PDA

View Full Version : ஓமானில் ஓவியனுக்கு அடித்த தண்ணீர் புயல்-1ஓவியன்
12-06-2007, 03:32 AM
பன்னிரண்டு பேரைக் காவு கொண்டும் இருபதினாயிரத்திற்கு மேற்பட்டோரை அகதிகளாக்கியும், பல்லாயிரக் கணக்கான வாகனங்களை உருட்டிச் சென்றும், வீடுகள் பலவற்றை முட்டித் தள்ளியும், எண்ணிலடங்கா மரங்களை வேரோடு சாய்த்தும் அட்டகாசம் செய்த "Tropical Cyclone Gonu" என்ற வானிலைக் கோளாறு ஓமான் நாட்டிலேயும் இந்த ஓவியனின் மனதிலும் எண்ணற்ற வடுக்களையும் கலையா நினைவுகளையும் பதித்து விட்டுச் சென்று விட்டது.

இந்த சுறாவளியும் அதனுடனிணைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினாலும் ஒரு தனி மனிதனாக நான் தண்ணீருக்காகப் போட்ட தாளத்தையே இங்கே இந்த திரியாக எழுதவிளைகிறேன்.

அதற்கு முன்னர் நான் என்னைப் பற்றியும் ஓமானில் எனது சூழலைப் பற்றியும் கொஞ்சம் கூறினால் நன்றாக இருக்குமென நினைக்கின்றேன். பிழைப்பு நாடி மத்தியகிழக்கைத் தேடி வந்த நான் ஏதோ கடவுள் புண்ணியத்தால் படித்த படிப்பிற்கு ஏற்ப ஒரு கணிய அளவியலாளனாக (Quantity Surveyor) பணிபுரிந்து வருகிறேன். இங்கே இதே நிறுவனத்திலே என்னுடன் இன்னமும் ஐந்து கணிய அளவியலாளர்கள் (அவர்களும் இலங்கையைச் சார்ந்தவர்களே..) பணி புரிகின்றனர். அவர்களனைவரும் என் வயதை ஒத்தவர்களாகவும், ஏற்கனவே இலங்கையிலேயே அறிமுகமானவர்களாயும் இருப்பதனால் எம்மிடை நல்ல புரிந்துணர்வும் நட்பும் நிலவி வருகின்றது. நாங்கள் ஆறு பேரும் ஓமானில் அல்குவைர் என்ற இடத்திலே அமைந்துள்ள ஒரு வீட்டினை எமது தங்ககமாகப் பாவித்து வருகின்றோம். இந்த அல்குவைர் பகுதி மக்கள் வசிப்பிட்த்துக்கெனவே ஒதுக்கப்பட்ட அயலிலே மலைக் குன்றுகளைக் கொண்ட ஒரு மேட்டு நிலப் பகுதி.

கடந்த 5ம் திகதி காலை வழமை போல அலுவலகம் சென்ற நான் அங்கே கண்ணில் பட்ட அன்றைய நாளேட்டிலே ஓமான் தேசத்தைச் சூழவிருந்த புயல் அபாயத்தைப் பற்றிய எச்சரிக்கையைக் கூட பெரிதாக நினைக்கவில்லை. வழமை போல் அலுவலகத்திலே இயங்கிக் கொண்டிருக்கையில் அலுவலகத்தில் எங்களுடனிணைந்து தொழில் புரியும் ஓமான் தேசத்தவர்கள் தங்களுக்குக் கிடைத்த புயல் பற்றிய எச்சரிக்கைச் செய்திகளால் அலுவலகம் விட்டு நீங்கி வீடு திரும்பிய போதும் கூட நாங்கள் ஆறு பேரும் வழமை போல் கல்லுளி மங்கர்களாக அலுவலகத்திலியங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அரசாங்க வானொலிகள் மற்றும் தொலைக் காட்சிகள் தங்கள் எச்சரிக்கைகளைத் தீவிரமாக்கி இரண்டு நாள் அவசரகால விடுமுறையை அறிவித்து மக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்கின.
மூன்று நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருடகளைச் சேமித்தல், தாழ்வான பகுதி வாழ் மக்கள் அந்தப் பகுதிகளை விட்டு நீங்கி மேட்டு நிலங்களை நாடுதல் என்பன அவற்றில் சில.

