PDA

View Full Version : உயிர் வி(ப)ட்ட மரமே



அமரன்
12-06-2007, 01:21 PM
வெம்மைக்கு சாயை நீ
கருகைக்கு கவிகை நீ
கருகையின் கருவி நீ

என் சுவாசத்தில் வாழ்பவள் நீ
என் சுவாசத்தின் ஆதாரம் நீ
எனக்கு ஆகாரமாபவள் நீ

என் கவிதையின் கருத்தா நீ
என் கவிதையின் கருத்தும் நீ
என் சிதையும் நீ

சிதைந்து போனாயே நீ
செல் பட்டு நிற்கின்றாயே
உயிர் வி(ப)ட்ட மரமே

சிவா.ஜி
12-06-2007, 01:26 PM
நல்ல கவிஞனாய் என்தேர்வு நீ,நல்ல கவிதை இன்னும் படை நீ,எம்மோடு இணந்து என்றும் இரு நீ. வாழவேண்டும் பல்லாண்டு நீ,என் பாராட்டுக்கு உரியவன் நீ('ன்' பிரயோகத்துக்கு மன்னிக்க அமரன்.உரிமையில் சொன்னது)

தாமரை
12-06-2007, 01:27 PM
நான் (அனுபவப், கஷ்டப்)பட்டுப் போகுமுன்னே
நீ பட்டுப் போனாயோ

விகடன்
12-06-2007, 01:48 PM
மரமாய் அவதரித்து இத்தனை வேலைகளை ஆற்றிவிட்டு மரித்துவிட்டது. தமிழனாய் பிறந்த நீ என்ன செய்திருக்கிறாய் என்று கேட்பதுபோலத்தான் எனக்கு விளங்குகிறது அமரன்.

அமரன்
12-06-2007, 02:27 PM
மரமாய் அவதரித்து இத்தனை வேலைகளை ஆற்றிவிட்டு மரித்துவிட்டது. தமிழனாய் பிறந்த நீ என்ன செய்திருக்கிறாய் என்று கேட்பதுபோலத்தான் எனக்கு விளங்குகிறது அமரன்.
ஜாவா. கவிதைகளில் ஒரு சிறப்பு உண்டு. எழுதுபவர் ஏதாவது கரு வைத்து எழுதுவார். படிக்கும்போது அது வேறு கருவைத் தரலாம். அது சிறப்பாக அமைந்தும் விடலாம். திரும்பத் திரும்ப ஒரு கவிதையைப் படிக்கும்போது பல கரு உதிக்கலாம். அது நம்மை கவிஞனாக்கும். இது எனது அனுபவம். உங்கள் கருத்தும் சரியானதே.

அக்னி
12-06-2007, 02:35 PM
வெம்மைக்கு சாயை நீ
கருகைக்கு கவிகை நீ
கருகையின் கருவி நீ

இதனைக் கொஞ்சம் விளக்குவீர்களா அமரா?

வெம்மை - வெப்பம்
வெப்பத்தின் சாயை மரமா? தணிகை மரமா?

கருகை என்றால் கரு என்ற பொருளும் வரும்.
அப்படியானால் இதன் அர்த்தம் என்ன?
வேறு பொருள் இருக்குமானால், விளக்குங்களேன்...

அமரன்
12-06-2007, 02:39 PM
வெம்மை-வெப்பம்
சாயை-நிழல்
கருகை-மழை
கவிகை-குடை

அக்னி
12-06-2007, 02:44 PM
வெம்மை-வெப்பம்
சாயை-நிழல்
கருகை-மழை
கவிகை-குடை
நன்றி அமரன்...
புதிய தமிழ் சொற்களுக்கும்,
அழகிய கவிதைக்கும் அகம் நிறைந்த பாராட்டுக்கள்...

அமரன்
12-06-2007, 09:35 PM
நல்ல கவிஞனாய் என்தேர்வு நீ,நல்ல கவிதை இன்னும் படை நீ,எம்மோடு இணந்து என்றும் இரு நீ. வாழவேண்டும் பல்லாண்டு நீ,என் பாராட்டுக்கு உரியவன் நீ('ன்' பிரயோகத்துக்கு மன்னிக்க அமரன்.உரிமையில் சொன்னது)
நன்றி சிவா
மன்றத்தில் உரிமை அவசியம்
நட்புக்கு அது அத்தியாவசியம்

இளசு
12-06-2007, 09:44 PM
என் சிதையும் நீ...

