PDA

View Full Version : சிலேடைகள்



ஆதவா
11-06-2007, 06:59 AM
நண்பர்களே! சிலேடைக் கவிகளை கொஞ்சம் இங்கே இடுங்களேன்.. தற்சமயம் வேலை இருப்பதால் சிலேடைகள் பற்றி பிறிதொரு சமயம் சொல்கிறேன்.

என்னுடைய சார்பில் இதோ :

பரத்தியைக் கண்ணாறக் கண்டு
உரத்த ஒலியில் கூப்பாடு போட்டு
சிரத்தை கொண்டே நீ
துரத்திப் பார்த்தேவதை வருகுமே

---------------------
எண்ணென்றான் எண்ணை.
எண்ணை தரும் எண்ணை
எண்ணைத்தான் எண்ணத்தான் முடியுமோ?
எண்ணத்தான் முடியுமோ?
---------------------
நம்மை
இணையென்றாள்
இணைந்த பின்னும்.
------------------

கருத்து சொல்லுங்கள்.

ஓவியன்
11-06-2007, 07:08 AM
எண்ணென்றான் எண்ணை.
எண்ணை தரும் எண்ணை
எண்ணைத்தான் எண்ணத்தான் முடியுமோ?
எண்ணத்தான் முடியுமோ?

அருமை ஆதவா!

பல பொருள் தரும் சிலேடைகளை இனி நாங்கள் இந்த திரியிலே பார்க்க வழி செய்தமைக்கு பாராட்டுக்கள்.

செல்வன் அண்ணா இங்கே வந்து ஒரு கலக்கு கலக்கப் போகிறார் என்பது கண்கூடு.

இதயம்
11-06-2007, 07:23 AM
ஆதவா..! உங்கள் சிலேடைக்கவிதைக்கு இருவகையான அர்த்தங்களுடன் கூடிய விளக்கம் கொடுங்கள். படித்து ரசித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன்.

ஆதவா
11-06-2007, 07:36 AM
என்னுடைய சார்பில் இதோ :

பரத்தியைக் கண்ணாறக் கண்டு
உரத்த ஒலியில் கூப்பாடு போட்டு
சிரத்தை கொண்டே நீ
துரத்திப் பார்த்தேவதை வருகுமே

இறுதி வரியைப் பிரித்தால்

பார் + தேவதை
பார்த்தே+ வதை

இரு அர்த்தங்கள் வரும்..

---------------------
எண்ணென்றான் எண்ணை.
எண்ணை தரும் எண்ணை
எண்ணைத்தான் எண்ணத்தான் முடியுமோ?
எண்ணத்தான் முடியுமோ?

எண் என்றால் எள் என்று அர்த்தம்
எண்ணை என்றால் ஆயில் (oil)
எண் என்றால் எண்ணு என்று அர்த்தம்...

மூவர்த்தம்....
---------------------
நம்மை
இணையென்றாள்
இணைந்த பின்னும்.

இணை என்றால் இணை (Join)
இணை என்றால் துணை அல்லது ஒப்பான என்று அர்த்தம்,,
------------------

ஷீ-நிசி
11-06-2007, 07:50 AM
நண்பர்களே! சிலேடைக் கவிகளை கொஞ்சம் இங்கே இடுங்களேன்.. தற்சமயம் வேலை இருப்பதால் சிலேடைகள் பற்றி பிறிதொரு சமயம் சொல்கிறேன்.

என்னுடைய சார்பில் இதோ :

பரத்தியைக் கண்ணாறக் கண்டு
உரத்த ஒலியில் கூப்பாடு போட்டு
சிரத்தை கொண்டே நீ
துரத்திப் பார்த்தேவதை வருகுமே

---------------------
எண்ணென்றான் எண்ணை.
எண்ணை தரும் எண்ணை
எண்ணைத்தான் எண்ணத்தான் முடியுமோ?
எண்ணத்தான் முடியுமோ?
---------------------
நம்மை
இணையென்றாள்
இணைந்த பின்னும்.
------------------

கருத்து சொல்லுங்கள்.

உம் கரு(வி)த்து
எம் கருத்து கேட்கிறாய்!

பார்தேவதை அவள் (பார் - உலகம்)
பார்த்தே(ன்)வதைத்தாள்!

எண்ணை பற்றிப்
கவிதையெழுதினாய்!
என்னைப்பற்றியல்ல!

எண்ணைப்பற்றி எழுதினாய்!
எண்ணை பற்றி எழு(ந்தது)தீ!

எண்ணைப்பற்றியும் எழுதேன்!
1,2,3 வைத்து!

