PDA

View Full Version : அல்சர்ஆதவா
12-06-2007, 06:42 AM
மன்ற நண்பர்களே! குறிப்பாக மருத்துவர்களே!

அல்சர் பற்றி எனக்கு விபரம் தேவை.. அதன் அறிகுறி என்ன? எப்படி தடுக்கலாம்? ஒருவேளை வந்துவிட்டால் அதை முறிக்க என்ன என்ன செய்யலாம்? என்று விபரம் தருகிறீர்களா?

விகடன்
12-06-2007, 06:56 AM
அல்சர் என்பது குடலில் ஏற்படும் புண். முதலில் குடலிலுள்ள சீதம் போன்ற பதார்த்தம் அற்றுப்போகும். இதன்போது அப்பப்போ வயிற்றுனுள் குடைவது போலிருக்கும். இத ஒழுங்காக காரத்தனைமையற்ற உணவுகள் மூலம் நலப்படுத்திக்கொள்ள முடியும். சாப்பாட்டு ஒழுங்குமுறை கண்டிப்பாக கடைப்பிடிக்கபட வேண்டும்.உப்பு, உறைப்பு, எண்ணெய் உணவு வகைகள் காட்டப்படாது.

இதுவே அதீதமானால் அல்சர் எனப்படும். அதாவது புண் வருதல். இதற்கு ஒருபோதும் இரைப்பையை வெறுமனாக வைத்திருக்கக்கூடாது. தொடர்ச்சியாக பிஸ்கட் போன்ற மென்மையான உணவுகளை உட்கொண்டுவரல் வேண்டும். உணவுப்பழக்க வழக்கங்கள் இதில் கண்டிப்புடன் பேணப்படல் வேண்டும். மீள உடலை சரிசெய்துகொள்வதற்கு வருடங்கள் சிலவும் ஏற்படலாம். ஆனால் அப்பப்போது வரும் வயிற்று வலியை நிறுத்துவதற்கு தொடர்ச்சியான மென்மையான உணவூட்டமே சாலச்சிறந்தது.

மேலதீக விபரங்களுக்கு தருவார்கள் மன்ற வைத்திய ஆலோசகர்கள்.

ஆதவா
12-06-2007, 06:58 AM
நன்றி ஜாவா... தேவைப்படும் தகவலாக இருக்கிறது..

namsec
12-06-2007, 07:05 AM
ஜாவா அவர்கள் கூரியது முற்றிலும் உண்மையானது.

நேரம் தவராது உணவு எடுத்துகொள்ளவேண்டும், தயிர் மிகவும் நல்லது, உணவகங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது

சக்தி
12-06-2007, 07:41 AM
அல்சர் பொதுவாக இரண்டு வகைப்படும்
1) gastric ulcer
2) peptic ulcer
முதல் வகை வயிற்றின் மேற்பகுதியிலும் இரண்டாவது அடிவயிற்றிலும் வருவது.

காரணம்:

1) முறையற்ற உணவு பழக்கம்
2) புகை பிடித்தல்
3) மது அருந்துவது
4) மன அழுத்தம்

அறிகுறிகள்:

1) வயிற்றில் எரிச்சல் ஏற்படுவது
2) பசியின்மை
3) எடை இழப்பு
4) சோர்வு

தவிர்க்கும் வழிமுறைகள்:

1.) உணவு அருந்தும் நேரத்தை சீர்படுத்துவது. இதில் முக்கியமானது வயிறு நிறைய உணவு அருந்துவதை தவிர்க்க வேண்டும். சிறிது சிறிதாக 4 அல்லது 5 முறை உணவு உண்பது நலம்.
2) புகை பிடிப்பதை தவிர்த்தல், மது அருந்துவதும் கூடாது.
3) மன அழுத்தத்தை போக்குவதற்கு தியானம் செய்யலாம்.

இதில் மிகமுக்கியமானது உணவுப் பழக்கம்.

விகடன்
12-06-2007, 07:45 AM
சக்தியின் விளக்கம் இரத்தினச் சுருக்கமாக உள்ளது ஆதவா.

