PDA

View Full Version : நாடக அனுபவங்கள்-பாகம்4



சிவா.ஜி
10-06-2007, 01:24 PM
நான் மும்பையில் பாபா அணுசக்தி ஆராய்ச்சி நிலயத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த சமயம்.
அங்குள்ள அணுசக்திநகரில் வசித்த தமிழர்களெல்லாம்
இணைந்து கலைமன்றம் ஒன்றை நடத்தி வந்தோம்.
அதில் எங்கள் நாடகக்குழுவும் அடங்கும். திரு வெங்கட்
என்பவர் எங்கள் நாடக இயக்குனராக இருந்தார்.
துறையில் பணிபுரியும் மற்ற நன்பர்கள்தான் நடிகர்கள்.
எத்தனையோ நாடகங்களை மேடையேற்றியிருக்கிறோம். அப்படிபட்ட ஒரு சமயத்தில்
நடந்த சம்பவம் இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது.
எங்கள் குழுவில் திரு.சுந்தரம் என்பவர் இருந்தார்.கலகலப்பானவர்.
பொதுவாக எல்லா நாடகங்களிலும் நகைச்சுவை வேடங்களையே ஏற்று நடிப்பார்.
ஒரு நாடகத்தில் அவரின் தந்தையைக் கொன்றவரை சுட்டுக்கொல்கிறதைப்போல
காட்சியமைப்பு. பொதுவாக இந்த மாதிரி காட்சிகளுக்காக துப்பாக்கி சத்தத்துக்கு
கார் பேட்டரியை short செய்தால் உண்டாகும் சத்தத்தை பயண்படுத்துவார்கள்.
இந்த காட்சிக்கும் அப்படியே ஏற்பாடு செய்து ஒரு ஆளையும் திரைக்குப்பின்னால்
உட்காரவைத்துவிட்டார்கள்.இவர் பேசும் வசனத்தில் கடைசியாக ஒரு வசனத்தை
கேட்ச் டயலாக்-காக அந்த ஆளிடம் கொடுத்திருந்தார்கள்.அதாவது அந்த
குறிப்பிட்ட வசனம் பேசி முடித்ததும் இவர் இரண்டு வொயரையும் இணைத்து
சத்தம் உண்டாக்கவேண்டும். சாகப்போகிறவர் சட்டைப்பையில் சிகப்பு வண்ண
சாயம், அடித்தால் உடையக்கூடிய வகையில் ஒரு பாக்கெட்டாக கட்டி
வைக்கப்பட்டிருக்கும். துப்பாக்கி சத்தம் வந்ததும் அவர் ஓங்கி மார்பில் அடித்துக்கொண்டால்
சிகப்புச்சாயம் ரத்தமாக வெளிவரும். இதுதான் ஏற்பாடு. காட்சியும் ஆரம்பித்துவிட்டது.
சுந்தரம் தன் தந்தையைக்கொன்றவனைப்பார்த்து வீராவேசமான வசனத்தைப் பேசிவிட்டு
துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார்,இறக்கப்போகிறவரும் தயாராக இருக்கிறார்....
சத்தம் வரவில்லை. சத்தம் வந்தால்தான் அவர் சாக முடியும். இரண்டு விணாடிகள் முழித்துவிட்டு
அந்த பேட்டரிக்காரனுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்க நினைத்து மீண்டும் கோபாவேசமாக
அதே வசனத்தை பேசி விட்டு துப்பாக்கியை நீட்டுகிறார். சத்தம்....ஊஹூஹும். சுந்தரம் டென்ஷன்
ஆகிவிட்டார்.சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு,அந்த காட்சிக்காக அங்கு மேடையில் வைத்திருந்த
பழம் நறுக்கும் கத்தி கண்ணில் பட்டதும்,துப்பாக்கியை பையில் வைத்துவிட்டு,கத்தியை எடுத்துக்கொண்டார்.
கத்தியால் குத்த சத்தம் தேவையில்லை. அதனால் அந்த வில்லனைப்பார்த்து,\\\'உன்னை துப்பாக்கியால்
சுட்டால் உடனே செத்துவிடுவாய் அதனால் உன்னை துடிக்கத்துடிக்க கத்தியால் குத்தி சாகடிப்பேன்
என்று சொல்லிக்கொண்டே கத்தியை ஒங்கினார்.............\"டுமீல்\"....... நீண்ட நேரமாய் சத்தத்திற்காக
முயற்சித்துகொண்டிருந்தவன் ஒருவழியாய் சத்தத்தை உண்டாக்கியேவிட்டான்.நாடகம் பார்த்துக்
கொண்டிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்ல.கொஞ்சநேரத்தில் புரிந்துகொண்டு...ஒரே சிரிப்புதான்.
சீரியஸான காட்சி சிரிப்பாய் சிரித்தது. ஒருவழியாய் திரையை மூடிவிட்டு அந்த பேட்டரிக்காரனை
துரத்திக்கொண்டு சுந்தரம் ஓட அவர்கள் பின்னால் நாங்கள் ஓட...அன்று அந்த காட்சி சொதப்பினாலும்
எல்லோரும் ஒரே ஜாலி மூடில் வீடு திரும்பினோம்.

அமரன்
10-06-2007, 01:28 PM
சிவா நீங்கள் நாடகவிற்பன்னரா...பாராட்டுகள். உங்கள் உதவி எனக்குத் தேவைப்படலாம். தேவைப்படின் தனிமடலில் தொடர்புகொள்ளலாம்தானே.
இது சுவையான சம்பவம் மட்டுமல்ல நகைச்சுவையான சம்பவமும்கூட. நன்றி.

சிவா.ஜி
10-06-2007, 01:30 PM
நன்றி அமரன்.நீங்கள் தாராளமாக தொடர்பு கொள்ளலாம்.

இதயம்
10-06-2007, 01:31 PM
சிவா நீங்கள் நாடகவிற்பன்னரா...பாராட்டுகள். உங்கள் உதவி எனக்குத் தேவைப்படலாம். தேவைப்படின் தனிமடலில் தொடர்புகொள்ளலாம்தானே.

எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். ஆனால், நண்பருக்கு கதாநாயகி 45 வயதுக்கு மேல் இருக்கக்கூடாது...!!

சிவா.ஜி..உங்களுக்கு ஒரு மேனேஜர் தேவைப்படுமே..!! நான் இப்ப ஃப்ரீயாத்தான் இருக்கேன்..!!:lachen001:

சிவா.ஜி
10-06-2007, 01:34 PM
ஐயா இதயமே இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள். கதாநாயகிக்கு 18 வயதானாலும் பரவாயில்லை. ஏனென்றால் நான் அப்பாவாத்தான் நடிப்பேன்.

இதயம்
10-06-2007, 01:36 PM
ஐயா இதயமே இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறீர்கள். கதாநாயகிக்கு 18 வயதானாலும் பரவாயில்லை. ஏனென்றால் நான் அப்பாவாத்தான் நடிப்பேன்.

அடுத்த படத்திற்கு ரஜினிக்கு அப்பா தேவைப்படுதாம்.. ஓகேயா..?

அமரன்
10-06-2007, 01:38 PM
ஐயையோ நான் நடிக்க அழைக்க முடியாதுங்க. பிரான்சில் இருந்துகொண்டு எப்படி அழைக்க முடியும். நான் கூட இப்போ பிரான்சில் நாடகத் துறையில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றேன். அது சம்பந்தமான சில ஆலோசனைகளை கேட்கவே தொடர்பு கொள்ள் முடியுமா எனக் கேட்டென். நன்றி சிவா.

சிவா.ஜி
10-06-2007, 01:39 PM
அதெல்லாம் முடியாது.காசு கொஞ்சம் கூடக் கொறைய இருந்தாலும் பரவாயில்ல கதாநாயகிக்குத்தான் அப்பா.(மேனேஜர் பதவி வேணுமா வேணாமா)

ஓவியா
10-06-2007, 01:42 PM
அஹஹ்ஹ

நன்கு சிரித்தேன், நானும் அங்கு இருந்திருந்தால் அன்று ஜாலி முடில் தான் இருந்திருப்பேன். எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி

தங்களுக்கு நல்ல எழுத்து திரன் உண்டு.


மேடை நிகழ்ச்சியே ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.

நான் நடித்த நாடகத்தில்
நான் நடந்து ஆக்சிடெண்ட் ஆவது போல் கட்சி, ஹீரொவின் அண்ணனின் காதலி, ஹீரோ என்னை காரில் வந்து மோதுவது போல் காட்சி, நான் நடப்பேன் ஒலி/ஒளி மட்டும் வரும், பின் நான் கீலே விழுந்து விடுவேன்,

நானும் மேடையில் குருக்கும் நெடுக்கு நடக்கிறேன்.....................நடக்கிறேன்....................நடக்கிறேன்................நடக்கிறேன் ம்ஹூம் ஒன்னும் கேட்கவில்லை, (மக்களும் யோசிக்க ஆரம்பித்து விட்டனர், ஏதோ கோளாறு என்று) சத்தம் வரவில்லை, பின் நானே யொசித்து அய்யோ அம்மா என்று ஒரு வழியா விழுந்து விட்டேன்.

ஹீரோவும் வந்து விட்டார், மயங்கி தண்ணீர் தெளித்து எழுந்தும் விட்டேன், பிந்தான் டமார்ரென்று கார் இடிகும் சத்தம் வந்தது.

எல்லோரும் சிரிக்க நானும் அழுதுகொண்டே குழுங்கி குழுங்கி சிரித்தேன். ஹி ஹி

சிவா.ஜி
10-06-2007, 01:58 PM
நன்றி ஓவியா. சத்தம் உங்களையும் படுத்திவிட்டதா? என்னால் அந்த சூழலை நன்கு உணர முடிகிறது.இன்னும் நிறைய சம்பவங்கள்.ஒவ்வொன்றாய் சொல்கிறேன். தட்டச்சுத்தெரியாததால்தான் சிரமமாக இருக்கிறது.

ஓவியா
10-06-2007, 02:00 PM
அப்படியா!! நல்லது.

சரி, ஒவ்வொன்றாக கொடுத்து எங்களை சிரிப்பில் ஆழ்த்துங்கள். வாழ்த்துகளும் பாராட்டும்.

தட்டச்சுத்தானே!! கொஞ்ச நாளில் பழகிவிடும்.

ஷீ-நிசி
10-06-2007, 02:25 PM
சிவாவின் கதையும், ஓவியாவின் கதையும் ஒரேப் போல ருசிகரமாய் நடந்திருக்கின்றன..

நன்றாகவே சிரிக்கவைத்தீர்கள்!

சிவா.ஜி
10-06-2007, 02:28 PM
நன்றி ஷீ. நாடக அனுபவங்கள் மிக சுவரசியமானவை. அதில் ஈடுபட்டோருக்கு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒரேமாதிரியான சம்பவங்கள் சம்பவிப்பதுண்டு. இவ்வளவுக்கும் ஓவியா வேறு நாட்டில் நான் நம் நாட்டில். பார்த்தீர்களா?

சிவா.ஜி
11-06-2007, 02:15 PM
என்னுடைய நாடக அனுபவத்தில் இன்னொரு சம்பவம்.

1989-ல் எங்கள் கலைமன்றத்தின் ஆண்டுவிழா.
அந்த வருடம் கலைமன்ற நாடகக் குழுவை
வைத்தே நாடகம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு
நாடகமும் மேடையேறிவிட்டது. நாடகத்தின் பெயர்
"நீ நான் நகை". இதில் கதாநாயகியின் தந்தையாக
நடித்தவர் எங்கள் குழுவின் இயக்குநர் திரு.வெங்கட் அவர்கள்.
வழக்கமாக முதல் காட்சி ஆரம்பித்ததும்
அவருடைய டென்ஷனும் ஆரம்பித்துவிடும்.அன்றும்
அப்படித்தான்.நாடகம் நல்ல முறையில் போய்க்கொண்டிருந்தது.
ஒரு காட்சியில் கதாநாயகி கடிதம் எழுதிவைத்துவிட்டு
காதலனோடு போய்விடுவாள்.அந்தக்கடிதம் அப்பாவின்
கைகளில் கிடைக்கும்.அதை எடுத்துக்கொண்டு
பதட்டமாக மனைவியிடம் ஓடி வருவார். அதன்பின்
அந்த கடிதத்தைக்காட்டி பேசுவதைப்போல் காட்சி
அமைப்பு. வெங்கட் அவர்கள் ஜிப்பா பைக்குள்
கடிதத்தை வைத்து,உள்புறம் வெளிதெரியுமாறு
ஜிப்பாவை திருப்பி போட்டுக்கொண்டு காட்சிக்குள் வந்து
விட்டார். ஜிப்பாவுக்கு பை பக்கவாட்டில் இருப்பதால்
பை வெளியே தொங்கிக்கொண்டிருந்தது.கடிதம் உள்ளே..
கோபாவேசமாக வந்தவர் மனைவியாக நடித்தவரைப்
பார்த்து 'உன் மக செஞ்சிருக்கிற வேலையப்பாத்தியா
லெட்டெர் எழுதி வெச்சுட்டு அந்த பய கூட ஓடிப்
போய்ட்டா' என்று சொல்லிக்கொண்டே அந்த கடித்தை எடுக்க
முயற்சி செய்கிறார்..செய்கிறார்...முடியாதபோது பையைப்
பார்த்தவருக்கு அதிர்ச்சி.ஒரே வினாடிதான் மனைவியாக
நடித்தவர் சமயோசிதமாக "மக ஓடிப்போன பதட்டத்துல
ஜிப்பாவக்கூட நேரா போட்டுக்காம வந்துட்டீங்க பாருங்க,
சரி நீங்கதான் படிச்சிருப்பீங்களே என்னதான் அவ
எழுதியிருக்கான்னு சொல்லுங்க" என்று சமாளித்ததைப்
பார்த்து அசந்துவிட்டோம்.நாடகம் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்
வேண்டுமென்றேதான் அவர் ஜிப்பாவை திருப்பி
போட்டுக்கொண்டு வந்திருக்கிறார் என்று நினைத்ததுதான்
எங்கள் குழுவின் வெற்றி.

அமரன்
11-06-2007, 02:30 PM
சுவையான நிகழ்வுகளைத் தந்து நகைக்க வைத்து விட்டீரே! நன்றி சிவா. (ஒருமையில் விளிப்பதில் தப்பில்லையே?)

இதயம்
11-06-2007, 02:32 PM
மிக அருமையான நகைச்சுவை. இது போன்ற தருணங்கள் பெரும்பாலும் நாடகத்தின் ஒட்டுமொத்த உழைப்பையும் வீணாக்கும் வகையில் சொதப்பிவிடும். ஆனால் இது போல் சமாளிக்கும் நிகழ்வுகள் மிக அரிதே என்றாலும் பாயசத்தில் கிடக்கும் முந்திரிப்பருப்புகள் போல் அவை தான் அந்த நாடகத்திற்கு சிறப்பு சேர்க்கும்.

சமயோசித புத்தியைக் கொண்டு அந்த சூழ்நிலையை வெற்றிகரமாக சமாளித்த அந்த பெண்மணி தான் உங்கள் நாடகத்தின் மொத்த வெற்றிக்கும் காரணம் என்பது என் கருத்து.

சிவா.ஜி
11-06-2007, 02:33 PM
நன்றி அமரன்.நட்பில் ஒருமை பன்மை இல்லை.இருப்பினும் ஒருமையில் ஒரு அந்யோன்யம் இருக்கிறது. தாராளமாக கூப்பிடுங்கள்.

இதயம்
11-06-2007, 02:35 PM
சுவையான நிகழ்வுகளைத் தந்து நகைக்க வைத்து விட்டீரே! நன்றி சிவா. (ஒருமையில் விளிப்பதில் தப்பில்லையே?)

சிவா என்பது எப்படி ஒருமையாகும் அமரன்.? நான் தங்களுக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்து உங்களை அமரர் என்றால் என்னை அடிக்க வருவீர்களா மாட்டீர்களா..?!!:icon_dance::icon_dance:

சிவா.ஜி
11-06-2007, 02:35 PM
நன்றி இதயம். உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். உண்மையில் அன்றே நாங்கள் அதை ஒத்துக்கொண்டோம்.அவர் பெயர் கல்பகம்.நாங்கள் கல்பகம் மாமி என்று அழைப்போம்.

அமரன்
11-06-2007, 02:37 PM
சிவா என்பது எப்படி ஒருமையாகும் அமரன்.? நான் தங்களுக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்து உங்களை அமரர் என்றால் என்னை அடிக்க வருவீர்களா மாட்டீர்களா..?!!:icon_dance::icon_dance:
நான் அமரரானாலும் அமரனாக இருக்கவே இம்மன்றத்தில் சுவாசிக்கின்றேன். சிவா என்பது ஒருமை இல்லை. நான் சொன்னது சிவா அண்ணா. சிவா அவர்களே என இரட்டைச் சொற்கள் சேர்ந்து வரும் பன்மையில் அழைப்பதை.

இணைய நண்பன்
11-06-2007, 03:24 PM
நன்றி நண்பரே உங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டதற்கு.நினைக்கும் போது சிரிப்பு தான் வந்தது.அதே நேரம் என்னுடைய பள்ளிக்கால நினைவொன்றும் நினைவில் வந்தது.
அன்று கலைநிகழ்ச்சிக்காக நான் தயாரித்திருந்த விடயம் காட்சியும் கானமும்.சில வசனங்கள் முடிந்ததும் சோகப்பாடலுக்கு நடிக்கவேண்டும்.இறுதியில் ஒருத்தன் வந்து கத்தியால் குத்த..(என் வயிற்றில் ஏற்கனவே சாயம் கலக்கப்பட்ட பக்கட்ட திரவம் கட்ட பட்டிருக்கிறது) அலறிய படி கீழே விழவேண்டும்.சரி இப்போது நிகழ்ச்சி மேடையில் நடக்கிறது.அந்த கட்டம் வந்தது.நண்பன் கத்தியால் வயிற்றிலுள்ள பக்கட்டை நோக்கி குத்தினான்.ஆனால் அது வழுக்கி என் வயிற்றில் லேசாக பட்டது.ஆனால் நண்பனுக்கோ அது விளங்கவில்லை.இரத்தம் (சாயம்)வழியவில்லையே என்று மீண்டும் குத்த கத்தியை தூக்கினான்...நான் பார்த்தேன் திரும்ப குத்தினா என் கதை அவ்வளவு தான்...அவசரமாக கீழே விழுந்து திரையை மூடும் படி சைகை காட்டினேன்.ரசிகர்களுக்கு காட்சியும் கானமும் நல்ல படி முடிந்த சந்தோசம்.ஆனால் நாடக குழுவுக்கு இறுதிக்காட்சி வித்தியாசமாக முடிந்தது என்று குழப்பம்.அப்போ நான் மெதுவா சேர்டை தூக்கி காட்டினேன்.அங்கே மெல்லிய காயம் உண்மையான் இரத்தம் இலேசாக வடிவது கண்டு எல்லோரும் பதறினர்.இதை நினைக்கும் போது சிரிப்பும் வருகிறது...மறுபுறம் ...வேறு விதமாய் நடந்திருப்பின் இந்த தமிழ் மன்றத்தில் இன்று நான் இல்லை

அக்னி
12-06-2007, 01:28 AM
சம்பவங்களும், பின்னூட்டங்களும் மிக சுவாரசியமாகவுள்ளன...

சிவா.ஜி
12-06-2007, 04:29 AM
கத்தியால் வயிற்றிலுள்ள பக்கட்டை நோக்கி குத்தினான்.ஆனால் அது வழுக்கி என் வயிற்றில் லேசாக பட்டது.ஆனால் நண்பனுக்கோ அது விளங்கவில்லை.இரத்தம் (சாயம்)வழியவில்லையே என்று மீண்டும் குத்த கத்தியை தூக்கினான்...நான் பார்த்தேன் திரும்ப குத்தினா என் கதை அவ்வளவு தான்...அவசரமாக கீழே விழுந்து திரையை மூடும் படி சைகை காட்டினேன்.
நல்லவேளை உங்கள் சைகையை வேறுவிதமாக எடுத்துக்கொண்டு இன்னும் வேகமாய் குத்தாமல் விட்டாரே உங்கள் நன்பர். நாடக அனுபவங்களில் வேடிக்கைக்கு பஞ்சமே இல்லை இக்ராம். உங்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

இணைய நண்பன்
12-06-2007, 11:57 AM
ஆம் சிவாஜி.என் கதி அதே கதியாகி இருக்கலாம்.நாடக அனுபவங்கள் இன்னும் இருக்கிறது.பின்னர் எழுதுகிறேன்.நன்றி நண்பரே..

சிவா.ஜி
11-01-2008, 07:58 AM
பாகம்-3
(நீண்ட நாட்களுக்குப் பிறகு)

எங்கள் நாடகக்குழு கொஞ்சம் கொஞ்சமாய் வளரத்தொடங்கி நாட்டிலுள்ள மற்ற மாநிலத்தில் இருக்கும் தமிழ் சங்களுக்கும் தெரியக்கூடிய அளவில் சிறப்பு பெற்றது.அந்த நேரத்தில் 1987...சென்னையிலுள்ள ஒரு சபா(பெயர் நினைவில்லை) தங்களின் சபா சார்பாக மூன்று நாடகங்களை நடத்த முடிவுசெய்து அந்த மூன்றையும் எங்கள் குழுவையே நடத்தித் தருமாறு அழைத்திருந்தார்கள்.அழைப்பு வந்ததிலிலிருந்து நானும் எங்கள் இயக்குநரும் தினமும் அதைப்பற்றி பேசி ஒரு வாரத்தில் எந்தெந்த நாடகங்களை மேடையேற்றுவது என்று முடிவு செய்தோம்.வெற்ரியடைந்த சில நாடகங்களிலிருந்து மூன்றை தெரிவு செய்தோம்.அவை THAT MAN R,வெற்றியாருக்கு,அப்பாவின் கல்யாணம் என்பவைதான்.

இந்த மூன்றுமே ஏற்கனவே பலமுறை நாங்கள் மேடையில் வழங்கியவைதானென்பதால் அதிக ஒத்திகை தேவைப்படவில்லை.சில வசனங்களை மட்டும் சென்னைக்குத் தகுந்தமாதிரி மாற்றி எழுதினேன்.நல்ல கதைகள்.இதில் THAT MAN R என்று ஒரு தமிழ் நாடகத்துக்கு ஆங்கிலப்பெயர் எதற்கு என்று கேட்டார்கள்.அந்த நாடகத்தில் வரும் எல்லா கதாபாத்திரங்களின் பெயர்களும் R எழுத்தில் ஆரம்பித்ததாலும் அதில் ஒருவர்தான் முக்கிய கதாபாத்திரத்தை கொல்வதாகவும் இருந்ததால்.யார் அந்த R என்று வைக்கலாம் என்ற என் யோசனை ஏற்கப்படவில்லை.ஆங்கிலப் பெயரே முடிவு செய்யப்பட்டது. மூன்று நாடகங்களிலும் கதாநாயகி என் தோழி சரஸ்வதிதான்.அப்போது அவள் சென்னையில் அண்ணாமலை பல்கழகத்தின் கல்லூரியில்(AC TECH) படித்துக்கொண்டிருந்தாள்.எனக்கும் முக்கிய கதாபாத்திரங்கள்.மூன்று நாடகங்களிலும் வித்தியாசமான பாத்திரங்கள்.ஒன்றில் மனநிலை சரியில்லாத வாலிபன்,மற்றொன்றில் கிரிக்கெட் பைத்தியம் பிடித்த அப்பாவையே கலாய்க்கும் மகன்,மற்றதில் ஒருதலைக் காதலில் தாடிவைத்த தேவதாஸ்...இப்படி நல்ல கேரக்டர்கள்.

15 நாட்கள் ஒத்திகை நடந்தது.மிக மிக சுவாரசியமான நாட்கள்.மூன்று நாடகங்களிலும் நடிக்கும் எல்லோரும் ஒரே நாளில் இடைவெளிவிட்டு வேறு வேறு நாடகங்களின் ஒத்திகையில் பங்கு கொண்டதால் அதில் பேச வேண்டிய வசனத்தை இதில் பேசி...இதிலுள்ளதை அதில் பேசி...ஒரே கூத்துதான்.ஒருவழியாய் எல்லாம் சரியாக்கிக்கொண்டு சென்னை சென்றடைந்தோம்.வாழ்க்கையில் முதல் முறையாக அப்படியான ஒரு வரவேற்பைப் பார்த்து கண்களில் கண்ணீர் வந்து விட்டது.ரயிலிலிருந்து இறங்கும் எங்கள் குழுவினர் ஒவ்வொருவருக்கும் மாலை அணிவித்து சால்வை போத்தி....ஆஹா...கனவுல மிதக்கிற மாதிரி இருந்தது.

ராஜா அண்ணாமலை மன்ற அரங்கத்தில்தான் நாடகம் நடத்த ஏற்பாடாகியிருந்ததால் அதற்கு அருகிலேயே ஒரு ஹோட்டலில் எங்களுக்கு அறை எடுத்திருந்தார்கள்.பூக்கடை பக்கத்தில்.அருகிலேயே ஒரு மெஸ் இருந்தது.நடந்தே அரங்கத்துக்கு வந்துவிடலாம்.நாடகம் தொடங்க இரண்டுநாட்கள் இருந்தது.நானும் எங்கள் இயக்குநரும் புதுப்பேட்டைக்குச் சென்று அரங்க நிர்மானத்திற்கான திரைசீலைகள்,stage properties என்று சொல்லும் எல்லா பொருளகள் மற்றும் லைட்டிங்குக்கான பொருட்கள் என்று அனைத்தையும் தேர்வுசெய்துவிட்டு வந்தோம். இசைக்கு ஒரு குழுவையும் முன்பே தேர்ந்தெடுத்திருந்ததால் அவர்களையும் அழைத்துக்கொண்டு நிகழ்ச்சியில்லாத நேரத்தில் அரங்க நிர்வாத்தினரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு அதே மேடையில் இறுதி ஒத்திகை இசையுடன் நிகழ்த்தினோம்.

மிகப்பெரிய அரங்கம்.எல்லா வசதிகளும் இருந்தது.மேடைக்கு இரண்டு பக்கமும் நான்கு ஒப்பனை அறைகள்,மற்ற பொருட்களை வைக்க இரு அறைகள் என்று ஏக வசதியாய் இருந்ததால் எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியாக இருந்தது.(மும்பையில் லதா மங்கேஷ்வர் அவர்களுக்கு சொந்தமான ஒரு மிகப்பெரிய அரங்கத்தில் எங்கள் நாடகத்தை நடத்திய பிறகு இதுதான் நல்ல அரங்கம்)ஒவ்வொருவரும் நடிப்பில் பின்னி பெடலெடுத்தார்கள்.இசையும் மிகக்கச்சிதமாகப் பொருந்தியிருந்தது.

அடுத்த நாள் லைட்டிங் மற்றும் இசையுடன் மீண்டும் ஒத்திகை நடந்தது.சபா காரர்கள் எல்லா வசதியையும் செய்துகொடுத்திருந்தார்கள்.
இரண்டுநாள் ஒதிகைக்குப் பிறகு அன்று நாடகம் அரங்கேறும் நாள்.நாடகத்துக்கு தலைமை திரு.S.V.சேகர் அவர்கள்.மேடையில் நான்கு திரைகள் காட்சிகளுக்கு தேவைப்பட்ட பின்னனியில் கட்டப்பட்டிருந்தது.மேலே சுருட்டி வைக்கப்பட்ட திரைகளுக்கு அடியில் கனமான இரும்புக்குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.கயிறை இழுத்ததும் விரைவாக தரைக்கு இறங்க அந்த ஏற்பாடு.அனைத்தையும் இறக்கி ஏற்றி பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அந்த நேரம் பார்த்து எங்கள் குழுவின் ஒரு நடிகர் குறுக்கே செல்ல இரும்புக்குழாய் நேராக அவரது தலையில் இறங்கியது.கடைசிநேர சுதாரிப்பில் கொஞ்சம் நகர்ந்தாலும் தோள்பட்டையில் விழுந்துவிட்டது.பலமான அடி உடனே அவரை சிலர் மருத்துவமனைக்குக் கொண்டுபோனார்கள்.

இப்போது பிரச்சனை அவருடைய கேரக்டரை யார் செய்வது என்பதுதான்.ஒத்திகையின்போது யாராவது வரவில்லையென்றால் அவருக்குப் பதிலாக யாரோ ஒருவர் டூப் போட்டு அந்த காட்சியை நடத்துவோம்.பெரும்பாலும் எனக்கு எல்லோருடைய வசனங்களும் நினைவில் இருக்குமென்பதால் நான்தான் பல சமயங்களில் டூப் போடுவேன்.அதனால் அந்த கேரக்டரையும் நானே செய்வதென்று முடிவானது.முதன்முதலாக இரட்டைவேஷம்.உள்ளுக்குள் உதறலாக இருந்தாலும் செய்து விடலாமென்ற நம்பிக்கை இருந்தது.மேக்கப் மேனிடம் சொல்லி குறைந்த கால அவகாசத்தில் எனக்கு தாடி ஒட்டி,விக் மாட்ட ஏற்பாடு செய்துவிட்டு பூஜை போட்டோம்.முதல் மணி அடித்தாகிவிட்டது.அப்போது அரங்கத்தில் பரபரப்பு.

(இன்னும் இருக்கு)

ஆதி
11-01-2008, 08:15 AM
உங்க கட்டுரையில் எனக்கு எப்பவுமே ஒரு தனி மையல் உண்டு, படிப்பவரின் மனம் தொய்வில் இடறிவிழாமல் தொடர்ந்து பயணிக்க வைக்கும் ஆற்றல் உங்க எழுத்துக்கு இருக்கு அண்ணா..

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

அன்புடன் ஆதி

செல்வா
11-01-2008, 08:52 AM
அட...அட..... நம்மாளுதானா நீங்களும்... இந்த மாதிரி எனக்கும் நிறய அனுபவங்கள்..... நேரம் கிடைத்தால் பகிர்ந்துக்கறன்.. நல்லா எழுதறீங்க நல்ல அனுபவங்கள்.. எப்போ ஜித்தா வறீங்க........

மதி
11-01-2008, 09:22 AM
கலக்குங்கண்ணே...
மேலே சொல்லுங்க... எப்போதோ பள்ளியில் ஏதோ ஒரு ஆங்கில நாடகத்தில நல்லவனா(?!) நடித்த ஞாபகமெல்லாம் வருது...

அன்புரசிகன்
11-01-2008, 09:37 AM
இன்று தான் உங்கள் கதைகளை வாசிக்கமுடிந்தது. அருமையான நகைச்சுவைகலந்தவையாகவும் உள்ளது.. பாராட்டுக்கள்.

சிவா.ஜி
11-01-2008, 10:10 AM
நன்றி ஆதி.எழுதறேன்..................ஆனா உங்க அளவுக்கு இல்ல....

செல்வா அடுத்தவாரம் வரேன் நிறைய பேசலாம்.

மிக்க நன்றி அன்பு.கத்தார் முடிந்ததா....அடுத்த இடம் எது?

சிவா.ஜி
11-01-2008, 10:11 AM
மதி இப்பல்லாம் எழுத்துல கலக்குறீங்க. அந்த நல்லவன் அனுபவத்தையும் சொல்லுங்களேன்.நாங்களும் ரசிப்போமில்ல....

மதி
11-01-2008, 10:15 AM
மதி இப்பல்லாம் எழுத்துல கலக்குறீங்க. அந்த நல்லவன் அனுபவத்தையும் சொல்லுங்களேன்.நாங்களும் ரசிப்போமில்ல....

எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்கள பாத்து நாமும் ஏதாச்சும் கிறுக்கணும்னு பண்ற வேலை. :eek::eek::eek::eek::eek:
நான் எழுதினத படிச்சா அப்படியா கலங்கி போகுது?:icon_ush::icon_ush:
அந்த நல்லவன் கதை இப்போ தான் கொஞ்சமா ஞாபகத்துக்கு வர ஆரம்பிச்சிருக்குது. சரி... ஆனாலும் உங்களுக்கு ரொம்ப மனோதைரியம் தான்...

aren
11-01-2008, 10:23 AM
சிவாஜி - உங்கள் அனுபவங்கள் அருமை. சிர்ப்பாக இருந்தது, ஆனால் அங்கே மாட்டிக்கொண்டு முழிக்கும்பொழுது எப்படிப்பட்ட மனநிலையில் மக்கள் இருந்திருப்பார்கள் என்று நினைத்தால் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது.

மதி - நாடகத்திலாவது நல்லவனாக நடித்திருக்கிறீர்களே, பரவாயில்லை.

மதி
11-01-2008, 10:26 AM
சிவாஜி - உங்கள் அனுபவங்கள் அருமை. சிர்ப்பாக இருந்தது, ஆனால் அங்கே மாட்டிக்கொண்டு முழிக்கும்பொழுது எப்படிப்பட்ட மனநிலையில் மக்கள் இருந்திருப்பார்கள் என்று நினைத்தால் கொஞ்சம் பரிதாபமாக இருக்கிறது.

மதி - நாடகத்திலாவது நல்லவனாக நடித்திருக்கிறீர்களே, பரவாயில்லை.

ஆஹா.. கொஞ்சம் நேரத்திலேயே என்னை முழுசா புரிஞ்சிக்கிட்ட ஒரே ஆளு நீங்க தான்....:icon_ush::icon_ush::icon_ush:

