை வெளியிட முடியுமா..??

உங்களை எதிர்ப்பதற்காகக் கேட்கப்படும் கேள்வியல்ல இது... இது போல உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவரை விமர்சிக்கும் எவருக்கும் வைக்கப்படும் கேள்வி... நீங்கள் ஆடிய 'லீக்' ஆட்டத்தைத் தயவு செய்து உங்கள் விமர்சனத்துக்கு ஆயுதமாகப் பயன்படுத்தாதீர்கள், நீங்கள் இந்திய அணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களோடு சேர்ந்து ஆடாத பட்சத்தில்.. ( ஓரிரு வீரர்களோடு ஆடியிருந்தாலும் கூட.. நீங்கள் ஏதாவது ஒரு முழு இந்திய அணியை எதிர்த்து ஆடியிருந்தால் சொல்லுங்கள்.. அல்லையேல், உங்கள், 'லீக்' ஆட்ட அனுபவம் அவர்களை விமர்சிக்கக் கிடைத்தக் கருவி என்று சொல்லாதீர்கள்..)

நான் கேட்பது மிக அர்த்தமுள்ள ஒரு கேள்வி.. இதற்கு பதிலளிக்க முடியவில்லை என்றால், அதற்கு திசை திருப்பலாய், எள்ளி நகையாடல்.. அங்கொன்று,,, இங்கொன்று என்று கூறாதீர்கள்.. நேரடிக் கேள்விக்கு நேரடி பதில் தேவை...

இந்திய அணியின் திறமையை எங்கு, எப்படி நீங்கள் ஒருவராக நிர்ணயம் செய்தீர்கள்..???? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு மேற்கொண்டு தொடருங்கள்...

உடனே ஜிம்பாப்வே நாட்டுச்சூழல் காரணமாக சில நாடுகள் ஆட்டங்களைப் புறக்கணித்தன. அதனால் புள்ளிப்பட்டியல், கென்யாவுக்கு சாதகமாயிற்று.. இதுகூட தெரியாமல் திரி போட முன்வந்துவிட்டீர்களே என்று ஏளனம் செய்ய முற்படலாம்.

இங்குதான் நீங்கள் தவறு செய்கிறீர்கள்.. இதுவெல்லாம் ஒரு செட் அப். இப்படி இப்படி இயங்கவேண்டும், என்று முன்கூட்டியே செயல் திட்டம் வடிவமைக்கப்படுகிறது. ஆனால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.

இதுபோல இலங்கைக்கு சென்று ஆடமாட்டோம் என்று 1996 உ.கோ.வில்கூட ஒரு கூத்து நடந்தது. அப்போதும் இந்தியா அரை இறுதிவரை சென்று தோற்றது.

எனக்கு பதிலளிக்க இருக்கும் வாய்ப்பை தடுத்து விட்டதாக எண்ணினீர்களா..?? ஜிம்பாப்வே புறக்கணிப்பு என்பது, அந்தப் போட்டித்தொடர்களில் மட்டும் நடைபெற்றதா..?? உங்களுக்கு நன்றாகத் தெரியுமா..??

அந்த உலகக் கோப்பைப் போட்டிகள் முடிந்த பின்னும் ஏன் இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அங்கு செல்ல மறுத்து வருகின்றன.. இந்திய அணிக்குப் புள்ளிகள் வழங்கவா..?? ஆஸ்திரேலிய அணி, ஜிம்பாப்வே சென்று அந்த அணியை வீழ்த்தினால், இந்திய அணிக்கும், பி.சிசி.ஐ க்கும் நட்டமாகப் போய் விடுமா..?? இது யாருக்கும் தெரியாத புது செய்தியாக இருக்கிறதே..

நான், பல நாடுகள் பங்கு பெறும் போட்டிகளை சொல்லவில்லை.. ஆஸ்திரேலியாவின் அப்போதையப் பிரதமர் ஜான் ஹோவர்ட் ஏன் அவ்வணி ஜிம்பாப்வே செல்வதை அத்தனைத் தடுத்தார்..?? ஜிம்பாப்வே அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி, இந்திய அணியின் இடத்தை இட்டு நிரப்பி விடும் என்றா...???

சரி.. இங்கிலாந்தும், நியூசிலாந்தும் ஏன் செல்ல மறுக்கின்றன..?? நான் இரு தரப்புப் போட்டிகளைதான் குறிக்கிறேன் என்பது சரிதானே..??

நாட்டுச் சூழலுக்கும், பயங்கரவாதத்துக்கும் பயப்படும் கிரிக்கெட் வீரர்கள், சமீபத்தில் ஐ.பி.எல். போட்டி நடந்த போது ஜெய்ப்பூரில் குண்டு வெடித்தும்கூட லீக் போட்டி ஆடினார்களே அது எப்படி..? இதுபற்றி எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..?

இத்தனைக்கும் அது நாட்டுக்காக ஆடும் போட்டிகூட இல்லை.. பணத்துக்காக ஆடும் போட்டி.. ஷேன் வார்ன் முதற்கொண்டு, அனைத்து நாட்டு அணியினரும் ஜெய்ப்பூரில் ஆடினார்களே.. அப்போது பயப்படவில்லையா..?

இந்தக் கேள்வி கேட்கும் முன் இதைக் கேட்கலாமா என யோசித்துப் பின்னர்தான் கேட்டீர்களா..??

