PDA

View Full Version : சொற்சிலம்பம் .

Pages : [1] 2 3 4

அமரன்
10-06-2007, 12:52 PM
ஓவிக்குப் பிடித்த (ஓவியைப் பிடித்தவல்ல) ஆவிக்கு காலில்லை என்கின்றார்களே உண்மையா?

..

தாமரை
10-06-2007, 01:47 PM
ஓவிக்குப் பிடித்த (ஓவியைப் பிடித்தவல்ல) ஆவிக்கு காலில்லை என்கின்றார்களே உண்மையா?

முக்காலும் உண்மை, மீதிக் கால்??. முழு உண்மையே இப்படி என்றால்??

ஆவி(ற்)க்குச் சுழிதான். ஓவிக்கு பிடித்திருக்கிறதே.(அ வை சுழித்தால் ஆ)அது கூட தலைக்கு அருகில் கையைச் சுழித்துதான் காட்டுவார்களாம்.

இதயம்
10-06-2007, 01:49 PM
சரியாகச் சொல்லுங்கள் அமரன்..

ஓவியை பிடித்த ஆவியா..? அல்லது

ஓவிக்கு பிடித்த ஆவியா..? (ஓவிக்கு பேயெல்லாம் ஃப்ரெண்டா..?)

அமரன்
10-06-2007, 01:50 PM
முக்காலும் உண்மை, மீதிக் கால்??. முழு உண்மையே இப்படி என்றால்??

ஆவி(ற்)க்குச் சுழிதான். ஓவிக்கு பிடித்திருக்கிறதே.(அ வை சுழித்தால் ஆ)அது கூட தலைக்கு அருகில் கையைச் சுழித்துதான் காட்டுவார்களாம்.
முக்கால் உண்மையுடன் அகரத்திற்கு கால் போட்டால் என்ன வரும்.

ஓவியா
10-06-2007, 01:51 PM
ஆவிக்கு கால் இல்லையா!!!

ஓவி: என்ன கொடுமை சரவணன் இது.

சரவணன்: ஓவியை வச்சு-வச்சு திரி தொரக்கறாகலே அதையும் ஓட்டு ஓட்டுனு அஞ்சு நச்சத்திர அந்தஸ்து கொடுத்து ஓட்டுறாகளே அதை விடவா கொடுமை இது!!!!

அமரன்
10-06-2007, 01:53 PM
ஆவிக்கு கால் இல்லையா!!!

ஓவி: என்ன கொடுமை சரவணன் இது.

சரவணன்: ஓவியை வச்சு-வச்சு திரி தொரக்கறாகலே அதையும் ஓட்டு ஓட்டுனு அஞ்சு நச்சத்திர அந்தஸ்து கொடுத்து ஓட்டுறாகளே அதை விடவா கொடுமை இது!!!!
சந்தோசமெனில் மின்னிடுங்கள்.
துக்கமெனில் மன்னித்திடுங்கள்.

ஓவியா
10-06-2007, 02:01 PM
சந்தோசமெனில் மின்னிடுங்கள்.
துக்கமெனில் மன்னித்திடுங்கள்.

நோ ப்ரொப்லேம்.

நல்லா ஜாமாய் கண்ணு. :grin:

தாமரை
10-06-2007, 02:10 PM
முக்கால் உண்மையுடன் அகரத்திற்கு கால் போட்டால் என்ன வரும்.
அகரத்திற்கு கால்போட்டாலா??

ஆமாம் நம்பர் என்ன?

இதயம்
10-06-2007, 02:12 PM
அகரத்திற்கு கால்போட்டாலா??

ஆமாம் நம்பர் என்ன?

ஆஹா.. ஆரம்பிச்சிட்டாய்ங்கய்யா..!!

ஓவியா
10-06-2007, 02:14 PM
அகரத்திற்கு (call) கால்போட்டாலா??

ஆமாம் நம்பர் என்ன?

அட்ராசக்கை :music-smiley-010: அட்ராசக்கை :music-smiley-010: அட்ராசக்கை :music-smiley-010:

அமரன்
10-06-2007, 02:16 PM
அகரத்திற்கு கால்போட்டாலா??

ஆமாம் நம்பர் என்ன?
தமிழில் இரண்(டு)டாவது..

ஓவியா
10-06-2007, 02:17 PM
தமிழில் இரண்டு ஆவது.

தமிழில் இரண்(டு)டாவது..

:lachen001: :lachen001: :lachen001: தாங்கலடாசாமி

அமரன்
10-06-2007, 02:22 PM
அகரத்துக்கு தாமரையின் முக்கால் உண்மையின்கால் கால்போட்டால் ஆகரம்.
ஆ தமிழில் இரண்டாவது என நினைக்கின்றேன்.
அ உச்சரிப்பு ஒன்றாயின் ஆ உச்சரிப்பு இரண்டுதானே.

விகடன்
10-06-2007, 02:27 PM
ஆ தமிழில் இரண்டாவது என நினைக்கின்றேன்.

உயிரெழுத்தில் இரண்டாவது என்று சொல்லலாம். வெறுமனே தமிழில் என்று சொல்ல முடியாது என்பது எனது கருத்து.

அ உச்சரிப்பு ஒன்றாயின் ஆ உச்சரிப்பு இரண்டுதானே.

இருக்கவே இருக்காது. வேணுமென்றால் ஒன்றரையாக இருக்கலாம்.

அமரன்
10-06-2007, 02:29 PM
உயிரெழுத்தில் இரண்டாவது என்று சொல்லலாம். வெறுமனே தமிழில் என்று சொல்ல முடியாது என்பது எனது கருத்து.
இருக்கவே இருக்காது. வேணுமென்றால் ஒன்றரையாக இருக்கலாம்.
அப்படியே வைத்துக்கொள்வோம் ஜாவா.
முக்கல் உண்மையின் பிரகாரம் அகரத்திற்கு கால் சேர்த்தால் ஆகரம்தானே. அதுசரியா.

தாமரை
10-06-2007, 02:33 PM
அகரத்துக்கு தாமரையின் முக்கால் உண்மையின்கால் கால்போட்டால் ஆகரம்.
ஆ தமிழில் இரண்டாவது என நினைக்கின்றேன்.
அ உச்சரிப்பு ஒன்றாயின் ஆ உச்சரிப்பு இரண்டுதானே.

உமக்கு ஆகாரம் பத்தலைன்னு நினைக்கிறேன்
இதைத்தானே சொல்லி இருக்கிறேன். அ விற்கும் கால் கிடையாது... ஆ விற்கும் கால் கிடையாது. உயிரெழுத்துக்களுக்கு கால் கிடையாது. ஏனென்றால் உயிர் என்பது ஆவி.. என்ன ஓவி....

ஆவி(ற்)க்குச் சுழிதான். ஓவிக்கு பிடித்திருக்கிறதே.(அ வை சுழித்தால் ஆ)அது கூட தலைக்கு அருகில் கையைச் சுழித்துதான் காட்டுவார்களாம்.

அமரன்
10-06-2007, 02:34 PM

சரியான ஆகாரத்திற்காகவே இத்திரி ஆரம்பித்தேன்..
ஆகரத்துக்கு இச் கொடுத்தால் என்ன வரும்.

ஷீ-நிசி
10-06-2007, 02:35 PM
யப்பா! பூந்து வெளையாடுறீங்களே! கலக்குங்க! கலக்குங்க!

சிவா.ஜி
10-06-2007, 02:36 PM
ஆஹா... தாமரை ஐயா எங்கேயோ போய்க்கிடிருந்த திரியை மறுபடியும் ஆவிக்கு கொண்டு வந்திட்டீங்க அதுவும் அசத்தலான இலக்கணத்துடன்.

அமரன்
10-06-2007, 02:37 PM
ஆஹா... தாமரை ஐயா எங்கேயோ போய்க்கிடிருந்த திரியை மறுபடியும் ஆவிக்கு கொண்டு வந்திட்டீங்க அதுவும் அசத்தலான இலக்கணத்துடன்.
அவரிடம் கற்கும் நோக்குடனே இத்திரியை ஆரம்பித்தேன் தோழரே.

இதயம்
10-06-2007, 02:37 PM
இந்தப்பக்கம் வந்தா எப்பவும் கண்ணக்கட்டுதே..!!:traurig001:

தாமரை
10-06-2007, 02:41 PM
சரியான ஆகாரம் இப்போ கிடைத்தது.
ஆகரத்துக்கு இச் கொடுத்தால் என்ன வரும்.
ஆ - பசு

ஆ கரத்திற்கு இச்சிட்டால்
நான்கிலொன்றுகிடைக்கலாம்.. ஒருக்கால்

உதை
பால்
சாணம்
கோமியம்

அமரன்
10-06-2007, 02:45 PM
ஆ - பசு

ஆ கரத்திற்கு இச்சிட்டால்
நான்கிலொன்றுகிடைக்கலாம்.. ஒருக்கால்

உதை
பால்
சாணம்
கோமியம்
அப்போ ஆ கரத்திற்கு இச் இட்டால் சாவும் வரலாம் இல்லையா.

தாமரை
10-06-2007, 02:46 PM
அப்போ ஆ கரத்திற்கு இச் இட்டால் சாவும் வரலாம் இல்லையா.

ஆச்சா?

இதயம்
10-06-2007, 02:47 PM
அப்போ ஆ கரத்திற்கு இச் இட்டால் சாவும் வரலாம் இல்லையா.

அது நம்ம கையில் இல்லை. ஆவின் காலில் இருக்கிறது..!:D

ஷீ-நிசி
10-06-2007, 03:03 PM
ஆச்சா?

அச்சா! (ஹிந்தி)

தாமரை
10-06-2007, 03:06 PM
அச்சா! (ஹிந்தி)

அச்சுதான் (தமிழ்) அசல்தான்..
அச்சு அசல்தான் நகல்..

ஷீ-நிசி
10-06-2007, 03:18 PM
அச்சுதான் (தமிழ்) அசல்தான்..
அச்சு அசல்தான் நகல்..

ரசிக்கவைத்த ந(க்)கல்!

ஓவியா
10-06-2007, 03:22 PM
அனைவரும் தழிழ் புலமையில் மின்னுகின்றீர்கள். பாராட்டுக்கள்..

ரசித்தேன். ரசிக்கிறேன். ரசிப்பேன். நன்றி.

தாமரை
11-06-2007, 03:25 AM
ஆச்சா?

ஆச் "சா"

அமரன் அவர்களே

அகரம், ஆகாரம் , இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம், எகரம், ஏகாரம், ஐங்காரம், ஒகரம், ஓங்காரம், ஔகாரம்..

ஆகரம் என்பது தவறானப் பிரயோகம்.

அதே போய் மெய்யில் உயிரேறும் என்பது புணர்ச்சி விதி. இச் சுடன் ஆகாரம் ச்+ஆ = சா. ஆகாரத்துடன் இச் ஆ+ச் = ஆச்.

ஓவியா
11-06-2007, 05:07 AM
இந்தப்பக்கம் வந்தா எப்பவும் கண்ணக்கட்டுதே..!!:traurig001:

நான் மயக்கமே வந்து விழுந்துட்டேன். அப்ப நீங்க இன்னும் நலம்தான், அதனால் ஜோதியில் கலந்து சிறப்பிக்கவும்.

- மருத்துவமனை பெட்டில் மயக்கம் கலையாமல்
ஓவியா.

ஓவியன்
11-06-2007, 05:34 AM
ஓவிக்குப் பிடித்த ஆவியை
இந்த மன்றில் பதித்த பாவியை
காசிக்குப் போய் காவியை
உடுக்க வைத்த மேதாவி யாரோ?.

தாமரை
11-06-2007, 07:10 AM
ஓவிக்குப் பிடித்த ஆவியை
இந்த மன்றில் பதித்த பாவியை
காசிக்குப் போய் காவியை
உடுக்க வைத்த மேதாவி யாரோ?.

ஒவ்வொரு மே மாதமும் அடுத்த வகுப்புக்குத் தாவுவதால் மாணவர்களை "மே"தாவி எனலாமே..

ஆமாம் ஓவியா காவி உடுத்தி காசி போனாரா இல்லை காசிக்குப் போய் காவி உடுத்தினாரா?

ஓவியன்
11-06-2007, 07:14 AM
ஒவ்வொரு மே மாதமும் அடுத்த வகுப்புக்குத் தாவுவதால் மாணவர்களை "மே"தாவி எனலாமே..

ஆமாம் நீங்களும் தாவியதால் தானே தாமரை ஆனீர்கள்!!:D

அமரன்
11-06-2007, 07:21 AM
ஆச் "சா"

அமரன் அவர்களே

அகரம், ஆகாரம் , இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம், எகரம், ஏகாரம், ஐங்காரம், ஒகரம், ஓங்காரம், ஔகாரம்..

ஆகரம் என்பது தவறானப் பிரயோகம்.

அதே போய் மெய்யில் உயிரேறும் என்பது புணர்ச்சி விதி. இச் சுடன் ஆகாரம் ச்+ஆ = சா. ஆகாரத்துடன் இச் ஆ+ச் = ஆச்.
நன்றி அண்ணா. தவறைத்திருத்திக்கொள்கின்றேன். நன்றி.

அமரன்
11-06-2007, 07:22 AM
ஆமாம் நீங்களும் தாவியதால் தானே தாமரை ஆனீர்கள்!!:D
அவர் தாவியதால் தாமரை
தாம் அரையோ

தாமரை
11-06-2007, 07:32 AM
அவர் தாவியதால் தாமரை
தாம் அரையோ

தாவிய தா மரை
தா விய தாம் அரை
தாவியதாம் அரை
மற்றதெல்லாம் மறை

ஓவியன்
11-06-2007, 07:35 AM
தாவிய தா மரை
தா விய தாம் அரை
தாவியதாம் அரை
மற்றதெல்லாம் மறை

எங்கே கொண்டு சென்று போய் மறைப்பது செல்வன் அண்ணா?