சிவா.ஜி
13-01-2008, 10:55 AM
பாகம்-4

திரு.எஸ்.வி.சேகர் அவர்கள் வந்துவிட்டார்.அதன் பரபரப்புதான் அது.இங்கே ஒன்றைக் குறிப்பிடவேண்டும்.ராஜா அண்ணாமலை மன்றம் பெரிய அரங்கம்.மும்பையிலிருந்து வந்த நாடகக்குழு எங்களுடையது.பரிச்சயம் இல்லாத குழு...கூட்டம் எப்படியிருக்குமோ என்ற கவலையிருந்தது.ஆனால் அமர இடமில்லாமல் மக்கள் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தபோதுசந்தோஷமாக இருந்தது.அதே சமயம் இத்தனை ரசிகர்களையும் ஏமாற்றமடைய வைக்காமல் நாடகத்தை நல்லமுறையில் நடத்திக் கொடுக்கவேண்டுமே என்ற பொறுப்பும் அதிகமானது.இரண்டாவது மணியும் அடித்துவிட்டார்கள்.இந்த நேரம்தான் கொஞ்சம் டென்ஷனான நேரம்.முதல் சீனுக்குப் போகவேண்டியவர்கள் தயாராக இருக்கிறார்கள்.மேடைக்குள் பொருட்களெல்லாம் சரியாக இருக்கிறதா,திரை காட்சிக்கு சம்பந்தப்பட்டதுதானா என்ற ஒரு இறுதியான சரிபார்ப்பு நடந்துவிட்டது.வழக்கம்போல எங்கள் இயக்குநர் டென்ஷனாக இருந்தார்.முதல் சீனில் அவரும் சரஸ்வதியும் நானும் தோன்றவேண்டும்.அவர் என்னுடைய அப்பா.சரஸ்வதி என் அக்கா.நான் கிரிக்கெட் பைத்தியம் பிடித்த சரியாக படிக்காத இளைஞன்.மூன்றாவது மணி அடிப்பதற்குமுன் நாங்கள் இருவரும் மேடைக்குப் போய்விட்டோம்.நான் மூலையில் போர்வையை போத்திக்கொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருப்பதாகக்காட்சி.வெங்கட் அவர்கள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருப்பார்.திரை விலகியது ...மெல்ல இருளிலிருந்து வெளிச்சத்துக்கு மாறிக்கொண்டிருந்தது மேடை.செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருந்தவர்...திடீரென்று என்னைப் பார்த்து..கடங்காரா பரீட்ச்சையை பக்கத்துல வெச்சுகிட்டு காலங்காத்தால படிக்காம தூங்கிண்டிருக்கியா என்று சத்தம் போட்டதும், போர்வைக்கு உள்ளிருந்து என் குரல் மட்டும் a ஸ்கொயர் + b ஸ்கொயர் ஈஸீக்வல்ட்டு ஸ்கொயர் கட்,கபில்தேவ் ஈஸீக்வல்ட்டு சிக்ஸர் என்று என் உளறல் கேட்டது.அரங்கத்தில் பயங்கர சிரிப்பு...அங்கு தொடங்கி நாடகம் முடியும்வரை அந்த நகைசுவை வெடிகள் நிற்காமல் வெடித்துக்கொண்டிருந்தன.திரு விஜயராகவன் என்பவர் எழுதிய நாடகம் அது.மிகவும் நகைச்சுவையாக இருக்கும்.அதனால்தான் அந்த நாடகத்தை முதல்நாள் மேடையேற்றினோம்.

இடைவேளையில் திரு எஸ்.வி.சேகர் அவர்கள் ஒப்பனை அறைக்கு வந்து அனைவரோடும் பேசி ஊக்கம் கொடுத்தார்.மும்பைக்கு அவர் நாடகம் போட வரும்போது எங்கள் குழுவிலிருந்து சிலரை உபயோகப்படுத்திக்கொள்வதாய் சொன்னார்.அந்த உற்சாகத்தில் இடைவேளைக்குப் பிறகு எல்லோரும் நடிப்பில் வெளுத்து வாங்கினோம்.நாடகம் மிகப்பெரிய வெற்றி.அதற்கு சாட்சியாக பத்தரை மணி கடந்தும் கலைந்து செல்லாத ரசிகர்கள்.பொதுவாக உள்ளூர் நாடகக்குழுவினருக்கு அனுபவம் இருப்பதால் புறநகரிலிருந்து வரும் ரசிகர்கள் நேரத்தோடு வீட்டுக்குப் போக பேருந்தை பிடிக்க வசதியாக இருக்குமென்பதால் 10 மணிக்குள் நாடகத்தை முடித்துவிடுவார்கள்.நாங்கள் முடிக்க அரைமணி நேரம் தாமதமானாலும் அத்தனை பேரும் கலையாமல் இருந்து பார்த்ததை நினைத்து சென்னை மக்களின் மேல் எங்களுக்கு மிக நல்ல அபிப்பிராயம் தோன்றிவிட்டது.

அன்று இரவு அனைவரும் மிக உற்சாகமாய் இருந்தோம்.எங்கள் இயக்குநருக்கு பயங்கர சந்தோஷம்.ஆனால் அவர் அப்படியிருந்ததைப் பார்த்து எங்களுக்குத்தான் கவலையாகிவிட்டது.அவர் ஒரு இதய நோயாளி.அதிகமாக உணர்சிவயப்பட்டால் ஏதாவது விபரீதமாக ஆகிவிடும் என்று பயந்தோம். ஆனால் நல்லவேளை அப்படி எதுவும் நிகழவில்லை.சரி எல்லோரும் கிளம்பலாம் தூங்கவேண்டும் நேரமாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டு தலைகளை எண்ணினால் இரண்டுதலை குறைந்திருந்தது..எங்கே போய்விட்டார்கள் என்று சுற்றுமுற்றும் தேடினால் தூரத்தில் இரண்டு உருவம் தள்ளாடிக்கொண்டு வந்துகொண்டிருந்தன.

மதி
13-01-2008, 10:58 AM
அவ்ளோ சந்தோஷத்தையும் உடனே கொண்டாட போயிட்டாங்களா?

சிவா.ஜி
13-01-2008, 11:10 AM
அதேதான் மதி எப்படா நாடகம் முடியுன்னு நெனைச்சுக்கிட்டிருந்தாங்க...முடிஞ்ச உடனே ஜூட் விட்டுட்டாங்க...