Log in

View Full Version : உயிரின் ஆசை

இனியவள்
11-06-2007, 07:41 AM
என்னுயிரே.....
இரவின் தனிமையை தவிர்க்க
உன் நினைவுகளோடு உறவாடுகின்றேன்
ஒவ்வொரு இரவும் நித்திரைக்கு
வழிவிடும் போது
உன் பெயரையே கடை
வார்த்தையாக உச்சரிக்கின்றேன்
மூடிய விழிகள் மூடியபடியே
நிரந்தரமாக நான் தூங்கிவிட்டால்
நான் இறுதியாக உச்சரித்தது
உன் பெயராகவே இருக்கட்டும்
அடுத்த பிறவி எனக்கு தேவையில்லை
என்னுயிர் காற்றிலே கலந்து
என்றென்றும் உன் அருகில் இருப்பேன்

சிவா.ஜி
14-06-2007, 01:37 PM
ஒவ்வொரு இரவும் நித்திரைக்கு
வழிவிடும் போது
உன் பெயரையே கடை
வார்த்தையாக உச்சரிக்கின்றேன்
மூடிய விழிகள் மூடியபடியே
நிரந்தரமாக நான் தூங்கிவிட்டால்
நான் இறுதியாக உச்சரித்தது
உன் பெயராகவே இருக்கட்டும்
அழகான சிந்தனை. நிலையில்லா வாழ்வில் முடிவு எப்போது வருமென்று தெரியாத நிலையில், இறக்கும்போது அவள்/அவன் பெயரை நினைவில் இருத்திகொள்ள நினைக்கும் மேன்மை. கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் இனியவள்.

இனியவள்
16-06-2007, 03:45 AM
நன்றி சிவா.ஜி

தாமரை
16-06-2007, 04:12 AM
ஒவ்வொரு இரவும் நித்திரைக்கு
வழிவிடும் போது
உன் பெயரையே கடை
வார்த்தையாக உச்சரிக்கின்றேன்
மூடிய விழிகள் மூடியபடியே
நிரந்தரமாக நான் தூங்கிவிட்டால்
நான் இறுதியாக உச்சரித்தது
உன் பெயராகவே இருக்கட்டும்
அழகான சிந்தனை. நிலையில்லா வாழ்வில் முடிவு எப்போது வருமென்று தெரியாத நிலையில், இறக்கும்போது அவள்/அவன் பெயரை நினைவில் இருத்திகொள்ள நினைக்கும் மேன்மை. கவிதை நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் இனியவள்.

அவள் பெயரை
உச்சரித்த பின் உறக்கமா?? :062802sleep_prv:
வருமா?:violent-smiley-010:

அவள் பெயரை உச்சரிக்கும் போது :musik010:
எழுச்சியல்லவா வரவேண்டும் :icon_03:
உனக்காகவே நான் வாழ்கிறேன் என்று....:icon_give_rose:

சிவா.ஜி
16-06-2007, 04:23 AM

தாமரை நீங்களும் கலைஞர் மாதிரி சிலேடையில் கலக்குகிறீர்களா? ம்..ம்ம்..புரிகிறது.

தாமரை
16-06-2007, 04:25 AM
தாமரை நீங்களும் கலைஞர் மாதிரி சிலேடையில் கலக்குகிறீர்களா? ம்..ம்ம்..புரிகிறது.
என் சிலேடை யாரையும் மனம் வருந்த வைக்காது என எண்ணுகிறேன்... :party009: :party009: :party009:

சிவா.ஜி
16-06-2007, 04:31 AM
என் சிலேடை யாரையும் மனம் வருந்த வைக்காது என எண்ணுகிறேன்... :party009: :party009: :party009:

அசத்துகிறது ஐயா உங்கள் சிலேடை, அது எப்படி மனம் வருந்த வைக்கும்?