தாமரை
11-06-2007, 07:37 AM
எங்கே கொண்டு சென்று போய் மறைப்பது செல்வன் அண்ணா?

மறை என்றால் வேதம் என்றும் அர்த்தம் உண்டு.

தா விய தாம் அரை தாவியபின் மற்றதெல்லாம் வேதம்.

ஓவியன்
11-06-2007, 07:40 AM
மறை என்றால் வேதம் என்றும் அர்த்தம் உண்டு.

தா விய தாம் அரை தாவியபின் மற்றதெல்லாம் வேதம்.

அடடே அப்படியும் ஒரு அர்த்தமுள்ளதா?

நான் மறை என்னும் போது ''மறை" அதாவது மறைத்தல் அல்லது கழித்தல் என்று மட்டுமே நினைத்தேன்

விளக்கியமைக்கு நன்றிகள் அண்ணா!

இதயம்
11-06-2007, 07:53 AM
மறை என்றால் வேதம் என்றும் அர்த்தம் உண்டு.

தா விய தாம் அரை தாவியபின் மற்றதெல்லாம் வேதம்.

தா - என்றால் கொடு
தாம் - என்பதற்கு தனிப்பொருள் இல்லை
மரை - என்பது வேதமல்ல
மறை - என்றால் தான் வேதம்.
அரை - பாதி மற்றும் இடுப்பு

இதில் தாம் என்பது எப்படி தாவிய என்ற பொருள் கொள்கிறது என்று சொல்லுங்கள். இந்த சொற்சிலம்பத்தில் எழுத்து முரண்பாடு ஏற்றுக்கொள்ள கூடியதா..?

அமரன்
11-06-2007, 07:56 AM

தாம் என்பது நீர்/நீங்கள் என்பதைக்குறிக்கும் என நினைக்கின்றேன். தாங்கள்=தாம்

தாமரை
11-06-2007, 09:43 AM
தா = கொடு
விய = விஷம்
விஷம் கொடுத்த பாம்புதான்(தாம்) அரையில்(இடையில் அரைஞாணாக) தாவிய கதை தெரியாதா?

ஆதவா
11-06-2007, 07:16 PM
தா - என்றால் கொடு
தாம் - என்பதற்கு தனிப்பொருள் இல்லை
மரை - என்பது வேதமல்ல
மறை - என்றால் தான் வேதம்.
அரை - பாதி மற்றும் இடுப்பு

இதில் தாம் என்பது எப்படி தாவிய என்ற பொருள் கொள்கிறது என்று சொல்லுங்கள். இந்த சொற்சிலம்பத்தில் எழுத்து முரண்பாடு ஏற்றுக்கொள்ள கூடியதா..?

தாம் என்றால் - தான் என்பதன் பன்மை
மரை என்றால் மான்

அவர் எழுதிய கவிதையின் வார்த்தை முழுமைக்கு அர்த்தமுண்டு..

(விய/மறை லதான் நானும் தவறு பண்ணினேன்.)

அமரன்
12-06-2007, 01:33 PM
கூட்டு என்பது இனிமையானது எனத் தெரியும். அதில் தொக்கு சுவையா அல்லது தொகை(துவையல்) சுவையா எனத் தெரியலையே?
(கருத்தூண்டிய பேராசிரியர் நன்னனுக்கு நன்றி)

இதயம்
12-06-2007, 01:39 PM
தாம் என்றால் - தான் என்பதன் பன்மை
மரை என்றால் மான்

அவர் எழுதிய கவிதையின் வார்த்தை முழுமைக்கு அர்த்தமுண்டு..

(விய/மறை லதான் நானும் தவறு பண்ணினேன்.)

தாமரை என்பதை தா+மரை என்றோ அல்லது
தாம்+அரை என்றோ தான் பிரிக்க முடியும்.
அதை ஒரு போதும் தாம்+மரை என்று பிரிக்க முடியாது.:lachen001::lachen001::lachen001:

இது நான் படித்த இலக்கணம். இலக்கணம் தெரிந்தவர்கள் கொஞ்சம் எங்கள் இருவருக்கும் விளக்குங்களேன்.

தாமரை
12-06-2007, 01:40 PM
கூட்டு என்பது இனிமையானது எனத் தெரியும். அதில் தொக்கு சுவையா அல்லது தொகை(துவையல்) சுவையா எனத் தெரியலையே?
(கருத்தூண்டிய பேராசிரியர் நன்னனுக்கு நன்றி)

தொக்கு என்பது ஊறுகாய் வகை (தக்காளித் தொக்கு, மாங்காய்த் தொக்கு). தொக்கில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

துவையல் என்பது சட்னி வகை (தேங்காய்த் துவையல்). சட்டென்று செய்ய முடிவதால் சட்னி. துவையல் அரைப்பார்கள்.

சமையலானந்தாவுக்குச் சவாலா?

அவரை(க்) கடலை(பருப்பு) போட்டு செய்யும் கூட்டில், தொக்கி நிற்கும் காரமும் மணமும் எவ்வளவு தொகை என்றாலும் தரலாமே! :lachen001:

தாமரை
12-06-2007, 01:45 PM
தாமரை என்பதை தா+மரை என்றோ அல்லது
தாம்+அரை என்றோ தான் பிரிக்க முடியும்.
அதை ஒரு போதும் தாம்+மரை என்று பிரிக்க முடியாது.:lachen001::lachen001::lachen001:

இது நான் படித்த இலக்கணம். இலக்கணம் தெரிந்தவர்கள் கொஞ்சம் எங்கள் இருவருக்கும் விளக்குங்களேன்.

கடையொற்றும் அடுத்த வார்த்தையின் முதல் உயிர்மெய்யும் ஒரு மெய்யாய் வருமானால் ஒரு உயிர்மெய் மட்டுமே வரும்.

பாதம்+மலர் = பாதமலர்
ஆரம்+மணி = ஆரமணி

இதயம்
12-06-2007, 01:55 PM
கடையொற்றும் அடுத்த வார்த்தையின் முதல் உயிர்மெய்யும் ஒரு மெய்யாய் வருமானால் ஒரு உயிர்மெய் மட்டுமே வரும்.

பாதம்+மலர் = பாதமலர்
ஆரம்+மணி = ஆரமணி

நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், நீங்கள் கொடுத்த உதாரணங்களை உற்றுநோக்கினால் அந்த வார்த்தையை பிரித்தாலும், சேர்த்துப்படித்தாலும் ஒரே பொருள் தான் வரும். ஆனால், தாமரையில் அந்த விதி பொருந்தாது. காரணம், பிரிக்கும் பட்சத்தில் அர்த்தம் வேறுபடுகிறதே..!!

தாமரை
12-06-2007, 01:57 PM

சிலேடைகள் அப்படித்தான்

அங்கயற்கண்ணி = அழகிய மீன் விழியாள்
அங்கு அயற் கண்ணி = அங்கே அயர்ந்த (தூக்கம் கலந்த) கண்களைக் கொண்டவளாய் இருப்பவள்.

இதயம்
12-06-2007, 02:00 PM
சிலேடைகள் அப்படித்தான்

அங்கயற்கண்ணி = அழகிய மீன் விழியாள்
அங்கு அயற் கண்ணி = அங்கே அயர்ந்த (தூக்கம் கலந்த) கண்களைக் கொண்டவளாய் இருப்பவள்.

அங்கயற்கண்ணியை பிரிக்க முடியாது. காரணம் கண்ணி என்பவள் பெண்ணல்ல, கன்னி என்பதே சரி..!!

தாமரை
12-06-2007, 02:06 PM
அங்கயற்கண்ணியை பிரிக்க முடியாது. காரணம் கண்ணி என்பவள் பெண்ணல்ல, கன்னி என்பதே சரி..!!

அழகு + கயல் + கண்ணி
அழகு + கயற்கண்ணி
அங்கயற்கண்ணி.

கண்ணி என்பது கண்ணுடையவள்
கன்னி - என்பது மணமாகா இளம்பெண்
இரண்டும் சரியே!

அங்கயற்கண்ணி என்பது மீனாட்சி யின் இன்னொரு பெயர்.

இதயம்
12-06-2007, 02:15 PM
அழகு + கயல் + கண்ணி
அழகு + கயற்கண்ணி
அங்கயற்கண்ணி.

கண்ணி என்பது கண்ணுடையவள்
கன்னி - என்பது மணமாகா இளம்பெண்
இரண்டும் சரியே!

அங்கயற்கண்ணி என்பது மீனாட்சி யின் இன்னொரு பெயர்.

கண்ணி என்பவள் பெண் என்பது எனக்கு மிகவும் புதிய செய்தி.
கண்ணி என்பது கண்ணுடையவள் என்றால் ஆணுக்கும் தான் கண்கள் இருக்கின்றன. ஏன் ஆணை குறிக்காது..? அப்படியென்றால் ஆண்பாலுக்கு என்ன சொல்?

அங்கயற்கண்ணி என்பதன் மீனாட்சியின் பெயர் என்பது நானறிந்ததே. அதனால் கண்ணி என்பது பெண்ணை குறிக்கும் என்று சொல்லமுடியாது. காரணம் அங்கயற்கண்ணி என்பது பெயருக்காக தானே தவிர நீங்கள் சொல்லும் பொருளுக்காக அல்ல. ஆனால், பொருளுடன் கூடிய பெயர்களும் இருக்கின்றன.

உதா: கயல்விழி
கயல் மீன்களைப்போன்ற விழியுடையவள்

தேன்மொழி
தேன் போன்ற இனிமையான மொழியுடையவள்

மலர்விழி
மலர் போன்ற விழிகளை உடையவள்.

அழகு + கயல் + கண்ணி
அழகு + கயற்கண்ணி
அங்கயற்கண்ணி.

இலக்கண விதிப்படி கயல்+கண்ணி = கயற்கண்ணி சரி தான். ஆனால்,
அழகு +கயற்கண்ணி எப்படி அங்கயற்கண்ணி..? இலக்கண விதிகளுடன் விளக்குங்கள்.

தாமரை
12-06-2007, 02:17 PM

கண்ணனை மறந்ததேனோ இதயமே!
கமலக்கண்ணனை மறந்ததேனோ?

அமரன்
12-06-2007, 02:17 PM
கண்ணி என்பது கண்ணுடையவள்
இதயமே இதைக் கவனியுங்கள்.

இதயம்
12-06-2007, 02:18 PM
கண்ணனை மறந்ததேனோ இதயமே!
கமலக்கண்ணனை மறந்ததேனோ?

என்ன அப்பீட்டா..?

இதயம்
12-06-2007, 02:20 PM
கண்ணி என்பது கண்ணுடையவள்
இதயமே இதைக் கவனியுங்கள்.

என் கேள்வி புரியவில்லையா அமரன்..?

கண்ணுடையவள் கண்ணி எனும் போது
கண்ணுடையவனுக்கும் ஒரு அது போல் ஒரு சொல் இருக்க வேண்டுமே..?

சிவா.ஜி
12-06-2007, 02:21 PM
கண்ணி என்பவள் பெண் என்பது எனக்கு மிகவும் புதிய செய்தி.
கண்ணி என்பது கண்ணுடையவள் என்றால் ஆணுக்கும் தான் கண்கள் இருக்கின்றன. ஏன் ஆணை குறிக்காது..? அப்படியென்றால் ஆண்பாலுக்கு என்ன சொல்?
கண்ணுடயவள் கண்ணியல்லாமல் வேறு யார்.கண்ணுடயவன் கண்ணன்.
மாயக்கண்ணன் - மாயங்களை கண்களில் காட்டுபவன்.
கண்ணியில் இ வந்தாலே பெண்பால்தானே அண்ணி, வஞ்சி, காதலி இதெல்லாம் பார்த்தும் சந்தேகமெதற்கு இதயம்?

தாமரை
12-06-2007, 02:24 PM
கண்ணி என்பவள் பெண் என்பது எனக்கு மிகவும் புதிய செய்தி.
கண்ணி என்பது கண்ணுடையவள் என்றால் ஆணுக்கும் தான் கண்கள் இருக்கின்றன. ஏன் ஆணை குறிக்காது..? அப்படியென்றால் ஆண்பாலுக்கு என்ன சொல்?

அங்கயற்கண்ணி என்பதன் மீனாட்சியின் பெயர் என்பது நானறிந்ததே. அதனால் கண்ணி என்பது பெண்ணை குறிக்கும் என்று சொல்லமுடியாது. காரணம் அங்கயற்கண்ணி என்பது பெயருக்காக தானே தவிர நீங்கள் சொல்லும் பொருளுக்காக அல்ல. ஆனால், பொருளுடன் கூடிய பெயர்களும் இருக்கின்றன.

உதா: கயல்விழி
கயல் மீன்களைப்போன்ற விழியுடையவள்

தேன்மொழி
தேன் போன்ற இனிமையான மொழியுடையவள்

மலர்விழி
மலர் போன்ற விழிகளை உடையவள்.

அழகு + கயல் + கண்ணி
அழகு + கயற்கண்ணி
அங்கயற்கண்ணி.

இலக்கண விதிப்படி கயல்+கண்ணி = கயற்கண்ணி சரி தான். ஆனால்,
அழகு +கயற்கண்ணி எப்படி அங்கயற்கண்ணி..? இலக்கண விதிகளுடன் விளக்குங்கள்.

ஈறுபோதல் இடையுகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடியகரம் அய்யாதல்
தன்னொற்றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இணைபிறழல் இணையவும் பண்பிற்கியல்பே

இது தொல்காப்பியத்தின் பண்புப்புணர்ச்சி விதி.
ஈறு போதல் என்ற விடிப்படி கு போனது.
முன்னின்ற மெய்திரிதல் என்ற விதிப்படி ழ , ங் ஆனது என நினைக்கிறேன். இலக்கணப் புத்தகம் கிடைத்தால் பார்த்துச் சொல்கிறேன்.

