PDA

View Full Version : காதல் பயணம்



இனியவள்
11-06-2007, 07:46 AM
ஆசை ஆசையாய் வாழ்வதற்கு
காதல் சிறந்த வழியென
உன்னை நான் காதலித்தேன்...
ஆனால் என் அன்பே
அனு அனுவாய்ச் சாவதற்கு காதல் தான்
சிறந்த வழியென புரிய வைத்தாய்
உன் அன்பை இழந்து நான் படும்
வேதனைகள் போதும்
என் உயிரைக் கோட்டால் பரிசாகத் தருவேன்
ஆனால் என்னுடன் இரண்டறக் கலந்த
உன் இனிமையான நினைவுகளை மட்டும்
தீயில் எரிக்க சொல்லாதே

இணைய நண்பன்
11-06-2007, 12:05 PM
காதலின் இனிமையான நினைவுகளின் தாக்கத்தை அழகாக படம் பிடித்து காட்டியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்

அக்னி
11-06-2007, 12:11 PM
காதலின் நினைவுகள் தரும் வேதனைக் கவிதை அழகு...
ஆனால்
உயிர் போனபின் நினைவுகள் உயிர்வாழுமா?
இதுதானோ,
நீங்(க்)காத நீங்(க்)கல்கள்...
அருமை...

எழுத்துப் பிழைகளை பதியுமுன் ஒரு தடவை சரிபாருங்கள்...

ஓவியா
11-06-2007, 12:19 PM
அதானே!! நினைவுக்களை எப்படி திறு(ரு)ப்பி தருவது.

கவிதை நன்று.

இனியவள் அவர்களே,
இங்கு குழுமியிருக்கும் மற்ற படைப்பளிகளின் கவிதைகளையும் வாசித்து, கருத்துப் பின்னூட்டங்கள் இடுங்களேன்.

உங்களை போல் அவர்களும் அவர்களின் கவிதையை தாங்கள் விமர்சிப்பதை கண்டு மகிழ்வார்கள்.