PDA

View Full Version : பொய்

இனியவள்
10-06-2007, 05:54 PM
பொய் சொல்லக் கூடாது என்று இருந்தேன்
உன்னைக் காணும் வரை
என் வைராக்கியம் எல்லாம் காணாமல்
போய் விட்டது அன்பே உன்னைக்
கண்ட நாள் முதல் அன்பே
நீ அழாகாய் இருக்கிறாய் என்று
நான் சொன்னது எவ்வளவு
பெரிய பொய்
அரிச்சந்திரன் காதல் வயப்பட்டு இருந்தால்
வரலாற்றில் இடம் பெற்றிருக்க மாட்டான் அன்பே

சிவா.ஜி
11-06-2007, 04:31 AM
அரிச்சந்திரன் காதல் வயப்பட்டு இருந்தால்
வரலாற்றில் இடம் பெற்றிருக்க மாட்டான் அன்பே
அசத்தலான புதிய சிந்தனை. நல்லதொரு கவிதைக்கு பாராட்டுக்கள்.

ஓவியன்
11-06-2007, 06:59 AM
இனியவள்!

கொஞ்சம் வரிகளை முன்னும் பின்னும் மாற்றி மாற்றிப் போட்டுப் பாருங்கள். உங்கள் கவி மேலும் அழகு பெறும் என நம்புகிறேன்.

உங்கள் வரிகள் மேன் மேலும் மெருகேற என் வாழ்த்துக்கள்.

அமரன்
21-07-2007, 09:27 AM
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணும்போது ஒரு பொய் காதலை வரவழைக்குதே...ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...ம்....காயங்களையும் ஏற்படுத்தும்...அரிச்சதிரன் காதலிக்கவில்லையா? அவன் மனைவி அதிட்டசாலியா? துரதிட்டசாலியா?
பாராட்டுக்கள்

இனியவள்
21-07-2007, 11:05 AM
அரிச்சந்திரன் காதல் வயப்பட்டு இருந்தால்
வரலாற்றில் இடம் பெற்றிருக்க மாட்டான் அன்பே
அசத்தலான புதிய சிந்தனை. நல்லதொரு கவிதைக்கு பாராட்டுக்கள்.

நன்றி சிவா..

ஹீ ஹீ அரிச்சந்திரன் படம் பார்த்த பின்பு எழுதியது :grin:

இனியவள்
21-07-2007, 11:05 AM
இனியவள்!

கொஞ்சம் வரிகளை முன்னும் பின்னும் மாற்றி மாற்றிப் போட்டுப் பாருங்கள். உங்கள் கவி மேலும் அழகு பெறும் என நம்புகிறேன்.

உங்கள் வரிகள் மேன் மேலும் மெருகேற என் வாழ்த்துக்கள்.

நன்றி ஓவியன்

தமதமான பதிலுக்கு மன்னிக்க

இனியவள்
21-07-2007, 11:07 AM
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணும்போது ஒரு பொய் காதலை வரவழைக்குதே...ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே...ம்....காயங்களையும் ஏற்படுத்தும்...அரிச்சதிரன் காதலிக்கவில்லையா? அவன் மனைவி அதிட்டசாலியா? துரதிட்டசாலியா?
பாராட்டுக்கள்

மனைவியாவதற்கு முன் காதலில்
மிகவும் அதிகமாக தேவைப்படுவது
பொய் என்று நினைக்கின்றேன் அமர்
அது தான் அப்படி போட்டன் :grin:

நன்றி அமர்

lolluvathiyar
21-07-2007, 02:40 PM
அது யாரு உங்களிடம் அப்படி ஒரு பொய்ய சொன்னது இனியவளே

இனியவள்
21-07-2007, 03:32 PM
அது யாரு உங்களிடம் அப்படி ஒரு பொய்ய சொன்னது இனியவளே

கவிதைக்கு பொய்யழகு வாத்தியாரே:angel-smiley-026:

ஆதவா
21-07-2007, 06:17 PM
பொய் சொல்லக் கூடாது என்று இருந்தேன்
உன்னைக் காணும் வரை
என் வைராக்கியம் எல்லாம் காணாமல்
போய் விட்டது அன்பே உன்னைக்
கண்ட நாள் முதல் அன்பே
நீ அழாகாய் இருக்கிறாய் என்று
நான் சொன்னது எவ்வளவு
பெரிய பொய்
அரிச்சந்திரன் காதல் வயப்பட்டு இருந்தால்
வரலாற்றில் இடம் பெற்றிருக்க மாட்டான் அன்பே

கவிதைக்குப் பொய்யழகு... நாம் சொல்லும் கற்பனைகள் பொய்யென்பார்கள்.

பொய்யாய் ஒரு கவிதை.... அழகாய்... வாழ்த்துக்கள் இனியவள்.

அழாகாய் என்பது பொய்... அழகாய் என்பது மெய்... சரிதானே ?

இனியவள்
22-07-2007, 09:13 AM
கவிதைக்குப் பொய்யழகு... நாம் சொல்லும் கற்பனைகள் பொய்யென்பார்கள்.
பொய்யாய் ஒரு கவிதை.... அழகாய்... வாழ்த்துக்கள் இனியவள்.
அழாகாய் என்பது பொய்... அழகாய் என்பது மெய்... சரிதானே ?

நன்றி ஆதவா..

கவிதைக்கு பொய் அழகு
வாழ்க்கைக்கு பொய் எமன் :whistling: