PDA

View Full Version : சுகமான சுவாசம் தேடி

இனியவள்
09-06-2007, 09:16 PM
உன்னால் காயம் பட்ட
எனது இதயம்
சுகமான சுவாசம் தேடி
விம்மியழுகிறது

அமரன்
17-07-2007, 10:08 AM
அடுத்த சகவாசத்துக்கு ஆயத்தமாகிறதோ......

பாராட்டுக்கள்...இப்படிச் சின்ன சின்ன கவிதைகள் படிக்கும்போதும் வடிக்கும்போதும் திறமை வளர்கின்றது என நினைகின்றேன்..

இனியவள்
17-07-2007, 10:10 AM
அடுத்த சகவாசத்துக்கு ஆயத்தமாகிறதோ......
பாராட்டுக்கள்...இப்படிச் சின்ன சின்ன கவிதைகள் படிக்கும்போதும் வடிக்கும்போதும் திறமை வளர்கின்றது என நினைகின்றேன்..

நன்றி அமர்

ம்ம் ஆமாம் அமர் சின்ன சின்ன கவிதைகளில்
தான் நிறைய திறமை வளர்ந்து கொண்டு போய்
கொண்டே இருக்கு...

சிவா.ஜி
17-07-2007, 10:17 AM
உண்மையை சொன்னால் எனக்கு இந்தக்கவிதை பிடிக்கவில்லை. மன்னிக்கவும் இனியவள் மனதில் பட்டதை சொன்னேன்.

இனியவள்
17-07-2007, 10:22 AM
உண்மையை சொன்னால் எனக்கு இந்தக்கவிதை பிடிக்கவில்லை. மன்னிக்கவும் இனியவள் மனதில் பட்டதை சொன்னேன்.

ஆஹா சிவா உங்கள் வெளிப்படையான கருத்தை இருகரம் நீட்டி வாரவேற்கின்றேஎன் சிவா..இதில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு அவசியமேது... :icon_b:

இதில் எதற்கு மன்னிப்பு

உன்னால் காயம் பட்ட
எனது இதயம் சுகமான
சுவாசம் தேடி விம்மியழுகின்றது
என்றால் இன்னொர் துணையைத்
தேடி என்று மட்டும் பொருள்
பாடாது ஒரு நண்பியாக இருக்கலாம்
இல்லாவிடின் தாயின் மடியாகவும்
இருக்கலாம் எந்தக் கண்ணோட்டத்தில்
நோக்குகின்றோமோ அந்தக் கண்ணோட்டத்தில்
பதில் தரும்

lolluvathiyar
17-07-2007, 10:28 AM
சுவாசமே தேடாமல் விட்டு விட்டால் காயமே படாது அல்லவா?

சிவா.ஜி
17-07-2007, 10:33 AM
நன்றி இனியவள். காயம்பட்ட இதயத்துக்கு மருந்து ஆறுதல் தரும் இன்னொரு இதயமாகத்தானே இருக்கமுடியும். அது நீங்கள் சொன்னதுபோல் தோழமையுடையதாக இருக்கலாம் அல்லது தாய்மையுடையதாக இருக்கலாம். இருப்பினும் இனியவள் கவிதையின் எந்த அழகும் இந்தக் கவிதையில் இல்லை என்பதே என் தாழ்மையான கருத்து.

இனியவள்
17-07-2007, 10:38 AM

இருக்கலாம் சிவா..

நன்றி உங்கள் கருத்துக்கு.. எனது ஆரம்ப கால
கவிதைகளில் இதுவும் ஒன்று இப்பொழுது தான்
கொஞ்சம் கொஞ்சம் சிறப்பாக எழுத முயற்சித்துக்
கொண்டிருக்கின்றேன்..உங்களுடைய இக் கருத்து
எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகின்றது தோழரே:icon_b:

kavitha
04-04-2008, 10:44 AM
சுவாசமே தேடாமல் விட்டு விட்டால் காயமே படாது அல்லவா?
காயமே இது பொய்யடா..
வெறும் காற்றடைத்த பையடா.. னு அந்தகாலத்திலேயே சொல்லிட்டாங்களே வாத்தியார்.

காயம் பட்ட இதயம் நீளமாக மூச்சிழுத்து தேம்பி அழும்.அதற்கு சுவாசம் கூடுதலாக வேண்டும். பாசம், நேசம், பரிவு அத்தனையும் கூடுதலாகத் தேவைப்படும் நேரம் இது. கவிதை எதார்த்த நிகழ்வு.
மிக ரசித்தேன் இனியவள். தொடர்ந்து எழுதுங்கள்.