PDA

View Full Version : காதல்



இனியவள்
11-06-2007, 07:37 AM
காதல் என்னும் மாளிகையில்
உன் இனிமையான நினைவுகளை
காற்றாக சுவாசித்துக் கொண்டு
நான் இன்னும் உயிர் வாழ்கின்றேன்.

இளசு
12-06-2007, 10:06 PM
காதல் மாளிகைதான்
நினைவுகள் காற்றுதான்...

இன்னும்
கடமைகள் உணவாக
பாசங்கள் உடையாக
ரசனைகள் குளியலாக

நித்திய வாழ்வில் பல
நிச்சய நிகழ்வுகள் உள்ளனவே...

வாழ்த்துகள் இனியவள் கவிதைக்கு!

sreeram
12-06-2007, 11:37 PM
காதல் என்னும் மாளிகையில்
உன் இனிமையான நினைவுகளை
காற்றாக சுவாசித்துக் கொண்டு
நான் இன்னும் உயிர் வாழ்கின்றேன்.

---------
இப்படி நினைவுகளிலேயே காலம் கடத்திவிடுவதா என்ன...? வேறு நல்ல ஒரு காதலனையோ காதலியையோ தேர்ந்தெடுங்கள்... காதல் மட்டுமேவா வாழ்க்கை...?

அமரன்
16-06-2007, 08:15 AM
இப்பொதாவது
என் நினைவுகளை
காற்றில்
பறக்கவிடாதே

இனியவள்
07-07-2007, 08:49 AM
காதல் மாளிகைதான்
நினைவுகள் காற்றுதான்...

இன்னும்
கடமைகள் உணவாக
பாசங்கள் உடையாக
ரசனைகள் குளியலாக

நித்திய வாழ்வில் பல
நிச்சய நிகழ்வுகள் உள்ளனவே...

வாழ்த்துகள் இனியவள் கவிதைக்கு!

நன்றி இளசு அண்ணா உங்கள் வாழ்த்துக்கு

பதில் கவி நன்று வாழ்த்துக்கள்

இனியவள்
07-07-2007, 08:51 AM
இப்பொதாவது
என் நினைவுகளை
காற்றில்
பறக்கவிடாதே

உன் நினைவுகள்
என்ன பட்டமா
காற்றில் பறக்க
விடுவதற்கு அது
என்னில் கலந்த
உறவல்லவா..
என் உயிர் காற்றில்
பறக்கும் போது
உன் நினைவும் சேர்ந்து
பறக்கும் என்னுயிரோடு

ஓவியன்
12-07-2007, 11:25 PM
கனவுகளோடு வாழ்ந்தவன்
நினைவுகளோடு வாழ்கிறான்!
காதல் தேல்வியின்
பின்பு!.

கவிதை தைக்கிறது − பாராட்டுக்கள் இனியவள்!.

இனியவள்
13-07-2007, 07:39 AM
கனவுகளோடு வாழ்ந்தவன்
நினைவுகளோடு வாழ்கிறான்!
காதல் தேல்வியின்
பின்பு!.

கவிதை தைக்கிறது − பாராட்டுக்கள் இனியவள்!.

நன்றி ஓவியன்

தோல்வி அவனுக்கு
வாழ்க்கைப் பாடத்தைக்
கற்றுக் கொடுக்க நினைவுகள்
அதற்கு உரமாக வாழ்க்கையை
வெற்றி என்னும் பாதை
நோக்கி செலுத்துகின்றான்