அமரன்
11-06-2007, 07:51 AM
என்னுடைய சார்பில் இதோ :

பரத்தியைக் கண்ணாறக் கண்டு
உரத்த ஒலியில் கூப்பாடு போட்டு
சிரத்தை கொண்டே நீ
துரத்திப் பார்த்தேவதை வருகுமே

இறுதி வரியைப் பிரித்தால்

பார் + தேவதை
பார்த்தே+ வதை

இரு அர்த்தங்கள் வரும்..

அது புரிந்தது ஆதவா. பரத்தி என்பது நெய்தல்பெண்ணா என்பதில்தான் சந்தேகம்

---------------------


எண்ணென்றான் எண்ணை.
எண்ணை தரும் எண்ணை
எண்ணைத்தான் எண்ணத்தான் முடியுமோ?
எண்ணத்தான் முடியுமோ?

எண் என்றால் எள் என்று அர்த்தம்
எண்ணை என்றால் ஆயில் (oil)
எண் என்றால் எண்ணு என்று அர்த்தம்...

மூவர்த்தம்....

புரிந்தது எள்ளை எண்ணச்சொன்னால் எண்ண முடியாது.


நம்மை
இணையென்றாள்
இணைந்த பின்னும்.

இணை என்றால் இணை (Join)
இணை என்றால் துணை அல்லது ஒப்பான என்று அர்த்தம்,,
------------------

இது முதலேயே புரிந்தது. தொடருமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.

இதயம்
11-06-2007, 08:01 AM
இது சிலேடை கவிதையாக மட்டுமல்ல, தமிழ் எழுத்துக்களின் சரியான உபயோகங்களையும், அர்த்தங்களையும் விளக்கி தமிழ் வளர்க்கும் ஒரு அற்புதமான திரியாகவும் பார்க்கிறேன். அதனால், இதிலுள்ள சில முரண்பாடுகளை அல்லது எனது அறியாமையினால் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பது நல்லது என எண்ணுகிறேன்.



எண்ணை பற்றிப்
கவிதையெழுதினாய்!
என்னைப்பற்றியல்ல!

எண்ணைப்பற்றி எழுதினாய்!
எண்ணை பற்றி எழு(ந்தது)தீ!

எண்ணைப்பற்றியும் எழுதேன்!
1,2,3 வைத்து!

எண்ணை - இப்படியொரு சொல் தமிழில் இல்லை. ஆனால், தவறுதலாக அது oil-என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது.

எண்ணெய் - இது தான் oil என்பதின் சரியான தமிழ்ச்சொல்.

நான் சொல்வது சரியா..?

இருந்தாலும் ஆதவாவின் படைப்பிற்கு சுவையான ஷீ-நிசியின் பின்னூட்டம் நெய் தோசைக்கு தேங்காய் சட்னி போல் பொருத்த சுவையாகத்தான் இருக்கிறது.

இதயம்
11-06-2007, 08:25 AM
பொதுவாக ஒரு சொல் அல்லது வாக்கியம் இரண்டு அர்த்தத்தில் வருவதை சிலேடை என்று சொல்வார்கள். சிலேடையில் ஒரு முறைதான் குறிப்பிட்ட சொல் வரும். ஆனால் பல அர்த்தங்களை கொண்டிருக்கும்.

1. வாரும் இரும்படியும்
அ. வாருங்கள், இருங்கள், பணியுங்கள் அல்லது படியுங்கள்
ஆ. வாருங்கள், இரும்பால் அடியுங்கள்

2. பூவை
அ. பெண்
ஆ. மலரை வை

3. தலைவரின் மாவீரர் உரைக்காக காத்திருக்குது பார்
அ. தலைவரின் உரைக்காக காத்திருக்குது பார் (உலகம்)
ஆ. தலைவரின் உரைக்காக காத்திருக்குது பார் (காண்)

சிவா.ஜி
11-06-2007, 08:26 AM
நீ பகர்ந்தது
நம் காதல் பற்றியதை பற்றி
இருபாலும் உள்ள பற்றைப்பற்றியது
அது இருவருக்கும் பற்றியதே
இற்றுவிடாமலிருக்கட்டும்!

ஆதவா
11-06-2007, 07:02 PM
இது சிலேடை கவிதையாக மட்டுமல்ல, தமிழ் எழுத்துக்களின் சரியான உபயோகங்களையும், அர்த்தங்களையும் விளக்கி தமிழ் வளர்க்கும் ஒரு அற்புதமான திரியாகவும் பார்க்கிறேன். அதனால், இதிலுள்ள சில முரண்பாடுகளை அல்லது எனது அறியாமையினால் ஏற்படும் சந்தேகங்களை தீர்ப்பது நல்லது என எண்ணுகிறேன்.

