PDA

View Full Version : சொற்சிலம்பம் .



Pages : 1 [2] 3 4

சாம்பவி
12-11-2007, 07:48 PM
கன்னக் கோலின்றி
கன்னத்தில் கன்னமிட்டு
திறப்போம் கனவுக்கதவம்

கன்னமிட்டுத் தான் பாரேன்...
கன்னம் இற்று விடும்படி தாரேன்... !
நேற்றுத் தான் வாங்கினேன்
மிதியடி... !
நாளைக்கும் வாங்க வா ....
மீதி அடி... !

தாமரை
12-11-2007, 08:01 PM
இதழமிழ்தில்லை.... !
தமிழமிழ்துண்டு.... !
இதழமிழ்துண்ண தடா... !
அமிழ்ந்ததும்பும் தமிழமிழ்துண்ண
நேரங்காலமேதடா... !

இதழும்(பூவிதழ்) தமிழும் அமிழ்தூறி
தாமரையில் ததும்பும் தேன்துளி
அடுக்கடுக்காய் இதழிருக்க
கடுகடுப்பாய் ஏன் இன்னொரு இதழ்?

தமிழ் சுவைக்க தடையாகுமா? வண்டுறங்க மலர் மூடினால் மாமபழத்து வண்டாய் மனதைக் குடையாதோ?

சாம்பவி
12-11-2007, 08:02 PM
இரவில் விழித்திருந்தால்,


இரவில் விழித்திருந்தேன் .... !
இரவல் விழி திறந்தேன்.... !


முதல் வரி ..... before operation
இரண்டாம் வரி... after operation... !

தாமரை
12-11-2007, 08:04 PM
கன்னமிட்டுத் தான் பாரேன்...
கன்னம் இற்று விடும்படி தாரேன்... !
நேற்றுத் தான் வாங்கினேன்
மிதியடி... !
நாளைக்கும் வாங்க வா ....
மீதி அடி... !

அடிதடி மிதியடி
இன்னுமென்ன மீதியடி?

தாமரை
12-11-2007, 08:07 PM
இரவில் விழித்திருந்தேன் .... !
இரவல் விழி திறந்தேன்.... !


முதல் வரி ..... before operation
இரண்டாம் வரி... after operation... !

இரவல் பெற்றால் திரும்பத் தர வேண்டும்
இரவிலும் இரவலும் திறந்த விழி
இருந்துமா இல்லை திறந்த வழி?

அக்னி
12-11-2007, 08:11 PM
இரவில் விழித்திருந்தேன் .... !
இரவல் விழி திறந்தேன்.... !


முதல் வரி ..... before operation
இரண்டாம் வரி... after operation... !
விழி இறக்காதவரை,
விழி இருக்கும்வரை,
விழித்து இருக்கலாம்...

விழிநிலையுணர்ந்து
இரவில் விழித்திருந்தால்,
இரவல் விழி தேவையில்லை...

சாம்பவி
12-11-2007, 08:14 PM
அடிதடி மிதியடி
இன்னுமென்ன மீதியடி?

இன்னும் எட்டடி இருக்குதடா..... ( ஏழடியா எட்டடியா... ?? )
இணையாக எடுத்து வைக்க.... !
பணயமாக பணம் கேட்டால்
இணைய வேண்டாம் போடா போ.... !

அக்னி
12-11-2007, 08:21 PM
இரவல் பெற்றால் திரும்பத் தர வேண்டும்
இரவிலும் இரவலும் திறந்த விழி
இருந்துமா இல்லை திறந்த வழி?
மூடா விழி, விழித்தாலும் தேடா வழி...
ஆனால்,
மொழி தேடி மூடா விழி.., மூடா விழியல்ல...
தீரா தமிழ் மொழி தேடும் வழி...

அக்னி
12-11-2007, 08:24 PM
பணையமாக பணம் கேட்டால்
இணைய வேண்டாம் போடா போ.... !
பணம் இல்லாவிட்டால் இணையம் எட்டாதடி...

தாமரை
12-11-2007, 08:26 PM
பணயத் தொகை என்பது
பணம் தந்து விடுதலை பெற..
சிறைபட அல்ல.

எட்டி நின்றவளே
ஏழடி என்றால்
ஆறடி இங்கே
அஞ்சு வார்?
நாலும் பார்த்து,
மூன்றும் உணர்ந்து
இரண்டும்
ஒன்றாய் பின் என்ன
ஒன்றுமில்லை நம்மிடையில்

சாம்பவி
12-11-2007, 08:32 PM
ஒன்றுமில்லை நம்மிடையில்.... !
ஒன்றியிருக்க ஒன்றுமில்லை ... !
ஒன்று இருக்க ஒன்று இல்லாதிருக்க,,,,.
நிதம் ஒரு காரணத்தால்
சிதம்பர ரகசியமாய் ஆகிப் போனதோ
நம் உறவு.... !

தாமரை
12-11-2007, 08:39 PM
ஒன்றுமில்லை நம்மிடையில்.... !
ஒன்றியிருக்க ஒன்றுமில்லை நம்மிடையில்... !
ஒன்று இருக்க ஒன்று இல்லாதிருக்க,,,,.
நிதம் ஒரு காரணத்தால்
சிதம்பர ரகசியமாய் ஆகிப் போனதோ
நம் உறவு.... !

எஸ்.ஜே சூர்யா காப்புரிமை கொண்டாடுவாரோ? ஒண்ணு இருந்தது ஆனா இல்லை வசனத்திற்காக?

இருப்பும் இல்லாதிருப்பும்
விருப்பம் இல்லா திருப்பம்
ஒன்றுமில்லை என ஆண் சொன்னால் ஒன்றுமே இல்லை எனப் பொருள்
ஒன்றுமில்லை எனப் பெண் சொன்னால் ஒன்றவில்லை எனப் பொருள்
ஒன்றுமில்லாமல் ஒன்றுவதா? ஒன்றாமல் ஒன்று மில்லாமல் போவதா?
ஒன்றேன்? நீதான் சற்று ஒன்றேன்!

சாம்பவி
12-11-2007, 08:45 PM
ஒன்றத்தான் வந்தேனே மாமனாரே.... நீரும்
ஒற்றனாகி போனீரே மாமனாரே...
பற்றோட பற்ற வைத்த அடுப்பு..... என்னையும்
பற்றித்தான் போனதேனோ நெருப்பு...... !

தாமரை
12-11-2007, 08:49 PM
அனிருத்தை எச்சரிச்சு வைக்கணும்.

ஓவியன்
12-11-2007, 08:51 PM
ஒன்றிவிட
நினைத்த போது
ஒன்று விட்ட
நம் உறவொன்று
ஒன்ற மறுத்ததால்
ஒன்றுமில்லாதானதோ
ஒன்ற இருந்த உறவு..!!

ஓவியன்
12-11-2007, 08:52 PM
அனிருத்தை எச்சரிச்சு வைக்கணும்.

மெய்யாலுமே எனக்கு ஒண்ணுமே புரியலை...!! :D:D:D

அக்னி
12-11-2007, 08:57 PM
மெய்யாலுமே எனக்கு ஒண்ணுமே புரியலை...!! :D:D:D
என்ன புரியலை..?
மாமனார் தன் மகனை எச்சரிக்க விளைகின்றார்...

சாம்பவி
12-11-2007, 08:59 PM
எச்சரித்து வைத்தாலும்
எச்சமெரிந்து வைதாலும்.....
எச்சமாகாது எம்முறவு.... !
என் மடி அவன் மெத்தை.... நான்
எண்மடி கட்டிய அத்தை.... !

ஓவியன்
12-11-2007, 09:00 PM
என்ன புரியலை..?
மாமனார் தன் மகனை எச்சரிக்க விளைகின்றார்...

நான் இந்த விளையாட்டுக்கு வரலை...
ஓவி எஸ்கேப்....!! :)

தாமரை
12-11-2007, 09:00 PM
ஒன்றத்தான் வந்தேனே மாமனாரே.... நீரும்
ஒற்றனாகி போனீரே மாமனாரே...
பற்றோட நான் துடைத்த அடுப்பு.....
பற்றித்தான் போனதேனோ நெருப்பு...... !

அடுப்பு ஊதி ஊதி களைத்தாள் அன்றைய மருமகள்
அடுக்காய் ஊதி ஊதி கொழுத்தாள் இன்றைய மருமகள்
பூனை உறங்கும் அடுப்புகள்
இல்லை இந்த வீட்டில் மருமகளே!

ஓவியன்
12-11-2007, 09:09 PM
அடுப்பு ஊதி ஊதி களைத்தாள் அன்றைய மருமகள்
அடுக்காய் ஊதி ஊதி கொழுத்தாள் இன்றைய மருமகள்
பூனை உறங்கும் அடுப்புகள்
இல்லை இந்த வீட்டில் மருமகளே!

ஊதி ஊதி
களைந்திருந்தால்
ஊதி ஊதி
கொழுத்திருப்பாளா
உங்க மருமகள்..!!

ஊதி ஊதி
மூட்டும் அடுப்பு
மூட்டை கட்டியதால்
ஊதாமலே மூள்கிறதே
கேஸ் அடுப்புக்கள் இன்று..!!

சாம்பவி
12-11-2007, 09:13 PM
பூனை உறங்கும் அடுப்புகள்
இல்லை இந்த வீட்டில் மருமகளே!

வசதியாய் தான் போயிற்று.... !
அசதியாய் நான் தூங்க
ஏஸி அறை இருக்கோ....
ஏசி அறை விடாதிருப்பீரன்றோ...
வேளைக்கொரு புடவை...
வேலைக்கொரு அகவை....
இது போறுமே.... !

சாம்பவி
12-11-2007, 09:23 PM
வரி வரியாய் வரிச் சுமைகள்... !
வரிந்து கட்டி வரி கட்டி
வறிந்து போனது தான் மிச்சம்... !
வறியவரின் குரல் ஏறுமோ உச்சம்... !

தாமரை
13-11-2007, 12:50 AM
வரி வரியாய் வரிச் சுமைகள்... !
வரிந்து கட்டி வரி கட்டி
வறிந்து போனது தான் மிச்சம்... !
வறியவரின் குரல் ஏறுமோ உச்சம்... !

உச்சமிச்சமெச்சமெல்லாம்
வருமானத்திற்கன்றி
போகும் மானத்திற்கல்ல.:mini023:

தாமரை
13-11-2007, 12:55 AM
வசதியாய் தான் போயிற்று.... !
அசதியாய் நான் தூங்க
ஏஸி அறை இருக்கோ....
ஏசி அறை விடாதிருப்பீரன்றோ...
வேளைக்கொரு புடவை...
வேலைக்கொரு அகவை....
இது போறுமே.... !

ஏசி, ஏஸி என்று சொல்வதைக் கேட்டால்

எனக்கென்னவோ "நான் காத்துகிட்டிருப்பேன்" என்ற ஏசியன் பெயிண்ட் விளம்பரம் ஞாபகத்திற்கு வருது யோசித்த வேளையில்

சாம்பவி
13-11-2007, 06:30 AM
உச்சமிச்சமெச்சமெல்லாம்
வருமானத்திற்கன்றி
போகும் மானத்திற்கல்ல.:mini023:
உருமானம் காக்க
வருமானம் வேண்டாமோ...
செக்கும் மாடாக (cheque)
செக்கு மாடனேன்... !

தாமரை
13-11-2007, 07:16 AM
வருமானம் தரும்
பகுமானம்
பரிமாணம் மாறியப்
பரிணாமம்

சிக்குமாடா
செக்கு மாடு

செக்கு மாடு சுற்றிச் சுற்றி வர
எண்ணை எடுத்தாயே
செக்குமாடாய் சுற்றிச் சுற்றி வருகிறேன்
என்னை எடுப்பாயா?

செக்கு மாடாய்
சுற்றுபவரிடம் ஜாக்கிரதையாய் இரு
செக் வைத்து
மாட்டி விடுவார்கள்

சாம்பவி
13-11-2007, 07:31 AM
சிக்குமாடா
செக்கு மாடு



ஏற்கனவே
சிக்கித்தான் சுற்றுகிறதே...
சிக்கும் சீக்குமாய்.... !

தாமரை
13-11-2007, 07:33 AM
ஏற்கனவே
சிக்கித்தான் சுற்றுகிறதே...
சிக்கும் சீக்குமாய்.... !

சிக்கென்று புக்ககம் வந்தவளை
சிக்கு புக்கு ரயில் என்று
சொல்லலாமா
பின்னே
அவள்ள பின்னே பாருங்கள்
எத்தனைப் பெட்டிகள்.
:icon_rollout::icon_rollout::icon_rollout:

சாம்பவி
13-11-2007, 07:35 AM
செக் வைத்து
மாட்டி விடுவார்கள்
செக் வைக்க
சதுரங்கமா இது... சொற்
சதிரரங்கம். !

சாம்பவி
13-11-2007, 07:39 AM
சிக்கென்று புக்ககம் வந்தவளை
:
புக்அகம் (நூலகம்) வந்தவளை
புக்ககம் வரச்சொன்னாலெப்படி.... !

தாமரை
13-11-2007, 07:43 AM
செக் வைக்க
சதுரங்கமா இது... சொற்
சதிரரங்கம். !

சதுரங்கம்
மூளைக்கு வேலை
சதிரரங்கம்
உடலுக்கு வேலை
இது
சதுரங்கமா சதிரரங்கமா?

சாம்பவி
13-11-2007, 07:46 AM
சதுரங்கம்
மூளைக்கு வேலை
சதிரரங்கம்
உடலுக்கு வேலை
இது
சதுரங்கமா சதிரரங்கமா?

மூளையில்லாது
மூலையிலாடும் சதிராயிது...
சொல்லாலாடும் சதிரிது... !

தாமரை
13-11-2007, 07:46 AM
புக்அகம் (நூலகம்) வந்தவளை
புக்ககம் வரச்சொன்னாலெப்படி.... !

மாமனாரே என விளித்து
ஏஸி கேட்டு
வேளைக்கொரு புடவை கேட்டு
பின்னர்
புக்ககம் வராது
புக் அகம் சென்றால்
அகம் பிடித்தவள்
என்றல்லோ
அகம் சொல்லும்.

சாம்பவி
13-11-2007, 07:52 AM
மாமனாரே என விளித்து
ஏஸி கேட்டு
வேளைக்கொரு புடவை கேட்டு
பின்னர்
புக்ககம் வராது
புக் அகம் சென்றால்
அகம் பிடித்தவள்
என்றல்லோ
அகம் சொல்லும்.

அகம் பிடிக்கவில்லை எனக்கு
அகம் தான் பிடிக்கவில்லை... ( ஏசுவதால்.... ;) )

ஏஸி போட்டு
ஏசுவது மாமனாரோ
என் மாமன் ஆரோ....!

சாம்பவி
13-11-2007, 08:00 AM
அவள்ள பின்னே பாருங்கள்
எத்தனைப் பெட்டிகள்.
:icon_rollout::icon_rollout::icon_rollout:

பெட்டிகள் வரவில்லையென்றால்
பெட்டிக்குள் அனுப்பிடுவீரே.... !
எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்
இந்த சேஃப்.... !

தாமரை
13-11-2007, 08:01 AM
அகம் பிடிக்கவில்லை எனக்கு
அகம் தான் பிடிக்கவில்லை... ( ஏசுவதால்.... ;) )

ஏஸி போட்டு
ஏசுவது மாமனாரோ
என் மாமன் ஆரோ....!

இல்லாள் அகத்திருக்க
இல்லாததொன்றில்லை
இல்லா அகத்திருக்க
இல்லாள் நகைத்திருக்க
வான்கூரை கீழ் வாழ்
வசதிக்கு ஒப்பாமோ
ஏசும் ஏஸியும்
எதேச்சதிகாரமும்?

தாமரை
13-11-2007, 08:03 AM
பெட்டிகள் வரவில்லையென்றால்
பெட்டிக்குள் அனுப்பிடுவீரே.... !
எல்லாம் ஒரு சேஃப்டிக்கு தான்
இந்த சேஃப்.... !

ஓ!
சேஃப்டிக்கு பின்னால் வருவதால்
"சேஃப்டி பின்னோ"
ஆனால்
குத்துகிறதே
அப்புறம் என்ன சேஃப்டி?

ஓவியன்
13-11-2007, 08:09 AM
ஓ!
சேஃப்டிக்கு பின்னால் வருவதால்
"சேஃப்டி பின்னோ"
ஆனால்
குத்துகிறதே
அப்புறம் என்ன சேஃப்டி?

குத்தினாலும் அது சேஃப்டி குத்தாக்கும்...
சீழ் பிடிக்காது....!!
அதுதான் சேஃப்டி..!! :icon_rollout:

சாம்பவி
13-11-2007, 08:10 AM
இல்லா அகத்திருக்க
இல்லாள் நகைத்திருக்க
வான்கூரை கீழ் வாழ்
வசதிக்கு ஒப்பாமோ
ஏசும் ஏஸியும்
எதேச்சதிகாரமும்?

இல்லா நகைக்கு
இல்லாள் நகைக்க*
இல்லாது போனதோ
உங்கள் நகை... !

சாம்பவி
13-11-2007, 08:14 AM
ஓ!
சேஃப்டிக்கு பின்னால் வருவதால்
"சேஃப்டி பின்னோ"
ஆனால்
குத்துகிறதே
அப்புறம் என்ன சேஃப்டி?

சேஃப்டி தான்.... எங்களுக்கு.... ! ;)



சேஃப்டிப் பின்னும் சேஃப்டி தான்... பேருந்தில்
பின்னால் பின்னும் கயவரிடமிருந்து காக்க.... !

சாம்பவி
13-11-2007, 08:29 AM
அன்றென்றன்று கூறிப் போனதனால்......
நின்றின்று நிலைபடியாய் ஆனேனான்... !

சாம்பவி
13-11-2007, 09:26 AM
இரவல் விழி திறந்தேன்.... !


கண்ணப்பன்
கண்ணப்ப
கண்ணப்பரானாரோ.. .!

அமரன்
13-11-2007, 09:29 AM
கண்ணப்பன்
கண்ணப்ப
கண்ணப்பரானாரோ.. .!

என்னப்பர்
என்னையப்ப
என்னப்பனானாரோ..
சும்மா...சும்மா....

சாம்பவி
13-11-2007, 09:41 AM
என்னப்பர்
என்னையப்ப
என்னப்பனானாரோ..
சும்மா...சும்மா....

கலக்கல்ஸ்..... !!!!


சும்மா சும்மா சும்மாடு தாங்கி
சின்ன சின்ன சிறுவாடு சேர்க்க*...
அப்பனவனப்பியதென் சிறுவாடு
ஆச்சுதவன் சைட்டிஷ்ஷுக்காய் கருவாடு.... !

சாம்பவி
13-11-2007, 10:14 AM
சொக்கா சொக்கா ..
சொக்கி சொக்கி
சொக்கியானாள்
சொக்கி சொக்கா.... !

தாமரை
13-11-2007, 10:48 AM
இல்லா நகைக்கு
இல்லாள் நகைக்க*
இல்லாது போனதோ
உங்கள் நகை... !

இல்லாள் நகைக்க
கொண்டோனுக்குண்டே நகை
நகைக்கும் இல்லாள்
பரவாயில்லை
அழுகிப் போன
அழுகை ஆயுதத்தை
எடுக்காத வரை.

தாமரை
13-11-2007, 10:52 AM
கண்ணப்பன்
கண்ணப்ப
கண்ணப்பரானாரோ.. .!

முக்கண்ணனுக்கு
முதல்கண்
கண்ணப்பன் தந்தது
இரண்டாம் கண்
செருப்படி பட்டது
மூன்றாம் கண்ணோ
மூடிக்கிடந்தது

தாமரை
13-11-2007, 10:54 AM
கலக்கல்ஸ்..... !!!!


சும்மா சும்மா சும்மாடு தாங்கி
சின்ன சின்ன சிறுவாடு சேர்க்க*...
அப்பனவனப்பியதென் சிறுவாடு
ஆச்சுதவன் சைட்டிஷ்ஷுக்காய் கருவாடு.... !

அப்பனவன் சிறுவாடு சேர்க்க
அப்பியவன் கருவாடு கேட்க
தப்புமா இரவோடு
தந்திடுமோ திருவோடு!

சாம்பவி
13-11-2007, 11:02 AM
அப்பனவன் சிறுவாடு சேர்க்க
அப்பியவன் கருவாடு கேட்க
தப்புமா இரவோடு
தந்திடுமோ திருவோடு!

திருவோடு திரு, நீர் இருக்க*
திருவோடு நானேனேந்த....!
திருவோடும் திருநீரும்
திருவாளருக்கே..... !
மீனாட்சி திருவாளருக்கே.... !

தாமரை
13-11-2007, 11:08 AM
திருவோடு திரு, நீர் இருக்க*
திருவோடு நானேனேந்த....!
திருவோடும் திருநீரும்
திருவாளருக்கே..... !
மீனாட்சி திருவாளருக்கே.... !

திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க
திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்
திருவும் திருத்திருமோ
திருத்திருவும் திரிந்திடுமோ
திருவும் ஓட
திருவோடு தானும் ஓட
அன்னம் பூரணமாக்கி
அம்மையானாள் அப்பனுக்கு!

சாம்பவி
13-11-2007, 11:38 AM
திருதிருன்னு இத்தனை திரு...
சந்தேகமேயில்லை...
"திரு"வாளரே தான்.... !

சாம்பவி
13-11-2007, 11:42 AM
திரு(லஷ்மி)வோடு இருந்தவர் படுத்துக் கிடக்க
திருவோடு ஏந்தி அலைந்தார் இன்னொருவர்
திருவும் திருத்திருமோ
திருத்திருவும் திரிந்திடுமோ
திருவும் ஓட
திருவோடு தானும் ஓட
அன்னம் பூரணமாக்கி
அம்மையானாள் அப்பனுக்கு!

உள்ளப்படி உள்ளபடி
உள்ளப் படியில் உள்ளபடியே
கொலுவிருக்கும் பதிக்குப்
படியளக்க எதற்கிப்படி
மண்டகப்படி... !

அமரன்
13-11-2007, 01:27 PM
ஆகா...ஆகா..பலவிடயங்களைக் கற்றுதரும் ஆட்டம் தட்டி அழைக்க கட்டிப்போடுகிறது நேரம்...

தாமரை
13-11-2007, 02:21 PM
உள்ளப்படி உள்ளபடி
உள்ளப் படியில் உள்ளபடியே
கொலுவிருக்கும் பதிக்குப்
படியளக்க எதற்கிப்படி
மண்டகப்படி... !

மண்டு அகப் படியில்
காத்திருப்பாளென்றுதான்
மண்டகப்படி!

தாமரை
13-11-2007, 02:28 PM
திருதிருன்னு இத்தனை திரு...
சந்தேகமேயில்லை...
"திரு"வாளரே தான்.... !

திருவாளர்
திருமதியார்
திருமதியார்
திருவாளர்

நன்றி: ஆதவா

பூவையர்
பூவையார்
பூவையார்
பூவையர்

சாம்பவி
13-11-2007, 03:28 PM
உள்ளப்படி உள்ளபடி
உள்ளப் படியில் உள்ளபடியே
கொலுவிருக்கும் பதிக்குப்
படியளக்க எதற்கிப்படி
மண்டகப்படி... !

மண்டகப்படி........... உற்சவ மூர்த்தியை, மண்டபத்திற்கு அழைத்து வரும் வைபவம்.... வேறே எதுக்கு பூசைக்கு தான்.... அப்பா வைதாலும் பூசை தான்.....

ஆக... மண்டகப்படி.... வைதல் − ஒன்றுமில்லாததுக்கெல்லாம் தையா தக்கானு குதிக்கறதும் மண்டகப்படி தான்.... ராத்திரி முழுக்க தூங்காம இப்படி மன்றத்துல உக்கார்ந்திருந்தா மறுநாள் நடக்கறதும் மண்டகப்படி தான்... உங்க வீட்டுல தினமும் நடக்குமே... அதே அதே... .... அதே தான் ஐயா....

சாம்பவி
13-11-2007, 03:32 PM
மண்டு அகப் படியில்
காத்திருப்பாளென்றுதான்
மண்டகப்படி!


மண்டூகம்....
மண்டும் அகம்....
மண்டகப்படி
சர்வ நிச்சயம் .... !

தாமரை
13-11-2007, 03:47 PM
மண்டூகம்.... !
மண்டும் அகத்தோடு காத்திருந்தாலும்
மண்டகப்படி உண்டே.... !

மண்டு(டின்) ஊகம் சரியல்ல
மண்டு அகப் படி இருந்தாலும்
(படி)அளப்பவன் பரமனல்லோ!:icon_rollout:

சாம்பவி
13-11-2007, 03:50 PM
(படி)அளப்பவன் பரமனல்லோ!:icon_rollout:

படி அளப்பவனுக்கும்
படிய*ளப்பவளுக்கு.....
படியாதிருந்தால் எப்படி.... !

சாம்பவி
13-11-2007, 03:52 PM
திருவாளர்
திருமதியார்
திருமதியார்
திருவாளர்

நன்றி: ஆதவா

பூவையர்
பூவையார்
பூவையார்
பூவையர்



யாமாமாநீ யாமாமா... !!!!!!!!!!!

தாமரை
13-11-2007, 04:01 PM
படி அளப்பவனுக்கும்
படி அளப்பவளுக்கு.....
படியாதிருந்தால் எப்படி.... !

படி அளத்தல் எமக்கெளிது
அதனிலும் எளிது
வெறுமனே அளத்தல் (அதனாலேயே படிக்கு பிராக்கெட் போட்டேன்)

படியாதிருந்தால் அனலாய் பறக்கும்
படியாதிருந்தால் அனலா பறக்கும்
படித்தோன் படியோன் ஆயின்
படும்படி படுமடி படிப்படி ஆக்கும் பொடிப்பொடி

அகப்படி அடியினில் இல்லை தினப்படி
டிவியடி அவளின் நுகத்தடி

சாம்பவி
13-11-2007, 04:02 PM
யாமாமாநீ யாமாமா... !!!!!!!!!!!


யாம் ஆமா நீ
ஆமா ஆமா.... !

அதாகப்பட்டது......,
யாம் ஆகுவையோ நீ.. ., ஆம் ஆம் ஆகுவாய்..... ! − தன்னில் பாதி அன்றோ.... !

சாம்பவி
13-11-2007, 04:09 PM
படி அளத்தல் எமக்கெளிது
அதனிலும் எளிது
வெறுமனே அளத்தல் (அதனாலேயே படிக்கு பிராக்கெட் போட்டேன்)



அளப்பதில் மன்னனோ....
அடி பிடி இல்லா படியில் அளக்குறீரே.... !



ஒவர் அளப்பு ஒடம்புக்கு ஆகாதுங்கோ..... ! ;)

சாம்பவி
13-11-2007, 04:23 PM
படும்படி படுமடி படிப்படி ஆக்கும் பொடிப்பொடி

அடியடி... !
பொடி வைத்து நிறுத்துவேன் அடுப்படி... !
அப்புறம்...
மாடிப்படி தான் உங்கள் குடி... !
நிர்கதியாய் உங்கள் கதி... அதோ கதி.... !

தாமரை
13-11-2007, 04:25 PM
யாம் ஆமா நீ
ஆமா ஆமா.... !

அதாகப்பட்டது......,
யாம் ஆகுவையோ நீ.. ., ஆம் ஆம் ஆகுவாய்..... ! − தன்னில் பாதி அன்றோ.... !

புதிரோ புதிர் திரியில்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3092&page=92

2298 ஆம் பதிவிலிருந்து படிக்கவும்.

தாமரை
13-11-2007, 04:33 PM
அளப்பதில் மன்னனோ....
அடி பிடி இல்லா படியில் அளக்குறீரே.... !



ஒவர் அளப்பு ஒடம்புக்கு ஆகாதுங்கோ..... ! ;)

அடி முடி தேடி
அளக்க முடியா அரன்
அளப்பதிலென்ன முரண்

அடியில்லை எனச் சொல்லுவோமோ தவறு
பிடியில்லை எனச் சொல்லுவோமா நாம் களிறு
அடியும் பிடியும் அடுப்படியிலே சேர்ந்திருக்க
படித்தேன் அளத்தல் படித்தேன்

சாம்பவி
13-11-2007, 04:33 PM
புதிரோ புதிர் திரியில்

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3092&page=92

2298 ஆம் பதிவிலிருந்து படிக்கவும்.


ஹாட்ஸ் ஆஃப்.... !

தாமரை
13-11-2007, 04:41 PM
அடியடி... !
பொடி வைத்து நிறுத்துவேன் அடுப்படி... !
அப்புறம்...
மாடிப்படி தான் உங்கள் குடி... !
நிர்கதியாய் உங்கள் கதி... அதோ கதி.... !