பசுமை + தமிழ்

ஈறு போதல் - மை காணோம்
அடியகரம் ஐய்யாதல் - ப --> பை
சு எப்படி ந் ஆனதோ அதே விதிப்படித்தான்

விகடன்
12-06-2007, 02:24 PM
"நச்" என்றொரு விளக்கம் சிவா.ஜீ

தாமரை
12-06-2007, 02:26 PM
என்ன அப்பீட்டா..?
கண்ணன் என்று கண்ணிக்கு ஆண்பாலைச் சொன்னேன். அப்பீட்டு நான் இல்லை நீங்க. உங்க விவாதத்தில் அங்கு அயர்ந்த கண்களுடைய அந்தப் பெண் தூங்கியே விட்டாள்

அமரன்
12-06-2007, 02:28 PM
என் கேள்வி புரியவில்லையா அமரன்..?

கண்ணுடையவள் கண்ணி எனும் போது
கண்ணுடையவனுக்கும் ஒரு அது போல் ஒரு சொல் இருக்க வேண்டுமே..?
கண்ணன்
அதையும் சொல்லி உள்ளாரே!

இதயம்
12-06-2007, 02:30 PM
கண்ணி என்பவள் பெண் என்பது எனக்கு மிகவும் புதிய செய்தி.
கண்ணி என்பது கண்ணுடையவள் என்றால் ஆணுக்கும் தான் கண்கள் இருக்கின்றன. ஏன் ஆணை குறிக்காது..? அப்படியென்றால் ஆண்பாலுக்கு என்ன சொல்?
கண்ணுடயவள் கண்ணியல்லாமல் வேறு யார்.கண்ணுடயவன் கண்ணன்.
மாயக்கண்ணன் - மாயங்களை கண்களில் காட்டுபவன்.
கண்ணியில் இ வந்தாலே பெண்பால்தானே அண்ணி, வஞ்சி, காதலி இதெல்லாம் பார்த்தும் சந்தேகமெதற்கு இதயம்?

இ வந்தால் பெண்பால் தான் வரும் என்று இல்லை.
ஆண்பால் - மன்னன்
பெண்பால் - ??

ஆண்பால் - கெட்டவன்
பெண்பால் - ??

ஆண்பால் - கணவன்
பெண்பால் - ??

நிறைய இது போல் உதாரணம் இருக்கு.

குற்றவாளி, நிரபராதி, பிரதிவாதி, நீதிபதி கூட இ-ல் தான் முடியுது. அனைவரும் பெண்பாலா..?

நீங்கள் சொன்னது வஞ்சி பெண்பால் என்றால் அப்போ வஞ்சன் என்பது ஆண்பாலாக வரவேண்டுமல்லவா..? வருமா??

எனக்கு இப்பவே கண்ணக்கட்ட ஆரம்பிச்சிடிச்சி..!!

இதயம்
12-06-2007, 02:31 PM
கண்ணன் என்று கண்ணிக்கு ஆண்பாலைச் சொன்னேன். அப்பீட்டு நான் இல்லை நீங்க. உங்க விவாதத்தில் அங்கு அயர்ந்த கண்களுடைய அந்தப் பெண் தூங்கியே விட்டாள்

ரசித்தேன் உங்கள் சரியான நேரத்திலான நகைச்சுவையை..!

சும்மா ஒரு விவாதத்திற்கு தான். உங்க அளவுக்கு நான் வர முடியுமா?

தாமரை
12-06-2007, 02:36 PM
இ வந்தால் பெண்பால் தான் வரும் என்று இல்லை.
ஆண்பால் - மன்னன்
பெண்பால் - ??

ஆண்பால் - கெட்டவன்
பெண்பால் - ??

ஆண்பால் - கணவன்
பெண்பால் - ??

நிறைய இது போல் உதாரணம் இருக்கு.

குற்றவாளி, நிரபராதி, பிரதிவாதி, நீதிபதி கூட இ-ல் தான் முடியுது. அனைவரும் பெண்பாலா..?

நீங்கள் சொன்னது வஞ்சி பெண்பால் என்றால் அப்போ வஞ்சன் என்பது ஆண்பாலாக வரவேண்டுமல்லவா..? வருமா??

எனக்கு இப்பவே கண்ணக்கட்ட ஆரம்பிச்சிடிச்சி..!!

இ வந்தா பரவாயில்லை. இப்படியே பேசிகிட்டிருந்த இந்தப் பக்கத்தில் ஈ தான் வரும்.

பெயர் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இதுதான் வித்தியாசம். அவர் சொன்ன இ பெயருக்காக. நீங்க வினையால் வரும் வினைப்பெயரை எடுத்துகிட்டு அவரைச் சாத்தறீங்களே!.

மன்னி - ன்னா அண்ணி
மன்னன் -ன்னா அண்ணனா அப்படின்னு கேட்கலையா. இப்ப பல அண்ணனுங்க மன்னனுங்களாத் தான் திரியறாங்க.

கணவன் என்பதற்கு சரியான வாதம் புடிச்சுட்டு உங்களை வச்சுக்கறேன்.

இதயம்
12-06-2007, 02:38 PM
கணவன் என்பதற்கு சரியான வாதம் புடிச்சுட்டு உங்களை வச்சுக்கறேன்.

நம்ம ஜாலியான விவாதத்துக்காக உங்களுக்கு ஏன் வாதம் புடிக்கணும்.!! :icon_clap::icon_clap:ஆண்டவா... தாமரையை காப்பாத்து..!!

தாமரை
12-06-2007, 02:43 PM
நம்ம ஜாலியான விவாதத்துக்காக உங்களுக்கு ஏன் வாதம் புடிக்கணும்.!! :icon_clap::icon_clap:ஆண்டவா... தாமரையை காப்பாத்து..!!
வாதம் எனக்கல்ல, கணவனுக்கு.. பிடி வாதம்(சாபம்).. பிடிவாதம்.

கணவன் என்ற சொல் வினைப்பெயர் என்று நிரூபித்துவிட்டால் போதும். அதற்கு கணவன் என்ற சொல்லை ஆராய்ந்து விட்டுச் சொல்கிறேன்.

மனைவி - என மனையில் பெண்ணை இருத்தியவர்கள் கணவனுக்கு ஒரு காரணம் இல்லாமலா வீட்டிருப்பார்கள். என் கண் அவன் மீதுதான்

சிவா.ஜி
12-06-2007, 02:45 PM
அண்ணி-அண்ணன் என்று ஏன் பிரிக்கவேண்டும் Mr.அண்ணன் Mrs.அண்ணன் என்று வைத்துக்கொள்ளலாமே.
கனவனுக்கு இன்னொரு பெயர் மணவாளன் அதற்கு பெண்பால் மணவாட்டி. இங்கும் இ தான் மனைவி இங்கும் இ தான். அப்படிப்பார்த்தால் கல்வி பெண்ணா குளவி பெண்ணா என்று கேட்காதீர்கள் நீங்கள் சொன்னதைப்போல இப்பவே கண்ணக்கட்டுது.

அமரன்
12-06-2007, 02:47 PM
வாதம் எனக்கல்ல, கணவனுக்கு.. பிடி வாதம்(சாபம்).. பிடிவாதம்.

கணவன் என்ற சொல் வினைப்பெயர் என்று நிரூபித்துவிட்டால் போதும். அதற்கு கணவன் என்ற சொல்லை ஆராய்ந்து விட்டுச் சொல்கிறேன்.

மனைவி - என மனையில் பெண்ணை இருத்தியவர்கள் கணவனுக்கு ஒரு காரணம் இல்லாமலா வீட்டிருப்பார்கள். என் கண் அவன் மீதுதான்
என் கண் அவன் என்று இருக்கலாமா

அக்னி
12-06-2007, 02:48 PM
அள்ளிப் பருக
தெள்ளிய தமிழ்...
சொற்சிலம்பமாய்...

உங்களின்,
சிலம்பாட்டத்தில்,
புதிதாய் பல சொற்கள்... கருத்துக்கள்...

சொற்சிலம்பம் பொருத்தமான
தலைப்புத்தான்...

தலை வணங்குகின்றேன்...
சான்றோர்களே,
உங்கள் புலமைக்கும், பகிர்வுக்கும்...

இதயம்
12-06-2007, 02:49 PM
கனவனுக்கு இன்னொரு பெயர் மணவாளன் அதற்கு பெண்பால் மணவாட்டி.

ஆண்பால் என்றால் மணவாளன் என்றால்
பெண்பால் மணவாளி என்று தானே வரவேண்டும்..? அதென்ன ஆட்டிக்கொண்டு ஒன்று வருகிறது..!:nature-smiley-007:

விதியைச்சொன்ன நீங்களே அதை மீறலாமா..?

கல்வியெல்லாம் இதில் வராது. காரணம், நாம் விவாதிப்பது உயிருள்ளவற்றை மட்டுமே..!!

கல்விக்கண் திறந்த காமராஜர் போன்றவற்றை படித்து அதற்கும் உயிர் இருக்கிறது என்று நினைத்துவிட்டீர்களோ..? இதென்ன சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.. அய்யோ.. அய்யோ..!!

தாமரை
12-06-2007, 02:50 PM
என் கண் அவன் என்று இருக்கலாமா
அப்போ கண் அவள் என்றூ சொல்லனுமே.. அட்லீஸ்ட் மூக்கு,பல்லு, நாக்கு, காது...:music-smiley-010:

இதயம்
12-06-2007, 02:51 PM
என் கண் அவன் என்று இருக்கலாமா

சூப்பரமரன்..!!

சூப்பர் + அமரன்:nature-smiley-007::nature-smiley-007::nature-smiley-007:

தாமரை
12-06-2007, 02:52 PM
ஆண்பால் என்றால் மணவாளன் என்றால்
பெண்பால் மணவாளி என்று தானே வரவேண்டும்..? அதென்ன ஆட்டிக்கொண்டு ஒன்று வருகிறது..!:nature-smiley-007:

விதியைச்சொன்ன நீங்களே அதை மீறலாமா..?

கல்வியெல்லாம் இதில் வராது. காரணம், நாம் விவாதிப்பது உயிருள்ளவற்றை மட்டுமே..!!

கல்விக்கண் திறந்த காமராஜர் போன்றவற்றை படித்து அதற்கும் உயிர் இருக்கிறது என்று நினைத்துவிட்டீர்களோ..? இதென்ன சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு.. அய்யோ.. அய்யோ..!!
மணம் திரூமணம் - ஒரு வினை.. (ஹா ஹா ஹா.. கல்யாணமானவர்களே அனுபவியுங்கள்)
மணவாளன் - திருமணத்தில் ஆளுபவன்.
மணவாட்டி - ஆட்டி வைப்பவள்.

இதயம்
12-06-2007, 02:53 PM
மணம் திரூமணம் - ஒரு வினை.. (ஹா ஹா ஹா.. கல்யாணமானவர்களே அனுபவியுங்கள்)
மணவாளன் - திருமணத்தில் ஆளுபவன்.
மணவாட்டி - ஆட்டி வைப்பவள்.

அவன் எங்கே ஆளுகிறான்..! ஆளப்படுகிறான்..அடங்கி கிடக்கிறான்.

தாமரைமணாளன் தானே நீங்கள்..??

அக்னி
12-06-2007, 02:54 PM
விதவை என்பது பெண்பாலானாள்,
ஆண்பால் என்ன?
தபுதாரன் என்பது மனைவியை இழந்த கணவன் என்றால்,
ஏன் விதவன் என்று வரவில்லை...

பொருத்தங்கள் இருக்கும் எதிரெதிர் பாற்களில்,
ஆனால்,
பொருந்தியேதான் இருக்க வேண்டும் என்பது தமிழின் மரபல்லவே...

தாமரை
12-06-2007, 02:56 PM
அவன் எங்கே ஆளுகிறான்..! ஆளப்படுகிறான்..அடங்கி கிடக்கிறான்.

தாமரைமணாளன் தானே நீங்கள்..??

அலைகிறான்.. ஆளுகிறான்.. அழுகிறான்..
கல்யாணத்திற்கு முன்... கல்யாணம்.. கல்யாணத்திற்குப் பின்

தாமரை
12-06-2007, 02:57 PM
விதவை என்பது பெண்பாலானாள்,
ஆண்பால் என்ன?
தபுதாரன் என்பது மனைவியை இழந்த கணவன் என்றால்,
ஏன் விதவன் என்று வரவில்லை...

பொருத்தங்கள் இருக்கும் எதிரெதிர் பாற்களில்,
ஆனால்,
பொருந்தியேதான் இருக்க வேண்டும் என்பது தமிழின் மரபல்லவே...
பாலருந்தியது போதுமென நினைக்கிறேன்,

அமரன்
12-06-2007, 02:59 PM
அப்போ கண் அவள் என்றூ சொல்லனுமே.. அட்லீஸ்ட் மூக்கு,பல்லு, நாக்கு, காது...:music-smiley-010:
தவறுகள் செய்யும்போது கண்டவளாகி விட்டால்....
ஆணாதிக்க (பழைய) சமுகம் அல்லவா.

தாமரை
12-06-2007, 03:13 PM
கண்டவளைக் கண்டவளைக் கண்டத்தில் கட்டியவனுக்குக் கண்டம்

கண்ட + அவளை கண்டு + அவளை கண்டம் = கழுத்து, கட்டிய + அவன் கண்டம் = ஆபத்து.

அக்னி
12-06-2007, 03:14 PM
கண்டவளைக் கண்டவளைக் கண்டத்தில் கட்டியவனுக்குக் கண்டம்

கண்ட + அவளை கண்டு + அவலை கண்டம் = கழுத்து, கட்டிய + அவன் கண்டம் = ஆபத்து.
அவலை என்றால் என்ன?

