PDA

View Full Version : கிரகம் போஃர்டு விலகல்



aren
11-06-2007, 01:15 PM
இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் குழுவின் கோச்சாக அறிவிக்கப்பட்ட கிரகம் போஃர்டு தனக்கு அந்த பதவி வேண்டாம் என்றும் தான் கெண்ட் கவுண்டி குழுவில் கோச்சாக தொடரப்போவதாகவும் இன்று அறிவித்தார்.

இது ஒரு பெரிய பிரச்சனையாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஆகியிருக்கிறது. டேவ் வாட்மோரும் வேண்டாம் என்று வாரியம் முன்பே சொல்லிவிட்டது. இங்கிலாந்தின் ஜான் எம்புரியும் தேர்வு செய்யப்படவில்லை. இனிமேல் இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்யும் என்று தெரியவில்லை.

இந்தியாவில் இருக்கும் ஒருவரையே கோச்சாக நியமிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

சந்தீப் பட்டீல், மொகீந்தர் அமர்நாத், ராபின் சிங், ரோஜர் பின்னி, சுனில் கவாஸ்கர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று நினைக்கிறேன். என்னுடைய தேர்வு சந்தீப் பட்டீலாகவே இருக்கும்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
11-06-2007, 01:17 PM
சந்தீப்பட்டீல் சிறந்த தேர்வு. 2002/2003 ஆம் ஆண்டில் கென்யாவை சிறப்பாக பயிற்றுவித்தவர். ஆனால் உள்நாட்டவரை நியமிப்பார்களா என்பது சந்தேகமே..வெளிநாட்டவர்கள் பின் நிற்பதிற்கு என்ன காரணமாக இருக்கலாம்.

சிவா.ஜி
11-06-2007, 01:23 PM
வெளிநாட்டவர்களென்றால் சீனியர் ஜூனியர் பாகுபாடு இருக்காது, உள்ளூர் அரசியல் தெரியாது,வடக்கு தெற்கு என்ற பேதம் இருக்காது..இப்படி சில காரணங்களால்தான்.

aren
11-06-2007, 01:29 PM
வெளிநாட்டவர்கள் பின் நிற்பதிற்கு என்ன காரணமாக இருக்கலாம்.

நம் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அதிகமாக பணம் புழங்குவதால் இருக்கலாம்.

ராஜா
11-06-2007, 01:31 PM
ஏதோ தவறான புரிந்துணர்வு இருந்திருக்கிறது.. இந்த விலகலுக்கான காரணம் அதுவே என்று படுகிறது..

அமரன்
11-06-2007, 01:31 PM
நம் இந்திய கிரிக்கெட் வாரியத்தில் அதிகமாக பணம் புழங்குவதால் இருக்கலாம்.
அவ்ர்களுக்கு சுதந்திரம் இல்லாமையும் காரணமாக இருக்கலாம் இல்லையா.

aren
11-06-2007, 01:34 PM
நேர்க்கானலுக்கு வந்த பிறகுதான் அவருக்கு பல பிரச்சனைகள் வெளியே தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எதுக்கு பிரச்சனை என்று இருக்கும் இடத்திலேயே இருக்கலாம் என்று முடிவெடுத்திருப்பார்.

அறிஞர்
11-06-2007, 01:39 PM
நம்மூரு ஆட்களின் அரசியலுடன் விளையாடுவது.. மிக கடினமான காரியம்...

ஷீ-நிசி
11-06-2007, 03:52 PM
நம்ம சேப்பல் ஏதாவது பயமுறுத்திட்டிருப்பார்...

(யோவ் இவனுங்கள் உன்னால ஒப்பேத்த முடியாது.. வீணா பேர கெடுத்துக்காதன்னு!)

அமரன்
11-06-2007, 03:53 PM
நம்ம சேப்பல் ஏதாவது பயமுறுத்திட்டிருப்பார்...

(யோவ் இவனுங்கள் உன்னால ஒப்பேத்த முடியாது.. வீணா பேர கெடுத்துக்காதன்னு!)
நகைச்சுவயான் அதே நேரம் சிந்திக்க வைக்கும் பின்னூட்டம்.:icon_clap: :icon_clap: :icon_clap: