PDA

View Full Version : தமிழ் Spell check..............Nanban
18-05-2003, 04:56 AM
தமிழ் Spell check தமிழ் software உண்டா? கிடைக்குமிடம் தெரிந்தவர்கள் கூறலாமே?

aren
24-05-2003, 02:46 PM
நமது இணையத்தின் காப்பாளர் இளசு அவர்கள்.

rambal
24-05-2003, 03:34 PM
இந்த குசும்புதானே வேண்டாங்கிறது..
ஏதோ உபயோகமா சொல்லி இருப்பீர்கள் என்று வந்து பார்த்தால்..
ம்ஹ்ம்..
ஒன்னும் சொல்வதற்கில்லை..

முத்து
24-05-2003, 03:47 PM
நமது இணையத்தின் காப்பாளர் இளசு அவர்கள்.

ஆரென்.. ஏற்கனவே சிலர் அவரை நக்கீரர் என்று கூறுவதாகக் கேள்விப்பட்டேன்... இப்போது புதுப்பெயரா ??

prabha_friend
24-05-2003, 03:58 PM
நம்ம இளசுஅண்ணே இன்னிக்கு நல்லா மாட்டிக்கிட்டாரு போல தெரியுது .

இளசு
24-05-2003, 04:29 PM
என் நண்பர் ஆரெனின் "டைமிங்" கமெண்ட் அருமை....
மிக ரசித்தேன்.... வாய்விட்டு சிரித்தேன்...
நன்றி ஆரென்...

Nanban
24-05-2003, 04:48 PM
பட்டனைத் தட்டிய பொழுதெல்லாம், இளசு திரையில் தோன்றி, பொருளும், இலக்கணமும், வார்த்தை தோன்றிய விதமும், வயதும் சொல்வாரா, இளசு.?

(சீரியஸா கேட்கிறேன் - கணிணியில் இணைத்துக் கொண்டு, எழுதியவற்றை திருத்த வழியே இல்லையா? )

lavanya
25-05-2003, 11:55 PM
பதமி சொல்லாளர் என்ற செயலியில் நீங்கள் கேட்ட வசதிகளுடன் சொற்களஞ்சியமும்
(thesarus) இணைக்கப்பட்டுள்ளதாய் அறிந்தேன்

இளசு
26-05-2003, 06:44 AM
நண்பன் "சீரியஸா" கேட்டதுக்கு
உருப்படியான பதில் பதிந்து
காப்பாத்தின தோழி லாவண்யா அவர்களுக்கு
நன்றி.....பாராட்டு....

Nanban
26-05-2003, 10:33 AM
பதமி சொல்லாளர் என்ற செயலியில் நீங்கள் கேட்ட வசதிகளுடன் சொற்களஞ்சியமும்
(thesarus) இணைக்கப்பட்டுள்ளதாய் அறிந்தேன்

Badami fontsல் தான் முதன் முதலில் டைப்பிங் ஆரம்பித்தேன். ஆனால், அவர்களுடைய key board layout சற்று சிரமமாக இருந்ததால் தான் முரசு-விற்கு மாறினேன். அதுசரி, பதமி எங்கிருந்து இறக்குமதி செய்வது? அவர்களூக்கென்று தனியே web site உண்டா? free or chargeable?

முத்து
27-05-2003, 04:46 PM
நன்றி லாவண்யா... அதன் முகவரி சொன்னால் என் போன்றோர்க்கு உதவியாக இருக்கும்...

சகுனி
15-06-2003, 11:30 AM
சுஜாதாவிடம் கேட்டால் software தரப்போகிறார். அவருடைய e-mail விலாசம் வேண்டுமானால் pmல் தருகிறேன். அவர் இதற்கு விடையளிப்பார்.

மன்மதன்
11-04-2004, 09:26 AM
தமிழ் Spell check தமிழ் software உண்டா? கிடைக்குமிடம் தெரிந்தவர்கள் கூறலாமே?

எங்கே கிடைக்கும்.. கிடைத்தால் உபயோகமாக இருக்குமே..

