PDA

View Full Version : காதல் நீயடி

அமரன்
10-06-2007, 01:03 PM
வீணையடி நீ எனக்கு
மீட்டும்வரை

தேவதை நீயடி
சுவைக்கும்வரை

காதல் நீயடி
முதலெழுத்து
மாறும்வரை

இணைய நண்பன்
10-06-2007, 01:12 PM
வீணையடி நீ எனக்கு
மீட்டும்வரை

தேவதை நீயடி
சுவைக்கும்வரை

காதல் நீயடி
முதலெழுத்து
மாறும்வரை

சுவைக்கும் படியான கவிதை.அந்த முதலெழுத்து என்ன?

அமரன்
10-06-2007, 01:14 PM
சுவைக்கும் படியான கவிதை.அந்த முதலெழுத்து என்ன?
காதலின் முதல் எழுத்தை சா என மாற்றிப்பாருங்கள். இந்தக்கவிதைக்கு இன்னொரு கருத்து இருக்கு என நினைக்கின்றேன். அதைச் சொன்னால் கவிதை பண்பட்டவருக்கான பதிப்புக்ளுக்கு மாற்றப்பட்டு விடும் என் நினைக்கின்றேன்.

இதயம்
10-06-2007, 01:15 PM
அது தானே கவிதையின் சிறப்பு டச்..! காதல் என்பது சாதல் ஆகும் வரை என்று சொல்கிறார் அமரன்.. அப்படித்தானே நண்பரே..?

இதயம்
10-06-2007, 01:18 PM
இந்தக்கவிதைக்கு இன்னொரு கருத்து இருக்கு என நினைக்கின்றேன். அதைச் சொன்னால் கவிதை பண்பட்டவருக்கான பதிப்புக்ளுக்கு மாற்றப்பட்டு விடும் என் நினைக்கின்றேன்.

ஏன்... நல்லாத்தானே போய்ட்டிருக்கு...?? :music-smiley-008::music-smiley-008::music-smiley-008:(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

அமரன்
10-06-2007, 01:19 PM
அது தானே கவிதையின் சிறப்பு டச்..! காதல் என்பது சாதல் ஆகும் வரை என்று சொல்கிறார் அமரன்.. அப்படித்தானே நண்பரே..?
அப்படியும்தான் இதயம்

இணைய நண்பன்
10-06-2007, 01:20 PM
காதலின் முதல் எழுத்தை சா என மாற்றிப்பாருங்கள். இந்தக்கவிதைக்கு இன்னொரு கருத்து இருக்கு என நினைக்கின்றேன். அதைச் சொன்னால் கவிதை பண்பட்டவருக்கான பதிப்புக்ளுக்கு மாற்றப்பட்டு விடும் என் நினைக்கின்றேன்.

நன்றி நண்பரே

சிவா.ஜி
10-06-2007, 01:21 PM
வீணையடி நீ எனக்கு
மீட்டும்வரை

தேவதை நீயடி
சுவைக்கும்வரை

காதல் நீயடி
முதலெழுத்து
மாறும்வரை
முதலெழுத்து என்றால் அவளின் இனிஷியல்.அது திருமணத்துக்குப்பிறகு மாறுமல்லவா? அப்படி மாறினால் எல்லாம் மாறிவிடும் என்கிறார்.(அப்படி நினைக்கிறேன்)

ஓவியா
10-06-2007, 01:22 PM
காதலின் முதல் எழுத்தை சா என மாற்றிப்பாருங்கள். இந்தக்கவிதைக்கு இன்னொரு கருத்து இருக்கு என நினைக்கின்றேன். அதைச் சொன்னால் கவிதை பண்பட்டவருக்கான பதிப்புக்ளுக்கு மாற்றப்பட்டு விடும் என் நினைக்கின்றேன்.

பண்படவர்களின் பகுதியில் கவிதை படைத்து புகுந்து விளையாடுமளவிற்க்கு கவிதையிலே கவித்திரன், புலமை எல்லாம் வந்தாச்சா!!! பெரிய தில்லாலங்கடிதான் (நன்றி:பிரதீப்)

கவிதையின் விமர்சனம்.

காதல் ஒரு வீணையின் ராகம், காதலி முக்கனியின் சுவை, :lachen001: :lachen001:

இல்லையேனில்................................... சாதலும் ஒரூ சுவைதானோ :whistling:

காதல் இல்லயேன் சாதல்.....

இதயம்
10-06-2007, 01:25 PM
முதலெழுத்து என்றால் அவளின் இனிஷியல்.அது திருமணத்துக்குப்பிறகு மாறுமல்லவா? அப்படி மாறினால் எல்லாம் மாறிவிடும் என்கிறார்.(அப்படி நினைக்கிறேன்)

உங்க பாட்டில் சொன்னது போல் காவிரி ஆறும், கைக்குத்தல் அரிசியும் மறந்து போகலாம், ஆனால், திருமணத்திற்கு பிறகு காதல் மறந்து போகுமா..?

குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க சிவா.ஜி..!!

சிவா.ஜி
10-06-2007, 01:29 PM
எனக்கு சத்தியமாக அந்த மாதிரி என்னமெல்லாம் இல்லை. சும்மா அப்படியிருக்குமோ....என்றுதான் சொன்னேன். குடும்பத்தில் குழப்பமா..?நாராயணா நாராயணா......

அமரன்
10-06-2007, 01:32 PM
முதலெழுத்து என்றால் அவளின் இனிஷியல்.அது திருமணத்துக்குப்பிறகு மாறுமல்லவா? அப்படி மாறினால் எல்லாம் மாறிவிடும் என்கிறார்.(அப்படி நினைக்கிறேன்)
கவிதையின் இன்னொரு முகத்தை கரக்டா காட்ச்பண்ணிட்டீங்க.
இப்போ இதை மனதில் இருத்தி முதல் வரிகளைப் படியுங்கள்.

இதயம்
10-06-2007, 01:32 PM
குடும்பத்தில் குழப்பமா..?நாராயணா நாராயணா......

ஓ... அவரா நீங்க..?!! சந்தேகத்தில தான் கேட்டேன்.. ஆனா நிரூபிச்சிட்டாரு..!!:thumbsup:

அமரன்
10-06-2007, 01:33 PM
பண்படவர்களின் பகுதியில் கவிதை படைத்து புகுந்து விளையாடுமளவிற்க்கு கவிதையிலே கவித்திரன், புலமை எல்லாம் வந்தாச்சா!!! பெரிய தில்லாலங்கடிதான் (நன்றி:பிரதீப்)

கவிதையின் விமர்சனம்.

காதல் ஒரு வீணையின் ராகம், காதலி முக்கனியின் சுவை, :lachen001: :lachen001:

இல்லையேனில்................................... சாதலும் ஒரூ சுவைதானோ :whistling:

காதல் இல்லயேன் சாதல்.....
மன்றத்தின் காதல் கவிஞரின் என் கவிதை பற்றிய காதல் பார்வை என் கவிதைக்கு அழகு சேர்க்கின்றது. என் கவிதை அத்தனை அழகா என நினைக்கத் தோன்றுகின்றது..

அமரன்
10-06-2007, 01:34 PM
ஏன்... நல்லாத்தானே போய்ட்டிருக்கு...?? :music-smiley-008::music-smiley-008::music-smiley-008:(வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)
சிரிக்க வைக்கிறீங்களே இதயம்..

சிவா.ஜி
10-06-2007, 01:36 PM
கவிதையின் இன்னொரு முகத்தை கரக்டா காட்ச்பண்ணிட்டீங்க.
இப்போ இதை மனதில் இருத்தி முதல் வரிகளைப் படியுங்கள்.
இதயம் சார் பாத்தீங்களா பாத்தீங்களா...அமரன் சொன்னதைக் கேட்டீங்களா கேட்டீங்களா?

அமரன்
10-06-2007, 01:40 PM
உங்க பாட்டில் சொன்னது போல் காவிரி ஆறும், கைக்குத்தல் அரிசியும் மறந்து போகலாம், ஆனால், திருமணத்திற்கு பிறகு காதல் மறந்து போகுமா..?

குடும்பத்தில குழப்பத்தை உண்டு பண்ணாதீங்க சிவா.ஜி..!!
சிலருக்குப் பொருந்தும் அல்லவா? பொருந்தும் சிலருக்கு இது பொருந்தும் அல்லவா?

இதயம்
10-06-2007, 02:07 PM
இதயம் சார் பாத்தீங்களா பாத்தீங்களா...அமரன் சொன்னதைக் கேட்டீங்களா கேட்டீங்களா?

பாக்கிறோம் பாக்கிறோம் பாத்துக்கிட்டே இருக்கோம்.
கேக்கிறோம் கேக்கிறோம் கேட்டுக்கிட்டே இருக்கும்..!!

ஓவியா
10-06-2007, 02:16 PM

:sport-smiley-002: அசத்தல்

ஷீ-நிசி
10-06-2007, 02:16 PM
முதலெழுத்து என்றால் அவளின் இனிஷியல்.அது திருமணத்துக்குப்பிறகு மாறுமல்லவா? அப்படி மாறினால் எல்லாம் மாறிவிடும் என்கிறார்.(அப்படி நினைக்கிறேன்)

அமரன்,

இப்படியும் விடு(கிறீர்கள்)கவிதைகளை! :4_1_8:

சிவா! எப்படிப்பா இப்படி சிந்திக்கற! அருமை!

அமரன்
10-06-2007, 02:19 PM
அமரன்,

இப்படியும் விடு(கிறீர்கள்)கவிதைகளை! :4_1_8:

சிவா! எப்படிப்பா இப்படி சிந்திக்கற! அருமை!
நன்றி நிஷி. எப்படி என்று தெரியவில்லை. அப்படி அமைந்துவிட்டது சிந்தனை. (இருவரதும்.)

அமரன்
11-06-2007, 12:48 PM
பாக்கிறோம் பாக்கிறோம் பாத்துக்கிட்டே இருக்கோம்.
கேக்கிறோம் கேக்கிறோம் கேட்டுக்கிட்டே இருக்கும்..!!
ஆமா நீங்க எந்த ஊருச் சிட்டிசன்

அக்னி
26-06-2007, 08:13 PM
இந்தக் கவிதையை முன்னமேயே பார்த்திருந்தேன். இதன் எதிரொலிப்புத்தான் அங்கே (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=229405&postcount=15) பதிவானது...

நுணுக்கம் கூடிய கவிதை...