அமரன்
12-06-2007, 03:15 PM
கண்டவளைக் கண்டவளைக் கண்டத்தில் கட்டியவனுக்குக் கண்டம்

கண்ட + அவளை கண்டு + அவலை கண்டம் = கழுத்து, கட்டிய + அவன் கண்டம் = ஆபத்து.
நான் இன்னமும் சிக்கவில்லை.

தாமரை
12-06-2007, 03:18 PM
அவலை என்றால் என்ன?

அவலத்தை.. ..

எழுத்துப் பிழை.. சரி செய்து விட்டேன்.

தாமரை
12-06-2007, 04:25 PM
அவள் கழுத்தில்
கயிறு கட்டி
அவன் தூக்குபோட்டுக் கொண்டான்
கல்யாணம்.

தாமரை
12-06-2007, 04:29 PM
சிறுவர்களுக்கு பயனில்லாமல் பதிவுகள் சென்று கொண்டிருப்பதால், திரியை இங்கு நகர்த்தி இருக்கிறேன்

ஷீ-நிசி
12-06-2007, 04:41 PM
விட்டில் பூச்சியாய்
மின்னுகிறேன்! நீ
நோக்கும்போதெல்லாம்!

வீட்டில் பூச்சியாய்
தவிக்கிறேன்! நீ
நோக்காதபோதெல்லாம்!

தாமரை
13-06-2007, 02:18 AM
அவலத்தை.. ..

எழுத்துப் பிழை.. சரி செய்து விட்டேன்.

தமிழ் என் வேகத்தில் படும் அவலத்தை என்று சொன்னேன். கேட்க தவறிட்டீங்கல்ளே மக்களே!

ஆதவா
13-06-2007, 02:43 AM
தமிழ் என் வேகத்தில் படும் அவலத்தை என்று சொன்னேன். கேட்க தவறிட்டீங்கல்ளே மக்களே!

நீங்க என்ன வேகத்தில் போகறீங்க... அது பட்டு அவலமாகிறதுக்கு?? :1:.

ஆதவா
13-06-2007, 02:44 AM
அவள் கழுத்தில்
கயிறு கட்டி
அவன் தூக்குபோட்டுக் கொண்டான்
கல்யாணம்.

இது கலக்கல்... இந்த ஒரு கவிதை போதுமே.. (நாளைய சமுதாயக் கவிதை :D)

ஓவியன்
13-06-2007, 08:56 AM
விட்டில் பூச்சியாய்
மின்னுகிறேன்! நீ
நோக்கும்போதெல்லாம்!

வீட்டில் பூச்சியாய்
தவிக்கிறேன்! நீ
நோக்காதபோதெல்லாம்!

அடடா ஒரு சில எழுத்துக்களை மாற்றி இப்படி விளையாடுகிறீர்களே!

அமரன்
13-06-2007, 11:21 AM
அடடா ஒரு சில எழுத்துக்களை மாற்றி இப்படி விளையாடுகிறீர்களே!
அதுதான் சொற்சிலம்பம்.

ஆதவா
13-06-2007, 11:37 AM
அதுதான் சொற்சிலம்பம்.

நமக்கு இது

சொற்ப சிலம்பம்..

அதோடு இங்கு இருப்பதைக் காணும்போது

சொற் பசி லம்பம்

என் மூளைக் குள்ளோ

சொற் சில ம்பம்..

அமரன்
13-06-2007, 11:45 AM
நமக்கு இது

சொற்ப சிலம்பம்..

அதோடு இங்கு இருப்பதைக் காணும்போது

சொற் பசி லம்பம்

என் மூளைக் குள்ளோ

சொற் சில ம்பம்..
சொற் சிலம்பம் சொற்ப சிலம்பமாம் என்பதை சொற்சீரடியாகச் சொல்லியுள்ளார்.
நாம் நம்மனுமாம் சொற் சில என்பதை. இதுதான் தமிழ்(நகை)சுவையோ

அக்னி
13-06-2007, 11:51 AM
அவள் கழுத்தில்
கயிறு கட்டி
அவன் தூக்குபோட்டுக் கொண்டான்
கல்யாணம்.
கட்டிவிடும் கயிறு
அறுந்து போனாலும்
என்றுதான்,
இப்போதெல்லாம்
உலோகம் கொண்டு
உறுதியாக்குகின்றார்களோ...

ஓவியன்
13-06-2007, 11:54 AM
யாரோ
கண்ணடித்ததால் அவள்
கண்ணடியில் உதித்த துளி
கண்ணாடியில் பட்டு-மீள
கண் நாடி எங்கும் தெறித்தது.

ஆதவா
13-06-2007, 12:02 PM
இது நல்ல கருத்துள்ள சொல் விளையாட்டு என்பதாலும் இதன்மூலம் பல வார்த்தைகளும் அர்த்தங்களும் வரும் என்பதாலும் கவிதைப் பட்டறைக்கு மாற்றுகிறேன்.

சிவா.ஜி
13-06-2007, 01:47 PM
பழம் சுணங்குவதேன்
தச்சன் முனகுவதேன்

சிலேடையான பதில் தேவை

தாமரை
13-06-2007, 01:47 PM
யாரோ
கண்ணடித்ததால் அவள்
கண்ணடியில் உதித்த துளி
கண்ணாடியில் பட்டு-மீள
கண் நாடி எங்கும் தெறித்தது.

கண்ணடித்தது கண்டு
கண் நடித்தது
கண் அடி மை யழகில்
கண் அடிமை யானவன்
கண் அடியிட்டது
காதல்

சிவா.ஜி
13-06-2007, 01:50 PM
கண்ணடித்தது கண்டு
கண் நடித்தது
கண் அடி மை யழகில்
கண் அடிமை யானவன்
கண் அடியிட்டது
காதல்

அசத்தல் கவிதை தாமரை.
காதலுக்குப்பின் கண் அடிமை யானவன் கண் அவன் ஆனானா?

தாமரை
13-06-2007, 01:51 PM
கட்டிவிடும் கயிறு
அறுந்து போனாலும்
என்றுதான்,
இப்போதெல்லாம்
உலோகம் கொண்டு
உறுதியாக்குகின்றார்களோ...

தங்கும் எனத்
தங்கம் சேர்க்க

தாலியின் மதிப்பு மறந்து
தங்கம் மதிக்கப்பட்டது

தொங்கியது
ஆணியில் தாலி
ஆணின் தலையோடு

தாமரை
13-06-2007, 02:03 PM
அசத்தல் கவிதை தாமரை.
காதலுக்குப்பின் கண் அடிமை யானவன் கண் அவன் ஆனானா?

கண் அடிமை ஆனவன்
கணவன் ஆகலாம்
மரியாதை இழந்து
"டா" சேர்த்து
கண்டவனும் ஆகலாம்

சிவா.ஜி
13-06-2007, 02:06 PM
கண் அடிமை ஆனவன்
கணவன் ஆகலாம்
மரியாதை இழந்து
"டா" சேர்த்து
கண்டவனும் ஆகலாம்
கண்ட அவனும் கனவன் தானே
கனவனை 'டா' போட்டு அழைப்பது அந்யோந்யத்தால் என்று பலர் நினைத்திருக்க நீங்கள் உண்மையை உடைத்து விட்டீரே

தாமரை
13-06-2007, 02:09 PM
கண்ட அவனும் கனவன் தானே
கனவனை 'டா' போட்டு அழைப்பது அந்யோந்யத்தால் என்று பலர் நினைத்திருக்க நீங்கள் உண்மையை உடைத்து விட்டீரே

இதுக்குத்தான் வெயிட்டைக் குறைக்கச் சொல்றது. :lachen001: :lachen001: :lachen001:

வெறும் டா போட்டு அழைத்தால் பரவாயில்லை
அண்டா குண்டா தூக்கிப் போட்டு அழைக்கிறார்களே!:angel-smiley-033: :angel-smiley-033:

இதயம்
13-06-2007, 02:18 PM
பழம் சுணங்குவதேன்
தச்சன் முனகுவதேன்

சிலேடையான பதில் தேவை

தச்சன் முனகுவதேன் - பலகை பட்டதால்
பழம் சுணங்குவதேன் - பல கை பட்டதால்

சிலேடை என்பதற்கான சரியான உதாரணம் உங்கள் கேள்வி.

ஆதவா
13-06-2007, 02:35 PM
தாமரை அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி.

நிகழ் காலத்திற்கு விதிகளான ஆநின்று கின்று கிறு வின் படி

வந்தாநின்றான்
வருகின்றன்
வருகிறான்

எதிர்காலத்திற்கு ப்.வ் படி

வருவான்

ஆனால் சில பத்திரிக்கைகளில் கண்டது :

ஜூலை 2 மாநாட்டில் தலைவர் கலந்து கொள்கிறார். என்று போட்டிருக்கிறது..

இது எதிர்காலம் தானே? எப்படி கிறு வருகிறது?

தாமரை
13-06-2007, 02:51 PM

பத்திரிக்கைகளில் மட்டுமல்ல நிகழச்சி நிரல்களில் கூட அப்படித்தான் இருக்கும்.

இது மக்களுக்கு ஒரு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தர எழுதப்படுகிறது., அதை விடுங்கள்.. எப்ப கேட்டாலும் தலைவர் வருகிறார் வருகிறார் என்றுதான் சொல்லுவார்களே தவிர வருவதற்குள் விடிந்து விடுமே!

தலவர் வருவார் என்றால் வரமாட்டார் என்று அர்த்தம். இதுக்கெல்லாம் தனி அகராதியே இருக்குங்க,

ஆதவா
13-06-2007, 02:57 PM
அப்படியென்றால் அது தவறுதானே!!

வருவார் என்றுதானே வரவேண்டும்.... அடடே இப்படி ஒரு பிழை பத்திரிக்கைகளும் நாளிதழ்களும் செய்கிறதா?

அமரன்
13-06-2007, 03:02 PM
அப்படியென்றால் அது தவறுதானே!!

வருவார் என்றுதானே வரவேண்டும்.... அடடே இப்படி ஒரு பிழை பத்திரிக்கைகளும் நாளிதழ்களும் செய்கிறதா?
ஆதவா இதுதான் அரசு இயலோ

அக்னி
13-06-2007, 03:13 PM
தாலி
தா - தாவுதல்
லி - தமிழின் கொக்கி

தாவாமலிருப்பதற்கான கொக்கி என்று பொருள் படுமா?
ஆணுக்கும் பெண்ணுக்குமே... பொருத்தமாகுமா?

அக்னி
13-06-2007, 03:15 PM
தலவர் வருவார் என்றால் வரமாட்டார் என்று அர்த்தம். இதுக்கெல்லாம் தனி அகராதியே இருக்குங்க,
தலைவர் வருவாரோ... வாருவாரோ... வார்வாரோ...???

இதயம்
13-06-2007, 03:16 PM
தாலி
தா - தாவுதல்
லி - தமிழின் கொக்கி

தாவாமலிருப்பதற்கான கொக்கி என்று பொருள் படுமா?
ஆணுக்கும் பெண்ணுக்குமே... பொருத்தமாகுமா?

ரொம்ப ஓவராத்தான் போய்க்கிட்டிருக்கு..!! (வடிவேல் ஸ்டைலில் படிக்கவும்):music-smiley-010::music-smiley-010::music-smiley-010:

தாமரை
13-06-2007, 04:38 PM
தாலி என்பது தமிழ்ச் சொல்லா என்பதே ஆராய வேண்டிய ஒன்று.

அக்னி
13-06-2007, 04:43 PM
தாலி என்பது தமிழ்ச் சொல்லா என்பதே ஆராய வேண்டிய ஒன்று.
மாங்கல்யம்
திருமாங்கல்யம்

இவையாவது தமிழ் சொற்களா? அல்லது, வேறு இன்னும் சொற்கள் தாலிக்கு வழங்கப்படுகின்றனவா? அல்லது, உண்மையான தமிழ் சொல் என்ன?

தாமரை
13-06-2007, 04:55 PM
மாங்கல்யம் என்பது சமஸ்கிருதம்.

மங்கல நாண் என சிலப்பதிகாரத்தில் இருப்பதாய் படித்திருக்கிறேன்.

தால் - என்றால் நாக்கு
தாள் - என்றால் பாதம்

தாலாட்டு .. லுலுலு வாயி என நாக்கை ஆட்டிப் பாடுவது.

தலையாட்டு -- இது நீங்கள் இப்போது செய்வது
தாலி தாலாட்டில் கணவன்களும் செய்வது.

அமரன்
13-06-2007, 05:02 PM
இதுக்குத்தான் வெயிட்டைக் குறைக்கச் சொல்றது. :lachen001: :lachen001: :lachen001:

வெறும் டா போட்டு அழைத்தால் பரவாயில்லை
அண்டா குண்டா தூக்கிப் போட்டு அழைக்கிறார்களே!:angel-smiley-033: :angel-smiley-033:

தூங்கும்போது போடாமல் இருக்கவா

தாமரை
13-06-2007, 05:06 PM
தூங்கும்போது போடாமல் இருக்கவா

தூங்கும் பொழுதெல்லாம் அம்மியும் குழவியும் தான்

அமரன்
13-06-2007, 05:43 PM
தூங்கும் பொழுதெல்லாம் அம்மியும் குழவியும் தான்
தூங்கும்போது அம்மியால் போடுவது குழவி இலையே

அமரன்
14-06-2007, 06:47 AM
தாமரை அண்ணா உங்களிடம் ஒரு கேள்வி.
நிகழ் காலத்திற்கு விதிகளான ஆநின்று கின்று கிறு வின் படி
வந்தாநின்றான்
வருகின்றன்
வருகிறான்
எதிர்காலத்திற்கு ப்.வ் படி
வருவான்
ஆனால் சில பத்திரிக்கைகளில் கண்டது :
ஜூலை 2 மாநாட்டில் தலைவர் கலந்து கொள்கிறார். என்று போட்டிருக்கிறது..
இது எதிர்காலம் தானே? எப்படி கிறு வருகிறது?
ஆதவா இதைப்பற்றிச் சிந்தித்து என்மண்டைகாய்ந்துபோய்விட்டது. கடைசியில் இப்படி நினைத்துக்கொண்டேன்.
இறந்தகாலம்-கனவு
எதிர்காலம்-கற்பனை
நிகழ்காலம்-நிஜம்.
நிச்சயமாக வ(வா)ருவார் என்பதை வ(வா)ருகிறார் என சொல்கின்றார்களோ.

