PDA

View Full Version : விண்கற்கள் வெடித்துச் சிதறியது



இணைய நண்பன்
12-06-2007, 12:07 PM
தீப்பிழம்புகளை கக்கியவாறு விண்ணிலிருந்து பூமியை நோக்கி வந்த விண்கற்கள் வெடித்து சிதறியதன் காரணமாகவே இலங்கை நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன என்று ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.பாரிய வெளிச்சத்துடன் பூமியில் விழுந்த விண்கற்கள் தொடர்பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக ஆர்தர் சி கிளார்க் மையத்தின் விண்ணியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கையில்; குருணாகல்,திருகோணமலை,காலி மற்றும் கட்டுநாயக்க போன்ற பகுதிகளில் சமகாலத்தில் வானிலிருந்து ஏதோவொன்று தீப்பற்றி எரிந்து கொண்டு பூமியில் விழுந்ததாகவும் அதற்கு பின்னரே வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9.02 மணிக்கும் 9.05 மணிக்கும் இடைப்பட்ட சுமார் மூன்று நிமிடத்திற்குள் வானத்திலிருந்து பாரிய தீ பிழம்பு பூமியை நோக்கி வந்ததாகவும் பின்னர் குண்டு வெடிப்பு சத்தத்தை போல பாரிய சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெளிச்சம் மற்றும் சத்தம் நாட்டில் குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமே கேட்டுள்ளது அப்பிரதேசத்தை சேர்ந்த மக்கள் வானில் தீப்பிழம்புடன் கூடிய மர்மப்பொருளொன்று பாரிய சத்தத்துடன் வெடித்து சிதறியதை உணர்ந்துள்ளனர்.

மக்கள் இந்த தீ பிழம்பை வானில் சுமார் இரண்டு மூன்று நிமிடங்கள் மட்டுமே கண்டுள்ளனர் அதற்கு பின்னரே இந்த வெடிச்சத்தம் கேட்டுள்ளது. விண்ணிலிருந்து பூமியை நோக்கி வந்த பாரிய விண்கற்கள் வெடித்து சிதறியதன் காரணமாகவே பாரிய வெடிப்புசத்தம் கேட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் விண்ணிலிருந்து எவ்வாறான விண்கற்கள் விழுந்துள்ளன என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

அத்துடன் கட்டுநாயக்க ஆடிஅம்பலம் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் கூரையின் மீது இவ்வாறான மர்மப்பொருள் விழுந்து வெடித்து சிதறியுள்ளதுடன் அந்த கூரை தகரத்திலானது என்பதினால் கூரைத் தகடுகளில் தீப்பிழம்பு விழுந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நமது நாட்டை பொறுத்தமட்டில் விண்ணிலிருந்து பாரிய விண்கற்கள் பூமியை நோக்கி விழுந்தமை இதுவே முதல்தடவை என்பதினால் இவை தொடர்பாக ஆராய்ச்சிகளை துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன

குருணாகல்,திருகோணமலை,காலி,கட்டுநாயக்க, பன்னல மற்றும் பிங்கிரிய போன்ற பிரதேசங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.02 மணியளவில் வானிலிருந்து பாரிய தீப்பிழம்புடன் ஏதோவொன்று பூமியை நோக்கிவந்ததன் பின்னர் வெடிப்பு சத்தம் கேட்டதனால் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதோ என்ற அச்சத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

விண்ணிலிருந்த மர்மப் பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கிவருவது தென்பட்டால் அது குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு ஆர்தர் சி கிளார்க் மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

அமரன்
12-06-2007, 12:18 PM
என்ன நடக்கின்றது இப்பூமியில். ஒன்றுமே புரியவில்லை.
தகவலுக்கு நன்றி.

இதயம்
12-06-2007, 02:07 PM
என்ன நடக்கின்றது இப்பூமியில். ஒன்றுமே புரியவில்லை.
தகவலுக்கு நன்றி.

இயற்கை என்ற இறைவனுக்கு மாறாக நடக்கின்றோம். அதற்கான பலனையும் அனுபவித்துத்தானே ஆகவேண்டும்.