PDA

View Full Version : கவிதைப் போட்டி - ஆலோசனைகள்.பென்ஸ்
11-06-2007, 04:07 AM
கவிதைப்போட்டி பற்றிய கருத்துகள், ஆலோசனைகளை இங்கே பதிக்கவும்...

ஓவியன்
11-06-2007, 04:10 AM
நன்றி அண்ணா!!

புதிய முறையிலான போட்டி களை கட்டுமென நம்புகிறேன்.

சூரியன்
11-06-2007, 04:24 AM
நல்ல முயற்சி தொடரட்டும்

ஓவியா
11-06-2007, 04:49 AM
மன்றத்தின் கவிஞர் கவிஞைகளே!!


இதோ போட்டி விதிமுறைகள் :

- வாக்குறுதியும் ஒரு கவிதைக்கு மேல் இடமுடியாது.


வாக்குறுதியும் ஒரு கவிதைக்கு மேல் இடமுடியாது என்ற விதி எம்மை சற்று சங்கடப்படுத்துகின்றன.

1. ஒரு ஒட்டுதான் என்றால், வக்கு கிடைக்காத கவிதையை மட்டம் என்று ஆகிவிடாதா!! விடுமோ!!

2. ஓட்டு கிடைக்காமல் போனால் அவமானமாகும் என்று யாராவது கவிதையை அனுப்பாமலே இருக்கலாமே!! அவர்களுக்கு இது ஒரு தடையே!!!

அப்படியே இது கவலைபடவேண்டிய விசயமல்ல... அப்படி நினைப்பவர் அவருக்கு அவரே ஓட்டு போட்டு கொள்ளட்டும் என்று நினைத்தால்

3. அவர் மற்றவர்களின் கவிதைகளை பாராட்ட முடியாதே!!!


என் தாழ்மையான கருத்து,
குறைந்தது 3 அல்லது 5 வாகுகள் போடலாம், போட்டியில் வெற்றி பெருவது ஒரு புறமிருக்க,
நமது கவிதைக்கு எத்தனை (ஊக்க பின்னூட்டம்) ஓட்டு கிடைக்கின்றன என்று கவிஞர் எண்ணக்கூடும். இதுவே ஒரு கவிஞனை வளர்க்கும்.


.

ஓவியா
11-06-2007, 05:38 AM
நன்றி அண்ணா!!

புதிய முறையிலான போட்டி களை கட்டுமென நம்புகிறேன்.


நல்ல முயற்சி தொடரட்டும்

சரி சரி,

ஓவியன்,
அப்படியே உங்க ஆலோசனைகளை அள்ளி வீசுங்க,

சூரியன் சார்
குறை நிறைகளையும் நோட்டமிட்டு சொல்லுங்கள்.

ஓவியன்
11-06-2007, 06:06 AM
சரி சரி,
ஓவியன்,
அப்படியே உங்க ஆலோசனைகளை அள்ளி வீசுங்க

ஆமாம் அக்கா!

எனக்குள்ள ஆதங்கம் இந்தக் கவிதைப் போட்டியின் வாக்கெடுப்பில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கையை எப்படி அதிகரிக்கலாம் என்பதே?

இதற்குப் போட்டி நடைபெறுவது பலருக்குத் தெரியாமல் உள்ளது ஒரு காரணமென்று நான் நினைக்கிறேன் (ஏனென்றால் எல்லோரும் எல்லாப் பகுதியையும் பார்ப்பதில்லை).

இதற்காக போட்டிக்கான அறிவுறுத்தல் அல்லது போட்டியின் சுட்டியை மன்றத்தின் முகப்புப் பக்கத்திலேயே வைத்தால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

இதுசார்பாக மற்றவர்களின் கருத்து எப்படியோ?

அமரன்
11-06-2007, 07:42 AM
ஓவியா அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு. ஒரு கவிதைக்குத்தான் வாக்கு என இருப்பதே சிறப்பாக இருக்காது என நினைக்கின்றேன். 3அல்லது 5 வாக்குகள் போடலாம் எனும் பட்சத்தில் விருப்பு வாக்குகள் பதிக்கப்படும். முடிந்தால் அவ்வாக்குகளை 1,2,3 என வரிசைப்படுத்தி அளிக்கக்கூடிய வசதி இருந்தால் நன்று. அத்துடன் வாக்களிப்பை கட்டாயப்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன்.
.

வெற்றி
11-06-2007, 09:34 AM
ஓவியா,அமரன் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன்..
கவிதை போட்டி 8 ன் விதிமுறைகளை கண்டேன்..(இனி என் மனசாட்சி)_
அஹா...மொக்க....எனக்கு தெரிஞ்சு போச்சு...
ஏதோ சதி நடக்குது மொக்க...சதி நடக்குது...
மொச்சசாமி செயிக்க கூடாதுன்னு யாரோ வினை வச்சிட்டாங்க..
எடுக்கறேன் வினைய எடுக்கறேன்...

அக்னி
11-06-2007, 10:18 AM
ஓவியா, ஓவியன் அவர்கள் சொல்வதுபோல், என்னால் தரப்படும் கவிதைக்கு (?) எனது ஓட்டு முதலில் இடப்படும் (எனக்குப் போட்டு விட்டுத்தான் மற்றவற்றைப் பார்ப்பேன்... யார் என்ன நினைத்தாலும் இதுதான் உண்மை). ஆகவே, மற்றைய கவிஞரும் அவ்வாறே இட்டால், வேறொருவரும் வாக்களிக்காதவிடத்து, அநேகமான கவிதைகள் 1 ஓட்டு மட்டுமே பெற்று இருக்குமே...
ஆகவே வாக்களிப்பு எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் (குறைந்தது 2).
மற்றைய விதிமுறைகள் வரவேற்கத்தக்கன...

ஷீ-நிசி
11-06-2007, 10:30 AM
கீழ்க்கண்டவாறு விதிமுறைகளை பரிசிலீக்கலாம்.

1. ஒருவர் ஒரு படைப்பு மட்டுமே அனுப்பலாம்.
2. ஒருவர் ஒரு ஓட்டு மட்டுமே அளிக்கலாம்.
3. கவிதை 20 வரிகளுக்குமேல் இருக்ககூடாது.
4. ஒருமுறை படக் கவிதை போட்டி, அடுத்தமுறை தலைப்பு கொடுத்து போட்டி இருத்தல் வேண்டும். (தொடர்ந்து படக்கவிதைகளே வருவது சலிப்பைத் தருகிறது)
5. கவிதைப்போட்டி பண்பட்டவர் பகுதியில் நடத்தபடவேண்டும்.
காரணம் புதிய பயனர் உருவாக்கி கள்ள ஓட்டு போட முயற்சித்தாலும் கள்ள ஓட்டு போடமுடியாது.
6. இதுவரை ஓட்டளித்தவர்கள் என்று அவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியவேண்டும் (இது மற்ற உறுப்பினர்களையும் ஓட்டுபோட வரவழைக்கும்)
7. ஒருவர் தனிமடலில் கவிதை அனுப்பியவுடனே அதைப் வெளியிடாமல், கவிதைப்போட்டிக்கான நேரம் முடிந்தபின்பு மொத்தமாக எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வெளியிடவேண்டும்.
8. கவிதைப்போட்டிக்கு ஓட்டளிக்கும்படி தனிமடலில் பாப்-அப் ஆவதுபோல், ஆகவேண்டும் (சாத்தியமானால்)

இப்பொழுது இவ்வளவுதான் மனதுக்குள் இருந்தது...

அக்னி
11-06-2007, 10:34 AM
புதிய போட்டி விதிமுறைகள் கவிதைப்போட்டி பகுதியில் உள்ளது. பார்த்தீர்களா ஷீ-நிசி?

ஷீ-நிசி
11-06-2007, 10:46 AM
பென்ஸ் அவர்களே! இந்த விதிமுறைகளை நான் கவிதை ஆலோசனையில் என் ஆலோசனைகளை பதித்தபின்னரே பார்த்தேன்.. என் மனதில் இருந்ததை அப்படியே பிரதிபலித்திருக்கிறது உங்களின் சில புதிய விதிமுறைகள்..

ஒன்றை மட்டும் சேர்த்துகொள்ளுங்கள்..

7. ஒருவர் தனிமடலில் கவிதை அனுப்பியவுடனே அதைப் வெளியிடாமல், கவிதைப்போட்டிக்கான நேரம் முடிந்தபின்பு மொத்தமாக எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வெளியிடவேண்டும்.

மற்றபடி எல்லாமே ஓகே!

ஷீ-நிசி
11-06-2007, 10:47 AM
புதிய போட்டி விதிமுறைகள் கவிதைப்போட்டி பகுதியில் உள்ளது. பார்த்தீர்களா ஷீ-நிசி?


நீங்க, சொன்னபிறகுதான் பார்த்தேன் அக்னி.. அருமையான விதிமுறைகள்!

ஓவியா
11-06-2007, 11:34 AM
7. ஒருவர் தனிமடலில் கவிதை அனுப்பியவுடனே அதைப் வெளியிடாமல், கவிதைப்போட்டிக்கான நேரம் முடிந்தபின்பு மொத்தமாக எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வெளியிடவேண்டும்.சிறந்த அலோசனை, வழிமொழிகிறேன்.
கீழ்க்கண்டவாறு விதிமுறைகளை பரிசிலீக்கலாம்.


2. ஒருவர் ஒரு ஓட்டு மட்டுமே அளிக்கலாம்.

ஷி- இதற்க்கு நான் எற்கனவே என் ஆதங்கத்தை சொல்லி விட்டேன், பின்னூட்டம் நான்கை காண்க.


5. கவிதைப்போட்டி பண்பட்டவர் பகுதியில் நடத்தபடவேண்டும்.
காரணம் புதிய பயனர் உருவாக்கி கள்ள ஓட்டு போட முயற்சித்தாலும் கள்ள ஓட்டு போடமுடியாது.

பல புது வரவுகள், கவிதை மற்றும் பின்னூட்டங்களில் மின்னுகின்றனர், அவர்களின் ஓட்டுரிமை பரிப்போகும், சில புது வரவுகள் கவிதகள் அனுப்பி இருந்தால் அவர்களே தன் காவிதைக்கும் அல்லது மற்ற கவிதைகளுக்கு ஓட்டு போடமுடியாதே தோழா!!!

கள்ள ஓட்டை கண்டுப்பிடிக்க மேற்ப்பார்வையாளர்கள் இருக்கின்றனர், அதனை சுட்டிக்காட்டி ஒட்டை நீக்க அட்மீன் மக்களாம் முடியும். இது நேர்மையான புதியவர்களுக்கு சங்கடத்தை கொடுக்கலாம். இது என் தாழ்மையான கருத்து, கோவம் வேண்டாம்.


6. இதுவரை ஓட்டளித்தவர்கள் என்று அவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியவேண்டும் (இது மற்ற உறுப்பினர்களையும் ஓட்டுபோட வரவழைக்கும்)

இது கண்டிப்பாக முடியாத காரியம், தான் யாருக்கு ஓட்டளித்துல்லோம் என்று மற்றவர்களுக்கு தெரிந்தால், இரண்டு நல்ல நண்பர்களுக்கு மனக்கசப்பு வர வாய்ப்பிருக்கிறது. இது பதிவாளரின் சுதந்தரத்தை பரிப்பதாக இருக்கக்கூடும். ஓட்டு என்பது, தன் மனதில் உள்ளதை யாரூக்கும் அறியாமல் பொதுவில் வைப்பதே!!ஷீ,, மற்ற அலோசனைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கு, அந்த போப் ஆப் ஆப்ஷேன், நான் முன்பே கூறிவிட்டேன், மீண்டும் கூறி அதனை பரிசலில் வைத்த உங்கள் ஆசை நிரைவேற எனது வாழ்த்துக்கள்..

ஓவியா
11-06-2007, 11:36 AM
என் ஆலோசனைக்கு தோள் கொடுத்து வழிமொழிந்த அன்பு

ஓவியன், அமரன், மொக்கசாமி மற்றும் அக்கினிக்கு எனது நன்றிகள்

ஆதவா
11-06-2007, 12:17 PM
நல்லது நண்பர்களே! விதிமுறைகளை நாமே ஏற்படுத்தும் சுதந்திரம் இன்று நம் கையில்ல்.. வேறெந்த தளத்திலும் இத்தகைய சுதந்திரம் கிடைக்க வாய்ப்பில்லை..

எல்லாவற்றையும் படித்தேன்.

என்னைப் பொறுத்தவரை பென்ஸ் விதிகள், மற்றும் ஷீ-நிசி விதிகள் இரண்டுமே ஒன்றாக இருக்கிறது. அதில் மாற்றமில்லை என்றாலும் சிறு மாற்றம்..... ஷீ=நிசி அவர்களிடமிருந்து

5. கவிதைப்போட்டி பண்பட்டவர் பகுதியில் நடத்தபடவேண்டும்.
காரணம் புதிய பயனர் உருவாக்கி கள்ள ஓட்டு போட முயற்சித்தாலும் கள்ள ஓட்டு போடமுடியாது.

இது சரியான முடிவு.. இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களும் பண்பட்டவர்களே! அதுமட்டுமல்லாமல் நேரடியாக போட்டியில் கலந்துகொள்வது தடுக்கப்பட்டு மன்றத்தின் ஈடுபாடு அறிந்து போட்டியில் பங்கேற்க ஏதுவாக இருக்கும்... இந்த விதி நிச்சயம் செய்யவேண்டும்.. வீண் கள்ள ஓட்டுகள் விழாத வண்ணம் நேர்மையாக வாக்கெடுப்பு நடக்கும்6. இதுவரை ஓட்டளித்தவர்கள் என்று அவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியவேண்டும் (இது மற்ற உறுப்பினர்களையும் ஓட்டுபோட வரவழைக்கும்)

இது கண்டிப்பாக வேண்டாம்.. மனச் சங்கடம் வர வாய்ப்புண்டு.

7. ஒருவர் தனிமடலில் கவிதை அனுப்பியவுடனே அதைப் வெளியிடாமல், கவிதைப்போட்டிக்கான நேரம் முடிந்தபின்பு மொத்தமாக எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் வெளியிடவேண்டும்.

கவிதைகள் அதிகமாக நமக்கு வருகிறது. நாம் கொடுக்கும் வாக்குக் கால அளவுக்குள் படித்து முடித்துவிடுவது என்பது சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆகையால் இத்தகைய பிரச்சனை. இருப்பினும் பென்ஸுக்கு இந்த விதியை ஆலோசனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.

8. கவிதைப்போட்டிக்கு ஓட்டளிக்கும்படி தனிமடலில் பாப்-அப் ஆவதுபோல், ஆகவேண்டும் (சாத்தியமானால்)

இது எல்லாருக்கும் வந்து தொந்தரவு செய்யுமே!


மேலும் ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பதே சரியானது. Multiple Choice வைத்தால் நிறைய ஓட்டு போடுவதற்கு வாய்ப்பாகிவிடும்.

ஓட்டு கிடைக்காதவர்கள் வருத்தப்படக் கூடாது. மேலும் பணி செய்யவேண்டும். அடுத்தமுறை முதலிடத்தில் வரவேண்டுமென்ற உழைப்பு இருக்கவேண்டும்.. சோர்ந்து போவது கவிஞர்களுக்கு அழகல்ல.. அத்தோடு இங்கே வாக்களிப்பவர்கள் குறைவே. தேர்தலில் சிலர் டெபாஸிட் இழப்பதில்லையா? அதற்காக அவர்கள் அரசியலை விட்டே அல்லது அடுத்த தேர்தலில் நிற்காமலா போய்விடுகிறார்கள்?

நம் மன்றக் கவிஞர்கள் அப்படி நினைக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

.

ஆதவா
11-06-2007, 12:19 PM
அதோடு.. கவிதைப் போட்டி, நடத்தப்படும் நாள், நிறுத்தப்படும் நாள், வாக்கு முடியும் நாள் போன்றவை அறிவித்து அந்த தேதிகளில் மாதந்தோறும் நடைபெறவேண்டும்.. க.போ 8 போல புதிய முறைகளில் நடத்தப்பட்டால் அது இன்னும் பலரை ஈர்க்கும்.

பென்ஸ்
11-06-2007, 01:09 PM
இந்த திரியின் நோக்கமே விதிமுறைகள் , ஆலோசனைகள் மன்றத்துமக்களிடம் இருந்து பெற்று அதில் சிறந்ததை விதிமுறைகளாக வைக்க வேண்டும் என்பதுதான்...
எந்த விதியையும் எழுதும் போது அதில் "நல்லது, கெட்டது" என்று இரு பக்கங்கள் இருக்கும். அதை மன்ற நிர்வாக குழுவும், மேற்பார்வையாளர்களும் ஆலோசித்து முடிவேடுக்கபடும்.
கடந்த 7 போட்டிகளில் கிடைத்த சறுக்கல்கள், பாடங்களை கொண்டே இந்த விதிமுறைகள் வழிவகுக்க பட்டுள்ளன. ஆலோசனைகளை தொடர்ந்து கொடுங்கள் பரிசீலிக்கபடும். உங்கள் ஆலோசனை செயலில் இல்லை என்றால் கலங்க வேண்டாம் அது நிலுவையில் இருக்கிறது...

ஓவியா
11-06-2007, 01:16 PM
நன்றி

சக்தி
11-06-2007, 01:44 PM
மிக நல்ல விதிமுறைகள் வரவேற்கிறேன். என் கருத்து என்னவென்றால் குறைந்தது மூன்று வாக்குகள் வைக்கலாம். ஆனால் தனது பதிப்பை படைத்த ஒருவர் தனது கவிக்கு வாக்களிக்க கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் தனது கவிதையின் நிஜமான வரவெற்பை அறிந்து தன்னை மேம்படித்திக்கொள்ள முடியும்.

ஷீ-நிசி
11-06-2007, 03:04 PM
5. கவிதைப்போட்டி பண்பட்டவர் பகுதியில் நடத்தபடவேண்டும்.
காரணம் புதிய பயனர் உருவாக்கி கள்ள ஓட்டு போட முயற்சித்தாலும் கள்ள ஓட்டு போடமுடியாது.

இது சரியான முடிவு.. இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களும் பண்பட்டவர்களே! அதுமட்டுமல்லாமல் நேரடியாக போட்டியில் கலந்துகொள்வது தடுக்கப்பட்டு மன்றத்தின் ஈடுபாடு அறிந்து போட்டியில் பங்கேற்க ஏதுவாக இருக்கும்... இந்த விதி நிச்சயம் செய்யவேண்டும்.. வீண் கள்ள ஓட்டுகள் விழாத வண்ணம் நேர்மையாக வாக்கெடுப்பு நடக்கும்6. இதுவரை ஓட்டளித்தவர்கள் என்று அவர்களின் பெயர்கள் எல்லோருக்கும் தெரியவேண்டும் (இது மற்ற உறுப்பினர்களையும் ஓட்டுபோட வரவழைக்கும்)

இது கண்டிப்பாக வேண்டாம்.. மனச் சங்கடம் வர வாய்ப்புண்டு.

ஏற்றுக்கொள்கிறேன் ஓவி!


ஷீ,, மற்ற அலோசனைகள் அனைத்தும் சிறப்பாக இருக்கு, அந்த போப் ஆப் ஆப்ஷேன், நான் முன்பே கூறிவிட்டேன், மீண்டும் கூறி அதனை பரிசலில் வைத்த உங்கள் ஆசை நிரைவேற எனது வாழ்த்துக்கள்..

நன்றி ஓவி!

ஷீ-நிசி
11-06-2007, 03:10 PM
[QUOTE=ஆதவா;221426] என்னைப் பொறுத்தவரை பென்ஸ் விதிகள், மற்றும் ஷீ-நிசி விதிகள் இரண்டுமே ஒன்றாக இருக்கிறது. அதில் மாற்றமில்லை என்றாலும் சிறு மாற்றம்..... ஷீ=நிசி அவர்களிடமிருந்து

5. கவிதைப்போட்டி பண்பட்டவர் பகுதியில் நடத்தபடவேண்டும்.
காரணம் புதிய பயனர் உருவாக்கி கள்ள ஓட்டு போட முயற்சித்தாலும் கள்ள ஓட்டு போடமுடியாது.

இது சரியான முடிவு.. இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களும் பண்பட்டவர்களே! அதுமட்டுமல்லாமல் நேரடியாக போட்டியில் கலந்துகொள்வது தடுக்கப்பட்டு மன்றத்தின் ஈடுபாடு அறிந்து போட்டியில் பங்கேற்க ஏதுவாக இருக்கும்... இந்த விதி நிச்சயம் செய்யவேண்டும்.. வீண் கள்ள ஓட்டுகள் விழாத வண்ணம் நேர்மையாக வாக்கெடுப்பு நடக்கும்


நான் சொன்னதை ஓவியா மறுத்தவிதம் என்னை ஏற்றுக்கொள்ளவைத்தது. அதை நான் வழிமொழிந்தேன். காரணம் புதிய கவிஞர்கள் ஓட்டளிக்க ஏதுவாகாமல் போய்விடும் என்று அவர் முன்வைத்த காரணம்.

அதன்பின்னர்தான் ஆதவாவின் கருத்தினை படித்தேன்.. உண்மைதான் ஓவியா, கிட்டத்தட்ட இன்று எல்லா கவிஞர்களுமே பண்பட்டவர் நிலையை அடைந்திருக்கிறார்களே! பண்பட்டவர் பகுதியில் நடத்தினால் கள்ள ஓட்டினை தடுக்க முடியுமே! யோசித்துப்பாருங்கள் ஓவி!

நன்றி ஆதவா.

வெற்றி
13-06-2007, 10:39 AM
எல்லா சட்ட திட்டங்களும் ஓ.கே...நன்றாக இருக்கிறது...முயர்சித்து பார்க்கலாம்...சரி....ஆனால்
ஓட்டு போட வைக்கிறது...குதிரைக்கு தண்ணீர் காட்டுவது போல் மிக சிரமான விசயம் ஆயிற்றே...??

அதற்க்கு வழி?????

கலைவேந்தன்
14-06-2007, 02:16 PM
பண்பட்டவர் என்ரால் என்ன்? நான் பண்பட்டவனா?

அமரன்
14-06-2007, 02:28 PM
பண்பட்டவர் என்ரால் என்ன்? நான் பண்பட்டவனா?
பண்பட்ட உறுப்பினர் அனுமதி விண்ணப்பம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5458)
இங்கே விண்ணப்பம் செய்யுங்கள். கிடைக்கும்.

பென்ஸ்
14-06-2007, 02:39 PM
பண்பட்டவர் என்ரால் என்ன்? நான் பண்பட்டவனா?
நண்பரே...
பண்பட்டவர் என்பது மன்றத்தில் உங்கள் பதிவின் முதிற்சிக்கு மன்றம் கொடுக்கும் அங்கிகாரம்.. அதாவது உங்களை பண்பு உடையவர் என்று அங்கிகரிப்பது.
இதனால் சில கூடுதல் பகுதிகளை நீங்கள் பார்வையிட முடியும்...
புத்தகங்கள் பதிவிறக்க முடியும்...
வாக்களிக்க முடியும்
இன்னும் பல...


உங்கள் பண்பட்டவர் தகுதிக்கு நான் நிவாகத்திடம் பரிந்துரைக்கிறென்...

lenram80
19-06-2007, 03:58 PM
மன்ற நிர்வாகிகளே,
1.கவிதை போட்டிக்கு மன்றத்தின் எல்லா உறுப்பினர்களாலும் ஓட்டு போட முடியுமா?
2.மேலே உள்ள கேள்விக்குப் பதில் 'இல்லை' என்றல், ஓட்டு உரிமை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

பதில் அவசியம் வேண்டும்

ஆதவா
19-06-2007, 04:01 PM
மன்ற நிர்வாகிகளே,
1.கவிதை போட்டிக்கு மன்றத்தின் எல்லா உறுப்பினர்களாலும் ஓட்டு போட முடியுமா?
2.மேலே உள்ள கேள்விக்குப் பதில் 'இல்லை' என்றல், ஓட்டு உரிமை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

பதில் அவசியம் வேண்டும்கவிதைப் போட்டிக்கு பண்பட்ட உரிமைகொண்ட அனைவரும் ஓட்டு போடலாம்.... புதிதாக வந்தவர்கள் அதாவது பதிப்பைத் தொடராமல் இருப்பவர்கள் ஒரே கணிணியில் வந்து ஏமாற்றுபவர்கள் போன்றவர்களுக்கு உரிமை மறுக்கப்படும்....

ஓவியா
05-08-2007, 09:41 PM
வணக்கம்.

இளசு/பென்சு அவர்களுக்கு இக்கேள்வி. மற்றவர்களும் அலோசனை கூறலாம். நன்றி.இதோ போட்டி தேதிகள் :
போட்டி முடிவடையும் நாள் : 20− ஆகஸ்ட் - 2007வாக்கெடுப்பு முடிவடையும் நாள்: 31− ஆகஸ்ட்- 2007
கவிதைப் போட்டி முடிவுகள் : 31− ஆகஸ்ட்- 2007


ஒரு கவிதை போட்டிக்கு ஏன் இரண்டு வார இடைவெளி கொடுக்கின்றீர்கள் இது சற்று அதிகமாக தெரிவது போல் உள்ளது, கவிதையை வடித்து கொடுக்க ஒரு வாரமும் அல்லது 10 நாட்களும், ஓட்டு போட ஒரு வாரமும் போதுமானதாக இருக்கலாம் என்பது என் சுய சிந்தனை. மொத்ததில் அனைத்து கவிஞர்களும் 10 நாட்களுக்குள் 2 முறையாவது மன்றத்தில் நுலைகின்றனர். ஆக கவிதை வடித்து கொடுக்க 14 நாட்களைவிட 10 நாட்கள் போதுமான*வையே.

3 வாரம் காத்திருப்பது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். இன்று திகதி 5 இந்த போட்டி முடிவடையும் நாள் 31 அக சுமார் 26 நாட்கள் செலவிடுகிறேம். இதனை 17 நாட்களாக* சுருக்கலாம், அப்படி செய்தால் இன்னும் அதிகம் போட்டிகள் வைத்து அதிக மன்ற அன்புள்ளங்களுக்கு பரிசு (மெடல்) கொடுத்து அவர்களை மகிழ்ச்சி வெ(ல்ல)ள்ளதில் ஆழ்த்தலாம்.

மன்ற மேற்ப்பார்வையாளர்களின் ஆலோசனையை எதிர்ப்பார்கின்றேன்.

என்ன முடிவென்றாலும் மன்றத்தின் முடிவிற்க்கு என்றும் தலை வணங்குவேன்.

நன்றி.
வணக்கம்

− ஓவியா

இளசு
15-08-2007, 06:58 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11366

கவிதைப்போட்டி −9 முடிவுற இன்னும் சில தினங்களே உள்ளன!

கவிகள் நிறைந்த இம்மன்றத்திலிருந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்..

வாருங்கள் உங்கள் ஆக்கங்களோடு!

ஓவியா
01-09-2007, 09:27 PM
மக்களே கடந்த கவிதை போட்டியின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது, நானும் கலந்துக்கொள்ளவில்லை, ஓட்டும் போடவில்லை அதனால் என்னை மன்னித்து விடுங்கள். (ஃபர்சனல் காரணமுண்டு)

இந்த திரியை மேலே எழுப்புகிறேன், பங்களிப்பு குறைந்ததற்க்கான காரணத்தை அறிய மீண்டும் ஒரு அலசல் செய்து பார்ப்போம்.

என் ஆலோசனை,
முதல் வெற்றியாளருக்கு தங்க பதக்கம் எனபது போல் இரண்டாம் மூன்றாம் இடத்தில் உள்ளவர்களுக்கும் பதக்கம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

பூமகள்
10-09-2007, 07:03 PM
கவிதை என்ற தலைப்புடன் கவிதைப் போட்டி 10 தொடங்கிவிட்டது.
கவிதைத் திருவிழா தொடங்கியது போல் மன்றம் களைகட்டும் என்பது திண்ணம்.
நிச்சயம் நிறைய படைப்புகளை மன்றம் எதிர்பார்க்கலாம்.
நல்ல தலைப்பு.... "கவிதை..!!"

கவிபாட ஓடோடி வாங்க மன்றத்து அன்பு நெஞ்சங்களே....!!!!!!

அக்னி
10-09-2007, 07:05 PM
கவிபாட ஓடோடி வாங்க மன்றத்து அன்பு நெஞ்சங்களே....!!!!!!
நீங்களும் கொண்டோடி வாங்க...

இளசு
10-09-2007, 07:06 PM
மிக நேர்த்தியாக பத்தாவது போட்டியை வடிவமைத்த
அக்னி + நிர்வாகக்குழுவினருக்கு பாராட்டுகள்!

பலமான பங்களிப்புக்கு உத்தரவாதம் தரும் அமைப்பில் இப்போட்டி!
கலந்துகொள்வதும் வெற்றி பெறுவதும் கலகலப்பாய் இருக்கும்!

லக்கலக்கலக்கல -க்கலக்கலாய் கலக்குங்க மக்கா!

ஓவியன்
10-09-2007, 07:30 PM
கவிதைக்கே கவிதையா.............

நம்ம செல்வன் அண்ணா
கவிதை
கதை, விதை, தைனு ஓடி வரப் போகிறாரே...............!!!

பூமகள்
10-09-2007, 07:32 PM
நீங்களும் கொண்டோடி வாங்க...

கண்டிப்பா வரேனுங்க அக்னியாரே...!! :thumbsup:

உங்க பேச்சுக்கு மறுபேச்சேது??:)

கவலப்படாதீங்க அண்ணா....!!:icon_03::icon_nono:

ஓவியன்
10-09-2007, 07:49 PM
கண்டிப்பா வரேனுங்க அக்னியாரே...!! :thumbsup:icon_03::icon_nono:

என்ன இது பூமகள் அக்னியைப் பார்த்தே அக்னி யாரே? , என்று கேட்குறீங்களே, உங்களுக்கு என்னாச்சு................? :D

அமரன்
10-09-2007, 07:59 PM
இது ஆலோசனைத்திரி மக்களே. சும்ம ஒரு ஞாபகமூட்டல். அவ்வளவுதான்.

அக்னி
10-09-2007, 09:34 PM
மன்னிக்க நண்பா...
ஆர்வக்கோளாறில் அரட்டை அடித்து விட்டோம்...

சாராகுமார்
11-09-2007, 06:07 PM
கவிதைக்கு போட்டி...
தலைப்பு கவிதை
அருமையான தலைப்பு.
கலக்குக்க மக்கா கலக்குக்க.

இலக்கியன்
11-09-2007, 08:04 PM
கவிதைப்போட்டி அரம்பித்து விட்டார்கல் கலக்குங்கள் கவிஞர்களே

பூமகள்
12-09-2007, 07:06 AM
இது ஆலோசனைத்திரி மக்களே. சும்ம ஒரு ஞாபகமூட்டல். அவ்வளவுதான்.

மன்னிக்கவும் அமர் அண்ணா.
ஆர்வக்கோளாரில் அனைவரையும் கவி படைக்க அழைத்துவிட்டேன். நான் தான் முதலில் ஆரம்பித்தேன். மன்னியுங்கள் சகோதரரே..!:traurig001:

அமரன்
12-09-2007, 07:11 AM
மக்களே...!ச்சும்மா எல்லை மீறிப்போகாது இருக்க போட்ட பதிவு அது. பதிவு வேண்டாம் எனும் எச்சரிக்கை அல்ல.
ஓவியா அக்காவின் இறுதி இரு ஆலோசனைகளும் இப்போட்டியில் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது கவனித்தீர்களா உறவுகளே...!

சிவா.ஜி
12-09-2007, 08:59 AM
மன்றப் பொறுப்பாளர்களுக்கு மனமார்ந்த நன்றி.
ஒரு வேண்டுகோள். போட்டியில் பங்கு பெறும் கவிதைகள் போட்டி முடிந்ததும் அனாதையாகிவிடுகிறது.மற்ற கவிதைகளைவிட போட்டிக்கவிதைக்காக கூடுதலாக சிந்தித்து கவிஞர்களால் எழுதப்படும் கவிதைகள் ஒரு பின்னூட்டம் கூட இல்லாமல் முடங்கிப்போய் விடுகிறது.எனவே அந்த கவிதைகளைப் படைப்பாளிகள் தங்களின் புதிய திரியாக கவிதைகள் பகுதியில் பதிக்க அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.ஏனென்றால் ஒருவர் புதியதாக ஒரு கவிதையை பதிக்கும்போது பலரின் மிக அருமையான பின்னூட்டங்கள் கிடைக்கிறது.ஆனால் போட்டிக் கவிதைகளின் நிலை பரிதாபமாக இருக்கிறது.கடந்த போட்டிகளில் பங்குபெற்ற கவிதைகளைப் பார்த்தால் தெரியும். பரிசு கிடைக்கவில்லையெனினும், குறைந்தபட்சம் சில பின்னூட்டங்களாவது கிடைத்தால்,படைத்தவருக்கு ஒரு ஆறுதல்.
என் வேண்டுகோளைப் பரிசீலிப்பீர்களா...நன்பர்களே?

அமரன்
12-09-2007, 09:03 AM
சிவா....உங்கள் ஆலோசனை அருமை. அங்கீகாரம் தாண்டி விமர்சனம் வலிமையானது;முக்கியமானது. பரீசீலிக்கின்றோம். சிறந்த யோசனைக்கு நன்றி சிவா..தொடருங்கள்..

சிவா.ஜி
12-09-2007, 10:00 AM
மிக்க நன்றி அமரன்.

அறிஞர்
12-09-2007, 11:30 PM
சிவா ஜி.. தங்களின் எண்ணம் விரைவில் அமல்படுத்தபடும்...

ஓவியா
13-09-2007, 04:25 PM
மக்களே...!ச்சும்மா எல்லை மீறிப்போகாது இருக்க போட்ட பதிவு அது. பதிவு வேண்டாம் எனும் எச்சரிக்கை அல்ல.
ஓவியா அக்காவின் இறுதி இரு ஆலோசனைகளும் இப்போட்டியில் ஓரளவு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது கவனித்தீர்களா உறவுகளே...!

மிக்க நன்றி.

ஓவியன்
30-09-2007, 05:46 AM
நண்பர்களே கவிதைப் போட்டிக்கான உங்கள் பொன்னான வாக்குகளைப் பதிவதற்கான இறுதி நாள் இன்றைய தினமே, ஆகவே இதுவரை உங்கள் வாக்கினைப் பதிவு செய்யாதவர்கள் இன்றே உங்கள் வாக்கினை இந்த திரியிலே (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=277508#post277508) பதிவு செய்யுங்கள்.

அமரன்
29-10-2007, 08:41 PM
தமிழகத்திலும் ஈழத்திலும்ம் மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில் மழை என்னும் தலைப்பில் கவிதைப்போட்டி. பொருத்தமான தேர்வு. காணும் காட்சியை சொற்களில் வடித்து, 30 வரிகளுக்குள் அடக்கி விட்டால் போட்டியில் பங்கெடுக்க கவிதை தயார். அனைத்து அன்பர்களும் கலந்து சிறப்பியுங்கள். வெற்றி பெற முன்வாழ்த்துகள்.

அக்னி
02-11-2007, 11:00 AM
நண்பர்களே...
இன்னும் ஒரு கவிதை கூட போட்டிக்கு வரவில்லையே...
ஏன் இந்த தாமதம்..?
கார்முகிலின் பிரசவம், உங்கள் கவிதைகளில் மழை பொழியட்டும்...
மழைத்துளியின் சிதறு சத்தம், சந்தம் எழுப்பட்டும்...

கஜினி
02-11-2007, 11:06 AM
கவிதையை யாருக்கு அனுப்ப வேண்டும். மழை என்பது கவிதை தலைப்பா? நானும் கலந்து கொள்ளலாமா? என்று இறுதிநாள்.

அக்னி
02-11-2007, 11:19 AM
கவிதையை யாருக்கு அனுப்ப வேண்டும். மழை என்பது கவிதை தலைப்பா? நானும் கலந்து கொள்ளலாமா? என்று இறுதிநாள்.
நிச்சயமாகக் கலந்து கொள்ளுங்கள் கஜினி அவர்களே...
கவிதைப் போட்டி 11 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13044)
இங்கே சென்று பாருங்கள். முழுமையான விபரங்கள் உள்ளன.
விதிகளுக்கிணங்க, கவிதையை என்னுடைய தனிமடலுக்கு அனுப்பி வையுங்கள்...

அக்னி
09-11-2007, 11:34 PM
நண்பர்களே...
கவிதைப் போட்டியில் பங்குகொள்ளத் தயக்கமேன்?
விரைந்து வாருங்கள்... மழையெனப் பொழிய வாருங்கள்...

அக்னி
14-11-2007, 09:38 PM
மேகக்கவிகள் கவி பொழிய மறுப்பதேன்...?
கவி"மழை" வெள்ளமாகுதல் அழிவல்ல... ஆனந்தம்...
இறுதிநாள் இன்று...
பொழியுங்கள் பொழுதாகுமுன்பு...

ஆர்.ஈஸ்வரன்
13-12-2007, 10:25 AM
புதிய கவிதைப் போட்டியை எப்போது ஆரம்பிப்பீர்கள்

சுகந்தப்ரீதன்
13-12-2007, 10:37 AM
இங்க பாருங்கப்பா ஆர்வ கோளாறுல நம்ப ஈஸ்வரு அலையறத..?அப்ப அடுத்தமுறை போட்டியில வெல்ல போறது அவராதான் இருக்கும் போலிருக்கு..? இத்தனைநாளா மன்றத்துல இருக்குற எங்ககிட்டயே எப்பன்னு சொல்லாமத்தான் நடத்துறாரு அக்னியாரு.. கவிதை போட்டிய... முடிவபாத்துதான் கவிதை போட்டி நடந்ததே எனக்கு தெரிய வரும்.. பாப்போம் உங்களுக்காவது சொல்லுறாரான்னு..!

