PDA

View Full Version : வேறு தளங்களுக்கு எடுத்துச்செல்வதேன்?



உதயா
12-06-2007, 08:10 AM
15ந்து நாட்களாக, என் கணிணியில் சிறு பிரச்சனை. என்னவென்றால். நான் google ஏதாவது ஒரு வாக்கியமோ அல்லது தளத்தையோ search செய்தபின், வரும் தளத்தின் பெயரை சொடுக்கினால், அது ஏதாவது ஒரு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது. இதே போல் மூன்று அல்லது நான்கு முறை வந்திருக்கும் தளத்தை சொடிக்கியபின்னரே சரியான தளத்திற்கு செல்கிறது. இது எதனால்? இதை சரி செய்ய என்ன செய்யவேண்டும்?

உதவுங்களே பிலிஸ்

விகடன்
12-06-2007, 08:13 AM
சரியாகத் தெரியவில்லை நண்பரே.

எதற்கும் விசைப்பலகையை சரிபாருங்கள். தளத்திம் முகவரி எழுத்துப்பிழை இன்று பதிக்க முடிகிறதா? என்று கவனியுங்கள்

மயூ
12-06-2007, 08:13 AM
உங்கள் கேள்வி தெளிவில்லை நண்பரே...
ஆயினும் எதும் ஸ்பைவேர் வந்திருக்காலம் என்று தோண்றுகின்றது...

உதயா
12-06-2007, 08:21 AM
எப்படி சொல்ல???

எ.கா : http://www.google.com/search?hl=en&q=icici

இங்கே நான் icici bank கை search செய்தேன். அதில் பல icici பேங்கின் link வந்துள்ளது. அதில் முதலாவதாக இருக்கும் சுட்டியின் முகவரியான www.icicibank.com இதை சொடிக்கினால் வேறு ஏதாவது ஒரு தளத்திற்கு எடுத்துச்செல்கிறது. இந்த சுட்டியை நான் பலமுறை (3 அல்லது 4 ) சொடிக்கினால் மட்டுமே சரியான இந்த தளத்திற்கு எடுத்துச்செல்கிறது.

praveen
12-06-2007, 09:50 AM
உங்கள் கணினியில் ஸ்பவேர் உள்ளது, அது உங்கள் பிரவுசரை ஹைஜாக் செய்து இவ்வாறான விளைவுகளை செய்கிற்றது, வேறு பிரவுசர் தற்காலிகமாக பதிந்து உபயோகியுங்கள், இல்லை இனையத்தில் SPYBOT என்று தேடி அந்த இலவச மெண்பொருளை பதிந்து அந்த நச்சை நீக்குங்கள்.

உதயா
12-06-2007, 10:22 AM
கொஞ்சம் தேடி தாறுங்களே asho

praveen
12-06-2007, 02:47 PM
கொஞ்சம் தேடி தாறுங்களே asho

என்ன நண்பரே, கோடு போட்டால் ரோடு போட்டு விடுவீர்கள் என்று பார்த்தால், சரி இன்னும் எளிமையாக்கி அந்த தளத்து பதிவிறக்க பக்கத்தை தந்திருக்கிறேன். முயன்று பாருங்கள். உங்கள் கணினியில் பதிவிறக்கி பதிந்து பின் சேப் மோடில் ரண் செய்து பாருங்கள். அந்த மென்பொருள் தயாரித்தவர் தகவல் படி செய்து பாருங்கள்.

http://www.safer-networking.org/en/download/
http://siri.geekstogo.com/SmitfraudFix.php
http://www.spywareinfo.com/~merijn/programs.php

உதயா
12-06-2007, 03:18 PM
நன்றி அசோ, நாடன்னில் அந்த ஸ்பைவேர் நீக்கக்கூடிய சுட்டி கிட்டியது. அதை ஓடவிட்டு வந்துள்ளேன். நாளை எப்படி என்று விளக்கம் தருகிறேன்.

( தொந்தரவுக்கு வருந்துகிறேன் )

உதயா
13-06-2007, 04:05 AM
சரியாகவில்லை. என் கணிணியில் காலையில் இருந்த செய்தி Adware. Ndotnet has not been found on your computer.

NOD32 மூலம் கிடைத்த ஸ்பைவேர், கீழே.

C:\System Volume Information\_restore{5D527826-05BD-4A83-8416-28ACDDA14001}\RP481\A0054339.exe WISE NNWDAC638.EXE - Win32/Adware.NdotNet application

அன்புரசிகன்
13-06-2007, 10:48 AM
எதற்கும் நீங்கள் உங்களது internet explorer ஐ reset (Internet properties> Advance>Reset web settings) செய்து பாருங்கள். cookies ஐ முழுவதும் அழித்துவிட்டு பின் cookies ஐ allow என்று செய்து பார்த்து பிரச்சனை தீர்ந்துவிடுகிறதா என பாருங்கள்.

உதயா
13-06-2007, 10:53 AM
செய்தாகி விட்டது. ம்ஹூம்.

praveen
13-06-2007, 12:23 PM
நண்பரே, நான் தந்த வழிமுறைகளை பரிசோதித்து பார்த்தீர்களா?

வெற்றி
13-06-2007, 01:02 PM
செய்தாகி விட்டது. ம்ஹூம்.

இதை முயன்று பாருங்களேன்..ஆண்டி.ஸ்பை பிளாக்கர் எனின் மென்பொருள்...
பெயரை மாற்றி இருக்கிறேன்....
http://uploadarmy.com/?d=D610F0EC
இதை முதலில் பதிவிறக்கி கொள்ளுங்கள்....
இதை winrar பதிவேற்றி இருக்கிறேன்..இதை இறக்க winrar தேவை
(winrar இல்லை எனில் சொல்லுங்கள் winzip ல் ஏற்றி தறுகிறேன்)
இறக்கிய உடன் பாஸ்வேர்டி(கடவுச்சொல் ) கேட்கும்: 1234இதை நிருவி ஒரு முறை full scan செய்து ஸ்பைவேர்களை நீக்கி பின் ரீ பூட் செய்தால் உங்கள் பிரச்சனை தீரும் நம்புங்கள்...

நன்றி...
நன்றியை அசோ வுக்கு சொல்லுங்கள்..இதை கற்று தந்ததே அசோ தான்,,

உதயா
14-06-2007, 05:05 AM
வேறு தளத்தில் ஏற்றி சுட்டி தறமுடியுமா? பதிவிறக்கம் செய்யமுடியவில்லை.

சுட்டிபையன்
14-06-2007, 05:12 AM
ஹீ ஹீ பேசாம றீ பூட் பண்ணிடுங்க

வெற்றி
14-06-2007, 07:02 AM
வேறு தளத்தில் ஏற்றி சுட்டி தறமுடியுமா? பதிவிறக்கம் செய்யமுடியவில்லை.

http://www.MegaShare.com/202544

இதோ வேறு தள லிங்க்...(இறக்கி கொண்டவுடன் win rar க்கான கடவுச்சொல் 1234 )

உதயா
14-06-2007, 09:25 AM
செய்து, 6 ஸ்பைவேர் பிடித்தது, மீண்டும் சர்ச் செய்து லிங்கை சொடுக்கும் பழைய குருடி கதவை திறடி கதை தான்.

வெற்றி
14-06-2007, 10:22 AM
செய்து, 6 ஸ்பைவேர் பிடித்தது, மீண்டும் சர்ச் செய்து லிங்கை சொடுக்கும் பழைய குருடி கதவை திறடி கதை தான்.
வேறு வழி இல்லை ..பார்மேட் செய்து விடுங்கள்....

சக்திவேல்
14-06-2007, 10:30 AM
கடைசி முயர்ச்சியாக

1). இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7.0 க்கு உயந்திப்பாருங்கள்.

சரியாகலைன்னா

2). http://housecall.trendmicro.com/
இந்த இடத்தில் உள்ள ஆன்லைன் மூலம் வைரஸ் கன்டுபிடிக்கும் இலவச வசதியை பயன்படுத்தி பாருங்கள்.

இன்பா
14-06-2007, 12:02 PM
cClenear என்று ஒரு மென்பொருள் உள்ளது அதை டவுன்லோட் செய்து க்ளீன் செய்யுங்கள் இந்த ப்ராப்ளம் சால்வ்....

100% ரிசல்ட் நிச்சயம்.....

வெற்றி
15-06-2007, 05:17 AM
cClenear என்று ஒரு மென்பொருள் உள்ளது அதை டவுன்லோட் செய்து க்ளீன் செய்யுங்கள் இந்த ப்ராப்ளம் சால்வ்....
100% ரிசல்ட் நிச்சயம்.....

உண்மை தான் ஆனால் cclener உபயேகிப்பதன் மூலம் இந்த ஸ்பைவேர் பிரச்சனை தீரும் என நான் நம்பவில்லை...(அது குக்கீஸ் மற்றும் டெம்ப் பைல்கள்,வரலாறு போன்ற தேவை இல்லாத குப்பைகளை தான் நீக்கும்)
இதோ அதன் சுட்டி
http://www.ccleaner.com/

Sendhilkumaar
15-06-2007, 05:38 AM
http://www.pctools.com/spyware-doctor/download/
இதனை முயன்று பாருங்களேன்....
பலன் தராவிட்டால்...???? வேறு பிரவுசர்களை பயன்படுத்த வேண்டியதுதான்....

வெற்றி
15-06-2007, 06:32 AM
http://www.pctools.com/spyware-doctor/download/
இதனை முயன்று பாருங்களேன்....
பலன் தராவிட்டால்...???? வேறு பிரவுசர்களை பயன்படுத்த வேண்டியதுதான்....

இதுவும் நல்ல மென்பொருள்தான் ஆனால் வைரஸை கண்டுபிடுத்து விட்டு ரிஜிஸ்டர் செய்தால் தான் அழிப்பேன் என அழிச்சாட்டியம் பண்ணும்..
ஆனால் புதிய ஸ்பைவேரை உள்ளே விடாது...

உதயா
16-06-2007, 06:20 PM
ரீ பார்மட் செய்தாகி விட்டது நண்பர்களே. அனைவருக்கும் நன்றி.

praveen
17-06-2007, 11:28 AM
பாரமேட் செய்வது வருத்தம் தான், இனியாவது ஓற்று நிரல் உள்ளே நுழையாதபடி ஒற்று எதிர்ப்பு மென்பொருள் முதலிலே உபயோகியுங்கள்.

இப்போது நன்கு கற்றிருப்பீர்கள் ஒற்று மென்பொருட்களின் சேட்டைகளை.