பொடியில் தானின்று அடுப்படி
மாடிப்படி குடிபின் பாதிப் படி
பிறமடி குடியேறும் பாதிப்படி
நிர்கதி அதோகதி தெரியுமே உன்சங்கதி

சாம்பவி
13-11-2007, 04:45 PM
அடி முடி தேடி
அளக்க முடியா அரன்
அளப்பதிலென்ன முரண்



தேடியவன் பொய்யுரைக்க...
தேடி அதுவும் பொய்யுரைக்க...
அடிமுடி தெரியாமல் போயிற்று
ஆயின்...
அவளுக்குத் தெரியாமல்
என்ன... அடி... முடி....
அடிமுதல் முடிவரை
அவள் வரை.... !

தாமரை
13-11-2007, 04:54 PM
தேடியவன் பொய்யுரைக்க...
தேடி அதுவும் பொய்யுரைக்க...
அடிமுடி தெரியாமல் போயிற்று
ஆயின்...
அவளுக்குத் தெரியாமல்
என்ன... அடி... முடி....
அடிமுதல் முடிவரை
அவள் வரை.... !

அவளொரு வரைதான்
வரையறை இல்லா வரை(மலை)
மெட்டியிட்டு அம்மி மிதிக்க அடிகண்டான்
மாலையிட்டு தலைகுனிய முடிகண்டான்

இராப் போழுதில்
குடுமி பிடித்தாட்டி
முடிகண்டான்
இராப்பொழுதில்
கால்பணிந்து
அடிகண்டான்

அவளுக்கிது எளிதாமோ
குடும்பம் கூட்டுக் களிதாமோ!

சாம்பவி
13-11-2007, 04:57 PM
மாடிப்படி குடிபின் பாதிப் படி
பிறமடி குடியேறும் பாதிப்படி
நிர்கதி அதோகதி தெரியுமே உன்சங்கதி

பாதிப்பு எனக்கோ.... !
பதிப்பு நாடி கொதிப்படக்க ( publicize பண்ணிடுவேனாக்கும்.... ! )
நாடிக் கொதிப்படங்கி
பாதித்திப்பு தருவிக்கமாட்டேனோ.... !

பாரதி
13-11-2007, 05:08 PM
அடி முடி தேடி
அளக்க முடியா அரன்
அளப்பதிலென்ன முரண்

அடியில்லை எனச் சொல்லுவோமோ தவறு
பிடியில்லை எனச் சொல்லுவோமா நாம் களிறு
அடியும் பிடியும் அடுப்படியிலே சேர்ந்திருக்க
படித்தேன் அளத்தல் படித்தேன்

அபாரம்.. அபாரம்..

உண்மையிலேயே நீண்ட நாட்களுக்குப் பின்னர்
மிகமிக ரசித்தேன்.

அத்தனையும் படித்தேன்.
அத்தனையும் படித் தேன்.
ஆனந்தமாய் களித்தேன்.

தமிழின் அழகை, இனிமையை, சிலேடையை சமீபத்தில் இவ்வளவு சரளமாக எங்கும் கண்டதில்லை. என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் தாமரை, சாம்பவி.

தாமரை
13-11-2007, 05:08 PM
பாதிப்பு எனக்கோ.... !
பதிப்பு நாடி கொதிப்படக்க ( publicize பன்னிடுவேனாக்கும்.... ! )
நாடிக் கொதிப்படங்கி
பாதித்திப்பு தருவீரே.... !

நல்ல வேளை புதுசா வந்த குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தைப் பத்தி தெரியலை.. பிழைத்தேன்.

பா திரும்பாதா எனப்
பார் திரும்பிப் பார்த்திருக்க
பாதி இரும்பா பாதிக் கரும்பா என
இறுக்கமும் இனிமையும் பிணைந்துவர
பாவும் பாவியும் பாவையும் பாவின்
ஊடே ஊடையாய் ஊடலும்
நெய்யும் அணி

சாம்பவி
13-11-2007, 05:16 PM
தமிழின் அழகை, இனிமையை, சிலேடையை சமீபத்தில் இவ்வளவு சரளமாக எங்கும் கண்டதில்லை. என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும் தாமரை, சாம்பவி.

காரணம் நீரறிவீர்.... !
அனைத்தும் பாரதியின் செயல்... !
கிருஷ்ணார்ப்பணம்.... !

சாம்பவி
13-11-2007, 05:27 PM
பாவும் பாவியும் பாவையும் பாவின்
ஊடே ஊடையாய் ஊடலும்
நெய்யும் அணி

கலக்கல்ஸ் ஆஃப் இன்டியா...... !

தாமரை
13-11-2007, 05:29 PM
காரணம் நீரறிவீர்.... !
அனைத்தும் பாரதியின் செயல்... !
கிருஷ்ணார்ப்பணம்.... !

வாருங்கள் பாரதி.. விளையாட்டில் கலந்து கொள்ளுங்கள்.

பாரதி
13-11-2007, 05:31 PM
காரணம் நீரறிவீர்.... !
அனைத்தும் பாரதியின் செயல்... !
கிருஷ்ணார்ப்பணம்.... !

காரணம் அறியேன்.
கால் ரணம் அறிவேன்.
பணம் அறிவேன்.
கிருஷ்ணார் பணம் அறியேன்.!

பாரதி
13-11-2007, 05:33 PM
வாருங்கள் பாரதி.. விளையாட்டில் கலந்து கொள்ளுங்கள்.

பாரதியை அழைத்தீர்களா...?
இல்லை
பா ரதியை அழைத்தீர்களா..?

தாமரை
13-11-2007, 05:34 PM
காரணம் அறியேன்.
கால் ரணம் அறிவேன்.
பணம் அறிவேன்.
கிருஷ்ணார் பணம் அறியேன்.!

அது தெரியாதா
தெலுங்கு கங்கை திட்டம்
கிருஷ்ணா ஆற்று நீருக்காய்
கொடுத்தோமே 700 கோடி

கிருஷ்ணா ஆறு பணம்
கிருஷ்ணார்பணம்..

(தயவு செய்து நறுக்குக் கேள்வி கிறுக்கு பதில்கள் பதிவுக்கு மாற்றி விடாதீர்கள்)

தாமரை
13-11-2007, 05:36 PM
பாரதியை அழைத்தீர்களா...?
இல்லை
பா ரதியை அழைத்தீர்களா..?

ரதியை மட்டுமல்ல
மதனையும் தான் அழைத்திருக்கிறேன்..

பாரதி
13-11-2007, 05:42 PM
அது தெரியாதா
தெலுங்கு கங்கை திட்டம்
கிருஷ்ணா ஆற்று நீருக்காய்
கொடுத்தோமே 700 கோடி

கிருஷ்ணா ஆறு பணம்
கிருஷ்ணார்பணம்..

(தயவு செய்து நறுக்குக் கேள்வி கிறுக்கு பதில்கள் பதிவுக்கு மாற்றி விடாதீர்கள்)

கிருஷ்ணார்ப்பணம்
இப்போது
கிருஷ்ணா அற்-பணமாகி விட்டதோ..?

ஆதவா
13-11-2007, 05:47 PM
கிருஷ்ணார்ப்பணம்
இப்போது
கிருஷ்ணா அற்-பணமாகி விட்டதோ..?

ஆமாமாம்...
கிருஷ்ணார்பணம் தான்..
நல்ல அர்பணம்...

தாமரை
13-11-2007, 05:50 PM
கிருஷ்ணார்ப்பணம்
இப்போது
கிருஷ்ணா அற்-பணமாகி விட்டதோ..?

இல்லை கிருஷ்ணா அற்பப் பணம் ஆகிவிட்டது

ஆதவா
13-11-2007, 05:50 PM
அண்ணா, எனக்கொரு சந்தேகம்.

உண்மையிலேயே பெண் கவிஞர்களுக்கு கவிஞை என்ற பெயருண்டா?

இல்லை மன்னா மன்னி போல இதுவும் பத்தோடு பதினொண்ணா?

பாரதி
13-11-2007, 05:54 PM
10:36க்கு பின்னர் என்னவொரு அமைதி!
கலந்ததால் விளையாட்டு வினையாகி விட்டதா..?

ஆதவா
13-11-2007, 05:59 PM
10:36க்கு பின்னர் என்னவொரு அமைதி!
கலந்ததால் விளையாட்டு வினையாகி விட்டதா..?

கலந்தால் எப்போதுமே சுவை கூடும்
கலைந்தால் எப்போதுமே சுவை குறையும்
என்ன செய்ய?
10:36 செய்த வினை :D

தாமரை
13-11-2007, 06:00 PM
அண்ணா, எனக்கொரு சந்தேகம்.

உண்மையிலேயே பெண் கவிஞர்களுக்கு கவிஞை என்ற பெயருண்டா?

இல்லை மன்னா மன்னி போல இதுவும் பத்தோடு பதினொண்ணா?

புலவர், கவிஞர் என்பன பொதுப்படையான பெயர்கள். கவிஞன், புலவன் என மருவியது பிற்காலத்திலே.. இவற்றைச் சமாளிக்கவே கவிதாயினி, கவிஞை எனப் புதிதாய் வார்த்தைகளை தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம்..

சாம்பவி
13-11-2007, 06:18 PM
அஞ்சா அஞ்சுமானின்று எதும்
அஞ்சாதது ஏனோ.... ! ;)

சொற்சிலம்பமல்ல...... வினா அஞ்சுமானிற்கு.... !

சாம்பவி
13-11-2007, 06:25 PM
ஊடே ஊடையாய் ஊடலும்
நெய்யும் அணி

உணங்குங்கால் ஊடலுணங்க
ஊடேயூடே ஊடலோடிணங்க
ஊடுருவிப்போனவன்
ஊமையாய் போனதேனோ.... !

பாரதி
13-11-2007, 06:27 PM
சிலம்பம் தூங்கியதோ என* நினைத்தேன்.
சிலம்பு தூங்கவில்லை போலும்!

துஞ்சாமல் இருக்கும் அஞ்சுமானே வாரும். பதில் தாரும்.

சாம்பவி
13-11-2007, 06:29 PM
சிலம்பம் தூங்கியதோ என* நினைத்தேன்.
சிலம்பு தூங்கவில்லை போலும்!

துஞ்சாமல் இருக்கும் அஞ்சுமானே வாரும். பதில் தாரும்.


முன்னையது சிலம்பம் தானே
சில அம்பும் இடலாமே... !

தாமரை
13-11-2007, 06:36 PM
உணங்குங்கால் ஊடலுணங்க
ஊடேயூடே ஊடலோடிணங்க
ஊடுருவிப்போனவன்
ஊமையாய் போனதேனோ.... !

ஊடூடே மௌனங்கள்
பணியும் பனியும்
பணியுமோ!

நெய்தேன் நான்
நெய் தேன் தந்தாள் அவள்
ஊட்டியும் உடுத்தும் ஊடியும் ஓடியும்
களித்த களி
அசந்து கண்ணயர்ந்தேன்!

பாரதி
13-11-2007, 06:40 PM
முன்னையது சிலம்பம் தானே
சில அம்பும் இடலாமே... !

தாமரை மொட்டை
அம்பாக்கி எய்கிறேன்.
அன்பாலே எய்கிறேன்.

சாம்பவி
13-11-2007, 06:45 PM
நெய் தேன் தந்தாள் அவள்
ஊட்டியும் உடுத்தும் ஊடியும் ஓடியும்
களித்த களி
அசந்து கண்ணயர்ந்தேன்!


ஆநெயுண்டு ஆனையானால்
நெய்தாடை சிறிதாகிப் போமே...!
நெய்தலிலில்லா நெய்யா.... அதையுண்ணும்.... !

சாம்பவி
13-11-2007, 06:48 PM
தாமரை மொட்டை
அம்பாக்கி எய்கிறேன்.
அன்பாலே எய்கிறேன்.

தாமரை மொட்டை ??? ( திருப்பதியோ.... திருத்தணியோ..)
தா மரையும் மொட்டை..... !


கவரி மானல்ல.... அது
கவரிங் மான்.... !

அறிஞர்
13-11-2007, 06:51 PM
தாமரை மொட்டை ??? ( திருப்பதியோ.... திருத்தணியோ..)
தா மரையும் மொட்டை..... !


கவரி மானல்ல....
அது கவரிங் மான்.... !

யானறிந்தது.. திருப்பதி மொட்டை தான்..
விட்டா... இங்கு நமக்கை மொட்டையடித்து விடுவார்கள் போலுள்ளது...

சாம்பவி
13-11-2007, 06:57 PM
யானறிந்தது.. திருப்பதி மொட்டை தான்..
விட்டா... இங்கு நமக்கை மொட்டையடித்து விடுவார்கள் போலுள்ளது...


மொட்டை அடித்தால் பூப்பதெப்படி..... ?

அறிஞர்
13-11-2007, 07:03 PM
கவரி மானல்ல.... அது
கவரிங் மான்.... !

எப்படியோ சரியா கவர் பண்ணினா.. சரி தான்...

(எப்படிங்க.. இப்படியெல்லாம்... சிந்திக்கிறீங்க... )

சாம்பவி
13-11-2007, 07:08 PM
எப்படியோ சரியா கவர் பண்ணினா.. சரி தான்...

(எப்படிங்க.. இப்படியெல்லாம்... சிந்திக்கிறீங்க... )

அது கல்யாணி கவரிங் ஐயா.... !

அறிஞர்
13-11-2007, 07:17 PM
அது கல்யாணி கவரிங் ஐயா.... !
கல்யாணியை கவரிங்க் செய்யும் மானோ!!

என எண்ணினேன்...

சாம்பவி
13-11-2007, 07:30 PM
கல்யாணி வெறும்
கல் ஆணி என்று
மானும் அறியாதோ.... !
புத்திமானும் அறியாரோ.... !

பாரதி
14-11-2007, 12:12 AM
ஆநெயுண்டு ஆனையானால்
நெய்தாடை சிறிதாகிப் போமே...!
நெய்தலிலில்லா நெய்யா.... அதையுண்ணும்.... !

ஆநெய்யுண்டு ஆனையாகக்கூடும்
நெய்தாடையும் சரி மெய்தாடையும் சரி
எப்படி சிறிதாகும்?
ஆநெய் சரி.. நெய் தலிலில்லா நெய் ஆ..??

பானை பிடிக்கும் கரங்கள்
பா நெய் படைக்கும் விந்தை!

