PDA

View Full Version : இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் க



aren
12-06-2007, 07:07 PM
இங்கிலாந்து செல்லும் இந்திய கிரிக்கெட் குழு இன்று அறிவித்தாகிவிட்டது.

ஷேவாக்கும், ஹர்பஜன் சிங்கும் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் குழுக்களில் சேர்க்கப்படவில்லை. முனாஃப் படேலுக்கும் இடமில்லை. இர்பாஃன் பத்தானும் எந்த குழுவிலும் இல்லை.

ஆனால் டெண்டுல்கரும் கங்குலியும் இரண்டு குழுக்களிலும் இடம் பெற்றுள்ளனர். இது ஒரு சோகமான செய்தி. வயதாகிவிட்டது இளைஞர்களுக்கு இடம் வேண்டும்.

ஒரு நாள் குழு:

திராவிட், காம்பீர், உத்தப்பா, கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ், தோனி, தினேஷ் கார்திக், ரோமேஷ் பவார், பியூஷ் சாவ்லா, ஜாஹீர் கான், அகர்கர், ஸ்ரீசந்த், ஆர்.பி. சிங், ரோஹித் ஷர்மா ஆகியார். இந்த ஒரு நாள் போட்டி அயர்லாந்தில் அயர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடக்கிறது.

டெஸ்ட் குழு:

திராவிட், காம்பீர், வாசிம் ஜாஃபர், கங்குலி, டெண்டுல்கர், யுவராஜ், லஷ்மன், தோனி, தினேஷ் கார்திக், ரோமேஷ் பவார், கும்ளே, ஜாஹீர் கான், ஸ்ரீசந்த், ஆர்.பி. சிங், ஹிஷாந்த் ஷர்மா மற்றும் ரனாதேப் போஸ் ஆகியார். இந்த டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடக்கப்போகிறது.

அகர்கர் எப்படி ஒரு நாள் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார் என்று தெரியவில்லை.

காம்பீர் மறுபடியும் டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அவருக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காது என்று நினனக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
12-06-2007, 07:10 PM
இப்போதுதான் சன்னில் பார்த்தேன். அதற்குள் ஆரென் பதிந்து விட்டார். காம்பிரே தேவையில்லை என்பது என் கருத்து. இன்னமும் பழையவர்களை வைத்திருக்கின்றார்களே! பதானைக் காணவில்லையே..

aren
12-06-2007, 07:13 PM
இப்போதுதான் சன்னில் பார்த்தேன். அதற்குள் ஆரென் பதிந்து விட்டார். ..

சூரியனைவிட வேகமாக இருக்கிறேன் என்கிறீர்களா? நன்றி.

நன்றி வணக்கம்
ஆரென்

தங்கவேல்
13-06-2007, 02:03 AM
இன்றைய செய்திதாளில் ஒரு செய்தி. கிரிக்கெட் வீரர்களுக்கு பழைய ஒப்பந்த படியே சம்பளம் தர போர்டு அனுமத்திது உள்ளதாம். மூத்த கிரிக்கெட் வீரர்கள் புதிய முறையை எதிர்த்ததால் இந்த முடிவாம் . பாருங்கள் அனியாயத்தை. ஒழுங்காக விளையாட மாட்டார்கள். அதற்க்கு தண்டனை என்றால் எதிர்ப்பார்களாம். சச்சின் என்ன கடவுளா ? இவரை தூக்கினால் தான் இந்திய கிரிக்கெட் உருப்படும்.

இதெல்லாம் யாரு கேட்க போராங்க...