PDA

View Full Version : தூக்கம்



இனியவள்
10-06-2007, 01:47 PM
வேதனைகள் மனதினில்
நுழைந்ததனால்
கண்களில் தூக்கம்
நுழைய மறுக்கிறது

அமரன்
10-06-2007, 01:48 PM
வேதனைகள் மனதினில்
நுழைந்ததனால்
கண்களில் தூக்கம்
நுழைய மறுக்கிறது
தூக்கம் நுழையா
விழிகளில்
துக்கத்தின் தாக்கம்
தெரிகின்றது.

பாராட்டுகள் இனியவள்

சிவா.ஜி
10-06-2007, 02:03 PM
வேதனையை மறந்தால்
விடியும்வரை தூக்கம்
சலனமற்ற மனம்
சயணம் கொள்ளும் நிஜம்!
நான்குவரியில் நல்ல கவிதை. பாராட்டுக்கள்.

தாமரை
10-06-2007, 02:13 PM
வேதனைகள் மனதினில்
நுழைந்ததனால்
கண்களில் தூக்கம்
நுழைய மறுக்கிறது

தூக்கம் கண்களில் நுழைவது இல்லை
அப்படி நுழையுமெனில்
கண்களை மூடிக்கொண்டு ஏன்
தூக்கம் வரைல்லையென்று
புகார் சொல்கிறீர்கள்

(இது உண்மைஎன்றால் கண்களைத் திறந்து வைத்தால் அல்லவா தூக்கம் நுழையும்???)

விகடன்
10-06-2007, 02:19 PM
இனியவளின் கவலை அறிந்து கொண்டோம்.
பெரும்பாலும் காதல்த்தோழ்வியின் கவிதைகளாகவே தருகிறீர்களே. சற்று முன்னோக்கி சென்று உங்கள் காதலைப்பார்த்தால் சிலிங்கார ரசத்துடன் பலது தட்டுப்படலாம் அல்லவா?

இதயம்
10-06-2007, 02:22 PM
தூக்கம் கண்களில் நுழைவது இல்லை
அப்படி நுழையுமெனில்
கண்களை மூடிக்கொண்டு ஏன்
தூக்கம் வரைல்லையென்று
புகார் சொல்கிறீர்கள்

(இது உண்மைஎன்றால் கண்களைத் திறந்து வைத்தால் அல்லவா தூக்கம் நுழையும்???)

அதானே.? அதே போல் தூங்கிய பிறகு யாரும் தூக்கம் வந்துவிட்டது என்று சொல்வதில்லை..! ச்சே..! எப்படியெல்லாம் சிந்திச்சி மேதையாகிக்கிட்டு வர்றோம்..!

:icon_clap: நோபல் பரிசை ரெடி பண்ணி வையுங்கப்பா..!!

சிவா.ஜி
10-06-2007, 02:25 PM
இந்த சிந்தனைக்கு பரிசு நோ-பல் சம்மதமா? ஆமாம் இதயத்துக்கு பல் இருக்கா...?

அமரன்
10-06-2007, 02:27 PM
இந்த சிந்தனைக்கு பரிசு நோ-பல் சம்மதமா? ஆமாம் இதயத்துக்கு பல் இருக்கா...?
கடிக்கின்றதே...இருக்கும் என நினைக்கின்றேன்.

இதயம்
10-06-2007, 02:29 PM
இந்த சிந்தனைக்கு பரிசு நோ-பல் சம்மதமா? ஆமாம் இதயத்துக்கு பல் இருக்கா...?

இதயத்துக்கு பல் அவசியமில்ல.!

இதயத்தில் தமனிகளும், சிரைகளும், இரத்த தந்துகிகளும், நாளங்களும், இரத்தமும் இன்னபிற அசைவ ஐட்டங்களோடு அன்பு என்னும் அற்புத விஷயத்தால் நிறைந்து இருக்கும்.:grin::grin::grin:

எங்க ஊர்ல எல்லாருக்கும் பல் வாயில இருக்கும். இதயத்துல இல்லை..!!