இப்போது வரப் போகும் புயலின் விளைவு மெலிதாக எங்கள் மனதில் அச்சமூட்டத் தொடங்கியது, ஏனென்றால் என்னைப் பொறுத்த வகையில் பல் வேறு போர்ச்சூழல்களை எதிர்கொண்டிருந்தாலும் இவ்வாறான ஒரு இயற்கையின் கோபாவேசத் தாக்குதலை எதிர் கொள்ள போவதென்பது முதல் அனுபவம். வெளியே சாளரமூடு தெரிந்த வானம் வேறு கரு நிறம் கொண்டு பயமுறுத்தியது. வீட்டிலே மூன்று நாட்களைச் சமாளிப்பதற்கான உணவுப் பொருட்கள் வேறு இல்லை என்பது அடி வயிற்றில் புளியைக் கரைத்தது. எனவே வேக வேகமாக தமிழ் மன்றில் புயல் பற்றிய செய்திகளைப் பதித்துவிட்டு நானும் நண்பர்களுடனிணைந்து அலுவலகம் விட்டு வெளியேறினேன். அந்த நேரத்திலேயே வரப் போகும் இயற்கை அனர்த்தத்தை வரவேற்க ஆட்களின்றி வீதிகள் வெறிச்சோடிப் போயிருந்தன. அவசரம் அவசரமாக அருகில் தென்பட்ட ஒரு சூப்பர் மார்கெட்டிற்குச் சென்று தேவையான உணவுப் பொருட்களை வாங்கி வீடு திரும்பினோம்.

ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளிலும் எங்களுக்கு வேண்டிய குடி நீரை (மத்திய கிழக்கு நாடுகளில் குடி நீரை போத்தல்களில் வாங்கியே பாவிப்பது வழமை) அந்த பகுதிக்கு ஓமான் ஓசிசிஸ் நிறுவனத்தைச் சார்ந்த ஒரு விற்பனைப் பிரதிநிதி எங்கள் வீட்டு வாசலில் வைப்பது வழமை, அதனை எதிர் பார்த்து ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் வெறுமையான நீர்க் கொள்கலன்களையும்(ஒவ்வொன்றும் பதினெட்டு லீட்டர் நீரைக் கொள்ளும் திறன் மிக்கது) வீட்டு வாசலில் வைத்து விட்டே அலுவலகம் செல்வது எங்கள் வழமை, அந்த வெற்றுக் கொள்கலங்கள் ஆறையும் எடுக்கும் அந்த விற்பனைப் பிரதிநிதி புதிதாக ஆறு நீர் நிறைந்த கொள்கலன்களை வைத்து விட்டுச் செல்வார். அவ்வாறே புதிய நீர் நிறைந்த கொள்கன்களை எதிர்பார்த்து வீடு திரும்பிய எங்களை வெறுமையாக நீரின்றிக் கிடந்த கொள்கன்கள் வரவேற்று எங்கள் நம்பிக்கைகளைத் தவிடுப் பொடியாக்கின.

இப்போது எப்படியாவது குடி நீரை வாங்கிச் சேமிக்க வேண்டிய நெருக்கடி நிலை, வீட்டிலேயோ மருந்துக்குக் கூட குடி தண்ணீர் இல்லையென்ற நிலை. ஆதலால் நாங்கள் ஆறுபேரும் இரண்டு இரண்டு பேர் கொண்ட குழுக்களாகி குடி தண்ணீரை எங்கேயாவாது வாங்கி வருவதென்று கங்கணம் கட்டிப் புறப்பட்டோம். நானும் சிறியும் (ஆறு பேரில் ஒருவன்) அல்குவாரின் சந்தைப் பகுதியை நோக்கித் தண்ணீர் வேட்டைக்காகச் சென்றோம். நாம் சென்ற கடைகள், சூப்பர் மார்கெட்டுகள் எங்கேயும் தண்ணீர் போத்தல்கள் முடிவடைந்த நிலை. எங்களால் ஒரு போத்தலைக் கூட வாங்க முடியவில்லையென்ற போது அழுகை அழுகையாக வந்தது. ஈழத்தில் வீட்டு முற்றத்தில் சமூத்திரம் போன்று நீர் நிறைந்த கிணற்றினை வைத்துக் கொண்டு ராஜா மாதிரி இருந்த காலங்கள் மனதிலே நிழலாடத் தவறவில்லை.அத்துடன் தண்ணீர் தேடிச் சென்ற மற்றைய நண்பர்களும் தங்களுக்கும் தண்ணீர் கிட்டவில்லையென்ற செய்தியை கையடக்கத் தொலை பேசியூடு அறிவிக்கையில் இந்த இயற்கை அனர்த்தத்தை எப்படி எதிர்கொள்வதென்ற கேள்வி என் மனதிலே பூதாகரமானது.