சேரன்கயல்
11-04-2004, 11:21 AM
ஆமாம்பா ஆமாம்...சீக்கிரம் யார்னா பதில் சொல்லுங்க...

poo
11-04-2004, 11:54 AM
ஆமாம்பா ஆமாம்...சீக்கிரம் யார்னா பதில் சொல்லுங்க...

சேரன் அப்புறம் சங்கேத பாஷையெல்லாம் பாழாயிடுங்களே..கொஞ்சம் யோசிச்சு செய்யுங்க!!

முத்து
11-04-2004, 01:54 PM
தமிழ் Spell check தமிழ் software உண்டா? கிடைக்குமிடம் தெரிந்தவர்கள் கூறலாமே?

தமிழ் சொல்திருத்திக்கு இங்கே பார்க்கவும் ...

பரஞ்சோதி
11-04-2004, 06:29 PM
முத்து அவர்களுக்கு நன்றி!.

Nanban
11-04-2004, 06:49 PM
நன்றி முத்து.....

baranee
12-04-2004, 12:10 AM
"குறள் தமிழ்ச்செயலி" எனும் மென் பொருளை உபயோகப் படுத்துங்கள். சொற்பிழை திருத்தும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த மென்பொருள். இந்த மென்பொருளுடன் ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழ் சொற்கள் கொண்ட அகராதி இணைக்கப்பட்டுள்ளது

சுட்டி

http://www.kstarsoft.com/download_t.htm

இது ஒரு இலவச மென்பொருள்.முத்து அவர்கள் தந்த சுட்டியில் உள்ளதை உபயோகப்படுத்த நீங்கள் லினக்ஸ் உபயோகித்தால் மட்டுமே பயன்படுத்த முடியும் என நினைக்கிறேன்.

முத்து
12-04-2004, 01:01 AM
பரணி நீங்கள் அறிமுகப் படுத்திய மென்பொருள் மிக அருமை ...
கவிதை செயலி - என்ற இதன் வேர்ட் புராஸஸரில் சொற்பிழை திருத்தி
மிக அருமையாக வேலை செய்கிறது ...
நன்றிகள் பல..
ஒரு நல்ல மென்பொருளை அறிமுகம் செய்தமைக்கு.

மன்மதன்
12-04-2004, 04:28 AM
அருமையான மென்பொருள்.

சில வார்த்தைகளை தவறு என்று சொல்கிறதே . அதை நாம அகராதியில் சேர்த்துக்கொள்ளலாமா??

பாரதி
12-04-2004, 11:50 PM
பாராட்டுக்கள் பரணீ.

kavitha
20-04-2004, 09:21 AM
அனைவருக்கும் நன்றி!

Nanban
23-04-2004, 06:48 PM
பரணீ, மிக்க நன்றி...

samuthira
18-05-2004, 03:51 AM
பரணீக்கு நன்றி, அழகிய மென்பொருளை அறீமுகம் செய்தமைக்கு

சுகந்தப்ரீதன்
14-05-2008, 11:36 AM
நல்லதொரு மென்பொருளை அறிய தந்த பரணி அண்ணாவுக்கும்.. அதற்க்கு வழிவகுத்த திரிநாயகன் நண்பர் அவர்களுக்கும் எனது நன்றி..!! கண்டிப்பாக மன்ற மக்களுக்கு உதவும்.. முக்கியமா லொள்ளுவாத்தியாருக்கு...????!!!!

அகத்தியன்
04-06-2008, 10:20 AM
தக்கவலுக்கு நன்றி நண்பர்களே

மயூ
10-07-2008, 04:54 PM
உருப்படியான தமிழ் மொழிபெயர்பானோ, சொல்திருத்தியோ இப்போது சந்தையில் இல்லை. இருப்பவை அரைகுறையாக செயற்படக் கூடியவை. இவற்றை நம்பி நீங்கள் எழுதுவதை விட சும்மா எழுதிவிட்டுப் போய்விடலாம்.