தாமரை
14-06-2007, 08:21 AM
தலைவர் வந்தார் என்றால் தலைவர் இறந்துவிட்டார் / இல்லை என்று அர்த்தம்
தலவர் வருகிறார் என்றால் தலைவர் வருவார் என்று அர்த்தம்
தலைவர் வருவார் என்றால் வரமாட்டார் என்று அர்த்தம்

அரசியலின் அரிச்சுவடி இது.

அமரன்
14-06-2007, 08:28 AM
அரசியலை அரிக்கும் சுவடும் இதுதானோ

தாமரை
14-06-2007, 08:33 AM
அரிக்கும் கை
பணம்தேடி
அரிக்கும் கால்
கார்கள் தேடி
அரிக்கும் உடல்
உடல் தேடி
அரிக்குமா மூளை
அட
அது இருந்தால்தானே!!!

அக்னி
14-06-2007, 04:31 PM
அரிக்கும் கை
பணம்தேடி
அரிக்கும் கால்
கார்கள் தேடி
அரிக்கும் உடல்
உடல் தேடி
அரிக்குமா மூளை
அட
அது இருந்தால்தானே!!!
அரிச்சுவடி தொடங்காதவரெல்லாம் அரசியலில் அடிச்சுவடு பதித்தால்,
மூலையில் ஒதுக்கப்படுவது பொதுமக்கள்தான். மூளைக்கு வேலை இல்லாத தொழிலாக... அரசியல் ஆனது... வேதனயே...

சுட்டெரிக்கும் கவிதை...
ஆனால்,
சொரணை இல்லாதாருக்கு உணர்வேது..???

அமரன்
14-06-2007, 04:36 PM

பொதுமக்களுடன் சேர்த்து
அரிசியையும் ஒதுக்குகின்றார்கள்
அரசியல்வாதிகள்
வேறு வேறு இடத்தில்
அரியாசனம் கையில்
அறியா சனம்
கையில் இருப்பது
அறியா சனம்

அக்னி
14-06-2007, 04:49 PM
அரியாசனம் பிடிக்க,
அரிசியும் சாசனம்...
அரியாசனம் பிடித்ததும்.,
ஆறிடும் சாசனம்...
இலவசங்கள் பார்த்து
இலவு காத்த கிளிகளாய்..,
மக்கள்.
வெடித்துப் பறந்தது பஞ்சே...
பஞ்சமல்ல...

தாமரை
14-06-2007, 04:51 PM
அதெப்படி அமரா சேர்த்து பின் வேறு வேறு இடங்களில் ஒதுக்க முடியும்?

அரியாசனத்தின் கையில் அறியா சனமா இல்லை அறியா சனத்தின் கையில் அரியாசனமா?

எனக்கென்னவோ

அறியா சனத்தின் கையில்
அரியாசனம்
அவர்
அறியாமல் ஏறிவிடும்
நரி ஆசனம்.

ஷீ-நிசி
14-06-2007, 04:53 PM
இது ஓகேவா!

அறியா சனம்
இருந்திடும் நிலைவரைக்கும்,
அரியாசனம்
எங்கள் தலைமுறைக்கே!

தாமரை
14-06-2007, 04:53 PM
அரியாசனம் பிடிக்க,
அரிசியும் சாசனம்...
அரியாசனம் பிடித்ததும்.,
ஆறிடும் சாசனம்...
இலவசங்கள் பார்த்து
இலவு காத்த கிளிகளாய்..,
மக்கள்.
வெடித்துப் பறந்தது பஞ்சே...
பஞ்சமல்ல...

அரிசி இலவசமா
யார் சொன்னது
எங்களது ஓட்டுகளும்
ஐந்தாண்டு வாழ்வும்
அங்கே அடகு வைக்கப்பட்டது
உங்களுக்குத் தெரியுமா?

தாமரை
14-06-2007, 04:54 PM
இது ஓகேவா!

அறியா சனம்
இருந்திடும் நிலைவரைக்கும்,
அரியாசனம்
எங்கள் தலைமுறைக்கே!

அங்கேயும் ஒரு முறைமாமன்
முறைத்துக் கொண்டே

ஷீ-நிசி
14-06-2007, 04:55 PM
அங்கேயும் ஒரு முறைமாமன்
முறைத்துக் கொண்டே

சான்ஸே இல்ல.. அட்டகாசம்!

அமரன்
14-06-2007, 04:55 PM
அரியாசனத்தின் கையில் அறியா சனமா இல்லை அறியா சனத்தின் கையில் அரியாசனமா?

எனக்கென்னவோ

அறியா சனத்தின் கையில்
அரியாசனம்
அவர்
அறியாமல் ஏறிவிடும்
நரி ஆசனம்.
அரியாசனம் கையில்
அறியா சனம்
(அரியாசனம்)
கையில் இருப்பது
அறியா சனம்

அதெப்படி அமரா சேர்த்து பின் வேறு வேறு இடங்களில் ஒதுக்க முடியும்?

அதாங்க செல்வரே நடிப்பு/அரசியல்.
ஊசியோட நூல் வருவது போல இருக்கும் ஆனால் வராது.

அமரன்
14-06-2007, 04:57 PM
சான்ஸே இல்ல.. அட்டகாசம்!
எங்க அரசியலிலா

அக்னி
14-06-2007, 04:57 PM
அரிசி இலவசமா
யார் சொன்னது
எங்களது ஓட்டுகளும்
ஐந்தாண்டு வாழ்வும்
அங்கே அடகு வைக்கப்பட்டது
உங்களுக்குத் தெரியுமா?
வட்டி எப்படி?
கந்துவட்டிதானே?

ஷீ-நிசி
14-06-2007, 04:58 PM
எங்க அரசியலிலா

எங்க அரசியலிலுமில்ல, உங்க அரசியலிலுமல்ல, நம்ம அரசியலில்தான்.

தாமரை
14-06-2007, 04:58 PM
வட்டி எப்படி?
கந்துவட்டிதானே?
கந்து வட்டிக்கு
வட்டமும் மாவாட்டமும்
ஒன்றியத்துடன் ஒன்றி
வார்டு வார்டாய்
வலம்

அக்னி
14-06-2007, 04:59 PM
எங்க அரசியலிலா

எங்க அரசியலிலுமில்ல, உங்க அரசியலிலுமல்ல, நம்ம அரசியலில்தான்.
எங்கே அரசியலிலா?
இதுதானே அமரா உங்கள் வினா?
ஆனால்,
ஷீ-நிசியின் பதில் சரியானதே...

அமரன்
14-06-2007, 04:59 PM
எங்கள் அரசியலிலுமில்ல, உங்கள் அரசியலிலுமல்ல, நம்மள் அரசியலில்தான்.
:grin: :grin: :grin: :grin:

அக்னி
14-06-2007, 05:02 PM
கந்து வட்டிக்கு
வட்டமும் மாவாட்டமும்
ஒன்றியத்துடன் ஒன்றி
வார்டு வார்டாய்
வலம்
வலம் வந்ததால்
கிடைத்தது
மாவட்டமோ?
மா வாட்டமோ?

ஷீ-நிசி
14-06-2007, 05:02 PM
Originally Posted by ஷீ-நிசி
எங்கள் அரசியலிலுமில்ல, உங்கள் அரசியலிலுமல்ல, நம்மள் அரசியலில்தான்.

:grin: :grin: :grin: :grin:

'ள்'லாமலே படிக்கமுடியுமே அமரரே!

அமரன்
14-06-2007, 05:05 PM
'ள்'லாமலே படிக்கமுடியுமே அமரரே!
சரிதாங்க அதற்காக இன்(ன்) ஐ விட்டுடாதீங்க.

ஷீ-நிசி
14-06-2007, 05:08 PM
சரிதாங்க அதற்காக இன்(ன்) ஐ விட்டுடாதீங்க.

அதானே 'ன்' போய்விட்டால் அவுட் தானே! அமர(ன்)ரே!

அக்னி
14-06-2007, 05:10 PM
அதானே 'ன்' போய்விட்டால் அவுட் தானே! அமர(ன்)ரே!
அப்போ இன் ஆ அவுட் ஆ?

அமரன்
14-06-2007, 05:11 PM
அதானே 'ன்' போய்விட்டால் அவுட் தானே! அமர(ன்)ரே!
நிஷி மரியாதையை அவுட் பண்ணுங்க. என்னை அவுட் பண்ணாதீங்க

தாமரை
14-06-2007, 05:13 PM
வலம் வந்ததால்
கிடைத்தது
மாவட்டமோ?
மா வாட்டமோ?

மக்களுக்கு கிடைத்தது
மாவட்டம் தான்

ஆமாம் ஆமாம்
மிகப்பெரிய பூஜ்யம்

தாமரை
14-06-2007, 05:14 PM
அரியாசனம் கையில்
அறியா சனம்
(அரியாசனம்)
கையில் இருப்பது
அறியா சனம்

அதாங்க செல்வரே நடிப்பு/அரசியல்.
ஊசியோட நூல் வருவது போல இருக்கும் ஆனால் வராது.

ஐயா
அரியாசனம் கையில் இருப்பதை அறியாசனம், அறியா சனம் கையில் அரியாசனம் தந்து அரியாசனம் தாம் அறியா சனம் என அளவு அறியா விசனம் கொண்டு வாழலாமா?

அமரன்
14-06-2007, 05:15 PM
மக்களுக்கு கிடைத்தது
மாவட்டம் தான்

ஆமாம் ஆமாம்
மிகப்பெரிய பூஜ்யம்
ராச்சியம் பூச்சியமானது இப்படித்தானோ

தாமரை
14-06-2007, 05:17 PM
ராஜ்யம் பூஜ்யமானால்
ராஜாக்கள் என்ன செய்வார்கள்?

ஷீ-நிசி
14-06-2007, 05:17 PM
ராச்சியம் பூச்சியமானது இப்படித்தானோ

பூச்சியமானதா என்று தெரியாது!
மக்களை அரிக்கும்
பூச்சியானது!

தாமரை
14-06-2007, 05:21 PM
பூச்சியமானதா என்று தெரியாது!
மக்களை அரிக்கும்
பூச்சியானது!

கரையான் என்று
சொல்லமென்றிருந்தேன்
ஆணி வேரையே
அரித்து விடுவதால்
ஆனால் இரும்பையே அரித்துவிடும்
இவற்றை
என்னவென்று சொல்ல!

ஷீ-நிசி
14-06-2007, 05:24 PM
கரையான் என்று
சொல்லமென்றிருந்தேன்
ஆணி வேரையே
அரித்து விடுவதால்
ஆனால் இரும்பையே அரித்துவிடும்
இவற்றை
என்னவென்று சொல்ல!

கரையான்
அவன் கரையான் தான்!
தன் சொத்தை
கரைத்துகொள்ளாமல்,
எல்லாவற்றையும்
கரைப்பான்!
அரசில் வியாதி!

அக்னி
14-06-2007, 05:24 PM
கரையான் என்று
சொல்லமென்றிருந்தேன்
ஆணி வேரையே
அரித்து விடுவதால்
ஆனால் இரும்பையே அரித்துவிடும்
இவற்றை
என்னவென்று சொல்ல!
கரைப்பான் என்று சொல்லலாமோ?

கரைப்பான்கள்
கரைப்பட்டுக்கள்
கறைப்படும்
அரசியல்...

தாமரை
14-06-2007, 06:01 PM
கரைப்பான் என்று சொல்லலாமோ?

கரைப்பான்கள்
கரைப்பட்டுக்கள்
கறைப்படும்
அரசியல்...

கறையின்
கரையில் கரைப்பான்.
கரைவார் கரைவார்
கரையோர் கரையின்
கரைந்தோர் பதவி!

அமரன்
15-06-2007, 08:02 AM
ஐயா
அரியாசனம் கையில் இருப்பதை அறியாசனம், அறியா சனம் கையில் அரியாசனம் தந்து அரியாசனம் தாம் அறியா சனம் என அளவு அறியா விசனம் கொண்டு வாழலாமா?
:nature-smiley-008: :nature-smiley-008: :nature-smiley-008: :nature-smiley-008: :nature-smiley-008:
பொதுமக்களுடன் சேர்த்து
அரிசியையும் ஒதுக்குகின்றார்கள்
அரசியல்வாதிகள்
வேறு வேறு இடத்தில்
அரியாசனம் கையில்
அறியா சனம்

அக்னி
15-06-2007, 08:07 AM
சனம் புரியா
நிதர்சனம்...
அதனால்,
அரியாசனம்
நரிகள் வசம்...

தாமரை
15-06-2007, 11:44 AM
கறையின் - அழுக்கு, வண்ணம்
கரையில் - வேட்டியின் ஓரம் ..

அதாங்க கறைபடிந்த கட்சியின் கரை வேட்டிக்காரங்க

கரைப்பான். - கரைப்பார்கள், பேசியே மனதை மாற்றுவார்கள்
கரைவார் கரைவார் - மனம் மாறுபவர்கள் மாறிவிடலாம் அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது

கரையோர் கரையின் -- மனம் மாறத்வர்கள் விட்டுச் செல்லுவது போலிருந்தால்
கரைந்தோர் பதவி! - அழைத்துப் பதவி கொடுப்பார்கள்[/quote]

என்னங்க சித்தர் பாடலே பரவாயில்லைன்னு தோணுதா!!!:D :D

அமரன்
18-07-2007, 04:36 PM
சித்தர் பாடலே பாரவாயில்லை என்றுபடவிலை..சித்தரோ என நினைத்தேன்..பாடம் சொல்லித்தருவதுக்கு நன்றிகள் கோடி. தொடருமா...,

தாமரை
18-08-2007, 03:45 PM
மா தொடராது.. வாழைதான்.. வாழையடி வாழையாய்..