நன்றி சக்தி.

ஆதவா
12-06-2007, 07:49 AM
மிக மிக மிக நன்றி சக்தி.

மயூ
12-06-2007, 08:11 AM
காலையில சாப்பிடாம இருந்தால் அல்சர் கட்டாயம் வரும்...

விகடன்
12-06-2007, 08:22 AM
காலையில சாப்பிடாம இருந்தால் அல்சர் கட்டாயம் வரும்...
என்ன மயூ?

பஞ் டயலொக்கா?:lachen001:

மயூ
12-06-2007, 08:26 AM
ஏன் ஜாவா மேல் உள்ள வசனத்தில் ஏதாவது.. பஞ்சுக் கடை பஞ்சாக்கா பற்றி எழுதியுள்ளேனா... என்னாச்சு உங்களுக்கு....
ஹி... ஹி... கடிச்சுட்டம்ல :D

விகடன்
12-06-2007, 08:37 AM
ஏன் ஜாவா மேல் உள்ள வசனத்தில் ஏதாவது.. பஞ்சுக் கடை பஞ்சாக்கா பற்றி எழுதியுள்ளேனா... என்னாச்சு உங்களுக்கு....
ஹி... ஹி... கடிச்சுட்டம்ல :D

ரொம்ப வலிக்குது மயூ.

கடியில்லை. கடிச்ச விதந்தான்.

பரவாயில்லை. நாங்கள் இருக்கிறோம் உமக்கு.:icon_good:
முன்னேறிடலாம்:icon_v:

இளசு
12-06-2007, 09:51 PM
ஆதவன்

என் முந்தைய (திஸ்கி) பதிவை இங்கே இடுகிறேன்..

மேலுல் தகவல்கள் தேவைப்படின் கேட்கவும்.. எனக்குத் தெரிந்ததை இடுவேன்.. நன்றி..


இரைப்பையில் புண் (Ulcer) இருந்தால் என்னென்ன நோய்க்குறிகள் (Symptoms) இருக்கும் ? அப்புண்ணைக் குணப்படுத்த எளிய வழிகள் ஏதேனும் இருக்கிறதா?


அமிலப் புண்கள் (Peptic Ulcers... பெப்டிக் அல்சர்கள்)....இரண்டு வகை.

1)இரைப்பைப் புண் (Gastric Ulcer.... கேஸ்ட்ரிக் அல்சர்): நாம் செல்லமாய் G.U. என அழைக்கலாம்.
2)இரைப்பையில் அரைபட்ட உணவு அடுத்து செரிக்கப்பட்டு உறிஞ்சப்படும் சிறுகுடலில்
நுழையும் ஆரம்ப இடத்தில் வரும் புண். (Duodenal Ulcer ..டியோடினல் அல்சர்).. செல்லப் பெயர்.D.U.

இரண்டுமே எந்த வயதினருக்கும், இரு பாலருக்கும் வரலாம்.
சில சிறப்பம்சங்கள்:
நம்மை அதிகமாய் தாக்குவது D.U. குறிப்பாக 20- 40 வயதில் ஆண்களுக்கு கொஞ்சம் அதிக அளவில்
வரும்.
G.U. --- 50 - 70 வயதினரை அதிகமாய் தாக்கும்.

நோய்க்குறிகள்.....

பலருக்கு அல்சர் எந்த தொந்தரவும் தராமல் " சைலண்டாகவே" இருக்கலாம்.

அறிகுறிகள் என்று பார்த்தால்.......
1)மார்பு நடு எலும்புக்குக் கீழே.... நாபிக்கமலத்துக்கு மேலே உள்ள
இடைப்பட்ட பிரதேசத்தில்......
பசித்தால் வலி (D.U.)அல்லது சாப்பிட்டால் வலி,(G.U.) உப்புதல், அசௌகரியமான உணர்வு'
2)அதிகமான பசி (D.U.), குறைந்த பசி (G.U)
3) வாந்தி, குமட்டல் (Vomiting, Nausea)
4) இரத்த இழப்பு : இரத்த வாந்தி,(Hematemesis, Hem = Blood, Emesis= Vomiting)
இரத்தம் (தார் போல) கலந்த மலம் (Melena), சோகை நோய் (Anemia).
5) இரைப்பையில் பொத்தல் விழுந்தால்....(Perforation)
உயிர் போகும் அளவுக்கு கடும் வலி, கடும் உடல்நலக்குறைவு.