பாரதி
14-11-2007, 12:22 AM
தாமரை மொட்டை ??? ( திருப்பதியோ.... திருத்தணியோ..)
தா மரையும் மொட்டை..... !

கவரி மானல்ல.... அது
கவரிங் மான்.... !

மொட்டை மொட்டையாக்கியது
கவரிமானா..?
இல்லை இது சவுரிமான்..

கவரிங் என்றாலும் மேனுக்கு ஏது ஆசை..?

(திருப்பதியோ... திருத்தணியோ...
தனியே பதிக்குத்தானே மொட்டை அடிக்கிறார்கள்!)

பாரதி
14-11-2007, 12:37 AM
மொட்டை அடித்தால் பூப்பதெப்படி..... ?

இப்போதெல்லாம்
மொட்டும் இல்லை..
பூவும் இல்லை..

மொட்டை அடித்த தலைபோல்
செடிகளும் பெண்களின்
முடிகளும்.

பாரதி
14-11-2007, 12:44 AM
கல்யாணி வெறும்
கல் ஆணி என்று
மானும் அறியாதோ.... !
புத்திமானும் அறியாரோ.... !

கல் ஆண் நீ
என மானறிந்தது.
கல்லான் நீ
என நானறிந்தேன்.

தாமரை
14-11-2007, 12:56 AM
ஆநெயுண்டு ஆனையானால்
நெய்தாடை சிறிதாகிப் போமே...!
நெய்தலிலில்லா நெய்யா.... அதையுண்ணும்.... !

(பால்)ஆடையைக் கலைத்து வழித்து
காயச்சித்தானே நெய்..

ஆ நெய் ஆனால் ஆனைக்கும் போதுமே!
நெய்தலில் நெய்தரும் மச்சமுண்டு
நெய்தவர் நோவரோ

ஆ நெய் கொண்டதுண்டோ
ஆனையும் கொண்டதுண்டோ
ஆவதுமுண்டோ ஆநெய்யினால்
ஆவுக்கும் ஆனைக்கும்?

தாமரை
14-11-2007, 01:00 AM
தாமரை மொட்டை
அம்பாக்கி எய்கிறேன்.
அன்பாலே எய்கிறேன்.

இன்னும் ராக்கெட் விடும் புத்தி மாறலியே உங்களுக்கு

தாம் அரை மொட்டை ஹம்(நான்) பாக்கி அடிக்கிறேன் (எய்கிறேன்)
Un - பாக்கி (பாக்கியில்லாமல்) அடிக்கிறேன் (எய்கிறேன்)

பலே
பாரதி
பார் அதிர்
பா ரதிதான்

தாமரை
14-11-2007, 01:55 AM
தாமரை மொட்டை ??? ( திருப்பதியோ.... திருத்தணியோ..)
தா மரையும் மொட்டை..... !


கவரி மானல்ல.... அது
கவரிங் மான்.... !

கவரிங் மானா?
அது அந்தக் காலம்
இப்பொழுதெல்லாம் யார் செய்கிறார்
கவரிங்

(சாம்பவி தொப்பென மயங்கி விழுகிறார்:icon_rollout:)

இப்ப இது கவரிங் மானல்ல
ரிகவரிங் மான்.,..
ஹா ஹா ஹா:lachen001::lachen001::lachen001:

தாமரை
14-11-2007, 01:58 AM
ஆநெய்யுண்டு ஆனையாகக்கூடும்
நெய்தாடையும் சரி மெய்தாடையும் சரி
எப்படி சிறிதாகும்?
ஆநெய் சரி.. நெய் தலிலில்லா நெய் ஆ..??

பானை பிடிக்கும் கரங்கள்
பா நெய் படைக்கும் விந்தை!

பானை கரங்கள் எங்கே பிடிக்கின்றன்
ஃபோனையல்லவா பிடித்தலைகின்றன

-பில் கட்டி நொந்தவர் சங்கம்.

தாமரை
14-11-2007, 02:03 AM
மொட்டை மொட்டையாக்கியது
கவரிமானா..?
இல்லை இது சவுரிமான்..

கவரிங் என்றாலும் மேனுக்கு ஏது ஆசை..?

(திருப்பதியோ... திருத்தணியோ...
தனியே பதிக்குத்தானே மொட்டை அடிக்கிறார்கள்!)

ரொம்ப அனுபவம் போல இருக்கு அங்க..:icon_b:

கவரி மான்
கவரிங் மானாகி
மொட்டையாகி
சவுரியமாய்
சௌரி மானாகி
கவரிங் மேனை
ரிகவரிங் மேனாக்கி

ம்ம்ம்- இன்னும் என்னென்ன பாடுபடப் போகுதோ!

அக்னி
14-11-2007, 02:15 AM
சொற்சிலம்பம்...
சொல் பல அம்பலம்...
சொக்கிச் சிலையாய், நானும்...

பாராட்டத் தகுதியில்லை...
ஆதலால், நன்றி...
சிலம்பம் தொடரட்டும்...

சாம்பவி
14-11-2007, 03:34 AM
ஆநெய் சரி.. நெய் தலிலில்லா நெய் ஆ..??



"நெய்"தலில் இல்லா நெய்யா.... !
நொய்யாய் நொய்மையிட்டு
நொய்ய நொய்ய
நொய்தானபாபூ.... !

பென்ஸ்
14-11-2007, 03:45 AM
சபாஷ்...
சாம்பவி, தாமரை மற்றும் பாரதி என்று மாற்றி மாற்றி புரட்டி எடுக்கிறிர்கள்...
வாழ்த்தை கூட பதிக்க பயமாக இருக்கிறது... இதையும் போட்டு புரட்டி எடுப்பீங்களே..!!!!
சாம்பவி.... உங்கள் வரிகளையும் , சொற்களை கையாளும் அழகையும் ரசித்து வருகிறேன்.... வாழ்த்துகள்

ஆதவா
14-11-2007, 03:49 AM
பானை கரங்கள் எங்கே பிடிக்கின்றன்
ஃபோனையல்லவா பிடித்தலைகின்றன

-பில் கட்டி நொந்தவர் சங்கம்.

இது கலக்கல்..:)

ஆதவா
14-11-2007, 03:52 AM
"நெய்"தலில் இல்லா நெய்யா.... !
நொய்யாய் நொய்மையிட்டு
நொய்ய நொய்ய
நொய்தானபாபூ.... !

இப்படி நொய்ய நொய்ய
நொய்துவிட்டால் நாங்கள்
பாநெய் நெய்வதெப்படி?

சாம்பவி
14-11-2007, 03:54 AM
ஆவதுமுண்டோ ஆநெய்யினால்
ஆவுக்கும் ஆனைக்கும்?


ஆநெய்யினால் ஆவுக்கும் ஆனைக்கும் ஆகிறதோ என்னவோ...
ஆவுக்கும் ஆனைக்குமே ஆவதில்லையே.... !
சந்தித்தபோது சிந்திக்கவில்லையேயா..... !
சந்தித்த போது அப்படி... !
நிந்தித்த ஆனை.... இட்டதாணை... !
நந்தி நொந்தது அறியீரோ.... !

ஆதவா
14-11-2007, 04:08 AM
ஆநெய்யினால் ஆவுக்கும் ஆனைக்கும் ஆகிறதோ என்னவோ...
ஆவுக்கும் ஆனைக்குமே ஆவதில்லையே.... !
சந்தித்தபோது சிந்திக்கவில்லையேயா..... ! (சிந்திக்க வில்லையே ஆ )
சந்தித்த போது அப்படி... ! ( போது − பொழுது......அபிஷேக வேளை.. )
நிந்தித்து ஆனை.... இட்டதாணை... !
நந்தி நொந்தது அறியீரோ.... !

ஆநெய் ஆனை ஆனதோ
ஆனை ஆநெய் ஆனதோ
அறியேன்
பானை உடைந்தொழுகும்
பாநெய்யாய் நோகிறேன்...
--
இங்கே எழுதமுடியாமை

சாம்பவி
14-11-2007, 04:08 AM
பானை பிடிக்கும் கரங்கள்
பா நெய் படைக்கும் விந்தை!

அம்மா இப்போவெல்லம் குக்கரைத்தான் பிடிக்கிறாள்....
அப்பாவையும் ஒரு பிடி பிடிப்பாள்.... !
அப்பப்போ இந்த
அப்பாவியையும் தான்.... !
நையப் புடைப்பாள்.... :( பின்னர்
நெய்யும் படைப்பாள்

தாமரை
14-11-2007, 04:09 AM
ஆநெய்யினால் ஆவுக்கும் ஆனைக்கும் ஆகிறதோ என்னவோ...
ஆவுக்கும் ஆனைக்குமே ஆவதில்லையே.... !
சந்தித்தபோது சிந்திக்கவில்லையேயா..... ! (சிந்திக்க வில்லையே ஆ )
சந்தித்த போது அப்படி... ! ( போது − பொழுது......அபிஷேக வேளை.. )
நிந்தித்து ஆனை.... இட்டதாணை... !
நந்தி நொந்தது அறியீரோ.... !

ஆவுமானையும் சந்தித்தலாவுமா
சந்தித்தாலுலாவுமா?
போதப்படி என்றால்
பொதியாய் போதலெப்படி
ஆனை இட்ட ஆணை
ஆணையிட்டானை
ஆ-நந்தி ஆனதெப்போ
கேட்டுச் சொல்

தாமரை
14-11-2007, 04:13 AM
அம்மா இப்போவெல்லம் குக்கரைத்தான் பிடிக்கிறாள்....
அப்பாவையும் ஒரு பிடி பிடிப்பாள்.... !
அப்பப்போ இந்த
அப்பாவியையும் தான்.... !
நெய்யும் படைத்து
நையப் புடைப்பாள்.... :(

அப்பாவும் குக்கர் தானே (சமையல்காரர்தான்)

நையப்புடைத்த நொய்யும்
நையாண்டி இன்றி நெய்யும்
கலந்து
வெல்லமிட்டு வேகவிட்டு

அப்பா ஆவி நெக்குருக
கரும்புமஞ்சளும்
படையலிட்டு
குலவியிட்டுப் பொங்கல்
கிழவிக்குக் குழவி :icon_b:

சாம்பவி
14-11-2007, 04:19 AM
இன்னும் ராக்கெட் விடும் புத்தி மாறலியே உங்களுக்கு

தாம் அரை மொட்டை ஹம்(நான்) பாக்கி அடிக்கிறேன் (எய்கிறேன்)
Un - பாக்கி (பாக்கியில்லாமல்) அடிக்கிறேன் (எய்கிறேன்)


எய்தவன் எய்த*
எய்தியதும் எய்தியது.... !
எய்தியது எய்தாமோ... !

சாம்பவி
14-11-2007, 04:24 AM
ஆ-நந்தி ஆனதெப்போ
கேட்டுச் சொல்

ஆவேறு நந்திவேறோ..
யாமாமாநீ யாமாமா நினைவில்லையோ
தலைவனுக்கு அவள் பாதியெனின்
நந்திக்கும் ஆ பாதியன்றோ... !
அவனுக்கொரு நீதி ஆவுக்கொரு நீதியோ.... !

சாம்பவி
14-11-2007, 04:30 AM
ஆவுமானையும் சந்தித்தலாவுமா
சந்தித்தாலுலாவுமா?


ஏனில்லாமல்.......
ஆனையப்பன் அமர்ந்திருப்பதே
ஆவின் பதிமீது தானே.... !
அப்பனுக்கானது
அவனுக்காகாதோ..... !

தாமரை
14-11-2007, 04:33 AM
ஆவேறு நந்திவேறோ..
யாமாமாநீ யாமாமா நினைவில்லையோ
தலைவனுக்கு அவள் பாதியெனின்
நந்திக்கும் ஆ பாதியன்றோ... !
அவனுக்கொரு நீதி ஆவுக்கொரு நீதியோ.... !

தலைவனுக்கு அவள் பாதி பா இல்லை பாதிப்பா?
ஆண் சரிபாதி பெண்மைக்குத் தந்தானோ
இது சரிதானோ(நவீன் நாரதர் படிக்கவும் http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6607 - பதிவு 9.)
நாராயணுக்கு சரிபாதி (சங்கர நாராயணன்)
நாரிக்கும் சரிபாதி(அர்த்த நாரி)
கவியப்பம் பகிர்ந்தார் போல்
ஹரியெப்பாதி அரனெப்பாதி அவளெப்பாதி
நீதியா இல்லை நீ தீயா
நெற்றிக்கன் திறப்பினும்

சாம்பவி
14-11-2007, 04:34 AM
கிழவிக்குக் குழவி :icon_b:

தலையில் போடவோ..... !
கதியில் கதிமோட்சமோ.... !

சாம்பவி
14-11-2007, 04:46 AM
நாராயணுக்கு சரிபாதி (சங்கர நாராயணன்)
நாரிக்கும் சரிபாதி(அர்த்த நாரி)
கவியப்பம் பகிர்ந்தார் போல்
ஹரியெப்பாதி அரனெப்பாதி அவளெப்பாதி
நீதியா இல்லை நீ தீயா
நெற்றிக்கன் திறப்பினும்

நாராயணனுக்கு பாதி அவன்
தங்கைக்கும் பாதி கொடுத்தால்...
அவனுக்கேது மீதி... !
மறுபாதி நாராயணானானால்
அண்ணல் அண்ணணாகிப்
போவான் அல்லவோ...
அண்ணனுக்கு கொடுத்ததையே
அவளுக்கும் கொடுத்தது
அல்வாவோ.... ! (சிதம்பரத்தில் கிண்டிய திருநெல்வேலி அல்வா... ! )

தாமரை
14-11-2007, 04:49 AM
ஏனில்லாமல்.......
ஆனையப்பன் அமர்ந்திருப்பதே
ஆவின் பதிமீது தானே.... !
அப்பனுக்கானது
அவனுக்காகாதோ..... !

ஆவுமா விளக்கம்
அ- உ-ம்
ஓம்
பிரணவம்.

தாமரை
14-11-2007, 04:55 AM
தலையில் போடவோ..... !
கதியில் கதிமோட்சமோ.... !

கிழவி - மனைவி
குழவி - குழந்தை

கதிமோட்சமோ கவிமோசமோ?