இதில் இருக்கும் இரண்டு அடிப்படை வித்தியாசங்கள் உங்களுக்கு விளங்கவில்லையா..?? அல்லது விளங்கியும் கேட்க வேண்டும் என்பதற்காக கேட்கிறீர்களா..??

வித்தியாசம் 1 : - மற்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடக்கும்போது வீரர்கள் அவர்களுக்கான முடிவை அவர்களாகவே எடுத்துக் கொள்ளும் நிலையில் இல்லாதிருந்தார்கள்.. ஆனால், இம்முறை அப்படியல்ல.. அவர்கள் தனி நபர்கள்.. அவர்களுக்கான முடிவை அவர்கள்தான் எடுத்தார்கள்.. திரு.லலித் மோடி அவர்களிடம் கலந்து கொண்டு... எந்த அணி சார்பிலும் ஒரு நாட்டு கிரிக்கெட் அமைப்பு எடுக்கவில்லை..

வித்தியாசம் 2 : - சம்பவம் நட்ந்தபோது சம்பவம் நடந்த நாட்டிலேயே அவர்கள் தங்கியிருந்தார்கள் IPL போட்டிகளின்போது... ஆனால், இப்படி சம்பவங்கள் நடக்கும்போது, பெரும்பாலும் வீரர்கள் அவர்களுடைய நாட்டில் இருப்பார்கள்.. அந்த இடத்து சூழ்நிலை தெரியாது.. இங்கு அப்படியில்லை..

இருந்தும் வீரர்கள் நாட்டுக்குத் திரும்பிவிடும் முடிவெடுத்தனர்.. அவர்களுக்கு நிலையை எடுத்து சொல்வது IPL மற்றும் இந்திய அணி மற்றும் ராஜஸ்தான் மாநிலத் தலைமைக்கு முடிந்தது..

மற்ற சமயங்களில், அவர்கள் ஒரு நாட்டின் கிரிக்கெட் அணி நிர்வாகத்திடம், நேரில் அல்ல.. தொலைத் தொடர்பு சாதனங்கலை உபயோகித்துத் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.. இதில் இப்படி வித்தியாசங்கள் இருக்கும்போது.. நீங்கள் இதை எப்படிக் குறிக்க முன்வந்தீர்கள் என ஆச்சர்யமாக உள்ளது..

கடந்தமுறை இந்தியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெறாததால் டி.வி நிறுவனங்கள் இழந்த வருவாய் 1800 கோடி ரூபாய் என்று ஒரு தகவல் உண்டு. ஆனால், அடுத்த சுற்றுக்குப் போயிருந்தால், சூதாட்ட முதலைகள் இதைவிட அதிகமான பணத்தை இழந்திருப்பார்கள். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல்.லில் 22300 கோடி ரூபாய் சூதாட்டப்பணம் புழங்கியதாக பேச்சு உண்டு.

அந்த உலகக்கோப்பையில் தோற்ற இந்தியா, 20/20 போட்டியில் வென்று (?) இமேஜை தக்கவைத்துக்கொண்டுவிட்டது. அப்படி ஒரு வாய்ப்பு 2007 உலகக்கோப்பைக்கு பின்னால் வருகிறது என்னும்போது, முதல் சுற்றிலேயே வெளியேறி சூதாட்டக்காரர்களுக்கு கொள்ளை இலாபத்தை அள்ளிக்கொடுக்க முடிவு செய்திருக்கலாம்.

மேலுள்ள கேள்விகளுக்கும் நான் ஏற்கனவே கேட்டுள்ள க் கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள்... இதற்கு நான் பிறகு பதில் தருகிறேன்.. என்னால் தட்டச்சக் கூட முடியவில்லை....

ராஜா
18-06-2008, 06:26 PM
நான் பதில் சொல்வது இருக்கட்டும்.. 3 நாட்கள் ஆகியும் இன்னும் என் கேள்விகளுக்கு நீங்கள் சரியாக பதில் சொல்லவில்லை.. முன்னுக்குப் பின் முரணாக சொல்கிறேன் என்றீர்களே.. அதற்கு பதில் சொல்வதாகச் சொன்னீர்களே.. அது என்னவாயிற்று..?

அப்படியே கீழ்கண்ட கேள்விகட்கும் பதில் சொல்லுங்கள்..

உங்கள் ஆவனங்களை சரி பாருங்கள்... கலந்து கொண்ட இறுதிப் போட்டிகளில் அதிகம் தோற்ற அணி நியூசிலாந்து அணி...

என் ஆவணங்கள் நான் சொன்னதைதான் உறுதி செய்கின்றன. நீங்கள் உங்கள் கூற்றுக்கு ஆதாரம் வைத்திருக்கிறீர்களா..?

மேலும், பல்வேறு சிக்கல்களினூடே நடந்தது அந்த 20/20 போட்டி என்பதை வசதியாக மறைக்கிறீர்கள்..

அப்படி என்ன சிக்கல் என்று கூறமுடியுமா..?

ஆஷிஷ் நெஹ்ராவின் சிறந்த பந்து வீச்சை நான் பலருக்கும் தெரிந்த, எளிதில் அடையாளம் கண்டு கொள்ள ஏதுவான ஒன்று என்ற அடிப்படையில் ஒரு உதாரணமாக சொன்னேன் என்பது புரியாத புதிரா என்ன..??

அவருடைய பெயரையும் நீங்கள் சொல்ல இயலவில்லை.. அதை எடுத்துத் தர ஒருவர் தேவைப்படும்போது, நீங்கள் ஆவணங்களைப் பற்றிப் பேசி என்ன பயன்..???????

தடித்த வார்த்தைகள் மூலம் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளக்க முடியுமா..?

தமிழ் தென்றல்
18-06-2008, 06:50 PM
நீங்கள் எப்போதும் இப்படித்தான்.. எனக்கு நேரமற்று நான் மூன்று நாட்களாக வரவில்லை.. வந்தபின் நான் முதல் கேள்வி.. உங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமுக்குப் பதில் அளித்துவிட்டுப் பின்னர், தொகுத்து சொல்கிறேன் என்று சொன்னேன்..

உங்களை நான் கேட்டக் கேள்விகளுக்குப் பதில் சொல்லவும் சொன்னேன்.. ஆனால் நீங்கள் சொல்லவில்லை.. அதற்குமாறாக, அதே அங்கொன்றும், இங்கொன்றும் கதையைப் பிடித்துக் கொண்டு மேலும் சில கருத்துகளை வளர்த்தீர்கள்...

நான் அதை மறுத்து சொல்லி, நீங்கள் அதனுடன் கேட்டக் கேள்விகளுக்குப் பதில் அளித்தவுடன் மீண்டும் திசை திருப்பும் முயற்சியை துவக்கி விட்டீர்கள்.. என்ற போதும் என்னிடம் பதில்கள் தாராளமாய் இருக்கின்றன.. நான் அளிப்பேன் நிச்சயமாய்.. ஆனால் எனக்கு நீங்கள் நான் கேட்கும் கேள்விகளுக்கு பத்லேதும் அளிப்பீர்கள் என்ற உத்தரவாதம் கூட நீங்கள் இன்னும் அளிக்கவே இல்லை..

இது எந்த ஊர் நியாயமாம்..??

இனி நீங்கள் என்னுடைய பல கேள்விகளுக்குத் தெளிவான பதில்கள் அளித்து விட்டுப் பின்னர், நீங்கள் என்னைக் கேட்ட சில கேள்விகளுக்கு நான் தரும் பதில்களைப் படித்து விட்டுப் புது கேள்விகளைக் கேளுங்கள்..

உங்களுக்கு முன் கேள்விகள் எழுப்பியது நான் என்பதாகத்தான் எனக்கு ஞாபகம்.. அதனால் திசை திருப்பல் கேள்விகளுக்கே பதிலளிக்கத் துவங்கி விட்ட என்னை பதிலளிக்க சொல்லிக் கொண்டே இருப்பதை விட, உங்கள் பதில்களை கொஞ்சம் கொஞ்சமாகவாவது இடத் துவங்கலாமே..??

எது தடுக்கிறது உங்களை..???

தமிழ் தென்றல்
18-06-2008, 06:55 PM
முதலில் என்னுடையக் கேள்விகள் எவற்றிற்காவது பதில் கூறுங்கள்.. பிறகு மீண்டும் மீண்டும் போய் என் வார்த்தைகளை எடுத்து வந்து தடித்த எழுத்தாக்கிக் கேள்விகள் கேட்கலாம்...

இப்படியே பதிலளிக்காமலே, அடுத்தடுத்து சந்தேகம் எழுப்பியவாறே, எழுப்பிய கேள்விகளை மறக்கடிக்க இயலாது...

அதனால், கேட்ட கேள்விகளுக்குப் பதில், பிறகு மீண்டும் கேள்வி...

ராஜா
18-06-2008, 07:00 PM
இன்னும் எராளமான இடங்களில் நீங்கள் வார்த்தைகளையும், விபரங்களையும் பொறுப்பற்று பதிவு செய்துள்ளீர்கள். அவற்றுக்கும் நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.. அதுமட்டுமல்ல..

நான் ஆரம்பித்திருக்கும் இத்திரியில், நானே பல கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்.. (இந்திய அணி திறமை வாய்ந்த அணி .. இப்போது அவ்வணிக்கு கிடைக்கும் கவுரவங்களும், புகழும், வருவாயும் நியாயமானதுதான் என்று மெய்ப்பிக்க) அந்தக் கேள்விகளுக்கும், அது தொடர்பான துணைக் கேள்விகளுக்கும் நீங்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன்..

மற்றபடி, தூங்கி வழிந்த இந்தத் திரியை பரபரப்பாக்கியதற்கு நன்றி.. :)

தமிழ் தென்றல்
19-06-2008, 02:58 AM
ஆக மொத்தத்தில் நீங்கள் யார் என்னக் கேள்விகள் கேட்டாலும், எப்போதும் பதிலிறுக்கப் போவதில்லை.. தட்டிக் கழித்துக் கொண்டே போவீர்கள்..
பார்த்தேன்.. பார்த்தேன்.. வீட்டுப்பாடம் வைத்த வாத்தியாராய் நடந்து கொண்டிருப்பதையும்.. ஆசிரியராய் இருந்தாலும் புத்தொழுக்கப் பயிற்சியில் ஈடுபட்டுத்தான் தீர வேண்டும்... அவர்களுக்கும் இன்ஸ்பெக்க்ஷன் என்ற பெயரில் சோதனைகள் நடத்தப் படும்.. அதனை உணர்ந்து கொள்ளுங்கள்..

நேரடிக் கேள்விகளுக்கு நேரடி பதில்கள் தேவை என்று சொல்லியிருக்கிறேனே.. படிக்கவில்லையா நீங்கள்..??? நீங்கள் ஏற்கனவே கேட்டுள்ள கேள்விகள் நான் பதிலளிக்கத் துவங்கியபோது உங்கள் எண்ணத்தில் தோன்றவில்லையா..???

ஏன் கிளைக் கேள்விகள் இட்டீர்கள்..?? இப்படி யாருடையக் கேள்விகளுக்கும் பதிலளிக்காமலே நீங்கள் சொல்வதுதான் சரி என்று எப்படி எழுதிக் கொண்டே பொகிறீர்கள்..இன்னும் ஒன்று,... இங்கு யாராவது இந்தியர்கள்தான் திறமைசாலிகள் என்றோ, இந்தியர்கள் வல்லமை படைத்தவர்கள் என்றோ திரி துவங்கவில்லை..

நீங்கள்தான் இந்திய அணியைக் குறைத்து எழுதி திரி துவக்கியுள்ளீர்கள்.. நீங்கள்தான் வழக்கு புனைந்தவர்.. உங்களுக்கே இந்திய அணியின் திறமையின்மையை நிரூபிக்கும் கடமை இருக்கிறது... அடுத்தவர்களுக்குப் பொறுப்பை அளித்துவிட்டு நீங்கள் எப்போதும் யாருக்கும் பதிலளிக்க முடியாது என்ற தொனியிலேயே இருக்கப் போகிறீர்களா..??

நான் கேட்கும் கேள்விகள் பொறுப்பற்றவை என்று நீங்கள் சொல்லாதீர்கள்.. வேறு யாராவது சொல்லட்டும்.. நான் ஏற்றுக் கொள்கிறேன்..

பதிலளிக்க முடியாக் கேள்விகளுக்கு, பதிலளிக்க மறுத்து, பொறுப்பற்ற.. அப்படி இப்படியெனக் கூறிக் கொண்டிராதீர்கள்... நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேனே... நீங்கள் இது போல் திசை திருப்பல் முயற்சிகளை மேற்கொள்வீர்கள் என்று...

நீங்கள் இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.. நான் உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன்...

இந்திய அணியின் திறமையை நீங்கள் பரிசோதித்துப் பார்த்து தெளிய உங்களுக்கு உதவிய உரைகல் எது..?? எப்போது, எங்கு அந்த அளவைக் கண்டறிந்தீர்கள்...?? அந்த அள்வு எவ்வளவு..?? எப்படி அது இந்த அளவுதான் என புத்தியில்லாத முட்டாளாகிய என்னைப் போன்றவர்களுக்கு விளங்க வைக்கப் போகிறீர்கள்..??

இதற்கு நான் மட்டும் அல்ல.. நிசியார் போன்றவர்களை ஒத்துக் கொள்ள வைக்கும் விதத்தில் பதில் சொல்லுங்கள்..

பிறகு அது என்ன பொறுப்பற்றத் தன்மையைப் பற்றி நீங்கள் கூறுவது...?? நீங்கள் என்ன சொன்னீர்கள்.. சொன்னதை சொல்லிவிட்டேன்.. எடுத்துக் கொண்டால் ஆயிற்று.. இல்லை வெள்ளரிப் பிஞ்சைத் தின்றாலும் ஆயிற்று.. இது எவ்விதத்தில் பொறுப்பு வாய்ந்தது..??

ஏன் எங்களால் அதுபோல் கூற முடியாதா..?? நங்கள் சொல்வதை சொல்லிவிட்டோம்.. இப்படி அடுத்தவரை அவதூறாகப் பேசி உங்களுக்குப் புகழ் சேர்க்க முற்படாதீர்கள் என்று...அதற்கும் மேல் அதைப்பற்றி நீங்கள் கருத்தில் கொள்ளவில்லை என்றால் ஒன்றும் செய்ய இயலாது என..??

இருபுறம் கூறான கத்தியை எடுத்துக் கொண்டு தவிக்காதீர்கள்.. கொஞ்சம் வேகப்பட்டாலும், அது பிடித்திருப்பவன் கை எனப் பாராது..

இன்னமும் கூட நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராகவோ, அப்ப்டி ஒரு உறுதியைத் தரவோ தயாராக இல்லை பாருங்கள்..

திரியைப் பரபரப்பாக்கியதற்கு நன்றியா..?? ஓ.. அதுதான் உங்களுக்கு முக்கியம் என ஒத்துக் கொண்டதற்கு நன்றிகள்...

arun
19-06-2008, 03:31 AM
திரு ராஜா அவர்களே

தாங்களும் சொல்கிறேன் சொல்கிறேன் என இன்னமும் சொல்லி கொண்டிருக்கும் மன்றத்து அன்பர்கள் கேட்டு கொண்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முயற்சி செய்யுங்கள்

எந்த கேள்விகளுக்கு பதில் வரவில்லை என திரும்பவும் கேட்க வேண்டாம் தங்களின் திரியில் யாருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என தயவு கூர்ந்து பார்த்து பதில்களை இடவும்

நன்றி

ராஜா
19-06-2008, 05:33 AM
ஆக மொத்தத்தில் நீங்கள் யார் என்னக் கேள்விகள் கேட்டாலும், எப்போதும் பதிலிறுக்கப் போவதில்லை.. தட்டிக் கழித்துக் கொண்டே போவீர்கள்..

இன்னமும் கூட நீங்கள் நான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தயாராகவோ, அப்ப்டி ஒரு உறுதியைத் தரவோ தயாராக இல்லை பாருங்கள்..
.

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் நான் கேட்கும் கேள்விகளுக்கும் வேறுபாடு உண்டு.

நான் கிரிக்கெட்டின் ஏமாற்றுவேலை என்று என் கருத்துகளை இந்தத் திரியில் சொல்லி வருகிறேன். அதை நம்புவதும், நம்பாததும் படிப்பவர்களின் விருப்பம். நான் எங்கும் அதை நம்பித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.

ஆனால் நீங்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகள் ராஜா என்னும் தனிமனிதனின் திறமை பற்றியும் செயல்பாடுகள் பற்றியும்..

அவற்றுக்கு விளக்கம் கேட்கும் உரிமையும், பதிலளிக்கவேண்டிய தார்மீகப் பொறுப்பும் உங்களுக்கு இருக்கிறது.

கட்டாயம் நீங்கள் சொன்னவற்றுக்கும் அது தொடர்பாக நான் கேட்க இருக்கும் கேள்விகட்கும் விளக்கம் சொல்லியே ஆகவேண்டும். அப்படி விளக்கம் கேட்டுப் பெற வேண்டிய சூழ்நிலையில் நான் இருக்கிறேன் அப்படி உங்களிடம் நான் விளக்கம் கேட்கவில்லையெனில், நீங்கள் என்னைப்பற்றி சொன்னவை உண்மையானவை என்று இந்தப் பதிவுகளைப் படிப்போர் மனதில் கருத்து உருவாக வாய்ப்புண்டு.

எனவே நான் கடைசியாக இட்டிருக்கும் கேள்விகட்கு பதிலளித்துவிட்டு இந்தத்திரியில் வேறு பதிவுகள் இடுங்கள். இல்லாவிட்டால், வீண் குழப்பம் விளைவிக்கிறீர்கள் என்று கள நிர்வாகத்திடம் நான் புகார் செய்ய நேரிடும்.

பொறுமைக்கும் ஒரு அளவு உண்டு.

நான் யாரிடமும் இவ்வளவு கடுமையாகப் பேசியதில்லை. அப்படி ஒரு நிலை உருவானதற்கு வருந்துகிறேன்.

ஷீ-நிசி
19-06-2008, 02:36 PM
தமிழ் தென்றல் அவர்களே இந்த விவாதத்தை விடவும் நம் மன்றத்து உறவுகளின் நட்பு மேலானது. ராஜா சார் நம் மன்றத்தின் மூத்தவர். அதனால் விவாதங்கள் உறவுகளுக்கு இடையில் பிணக்கு ஏற்படாத வகையில் விவாதியுங்கள் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அறிஞர்
19-06-2008, 07:15 PM
ஒருவரது கருத்தைக் கூற இங்கு எழுத்து சுதந்திரம் (விதிமுறைகளுக்கு உட்பட்டு) இருக்கிறது.

ஒருவரது கருத்தில் விருப்பமில்லையென்றால் ஒதுங்கி செல்வது தான் சிறந்தது. மல்லுக்கட்டி நிற்பது நல்லதல்ல..

ஆரோக்கியமான விவாதங்கள் இருக்கட்டும். தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்ப்போம்.

இளசு
19-06-2008, 07:42 PM
அன்புள்ள ராஜா அவர்கள் இங்கே அவரின் பார்வையில் கிரிக்கெட் பற்றிய பார்வைகளைப் பதிந்து வருகிறார்.

அந்தக் கருத்துகள் பற்றிய நிதானமான ஒட்டி/வெட்டி கருத்துகள் இட்டு
ஆரோக்கியமாய் இத்திரியை அனைவரும் கொண்டு செல்லுங்கள்.

தனிப்பட்ட முறையில் பதிவரை நோக்கி அல்லது தாக்கி எதுவும் சொல்ல
இங்கே இல்லை முகாந்திரம்.

அப்படி தொடங்கினால், பின்னர் திரியின் பிரசினையை விட்டுவிட்டு
தனிப்பட்ட அளவில் வாதமாகத் தொடரும்.

இதைக் கருத்தில் கொண்டு - திரியில் எழுப்பப்படும் பிரசினைகளை மட்டும் அலசுங்கள்..

திரிநாயகரை , மற்ற பதிவர்களைத் தனிப்பட்ட முறையில் சுற்றிவரும்படி இத்திரியின் போக்கு மாறாமல் காப்பது நல்லது..
...

இணையம் இணைக்க மட்டும் இயங்கட்டும்..

அன்புள்ள ராஜா அவர்களும், மற்ற நண்பர்களும் என் வேண்டுதலை
ஏற்பீர்கள் என நம்புகிறேன்..

அனைவருக்கும் நன்றி!

தமிழ் தென்றல்
20-06-2008, 12:00 PM
தென்றல்... உங்களிடம் பதற்றமும், எதிராளி சொல்வதைப் புரிந்துகொள்ளாமலே அவர் சொல்வதை தவறென்று நிரூபிக்கவேண்டும் என்ற அவசரமும் தென்படுகிறது. இன்னும் நான் சொல்ல வருவதைப் புரிந்துகொள்ளாமலே குழப்பிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த அவசரமும், பதற்றமும், எதிராளியை எள்ளி நகையாட முற்படுவதும் உங்கள் முன்னேற்றத்தை சீரழித்துவிடும். ஏதோ சொல்லத் தோன்றிற்று. கேட்டாலும் சரி.. வெள்ளரிக்காய் தின்றாலும் சரி.. உங்கள் விருப்பம்.