காமெடி, செண்டிமெண்ட, பழிக்கு பழி எல்லாம் டச் பண்ணியாச்சி.:icon_shout:

சிவா.ஜி
10-06-2007, 02:31 PM
இருக்கும் இருக்கும். அதுவும் கல்யாணராமன் போல். அதுதான் இந்த கடி கடிக்கிறார்.

ஷீ-நிசி
10-06-2007, 02:39 PM
கண்களை மூடினால்தான்
தூக்கம் வருகின்றது!
தூக்கம் வரும்வரை,
கண்கள் விழித்தேதான் கிடக்கின்றது!

தாமரை
10-06-2007, 02:43 PM
காதலர்கள் கண்களை மூடிக்கொண்டுதான்
விழித்துக் கொண்டிருக்கிறார்கள்...

அப்ப காந்தாரி தூங்கவேயில்லையா இல்லைத் தூங்கிக்கொண்டே இருந்தாங்களா ஷீ-நிஷி?

ஷீ-நிசி
10-06-2007, 03:09 PM
காதலர்கள் கண்களை மூடிக்கொண்டுதான்
விழித்துக் கொண்டிருக்கிறார்கள்...

அப்ப காந்தாரி தூங்கவேயில்லையா இல்லைத் தூங்கிக்கொண்டே இருந்தாங்களா ஷீ-நிஷி?

காதலரின் கண்களிரண்டும்
வெட்கப்பட்டு மூடிக்கொள்கின்றன!
இதழ்கள் இரண்டும்
சங்கமிப்பதைக் கண்டு!

காந்தாரி என்பது யார்?!
அறியேனே!

தாமரை
10-06-2007, 03:15 PM
காதலரின் கண்களிரண்டும்
வெட்கப்பட்டு மூடிக்கொள்கின்றன!
இதழ்கள் இரண்டும்
சங்கமிப்பதைக் கண்டு!

காந்தாரி என்பது யார்?!
அறியேனே!

இதழ்கள் சங்கமித்தால் விழிகள் மூடுமாம்
விழிகள் சங்கமித்தால் இதழ்கள் மூடுமாம்
இது நாகரீகமாம்
இதயங்கள் சங்கமிக்கும் பொழுது
அப்பா கதவை மூட
அம்மா மனசை மூட
இதியெல்லாம் அநாகரீகமாம்..
விசித்திர உலகமப்பா!

ஷீ-நிசி
10-06-2007, 03:21 PM
இதழ்கள் சங்கமித்தால் விழிகள் மூடுமாம்
விழிகள் சங்கமித்தால் இதழ்கள் மூடுமாம்
இது நாகரீகமாம்
இதயங்கள் சங்கமிக்கும் பொழுது
அப்பா கதவை மூட
அம்மா மனசை மூட
இதியெல்லாம் அநாகரீகமாம்..
விசித்திர உலகமப்பா!

அம்மாவும் அப்பாவும்
அன்றிழைத்த தவறேதான்!
அன்றது நாகரீகமாம்!
பிள்ளைகளது செய்தது,
இன்றது அநாகரீகமாம்!
விசித்திர உலகமப்பா!

தாமரை
10-06-2007, 03:29 PM
அம்மாவும் அப்பாவும்
அன்றிழைத்த தவறேதான்!
அன்றது நாகரீகமாம்!
பிள்ளைகளது செய்தது,
இன்றது அநாகரீகமாம்!
விசித்திர உலகமப்பா!

அன்றும் அப்படித்தான்
இன்றும் அப்படித்தான்
அம்மாப்பா

ஷீ-நிசி
10-06-2007, 03:34 PM
அன்றும் அப்படித்தான்
இன்றும் அப்படித்தான்
அம்மாப்பா

அடேயப்பா!
பிள்ளைகள் இன்று
இப்படித்தான் அழைக்கிறார்கள்!

