PDA

View Full Version : கேபிள் காரின் 7 நாள் வருமானம் 70 லட்சம்!



சூரியன்
12-06-2007, 05:14 AM
ஸ்ரீநகர், ஜூன் 12: அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் பாடாய்படுத்த, காஷ்மீர்வாசிகளுக்கு ஒரே கொண்டாட்டம். அங்கு சுற்றுலாவாசிகளால் வருமானம் அதிகரித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் வெப்பம் நிலவுவதால், அதில் இருந்த தப்பிக்க குளுகுளு பிரதேசங்களுக்கு மக்கள் படையெடுக்கின்றனர். காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மக்கள் குவிந்து உள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் கேபிள் கார் உள்ளது. உலகின் மிக உயரமான கேபிள் கார் திட்டம் என்ற பெருமை இதற்கு உண்டு. கடல் மட்டத்தில் இருந்து 13,400 அடி உயரத்தில் இந்த கேபிள் கார் இயக்கப்படுகிறது. இதன் மூலம் ஒரே வாரத்தில் ரூ.70 லட்சம் வருமானம் கிடைத்து உள்ளது.

குல்மார்க் & அபர்வாத் மலைப்பகுதிகளுக்கு இடையே 5 கி.மீ. தூரத்துக்கு இந்த கேபிள் கார் இயக்கப்படுகிறது. இப்பகுதிக்கு வருபவர்கள் வெகுவாக விரும்புவது இதைத்தான் என்கிறார் காஷ்மீர் சுற்றுலா இயக்குநர் பரூக் அகமது ஷா.

கடந்த ஆண்டு குல்மார்க் கேபிள் கார் மூலம் ரூ.6 கோடி வருமானம் கிடைத்தது. இந்த ஆண்டில் ரூ.10 கோடி வருமானம் கிடைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து இருக்கிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கேபிள் காரில் பயணம் செய்ய கட்டணம் ரூ.700. 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.350.

விரைவில் அபர்வாத் மலைப்பகுதியில் ஓட்டல் திறக்க காஷ்மீர் சுற்றுலா அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இது உலகின் மிக உயரமான ஓட்டல் என்ற பெருமையை பெறும். காரணம், இது கடல் மட்டத்தில் இருந்து 14,000 சதுர அடி உயரமுடையது.

நன்றி:தினமலர்

ஆதவா
12-06-2007, 05:20 AM
இந்த செய்தி எங்கிருந்து எடுத்தீர்கள் சூரியன்?? நன்றியைக் காணோமே??.. இந்த செய்தி செய்திச்சோலையில் வரவேண்டும்... நான் மாற்றிவிடுகிறேன். முடிந்தவரை மற்றவர் செய்திகளை வெட்டி ஒட்டுவதைத் தவிருங்கள் சூரியன்,..

நன்றி

சூரியன்
12-06-2007, 05:26 AM
இந்த செய்தியை எங்கே வைப்பதுஎன்று தெரியாமல் வைத்துவிடேன் மன்னித்துவிடுங்கள்