வேறு வழியின்றி வீடு திரும்புவோமென்று எண்ணுகையில் கடவுள் தன் கருணைக் கண்ணை மெல்லெனத் திறந்தார். ஆம் நாம் நின்ற இடத்திற்கு அருகே இருந்த ஒரு கடைக்கு பெப்சி நிறுவனத்தைச் சார்ந்த ஒரு பார ஊர்தி (லொறி) வந்து நின்றது. அந்த வண்டி நிறைய ஒன்றரை லீட்டர் கொள்ளவு உடைய அகுவாஃபினா (Aquafina) தண்ணீர் போத்தல்களடங்கிய பெட்டிகள். ஓடிச்சென்று அந்த போத்தல்களை வாங்க எத்தனிக்கையில் கடையில் திடீரெனக் கூடியது பெருங்கும்பல் எல்லோரது கண்களும் அந்த பெட்டிகளையே ஆவலுடன் பார்த்தன. ஒருவாறாக நீண்ட வரிசையில் நின்று பத்து பெட்டிகள் அகுவாஃபினா தண்ணீர்ப் போத்தல்களை (மொத்தமாக நூற்றி எண்பது லீட்டர் கொள்ளவு) வாங்கிக் கொண்டு இனிப் வரப் போகும் புயலை இலகுவாக எதிர்கொள்ளலாமென்ற நம்பிக்கையுடன் வீடு திரும்பினோம்.

ஆனால் அப்போது விதி எங்களைப் பார்த்து நகைத்துக் கொண்டிருந்தது எங்களுக்கே தெரியவில்லை தெரிந்திருந்தால் நான் இந்த பதிவை அடுத்த பாகமாக நீட்ட வேண்டிய அவசியமும் வந்திருக்காது.


இன்னமும் இந்த தண்ணீர்ப் புயல் அடிக்குமென வானிலை நிலையம் எச்சரிக்கிறது..

விகடன்
12-06-2007, 03:44 AM
தண்ணீர் இல்லாமலிருப்பது போன்ற ஒரு வறுமை உலகில் காணமுடியாது. இலங்கையைச் சேர்ந்த ஐந்து பேர்களுடனிருப்பதாக கூறினீர்கள். ஆதலால் ஓரளவிற்கு மன ஆறுதலாக இருந்திருக்கும்.

ஓமானில் பிடிக்கப்பட்ட படங்களிருப்பின் அவற்றையும் பதியலாமே ஓவியன்?

உங்களுடைய தொடர் அனுபவங்களை இன்னும் எதிர்பாக்கிறோம்.

பி.கு:
ஓவியாக்கா உங்களை காணவில்லையே என்று அவலப் பட்டவர்களில் ஒருவர். இன்று சந்தோஷமாக இருப்பார் என்றெண்ணுகிறேன்.

ஓவியன்
12-06-2007, 03:47 AM
நன்றி ஜாவா!, என் அனுபவங்களைத் தொடர்ந்து பதிப்பேன் அத்துடன் நான் நேற்றும் மன்றம் வந்தேன், ஓவியா அக்காவிற்கும் செய்தி அனுப்பினேன்.

மீண்டும் நன்றிகள் ஜாவா.

விகடன்
12-06-2007, 03:58 AM
நான் நேற்றும் மன்றம் வந்தேன், ஓவியா அக்காவிற்கும் செய்தி அனுப்பினேன்.
நேற்று வந்தீரா?