தாமரை
14-11-2007, 05:00 AM
நாராயணனுக்கு பாதி அவன்
தங்கைக்கும் பாதி கொடுத்தால்...
அவனுக்கேது மீதி... !
மறுபாதி நாராயணானானால்
அண்ணல் அண்ணணாகிப்
போவான் அல்லவோ...
அண்ணனுக்கு கொடுத்ததையே
அவளுக்கும் கொடுத்தது
அல்வாவோ.... ! (சிதம்பரத்தில் கிண்டிய திருநெல்வேலி அல்வா... ! )

அல்வாதானே

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6052
பதிவு 36 லிருந்து படிக்கவும்

சாம்பவி
14-11-2007, 05:18 AM
கிழவி - மனைவி
குழவி - குழந்தை

கதிமோட்சமோ கவிமோசமோ?

கவி மோசமில்லை...
கவிதாவிலாசம்....... !

மனைவி கிழவியல்லள் கிழத்தி.... !

அவள் கிழவியானால்
நீங்கள்............. ! ;)

தாமரை
14-11-2007, 05:35 AM
கவி மோசமில்லை...
கவிதாவிலாசம்....... !

மனைவி கிழவியல்லள் கிழத்தி.... !

அவள் கிழவியானால்
நீங்கள்............. ! ;)

கவிதாவிலாசம்
கவி தாவி லாசாம் (குரங்கு(அனுமன்) குதித்து இலங்கையை அழித்ததாம்)

நான் கிழவன்

சாம்பவி
14-11-2007, 05:52 AM
கவிதாவிலாசம்
கவி தாவி லாசாம் (குரங்கு(அனுமன்) குதித்து இலங்கையை அழித்ததாம்)


கவி தாவி
கடல் தாவி
கவிதா விலாசம் கண்டதும்
கவை தாவி ( மர*க்கிளை )
கவை நாசம் ( கோட்டை )
செய்வானவன்
சூடாமன்னனுக்கும்
சூடாமணி சுட்டியவன்
அவன் கவிதாவிலாசமே . !
ராம ராமா.... !

அமரன்
14-11-2007, 07:21 AM
பள்ளிக்கூடம் இன்னும் திறக்கலையா..
திறவுகோள் இன்னும் விழிக்கலையா...

சாம்பவி
14-11-2007, 07:48 AM
கவரிங் மானா?
அது அந்தக் காலம்
இப்பொழுதெல்லாம் யார் செய்கிறார்
கவரிங்

(சாம்பவி தொப்பென மயங்கி விழுகிறார்:icon_rollout:)

இப்ப இது கவரிங் மானல்ல
ரிகவரிங் மான்.,..
ஹா ஹா ஹா:lachen001::lachen001::lachen001:

அது கவரிங் தங்கத்தில் (18 காரட் ) செய்யப்பட்ட மான் பதக்கம்.... !

சாம்பவி
14-11-2007, 08:18 AM
"நெய்"தலில் இல்லா நெய்யா.... !
நொய்யாய் நொய்மையிட்டு
நொய்ய நொய்ய
நொய்தானபாபூ.... !

நொய்யாய் − நுட்பமான − minute − நுட்பமான வார்த்தைகளால்
நொய்மை இட்டு − உருக்கத்தோடு ஆக்கப்பட்ட*
நொய்ய நொய்ய − சின்ன சின்ன
நொய்தான − மிருதுவான*
பா பூ

அமரன்
14-11-2007, 08:20 AM
நொய்யாய் − நுட்பமான வார்த்தைகளால்

எனக்குப் புதுசு நன்றி..

தாமரை
14-11-2007, 09:17 AM
அது கவரிங் தங்கத்தில் (18 காரட் ) செய்யப்பட்ட மான் பதக்கம்.... !

இப்பொழுதெல்லாம் யார் செய்கிறார் கவரிங்
என் கவரிங் கிற்கு முழு உடை (இழுத்துப் போர்த்திக் கொள்ளுதல்)
என்று அர்த்தம்...

தாமரை
14-11-2007, 09:21 AM
கவி தாவி
கடல் தாவி
கவிதா விலாசம் கண்டதும்
கவை தாவி ( மர*க்கிளை )
கவை நாசம் ( கோட்டை )
செய்வானவன்
சூடாமன்னனுக்கும்
சூடாமணி சுட்டியவன்
அவன் கவிதாவிலாசமே . !
ராம ராமா.... !

சூடா மணி ஏன் சூடினாள் சீதை
சூடிய பின் அது ஏன் சூடா மணி
கவைதாவிய கவியுமே
சொல்லின் "செல்வன்"

தாமரை
14-11-2007, 09:23 AM
நொய்யாய் − நுட்பமான − minute − நுட்பமான வார்த்தைகளால்
நொய்மை இட்டு − உருக்கத்தோடு ஆக்கப்பட்ட*
நொய்ய நொய்ய − சின்ன சின்ன
நொய்தான − மிருதுவான*
பா பூ

நொய்யப் புடைத்தால்
புடைக்குமா நொய்யுமா?

சாம்பவி
14-11-2007, 09:45 AM
நொய்யப் புடைத்தால்
புடைக்குமா நொய்யுமா?
திருமதியைக் கேட்டுச் சொல்லுங்கள்
களிம்பு பூசறது அவர்கள் தானே.... !

பாரதி
14-11-2007, 09:50 AM
திரு மதியைக் கேட்டுச் சொல்லுங்கள்
களிம்பு பூசறது அவர்கள் தானே.... !

தாமரை... மதி உங்களுக்கு நண்பர் என்றாலும் கூட களிம்பு கூட பூசி விடுகிறாரா..! பலே..!

தாமரை
14-11-2007, 09:51 AM
திருமதியைக் கேட்டுச் சொல்லுங்கள்
களிம்பு பூசறது அவர்கள் தானே.... !

புடைப்பதே அவர்தானே!

வன்மை (எலும்பு) நொறுங்கும்
மென்மை (தசை) புடைக்கும்

சாம்பவி
14-11-2007, 09:51 AM
எய்தவன் எய்த
எய்தியதும் எய்தியது.... !
எய்தியது எய்தாமோ... !

எய்து அவன் − பாடிய அவனும்
எய்த − அனுபவிக்க.... மகிழ்ச்சி எய்த
எய்தியதும் − சம்பவித்ததும்..... இங்கு பாடலும்
எய்தியது.... − அதனின் நிலையை அடைந்தது.... − புகழ் பெற்றது − (மோட்சம் எய்தியது ;))
எய்தியது எய்து ஆமோ − பாடினது போதுமா.... இந்தப் பாட்டு போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா.... !

தாமரை
14-11-2007, 09:54 AM
எய்து அவன் − ( பா ) இட்ட அவனும்
எய்த − அனுபவிக்க*
எய்தியதும் − சம்பவித்ததும்..... இங்கு பாடலும்
எய்தியது.... − அதனின் நிலையை அடைந்தது.... − புகழ் பெற்றது − (மோட்சம் எய்தியது ;))
எய்தியது எய்து ஆமோ − பாடினது போதுமா.... இந்தப் பாட்டு போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா.... !

இந்த எய்தியதுக்கு சென்னைத் தமிழாய் (எழுதியது) கொண்டாலும் நன்றாய்தானே இருக்கிறது

தாமரை
14-11-2007, 09:56 AM
தாமரை... மதி உங்களுக்கு நண்பர் என்றாலும் கூட களிம்பு கூட பூசி விடுகிறாரா..! பலே..!

அவரே கால் கட்டு போட்டுக் கிடக்கிறார்...

இன்று இரண்டு கிசுகிசுக்கள் வந்தன... ஆமாம் அதேதான்

சாம்பவி
14-11-2007, 09:59 AM
இந்த எய்தியதுக்கு சென்னைத் தமிழாய் (எழுதியது) கொண்டாலும் நன்றாய்தானே இருக்கிறது

அதை பாரதி தான் சொல்லவேண்டும்....
அவர் உங்களை அம்பு எய்யச் சொன்னாரா
எய்தச் (எழுத ;) ) சொன்னாரா.... !

சாம்பவி
14-11-2007, 10:06 AM
இந்த எய்தியதுக்கு சென்னைத் தமிழாய் (எழுதியது) கொண்டாலும் நன்றாய்தானே இருக்கிறது

எய்ததை எழுதலாம்
எழுதியது எப்படி எய்தும் ?

தாமரை
14-11-2007, 10:17 AM
எய்ததை எழுதலாம்
எழுதியது எப்படி எய்தும் ?

எய்தியதை எய்தும் - எழுதியதை எழுதும்.

இப்போ அதைத்தானே செய்கிறீர்.

இலக்கியம் - இலக்கை இயம்புவது

எய்துவது - அடைவது, பெறுவது
எய்வது - அனுப்புவது, செலுத்துவது, வீசுவது

எழுதியதை பெறவும் செய்யலாம், அனுப்பவும் செய்யலாம்.

தாமரை
14-11-2007, 10:19 AM
அதை பாரதி தான் சொல்லவேண்டும்....
அவர் உங்களை அம்பு எய்யச் சொன்னாரா
எய்தச் (எழுத ;) ) சொன்னாரா.... !

என்னை எழுதச் சொல்லி ஆணையிட்டது ஆனை.
பிள்ளார் செட்டி என்னும் என் ஆசிரியர்

சாம்பவி
14-11-2007, 10:20 AM
எய்தியதை எய்தும் - எழுதியதை எழுதும்.

இப்போ அதைத்தானே செய்கிறீர்.

இலக்கியம் - இலக்கை இயம்புவது

எய்துவது - அடைவது, பெறுவது
எய்வது - அனுப்புவது, செலுத்துவது, வீசுவது

எழுதியதை பெறவும் செய்யலாம், அனுப்பவும் செய்யலாம்.

இது அழுகுணி ஆட்டம்.... !

மகிழ்ச்சி எய்தினான்.... !
மகிழ்ச்சி எழுதினான்.... எப்படி சரியாகுமோ.... ?

தாமரை
14-11-2007, 10:22 AM
இது அழுகுணி ஆட்டம்.... !

மகிழ்ச்சி எய்தினான்.... !
மகிழ்ச்சி எழுதினான்.... எப்படி சரியாகுமோ.... ?

நான் எல்லா இடத்திலுமா சொன்னேன்..

நான் சொன்ன இடத்தை பாருங்கள்

எய்தியது எய்து ஆமோ − பாடினது போதுமா.... இந்தப் பாட்டு போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா.... !

இந்த எய்தியதுக்கு சென்னைத் தமிழாய் (எழுதியது) கொண்டாலும் நன்றாய்தானே இருக்கிறது

சாம்பவி
14-11-2007, 10:26 AM
நான் எல்லா இடத்திலுமா சொன்னேன்..

நான் சொன்ன இடத்தை பாருங்கள்

எய்தியது எய்து ஆமோ − பாடினது போதுமா.... இந்தப் பாட்டு போதுமா... இன்னும் கொஞ்சம் வேண்டுமா.... !

இந்த எய்தியதுக்கு சென்னைத் தமிழாய் (எழுதியது) கொண்டாலும் நன்றாய்தானே இருக்கிறது

தப்பை தப்பாய் சொல்லி
தப்பித்து விட்டீர்..

தாமரை
14-11-2007, 10:28 AM
தப்பை தப்பாய் சொல்லி
தப்பித்து விட்டீர்..

அப்போ நீங்க எழூதினது தப்பா?:lachen001::lachen001:

சாம்பவி
14-11-2007, 10:32 AM
:lachen001::lachen001:

முகத்தாறு அவனுக்கிருக்க*
முகமாறு மகவுக்கிருக்க*
முகமாற்றம் உமக்கெதற்கோ.... !

தாமரை
14-11-2007, 10:35 AM
முகத்தாறு அவனுக்கிருக்க*
முகமாறு மகவுக்கிருக்க*
முகமாற்றம் உமக்கெதற்கோ.... !

மாற்றம் மாற்றமில்லாதது!

முகமாறு கொண்டோனும் தாமரைச் செல்வனே

நெற்றியின் வேர்வைத் துளிகள் நிலம் விழ வியர்வை ஆறாய் பெருக்கெடுக்க உழைக்கும் தொழிலாளியும் முகத்தாறு கொண்டவன் தான்

அழகிய மகளிரின் மின்னும் பொன்னழகில் வாய் நீர் ஆறாய் பெருக்கும் இளைஞனும் முகத்தாறு கொண்டவன் தான்.

:mini023::mini023::mini023:

சாம்பவி
14-11-2007, 10:37 AM
அப்போ நீங்க எழூதினது தப்பா?:lachen001::lachen001:


தப்பாமல் எழுதமுடியுமா.... அதற்காக*
எழுதாமல் தப்பமுடியுமா....
சாத்தனாருக்கே முடியலையே.... !
சீத்தலை சொல்லுதே.... !

தாமரை
14-11-2007, 10:40 AM
தப்பாமல் எழுதமுடியுமா.... அதற்காக*
எழுதாமல் தப்பமுடியுமா....
சாத்தனாருக்கே முடியலையே.... !
சீத்தலை சொல்லுதே.... !

நானும் ஓர் சீத்தலை சாத்தனார் தான். (10 வகுப்பு விடுமுறைக்காலத்தில் மண்டை உடைந்து புண் புரையோடி சீழ் பிடித்து...)

தவறுவதியல்பு. குத்துவதில்லை என் எண்ணம். நயம் பட உரைத்தல் அவ்வளவே!

சாம்பவி
14-11-2007, 10:41 AM
மாற்றம் மாற்றமில்லாதது!

அழகிய மகளிரின் மின்னும் பொன்னழகில் வாய் நீர் ஆறாய் பெருக்கும் இளைஞனும் முகத்தாறு கொண்டவன் தான்.

:mini023::mini023::mini023:

அப்போ....
மாமனாருக்கு
முன்னைய முகத்தாறை விட*
இந்த இறுதி முகத்தாறு தான் அதிகமோ.... !

தாமரை
14-11-2007, 10:45 AM
அப்போ....
மாமனாருக்கு
முன்னைய முகத்தாறை விட*
இந்த இறுதி முகத்தாறு தான் அதிகமோ.... !

அழகிய மகளிரின் மின்னும் பொன்னழகில் வாய் நீர் ஆறாய் பெருக்கும் இளைஞனும் முகத்தாறு கொண்டவன் தான்.

இது சரின்னா அதுவும் சரிதான்:icon_b:

சாம்பவி
14-11-2007, 10:52 AM
அழகிய மகளிரின் மின்னும் பொன்னழகில் வாய் நீர் ஆறாய் பெருக்கும் இளைஞனும் முகத்தாறு கொண்டவன் தான்.

இது சரின்னா அதுவும் சரிதான்:icon_b:


கவிதாவிலாசம்
கவி தாவி லாசாம் (குரங்கு(அனுமன்) குதித்து இலங்கையை அழித்ததாம்)

நான் கிழவன்


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தாமரை
14-11-2007, 10:56 AM
அழகிய மகளிரின் மின்னும் பொன்னழகில் வாய் நீர் ஆறாய் பெருக்கும் இளைஞனும் முகத்தாறு கொண்டவன் தான்.

இது சரின்னா அதுவும் சரிதான்



Originally Posted by தாமரை
கவிதாவிலாசம்
கவி தாவி லாசாம் (குரங்கு(அனுமன்) குதித்து இலங்கையை அழித்ததாம்)

நான் கிழவன்


!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

கிழவன் = அறிஞன்
;)

சாம்பவி
14-11-2007, 11:02 AM
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


கிழவன் = அறிஞன்
;)

எந்த ஊரில்.... ????????

அறிஞன் கிழவன் வேடம் போட்டது
குறவள்ளியை மணக்கவோ.... !
கிழவன் அறிஞன் வேடம் போடுவது
எவளை மடக்கவோ... !

ஓவியன்
14-11-2007, 11:11 AM
தப்பை தப்பாய் சொல்லி
தப்பித்து விட்டீர்..

தப்பை
தப்பாய்ச் செய்தால்
அது
தப்பில்லை தானே..?? :rolleyes:

ஓவியன்
14-11-2007, 11:14 AM
கிழவன் = அறிஞன்
;)நம்ம அறிஞரைச் சொல்லலையே...!!! :D:D:D

தாமரை
14-11-2007, 11:32 AM
எந்த ஊரில்.... ????????

அறிஞன் கிழவன் வேடம் போட்டது
குறவள்ளியை மணக்கவோ.... !
கிழவன் அறிஞன் வேடம் போடுவது
எவளை மடக்கவோ... !

வேடந்தாங்கலே
வெளிநாட்டு
பறவைகளுக்காகத் தானே!

மண்+திரி = மந்திரி
மணலைக் கயிறாய்த் திரிப்பவர்

சாம்பவி
14-11-2007, 11:46 AM
மண்+திரி = மந்திரி
மணலைக் கயிறாய்த் திரிப்பவர்

அப்போ.....
எண்+ திரி = எ(ழு)ந்திரி... ?
எண்ணைத் திரித்தால் எந்திரி ??????

தாமரை :
எண்ணை திரியுமா?
பால் தான் திரியும்.

சாம்பவி:
பால் மட்டுமா திரியும்.,...
பால்காரனும் திரிவானே.... !
பால்காரன் மட்டுமா.,
தபால்காரனும்
திரியோ திரியென* திரிவானே...

தாமரை:
திரியோ திரினு திரியறது திரிக்காரன் .... விளக்குத்திரிக் காரன்

சாம்பவி:
பால் திரிஞ்சா தயிர்....
பால்காரன் திரிஞ்சா ............. !!!!

ஆதவா:
திரி திரியென
திரித்ததால்....
இத்திரி...
திரிந்த்து..... !
எனவே பூட்ட பரிந்துரைக்கப்படுகிறது... !

சாம்பவி + தாமரை :
திரியைப் பூட்ட இயலுமோ.... !
பூட்டைத் தானே பூட்ட முடியும்... !

ஆதவா :
யாரங்கே திண்டுகல்லுக்கு உடனே ஆர்டர் கொடுங்கள்... !

தாமரை
14-11-2007, 12:03 PM
அப்போ.....
எண்+ திரி = எ(ழு)ந்திரி... ?
எண்ணைத் திரித்தால் எந்திரி ??????

தமரை : எண்ணை திரியுமா? பால் தான் திரியும்.
சாம்பவி: பால் மட்டுமா திரியும்.,... பால் காரனும் திரிவானே.... !

எண்ணையும் திரியும் சவக்காரமிட்டுப் பாருங்கள்

திரியா திருத்திரியா

திரியும் கவியறிந்த
திரிசடை அவள்
தலைவன் விரிசடையன்
திரியாத திரியா?

தாமரை
14-11-2007, 12:13 PM
மட்டுவார்க் குழலி மைந்தன்
மற்றுமோர்க் கிழத்தி தேடியதில்
வேலனால் ஆகாதது வேழனாலானது

சாம்பவி
14-11-2007, 12:17 PM
மட்டுவார்க் குழலி மைந்தன்
மற்றுமோர்க் கிழத்தி தேடியதில்
வேலனால் ஆகாதது வேழனாலானது

கிழவனைக் கண்டுருக*
கிழத்தியென்ன கிழவியா.... !
வேழமும் வீழ்த்தியது
பயத்தினால் தானே..... !

தாமரை
14-11-2007, 12:22 PM
கிழவனைக் கண்டுருக*
கிழத்தியென்ன கிழவியா.... !
வேழமும் வீழ்த்தியது
பயத்தினால் தானே..... !

வேடனும் விருத்தனும்
வேங்கையும் வேலனும்
நாடும் அக நாடகமே
மார் சேர்ந்தாள்
மனம் சேர்ந்தாள்
பயனுள்ள பயம்தானே

சாம்பவி
14-11-2007, 12:28 PM
வேடனும் விருத்தனும்
வேங்கையும் வேலனும்
நாடும் அக நாடகமே
மார் சேர்ந்தாள்
மனம் சேர்ந்தாள்
பயனுள்ள பயம்தானே

இப்படியுமோர்
"வேடந்தாங்கல்" அவசியமோ....
சுடர்கொடி போல்
"சரணாலயம்" செய்தல் நலமோ.... !

சாம்பவி
14-11-2007, 12:33 PM
எண்ணையும் திரியும் சவக்காரமிட்டுப் பாருங்கள்

திரியா திருத்திரியா

திரியும் கவியறிந்த
திரிசடை அவள்
தலைவன் விரிசடையன்
திரியாத திரியா?

திரிசடையின் தலைவன் விரிசடையனோ.....
அவள் அப்பன் விபீஷணன் பார்த்தால் .....
விரி சடை தான்.... !

யவனிகா
14-11-2007, 12:33 PM
இப்படியுமோர்
வேடந்தாங்கல் அவசியமோ....
சுடர்கொடி போல்
சரணாலயம் செய்தல் நலமோ.... !

வேடம் தாங்கல் அவசியமில்லை தான். சுடர்க் கொடி, சரண் ஆவது அரிது.

தாமரை
14-11-2007, 12:34 PM
இப்படியுமோர்
வேடந்தாங்கல் அவசியமோ....
சுடர்கொடி போல்
சரணாலயம் செய்தல் நலமோ.... !

அது காதல் எங்கு பிறந்தது என்பதால் அல்லவா?
படுத்துக் கிடப்பவனால்
படுத்த முடியுமா
சிவனின் மகனால்
சிவனே என இருக்க முடியுமா

தாமரை
14-11-2007, 12:40 PM
திரிசடையின் தலைவன் விரிசடையனோ.....
அவள் அப்பன் விபீஷணன் பார்த்தால் .....
விரி சடை தான்.... !

அவனுக்கும் தலைவன்
அவன் அண்ணனுக்கும் தலைவன்
விரிசடையன்

அழித்தலதிபன் விரிசடை
இப்பொழுது புரிகிறதா
பாஞ்சாலியின் விரிசடை
பாரதத்தை பார் ரத்தமாக்கியது!

சாம்பவி
14-11-2007, 12:42 PM
வேடம் தாங்கல் அவசியமில்லை தான். சுடர்க் கொடி, சரண் ஆவது அரிது.

வேட்டுவச்சி வேண்டியதென்ன*
காசா பணமா....
வேறொரு
புள்ளி மேவாத மான் மீது
தாவாத மனமே...!




இவர்கள் பாஷையில்
வேடந்தாங்கல் வேறு தாயே.... !
வேற்று நாட்டுப் பறவைகளுக்கு மட்டுமாம்... !
நமக்கு சரணாலயம் போதாதோ.... !

தாமரை
14-11-2007, 12:47 PM
வேட்டுவச்சி வேண்டியதென்ன*
காசா பணமா....
இன்னொரு புள்ளி மேவாத மான் மீது
தாவாத மனமே...!




இவர்கள் பாஷையில்
வேடந்தாங்கல் வேறு தாயே.... !
வேற்று நாட்டுப் பறவைகளுக்கு மட்டுமாம்... !
நமக்கு சரணாலயம் போதாதோ.... !


புள்ளி மேவாத மான் மே(ல்) தாவாத மனமா?
புள்ளி மான் மேல் தாவலாமா?
வேட்டு வச்சி வேண்டினாரா
வேட்டுவச்சி?

சாம்பவி
14-11-2007, 12:52 PM
புள்ளி மேவாத மான் மே(ல்) தாவாத மனமா?
புள்ளி மான் மேல் தாவலாமா?
வேட்டு வச்சி வேண்டினாரா
வேட்டுவச்சி?

புள்ளி., மான் மீது தாவலாம்... !
புள்ளும் தாவலாம்... !
புலி ., மான் மீது தாவலாமோ.... !

தாமரை
14-11-2007, 12:56 PM
புள்ளி., மான் மீது தாவலாம்... !
புள்ளும் தாவலாம்... !
புலி ., மான் மீது தாவலாமோ.... !

உணவின் மேல் தாவும்
உணர்வியல்பு தானே
மான் தான் புலி மீது தாவக்கூடாது!
கொம்பனாயிருந்தாலும்!!

பாரதி
14-11-2007, 04:29 PM
எய்யா...
எய்யா...!
என்னய்யா...!!
எப்படிய்யா...!!!

வேடந்தாங்கல் பறவை போல் (!?) மகிழ்ச்சி சிறகடித்துப்பறக்கிறது.
பாராட்டுக்களும் நன்றிகளும் சாம்பவி, தாமரை.

பாரதி
14-11-2007, 04:30 PM
புள்ளி., மான் மீது தாவலாம்... !
புள்ளும் தாவலாம்... !
புலி ., மான் மீது தாவலாமோ.... !

எந்தப்புள்ளி (!) மான் மீது தாவலாம்?

புள்ளும் தாவுமோ
புதுக்கவிதையில்.

பாரதி
14-11-2007, 04:34 PM
உணவின் மேல் தாவும்
உணர்வியல்பு தானே
மான் தான் புலி மீது தாவக்கூடாது!
கொம்பனாயிருந்தாலும்!!

ஒரு சந்தேகம்: கொம்பன் ஆண்பால். பெண்பால் என்ன?

ஆதவா
14-11-2007, 05:40 PM
ஒரு சந்தேகம்: கொம்பன் ஆண்பால். பெண்பால் என்ன?

கொம்பி?
கொம்பச்சி?
கொம்பாயி?

சாம்பவி
14-11-2007, 05:47 PM
எந்தப்புள்ளி (!) மான் மீது தாவலாம்?

புள்ளும் தாவுமோ
புதுக்கவிதையில்.

புள் தாவி பார்த்ததில்லையோ....
வேடந்தாங்கலில் எப்படியோ....
எங்கள்
சரணாலயத்தில்....
புள்ளும் ( பறவை ) ஃபுல்லா தாவும்.... !

சாம்பவி
14-11-2007, 05:54 PM
எந்தப்புள்ளி (!) மான் மீது தாவலாம்?

.

மானை ஒற்றும்
ஒற்றுப் புள்ளி மட்டுமே
நெற்றிப் புள்ளியாய் தாவலாம்... !

பாரதி
14-11-2007, 05:54 PM
கொம்பி?
கொம்பச்சி?
கொம்பாயி?

சிலம்பமும், சிலம்பும் செப்பினால் சிந்தை தெளியும்.

பாரதி
14-11-2007, 05:56 PM
புள் தாவி பார்த்ததில்லையோ....
வேடந்தாங்கலில் எப்படியோ....
எங்கள்
சரணாலயத்தில்....
புள்ளூம் ( பறவை ) ஃபுல்லா தாவும்.... !

புள்ளூம் ஃபுல்லா...?!!

பாரதி
14-11-2007, 05:59 PM
மானை ஒற்றும்
ஒற்றுப் புள்ளி மட்டுமே
நெற்றிப் புள்ளியாய் தாவலாம்... !

மானே புள்ளியாய் இருக்க
ஒற்றும் ஒற்றையால்
மற்ற புள்ளிகள் மறையுமோ..?

சாம்பவி
14-11-2007, 06:00 PM
அது காதல் எங்கு பிறந்தது என்பதால் அல்லவா?
படுத்துக் கிடப்பவனால்
படுத்த முடியுமா
சிவனின் மகனால்
சிவனே என இருக்க முடியுமா

படுத்தே படுத்தினவன் பரந்தாமன்...
கோதையை கோதண்டன்
படுத்தின பாடு,
கோதும்பி அறியும்
மார்கழி குளிரில்,
கீசரில்லாது
குளித்துப் பாரும் புரியும்.... !

தாமரை
14-11-2007, 06:01 PM
மானை ஒற்றும்
ஒற்றுப் புள்ளி மட்டுமே
நெற்றிப் புள்ளியாய் தாவலாம்... !

ஒற்றைப் புள்ளியெனில்
சிவப்புப் புள்ளி
பல புள்ளியெனில்
கரும் புள்ளி, செம்புள்ளி:aetsch013:

சாம்பவி
14-11-2007, 06:07 PM
ஒற்றைப் புள்ளியெனில்
சிவப்புப் புள்ளி
பல புள்ளியெனில்
கரும் புள்ளி, செம்புள்ளி:aetsch013:

இம்மானின்
நெற்றிப்பொட்டை
இட்டவருக்கே
நிறக்குருடோ.... !
தகப்பன்சாமிக்கே
பிரணவம்
பிசகிடுத்தோ.... !

பாரதி
14-11-2007, 06:08 PM
படுத்தே படுத்தினவன் பரந்தாமன்...
கோதையை கோதண்டன்
படுத்தின பாடு,
கோதும்பி அறியும்
மார்கழி குளிரில்,
கீசரில்லாது
குளித்துப் பாரும் புரியும்.... !

பாவம் பரந்தாமன்.
பள்ளி கிடந்தவனை ஏற்கனவே
புள்ளி வைத்தவனை
புள்ளி வைக்கச்சொல்லி
கோதை படுத்தியதை
யாரிடம் சொல்ல..?

தாமரை
14-11-2007, 06:10 PM
படுத்தே படுத்தினவன் பரந்தாமன்...
கோதையை கோதண்டன்
படுத்தின பாடு,
கோதும்பி அறியும்
மார்கழி குளிரில்,
கீசரில்லாது
குளித்துப் பாரும் புரியும்.... !

