PDA

View Full Version : கனவுக்காதலி 1



rocky
11-06-2007, 05:12 PM
சாலையில் செல்லும்
பெண்களையெல்லாம்
சலிக்காமல் பார்த்திருந்தேன்,

நான் கனவில்
கண்டவள் நேரில்வருவாளோ
என்று,

இதுவரை அவளாயும்
வரவில்லை, என்
கண்ணிலும் படவில்லை.

என்னைக் காக்கவைப்பதில்
அவள் கொள்ளும்
இன்பத்தை நானறிவேன்.

அதுபோல் காத்திருப்பதில்
நான் படும் துன்பத்தை
அவள் அறிவாளோ?

நான் காத்திருக்கும்
போதெல்லாம் என்னுள்
கவிதைப்பூ பூத்திருக்கும்

அவள் என்னைக் காணவரும்போது
என்னோடு ஒரு பூக்காடும் (கவிதை)
காத்திருக்கும்.

இனியவள்
11-06-2007, 06:33 PM
காதலில் காத்திருப்பதில் கூட ஒரு சுகம் தான் நண்பரே
வாழ்த்துக்கள் கவி வரிகள் அருமை

அமரன்
11-06-2007, 06:47 PM
ஆரம்பத்தில் நீங்கள் பதிந்திட்ட கவிதைகளை விட இப்போது தரமும் சுவையும் அதிகரித்துச் செல்கின்றது நண்பரே. தொடருங்கள்.

ஆதவா
13-06-2007, 08:07 AM
ராக்கி. உனது கவிதை புலமை. கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறது. உனது ஆர்வமே அதற்கு காரணம்.

கனவில் கண்டவள், அதாவது நாம் உருவகப் படுத்திய உள்ளத்தவள்.
வரும் வரை கவிதை எழுதிக் கொண்டே இரு.. தொகுப்பாகட்டும்.. விடு... காதலி என்பவள் இப்படியாவது உனது அறிவை வளர்த்துவாளே!

இறுதி இரு பாராக்களான

நான் காத்திருக்கும்
போதெல்லாம் என்னுள்
கவிதைப்பூ பூத்திருக்கும்

அவள் என்னைக் காணவரும்போது
என்னோடு ஒரு பூக்காடும் (கவிதை)
காத்திருக்கும்.


இது அருமையான பாகம்.. கொஞ்சம் தட்டுத் தடுமாறி கவிதை எழுதுபவன் போலத் தெரிந்தாலும் இறுதியில் அழகாக முடிப்பதுதான் வளரும் கவிஞனுக்கு அடையாளம்.. வாழ்த்துக்கள்.

விகடன்
13-06-2007, 08:12 AM
காதலி முகந் தெரியாமல் காத்திருக்கும் விநோதமான காதலன்.

காத்திருந்து காத்திருந்து காரிகையை காணுகிறீர்களோ தெரியாது, ஆனால் காலதேவனை கட்டாயம் காண்பீர்கள்.

கவிதை நன்றாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.

சிவா.ஜி
13-06-2007, 08:13 AM
என்னைக் காக்கவைப்பதில்
அவள் கொள்ளும்
இன்பத்தை நானறிவேன்.

அதுபோல் காத்திருப்பதில்
நான் படும் துன்பத்தை
அவள் அறிவாளோ?
நல்ல வரிகள் ராக்கி. அவள் இன்பம் நீங்கள் அறியும்போது உங்கள் துன்பத்தையும் அவள் அறிவாள் விரைவில். உங்கள் கவிதையில் மேலும் மெருகேறுகிறது பாராட்டுக்கள்.

ஓவியன்
13-06-2007, 08:13 AM
கம்பன் வீட்டுக் கைத்தறியும் கவி பாடும் என்பார்கள்!

நீங்களோ ஆதவாவின் நண்பர் - சொல்லவா வேண்டும்.

நன்றாக இருக்கிறது பாராட்டுக்கள் நண்பரே!

சுட்டிபையன்
13-06-2007, 02:43 PM
ம்ம்ம் அழகிய கவிதை ராக்கி. கவலை பாடாதீர்கள் கனவில் வந்த காதலி நேரில் வருவார். வந்த பின்னர் மறக்காம சுட்டிக்கு றீட் கொடுக்கணும்

rocky
13-06-2007, 04:24 PM
அனைவருக்கும் நன்றி. உங்களின் பின்ணூட்டத்தைக் கானும்போதுதான் எனக்கு மீண்டும் கவிதை எழுதும் ஆர்வம் அதிகரிக்கிறது. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் நன்றி.

அக்னி
13-06-2007, 04:31 PM
கடைசி இரு பந்திகளும் கவர்கின்றன...
அவள் வரும்வரை காத்திருக்கும் நிமிஷங்களில் உங்களுக்குள் உருவாகும் கவிதைப்பூக்கள்...
அவள் வரும் போது காடாகிவிடும் என்று கூறுவதிலிருந்து,
அவள் வர எடுக்கும் காலத்தின் நீட்சி, அல்லது அவள் நினைவினால் கவிதைகள் பூக்கும் வேகத்தின் அதிகரிப்பு இரண்டையும் குறித்தாலும் ரசிக்க வைக்கும் வரிகள்...

பாராட்டுக்கள்...