PDA

View Full Version : கடல் நீர் உப்புக் கரிப்பது ஏன்?

namsec
10-06-2007, 03:16 PM
http://www.tamilmantram.com/photogal/images/2/medium/1_53636049.airraces1.jpg

பார்ப்பதற்கு அழகாகத் தான் இருக்கிறது. ஆனால் கடல் நீரை ஒரு கை எடுத்து வாயில் ஊற்றிக் கொண்டால் வயிற்றைக் குமட்டுகிற அளவுக்கு உப்புக் கரிக்கும். ஆனால் உலகில் உள்ள எல்லாக் கடல்களிலும் உப்புத்தன்மை ஒரே அளவில் உள்ளதாகச் சொல்ல முடியாது.

சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் ஆராய்ச்சியாளர் ஒருவர் உலகின் கடல்களில் 77 இடங்களிலிருந்து கடல் நீர் சாம்பிள்களை சேகரித்து ஆராய்ந்தார். கடல் நீரில் எடை அளவில் சராசரியாக 3.5 சதவிகித அளவுக்கு பல்வேறு உப்புகள் கலந்துள்ளதாக அவர் கண்டறிந்தார். அதாவது ஒரு லிட்டர் கடல் நீரில் 3.5 கிராம் அளவுக்கு உப்பு உள்ளது.

எனினும் ஐரோப்பாவையொட்டிய பால்டிக் கடலில் உப்புத் தன்மை சற்றே குறைவு. இதற்கு நேர்மாறாக செங்கடலில் உப்புத் தன்மை அதிகம். அக்கடல் குறுகியதாக உள்ளது என்பதும் அதில் வந்து கலக்கும் நதிகள் குறைவு என்பதும் இதற்குக் காரணம்.

கடல் நீருடன் ஒப்பிட்டால் நதி நீர் உப்புக் கரிப்பது இல்லை. நதி நீர் ருசியாகவே உள்ளது. ஆனால் கடல் நீரில் கலந்துள்ள உப்புகள் அனைத்தும் நதிகள் மூலம் வந்து சேர்ந்தவையே.

நதிகள் நிலப்பரப்பின் வழியே ஓடி வரும்போது பாறைகளை அரிக்கின்றன. நிலத்தை அரிக்கின்றன. அப்போது நதி நீருடன் பாறைகள், நிலம் ஆகியவற்றிலிருந்து சிறிதளவு உப்பு கலக்கிறது. பல கோடி ஆண்டுகளில் இவ்விதமாக நதிகளால் அடித்துச் செல்லப்பட்ட உப்பு கடல்களில் போய்ச் சேர்ந்துள்ளது.

சூரிய வெப்பம் காரணமாக கடல்களில் உள்ள நீர் ஆவியாக மேகங்களாக உருவெடுக்கின்றன. கடல் நீர் ஆவியாகும் போது உப்பு பின் தங்கிவிடுகிறது. உப்பு இவ்விதம் பின் தங்கிவிடுவதால் தான் மழை நீர் உப்பு கரிப்பது இல்லை. தவிர, உப்பு பின் தங்குகிற அதே நேரத்தில் நதிகள் மூலம் பல கோடி ஆண்டுகளில் மேலும் மேலும் உப்பு கடலில் வந்து சேர, கடல் நீர் உப்பு கரிக்க ஆரம்பித்தது.

ஆனாலும் சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு கடல் நீரானது இப்போது உள்ளதை விட மேலும் அதிக அளவில் உப்புக் கரிக்கும் என்று சொல்ல முடியாது. ஆண்டுதோறும் நதிகள் மூலம் சுமார் 400 கோடி டன் உப்பு கடலில் வந்து சேருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடல் நீரிலிருந்து சுமார் 400 கோடி டன் உப்பு தனியே பிரிந்து கடலுக்கு அடியில் போய் வண்டல் போலத் தங்கிவிடுவதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். சூடான காப்பியில் நீங்கள் இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டால் கரைந்து விடும். ஆனால் 6 ஸ்பூன் சர்க்கரை போட்டால் காப்பி சற்று ஆறியவுடன் கூடுதல் சர்க்கரை கரையாமல் அடியில் தங்கும். அது போலத்தான் கடல்களின் அடியில் உப்பு படிகிறது.

இக் காரணத்தால் தான் கடல்களின் உப்புத் தன்மை அதிகரிக்காமல் சீராக உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இவ்விதம் கடலடித் தரையில் படியும் உப்பானது கனத்த அடுக்காகப் படிந்து நிற்கிறது.

பல மிலியன் ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட காலம் கடல் நீரால் மூழ்கப்பட்டிருந்து பின்னர் கடல் நீர் அகன்ற இடங்கள் பலவற்றில் நிலத்துக்கு அடியில் கெட்டிப்பட்ட பாறை வடிவில் உப்பு கிடைக்கிறது. உதாரணமாக இமயமலைப் பகுதியில் இவ்வித உப்பு கிடைக்கிறது. அமெரிக்காவில் மிட்சிகன் மாகாணத்திலும் இவ்விதம் பாறை உப்பு கிடைக்கிறது.

நன்றி : வணக்கம் மலேசியா.காம்

மனோஜ்
10-06-2007, 03:21 PM
தகவல் இங்கு தங்தமைக்கு நன்றி நண்பரே

இன்பா
10-06-2007, 04:04 PM
இப்படித்தான் கவுண்டமணிக்கிட்டே செந்தில் கேட்டு வாங்கி கட்டிகிட்டாரே...

(நல்ல தகவல் நன்றி)

தாமரை
10-06-2007, 04:09 PM
http://www.tamilmantram.com/photogal/images/2/medium/1_53636049.airraces1.jpg

எனினும் ஐரோப்பாவையொட்டிய பால்டிக் கடலில் உப்புத் தன்மை சற்றே குறைவு. இதற்கு நேர்மாறாக செங்கடலில் உப்புத் தன்மை அதிகம். அக்கடல் குறுகியதாக உள்ளது என்பதும் அதில் வந்து கலக்கும் நதிகள் குறைவு என்பதும் இதற்குக் காரணம்.

கடல் நீருடன் ஒப்பிட்டால் நதி நீர் உப்புக் கரிப்பது இல்லை. நதி நீர் ருசியாகவே உள்ளது. ஆனால் கடல் நீரில் கலந்துள்ள உப்புகள் அனைத்தும் நதிகள் மூலம் வந்து சேர்ந்தவையே.

நன்றி : வணக்கம் மலேசியா.காம்

இந்த ஒரு தகவலைச் சரியாக எழுதாததைத் தவிர ஆசிரியர் நன்றாகவே எழுதியுள்ளார்.

mgandhi
10-06-2007, 06:25 PM
கடல் நீர் உப்புக் கரிப்பது பற்றி அறிந்து கொண்டேன் நன்றி

அக்னி
12-06-2007, 12:45 AM
கடல்நீரின் உப்புக் கரிக்கும் காரணம் இதுவா..?
தகவலுக்கு நன்றி...

lolluvathiyar
12-06-2007, 05:46 AM
இந்த ஒரு தகவலைச் சரியாக எழுதாததைத் தவிர ஆசிரியர் நன்றாகவே எழுதியுள்ளார்.

நாம்செக் சரியான தகவல் தான் தருகிறார் போல் தெரிகிறது. கோடிகனக்கான ஆண்டுகளாக நதிநீர் மூலம் கடலில் உப்பு கலகிறது.
அப்படி இருக்கும் அதிக நதிகள் கலக்காமல் இருக்கும் செங்கடலில் மட்டும் எப்படி உப்பு தன்மை அதிகமாக இருகிறது.
இது தான் உங்கள் கேள்வி.

செங்கடலில் நதிநீர் அதிகமாக கலக்க வில்லை உன்மைதான், ஆனால் மற்ற கடல் நீரில் நதி நீர் கலந்ததல்லவா.
அந்த உப்பு செங்கடலுக்கும் வந்து கலந்து விட்டது. கடலில் உள்ள உப்புகள் அலைமூலம் அடித்து செல்லபட்டு கலங்கி கொண்டே இருக்கும்
ஆனால் செங்கடல் நிலத்தால் சூலபட்டது (Land Locked Sea).
அதனால் அதில் உப்பு கலக்க உள்ளே வரும் ஆனால் அதே உப்பு வெளியே அலைகளால் அடித்து போகாது.
காற்று அழுத்தமும் அங்கு குரைவாக தான் கானபடும்

namsec
12-06-2007, 06:08 AM

மேலும் மேறுகேற்றியமைக்கு நன்றி

maggi
12-06-2007, 10:27 AM
இப்போ நல்லா புரிஞ்சு கிட்டேன்
கடல் நீர் ஏன் இவ்ளோ உப்பா இருக்குதுன்னு.

கேசுவர்
12-06-2007, 10:43 AM
தகவலுக்கு நன்றி நாம்செக்....கடல்நீரின் உப்புக் கரிக்கும் காரணம் இப்பதான் புரியுது ,
லோள்ளுவாத்தியாரே உங்களிடம் ஒரு சந்தேகம் ...
------
செங்கடலில் நதிநீர் அதிகமாக கலக்க வில்லை உன்மைதான், ஆனால் மற்ற கடல் நீரில் நதி நீர் கலந்ததல்லவா.
அந்த உப்பு செங்கடலுக்கும் வந்து கலந்து விட்டது.
-----
மற்ற கடல் நீரில் நதி நீரில் கலக்கும் உப்பிற்கும் செங்கடலுக்கும் என்ன சம்பந்தம் ...கொஞசம் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் ....

lolluvathiyar
12-06-2007, 12:33 PM
மற்ற கடல் நீரில் நதி நீரில் கலக்கும் உப்பிற்கும் செங்கடலுக்கும் என்ன சம்பந்தம் ...கொஞசம் விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும் ....

கேசுவரா உலகில் உள்ள அனைத்து கடல்களும் பிரிந்திருக்க வில்லை.
செங்கடல் என்பது எங்கேயோ இருக்கும் ஒரு தனி கடல் அல்ல (நான் அதை Land Locked என்று தவறாக கூறி விட்டேன்)
அது இந்துமாகடலுடன் தொடர்பு வைதிருகிறது ஒரு மூலையில்.

மற்றும் நான் செங்கடலின் வரை படமாக பார்த்து ஒரு யூகமாக தான் சொன்னேன், எங்கு படித்து சொல்லவில்லை
ஆகையால் அதில் தவறிக்கலாம், என்னை மன்னிக்கவும்

தாமரை
12-06-2007, 12:34 PM
உலகிலேயே உப்பு அதிகமான சாக்கடல் பற்றியும், காஸ்பியன் கடல் பற்றியும் கருங்கடல் பற்றியும் எழுதி இருக்கலாம்

விகடன்
12-06-2007, 12:45 PM
அடக்கடவுளே.
நானும் தலையங்கத்தை பார்த்துவிட்டு கேள்வி கேற்கப்படுகின்றதாக்கும். விடை தெரியாமல் ஏன் போவான் என்று இவ்வளவு காலமும் தலைகூட வச்சுப்பார்க்கவில்லை. இன்றுதானே ஒரு அறிவுப் புதையல் இருப்பதை கண்டுகொண்டேன்.

மிக்க நன்றி நண்பரே நேம்ஸ்.

கேசுவர்
12-06-2007, 12:54 PM
கேசுவரா உலகில் உள்ள அனைத்து கடல்களும் பிரிந்திருக்க வில்லை.
செங்கடல் என்பது எங்கேயோ இருக்கும் ஒரு தனி கடல் அல்ல (நான் அதை Land Locked என்று தவறாக கூறி விட்டேன்)
அது இந்துமாகடலுடன் தொடர்பு வைதிருகிறது ஒரு மூலையில்.

