PDA

View Full Version : வாழ்க்கை நிஜம்



இனியவள்
10-06-2007, 05:56 PM
வாழ்க்கை நிஜம்
இல்லை என்பதற்காக
அதை நீ வெறுக்காதே
வாழ்க்கை உன்னை
வெறுக்கும் வரை...

சிவா.ஜி
11-06-2007, 04:18 AM
வாழ்க்கை நிஜமில்லையென்று யார் சொன்னது?
அதை வெறுக்கிறேன் என்று யார் சொன்னது?
அது என்னை வெறுக்குமென்று யார் சொன்னது?
அதை வெறுப்பேன் என்று யார் சொன்னது?
என் வாழ்க்கை என்னுடையது
அது எப்படியிருப்பினும் அழகானது
வாழுமட்டும் வாழ்ந்து பார்ப்போம்
கவிஞன் சொன்னது
வாழு வாழவிடு தத்துவம் எனக்கு பிடித்தது!

இளசு
13-06-2007, 08:40 PM
இனியவளின் கவிதையும்
சிவா.ஜியின் விளைவுக்கவிதையும்
இரண்டுமே சுவை..
இருவருக்கும் பாராட்டுகள்...

அமரன்
17-07-2007, 09:56 AM
வாழ்க்கை உன்னை
வெறுக்கும் வரை
வாழ்ந்து விடு.....

வாழ்க்கையை நீ
வெறுக்கும் வரை அல்ல...


நல்ல தத்துவம்..பாராட்டுக்கள் இனியவள்...
சிவாவின் பதில் சிந்திக்க வைக்கும் தித்திப்பு. பாராட்டுக்கள்..

இனியவள்
17-07-2007, 10:15 AM
வாழ்க்கை நிஜமில்லையென்று யார் சொன்னது?
அதை வெறுக்கிறேன் என்று யார் சொன்னது?
அது என்னை வெறுக்குமென்று யார் சொன்னது?
அதை வெறுப்பேன் என்று யார் சொன்னது?
என் வாழ்க்கை என்னுடையது
அது எப்படியிருப்பினும் அழகானது
வாழுமட்டும் வாழ்ந்து பார்ப்போம்
கவிஞன் சொன்னது
வாழு வாழவிடு தத்துவம் எனக்கு பிடித்தது!

வாவ் அருமை சிவா வாழ்த்துக்கள்.....

என் வாழ்க்கை அதில்
வரும் இன்பங்கள் துன்பங்கள்
அனைத்தையும் சரிசமமாய் நினைத்து
வாழ்வை இலகுவாக கொண்டுசெல்வேன்..

என்று சொல்லாமல்ல் சொல்கின்றது உங்கள்
விளக்க கவிதை :thumbsup:

இனியவள்
17-07-2007, 10:16 AM
இனியவளின் கவிதையும்
சிவா.ஜியின் விளைவுக்கவிதையும்
இரண்டுமே சுவை..
இருவருக்கும் பாராட்டுகள்...

நன்றி இளசு அண்ணா

இனியவள்
17-07-2007, 10:17 AM
வாழ்க்கை உன்னை
வெறுக்கும் வரை
வாழ்ந்து விடு.....

வாழ்க்கையை நீ
வெறுக்கும் வரை அல்ல...

நல்ல தத்துவம்..பாராட்டுக்கள் இனியவள்...
சிவாவின் பதில் சிந்திக்க வைக்கும் தித்திப்பு. பாராட்டுக்கள்..

நன்றி அமர்

ஓவியன்
17-07-2007, 05:09 PM
வாழ்க்கையில்
வெறுப்பு என்பதை
வெறுக்க வேண்டும்!
வெறுப்பு எங்களை
வெறுக்கும் வரை!!!

பாராட்டுக்கள் இனியவள்!.

அக்னி
17-07-2007, 05:17 PM
வாழ்வாயா கையில்லாமல்...?
அனுபவி...
வாழ்(க்)கை(யோடு)...