அலுவலகத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக சீனியருடன் சண்டை. அதுமட்டுமின்றி எமிரேட்ஸ் வீதியும் கடும் வாகன நேரிசல். ஆகையால் மன்றம் வர போதிய அவகாசம் கிடைக்கவில்லை. வந்த 20-25 நிமிடங்களிலும் தங்களது ஆக்கங்கள் ஒன்றையும் பார்க்கவில்லை.

ஓவியன்
12-06-2007, 04:05 AM
பரவாயில்லை ஜாவா!

நேற்றிலிருந்து ஓமான் வழமை நிலைக்குத் திரும்பத் தொடங்கிவிட்டது.

எமெரெட்ஸ் வீதியிலா, அப்ப நீங்கள் வீடு திரும்பிச் செல்ல நீண்ட நேரம் எடுத்திருக்குமே!. இன்று எனக்கும் கொஞ்சம் வேலைகள் அதிகமாக இருக்கும் போலுள்ளது இருந்தாலும் அவ்வப் போது மன்றம் வருவேன்.

சிவா.ஜி
12-06-2007, 04:15 AM
ஒரு போராட்டத்துக்குப்பிறகு அதனை விவரிப்பதென்பது எல்லோராலும் முடியக்கூடிய விடயமில்லை.தண்ணீர் கஷ்டம் உண்மையிலேயே தாங்க முடியாததுதான். கடவுள் அருளால் கஷ்டங்கள் நீங்கி நலமாய் இருப்பதை எண்னி ஆண்டவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். நானும் அந்த புகைப்படங்களை பார்த்தேன். எத்தனை கார்கள் எத்தனை வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிக்கிடப்பதை பார்க்க நேர்ந்தது. இயற்கைக்கு முன் நாம் எம்மாத்திரம். அதிக அளவில் உயிர்பலி வாங்காமல் இந்த மட்டுக்குமாவது விட்டதே அதை நினைத்து ஆறுதல் அடைய வேண்டியதுதான். இப்போது சகஜநிலை திரும்பிவிட்டதா ஓவியன்?

namsec
12-06-2007, 04:25 AM
என்ன ஆயிற்று தொடருங்கள் நண்பரே

ஓவியன்
12-06-2007, 04:25 AM
நன்றி சிவாஜி!

சம்பவங்களை எழுதி வைக்க வேண்டுமென்று நான் நம்ம ஆதவனைப் பார்த்து தான் அறிந்து கொண்டேன் அதன் விளைவாக இது என் முதல் முயற்சி. தொடர்ந்து எழுதுவேன் உங்கள் எல்லோருடைய பூரண ஆதரவுடன்......

ஓவியன்
12-06-2007, 06:03 AM
என்ன ஆயிற்று தொடருங்கள் நண்பரே

இப்போது தானே ஆரம்பித்துள்ளேன் நிச்சயமாக தொடர்வேன் நண்பரே.

விகடன்
12-06-2007, 06:06 AM
அப்படியானால் இன்றுமுதல் தமிழ்மன்றல் ஓவியனின் நாள்க்குறிப்பேடாகவும் இயங்கப் போகிறது என்று சொல்லுங்கள்.

ஆதவா
12-06-2007, 06:11 AM
ஓவியன்.. நல்ல அனுபவம்.. அதைவிட தாங்கள் மீண்டும் மன்றம் வந்தது பெரும் மகிழ்ச்சி.. ஓமானில் புயல் என்றூ படிக்கும்போதெல்லாம் அடடா நம் நண்பர் ஓவியனுக்கு என்னாச்சோ என்று மனம் நினைக்கும். நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை.

அனுபவக்கட்டுரை நல்ல சுவாரசியம்.. சூப்பரா எழுதறீங்க. அடுத்த பாகத்திற்கு எதிர்நோக்கி இருக்கிறேன்..