அல்சரின் காரணங்கள்:

முக்கால்வாசிக்கும் மேல் அல்சரை உருவாக்குவது....
ஹெலிகோபெக்டர் பைலோரி ( Helicobacter Pylori) என்ற
பாக்டீரியா வகை நுண்ணுயிரிதான்.

மற்ற புண்களின் காரணம்.... மாத்திரைகள்....
ஆஸ்பிரின் (சாரிடான், நோவால்ஜின், ஆஸ்ப்ரோ)
Brufen
Diclofenac
Naproxen
Indomethacin
Piroxicam
இத்தியாதி.....
இவை தலைவலி, மூட்டுவியாதிகளுக்கு பயன்படும் மாத்திரைகள்.
பல பெயரில் விற்கப்பட்டாலும்... ஆதார மருந்தியல் பெயர்
Each tablet/ capsule contains...." என்று சிறிய எழுத்தில் இருக்கும்.
அல்சர் வந்தவர்கள் இவற்றைத் தவிர்த்தல் நலம்.
பாராசிடமால்( குரோசின்) மாத்திரையால் அல்சர் வராது.
புகை பிடித்தால், இரு வகை அல்சரும் சுலபத்தில் ஆறாது!

அல்சரைக் கண்டுபிடிக்க:

புதிய சிறந்த வழி : உள் நோக்கும் கருவி சோதனை (என்டோஸ்கோபி;Endoscopy Test), இதில் ஹெலிகோபேக்டர் கிருமி காரணமா எனவும்
அறிந்து கொள்ளலாம்.

பழைய வழி: பேரியம் விழுங்கி எக்ஸ் -ரே (Barium Meal X-Ray).

நிவாரணம்:
ஹெலிகோபேக்டர் அல்சர்: ஒரு - இரு வார மும்மருந்து சிகிச்சை போதும்!
(Triple Therapy)
வலி மாத்திரையால் வந்த அல்சர் :
காரணமான மாத்திரையை நிறுத்தவும்.
6-8 வாரம் அமிலக்கட்டுப்பாடு மாத்திரைகள். (Acid Suppressants)
Omeprazole
Pantoprazole
Lansoprazole
போன்றவை.... விரைவில் குணமாக்கும்... பாதுகாப்பானவை!
புகை பிடிக்காதீர்!!!!
மேலும் தகவல்கள் அறிய:

http://digestive.niddk.nih.gov/ddiseases/pubs/hpylori/index.htm (http://digestive.niddk.nih.gov/ddiseases/pubs/hpylori/index.htm)

ஆதவா
14-06-2007, 02:20 AM
இளசு அண்ணாவுக்கு என் நன்றிகள்..

பல மருத்துவ விஷயங்களோடு அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.. விரிவாகவும் தெளிவாகவும் அல்சர் பற்றி அறிந்துகொண்டேன்...

கிட்டத்தட்ட சந்தேகம் தீர்ந்த நிலையில்..

இந்த புண்களினால் உடல் எங்கும் நாற்றம் இருக்கும் என்று சொன்னார்கள் அது உண்மையா? குறிப்பாக வாயில்..

இளசு
14-06-2007, 06:03 AM
உடல் நாற்றம் -அல்சர் : தொடர்பில்லை.

வாய் நாற்றம் - இதற்குப் பல காரணங்கள்..

நாள்பட்ட அல்சரால் இரைப்பை அழற்சி, செயல்குறைவால் இது சிலசமயம் நேரலாம்.