தகவலுக்கு மிக்க நன்றி வாத்தியாரே,

மற்றும் நான் செங்கடலின் வரை படமாக பார்த்து ஒரு யூகமாக தான் சொன்னேன், எங்கு படித்து சொல்லவில்லை
ஆகையால் அதில் தவறிக்கலாம், என்னை மன்னிக்கவும்
நான் எதோ சந்தேகத்தில் கேட்டேன் அதற்கு எதற்கு மன்னிப்பு எல்லாம்....
நல்ல குறிப்பு கொடுத்துள்ளிர்...இதோ வரைப்படத்தை புரடுக்கிறேன்...
நன்றி லோள்ளுவாத்தியாரே...

namsec
12-06-2007, 01:45 PM
அடக்கடவுளே.
நானும் தலையங்கத்தை பார்த்துவிட்டு கேள்வி கேற்கப்படுகின்றதாக்கும். விடை தெரியாமல் ஏன் போவான் என்று இவ்வளவு காலமும் தலைகூட வச்சுப்பார்க்கவில்லை. இன்றுதானே ஒரு அறிவுப் புதையல் இருப்பதை கண்டுகொண்டேன்.

மிக்க நன்றி நண்பரே நேம்ஸ்.

நன்றி
நேம்ஸ் என்று கூறுவதை விட சித்தர் என்று கூறவும்

விகடன்
12-06-2007, 02:03 PM
நேம்ஸ் என்று கூறுவதை விட சித்தர் என்று கூறவும்
அப்படியே ஆகட்டும்

Annamalai
13-06-2007, 06:30 AM
தகவலுக்கு நன்றி

ஜெயாஸ்தா
13-06-2007, 09:22 PM
உலகிலேயே உப்பு அதிகமான சாக்கடல் பற்றியும், காஸ்பியன் கடல் பற்றியும் கருங்கடல் பற்றியும் எழுதி இருக்கலாம்

செங்கடலும், சாக்கடலும் ஒன்றா? இல்லை வேறுவேறா? தெரிந்தவர்கள் விளக்குகங்களேன்?

அக்னி
13-06-2007, 09:56 PM
செங்கடலும், சாக்கடலும் ஒன்றா? இல்லை வேறுவேறா? தெரிந்தவர்கள் விளக்குகங்களேன்?

சாக்கடல் என்பது ஜோர்தான் பகுதியிலுள்ள நிலத்தால் சூழப்பட்ட ஒரு உவர் நீரேரி.. கடல் நீரின் உப்புத்தன்மையை விட 8 மடங்கு உப்புத்தன்மை அதிகமாகக் காணப்படுவதால் உயிரினங்கள் வாழமுடியாததாலேயே இக்கடல் சாக்கடல் என அழைக்கப்படுகிறது.

செங்கடல் என்பது ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலுள்ள, ஒரு ஆழமான கால்வாய் ஆகும்.

இவற்றைப் பற்றிய மேலதிக தகவல்களுக்காக நானும் எதிர்பார்த்திருக்கின்றேன்...

namsec
14-06-2007, 03:33 AM
மேலும் தகவல்கள் தந்தமைக்கு அக்னி அவர்களுக்கு நன்றி

shivasevagan
15-06-2007, 12:23 PM
நல்ல தகவல்

lolluvathiyar
15-06-2007, 03:02 PM
ஏனுங்க சிவசேவகரே சைவ மதத்துல அத பத்தி ஏதாவது சொல்லி இருக்குங்களா?

namsec
15-06-2007, 03:31 PM
ஏனுங்க சிவசேவகரே சைவ மதத்துல அத பத்தி ஏதாவது சொல்லி இருக்குங்களா?

பெயருக்கு ஏத்தார் போல் நீர் லோல்லுபன்னுகிற கேள்விய கேட்கிறீர்