PDA

View Full Version : கிணறு:umakarthick
11-06-2007, 08:10 AM
கிணறு:


ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்தது
அந்த பாழடைந்த கிணறு

இரண்டு தண்ணீர் பாம்புகள்
ஒரு பெரிய ஆமை,சிறிய புறாக் கூடு
கலங்கிய தண்ணீர் உடைந்த படிகள்
பக்கத்து மஞ்சநத்தியின் உதிர்ந்த பழங்கள்
இது தான் அக்கிணற்றின் அடையாளங்கள்

முதலில் அதன் இருள் பயம் தந்தாலும்
நாளடைவில் எங்கள் நண்பனாகியது
எப்படி குதித்தாலும் எங்களை மேலேற்றும்

முதன் முதலில் நீச்சல் பயின்ற இடம்
அதன் அடியில் தான் முதல் சிகரெட்
கிரிக்கெட் ஆடிவிட்டு இளைப்பாறல்
பக்கத்து வீட்டு அக்காவின் சிரிப்பு
போலீஸ் காரரின் புதுமனைவி
நண்பனின் தங்கையின் காதல்
என எங்கள் வயதுக்கே உரிய
விஷயங்களின் விவாதங்கள்

எங்கள் ரகசியங்கள் அனைத்தும் தெரியும்
இருந்தாலும் அமைதிக் காக்கும்
இது வரை யாரையும் காவு கொண்டதில்லை
இரவில் அதன் மடியில் நிலவு தெரியும் வரை
கதைத்திருப்போம் நாங்கள்

காலம் கடந்தது உலகம் அழைத்தது
எங்கள் திசைகள் மாறின
கடிதத் தொடர்பில் மறவாமல்
கேட்போம் அக்கிணற்றை பற்றி
அதனடியில் கழித்த காலங்கள்
எங்கள் வசந்த காலமென்றோம்

ஒரு நாள் நண்பனின் கடிதம்
அவள் தங்கையை காவு கொண்டது
அக்கிணறென தெரிந்த போது பதறினோம்

நாளடைவில் தொடர்பறுந்தது
இந்நேரம் இன்னொரு தலைமுறை
அதனடியில் காலம் கழிக்கும்
என நினைத்தவாறே
வெயில் தாழ்ந்த அந்த மாதத்தில்
ஊருக்கும் செல்கையில் விசாரித்தேன்

அச்சம்பவத்திற்கு பின் ஒருமுறை
கிணற்றுக்கு குளிக்கச் சென்ற
சிறுவனின் காலை பிடித்திளுத்திருக்கிறாள்
நண்பனின் தங்கை அதன் பிறகாரும்
செல்வதில்லையாம் அக்கிணற்றுக்கு

அருகில் சென்ற போது இன்னும்
சிதிலமடைந்திருந்தது கிணறு
புதர் மண்டி நிறம் மாறியத் தண்ணீருடன்
அமைதியாயிருந்தது ஒன்றுமே
நடக்காது போலிருந்தது'
பேய்க் கிணறு.....கிணறுகளை பற்றிய கதைகளும் , பிரமிப்பும் இன்றும் நம் மனதில் இருந்து அகல மறுக்கிறது.எத்தனையோ கிணறுகள் ,நம் வாழ்வில் நாம் பார்த்திருக்கிறோம், ஒவ்வொரு கிணற்றுக்கும் ஒரு கதையிருக்கும்.
நாவல் மர அடியிலிருக்கும் அந்த பொதுக் கிணறு, கிரிக்கெட் பந்து போய் விழும் அந்த ராமர் கோவில் கிணறு,விளங்காட்டில் நீச்சல் பயின்ற அந்த மொட்டை கிணறு என எத்தனையோ கிணறுகள் எத்தனையோ கதைகள்
ஒரு வாளி தண்ணீரில் தலை நனைத்து விட்டு கிளாம்பும் இந்த நகரங்களில் கிணறுகளை பார்ப்பத்தரிது தான் , அந்த ஒவ்வொரு வாளித் தண்ணீரும் நம்மூர் கிணற்றில் குளித்து சுகித்ததை நியாபகப் படுத்தும் என்பதைல் சந்தேகமில்லை.

இளசு
13-06-2007, 09:02 PM
வாழ்த்துகள் உமாகார்த்திக்.

கிணறு வெட்டப் புறப்பட்டு நீர் வராமல்
இன்னும் இன்னும் செலவு செய்து
இருப்பதை இழந்து, தம்மையும் இழந்தவர்கள் கதைகள்..

சாதித் தீட்டு பட்டதென்று கலவரத்தீ மூட்டிய
மனித நேய ஈரமில்லா கிணற்றுக் கதைகள்...

தவறி விழுந்த பேருந்தையே காவுவாங்கிய
தரைக்கிணறுகள்..


இப்படி அபாயக்கதைகள் இருந்தாலும்
அதை மிஞ்சும் சுவாரசியக்கதைகளே
அதிகம்...

உங்கள் கிணற்றுக் க(வி)தை
நல்லதண்ணிக் கிணத்து நீர் போல சுவை!

பாராட்டுகள்...

பென்ஸ்
14-06-2007, 01:47 AM
சின்ன வயசு நினைவுகளை அடுக்கி வைப்பதற்கு ஒரு நல்ல நினைவு தொகுப்பு வேண்டும்...
அதை சுவரசியமாக சொல்லு நல்ல சொல்லழகு வேனும்...
அது எல்லாம் அமைந்த்து கச்சிதமாக ...

வாசித்த வரிகளுக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் ஒருமுறை
ஊரின் இதே போன்ற சம்பவ இடங்களுக்கு நினைவு ஒரு முறை மின்னல் வேக ரிவைன்ட் அடித்து வரதான் செய்தது...

அருமையான எழுத்துக்கள்...

ஆனால் புதுக்கவிதைக்கு இருக்கும் உவமை செதுக்கும் , வார்த்தை விளையாட்டும் கூட இல்லாமல் இருப்பதனால் இதை கவிதையாக வாசிக்க மனம் ஒத்து கொள்ளவில்லை என்பது உண்மை.

தொடருங்கள்.. காத்திருக்கிறொம்...

சிவா.ஜி
14-06-2007, 01:26 PM
ஒரு நல்ல நினைவுப்பின்னோட்டம். இதைக் கவிதையாக இல்லாமல் கட்டுரையாகக்கொடுத்திருந்தால் இன்னும் நிறைய சொல்லியிருக்க முடியும். உங்கள் நினைவுப்பெட்டகத்தை திறந்து இன்னும் நிறைய சொல்லுங்கள்.

umakarthick
21-09-2007, 12:15 PM
நன்றி உண்மயை அப்ப்டியே சொல்லும் போது கொஞ்சம் இப்படி தான் ஆகிறது , என்னால் இயன்றது, நிறைய படித்திருந்தால் இனும் செம்மையாக எழுதியிருக்கலாம் , இருந்தாலும் கருத்துக்கும் வாழ்த்துகும் நன்றி

ஷீ-நிசி
22-09-2007, 06:34 AM
கிணற்றுக்குள்.....
அடிக்கிறதே (ஞாபக) அலைகள்!!

வாழ்த்துக்கள் உமா...

சொல்லவந்த கருத்து சுவையாய் கோர்வையாய்... உள்ளது..

lolluvathiyar
23-09-2007, 09:35 AM
நன்பரே கினற்றை பற்றி அழகான உன்மை அனுபவங்கள் சொல்லி மலரும் நினைவுகளை கிளரி விட்டீர்கள்.
ஒரு காலத்தில் ஊருக்கே தன்னீர் தந்த கினருகள்
காட்டுக்கே பாசனம் தந்த அமுத சுரபிகள்
இன்று மிக பெரிய குப்பை தொட்டியாக மாறி விட்டது.