தனிப்பட்டத் தாக்குதல்களில் நான் நம்பிக்கை இல்லாதவன்... என் வாழ்க்கைக்கு முதலில் ஆசி எங்கிருந்து எப்படி வந்திருக்கிறது பாருங்கள்.. அதற்கும் நான் என்ன பதிலிறுத்திருக்கிறேன் எனப் பாருங்கள்...

நான் என்ன பொறுப்பற்ற முறையில் எழுதியுள்ளேன், அவர் பொறுப்பற்ர முறையில் நான் எழுதியுள்ளதாக சொல்லும் முன்பு.. நான் இதைக் குற்றச்சாட்டாகவோ, இல்லை சண்டையிடும் நோக்கிலோ கேட்கவில்லை.. எனக்கு யாராவது என் பொறுப்பற்றத் தன்மையை என் இதற்கு முந்தைய இரு பதிவுகளுக்கு முன் உள்ளதிலிருந்து கண்டு சொல்லுங்கள்...

அவர் எனக்கு நல்வாழ்த்துகள் தனிவிதமாய் சொன்னபோதும் தலைகுனிந்து ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.. யாருமே சோதனை செய்து சொல்லுங்கள்..

ஒருவர் நாட்டுக்காக ஆடும் அணியைக் குறை கூறுகிறார்.. இந்திய அணி திற்மை குறைந்தது என்று வாதாடுகிறார்... சரி.. இந்திய அணியின் திறமையை நீங்கள் கண்டு கொண்ட விதம் சொல்லுங்கள்.. நாங்களும் கண்டு கொள்கிறோம் என்கிறேன்..

நான் முன்னர் பார்த்த ஒரு பதிவில் அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களுக்கு எப்படி ஆதாரம் வைக்கமாட்டார்களோ அப்படி, இவர்களும் ஆதாரம் வைக்கமாட்டார்கள் என்று வேறொரு பதிவர் குறிப்பிட்டிருந்தார்..

அதற்கு வித்தியாசம் இருக்கிறது.. அரசியல்வாதிகள் செய்யும் காரிய்ங்கள் 90% மக்களுக்கு நேரடியாகத் தெரியாதவை.. ஆனால் இவை கண் முன்னேயே நடக்க வேண்டியவை..

நான் திரி நாயகரின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க முற்பட்டேன்.. அவர் அதற்கு பதிலளித்திருக்கிறாரா எனக் கண்டு சொல்லுங்கள்.. நம் அனைவரை விட, இந்த நாட்டுக்காக ஆடும் அணியும், அதன் தன்மையும் முதன்மையானது..

நான் அவருக்குப் பணிவோடு பதிலிறுத்தபோதும்.. ( உதாரணத்திற்கு அவர் எனக்கு ஆசி வழங்கியதற்கு என் பதிலை நோக்குங்கள்..).., அதற்கு அடுத்த பதிவுகளில் அவர் நான் பொறுப்பற்று பேசுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்..

நான் அவருடன் மல்லுக் கட்ட விரும்பவில்லை... ஏன், யாரையும் தனிப்பட்டுத் தாக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை.. முன்னரே இரு முறை சொன்னது போல், அவர் எனக்குப் பலமான ஆசி வழங்கியும், நான் அதைப் பணிவோடு பொறுத்துக் கொண்டேன்.. ஆனால், அடுத்தும் அவர் என்னைப் பொறுப்பற்றுப் பேசுவதற்கு நான் பதில் சொல்ல வேண்டியிருக்கும் எனக் எச்சரித்திருக்கிறார்.. அவர் அப்படி சொன்னதற்கு முந்தைய என் பதிவுகளை சோதனையிட்டுக் கொள்ளுங்கள்...

நான் யாரிடமும் இதுவரை, இப்படி நடப்பதாக சொல்லவில்லை.. இது மன்றத்திலிருந்து எனக்களிக்கப்பட்ட எச்சரிக்கையானால், என்ன தண்டனையோ அதை ஏற்றுக் கொள்கிறேன்.. அது மன்ற விதிகளைப் பொருத்தது..

ஆனால், நான் வெறும் பரபரப்புக்காக எழுதினேன் என்ற அர்த்தத்தில் சொல்லும்போது.., அவருடைய வார்த்தை எனக்கு அனுகூலமாய் இருந்ததை அப்படியே மேற்கோளிட்டு, உங்களுக்கு அதுதான் முக்கியம் என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றிகள் எனச் சொன்னேன்.. எதுவும் என்னுடைய வார்த்தைகள் அல்ல.. அனைத்தும் அவருடையவை..

ஆயினும், அவர் இட்டப் பதிவைப் படித்துவிட்டு அவரிடம் சந்தேகம் தெளிய நினைக்கும் யாரும் சந்தேகம் தெளிய இதுவரை முடியவில்லை.. அவர் எந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமலே நம் நாட்டு அணியைக் குறை சொல்கிறார்... நாடு என்று வந்துவிட்ட பிறகு நம் அனைவருக்கும் எதுவும் உயர்வல்ல என நான் கருதுகிறேன்..

அவர் என்னை நோக்கி எய்த அம்பினைத் திருப்பி விட்டப் பணி மட்டுமே என்னுடையது.. இருப்பினும், அம்பினைத் திருப்பிவிட்டதுதான் குற்றம் என்றால் அதற்கான தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்..

.