இந்த நேரத்தில படார்னு ஒரு போன் போட்டு அட்ரஸ் வாங்கி டிக்கெட் எடுத்து அனுப்புனீங்கன்னா நானும் உங்ககூட வந்து தோளோடு தோளா நின்றிருப்பேனே!!! :D

ஓவியன்
12-06-2007, 06:16 AM
ஓவியன்.. நல்ல அனுபவம்.. அதைவிட தாங்கள் மீண்டும் மன்றம் வந்தது பெரும் மகிழ்ச்சி.. ஓமானில் புயல் என்றூ படிக்கும்போதெல்லாம் அடடா நம் நண்பர் ஓவியனுக்கு என்னாச்சோ என்று மனம் நினைக்கும். நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை.

அனுபவக்கட்டுரை நல்ல சுவாரசியம்.. சூப்பரா எழுதறீங்க. அடுத்த பாகத்திற்கு எதிர்நோக்கி இருக்கிறேன்..

இந்த நேரத்தில படார்னு ஒரு போன் போட்டு அட்ரஸ் வாங்கி டிக்கெட் எடுத்து அனுப்புனீங்கன்னா நானும் உங்ககூட வந்து தோளோடு தோளா நின்றிருப்பேனே!!! :D

நன்றி ஆதவா!

ஆண்டவன் கருணையால் நான் நலமே!


உங்களை அழைக்க எண்ணித்தான் இருந்தேன் ஆனால் என்ன செய்வது எனக்கே தண்ணீர் போதவில்லை பிறகு உங்களுக்கு ஏன் சிரமம் என்று விட்டு விட்டேன்.

ஓவியன்
12-06-2007, 09:47 AM
அப்படியானால் இன்றுமுதல் தமிழ்மன்றல் ஓவியனின் நாள்க்குறிப்பேடாகவும் இயங்கப் போகிறது என்று சொல்லுங்கள்.

இதென்ன வம்பா இருக்கு, ஒவ்வொரு நாட்களும் எழுத முடியாதப்பா!
இப்படி எப்போவது புயல் அடிக்கும் போது அதைப் பற்றி எழுதலாமென்று ஒரு திட்டம்.......அவ்வளவுதான்.

ஷீ-நிசி
12-06-2007, 11:22 AM
செய்திகளில் ஓமானில் புயல் என்று சொல்லும்போதெல்லா ம் எனக்கும் உம் ஞாபகம்தான் வந்தது நண்பரே! கடவுளின் அருளால் உங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.. தண்ணீர் இல்லாத கொடுமை மிக கொடியது.. என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!

விகடன்
12-06-2007, 11:27 AM
இதென்ன வம்பா இருக்கு, ஒவ்வொரு நாட்களும் எழுத முடியாதப்பா!
இப்படி எப்போவது புயல் அடிக்கும் போது அதைப் பற்றி எழுதலாமென்று ஒரு திட்டம்.......அவ்வளவுதான்.

இதற்காக பொழுதெல்லாம் புயலடிக்க வேண்டிக்கலாமா என்ன?

ஓவியன்
12-06-2007, 11:29 AM
செய்திகளில் ஓமானில் புயல் என்று சொல்லும்போதெல்லா ம் எனக்கும் உம் ஞாபகம்தான் வந்தது நண்பரே! கடவுளின் அருளால் உங்களுக்கு தண்ணீர் கிடைத்தது.. தண்ணீர் இல்லாத கொடுமை மிக கொடியது.. என்றும் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்!

நன்றிகள் ஷீ!

உங்கள் பிரார்த்தனைகள் என்றும் எனக்கு துணையாயிருக்கும்.

அமரன்
12-06-2007, 11:30 AM
ஓவியன் எத்தனையோ போர் அனர்த்தங்களை கண்டு விட்டாலும் இது நமக்குப் புதியது. பதிவு சிறப்பாக இருக்கின்றது. சிறப்பான எழுத்துதிறமை உங்களிடம் இருக்கின்றது. கதைகள் பக்கமும் பார்வையைத் திருப்பலாமே நண்பரே.

ஓவியன்.. நல்ல அனுபவம்.. அதைவிட தாங்கள் மீண்டும் மன்றம் வந்தது பெரும் மகிழ்ச்சி.. ஓமானில் புயல் என்றூ படிக்கும்போதெல்லாம் அடடா நம் நண்பர் ஓவியனுக்கு என்னாச்சோ என்று மனம் நினைக்கும். நல்லவேளையாக எதுவும் நடக்கவில்லை.