தாமரை
10-06-2007, 03:38 PM
அடேயப்பா!
பிள்ளைகள் இன்று
இப்படித்தான் அழைக்கிறார்கள்!

அடேயப்பா!
சிலர் அண்ணாந்து பார்த்து மலைக்க
சிலை (தலை) குனிகிறார்கள்

ஷீ-நிசி
10-06-2007, 03:41 PM
அடேயப்பா!
சிலர் அண்ணாந்து பார்த்து மலைக்க
சிலை (தலை) குனிகிறார்கள்

தூக்கம் துயில் கலைந்து
விளையாடிக்கொண்டிருக்கிறது!
தலை குனிந்தபடி!

ஓவியா
10-06-2007, 03:43 PM
தூக்கம் துயில் கலைந்து
விளையாடிக்கொண்டிருக்கிறது!
தலை குனிந்தபடி!

ஷீ, எனக்கு இப்படி!!!

துக்கம்
துயில் கலைந்து
விளையாடிக்கொண்டிருக்கிறது!
தலை குனிந்தபடி!


:D

மனோஜ்
10-06-2007, 03:50 PM
தூக்கம் துக்கமாவும்
துயரம் துக்கமாகும்
துக்கம் துயரமானல்
தூக்கம் துயரமாகிவிடும்

ஓவியா
10-06-2007, 03:52 PM
மனோஜ், துயரம் தூக்கில் விடும்

இப்படியும் யொசிக்கலாமே!!!!

ஷீ-நிசி
10-06-2007, 03:54 PM
மனோஜ், துயரம் தூக்கில் விடும்

இப்படியும் யொசிக்கலாமே!!!!

தூக்கில்,
துயரம் அதிகமாகும் -சற்று நம்
உயரமும் அதிகமாகும்...

மனோஜ்
10-06-2007, 03:57 PM
மனோஜ், துயரம் தூக்கில் விடும்

இப்படியும் யொசிக்கலாமே!!!!
அமா யக்கா

துக்கம் துயரத்தில்
துயரம் தூக்மின்மையில்
தூக்கம் இன்மை
துயரம் தூக்கில்
இது சரியா யக்கா

ஷீ-நிசி
10-06-2007, 03:58 PM
அமா யக்கா

துக்கம் துயரத்தில்
துயரம் தூக்மின்மையில்
தூக்கம் இன்மை
துயரம் தூக்கில்
இது சரியா யக்கா


அட!

தூக்கம் இப்பொழுது தூக்கில்!

(எனக்கு நன்றாய் தூக்கம் வருகிறதென்று)

மனோஜ்
10-06-2007, 04:01 PM
அட!

தூக்கம் இப்பொழுது தூக்கில்!

(எனக்கு நன்றாய் தூக்கம் வருகிறதென்று)
தூக்கிற்கே தூக்கம் வந்தால்....:D :D

இனியவள்
10-06-2007, 06:45 PM
தூக்கம் கண்களில் நுழைவது இல்லை
அப்படி நுழையுமெனில்
கண்களை மூடிக்கொண்டு ஏன்
தூக்கம் வரைல்லையென்று
புகார் சொல்கிறீர்கள்
(இது உண்மைஎன்றால் கண்களைத் திறந்து வைத்தால் அல்லவா தூக்கம் நுழையும்???)

மனம் அமைதியுற்று இருக்கும் போதே
மனிதன் நிம்மதியாக உறங்குகின்றான்
அமைதியற்ற மனதில்
எப்படி உறக்கம் வரும்

இனியவள்
10-06-2007, 06:47 PM
தூக்கிற்கே தூக்கம் வந்தால்....:D :D

தூக்கத்திற்கே தூக்கம் வந்தால் தூங்க வேண்டியது தானே என்ன கேள்வி இது :D