ஆதவா
14-06-2007, 06:18 AM
தகவலுக்கு மிகவும் நன்றி அண்ணா...
-------------------------
நண்பர்களே! சாப்பாட்டு வேளைகளை மறக்காமல் சாப்பிட்டுவிடுங்கள்.... :)

sinnavan
14-06-2007, 03:14 PM
மருத்துவர்கள்.. கொடுத்த தகவல்கள்.. நன்றாக உள்ளது. நன்றி..

வெற்றி
15-06-2007, 11:45 AM
நான் ஒரு மருந்து சொல்கிறேன்,,,கேட்கிறீர்களா???
சோற்று கற்றாலையின் உள்ளே இருக்கும் (ஜெல் போன்ற சோறு) சோற்றை எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் முழு குணம் தெரியும் (ஆங்கில மருத்துவம் இதை முழுமையாக 100 % குணப்படுத்தாது )

விகடன்
17-06-2007, 05:02 PM
வைத்தியர் இளசுவின் விளக்கத்துடன் கூடிய மருத்துவ ஆலோசனைக்கு பலகோடி நன்றிகள்.

ஜோய்ஸ்
18-06-2007, 06:55 AM
சக்தியின் விளக்க முறைகள் அருமையிலும் அருமை.
ஆதவரே தங்களுக்கு தற்ப்போது நிறைவுதானே?

பாராட்டுக்கள் சக்தி.

praveen
18-06-2007, 08:12 AM
நான் ஒரு மருந்து சொல்கிறேன்,,,கேட்கிறீர்களா???
சோற்று கற்றாலையின் உள்ளே இருக்கும் (ஜெல் போன்ற சோறு) சோற்றை எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர ஒரு வாரத்தில் முழு குணம் தெரியும் (ஆங்கில மருத்துவம் இதை முழுமையாக 100 % குணப்படுத்தாது )
நல்ல தகவல் தான் நண்பரே, இதே சோற்றுக்கற்றாழையை தினமும் காலை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் படித்திருக்கிறேன். சோற்றுக்கற்றாழை சாப்பிட மிகுந்த மன உறுதி வேண்டும் என்றும் அது சாப்பிட்ட பின் உமட்டி கொண்டே இருக்கும் என்றும் நண்பர் சொல்ல கேள்வி, நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா?

வெற்றி
18-06-2007, 11:51 AM
நல்ல தகவல் தான் நண்பரே, இதே சோற்றுக்கற்றாழையை தினமும் காலை சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும் என்றும் படித்திருக்கிறேன். சோற்றுக்கற்றாழை சாப்பிட மிகுந்த மன உறுதி வேண்டும் என்றும் அது சாப்பிட்ட பின் உமட்டி கொண்டே இருக்கும் என்றும் நண்பர் சொல்ல கேள்வி, நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா?

வாரம் ஒரு முறை கண்டிப்பாக சாப்பிடுகிறேன்...
உள்ளே இருக்கும் சோற்றை நன்றாக ( 7 முறை ) கழுவி விட்டு சாப்பிடலாம் ..ஒன்னும் (எந்த சுவையும் ) இருக்காது... வேண்டுமானல் அதனுடன் சர்க்கரை ,அல்லது தேன் கலந்து சாப்பிடலாம்
இல்லை எனில் மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து அடித்து குடித்து விடுங்கள் (ஆரம்பத்தில் நான் அப்படி தான் செய்தேன்)

lolluvathiyar
18-06-2007, 12:20 PM
அது சாப்பிட்ட பின் உமட்டி கொண்டே இருக்கும் என்றும் நண்பர் சொல்ல கேள்வி, நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்களா?

சோற்றூ கற்றாழை உமட்டாது, அதே சமயம் ருசியாகவும் இருக்காது.
மேல இருக்கற தோலின் கலக்காமல் இருந்தால் உள்ளிருக்கு சாரு கசக்காது.
கவனமா கழுவனும், சைடுல முள் இருக்கும்


மாடு எருமை கன்னு போட்டுவிட்டால், சோற்றூ கற்றாழையை குண்டு மாட்டை சுத்த படுத்துவோம்.