எண்ணை - இப்படியொரு சொல் தமிழில் இல்லை. ஆனால், தவறுதலாக அது oil-என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்படுகிறது.

இருந்தாலும் ஆதவாவின் படைப்பிற்கு சுவையான ஷீ-நிசியின் பின்னூட்டம் நெய் தோசைக்கு தேங்காய் சட்னி போல் பொருத்த சுவையாகத்தான் இருக்கிறது.

ஷீ-நிசியின் கவிதை சூப்பர்... இப்படித்தான் இடையிலே புகுந்து பெயர் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.. என்ன செய்ய...

இதயம்.. எண்ணை என்பது எண்ணெய் ஆகாது என்பதும் முதலியே தெரியும். அதுவும் அதை நீங்களே தான் கேட்பீர்கள் என்றும் தெரியும்.. வார்த்தைக்காக வழூஉ சொற்களைப் பயன்படுத்தவேண்டியதாயிற்று.

ஆதவா
11-06-2007, 07:03 PM
நீ பகர்ந்தது
நம் காதல் பற்றியதை பற்றி
இருபாலும் உள்ள பற்றைப்பற்றியது
அது இருவருக்கும் பற்றியதே
இற்றுவிடாமலிருக்கட்டும்!

சிவா. இதில் உள்ள சிலேடை மட்டும் சொல்லுங்களேன்... (நமக்கு அறிவு கொஞ்சம் கம்மிங்க.)

அமரன்
11-06-2007, 07:13 PM
ஷீ-நிசியின் கவிதை சூப்பர்... இப்படித்தான் இடையிலே புகுந்து பெயர் வாங்கிக்கொண்டு போய்விடுவார்.. என்ன செய்ய...

இதயம்.. எண்ணை என்பது எண்ணெய் ஆகாது என்பதும் முதலியே தெரியும். அதுவும் அதை நீங்களே தான் கேட்பீர்கள் என்றும் தெரியும்.. வார்த்தைக்காக வழூஉ சொற்களைப் பயன்படுத்தவேண்டியதாயிற்று.
இதயத்திற்குத்தானே எண்ணெயைப்பற்றித் தெரியும்.

சிவா.ஜி
12-06-2007, 05:18 AM
நீ பகர்ந்தது
நம் காதல் பற்றியதை பற்றி
இருபாலும் உள்ள பற்றைப்பற்றியது
அது இருவருக்கும் பற்றியதே
இற்றுவிடாமலிருக்கட்டும்!
சிவா. இதில் உள்ள சிலேடை மட்டும் சொல்லுங்களேன்...
காதல் பற்றியதை பற்றி என்பதில், பற்றியதை என்றால் அதைப்பற்றியது என்றும்
காதல் பற்றிக்கொண்டதைப் பற்றியுமென்றும் கொள்ளலாம்.
இருபாலும் உள்ள பற்றை பற்றியது எனும்போது
இருவருக்கும் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் பற்று பற்றியது எனலாம்.
அது இருவருக்கும் பற்றியதே எனும்போது இருவருக்கும் உகந்ததே மற்றும் இருவருக்கும் காதல் இணைந்தே பற்றிக்கொண்டதே என்றும் அர்த்தம் கொள்ளலாம்.

ஆதவா
12-06-2007, 05:30 AM
ஒருமாதிரியா புரிஞ்சுதுங்க.... அடுத்து சிலேடை கொடுப்பவர்களுக்கு 200 காசுகள்... (எல்லாம் லஞ்சம் தான்.. :D :D )

இதயம்
12-06-2007, 08:37 AM
இதயத்திற்குத்தானே எண்ணெயைப்பற்றித் தெரியும்.

என்ன ஜோதிகாவுக்கு போட்டியா...?

தாமரை
12-06-2007, 08:51 AM
மாலை சூடி
மாலை மயங்கி
மணந்தாள்
ஒரு மாலை.

மாலை - மலர்மாலை, சாயும்காலம், திருமாலை

அமரன்
12-06-2007, 08:52 AM
மாலை மயங்கியது
இவள் மணத்தில்
எந்த மாலை ஐயா..
(உங்களையும் எதிர்பார்த்தேன் இங்கே.)

ஆதவா
12-06-2007, 11:04 AM
மாலை சூடி
மாலை மயங்கி
மணந்தாள்
ஒரு மாலை.

மாலை - மலர்மாலை, சாயும்காலம், திருமாலை

லட்சுமி கல்யாணம்... சூப்பரப்பு... 200 பொற்காசுகள்...பரிசு
------------------------------

வாங்க சார் வாங்க. சிலேடை சொன்னா 200 ருபாய் பரிசு சார். வாங்க சார் வாங்க.. பரிசை வாங்க.

