PDA

View Full Version : நினைவுகளோடு



இனியவள்
10-06-2007, 06:07 PM
ஒரு பொன்வேனிற் காலத்தின்
இறுதி நேரமிது.....
பாசமாய் பழகிய
நட்புள்ளங்களை
பிரிந்திடும்
வேதனை மிகு பொழுதிது..........

எங்கோ இருந்த
எம்மையும் சொந்தங்களாக்கி
சந்தோசங்களை அள்ளித் தந்த
கல்வி நிலையம்.............
ஆசிரியர்களின் கற்பித்தலோடு
கலந்த நகைச்சுவைகள்..............
.நாம் அடித்த அரட்டைகள்.......
துயர் துடைத்த
நட்பின் கரங்கள்...........
கிளை பரப்பிய
ஒற்றை மாமரம்............
வாசலில் கோலமிட்ட
காகிதப் பூ மரம்...........
என்று
அத்தனை தடயங்களும்
இனி.......
ஞாபகங்களில்...........

வாரம் ஒரு
தொலைபேசி அழைப்பு
மாதத்திற்கொரு மடல்
என்று - நாம்
நினைத்த நினைவுகள்
இன்னும்
எத்தனை காலத்திற்கு
தொடருமோ....?

மீண்டும் எங்கே
சந்திப்போம்
புரியவில்லை..........
எங்கேனும் பார்த்திட்டால்
வணக்கம் சொல்லி
வார்த்தையை உச்சரிக்க
தயாராகிறது மனசு.......

நேற்று........
நாம் பகிர்ந்த பொழுதுகளை
பிரிவேடுகள் சுமந்திட
கையெழுத்திட்டு
பிரிகிறோம் - நம்
நினைவுகளோடு.....!

அமரன்
10-06-2007, 06:53 PM
எங்கோ இருந்த
எம்மையும் சொந்தங்களாக்கி
சந்தோசங்களை அள்ளித் தந்த
கல்வி நிலையம்.............
ஆசிரியர்களின் கற்பித்தலோடு
கலந்த நகைச்சுவைகள்..............
.நாம் அடித்த அரட்டைகள்.......
துயர் துடைத்த
நட்பின் கரங்கள்...........
கிளை பரப்பிய
ஒற்றை மாமரம்............
வாசலில் கோலமிட்ட
காகிதப் பூ மரம்...........
என்று
அத்தனை தடயங்களும்
இனி.......
ஞாபகங்களில்...........


ஞாபவங்களிலாவது
நிரந்தரமாக இருக்கட்டும்
என்றும் இனிக்கட்டும்.
பாராட்டுகள் இனியவள்.
நன்றிகள் ஞாபகத்தில் மறைந்திருந்த நினைவுகளை எழுப்பியதற்கு.

சிவா.ஜி
11-06-2007, 04:28 AM
அது ஒரு பொற்காலம். எப்போது நினைவூட்டினாலும் தித்திக்கிறது. பிரிந்த அந்த பொழுது மட்டும் துக்கிக்கிறது. உணர்வுள்ள கவிதை. அழகான சித்தரிப்பு. பாராட்டுக்கள் இனியவள்.