அனுபவக்கட்டுரை நல்ல சுவாரசியம்.. சூப்பரா எழுதறீங்க. அடுத்த பாகத்திற்கு எதிர்நோக்கி இருக்கிறேன்..

இந்த நேரத்தில படார்னு ஒரு போன் போட்டு அட்ரஸ் வாங்கி டிக்கெட் எடுத்து அனுப்புனீங்கன்னா நானும் உங்ககூட வந்து தோளோடு தோளா நின்றிருப்பேனே!!! :D
ஐயோ வேண்டாம் ராஜா..ஏற்கனவே லண்டனில் ஒரு நாள் என்று பூச்சுத்தி விட்டீர்கள். இப்போ ஓமானின் ஒரு நாளா?

ஓவியன்
12-06-2007, 11:37 AM
நன்றிகள் அமர்!

நிறைய எழுதவேண்டும் என்ற ஆவல் எனக்குமுண்டு, இப்போது தானே ஆரம்பித்துள்ளேன். எதிர்காலங்களில் கதைகளிலும் கவனம் செலுத்தலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

ஓவியன்
16-06-2007, 09:08 PM
ஐயோ வேண்டாம் ராஜா..ஏற்கனவே லண்டனில் ஒரு நாள் என்று பூச்சுத்தி விட்டீர்கள். இப்போ ஓமானின் ஒரு நாளா?

அப்ப லண்டனில ஒரு நாள் ஒரே :icon_08: சுற்றலா????

அன்புரசிகன்
17-06-2007, 10:41 AM
ஆதவரையும் சேர்த்திருந்தீர்கள் என்றால் 200 லீட்டர் தண்ணீரும் கிடைத்திருக்கும். ஓமானில்-ஓவியருடன் ஒருநாள் என்ற கதையும் கிடைத்திருக்கும...
தொடருங்கள் ஓவியரே... உங்கள் அனுபவம் வாசிக்க சுவையாக இருந்தாலும் அது உங்களை வருத்தியிருக்கிறது என்பது கொடுமை தான்.

மனோஜ்
17-06-2007, 10:59 AM
வருத்தங்கள் இந்த பதின் தாவமதத்திற்கு
உங்கள் மீள் வருகை எனக்கு மகிழ்ச்சி அளித்தது
ஆனால் தொடர்ந்து உங்கள் வருகையால் தங்களை விசாரிக்க மறந்ததற்கு மன்னிக்கவும்
தொடர்ந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

அமரன்
17-06-2007, 01:26 PM
அப்ப லண்டனில ஒரு நாள் ஒரே :icon_08: சுற்றலா????
ஒன்றில்லைங்க. மாலை:musik010: :musik010:

ஓவியன்
17-06-2007, 08:25 PM
வருத்தங்கள் இந்த பதின் தாவமதத்திற்கு
உங்கள் மீள் வருகை எனக்கு மகிழ்ச்சி அளித்தது
ஆனால் தொடர்ந்து உங்கள் வருகையால் தங்களை விசாரிக்க மறந்ததற்கு மன்னிக்கவும்
தொடர்ந்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

பரவாயில்லை மனோஜ்!

உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்!

balasubramanian
18-06-2007, 10:59 AM
ஓவியன் அவர்களே

மிக சுவரசயமான பதிவுக்கு மிக்க நன்றி. உங்கள் தொடர்ச்சி பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

இப்படிக்கு
பாலா.ரா

அமரன்
19-06-2007, 06:21 PM
ஆமால்ல அடுத்த பாகம் இன்னும் வரவே இல்லை. எங்கே ஓவியன்

ஓவியன்
19-06-2007, 06:21 PM
ஓவியன் அவர்களே

மிக சுவரசயமான பதிவுக்கு மிக்க நன்றி. உங்கள் தொடர்ச்சி பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

இப்படிக்கு
பாலா.ரா

நன்றிகள் பாலா!

வெகு விரைவில் தொடர்ச்சியைப் பதிப்பேன்!, உங்கள் ஆவலுக்கும் அன்பிற்கும் மீண்டும் நன்றிகள்.