அமரன்
18-08-2007, 03:50 PM
அடிவாழை தொடருமா.

தாமரை
18-08-2007, 03:56 PM
வாழையும் மாவுமுமிருக்கே பலா எங்கென விழித்திருக்கும் மனம்..

முக்கனியாய் ஏன் வாழை, மா, பலா மட்டும் சொன்னார்கள்? அதிலென்ன சிறப்பு? ஏன்?

ஆதவா
18-08-2007, 04:07 PM
வாழையும் மாவுமுமிருக்கே பலா எங்கென விழித்திருக்கும் மனம்..

இங்கே மாவு எப்படிங்க வந்தது?

முக்கனியாய் ஏன் வாழை, மா, பலா மட்டும் சொன்னார்கள்? அதிலென்ன சிறப்பு? ஏன்

அப்ப்டீன்னு யாருங்க சொன்னாங்க??/:icon_shok:

தாமரை
18-08-2007, 04:10 PM
இங்கே மாவு எப்படிங்க வந்தது?

அப்ப்டீன்னு யாருங்க சொன்னாங்க??/:icon_shok:

அரைச்சதனாலதான்..!

ஆதவா
18-08-2007, 04:19 PM
வாழையும் மாவுமுமிருக்கே பலா எங்கென விழித்திருக்கும் மனம்..

முக்கனியாய் ஏன் வாழை, மா, பலா மட்டும் சொன்னார்கள்? அதிலென்ன சிறப்பு? ஏன்?

அரைச்சதனாலதான்..!

இப்பத்தான் கேள்விபடுறேன்... வாழையை (அல்லது மா" வை) அரைத்தால் மாவு வரும் என்று.....

தாமரை
18-08-2007, 04:27 PM
ஆம்கா சூர்! மாங்காயை உலரவைத்து அரைத்து செய்த பொடி. பாக்கர்வாடி செய்யப் பயன்படும். மாங்காய் சாதம் செய்யவும் உபயோகிக்கலாம்.. 15/8/2007 குங்குமம் இதழைப் படிக்கவும்.

ஆதவா
18-08-2007, 05:08 PM
ஆம்கா சூர்! மாங்காயை உலரவைத்து அரைத்து செய்த பொடி. பாக்கர்வாடி செய்யப் பயன்படும். மாங்காய் சாதம் செய்யவும் உபயோகிக்கலாம்.. 15/8/2007 குங்குமம் இதழைப் படிக்கவும்.

ஹி ஹி நான் குங்குமம் படிக்கிறது இல்லீங்க.. (இலவசப் பொருள் ஏதாவது உபயோகப்பட்டுதுன்னா, வாங்குவேன்.. அப்பவும் படிக்கமாட்டேன். )

தாமரை
19-08-2007, 03:35 AM
ஹி ஹி நான் குங்குமம் படிக்கிறது இல்லீங்க.. (இலவசப் பொருள் ஏதாவது உபயோகப்பட்டுதுன்னா, வாங்குவேன்.. அப்பவும் படிக்கமாட்டேன். )

ச*ரி ச*ரி கேள்விக்கு ப*தில் சொல்லுங்க*.. திராட்சை, மாதுளை, ஆர*ஞ்சு, ஆப்பிள், அன்னாசி, எலுமிச்சை, த*ர்பூச*னி, என* நூற்றுக்க*ண*க்கில் ப*ழ*ங்க*ள் இருன்தாலும் முக்க*னிக*ளாய் மா, ப*லா, வாழை என* மூன்றைத் தேர்ந்தெடுத்த*க் கார*ண*ம் என்ன*?

ஓவியன்
19-08-2007, 03:49 AM

இந்த மூன்று கனிகளுமே வருடத்தின் முழு நாட்களிலும் கிடைக்கக் கூடியன......

மற்றவை அந்த அந்த காலத்திற்கு மட்டும் உரியவை.....

தாமரை
19-08-2007, 04:29 AM
மாம்பழ சீசன் கோடைக்காலம் மட்டுமே!
வருடத்தில் எல்லா நாட்களுமே முழு நாட்கள்தான்
அரை நாட்கள் கால் நாட்களேல்லாம் கிடையாது.

சிவா.ஜி
19-08-2007, 04:43 AM
மா.பலா,வாழை...இவை மூன்றும்தான் அந்த இலக்கியகாலத்தில் இங்கே கிடைத்துக்கொண்டிருந்த பழங்களில் அதிக சுவையுள்ளதாக இருந்ததாலா..?

அமரன்
20-08-2007, 01:05 PM
சரி சரி கேள்விக்கு பதில் சொல்லுங்க.. திராட்சை, மாதுளை, ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, எலுமிச்சை, தர்பூசனி, என நூற்றுக்கணக்கில் பழங்கள் இருன்தாலும் முக்கனிகளாய் மா, பலா, வாழை என மூன்றைத் தேர்ந்தெடுத்தக் காரணம் என்ன?

நீங்களே சொல்லி விடுங்கள்

தாமரை
04-09-2007, 10:58 AM
வாழை மருத நிலத்தைக் குறிக்க..
மா முல்லை நிலத்தைக் குறிக்க..
பலா குறிஞ்சி நிலத்தைக் குறிக்க..

ஓவியன்
04-09-2007, 11:03 AM
வாழை மருத நிலத்தைக் குறிக்க..
மா முல்லை நிலத்தைக் குறிக்க..
பலா குறிஞ்சி நிலத்தைக் குறிக்க..

அப்போ நெய்தலையும் பாலையையும் குறிக்க.........? :spudnikbackflip:

தகவலுக்கு நன்றி அண்ணா!!

தாமரை
04-09-2007, 11:05 AM
நெய்தலின் கனி − மீன்
பாலையில் கனியும் இல்லை கன்னியும் இல்லை..(குறிஞ்சியும் முல்லையும் முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்)

ஓவியன்
04-09-2007, 11:09 AM
இல்லையே இங்கே பாலையில் கனியும் இருக்கு, கன்னியும் இருக்கே.....!:icon_hmm:

ஹீ!,ஹீ! நான் இருப்பது மத்திய கிழக்காச்சே.........!

ஓவியன்
04-09-2007, 11:12 AM
பாலையில் கனியும் இல்லை கன்னியும் இல்லை..
)

ஆமா கனி இருந்தால் தானே அந்தக் கனி கன்னி இருக்கும்......! :icon_good:

சிவா.ஜி
04-09-2007, 12:51 PM
இல்லையே இங்கே பாலையில் கனியும் இருக்கு, கன்னியும் இருக்கே.....!:icon_hmm:

ஹீ!,ஹீ! நான் இருப்பது மத்திய கிழக்காச்சே.........!

ஓவியனுக்கு கூடிய சீக்கிரம் கெட்டிமேளம் கொட்டிவிட வேண்டியதுதான்...கனி என்கிறார் கன்னி என்கிறார்....ஆனால் இருப்பது மத்திய கிழக்கு......கொஞ்சம் பாத்து பதவிசா இருந்துகிடுங்க....ஓவியன்

தாமரை
04-09-2007, 01:07 PM
இல்லையே இங்கே பாலையில் கனியும் இருக்கு, கன்னியும் இருக்கே.....!:icon_hmm:

ஹீ!,ஹீ! நான் இருப்பது மத்திய கிழக்காச்சே.........!

கனி, கன்னி, பார்த்துக் கணி.. இல்லைன்னா கண்ணிதான்

கன்னி யை சரியா கணிக்கா விட்டால் கன்னம் கன்னி கனியாயிடும்.
சரியா கணிச்சு கண்ணி வச்சா கன்னி கனிந்து கண்ணாளம் ஆகும்.

ஓவியன்
04-09-2007, 01:44 PM
கனி, கன்னி, பார்த்துக் கணி.. இல்லைன்னா கண்ணிதான்

கன்னி யை சரியா கணிக்கா விட்டால் கன்னம் கன்னி கனியாயிடும்.
சரியா கணிச்சு கண்ணி வச்சா கன்னி கனிந்து கண்ணாளம் ஆகும்.

அப்போ கண்ணாளத்த்துக்கும் கன்னம் கன்னியாகிறதும் கணிக்கிற விதத்திலே தான் கனிந்து வரும் எங்கிறீங்க............!

அப்ப சரி..........
ஆனா நம்மளுக்கு எப்போதும் சரியாண கணிப்பு, கனிந்து வாறது கானல் நீராச்சே........! :innocent0002:

தாமரை
04-09-2007, 01:52 PM
கணிப்பு தவறுகிறது என்றால் கவனிப்பு தவறுகிறது என்று அர்த்தம்.
கவனிப்பு தவறுகிறது என்றால்.. காதல் வருகிறதென்று அர்த்தம்..
காதல் வருகிறதென்றால்.... காலம் வருகிறதென்று அர்த்தம்..(அது நல்லதா கெட்டதான்னு தெரியாது)

தாமரை
05-09-2007, 06:00 AM
நெய்தலின் கனி − மீன்
பாலையில் கனியும் இல்லை கன்னியும் இல்லை..(குறிஞ்சியும் முல்லையும் முறைமையிற் திரிந்து பாலை என்பதோர் படிவம் கொள்ளும்)

திரிந்தது பாலை
திரிகின்றது பால்(பருவம்)
திரிவது பால் (பால் கெட்டுப் போவதை திரிந்து போதல் என்பர்)
திரி திரிப்பதால் உண்டானால்
இராத்திரி எப்படி உண்டாகிறது..?

இளசு
05-09-2007, 06:10 AM
திரி திரிப்பதால் உண்டானால்
இராத்திரி எப்படி உண்டாகிறது..?

இரவியார் கண்காணிப்பு அகன்றவுடன்
இருளும் குளுமையும் என
இரண்டு இழைகள் இணைந்ததால்
ஏற்படும் திரி − இராத்திரி!

தாமரை
05-09-2007, 06:19 AM
ஈரிழை இணைந்தால் இரவா?
ஈரேழை இணைந்தால் ஒளியல்லவா?

இளசு
05-09-2007, 06:26 AM
ஈரமிட்டது எண்ணெயாய் இருப்பின்
இழைகள் ஒளிரும்..
வெறும் கண்ணீராய் இருந்தால்
இருளே நிரந்தரம்..!

தாமரை
05-09-2007, 06:59 AM
ஈரமிட்டது எண்ணெயாய் இருப்பின்
இழைகள் ஒளிரும்..
வெறும் கண்ணீராய் இருந்தால்
இருளே நிரந்தரம்..!

எள்+நெய் = எண்ணெய்..

நல்லெண்ணெய் தான் தமிழ்நாட்டின் முதலெண்ணெய்.
நல்லெண்ணம் தான் தமிழனின் முதலெண்ண*ம்.

எண்ணெயில் விளக்கெரிய வேண்டும்

கண்+நீர் = கண்ணீர் மாசகற்றும்
கள்+நீர் = கண்ணீர் மாசாகும்

அக்னி
05-09-2007, 09:31 PM
சொற்சிலம்பம் அமோகமாய் சிலம்பாடுகின்றதே...
வார்த்தைகளில் நளினம் நாட்டியமாடுகின்றது...

அனைவருக்கும் பாராட்டுக்கள் இன்பமான பதிவுகளுக்கு...
நன்றிகள்... இன்புற வைப்பதற்கு...

தாமரை
06-09-2007, 03:49 AM
ஈரமிட்டது எண்ணெயாய் இருப்பின்
இழைகள் ஒளிரும்..
வெறும் கண்ணீராய் இருந்தால்
இருளே நிரந்தரம்..!

ஏழைகளின் கண்ணீர் எரிக்கும்
ஆனால் இந்த
அரசியல்வாதிகள் புத்திசாலிகள்
தள்ளி நின்று
குளிர் காய்ந்து விடுகிறார்கள்...:icon_shok::icon_shok::icon_shok:

ஓவியன்
06-09-2007, 04:09 AM
ஏழைகளின் கண்ணீர் எரிக்கும்,
ஆனால் கண்ணீர் வரவும்
தண்ணீர் இல்லாததால்.....
கண்களுக்குள்ளேயே கண்ணீர்
காய்ந்தல்லவா விடுகிறது........?

அக்னி
06-09-2007, 07:57 AM
ஏழைகளின் கண்ணீரும்,
ஊற்றினுள்ளேயே காய்ந்துபோவதால்தான்,
பூமி.., தன்னில் பெரும்பகுதியை,
உப்புநீரால் நிறைத்து,
குறித்துக் காட்டுகின்றதோ..?

ஓவியன்
15-09-2007, 02:57 PM
உப்பு நீரால் கண் எரிகிறது
ஆனால் கண் எரிந்தால்
கண்ணீர் வருகிறதே
உப்பு நீராக...........!

தாமரை
12-11-2007, 11:04 AM
கடலில் மீன்கள்.
உண்மை
ஆனால்
மீனில் கடலிங்கு
ஆம்
அவள் அழுகிறாள்

அமரன்
12-11-2007, 11:40 AM
மீனில் கடல்பார்த்து
துடிக்கும் மீன்களாக
ஆண்கள்..

ஆண் மீன்களிலும்
கடலாக
கடன்பெற்ற கடல்..!

தாமரை
12-11-2007, 11:48 AM
(நீத்தார்)கடன் தீர்ப்பதும்
கடனே என இருக்கும்
கடலில்தானே!

அமரன்
12-11-2007, 11:54 AM
நீந்தினோர் பலர்
(பிறவிக்) கடன் தீர்த்ததும்
கடல்தானே...!