ஊரெங்கும் யாரையும்
விடியற்கால தூக்கம்
கொள்ள விடாமல்
கதவு தட்டி யெழுப்பி
கொடுமை செய்தது
கோதையா கோதண்டனா?

மார்கழி குளிரென்ன
தை தை என குதித்துக் குளிப்போம்
மாசின்றி
பங்கு-நீ கேட்டால்
சித்திரை (சிறிய கப்பம்) கொடுப்போம்
வைகாசி யென்றால்
ஆநீ யென வாய் பிளப்போம்
ஆடி வந்தாலும்
ஆவ நீ எம்துணையென்று
புரட்டாசி வழங்கி
ஐப்பசி கொண்டிலோம்
கார் திகைத்தாலென்ன
ஊர் திகைத்தாலென்ன

விடியற்காலை குளியல்
கோயிலில் காலட்சேபம்
பொங்கலும் ஆவின் பாலும்
கொண்டுவந்து வீடு சேர்க்கும்
அன்பரிடமா கேட்கிறீர்
கீசர் குளியல்?

ஆதவா
14-11-2007, 06:10 PM
சிலம்பமும், சிலம்பும் செப்பினால் சிந்தை தெளியும்.

சிலம்பமும் சிலம்பும்
பா ரதியை காணாது போகிறதே
சிந்தை தெளியுமுனு
விந்தை தெளியணுமே!!

தாமரை
14-11-2007, 06:15 PM
இம்மானின்
நெற்றிப்பொட்டை
இட்டவருக்கே
நிறக்குருடோ.... !
தகப்பன்சாமிக்கே
பிரணவம்
பிசகிடுத்தோ.... !

கரும்புள்ளி செம்புள்ளி அலங்காரம்
(பஞ்ச)கல்யாணி மேல் நகர்வலம்
நாட்டாமை தீர்ப்பு!
நிறக்குருடல்ல

தாமரை
14-11-2007, 06:19 PM
பாவம் பரந்தாமன்.
பள்ளி கிடந்தவனை ஏற்கனவே
புள்ளி வைத்தவனை
புள்ளி வைக்கச்சொல்லி
கோதை படுத்தியதை
யாரிடம் சொல்ல..?

எல்லே இளங்கிளியே
இன்னும் உறங்குதியோ

பாடிப் படுத்தியது
கோதையா கோவர்த்தனனா?

சாம்பவி
14-11-2007, 06:23 PM
சிலம்பமும் சிலம்பும்
பா ரதியை காணாது போகிறதே
சிந்தை தெளியுமுனு
விந்தை தெளியணுமே!!

கொம்பில் என்ன ஐயா
ஆணும் பெண்ணும்....
கற்பைப் போல*
பாலையும் பொதுவில் வைப்போம்... !

பொருளாளர் பெண்ணானால்
கதவுப்ப்பட்டை
பொருளாளினி கூறிடுமோ...

கணிப்பொறியாளரினியாக*
விருப்பமில்லை... !
பொறியாளர் போதும்.,... !

வித்யாசம் இல்லையென*
வித்யாவிலாசம் சொன்னீரே... !
சொன்னது மறந்ததோ
அஞ்சுமானே.... !

சாம்பவி
14-11-2007, 06:25 PM
எல்லே இளங்கிளியே
இன்னும் உறங்குதியோ

பாடிப் படுத்தியது
கோதையா கோவர்த்தனனா?

பாடாய் படுத்தி
பாடவைத்தவளை
பாடாவதியாக்கியது
பரந்தாமன் தன்னே..... !

சாம்பவி
14-11-2007, 06:35 PM
சொக்கி சொக்கன் காத்திருக்க*
சொக்கா சொக்கன்
சொக்கியிங்கிருப்பதேனோ....
சொக்குந்தேன் ஊசாது... சொக்காது
சொக்கா சொக்கிக்கு இன்றேனும்
சொக்கிவிடு..... !!!!

தாமரை
14-11-2007, 06:40 PM
பாடாய் படுத்தி
பாடவைத்தவளை
பாடாவதியாக்கியது
பரந்தாமன் தன்னே..... !

பாடாவதியாகியதால் நிம்மதியாய்
படுத்துறங்கினரே ஊர்மக்கள்
பரந்தாமன் சரணேற்றது
ஒருத்தியை
நிம்மதியாய் தூங்க விட்டது
ஊரை

தாமரை
14-11-2007, 06:43 PM
சொக்கி சொக்கன் காத்திருக்க*
சொக்கா சொக்கன்
சொக்கியிங்கிருப்பதேனோ....
சொக்குந்தேன் ஊசாது... சொக்காது
சொக்கா சொக்கிக்கு இன்றேனும்
சொக்கிவிடு..... !!!!

இன்றா? நேற்றா?

தாமரை
14-11-2007, 06:50 PM
கொம்பில் என்ன ஐயா
ஆணும் பெண்ணும்....
கற்பைப் போல*
பாலையும் பொதுவில் வைப்போம்... !

!

வித்யாசம் இல்லையென*
வித்யாவிலாசம் சொன்னீரே... !
சொன்னது மறந்ததோ
அஞ்சுமானே.... !

தொழிற்பால் மரியாதை தேவை
பால்மரியாதை தேவை இல்லை..

வித்யா விலாசம் வைத்துக் கொண்டு ஆதவா என்ன செய்கிறார்?:smilie_abcfra::smilie_abcfra:

பாரதி
14-11-2007, 06:52 PM
உணவின் மேல் தாவும்
உணர்வியல்பு தானே
மான் தான் புலி மீது தாவக்கூடாது!
கொம்பனாயிருந்தாலும்!!


கொம்பில் என்ன ஐயா
ஆணும் பெண்ணும்....
கற்பைப் போல
பாலையும் பொதுவில் வைப்போம்... !

பொருளாளர் பெண்ணானால்
கதவுப்பட்டை
பொருளாளினி கூறிடுமோ...

கணிப்பொறியாளரினியாக
விருப்பமில்லை... !
பொறியாளர் போதும்.,... !

வித்யாசம் இல்லையென
வித்யாவிலாசம் சொன்னீரே... !
சொன்னது மறந்ததோ
அஞ்சுமானே.... !

"கொம்பன்" என்னுமிடத்தில்
வித்தியாசமில்லையா வித்யா...?

சாம்பவி
14-11-2007, 06:52 PM
சொக்கி சொக்கன் காத்திருக்க
சொக்கா சொக்கன்
சொக்கியிங்கிருப்பதேனோ....
சொக்குந்தேன் ஊசாது... சொக்காது
சொக்கா சொக்கிக்கு இன்றேனும்
சொக்கிவிடு..... !!!!


சொக்கி சொக்கன் − Mrs. மீனாட்சி சொக்கநாதன் (சொக்கி −.மீனாட்சி., சொக்கன் − சொக்கநாதன்... ) ..........
காத்திருக்க ........... மாமியார் காத்திருக்க*
சொக்கா சொக்கன் − சொக்காத சொக்கநாதன்....... மாமனார்.....
சொக்கியிங்கிருப்பதேனோ − சொக்கி இங்கு இருப்பது ஏனோ....
சொக்குந்தேன் − சொக்க வைக்கும் தேனாம் தமிழ்
ஊசாது − கெடாது....
சொக்காது − ஆதலினான் சொக்காமல்.........( மன்றத்தில் தானிருக்கும், ஓடி போகாது .. )
சொக்கா − மாமனாரே....!!!!!!!!!
சொக்கிக்கு − மாமியாருக்கு
இன்றேனும் − இந்நன்னாளிலாவது :)
சொக்கி − இதுக்கும் அர்த்தம் சொல்லனுமோ.....
விடு − வீடு செல்க*..... !!!!!!!!!!!!


சொக்குதே மனம்.... ;

சாம்பவி
14-11-2007, 06:57 PM
இன்றா? நேற்றா?

"அந்த நாளே" மறந்து போச்சோ....... ! மாமியாரிடம் சொல்றேன் இருங்கோ..... !
பற்றவைத்தல் (soldering) பல்கலைகழகத்தில் பயின்று, கை வந்த கலையாக்கும்.... !!!!

பாரதி
14-11-2007, 07:01 PM
சொக்கி சொக்கன் காத்திருக்க
சொக்கா சொக்கன்
சொக்கியிங்கிருப்பதேனோ....
சொக்குந்தேன் ஊசாது... சொக்காது
சொக்கா சொக்கிக்கு இன்றேனும்
சொக்கிவிடு..... !!!!

செக்கிலிட்ட சொக்கை
சொக்கி சொக்கு முன்
சொக்கா காப்பாற்று.

தாமரை
14-11-2007, 07:02 PM
"அந்த நாளே" மறந்து போச்சோ....... ! மாமியாரிடம் சொல்றேன் இருங்கோ..... !
soldering தெரியுமாக்கும்..... பற்றவைத்தல் பல்கலைகழகத்தில் பயின்ற , கை வந்த கலையாக்கும்.... !!!!

அவரப்பனே பற்ற வைத்தபின் எவரெம்மையே பற்றி வைக்க இயலும்
மணி 12:00 தாண்டி விட்டது.. அதனாலேயே சொன்னேன்
இன்றல்ல நேற்றென்று.

பாரதி
14-11-2007, 07:06 PM
பற்றவைத்தல் பல்கலைகழகத்தில் பயின்ற , கை வந்த கலையாக்கும்.... !!!!

ஆம். பற்றவைத்தல் பல் கலைக் கழகத்தில் பயின்றவர் நீவிர்.

தாமரை
14-11-2007, 07:07 PM
"கொம்பன்" என்னுமிடத்தில்
வித்தியாசமில்லையா வித்யா...?

கொம்பு என்பது ஆண் விலங்குகளை (எல்லா விலங்குகளிலும் அல்ல) தனித்து அடையாளப்படுத்தும் ஒன்று. கொம்பன் என்று ஆண் யானைகளைக் கூறுவதுமுண்டு.

சாம்பவி
14-11-2007, 07:09 PM
அவரப்பனே பற்ற வைத்தபின் எவரெம்மையே பற்றி வைக்க இயலும்


கலக்கறேள் போங்கோ..... !!!!!!!!


மறுபடியும் தப்பை தப்பாவே பண்ணிட்டு தப்பிவிட்டீராக்கும்.... !

பாரதி
14-11-2007, 07:11 PM
"கொம்பன்" என்னுமிடத்தில்
வித்தியாசமில்லையா வித்யா...?


கொம்பு என்பது ஆண் விலங்குகளை (எல்லா விலங்குகளிலும் அல்ல) தனித்து அடையாளப்படுத்தும் ஒன்று. கொம்பன் என்று ஆண் யானைகளைக் கூறுவதுமுண்டு.

"கொம்பனாயிருந்தாலும்" என்று அழைத்தல் இருபாலுக்கும் பொருந்துமா என்பதை அறியவே இவ்வினா.

தாமரை
14-11-2007, 07:14 PM
கலக்கறேள் போங்கோ..... !!!!!!!!


மறுபடியும் தப்பை தப்பாவே பண்ணிட்டு தப்பிவிட்டீராக்கும்.... !

அவருறங்கும் வரை வரவில்லை
அதன்பின்னோ உறக்கம் வரவில்லை
தமிழ்ச்செல்கள் செரிவூட்டப்படும்போது
தமிழ்ச்செல்வங்கள் ஈட்டப்படும்போது
உறக்கமா கிறக்கமா

தப்பல்ல, தப்பென்றால் அடித்து ஆடுவார்களே!

தாமரை
14-11-2007, 07:17 PM
"கொம்பனாயிருந்தாலும்" என்று அழைத்தல் இருபாலுக்கும் பொருந்துமா என்பதை அறியவே இவ்வினா.

இங்கே ஒருபாலுக்கே பொருந்தும்
ஆணினம் முரட்டுத்தனமும் அதிக வலிமையும் போர்க்குணமும் கொண்டது.
மானென்றால் பெண்ணென்று மட்டும் யாரிங்கு சொன்னது என்று கேள்வி எழுப்பாமல் எழுப்பிடவே கொம்பனென்றாலும் என்று சொல்லி இருந்தேன்.:mini023:

சாம்பவி
14-11-2007, 07:21 PM
அவரப்பனே பற்ற வைத்தபின் எவரெம்மையே பற்றி வைக்க இயலும்
.

ஆயினென்ன....
இம்மாத்திரத்தில் அவரைப்பனையையே பற்ற வைப்போம்....
அவரப்பன் பற்ற வைத்ததை பற்ற வைப்பதெம்மாத்திரம்.... !

பற்ற வைத்தலில் பட்டயம்.... !
கூறுமே கட்டியம்.... !
தமிழ் தாயையும் இப்படித்தானே பற்றினோம்.... ! :)

சாம்பவி
14-11-2007, 07:28 PM
இங்கே ஒருபாலுக்கே பொருந்தும்
ஆணினம் முரட்டுத்தனமும் அதிக வலிமையும் போர்க்குணமும் கொண்டது.
மானென்றால் பெண்ணென்று மட்டும் யாரிங்கு சொன்னது என்று கேள்வி எழுப்பாமல் எழுப்பிடவே கொம்பனென்றாலும் என்று சொல்லி இருந்தேன்.:mini023:

முழுக்க எண்ணெயில் மூழ்கிப் புரண்டாலும்
உடலில் தானே மண்ணொட்ட்டியது....
மீசையில் ஒட்டவில்லையோ....... !

தாமரை
14-11-2007, 07:29 PM
ஆயினென்ன....
இம்மாத்திரத்தில்...
அவரைப்பனையயே பற்ற வைப்போம்....
அவரப்பன் பற்ற வைத்ததை
பற்ற வைப்பதெம்மாத்திரம்.... !

அவரப்பன் பற்ற வைத்தது
அவரின் கையை
(தாரை வார்த்தல்)
விட்டால்தானே மீண்டும் பற்ற வைக்க

சொக்கப்பனையே கொளுத்தினாலும்
சிக்கப்பனல்ல

தாமரை
14-11-2007, 07:31 PM
முழுக்க எண்ணெயில் மூழ்கிப் புரண்டாலும்
உடலில் தானே மண்ணொட்ட்டியது....
மீசையில் ஒட்டவில்லையோ....... !

தொழிற்பால் மரியாதை தேவை
பால்மரியாதை தேவை இல்லை..

கொம்பு என்பது என்ன தொழில்?
எண்ணெயில் புரண்டால் மண்ணொட்டாது
மண்ணிலும் எண்ணெயிலும்
மாறிப்புரண்டால்தான்

தாமரை
14-11-2007, 07:33 PM
பற்ற வைத்தலில் பட்டயம்.... !
கூறுமே கட்டியம்.... !
தமிழ் தாயையும் இப்படித்தானே பற்றினோம்.... ! :)

பற்றுக பற்றற்றான் பற்றினை. பற்றினால், பற்றினார் பற்றினால் பற்றும் பற்றின் பற்று

சாம்பவி
14-11-2007, 07:34 PM
அவரப்பன் பற்ற வைத்தது
அவரின் கையை
(தாரை வார்த்தல்)
விட்டால்தானே மீண்டும் பற்ற வைக்க

சொக்கப்பனையே கொளுத்தினாலும்
சிக்கப்பனல்ல

சொக்கப் பனையையே கொளுத்தோம்
சொக்கப்பனையெப்படி...... !!!!
ஷிவ ஷிவா..... !

தாமரை
14-11-2007, 07:37 PM
சொக்கப் பனையையே கொளுத்தோம்
சொக்கப்பனையெப்படி...... !!!!
ஷிவ ஷிவா..... !

சொக்கப்பனை கொளுத்தவேண்டுமா?
அடிமுடி தேடிக் கிளம்பும்
ஆதியும் அந்தமுமில்லா
அருட்பெரும் ஜோதியாகி
சொக்கப்பன்
கொழுந்து விட்டு எரிவான்

சாம்பவி
14-11-2007, 07:52 PM
சொக்கப்பனை கொளுத்தவேண்டுமா?
அடிமுடி தேடிக் கிளம்பும்


சட்டென்று அப்படி கிளம்பிவிட முடியாதே.....
காஷாயம் வாங்கத்தான் ஆசை.... ! நெஞ்சில்
கஷாயமாய் இன்னும் என்னென்னவோ பாசை..... !

விட்டுட்டுப் போனாலும்
விட்டுமோ உறவு....

கவ்வும் ஆசையோடு சீக்கிரமே
ஔவையாக* வேண்டுகிறேன்

தாமரை
14-11-2007, 08:01 PM
சட்டென்று அப்படி கிளம்பிவிட முடியாதே.....
காஷாயம் வாங்கத்தான் ஆசை.... ! நெஞ்சில்
கஷாயமாய் இன்னும் என்னென்னவோ பாசை..... !

விட்டுட்டுப் போனாலும்
விட்டுமோ உறவு....

கவ்வும் ஆசையோடு சீக்கிரமே
ஔவையாக* வேண்டுகிறேன்


ஆயின் ....
bachelorsஐ ஒத்துக் கொண்ட இவ்வுலகம்
spinistersஐ ஒத்துக்கொள்வதில்லையே

ஔவைக்கு மாமனாரா!
அடேங்கப்பா பதவி உயர்வு

சொக்கப்பனை கொழுத்த
முதல் ஷோக்கப்பனை கொழுத்துங்களேன்

காஷாயம் வேண்டாம்
முழுச்சாயமும் கலைத்திருங்கள்

:mini023::mini023:ஒத்துக்கொள்ளப்படுவதற்காக வாழ்க்கையா
ஓதப்படுவதற்காக வாழ்க்கையா:mini023:

வெறும் ஔவையா? இல்லை ஆனைக்கு அல்வா கொடுத்த ஔவையா?

சாம்பவி
14-11-2007, 08:03 PM
தப்பல்ல, தப்பென்றால் அடித்து ஆடுவார்களே!

தப்படித்தும் தப்பு தப்புவது எப்படி.... !
தப்பாயடித்தால் தப்பு தப்புமோ.... ! ( கடைசி தப்பு ...... மண்டகப்படி....) ....!

தாமரை
14-11-2007, 08:08 PM
தப்படித்தும் தப்பு தப்புவது எப்படி.... !
தப்பாயடித்தால் தப்பு தப்புமோ.... ! ( கடைசி தப்பு ...... மண்டகப்படி....) ....!

தப்படித்தாலும் தப்பு தம்பட்டம் அடித்துக் கொள்கிறதே!
தப்பாய்(தப்பின் தாய்) அடித்தால் தப்பு தப்பாது.. சொதப்பும்

சாம்பவி
14-11-2007, 08:11 PM
தப்படித்தாலும் தப்பு தம்பட்டம் அடித்துக் கொள்கிறதே!
தப்பாய்(தப்பின் தாய்) அடித்தால் தப்பு தப்பாது.. சொதப்பும்

சொதப்பினாலும் தப்பு தப்பும்.... ( நையப் புடைக்கும்... கேட்போர் புடைப்பாரே...! )
மாமியார் உங்களை தப்புறாங்களே அப்படி..... !

தாமரை
14-11-2007, 08:16 PM
சொதப்பினாலும் தப்பு தப்பும்.... ( நையப் புடைக்கும்.... ! )
மாமியார் உங்களை தப்புறாங்களே அப்படி..... !

தப்பு = தாமரை
தப்பு தப்பினால் நானும் தப்பிவிடுவேன் அல்லவா
தப்பறது மாமியாரென்றால் தப்பிப்பது சாமி-யார்

சாம்பவி
14-11-2007, 08:31 PM
தொழிற்பால் மரியாதை தேவை
பால்மரியாதை தேவை இல்லை..


எமக்குத் தொழில் கவிதையெனில்
கவிஞி, கவிஞை......இதெல்லாம்
எதற்கோ.... !

கவிஞர் தாமரை.....
போதாதோ...... !!!!!!!!



கவிஞர் தாமரை...... தாங்களல்ல..... ! வசீகரனை கவிதையில் பாடினவர்.... !

அக்னி
14-11-2007, 08:31 PM
தப்பு = தாமரை
தப்பு தப்பினால் நானும் தப்பிவிடுவேன் அல்லவா
தப்பறது மாமியாரென்றால் தப்பிப்பது சாமி-யார்
தா மரை தப்பியது சிறு(த்) தையிடமா..?

சாம்பவி
14-11-2007, 08:37 PM
தா மரை தப்பியது சிறு(த்) தையிடமா..?

பதம் பிரிக்காதிருந்தால் பதம் பார்த்திருக்கலாம்...
பிரித்ததால்., தானே பதமாகிவிட்டதுவோ..... !

அக்னி
14-11-2007, 08:46 PM
பதம் பிரிக்காதிருந்தால் பதம் பார்த்திருக்கலாம்...
பிரித்ததால்., தானே பதமாகிவிட்டதுவோ..... !
பதம் பார்க்காவிட்டால் பதம் தெரியுமோ..?

தமிழ்பாகுபதம்...
ருசிக்கப் பயம்... ரசிக்கின்றேன்...

அமரன்
14-11-2007, 08:47 PM
பதம் பார்க்காவிட்டால் பதம் தெரியுமோ..?

தமிழ்பாகுபதம்...
ருசிக்கப் பயம்... ரசிக்கின்றேன்...
தமிழ் பாகு பதம் ருசிக்க எதுக்குப் பயம்

அக்னி
14-11-2007, 08:50 PM
தமிழ் பாகு பதம் ருசிக்க எதுக்குப் பயம்
நா வன்மை போதாது... அதனால்தான்... பதம் பார்க்கின்றேன்...

சாம்பவி
14-11-2007, 08:56 PM
அக்னிக்குப் பயமா...... !
அக்னியைப் பதம் பார்க்க இயலுமா... !
அல்வா கிண்டுகிறீரே.... !

கிலியுதருங்கள்.... !
கிண்டித் தாருங்கள்....
சேர்ந்து பதம் பார்ப்போம்... !!
பதமாய் பதம் சேர்ப்போம்,.,,, !

அக்னி
14-11-2007, 09:27 PM
அக்னி நேரிடையாக கிண்டினால் அல்வா பதமாகுமா..?
தீய்ந்து பழுதாகுமா?

அக்னி தமிழில் அற்பப்பதர் என்று,
சொற்சிலம்பம் சொல்கின்றதே...
மல்லுக்கு வர தில் இருக்கு... சொல்...???

சாம்பவி
14-11-2007, 09:35 PM
அக்னி நேரிடையாக கிண்டினால் அல்வா பதமாகுமா..?
தீய்ந்து பழுதாகுமா?

அக்னி தமிழில் அற்பப்பதர் என்று,
சொற்சிலம்பம் சொல்கின்றதே...
மல்லுக்கு வர தில் இருக்கு... சொல்...???

பச்சை மரம் பற்றத்தான் நாழியாகும்.... !
பதர் சட்டென்றுப் பற்றிக் கொள்ளும்... !
சாம்பவியும் பதர் தான்.... !
பற்றுவோம் வாருங்கள்.... !
பற்றி பற்ற வைப்போம்... !
பற்றிவிடும் பாருங்கள்.... !

சாம்பவி
14-11-2007, 09:39 PM
மல்லுக்கு வர தில் இருக்கு... சொல்...???

தமிழில் இல்லாச் சொல்லா... !
தில் போறுமே..... !
சொல் ., சொல்லாமல் வந்து கொட்டுமே.... !

தாமரை
15-11-2007, 01:53 AM
எமக்குத் தொழில் கவிதையெனில்
கவிஞி, கவிஞை......இதெல்லாம்
எதற்கோ.... !

கவிஞர் தாமரை.....
போதாதோ...... !!!!!!!!



கவிஞர் தாமரை...... தாங்களல்ல..... ! வசீகரனை கவிதையில் பாடினவர்.... !

கவிதாயினி விட்டு விட்டாயே கவி தாய் நீ:mini023: கவிதையாய் நீ!:icon_b:

யாருக்குப் போதவில்லை என்றுதான் புரியவில்லை.:mini023:

தாமரை
15-11-2007, 01:57 AM
தா மரை தப்பியது சிறு(த்) தையிடமா..?

மாமனை நாராக்கினாலும்
மலர் அணைத்து
அவள் குடுமி பிடிப்பேன்


அது சிறு தை இல்லை
சிறு சா(ம்ப)வி.

தப்புவது எம்மிடம் இல்லை
எம்தொழில்
தப்பு விப்பது:lachen001:

தாமரை
15-11-2007, 02:23 AM
நா வன்மை போதாது... அதனால்தான்... பதம் பார்க்கின்றேன்...


பதம் பிடித்து
பதமாடி
பதம் சொல்லி
பதம் கண்டால்
பதவி

தாமரை
15-11-2007, 02:29 AM
பச்சை மரம் பற்றத்தான் நாழியாகும்.... !
பதர் சட்டென்றுப் பற்றிக் கொள்ளும்... !
சாம்பவியும் பதர் தான்.... !
பற்றுவோம் வாருங்கள்.... !
பற்றி பற்ற வைப்போம்... !
பற்றிவிடும் பாருங்கள்.... !


அக்னியில் பதர் ஆகுமே சாம்ப(ல)விந்து

பற்றவைக்கும் பல்கலைக் கழகத்தில்
பட்டம் படிப்பவர்தான்

ஓவியன்
15-11-2007, 03:15 AM
ஆகா, ஆகா!!

பாரதி அண்ணாவும் களமிறங்கியாச்சா...??

அருமை, அருமை...!!
அசத்துங்க கவிஞர்களே நாம் கற்க வேண்டியுளது பல உங்களனைவரிடமிருந்து...!! :)

பென்ஸ்
15-11-2007, 03:20 AM
சாம்பவி, தாமரை , பாரதி

சொற்சிலம்பம் சிறப்பாக செல்கிறது....

என்னை போன்ற சிறியவர்களுக்கு பல வரிகளும், வார்த்தைகளும் புதிது, புரியவில்லை.... நண்பர்கள் பதித்த பின்னே அதை விளக்கலாமே....!!!!!

தாமரை
15-11-2007, 04:09 AM
சாம்பவி, தாமரை , பாரதி

சொற்சிலம்பம் சிறப்பாக செல்கிறது....

என்னை போன்ற சிறியவர்களுக்கு பல வரிகளும், வார்த்தைகளும் புதிது, புரியவில்லை.... நண்பர்கள் பதித்த பின்னே அதை விளக்கலாமே....!!!!!

அதற்கென்று ஒரு திரி ஆரம்பியுங்களேன். இங்கே விவாதித்தால் நீர்த்து விடலாம்.

ஓவியன்
15-11-2007, 04:55 AM
அதற்கென்று ஒரு திரி ஆரம்பியுங்களேன். இங்கே விவாதித்தால் நீர்த்து விடலாம்.

தனியே ஒரு திரி ஆரம்பித்தாகிவிட்டது அண்ணா..!!

சொற்சிலம்ப சொற்பதங்கள்..!! (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=297418&posted=1#post297418)

சாம்பவி
15-11-2007, 07:50 AM
கவிதாயினி விட்டு விட்டாயே கவி தாய் நீ:mini023: கவிதையாய் நீ!:icon_b:


மாமனாரின் சீர்தனமாய்..
முதற்குட்டே மோதிரக்குட்டோ..... !!

தாமரை
15-11-2007, 07:54 AM
மாமனாரின் சீர்தனமாய்..
முதற்குட்டே மோதிரக்குட்டோ..... !!

மோதுற குட்டும் அடுத்த பதிவில் இருந்ததைப் பார்க்கலையோ?

சாம்பவி
15-11-2007, 08:04 AM
எம்தொழில்
தப்பு விப்பது:lachen001:

தப்பு விற்கும் தப்பரே... !
முதற்தப்பை மருமாளுக்கே விற்றீரோ.... !
தப்படிக்கப் தெரியாததால் யானும்
தப்புவிக்கவோ..... !
குடிசைத் தொழிலாய்
குலத்தொழில் செய்வோமோ.... !


தச்சு செய்பவர் தச்சரானால்... தப்பு செய்பவர் தப்பர் தானே... ;) தப்பு விற்றாலும் தப்பர் தாம்... !

அமரன்
15-11-2007, 08:06 AM
மோதுற குட்டும் அடுத்த பதிவில் இருந்ததைப் பார்க்கலையோ?
மோவிலுதிரம் உதிரும் என்பதாலோ

மோ+உதிரம்=??????

சாம்பவி
15-11-2007, 08:14 AM
மாமனை நாராக்கினாலும்
மலர் அணைத்து
அவள் குடுமி பிடிப்பேன்



மாமன் நாரில் மலரிணைத்துத் தரும் வேளை
மறுத்திடுமோயென் கூந்தல்.... !
இலக்கணம் மாறி.......
(மாம)நாரோடிணைந்ததால் இந்தக் காட்டுப்பூவும்
மணம் பெற்றதோ.... !!