PDA

View Full Version : ஜக்கூ பாகம் 3



ஆதவா
09-06-2007, 08:28 PM
சில நேரங்களில்
செவிடர்களாகிறோம்
பிச்சைக்காரனின் குரல்.

சிவா.ஜி
10-06-2007, 06:11 AM
செவிடர்களாக மட்டுமா..? நாம் போடாத வேஷங்களா..? செவிட்டிலடிக்கும் கருத்து ஆதவா.
செலக்டிவ் அம்னீஷியா
கடன்காரனைப் பார்க்கும்போது!

ஆதவா
10-06-2007, 06:13 AM
உண்மைதான் சிவா.ஜி. நன்றி... கவிதை அருமை.. இரு வரிகள் பலமான அர்த்தம்.

சுட்டிபையன்
10-06-2007, 06:42 AM
அதுமட்டுமா
சிலவேளைகளில்
பஸ்ஸில் ஊனமுற்றவர்களை
காணும் போது
நானும் ஊனமுற்றவராகிறோம்

ஷீ-நிசி
10-06-2007, 08:07 AM
இன்னா நடக்குது இங்கே!

அக்னி
10-06-2007, 08:09 AM
இன்னா நடக்குது இங்கே!
அதுதானுங்க ஜக்கூ...

ஆதவா
10-06-2007, 08:09 AM
ஒரு சமூக அவலத்தை
ஜக்கூவில் சொல்லும் முயற்சி.

சுட்டிபையன்
10-06-2007, 08:14 AM
அது என்னங்க ஜக்கு?

சிவா.ஜி
10-06-2007, 08:16 AM
இன்னா செய்வதும்
இனியவை செய்வதும்
கடவுள்பாதி மனிதன்பாதி
மனதின் வேலை!

ஆதவா
10-06-2007, 08:16 AM
அது ஆதவனின் புதிய கவிதை இலக்கணம்..

ஹைக்கூவிற்கு மாறாக ஜக்கூ!

இலக்கணங்களை உடைத்து புது இலக்கணம் படைத்து புதியவர்களுக்கு சிக்கல் தீர்ப்பது...

ஷீ-நிசி
10-06-2007, 08:24 AM
மன்னிக்கனும், நான் இதுவரை அதை ஜக்கு என்றே படித்தேன்... ஹைக்கூனா இப்பிடித்தானே! எனக்கு 'ஐ' 'ஜ'வாகவே தெரிந்தது... ஹி ஹி

ஆதவா
10-06-2007, 08:27 AM
மன்னிக்கனும், நான் இதுவரை அதை ஜக்கு என்றே படித்தேன்... ஹைக்கூனா இப்பிடித்தானே! எனக்கு 'ஐ' 'ஜ'வாகவே தெரிந்தது... ஹி ஹி

நீங்கள் படித்தது சரிதான்.. இது ஜக்கூ!! ஐ நான் போடவேயில்லை.

அமரன்
10-06-2007, 12:49 PM
பிச்சைக்காரனும் செல்வந்தனே
தட்டில் விழுந்த சில்லரை
சிரிக்கும்போது..

மனோஜ்
10-06-2007, 03:37 PM
மன்றம் தண்ணீர் பஞ்சம் தீர்ந்தது
இங்கு தத்துவ மழை கொட்டுவதால்
அருமை ஆதவா நன்றி நண்பர்களுக்கும்

ஷீ-நிசி
10-06-2007, 03:39 PM
குருடர்களும்
சினிமா பார்க்கிறார்கள்....
தங்கள் கனவுத்திரையில்!

சிவா.ஜி
11-06-2007, 10:27 AM
நேற்று புதுமனை புகுவிழா
இன்று சேட்டுக்கடையில் வீட்டுப்பத்திரம்
நாளை மகளின் அவசரக்கல்யாணம்!

இனியவள்
11-06-2007, 10:31 AM
காற்றின் வேகத்தை விட
விரைவாக பரவுகின்றது வதந்தி
அந்த வதந்தியால் வந்த விபரிதத்தை
அறிவார் யாரோ

ஆதவா
11-06-2007, 07:25 PM
நல்ல கவிதைகள்.. தொடருங்கள்.