நீந்துவோர் பலர்
(பட்ட) கடன் தீர்ப்பதும்
கடல்தானே...!

கடனே என இருக்கும்
கடலுக்கு எத்தனை கடன்
நிலுவையாக.

சிலுவைகள் விளைவோ..!

தாமரை
12-11-2007, 12:06 PM
அறைந்த சிலுவையில்
உறைந்த துளிகள்
உப்புக்கரித்தன
கடலின் கடனோ!

ஓவியன்
12-11-2007, 12:08 PM
கடலில் மீன்கள்.
உண்மை
ஆனால்
மீனில் கடலிங்கு
ஆம்
அவள் அழுகிறாள்

கடலில் மீன்
அது யதார்த்தம்.
மீன்களில் கடல்
அது கவிதை..!!
அந்த
மீன் கொண்ட
கடலிலும் உண்டோ மீன்...??
என்றால் அது குறும்பா...??

ஓவியன்
12-11-2007, 12:10 PM
அறைந்த சிலுவையில்
உறைந்த துளிகள்
உப்புக்கரித்தன
கடலின் கடனோ!

கண்ணீர்
கடலிடம் பட்ட
கடன் தானோ
உப்பு.....??

தாமரை
12-11-2007, 12:10 PM
கடலில் மீன்
அது யதார்த்தம்.
மீன்களில் கடல்
அது கவிதை..!!
அந்த
மீன் கொண்ட
கடலிலும் உண்டோ மீன்...??
என்றால் அது குறும்பா...??

குறும் பா(திருக்குறள்)
காட்டாக் குறும்பா?

அமரன்
12-11-2007, 12:15 PM
அறைந்த சிலுவையில்
உறைந்த துளிகள்
உப்புக்கரித்தன
கடலின் கடனோ!

உறையாதிருக்க
போடுகின்றனர் உப்பு
உப்பிருந்தும்
உறைகிறதே ஏனப்பு?

உறைக்க உரைக்கலாமே..!

அமரன்
12-11-2007, 12:17 PM
குறும் பா(திருக்குறள்)
காட்டாக் குறும்பா?

குறும்பாவிருந்தாலும்
கரும்பல்லவா
கரும்பாவல்லவே...!

குறும்பாவென்றாலும்
பெருவல்லமையல்லவா..

ஓவியன்
12-11-2007, 12:29 PM
உறைக்க உரைக்கலாமே..!

உறைக்க நீர்
பாவிப்பதுண்டோ மிளகாய்பொடி..?

மாறாக
கறிக்கு முன் நின்று
உரைப்பது மட்டும் தான்
உம் கடனோ...??
உரைத்தால்
அதுவும் உறைக்குமோ...? :D:D:D

தாமரை
12-11-2007, 12:34 PM
உறையாதிருக்க
போடுகின்றனர் உப்பு
உப்பிருந்தும்
உறைகிறதே ஏனப்பு?

உறைக்க உரைக்கலாமே..!

உப்பு உறைக்க
காரமும் உறைக்க
நானென்ன உரைக்க?
உரைக்கும் உறைக்கும்
தள்ளாடி
குத்திய முத்திரைகளின்
கருமை
முகத்தில் பூசியது கருமை!!

ஓவியன்
12-11-2007, 12:39 PM
தள்ளாடி
குத்திய முத்திரைகளின்
கருமை
முகத்தில் பூசியது கருமை!!

செல்வன் அண்ணா!

கொஞ்சம் விளக்குங்களேன்...??

இன்னும் ஒரு சந்தேகம்
உப்பு உறைக்குமா
இல்லை உவர்க்குமா..??

சிவா.ஜி
12-11-2007, 12:47 PM
செல்வன் அண்ணா!

கொஞ்சம் விளக்குங்களேன்...??

உரைக்கும்,உறைக்கும் தள்ளாடி என்றால்....எங்கள் தாய்தமிழ்நாட்டில் உரையில் இட்டு ஓட்டுபோட பணம் கொடுப்பார்கள்....உறையில் சாராயம் கிடைக்கும் அதையும் ஓட்டுக்காக ஊற்றி விடுவார்கள்.இவை இரண்டுக்கும் ஆசைப்பட்டு ...ஓட்டு போட்டு கையில் கரும்புள்ளி குத்திக்கொண்டது மட்டுமில்லாமல்...வாழ்க்கையிலும் கருமையை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

தாமரையின் சொல்லுக்கு என்னால் இயன்ற விளக்கம்.சரியா தவறா அவர்தான் சொல்ல வேண்டும்.

அமரன்
12-11-2007, 12:56 PM
உப்பு உறைக்க
காரமும் உறைக்க
நானென்ன உரைக்க?
உரைக்கும் உறைக்கும்
தள்ளாடி
குத்திய முத்திரைகளின்
கருமை
முகத்தில் பூசியது கருமை!!

உறைக்குள் இருக்கும்வரை
உறைந்த நிலை...
உரை உறங்கும் வரை
உறக்க நிலை...

உடைத்தாலும் கடைந்தாலும்
கல்லான சிலை..!

உரையும் உறையும் வெளுத்த பின்னும்...
முத்திரை குத்திய கருமை காய்ந்தாலும்..
வெளுக்காத முகத்திரைக் கருமை
வெளுக்க வெளுக்காதோ திறமை..!

ஓவியன்
12-11-2007, 12:56 PM
தாமரையின் சொல்லுக்கு என்னால் இயன்ற விளக்கம்.சரியா தவறா அவர்தான் சொல்ல வேண்டும்.

ஆகா சரியாகத் தான் இருக்கிறது மிக்க நன்றிகள் சிவா..!!
செல்வரிடம் படிப்பதில் உள்ள சுகமே தனி தானே..!! :)

அமரன்
12-11-2007, 12:57 PM
உரைக்கும்,உறைக்கும் தள்ளாடி என்றால்....எங்கள் தாய்தமிழ்நாட்டில் உரையில் இட்டு ஓட்டுபோட பணம் கொடுப்பார்கள்....உறையில் சாராயம் கிடைக்கும் அதையும் ஓட்டுக்காக ஊற்றி விடுவார்கள்.இவை இரண்டுக்கும் ஆசைப்பட்டு ...ஓட்டு போட்டு கையில் கரும்புள்ளி குத்திக்கொண்டது மட்டுமில்லாமல்...வாழ்க்கையிலும் கருமையை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

தாமரையின் சொல்லுக்கு என்னால் இயன்ற விளக்கம்.சரியா தவறா அவர்தான் சொல்ல வேண்டும்.

உரை..மேடைப்பேச்சு
உறை...அச்சடிச்சநோட்டு,

சிவா.ஜி
12-11-2007, 01:16 PM
உரை..மேடைப்பேச்சு
உறை...அச்சடிச்சநோட்டு,

அட இப்படியும் சொல்லலாமா...இதுதான் சொற்சிலம்பமென்பதா.....அசத்தல்.
நன்றி அமரன்.

அமரன்
12-11-2007, 01:20 PM
அட இப்படியும் சொல்லலாமா...இதுதான் சொற்சிலம்பமென்பதா.....அசத்தல்.
நன்றி அமரன்.

ஆதவன் உதிக்கவேண்டும்...
தாமரை மலரவேண்டும்..
அப்போதான் சாயம் வெளுக்கும்...!

சிவா.ஜி
12-11-2007, 01:24 PM
அமரசாயமெனில்
அது அமரமானதன்றோ
வெளுக்குமா...
வெள்ளை வெளுத்தாலும் வெள்ளையே!

தாமரை
12-11-2007, 03:44 PM
உரைக்கும்,உறைக்கும் தள்ளாடி என்றால்....எங்கள் தாய்தமிழ்நாட்டில் உரையில் இட்டு ஓட்டுபோட பணம் கொடுப்பார்கள்....உறையில் சாராயம் கிடைக்கும் அதையும் ஓட்டுக்காக ஊற்றி விடுவார்கள்.இவை இரண்டுக்கும் ஆசைப்பட்டு ...ஓட்டு போட்டு கையில் கரும்புள்ளி குத்திக்கொண்டது மட்டுமில்லாமல்...வாழ்க்கையிலும் கருமையை வரவழைத்துக்கொள்கிறார்கள்.

தாமரையின் சொல்லுக்கு என்னால் இயன்ற விளக்கம்.சரியா தவறா அவர்தான் சொல்ல வேண்டும்.

உரை - சொற்பொழிவு! தலைவர் உரையாற்றுகிறார் என்று படித்ததில்லையா?
உறை - என்பது தற்போது பாக்கெட் சாராயத்தின் செல்லப் பெயர்.. அல்லது கவர் என்றும் கொள்ளலாம். (சிலேடையப்பா)

ஆக தலைவர்கள் ஆற்றும் உரையிலும், அவர்கள் கொடுக்கும் சாராயத்திற்கும் மயங்கி அவர்களின் சின்னங்களில் கரிய மை கொண்டு முத்திரை குத்தி அவர்களை பதவிகளில் அமர்த்தி விடுகின்றனர். ஆனால் அதனால் அவர்களின் வாழ்வில் ஒளி தோன்றுவதில்லை. தகுதியில்லாதோரை பதவியில் அமர்த்துவதின் மூலம் அவர்கள் முகத்தில் அவர்களே கரியை பூசிக் கொள்கிறார்கள்,

தாமரை
12-11-2007, 03:49 PM
அமரசாயமெனில்
அது அமரமானதன்றோ
வெளுக்குமா...
வெள்ளை வெளுத்தாலும் வெள்ளையே!

வெள்ளை வெளுத்தால்தான்
வெள்ளை
இல்லையெனில் போய்விடும்
கொள்ளை
சலவை -
கறைகளை அண்டவிடாமல்
காக்கும்
சத்திய சோதனை..
உன்னை அடிக்கடி துவைத்துக் கொள்
அதாவது
சோத்னைக்கு உள்ளாக்கிக் கொள்
இல்லையெனில்
நீ கெட்டுப் போய்விட்டது
உனக்கே தெரியாது.

அமரன்
12-11-2007, 03:59 PM
சலவை -
கறைகளை அண்டவிடாமல்
காக்கும்
சத்திய சோதனை

சலவை
சத்திய சோதனை
மூளைக்கும் 'முடுக்கு'க்கும்..

கரையில்லா கறைகளுடன்
கரைகள் செய்யும் சலவை
சத்தியத்துக்கு சோதனை...!

தாமரை
12-11-2007, 04:03 PM
சலவை
சத்திய சோதனை
மூளைக்கும் 'முடுக்கு'க்கும்..

கரையில்லா கறைகளுடன்
கரைகள் செய்யும் சலவை
சத்தியத்துக்கு சோதனை...!

கரைகள் செய்யும் சலவை - மூளைச் சலவை
மற்றபடி அவர்களின் இன்றைய கவலை
சலவை அல்ல
கலவை(கூட்டணி)

அமரன்
12-11-2007, 04:08 PM
கரைகள் செய்வது
சலவ்வை அல்ல
கலவை(கூட்டணி)

கலவைகள் பல
குருவி தலைக் கல்லாக..
தலைகளுக்கு
குறி தப்பாக் கல்லாக..

எப்படி ஆடினாலும்
ஆட்டத்தின் முடிவில்
கல்லின் தலையில்
குருவிகள்தானே..!

தாமரை
12-11-2007, 04:11 PM
கலவைகள் பல
குருவி தலைக் கல்லாக..
தலைகளுக்கு
குறி தப்பாக் கல்லாக..

எப்படி ஆடினாலும்
ஆட்டத்தின் முடிவில்
கல்லின் தலையில்
குருவிகள்தானே..!

கல்லின் தலையில்
குருவிகளல்ல
காக்கைகளின் எச்சம்

அமரன்
12-11-2007, 04:16 PM
கல்லின் தலையில்
குருவிகளல்ல
காக்கைகளின் எச்சம்
குருவி இருக்ககூட
அருகதையற்றைவையோ
கல்லுகள்...!

எத்திப்பிளைக்கும் காக்கை
எச்சமிட்டு
கற்றுக்கொடுத்தாலும்
கற்றுகொள்வார்தான் யாருமில்லை..!

அமரன்
12-11-2007, 04:34 PM
கொல்லும் தனிமைத் தருணங்களை
கொல்லும் தருணங்களில்-தருணங்கள்
சொல்லும் மரண வாக்குமூலங்களே
மெல்லக் கவியா(க்)கின்றனவாமே.

மெய்யாகவே மெய்யா இது.
இல்லை மெய்யைபோல பொய்யா
அல்லது மெய்யுடன் உயிர்கலந்த நிலையா..!

தாமரை
12-11-2007, 04:42 PM
மெல்லக் கவியென்று
இவ்விசைகொண்டு விசைப்பலகையொற்றி
ஒத்தி யெடுத்த பிரதிகள்
கவியா இல்லையா?

சாம்பவி
12-11-2007, 04:55 PM
கவியே தான்
கவிழ்ந்தாலும் கமழ்ந்தாலும்
கவி கவிதான்... !
கரும்பில்
அடிக் கரும்பென்ன
நுனிக்கரும்பென்ன
பாகம் பார்த்து ருசிக்க
பட்டணத்து பட்டினத்தாரா
யாம்... !

தாமரை
12-11-2007, 05:09 PM
பட்டு இனத்தார் தான்
மெல்ல மெல்ல
இழைபின்னி
கூடுகட்டும்
பட்டினத்தார்தாம்
பட்டும் படாமல்
இருந்தாலும்

பூமகள்
12-11-2007, 05:13 PM
சொற்சிலம்பத்தில்
சொல்லெடுக்க காத்திருந்தேன்
என் சொல் சிலம்பம்
எறிந்து பார்த்தேன்..
முத்துமில்லை.. வைரமுமில்லை
இறைந்து கிடக்கும்
சொல்லைத் தேடி
செல்கின்றேன்..
புரியாத பேதை என்னை
விளக்கி சொல்வழி நடத்த
சொல்லரசர் எவரேனும்
இங்குளரோ??

அக்னி
12-11-2007, 05:28 PM
பட்டு இனத்தார் தான்
மெல்ல மெல்ல
இழைபின்னி
கூடுகட்டும்
பட்டினத்தார்தாம்
பட்டும் படாமல்
இருந்தாலும்
பட்டினத்தார் பகட்டுதானே,
பட்டிழைத்த பட்டு...
இழைத்ததைக் கவர்ந்த உழைத்தவன்...
உழைத்தவன் இழைத்த பட்டு... பகட்டு...
ஆனால், படுகின்றது,
இழைத்ததும் உழைத்ததும்...

சாம்பவி
12-11-2007, 05:34 PM
பட்டு பட்டு தான்
பட்டுப் போனோமே...
பட்டிலென்ன பகட்டு.... !
ஒரு வேளை பசியாற
படும் பாடு பெரும்பாடு....!!
ஒருவேளை ....
ஒரு வேலை கிடைத்தால்
தீர்ந்திடுமோ ....
எம்பாடு... !

அக்னி
12-11-2007, 05:42 PM
பட்டு பட்ட பாடு...
ஒரு வேலைப்பாடு ஆனால்தானே,
ஒரு வேளை படாதிருக்க முடியும்?

தாமரை
12-11-2007, 05:44 PM
பட்டினத்தார் பகட்டுதானே,
பட்டிழைத்த பட்டு...
இழைத்ததைக் கவர்ந்த உழைத்தவன்...
உழைத்தவன் இழைத்த பட்டு... பகட்டு...
ஆனால், படுகின்றது,
இழைத்ததும் உழைத்ததும்...

பட்டு
பகட்டு
பதினெட்டு
புதுமொட்டு
தொட்டு
பொட்டுடிட்டு
கட்டு
கால்கட்டு

பசியாறுவது பெரும்பாடில்லை
ருசியாறுவது தான் பெரும் பாடு

ஆதவா
12-11-2007, 05:55 PM
இன்னொரு கவிச்சமர் ஆகாமலிருக்க......

சாம்பவி
12-11-2007, 05:56 PM
கால்கட்டு
போட்டுட்டு
சொல்லிட்டு
போயிட்டு
பொட்டிட்டு நானிருக்க*
விட்டுட்டு போனதெங்கே.... !

ஓவியன்
12-11-2007, 05:59 PM
Currently Active Users Viewing This Thread: 6 (6 members and 0 guests)
ஓவியன், சாம்பவி, அக்னி, தாமரை, அமரன், ஆதவா

ஆகா சொற்சிலம்பம் ரொம்ப சூடாக இருக்கிறது போல...
வாழ்த்துக்கள் மக்கா...!!

தாமரை
12-11-2007, 06:12 PM
கால்கட்டு
போட்டுட்டு
சொல்லிட்டு
போயிட்டு
பொட்டிட்டு நானிருக்க*
விட்டுட்டு போனதெங்கே.... !

விட்டு (ஹ்யூமர், நகைச்சுவை) போனதடி வாழ்க்கையில்
விட்டுப் போனதடி
உன கால்பிடித்து
மெட்டிப் போட்டேன்
நீயோ உன் காலின் கீழ்
மெட்டிப் (மிதித்துப்) போட்டாய்
தினம் நீ வைக்கும் பொட்டில்
வியர்வையாய் வழிந்த என்
இரத்தத்தின் நிறமுண்டு அறிவாயா?

ஆதவா
12-11-2007, 06:14 PM
Currently Active Users Viewing This Thread: 6 (6 members and 0 guests)
ஓவியன், சாம்பவி, அக்னி, தாமரை, அமரன், ஆதவா

ஆகா சொற்சிலம்பம் ரொம்ப சூடாக இருக்கிறது போல...
வாழ்த்துக்கள் மக்கா...!!

சூடு குறையாமல் பார்த்துக்குங்க.....

சாம்பவி
12-11-2007, 06:17 PM
என் பொட்டில் நீ இருக்க*
பொட்டில் தான் அடித்தனரோ
பொட்டென்று போனீரோ...
என் பொட்டெடுத்துப் போனீரோ... !

கொடி காத்த குமரனின் மனைவியின் புலம்பல் இப்படித்தான் இருந்திருக்குமோ... !

ஓவியன்
12-11-2007, 06:19 PM
சூடு குறையாமல் பார்த்துக்குங்க.....

சூடாகத்தானிருக்கும்
தொடர்ந்து
சூடு போட்டால்
அதுவும் திறமையான
ஒரு ஆசிரியரால்......!! :)

தாமரை
12-11-2007, 06:25 PM
என் பொட்டில் நீ இருக்க*
பொட்டில் தான் அடித்தனரோ
பொட்டென்று போனீரோ...
என் பொட்டெடுத்துப் போனீரோ... !

கொடி காத்த குமரனின் மனைவியின் புலம்பல் இப்படித்தான் இருந்திருக்குமோ... !

கலங்காதே கண்ணே!
என் பொட்டில் அடித்த அடியில்
பொறி கலங்கிப் போனது
ஆங்கிலேயனுக்குத் தான்

இப்படி அடி பட்டு பட்டு
சிந்தி விழும் இரத்தத்துளிகள்தான்

நாளை
பாரதத் தாயின் முகத்தில்
வெற்றிப் பொட்டு

சுதந்திரம் எனது உயிர்
இன்று என் உயிருக்குச் சுதந்திரம்
நீயும் எனது உயிர்
உனக்கும்தான் சுதந்திரம்

-- கொடி காத்த குமரன் இப்படித்தான் பதில் சொல்லி இருப்பாரோ!!!

சாம்பவி
12-11-2007, 06:36 PM
அடித்த அடியில்
பொறி கலங்கியது...
ஆங்கிலேயனுக்கு.... !
அடிக்கும் வேகத்தில்
கணிப்பொறியும் கலங்கியது.... !
ஆங்கிலத்தில்.... ! ( buffer overflow).... !!!!

தாமரை
12-11-2007, 06:41 PM
ஆங்கு இலத்தில்(இலவம் பஞ்சு மரம்) காத்த கிளி
ஆங்கிலத்தில் கதைத்த மொழி
தேங்கிப் போய் தொங்கினாலும்
தேனாய்த் தமிழ்

ஓவியன்
12-11-2007, 06:42 PM
அடிமேல்
அடியெடுத்து
அடி பிசகாது
அடித்ததில்
அடித்தது யோகம்
வெற்றியாக....!!

தாமரை
12-11-2007, 06:49 PM
அடிமேல்
அடியெடுத்து
அடி பிசகாது
அடித்ததில்
அடித்தது யோகம்
வெற்றியாக....!!

யோகம் என்ன உமது மனைவி பெயரா????:lachen001::lachen001::lachen001:

அடி - இது முதலடி - என்னிடம் தைரியம் ஒன்றே முதலடி
அடி - இது இரண்டாமடி - இந்தத் துணியை நீ இரண்டா மடி
அடி - இது மூன்றாமடி - பசுவிற்கு நாலா மூன்றா மடி?
அடி - நான்காமடி - இதை எழுதும் நான் காமடி

சாம்பவி
12-11-2007, 06:49 PM
இலவு காத்தது எமாந்தது
கிளி மட்டும் தானா....
உன் வரவு காத்து
நானும் தான்... !
எட்டாக் கனியாய்
வேலை உனக்கு
முட்டாள் கன்னியாய்
நானெதற்கு உனக்கு.... !

ஓவியன்
12-11-2007, 06:53 PM
யோகம் என்ன உமது மனைவி பெயரா????:lachen001::lachen001::lachen001:

ஹீ,ஹீ!!

தப்பா பெயரைச் சொல்லி வரப் போகும் குடும்பத்திலே அட்வான்ஸாகக் கல் எறியுறீங்களே...?? :frown:

அடி - இது முதலடி - என்னிடம் தைரியம் ஒன்றே முதலடி
அடி - இது இரண்டாமடி - இந்தத் துணியை நீ இரண்டா மடி
அடி - இது மூன்றாமடி - பசுவிற்கு நாலா மூன்றா மடி?
அடி - நான்காமடி - இதை எழுதும் நான் காமடி

அடியையும் மடியையும்
வைத்து அண்ணா
அடித்த
சிலம்படி அசத்தல்..!! :)

தாமரை
12-11-2007, 06:55 PM
இலவு காத்தது எமாந்தது
கிளி மட்டும் தானா....
உன் வரவு காத்து
நானும் தான்... !
எட்டாக் கனியாய்
வேலை உனக்கு
முட்டாள் கன்னியாய்
நானெதற்கு உனக்கு.... !

வரவு இல்லை என்பதால்
வசவு வரவென்பதால் தானே
வரவு நின்றது
வேலை எட்டாக்கனி
காயல்லவே!
கனிந்து விழ இன்னும் சிறிது காலம்
இல்லையெனில் நான்
வளர்ந்து பறித்து வர
இன்னும் சில காலம்
மரம் ஏறப் பழகிவர
இன்னும் சில காலம்
காலங்கள் செலவு
கனிகள் வரவு
பொறுமைகள் செலவு
பொன்குவைகள் வரவு

சாம்பவி
12-11-2007, 06:57 PM
அடி - இது முதலடி - என்னிடம் தைரியம் ஒன்றே முதலடி
அடி - இது இரண்டாமடி - இந்தத் துணியை நீ இரண்டா மடி
அடி - இது மூன்றாமடி - பசுவிற்கு நாலா மூன்றா மடி?
அடி - நான்காமடி - இதை எழுதும் நான் காமடி

காமடியாய் நான்காம் அடி
காம நெடியாய் மூன்றாம் அடி
அடிதடியாய் முதலிரண்டடி....
அடி தடியாய் (bold) ஈற்றடி.... (signature) !

தாமரை
12-11-2007, 07:08 PM
இரண்டா மடி என்றாலே அடிதடியென்றால்
தடித்து கை உப்புமா இல்லை தடித்தது கை ஒப்பமா?

சாம்பவி
12-11-2007, 07:18 PM
ஆம் ஒப்பவில்லை... !
வாழ்க்கை ஒப்பவில்லை... !
அவன் ...
கை ஒப்ப வில்லை
உடைக்கும் வரை ... !

தாமரை
12-11-2007, 07:20 PM
உடைக்கும் எடைக்கும்
அடைக்கும் கதவுகள்
நடைக்கும் படைக்கும்
திறக்கின்றன

சாம்பவி
12-11-2007, 07:25 PM
அடைக்கத் தானே கதவு
திறக்கத் தானே கோல்... !
கன்னக் கோல் வைத்து
கன்னமிடு.... !
இல்லையேல்........
கன்னத்தில் கை வைத்து
கன்ன விடு.... !
என்னை .........
கன்னியாய் விடு... !

தாமரை
12-11-2007, 07:33 PM
அடைத்த நெடுங்கதவம்
திறந்ததும் தமிழ்
மீண்டும் அடைத்ததும் தமிழ்
தமிழமிழ்திழமிந்தமிழ்ந்து
கசியும் இதழமிழ்தமிழினால்
கன்னக் கோலின்றி
கன்னத்தில் கன்னமிட்டு
திறப்போம் கனவுக்கதவம்

ஓவியன்
12-11-2007, 07:36 PM
அடைத்த நெடுங்கதவம்
திறந்ததும் தமிழ்
மீண்டும் அடைத்ததும் தமிழ்
தமிழமிழ்திழமிழ்தமிழ்ந்து
கசியும் இதழமிழ்தமிழினால்

வார்த்தைச் செவ்வண்ணா
நம் செல்வண்ணா!!

உங்கள் தமிழ்ழமிழ்திலமிழ
திகட்டுமா நமக்கும்...!! :)

சாம்பவி
12-11-2007, 07:41 PM
இதழமிழ்தில்லை.... !
தமிழமிழ்துண்டு.... !
இதழமிழ்துண்ண தடா... !
அமிழ்ந்ததும்பும் தமிழமிழ்துண்ண
நேரங்காலமேதடா... !

அக்னி
12-11-2007, 07:43 PM
அடைத்த நெடுங்கதவம்
திறந்ததும் தமிழ்
மீண்டும் அடைத்ததும் தமிழ்
தமிழமிழ்திழமிந்தமிழ்ந்து
கசியும் இதழமிழ்தமிழினால்
கன்னக் கோலின்றி
கன்னத்தில் கன்னமிட்டு
திறப்போம் கனவுக்கதவம்
ஆழப்போனதமிழால்
தமிழாளும் சொற்கள்
தேடப்போனால்,
முட்டுது மூடிய கதவு...
திறந்திட வேண்டும்...

தாமரை
12-11-2007, 07:43 PM
வார்த்தைச் செவ்வண்ணா
நம் செல்வண்ணா!!

உங்கள் தமிழ்ழமிழ்திலமிழ
திகட்டுமா நமக்கும்...!! :)

தமிழ் அமிழ்தில் அமிழ்ந்து அமிழ்ந்து
கசியும் இதழ்

அமரன்
12-11-2007, 07:46 PM
தமிழ் அமிழ்தில் அமிழ்ந்து அமிழ்ந்து
கசியும் இதழ்
இதழ் அமிழ்திலும் இனிது தமிழிதழ்
அமிழ்ந்து அருந்தும் அமிழ்து..
அதனிலும் இனிது தீஞ்சுவை
தருஞ்சுவை புதினத் தினவிதழ் சுவை

அக்னி
12-11-2007, 07:47 PM
இதழமிழ்தில்லை.... !
தமிழமிழ்துண்டு.... !
இதழமிழ்துண்ண தடா... !
அமிழ்ந்ததும்பும் தமிழமிழ்துண்ண
நேரங்காலமேதடா... !
நேரங்காலமே தடா...
தமிழமிதுண்ண
இரவில் விழித்திருந்தால்,
இதழமுதுண்ண
நேரங்காலமேதடா..?