ஓவியன்
13-12-2007, 11:37 AM
புதிய கவிதைப் போட்டியை எப்போது ஆரம்பிப்பீர்கள்

இதற்கு தனித்திரி வேண்டியதில்லை ஈஸ்வர்..
ஆதலால் இந்த திரியுடன் இணைக்கின்றேன்.......

மன்றத்தின் அடுத்த கவிதைப் போட்டி வெகு விரைவில் ஆரம்பிக்கும்...

மலர்
13-12-2007, 02:45 PM
இத்தனைநாளா மன்றத்துல இருக்குற எங்ககிட்டயே எப்பன்னு சொல்லாமத்தான் நடத்துறாரு அக்னியாரு.. கவிதை போட்டிய... முடிவபாத்துதான் கவிதை போட்டி நடந்ததே எனக்கு தெரிய வரும்.. பாப்போம் உங்களுக்காவது சொல்லுறாரான்னு..! அடப்பாவி.. எப்பவும் முகத்தை மூடிட்டே இருந்தன்னா எப்படி தெரியும்... கொஞ்சம் கண்ண திறந்து பாரு..
இப்போ கூட நகைச்சுவைப்போட்டி−04-அறிவிப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13786) வந்திருக்கு..
பாத்திங்களா...சர்

அக்னி
14-12-2007, 01:57 PM
முடிவபாத்துதான் கவிதை போட்டி நடந்ததே எனக்கு தெரிய வரும்.. பாப்போம் உங்களுக்காவது சொல்லுறாரான்னு..!
சுகந்தப்ரீதன்...
மன்றத்தில் உள்ள அனைவருக்கும் தனிமடல் மூலம் தெரிவிப்பது முடியாத காரியம்.
விரைவில், முக்கியமான திரிகள் தொடங்கப்படும்போது, கட்டாய பார்வைக்கு அவை வைக்கப்படும்.
இதற்கான மேம்படுத்தல்கள், நிர்வாகியினால் மேற்கொள்ளப்படுகின்றன.
இனிவரும் காலங்களில், முக்கிய திரிகள் அனைவரையும் தேடிவந்து பார்க்கச்சொல்லும்...
அதுவரை, நீங்கள்தான் கவனத்திற்கொள்ள வேண்டும்.
கூடுதலாக போட்டிகள் தொடங்கப்படும்போது, தொடங்குபவர்களின் கையெழுத்தில் அறிவித்தல்களைக் காணலாம்.
கொஞ்சம் சிரமம் பாராது கவனியுங்கள்...:)

சுகந்தப்ரீதன்
15-12-2007, 12:45 PM
அடப்பாவி.. எப்பவும் முகத்தை மூடிட்டே இருந்தன்னா எப்படி தெரியும்... கொஞ்சம் கண்ண திறந்து பாரு..
இப்போ கூட நகைச்சுவைப்போட்டி−04-அறிவிப்பு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13786) வந்திருக்கு..
பாத்திங்களா...சர்
மலரு பேசாம எப்ப எப்ப எந்த எந்த போட்டி நடக்குதுன்னு நீயே எல்லோருக்கும் தெரிவிக்கலாமே..?:sprachlos020: மன்றத்துல உருப்படியா ஒரு வேலையாவது பன்னுறங்கிற திருப்தி:icon_rollout: உனக்கும் கிடைக்குமில்ல...?!

சுகந்தப்ரீதன்...
அதுவரை, நீங்கள்தான் கவனத்திற்கொள்ள வேண்டும்.
கூடுதலாக போட்டிகள் தொடங்கப்படும்போது, தொடங்குபவர்களின் கையெழுத்தில் அறிவித்தல்களைக் காணலாம்.
கொஞ்சம் சிரமம் பாராது கவனியுங்கள்...:)
மிக்க நன்றி அக்னியாரே... நீங்கள் சொல்வது போல் நானும் கையெழுத்தில் பார்க்கும் போது போட்டிக்கான கடைசிநாள் கடந்திருக்கும்.. அது என்னுடைய தவறுதான்..உங்கள் தவறு அல்ல..! இனி முழிச்சுகுறேன்.. வேண்டுமென்றே சீண்டியமைக்கு என்னை மன்னிக்கவும்..!

ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:00 AM
அடுத்த கவிதைப் போட்டி விரைவில் ஆரம்பியுங்கள். அடிக்கடி ஆரம்பித்தால் கவிதையும், கவிஞர்களும் வளம் பெறுவார்கள்

அக்னி
20-12-2007, 12:11 PM
மிக்க நன்றி அக்னியாரே... நீங்கள் சொல்வது போல் நானும் கையெழுத்தில் பார்க்கும் போது போட்டிக்கான கடைசிநாள் கடந்திருக்கும்.. அது என்னுடைய தவறுதான்..உங்கள் தவறு அல்ல..! இனி முழிச்சுகுறேன்.. வேண்டுமென்றே சீண்டியமைக்கு என்னை மன்னிக்கவும்..!
இதற்கு எதற்கு மன்னிப்பு?
நான் தவறுதலாக எண்ணவேயில்லை. பலரது ஆதங்கம், உங்கள் கேள்வியாக வெளிப்பட்டது. ஏதுவான நிலையைக் கூறினேன்.
நீங்கள் புரிந்து கொண்டது போல, ஆதங்கப்படும் அனைவரும் புரிந்து கொண்டாலே போதும்.

அக்னி
20-12-2007, 12:14 PM
அடுத்த கவிதைப் போட்டி விரைவில் ஆரம்பியுங்கள். அடிக்கடி ஆரம்பித்தால் கவிதையும், கவிஞர்களும் வளம் பெறுவார்கள்
நண்பரே..,
கவிதைப்போட்டி - ஆலோசனைகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10066) என்ற இத்திரியில் உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
மேலுள்ள உங்கள் பதிவை, கவிதைப்போட்டிகள் பகுதியில் புதுத்திரியாக தொடங்கியிருந்தீர்கள்.
அத்திரியும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

பொறுப்பாளர்
~அக்னி

விகடகவி
05-05-2008, 04:01 AM
நானும் கவிதை போட்டியில் கலந்துக்கொள்ள இயலுமா?
நான் புதிய கவிஞன்..

சூரியன்
05-05-2008, 04:59 AM
இந்த மாதத்திற்கான கவிதை போட்டி.
இதோ (http://http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15554)

விகடகவி
06-05-2008, 06:28 AM
உந்தன் செய்திக்கு நன்றி சூரியன் ..

பூமகள்
06-05-2008, 06:46 AM
இந்த மாதத்திற்கான கவிதை போட்டி.
இதோ (http://http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15554)
தம்பி சூரியன்,

சுட்டி சரியான பக்கத்தைத் திறக்கவில்லையே..!!
சின்ன திருத்தம்...!!

சரியான சுட்டி இதோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15554)..!!

சூரியன்
06-05-2008, 03:29 PM
தம்பி சூரியன்,

சுட்டி சரியான பக்கத்தைத் திறக்கவில்லையே..!!
சின்ன திருத்தம்...!!

சரியான சுட்டி இதோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15554)..!!

சுட்டி காட்டியமைக்கு நன்றி அக்கா.:icon_b:

ஓவியா
06-05-2008, 05:11 PM
தம்பி சூரியன்,

சுட்டி சரியான பக்கத்தைத் திறக்கவில்லையே..!!
சின்ன திருத்தம்...!!

சரியான சுட்டி இதோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15554)..!!

"சுவடுகள்" என்றால் பல அர்த்தம் உண்டல்லவா!!!

அங்கே கொடுத்த "சுவடுகள்" என்பதற்க்கு என்ன அர்த்தம்?

அமரன்
06-05-2008, 05:12 PM
எந்த அர்த்தம் பொதித்து எழுதினாலும் சரிதான் அக்கா!

ஓவியா
06-05-2008, 05:17 PM
எந்த அர்த்தம் பொதித்து எழுதினாலும் சரிதான் அக்கா!

ஆகமொத்ததிலே எழுதினால் :icon_b::icon_b: சரிதான் என்று சொல்கிறாயா!!! :D

நன்றிங்க ஆபீசர்.

விகடகவி
07-05-2008, 01:49 AM
தம்பி சூரியன்,

சுட்டி சரியான பக்கத்தைத் திறக்கவில்லையே..!!
சின்ன திருத்தம்...!!

சரியான சுட்டி இதோ (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=15554)..!!

உந்தன் உதவிகு நன்றி...
இறையருள் உண்டாகட்டும்..

shibly591
11-05-2008, 06:03 AM
கவிதைப்போட்டியின் கவிதைகள் வாக்குகளுக்கு விடப்பட்டாயிற்றா?எங்கு சென்று வாக்களிப்பது?(கவிதைப்போட்டி-13 தொடர்பாக..)

அக்னி
11-05-2008, 12:20 PM
கவிதைப்போட்டியின் கவிதைகள் வாக்குகளுக்கு விடப்பட்டாயிற்றா?எங்கு சென்று வாக்களிப்பது?(கவிதைப்போட்டி-13 தொடர்பாக..)
நண்பரே, உங்கள் திரியை இங்கு இணைத்துள்ளேன்.
கவிதைப் போட்டிகள் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=82) திரியிலேயே அவை மிக விரைவில் வாக்களிப்பிற்காக வைக்கப்படும்.
எப்போதுமே கவிதைப் போட்டிகள் அங்கேயே நிகழ்த்தப்படுவதுண்டு.

அமரன்
11-05-2008, 07:36 PM
வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டு விட்டது. என் கையெழுத்துச் சுட்டியை தட்டி வாக்களிக்கலாம்..

நம்பிகோபாலன்
15-05-2008, 07:05 AM
ஷூநிசி, படக்கவிதை - முகத்துவாரம் போட்டி முடிவுகள் எந்த திரியில் உள்ளது...

ஆதி
21-07-2008, 12:41 PM
அமரன் சுட்டி http://http//www.tamilmantram.com/vb/showthread.php?t=10066 இவ்வாறு உள்ளது நடுவில் உள்ள //http//ஐ அகற்றவும்..

அமரன்
21-07-2008, 12:44 PM
கவனயீர்ப்புக்கு நன்றி ஆதி.. மாற்றி விட்டேன்.

ஓவியா
21-07-2008, 03:50 PM
ஒரு பங்கேற்ப்பாளருக்கு ஒரு கவிதைதான் சாலச்சிறந்ததாக இருக்கும்.

அன்மையகாலமாக அதிகமான கவிஞர்கள் வலம் வருகின்றனர், அதனால் தாராளமாக ஒருவருக்கு ஒரு கவிதை என்று விதிக்கலாம்.

வேண்டுமென்றால் இரண்டாக வைத்துக்கொள்ளலாம் :cool:

ஆனால் எத்தனை வேண்டுமென்றாலும் அனுப்பலாம் என்றால் போட்டியின் தரம் குறையும்.

தரமான போட்டிதான் மன்றத்திற்க்கு நல்லது.

போட்டியில் பங்கு பெறும் கவிதைகளில் முதல் பரிசை பெரும் கவிதையை அடுத்த மின்னிதழில் அவசியம் இடம்பெர செய்ய வேண்டும்.

நன்றி.


(பென்சு, எதிர் பதில் பிலிஸ்)

அமரன்
21-07-2008, 03:58 PM
கருத்துக்கு மனம் நிறைந்த நன்றி அக்கா..

கவிதைகளின் எண்ணிக்கை தொடர்பாக சொல்ல காலவகாசம் தேவை. வெற்றிபெறும் கவிதை மின்னிதழில் இடம்பெறச்செய்வது வரவேற்கத்தக்கது. என்னுள்ளும் தோன்றியது. மற்றவர்கள் கருத்துகளையும் பார்ப்போம்.

அறிஞர்
21-07-2008, 04:01 PM
சிறந்த கவிதைகளுக்கு மின்னிதழில் முன்னுரிமை உண்டு...

ஓவியா
21-07-2008, 04:10 PM
அமரன், அறிஞர் சார் அந்த ஒருவருக்கு ஒரு கவிதை அதையும் கொஞ்சம் ஆலோசனை செய்யுங்கள்.

நன்றி.

சூரியன்
21-07-2008, 04:13 PM
ஒருவருக்கு இரண்டு கவிதைகள் என்பது போதும்.
அதற்கு மேல் போகும் போது நன்றாக இருக்காது.
சிறந்த கவிதைக்கு மின்னிதழில் முன்னுரிமை அளிப்பதை நான் வரவேற்கின்றேன்.

ஓவியா
21-07-2008, 04:20 PM
ஒருவருக்கு இரண்டு கவிதைகள் என்பது போதும்.
அதற்கு மேல் போகும் போது நன்றாக இருக்காது.
சிறந்த கவிதைக்கு மின்னிதழில் முன்னுரிமை அளிப்பதை நான் வரவேற்கின்றேன்.

முடிவடையும் தினத்திற்க்கு முன் கவிதைகள் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் அதாவது 5 கவிதைக்கும் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் இரண்டாவது கவிதையை ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் ஒருவருக்கு ஒன்றுதான் என்றால் தமது யுக்தியையும் திறமையையும் ஒன்று சேர்த்து ஒரு சிறப்பான கவிதையை கவிஞர்கள் உருவாக்குவார்கள். இதுவே தரத்தின் சான்றிதழாக இருக்கும்.

சூரியன்
21-07-2008, 04:25 PM
அக்கா எனது கருத்து என்னவென்றால் ஒருவருக்கு இரண்டு கவிதை எனும்பொழுது
அவர்கள் ஒரு கவிதையில் இருந்து இன்னொருகவிதையை இன்னும் வித்தியாசமாக தருவார்கள்,இதனால் போட்டி இன்னும் சவாலாக இருக்கும்.
அதனால் தான் நான் இந்த கருத்தை கூறுகின்றேன்.

ஓவியா
21-07-2008, 04:33 PM
அக்கா எனது கருத்து என்னவென்றால் ஒருவருக்கு இரண்டு கவிதை எனும்பொழுது
அவர்கள் ஒரு கவிதையில் இருந்து இன்னொருகவிதையை இன்னும் வித்தியாசமாக தருவார்கள்,இதனால் போட்டி இன்னும் சவாலாக இருக்கும்.
அதனால் தான் நான் இந்த கருத்தை கூறுகின்றேன்.

சரிதான், ஆனால் 'தெ பெஸ்ட்' என்பது நடைமுறையில் ஒன்றுதானே, :D:D

ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற வாய்ப்பில் ஒரு கவிதைதான் சரியானதாக வரும், சரி உன் ஆசைப்படியே இருக்கட்டும்.

ஆனாலும் மற்றவர்களின் கருத்து என்னவென்று பொறுத்திருந்து காண்போம்.

சூரியன்
21-07-2008, 04:35 PM
ஒருவருக்கு ஒரு ஓட்டுதான்.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம் அக்கா.

அமரன்
21-07-2008, 04:42 PM
கவிதைகள் எண்ணிக்கை இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அக்கா...

கடந்தகால அனுபவங்கள் கவிதை எண்ணிக்கையில் தாக்கம் செலுத்திவிட்டன.