ஷீ-நிசி
12-06-2007, 11:13 AM
காளை அடக்கும் போட்டிக்கு
காலையே கிளம்பினான்!
காளமுத்து!

போட்டியில்
காலிடறி, காளையேறி
காலில் அடிபட்டு

காலாற நடந்தபடி
வீடு சேர்ந்தான்!
ஆனாலும்,
கால் ஆறவில்லை!

ஓவியன்
12-06-2007, 11:16 AM
அடடே ஷீ!

பின்னுறீங்களே!

சூப்பரப்பு!

அமரன்
12-06-2007, 11:20 AM
செல்வரில் சிலேடை அழகு. நன்றி.
நிஷியின் சிலேடை இந்த சிறுவனுக்குப் புரியவில்லை. செல்வர் கொடுத்தது போல் சின்னதாக உதவி கொடுத்தீர்களானால் விளங்கிவிடும் என நினைக்கின்றேன். அப்படியும் புரியாது விடில் தனிமடலில் கேட்கின்றேன் நன்பரே! ஆட்சேபனை இல்லையே.

தாமரை
12-06-2007, 11:27 AM
லட்சுமி கல்யாணம்... சூப்பரப்பு... 200 பொற்காசுகள்...பரிசு
------------------------------

வாங்க சார் வாங்க. சிலேடை சொன்னா 200 ருபாய் பரிசு சார். வாங்க சார் வாங்க.. பரிசை வாங்க.

நான் சொன்னது ஆண்டாளை
அவன் மனதை ஆண்டாளை
நம்முடையது என்றேன் உன்னறிவை
நம் முடை அது எனக் காட்டிவிட்டாயே!

ஆதவா
12-06-2007, 11:32 AM
அய்யா மன்னிக்கவும்
தவறி இழைத்துவிட்டேன்
ஆதலால்
தவறிழைத்துவிட்டேன்.

தாமரை
12-06-2007, 12:29 PM
அய்யா மன்னிக்கவும்
தவறி இழைத்துவிட்டேன்
ஆதலால்
தவறிழைத்துவிட்டேன்.

இழைத்தால் மரமோ சமமாகும்
இழைத்தால் அணியோ அழகாகும்
இழைத்தால் பஞ்சோ நுலாகும்
இழைத்தால் பிழையோ தவறாகும்

அமரன்
12-06-2007, 12:35 PM
இழைத்தால் மரமோ சமமாகும்
இழைத்தால் அணியோ அழகாகும்
இழைத்தால் பஞ்சோ நுலாகும்
இழைத்தால் பிழையோ தவறாகும்
இது புரியலையேசெல்வரே...

தாமரை
12-06-2007, 12:36 PM
மரத்தை இழைத்து தான் சட்டங்கள் விட்டங்கள் செய்வார்கள். இழைப்புளி என்ற சாதனம் கொண்டு சரக் சரக் என்று இழைப்பார்களே தெரியாதா?

அமரன்
12-06-2007, 12:38 PM
இப்போ புரிந்தது நன்றி செல்வரே!

ஆதவா
12-06-2007, 05:17 PM
மரத்தை இழைத்து தான் சட்டங்கள் விட்டங்கள் செய்வார்கள். இழைப்புளி என்ற சாதனம் கொண்டு சரக் சரக் என்று இழைப்பார்களே தெரியாதா?

சட்டத்தைத் தவறி இழைத்தால் கடும் தீங்கு
சட்டத்தைத் தவறி இழைத்தால் கெடும் பாங்கு.

ஆதவா
12-06-2007, 05:19 PM
இழைத்தால் மரமோ சமமாகும்
இழைத்தால் அணியோ அழகாகும்
இழைத்தால் பஞ்சோ நுலாகும்
இழைத்தால் பிழையோ தவறாகும்

பிழையும் தவறும் வேறெனில்
பிழையும் சிலரை பழிப்பதேன்?

விகடன்
12-06-2007, 05:50 PM
கலையுங் கூந்தலில் கலையும் பிறந்தால் தவறாகுமா?

ஆதவா
08-08-2007, 10:16 AM
அது புரிந்தது ஆதவா. பரத்தி என்பது நெய்தல்பெண்ணா என்பதில்தான் சந்தேகம்



சரிதான் அமரன்... பரத்தி என்றால் நெய்தநிலப் பெண்தான்... மேலும் இருந்தால் கொடுங்கள்..

அமரன்
08-08-2007, 01:57 PM
நன்றி ஆதவன்...இது எப்போதும் எரியவேண்டியதிரி முயற்சிப்போம்..