PDA

View Full Version : சாதல் செய்யும் காதல்அமரன்
11-06-2007, 10:36 AM
கல் அறை பூக்களால்
கல்லறை சேர்ந்தோர்
எத்தனை பேர்

நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்

நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்

சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்

சிவா.ஜி
11-06-2007, 10:44 AM
அமரன் கவிச்சமரிலிருந்து நேரே இங்கு வந்ததால் அந்த அவசரம் கவிதையில் தெரிகிறது.
நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்

நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்
இரண்டுக்கும் ஒரே அர்த்தமல்லவா வருகிறது.

சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்
அழகான அடுக்குச் சொற்கள். ஒரு ரிதத்தோடு படித்தால் சுகமாய் உள்ளது.

அன்புரசிகன்
11-06-2007, 10:47 AM
நீங்கள் கூறுவது உண்மையெனினும் தவிர்க்கமுடியாததொன்றாக இருக்கிறது. நிஜமான காதலை மறுக்கும் போது ஏற்படுவது இயலாமை. சாதலுக்கு ஒரு அசாத்தியமான துணிவு வேண்டும். அது காதலித்தவர்களுக்கு இலகுவில் வந்துவிடுகிறது.
நிஜக்காதல் தேவை. அதை உணரும் மனிதமும் தேவை. தற்சமயம் காதலை பணத்திற்கும் காமத்திற்கும் பலியாக்கும் கேவலமும் நடந்தேறுகிறது.

அமரன்
11-06-2007, 10:57 AM
அமரன் கவிச்சமரிலிருந்து நேரே இங்கு வந்ததால் அந்த அவசரம் கவிதையில் தெரிகிறது.
நேசித்தவன் மறுத்ததால்
சுவாசிக்க மறுத்தோர்
எத்தனை பேர்

நேசிக்க மறுத்ததால்
யோசிக்க் மறந்து
சுவாசத்தை நிறுத்தியோர்
எத்தனை பேர்
இரண்டுக்கும் ஒரே அர்த்தமல்லவா வருகிறது.

சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்
அழகான அடுக்குச் சொற்கள். ஒரு ரிதத்தோடு படித்தால் சுகமாய் உள்ளது.
இல்லை சிவா
தடித்து அடையாளப்படுத்தி இருப்பதைக் கவனியுங்கள்.
மறுத்தோர் என்றால் தமது சுவாசத்தை மட்டும் நிறுத்தும் தற்கொலையைக் குறிக்கின்றது.
நிறுத்தியோர் என்றால் அடுத்தவர் மூச்சை நிறுத்துபவரையும் குறிக்கின்றது. காதலிக்க மறுத்தவர்களை கொலை செய்வாரே சிலர் அவர்களையும் குறிக்கின்றது.
முதல் பின்னூட்டத்திற்கு நன்றி சிவா.

சிவா.ஜி
11-06-2007, 11:01 AM
ஓ....நீங்கள் அப்படி சொல்கிறீர்களா? வார்த்தைகளுக்குள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள்தான் எத்தனை. வியக்கிறேன்.

அமரன்
11-06-2007, 11:07 AM
ஓ....நீங்கள் அப்படி சொல்கிறீர்களா? வார்த்தைகளுக்குள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள்தான் எத்தனை. வியக்கிறேன்.
நான் சொன்னது சரியா தவறா என்பதைச் சொல்லவில்லையே? வார்த்தைப் பிரயோகம் சரியானதா? தவறாயின் திருத்தி விடுவேன்.
நன்றியுடன்

சிவா.ஜி
11-06-2007, 11:12 AM
வார்த்தை பிரயோகத்தில் எந்த தப்புமில்லை அமரன். சரிதான். காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டோர்,காதலிக்க மறுத்ததால் காதலியையோ காதலனையோ கொன்றவர் என்ற இரண்டு அர்த்தங்கள் வருகிறது. அதனால்தான் வியந்தேன். மிக அருமை அமரன்.

அமரன்
11-06-2007, 11:28 AM
நீங்கள் கூறுவது உண்மையெனினும் தவிர்க்கமுடியாததொன்றாக இருக்கிறது. நிஜமான காதலை மறுக்கும் போது ஏற்படுவது இயலாமை. சாதலுக்கு ஒரு அசாத்தியமான துணிவு வேண்டும். அது காதலித்தவர்களுக்கு இலகுவில் வந்துவிடுகிறது.
நிஜக்காதல் தேவை. அதை உணரும் மனிதமும் தேவை. தற்சமயம் காதலை பணத்திற்கும் காமத்திற்கும் பலியாக்கும் கேவலமும் நடந்தேறுகிறது.
உண்மைதான் அன்புரசிகன்..
உங்கள் கருத்து சரியானதே...
ஆனால் தைரியத்தில் தன்னை அழித்துக்கொல்லலாம்.
அடுத்தவரை......
காதல் ஜெயிக்கும்போது கூட யாராவது ஒருவர் மனதளவில் கொல்லப்படுவாரல்லவா...
சாதலும் காதலும் இணைபிரியாதவர்களோ......