மனதை நிறைக்கும் கவிதைகளும் கவிஞர்களும் மன்றத்தின் வரப்பிசாதம்.. ஆனால் ஆரம்பகால கவிதைப்போட்டிகளில் பங்கெடுத்ததவர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது அண்மைக்கால எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை. சில போட்டிகளில் அதிக கவிஞர்கள் பங்கெடுப்பார்கள். வாக்காளர்கள் குறைந்து விடுவார்கள். அடுத்த போட்டியில் கவிஞர்கள் குறைந்து கவிதைகள் குறைய வாக்காளர்கள் அதிகமாவார்கள்.

ஆரம்பகாலம் முதல் கவிஞர்கள் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது போட்டியில் பங்கெடுக்கும் கவிதைகளின் எண்ணிக்கையும் திருப்தியானதாக இல்லை.

இந்த சீரற்ற நிலையில் உங்களைப்போன்றவர்களின் ஆலோசனைகள் நடதுனர் உள்ளிட்ட அனைவரையும் உற்சாகமாக்கும்.

தொடர்ந்து தாருங்கள் உற்சாகத்தை..

அக்னி
21-07-2008, 04:44 PM
இம்முறை இரு கவிதைகளை அனுமதிக்கலாம் என்று நினைக்கின்றேன்.
அதிக எண்ணிக்கையில் கவிதைகள் வருமாயின், அடுத்த போட்டியில் ஒரு கவிதை என்றாக்கலாம்.

ஆதி
21-07-2008, 04:50 PM
இம்முறை இரு கவிதைகளை அனுமதிக்கலாம் என்று நினைக்கின்றேன்.
அதிக எண்ணிக்கையில் கவிதைகள் வருமாயின், அடுத்த போட்டியில் ஒரு கவிதை என்றாக்கலாம்.

இதுவே என் கருத்தும்..

meera
22-07-2008, 04:08 AM
ஆஹா மீண்டும் ஆரம்பமா????

வாருங்கள் நண்பர்களே நாமும் தொடுக்கலாம் நம் கவிமாலையை.

அமரன்
28-07-2008, 02:07 PM
கவிதைப்போட்டி 14 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=16779)இற்கான கவிதைகளை அனுப்பும் இறுதித்தேதிக்கு
இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில்
வந்த கவிதைகளும் அனுப்பிய கவிஞர்களும் மிகவும் குறைவே..
அனைத்து கவிகளும் ஆர்வத்துடன் பங்கெடுக்க அன்பு வேண்டுகோள்..

நன்றி.

ஆதி
01-08-2008, 07:14 AM
அமர், கவிதைப்போட்டி 14ன் கவிதைகளை பார்வைக்கு வைக்கலாமே படிச்சிட்டு ஓட்டு குத்து ஓம்மில்ல..

அமரன்
01-08-2008, 10:28 AM
ஆலோசனைகளும் பிற ஈடுபாடுகளும் போட்டியாளர்களை மட்டுமல்லாது போட்டி நடத்துனர்களையும் உற்சாகமாக்கும்.. நன்றி ஆதி..

வாக்குச்சாவடி திறந்தாச்சு.. பதினாலாவது போட்டியில் பதின்மூன்று கவிதைகள்.. ஆழ்ந்து ஆய்ந்து வாக்கு போடுங்கள்.

தீபா
01-08-2008, 10:35 AM
அத்தனை கவிகளும்
முத்து

நன்றாகத்தான் செல்கிறது கவிஞர்களின் கவிதைப் போக்கு. கொஞ்சம் கவனமாக படித்து பிறகு எடுகிறேன் என் வாக்கு

ஆதி
01-08-2008, 10:38 AM
கவிஞர்களின் முகவரி ஆய்ந்தா அமர் ? :) திரியில் ஆழ்ந்துட்டேன் ஆய்ந்து முத்தெடுக்கிறேன்.

ஓவியா
15-12-2008, 08:16 AM
நன்றி அமரன்,

எனக்கு ஒரு கேள்வியுண்டு, கதை போட்டி நடந்து பல மாதங்கள் ஆக்கிவிட்டன. அப்படியிருக்க, கதை போட்டி வைக்கலாம் என்று 2-3 வாரமாக நாங்கள் ஒரு திரியை திறந்து, அதில் பலர் கலந்துக்கொள்ள ஆர்வமாக இருக்கும் பொழுது இப்படி திடிர் என்று பலமுறை நடைபெற்ற கவிதை போட்டியை மீண்டும் நடத்த முன் வந்ததின் காரணம் என்ன?

அனேகமாக ஒரு மாதம் எடுக்கும் இப்போட்டி கதை போட்டியாளர்களின் ஆர்வத்தை குறைக்குமே!!! ஆச்சர்யமாகவே இருக்கு.

கலந்து சிறப்பிக்கும் மன்ற உறவுகளுக்கும் அட்மீன் டீமுக்கும் என் வாழ்த்துக்கள்.

நன்றி.

அமரன்
15-12-2008, 08:31 AM
கதைப்போட்டி ஆலோசனை இழையில் சொன்னது போல சில கதைப்போட்டி ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை நீங்கள் சொன்ன புதியவை. அந்தப் புதியவையுடன் கதைப்போட்டி புதுப்பொலிவுடன் திகழ்ந்தால் சிறப்பு என்று நினைத்தே இந்தப் போட்டி தொடங்கப்பட்டது.

ஓவியா
15-12-2008, 08:38 AM
கதைப்போட்டி ஆலோசனை இழையில் சொன்னது போல சில கதைப்போட்டி ஆலோசனைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை நீங்கள் சொன்ன புதியவை. அந்தப் புதியவையுடன் கதைப்போட்டி புதுப்பொலிவுடன் திகழ்ந்தால் சிறப்பு என்று நினைத்தே இந்தப் போட்டி தொடங்கப்பட்டது.

அலோசனை செய்து, ஆர்வமாக இருக்கும் உறவுகளுக்காக அந்த புதிய பொலிவுடன் முதலில் கதை போட்டி தொடங்கியிருக்கலாமே!! கூடுதலான கதைகள் வந்து போட்டி சிறப்பாக நடைபெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. அது, மக்களின் ஆர்வத்தை மன்றம் தட்டிக்கொடுப்பாதாக இருக்குமே!!

எது எப்படியோ. அட்மீன் டீம் கலந்து ஆலோசித்து நடமுறை படுத்துங்கள், மன்ற உறவுகள் கலந்து சிறப்பிக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

பதிலுக்கு நன்றி அமரன்.

ஆதி
15-12-2008, 08:53 AM
ஒருவர் எத்தனை கவிதைகள் அணுப்பலாம் அமர் ?

அமரன்
15-12-2008, 08:55 AM
ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஆதி. அங்கே சேர்த்து விட்டேன்.

நிரன்
15-12-2008, 02:16 PM
உங்கள் கவித்திறனுக்கு தீனி கொடுக்கும் வகையில் மன்றத்தால் நடத்தப்படும் கவிதைப்போட்டித்தொடரின் பதினாறாவது போட்டி நத்தார், ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, தைப்பொங்கல், இன்னும் விடுபட்ட அனைத்து நன்னாட்களையும் முன்னிட்டு நடத்தப்படுகிறது.

சிறந்த கவிதைகள் தமிழ்மன்றத்தில் மின்னிதழில் (நந்தவனத்தில்) வெளியிடப்படும்.

தலைப்பு : புதிதாய் ஒரு பூமி.

அனுப்பவேண்டிய கடைசித்திகதி : 31.12.2008

ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்

வாக்கெடுப்பு தொடங்கும் திகதி : 01.01.2009இதனை நான் பெரிதும் வரவேற்கிறேன்... மன்ற கவிஞ்ஞர்கள்
கலக்குவார்கள் என்று நினைக்கிறேன்....

சிறப்பிக்கும் அனைத்து உள்ளத்திற்கும் என் வாழ்த்துக்கள்.. ;)
கலந்திடுங்கள் கலக்குங்கள்....