தமிழ் தென்றல்
20-06-2008, 12:18 PM
நான் எந்த த் தனிப்பட்ட மனிதரின் திறமையையும் சந்தேகிக்கவில்லை.. ஒட்டுமொத்த இந்திய அணியின் திறமையும் குறைவு என்று வாதாட அடிப்படை கிடைத்தது எப்படி என்ற கேள்வியைத்தான் வைக்கிறேன்... அது தமிழ் தென்றல் சொன்னாலும் வேறு யாருக்கும் கேட்க உரிமை உண்டு...

2003 ஆம் ஆண்டு இந்திய அணி அதன் திறமைக்கு மீறி உலகக்கோப்பை இறுதிக்கு சென்றது என்ற கருத்து வந்தமையால், இந்திய அனியின் திறமைக்கு மீறிய அளவு அது எனக் கண்டுகொண்டது எப்படி என்ற கேள்வி எவருக்கும் வரும்..

அது தனிப்பட்ட மனிதரைச் சுட்டிக் கேட்கப்பட்ட கேள்வியல்ல.. இந்திய அணியின் திறனை நிர்ணயம் செய்யக்கூடிய ஒருவரிடம், நாங்களும் அதே போல் நிர்ணயம் செய்வது எப்படி என்று கேட்கப்பட்டக் கேள்வி..

இதுதான் நான் தனிப்பட்டத் ஒருவரின் திறமையைக் குறித்து எழுப்பிய சந்தேகமா..??

ஆதவா
20-06-2008, 01:04 PM

தமிழ்தென்றல்....

உங்கள் மற்றும் ராஜாவின் விவாதங்கள் கண்டேன். கேள்விகள் கேட்பதில் பலவிதங்கள் உண்டு. மறைமுகத் தாக்குதலாய் சில கேள்விகள் கேட்கலாம். நீங்கள் கேட்ட கேள்விகள் தவறானது என்று கூறவில்லை. அனைத்தும் ஞாயமானதே! அதை அவரிடம் கேட்கும் வழிமுறைதான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. உங்களது கேள்விகளை அப்படியே நேரடியாக ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள். அதில் அடங்கியிருக்கும் காட்டம் தெரியும். அதற்காக உங்கள் கேள்விகளையோ உங்கள் பதிவினையோ இங்கே நாங்கள் குறைகூறவில்லை...

ராஜா, மன்றத்தின் மூத்த உறுப்பினர், அவரிடம் இளைய உறுப்பினரான நீங்கள் பணிவுடனே உங்கள் பதிவினை அமைத்திருக்கவேண்டும், உங்கள் ஒட்டுமொத்த பதிவின் போது ராஜா அவர்கள் கண்மூடித்தனமாக தன் பதிவை இடுவதாக உங்கள் பதிவுகள் கூறுகின்றன.. இது மறுக்க முடியாத உண்மை.

உங்கள் மற்றும் ராஜாவின் பதிவுகளை மீண்டும் ஒருமுறை எடுத்துப் பாருங்கள். அதிக காட்டமாக பேசியது யார் என்று விளங்கும்... இது தனிப்பட்ட தாக்குதலுக்கான ஆரம்பக்குறியே தவிர நீங்கள் அவர் மீது தாக்குதல் பதிவு இட்டதாகச் சொல்லவில்லை... மன்றம் அதை அனுமதிக்கவும் அனுமதிக்காது.

மீண்டும் சொல்கிறேன்.. உங்கள் கேள்விகள் தவறானவை அல்ல.. அது கேட்கப்படும் விதம்தான் தவறாகும்......... அதைத் திருத்தி விவாதம் அமைத்துக் கொள்ளுங்கள்...

பொறுப்பாளர்.

"பொத்தனூர்"பிரபு
06-07-2008, 06:05 PM
கிரிகெட்டை மிக தீவிரமாக பார்த்துகொண்டு இருந்துவிட்டு வயதானதாலும் பொண்டாட்டிபிள்ளைகள் தொல்ல்லையாளும் பார்க்காமல் இருக்கும் சிலர் இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்
விளையாட்டை விளையாட்டாஇ பாருங்கள்
மற்ற விளையாட்டைவிட இது பிரபலமாக உள்ளதால் மற்ற விளையட்டு விளையாடும் சிலரின் வயிற்றெரிச்சல் இவைகள்
எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் அதில் இருக்கும் பரபரப்பு பிடிக்க்கும்.ஆஸ்ரெலியர்களாவது விட்டுகொடுப்பதாவது???? நடக்குற காரியமா?????? ஏமாற்றியாவது வெல்வார்கள்(சிட்னி)

வணக்கம்
நான் புதியவன்தான்
ராஜாவுக்கும் தென்றலுக்கும் நடக்கும் போட்டியில் தவறெதுமில்லை.திரியை தொடங்கியவர் மற்றவர் கேட்டும் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தானே வேண்டும்.மேலும் அனைவரும்படிக்ககூடிய இடத்த்ஹில் எழுதிவ்விட்டு மற்றவர்கள் கேள்விக்கு பதில் கூறாமல் இருந்தால் எப்படி...தென்றல் பதட்டபடுகிறாரவசரப்படுகிறார் என்று ராஜா எழுதிய்யாது தென்றலை கொஞ்சம் புயலாக்கியிருக்கலாம்,விவாதத்தில் தனிமனித தாக்குதல் இல்லாமல் இருக்கவேண்டும் அதே சமயம் மூத்தவரோ இளையவரோ அனைவருக்கும் மதிப்பு ஒன்றுதன் என்று நினைக்கிறேன்
கிரிக்கெட்டில் நடக்கும் தவறுகளை மட்டுமே முன்னிலை படுத்தி எழுதுவது நியாயமில்லை என்பதே என் எண்ணம்.