ஓவியன்
26-06-2007, 07:20 PM
காதல் செய்வதே
காதல்!
நினைவுகளோடு வாழ்வதும்
காதல்!.
நினைவுகளை வரிகளாக்குவதும்
காதல்!
அந்த வரிகளுக்காய் வாழ்வதும் கூட*
காதல்!
சாதல் செய்வதல்ல
காதல்!
புரிந்து கொள் மானிடா!

ஓவியா
26-06-2007, 07:29 PM
அடடா, இந்த சின்னவயதில் என்ன தத்துவமழை.
வியந்தேன் அமர், சொற்களின் கோர்வை அட்டகாசம், அபாரம் அருமை.

அப்பயே சுட்ட தோசையை நோகாமல் அழகாக திருப்பி போட்ட ஓவியன், உங்கள் கவிதையும் பிரமாதம்.

ஓவியன்
26-06-2007, 07:32 PM
அப்பயே சுட்ட தோசையை நோகாமல் அழகாக திருப்பி போட்ட ஓவியன், உங்கள் கவிதையும் பிரமாதம்.

ஹீ!,ஹீ!

எனக்குப் பிடித்த உணவுகளில் ஒன்று இந்த தோசை!:sport-smiley-018:

அமரன்
26-06-2007, 07:39 PM
அடடா இது...தாமரை அண்ணாவின் பாடம் முடிந்ததும் அவசரமாக அள்ளித்தெளித்த கோலம். நன்றி ஓவியன் மற்றும் ஓவியாக்கா. கவிதைப்போடியில் பங்கெடுத்த என் கவிதையின் விமர்சன் எங்கே அக்கா மற்றும் ஓவியன். ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

ஓவியா
26-06-2007, 07:48 PM
அய்க்கோ மறந்துட்டேன் ராசா, மன்னிக்கவும். இதோ இன்று போடுகிறேன். கொஞ்சம் போருக்கவும். நன்றி

ஓவியன்
26-06-2007, 07:51 PM
அமரா!

விமர்சனம் வரும், லேட்டா என்றாலும் லேட்டஸ்டாக வரும்.

அக்னி
26-06-2007, 07:58 PM
காதல்...
காத்திருத்தல்...
தவித்தல்...
இல்லாமற்போதல்...
எங்கேயோ கேட்டது மனதில் எதிரொலித்தது...
அர்த்தம் புரிய எடுத்தது பல காலம்...

காதல் வெற்றி பெற்றாலும் இல்லாமற் போகும்...
காதல் தோல்வி அடைந்தாலும் இல்லாமற் போகும்...

முன்னையது, காதல், தாம்பத்திய அன்பாய் மாறுவதால் ஏற்படும்.
பின்னையது, காதல் தோல்வியால் மனம் இறப்பது, உயிர் இழப்பது என்பதால் தோன்றும்.

காதல்...
ஒரு எழுத்து மாறுபட்டால்
சாதல்...
இது நாமாக ஏற்படுத்திக்கொண்ட தலையெழுத்து...
மாற்றப்பட வேண்டும்...
வென்றாலும் தோற்றாலும் காதல், வாழ்விக்கும் சக்தியாக வேண்டும்.
வாழ்வழிக்கும் சக்தியாக மாறக்கூடாது...

அருமையான கவிதைகளும் பின்னூட்டங்களும் தந்தமைக்கு நன்றிகள் நண்பர்களே...

அமரன்
26-06-2007, 08:05 PM
நன்றி அக்னி. விரிவான பின்னூட்டத்திற்கு..ஓரெழுத்து வித்தியாசத்தை வைத்து எழுதிய கவிதை இங்கே..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10050

theepa
27-06-2007, 12:47 AM
காதலை இறந்து வால வைக்க முடியாது வால்ந்து தான் வால வைக்க முடியும் என்ரு அருமையாக உங்கல் கவிதை மூலம் விலக்கி எருக்கிரீர்கள் நன்பரே .....

அமரன்
11-07-2007, 09:38 AM
நன்றி லதுஜா...ஆழமாகப் படித்து பின்னூட்டமிட்டுள்ளீர்கள்...

பிச்சி
11-07-2007, 09:42 AM
மறுத்தால் மரணமா? அது கோழைத்தனம். இந்த கவிதையை நான் ஒத்துக்க மாட்டேன். அமரன் அண்ணா.. நிச்சயம் காதல் தேவை.

அமரன்
11-07-2007, 09:48 AM
மறுத்தால் மரணமா? அது கோழைத்தனம். இந்த கவிதையை நான் ஒத்துக்க மாட்டேன். அமரன் அண்ணா.. நிச்சயம் காதல் தேவை.

பிச்சி...நீங்கள் சொல்வதைத்தான் நான் சொல்கின்றேன்...

சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்

சாதலைத் தூண்டும் காதல் தேவையில்லை. வாழ்வு தரும் காதலே தேவை என்கின்றேன்.

பிச்சி
11-07-2007, 09:56 AM
பிச்சி...நீங்கள் சொல்வதைத்தான் நான் சொல்கின்றேன்...

சாதல் செய்யும்
காதல்
தேவையா மானிடா
நீ சொல்

சாதலைத் தூண்டும் காதல் தேவையில்லை. வாழ்வு தரும் காதலே தேவை என்கின்றேன்.

அப்படீன்னா சரி. :music-smiley-019: