PDA

View Full Version : இது ஒரு காதல் கதை



பிச்சி
11-06-2007, 03:27 PM
இது என் காதல் கதை.
தளிர்கள் மேல்
மெல்ல ஊர்ந்து
நாணிய ஒரு பனித்துளியின்
சுபாவத்தை
உதிரத்தாலேயே மூட்டுனாய்

நான் சலித்த சிரிப்புகளை
இதயங்கள் போட்டு
துலக்கிவிட்டு
சிந்திய பார்வையை
கண்துடிப்பில் பொறுத்திவிட்டாய்

அகப்பட்ட இடத்திலெல்லாம்
காதலை வளர்த்தி
என் கூந்தலில் தொங்கி
மெலிந்துபோகும் பூக்களை
புன்னகைக்க வைத்தாய்

கண்களுக்குள் மண்டியிட்டு
கருவிழியோடு சண்டையிட்டு
நாள் முழுவதும் எனக்குள்
கனவுகளைக்
கெடுத்துவிட்டாய்

மெத்த பார்வையால்
கபடமாடி, ஒரு இதழின்
நெஞ்சைப் பிடுங்கினாய்
ஏனென்றுகூட கேள்வி எழுப்பாமல்
உன்னுள் நுழைந்து
மலர்கிறேன்
ஒரு பூவின் பிரசவம் போல.

ஷீ-நிசி
11-06-2007, 03:34 PM
நல்ல கவிதை பிச்சி! வாழ்த்துக்கள்! தொடர்ந்து வாருங்கள்!

இணைய நண்பன்
11-06-2007, 03:37 PM
சுவையான கவிதை.வாழ்த்துக்கள்

இனியவள்
11-06-2007, 03:38 PM
அருமையான கவி வரிகள் பிச்சி மிகவும் ரசித்தேன் வாழ்த்துக்கள்

பிச்சி
11-06-2007, 03:40 PM
நன்றி ஷீ அண்ணா, இக்ராம் அண்ணா, இனியவள் அக்கா.

சக்தி
11-06-2007, 03:51 PM
நல்ல கவிதை பிச்சி வாழ்த்துக்கள்.

மெத்த பார்வையால்
கபடமாடி, ஒரு இதழின்
நெஞ்சைப் பிடுங்கினாய்
ஏனென்றுகூட கேள்வி எழுப்பாமல்
உன்னுள் நுழைந்து
மலர்கிறேன்
ஒரு பூவின் பிரசவம் போல.

அழகான வரிகள். ஏன் என்று, எப்போதென்று தெரியாமல் நுழைவது தான் காதல்

சிவா.ஜி
12-06-2007, 04:41 AM
கவிதையான காதல்.அழகான வார்த்தைகள்.உணர்வுகளின் அருமையான வெளிப்பாடு. பாராட்டுக்கள் பிச்சி.

பிச்சி
15-06-2007, 05:27 AM
சக்தி அண்ணாக்கும் சிவஜி அண்ணாக்கும் நன்றிகள். அப்பறம் என்னோட கவிதை படிச்சு பதில் சொல்லுங்க நன்றி