அன்புரசிகன்
07-07-2008, 02:15 AM
வார்த்தைப்பிரயோகங்கள் கவனமாக இருக்கட்டும் பிரபு.... உங்கள் பதிவில் சிலவற்றை நீக்கியிருக்கிறேன். எவ்வாறு வார்த்தைப்பிரயோகங்கள் பாவிப்பது என்பது தெரியாதவிடத்து மன்றத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சென்று படித்து தெளியுங்கள்.

"பொத்தனூர்"பிரபு
07-07-2008, 02:59 AM
எநத வார்த்தையில் தவறு எனக் கூறமுடியுமா????????

அன்புரசிகன்
07-07-2008, 07:33 AM
எநத வார்த்தையில் தவறு எனக் கூறமுடியுமா????????

நீங்கள் பதிந்ததில் எவற்றை காணவில்லையோ அவற்றை தான் கூறினேன்.

இதயம்
07-07-2008, 08:19 AM
அன்பு தமிழ்தென்றல்,
மன்றத்தில் இடப்படும் திரிகளில் அவற்றின் தலைப்பு தான் படிப்போரை கவர்ந்திழுத்து படிக்க வைப்பவை. அடிப்படையில் கிரிக்கெட் என்ற விளையாட்டினால் பொழுது போக்கு என்ற நன்மையை விட நிறைய தீமைகள் இருப்பதால் அந்த விளையாட்டை வெறுப்பவர்களின் பட்டியலில் நானும் உண்டு. அந்த வகையில் இந்த திரிக்குள் அதிகம் வராமல் இருந்தேன். ஆனால், அடுத்தடுத்த பதிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தியதால் உள் நுழைந்து பார்த்த எனக்கு பெரும் அதிர்ச்சி. விளையாட்டு தொடர்பான விவாதம் தாண்டி தனி மனித தாக்குதல் நடந்து கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது. பொதுவாக எனக்கு கிரிக்கெட் பற்றிய அறிவு மிகக்குறைவு தான் என்றாலும் ஒரு விளையாட்டு தொடர்பான நன்மை தீமையை அலசும் இந்த திரியில் அனல் கக்கும் வார்த்தை பிரயோகங்கள் அவசியமற்றது என்பதால் இதை எழுதுகிறேன்.

அது மட்டுமல்லாமல் இத்திரியின் நாயகர் அண்ணா என்று பெரும்பாலானோரால் அன்புடன் அழைக்கப்படும் அருமையான மனிதர், வயதில் மூத்தவர்..! அவர் மற்றவர் மனம் புண்படும் வகையில் எதையும் பதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கில்லை என்றாலும் அதை மேலும் உறுதி செய்ய இத்திரி முழுதும் படிக்க நேர்ந்தது. அந்த வகையில் அவர் விமர்சித்திருக்கும் அனைத்து கருத்துக்களும் பொது வாழ்க்கைக்கு வந்து விட்ட கிரிக்கெட் விளையாட்டு வீரர்களை பற்றியதாகத்தான் இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டும், அதன் வீரர்களும் குற்றம் சாட்டப்பட முடியாத மாசு மருவற்றவர்கள் அல்லர். பொழுதைபோக்கவும், தன்னம்பிக்கையையும் போதிக்க வேண்டிய ஒரு விளையாட்டு ஊழலையும், அரசியலையும், வியாபாரத்தையும் அடிப்படையாகக்கொண்டு நடக்கிறது என்றால் அதில் குற்றம் சொல்ல எத்தனையோ வாய்ப்புகளுண்டு. ராஜா அண்ணாவின் இந்த திரியை தொடர்ந்து படிப்பதன் மூலம் கிரிக்கெட் என்ற விளையாட்டிற்கு பொன்னான நேரத்தை பொழுதுது போக்காக நினைக்காமல் வாழ்க்கையாக நினைத்து வீணாக கழிக்கும் பலரை திருத்த உதவும். அப்படி ஒருவர் உணர்ந்து திருந்தினாலும் அது இந்த திரியின் வெற்றியே..!!

மன்றத்திற்கென்று சில மாண்புகள் உண்டு. கருத்து சுதந்திரம் என்பது ஓர் எல்லைக்குட்பட்டது. அதை புரியாமல் எல்லை தாண்டுவதை யாராலும் ஏற்க இயலாது. நீங்கள் எழுதியிருந்த கருத்துக்களில் தனி மனித தாக்குதல் என்ற வகையில் பல இடங்களில் எல்லை தாண்டுவதை உணர்கிறேன். இதே நிலை உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் உங்களுக்காக நான் ராஜா அண்ணாவிற்கு எதிராக நின்றிருப்பேன். அறிவை பகிர்வதற்கு தான் நம் மன்றமே தவிர வார்த்தைகளால் அடித்துக்கொள்ள அல்ல..!! கருத்தில் தோல்வி ஏற்படும் பொழுது மனம் காயப்படுவதும், அதன் தாக்கத்தால் தனி மனித தாக்குதலில் இறங்குவதும் மன்றத்திற்கு புதிதல்ல. ஆனாலும், அது எப்பொழுதும் சரியானது அல்ல என்பதே கருத்து..!!

புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன். நன்றி..!!

(பொத்தனூர் பிரபுவும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோள்!!)