இந்த வரி வரும் வரை
அன்னையை எண்ண வைத்தது என்னை!

அழகிய சொல்வீச்சும்
அறையும் கருத்தழகும்
அடங்கிய கவிதை..
அமரனுக்கு வாழ்த்துகள்!

ஷீ-நிசி
13-06-2007, 03:32 AM
நன்றாக உள்ளது அமரன். புதிய வார்த்தைகள் இரண்டை கற்றுக்கொண்டேன்....
கருகை, கவிகை நன்றி!

ஆதவா
13-06-2007, 04:12 AM
சிதையும் நெருப்பால் உலகம் அழிந்துபோவதுண்டோ?
மரத்தினில் வாழ்ந்தவன் மனிதன்
அந்த மரத்தினால் இன்றும் வாழ்பவன் மனிதன்
இருவகை வித்தியாசங்கள்..

முதலாமது இயற்கைச் சாவு (மரணம்)
இரண்டாமது கொடுங்கொலை.

பட்டுப் போவது மரத்தின் முதுமை.
(கோடாரி)பட்டுப் போவது மரத்தின் புதுமை

அம் மரத்தையாவது ஆணாய் வடித்திருக்கலாமே அமரன்?
புவிப் பரத்தையர்களால் அழிந்துபோகக் கடவும் மரத்தை!

மெல்ல வளர்கிறது இந்த மரம் போல உமது புலமை
உயிர் விடா மரம்...
வளரட்டும்.. ஆசிகள்.

------------------------
எம்மை கரம் போற்று வருகும்
கருகை பால் கடவுளுண்டோ?
நம்மை சிரம் ஏற்றி தருகுதி
கொடும் நிலவு பால் நேசமுண்டோ?
வெம்மை மிக மாற்றித் தருகுநல்
மதியின் பால் மதிப்பதுண்டோ?
பொம்மை யோர் சிலையுமாங்கே
போற்று பால் மாற்றமுண்டோ?
-------------------------

அமரன்
13-06-2007, 05:53 PM
நன்றாக உள்ளது அமரன். புதிய வார்த்தைகள் இரண்டை கற்றுக்கொண்டேன்....
கருகை, கவிகை நன்றி!
நண்பர் அஷோவின் உதவியுடன் கிடைத்த சொற்கள் அவை. கவிதை கற்றுக்கொண்டது உங்களைப் போன்றோரிடம்தானே.
என் துரோணர்களில் நால்வர் எனக்கு மீண்டும் ஊட்டுகின்றீர்கள் ஊட்டத்தை. நன்றி.

பென்ஸ்
14-06-2007, 02:07 AM
பட்டு போனதாய் வெட்டிப்போன மரங்கள் தானே மரித்து போகும்
இலை உதிர்த்து ஒரு வசந்ததிற்க்காய் காத்திருக்கும் மரத்துக்கு முகாரி தேவையில்லை.

உயிர் தந்த தாயே உயிருக்காய் தவிக்கும் வலியை
மழை தந்த மரம் மழக்காய் தவித்து பட்டு போன வலியை தந்தது...


இளசு..மரமும் தாயை போலதானே நம்மை காக்கிறது.

ஆதவா... உன் உள்நோக்கு பார்வை அபாரம்...

அமரன்
14-06-2007, 07:08 AM
என் சிதையும் நீ...

இந்த வரி வரும் வரை
அன்னையை எண்ண வைத்தது என்னை!

விமர்சனக்களைப் படிக்கும்போது புதிய சிந்தனைக் கருக்கள் தோன்றும். இளசு அவர்களின் பின்னூட்டத்தின்பிரகாரம் இக்கவிதையை என் அன்னைக்கு வாழ்த்தாக எழுதினால் எப்படி இருக்கும் என சிந்தித்தேன். அதன் பிரதிபலனே இது.

வெம்மைக்கு சாயை நீ
கருகைக்கு கவிகை நீ
கருகையின் கருவி நீ

என் சுவாசத்தில் வாழ்பவள் நீ
என் சுவாசத்தின் ஆதாரம் நீ
எனக்கு ஆகாரமாபவள் நீ

என் கவிதையின் கருத்தா நீ
என் கவிதையின் கருத்தும் நீ
என் சிந்தையும் நீ
எந்தையாக நின்றவளும் நீ
பட்டுப்போய் நிற்கின்றாயே-என்னுள்
வேர் விட்ட மரமே!