Log in

View Full Version : ஜக்கூ பாகம் 2.



ஆதவா
09-06-2007, 08:26 PM
நீயும்
நானும்
காதலித்துக் கொண்டிருந்தோம்
மணமாகும் வரை.

அமரன்
09-06-2007, 08:27 PM
மணமான பின்னரும்
காதலிக்கின்றேன்
(நம்) வாழ்க்கையை

ஆதவா
09-06-2007, 08:34 PM
மணமான பின்னரும்
காதலிக்கின்றேன்
(நம்) வாழ்க்கையை

வாழ்க்கையைக் காதலித்தென்ன லாபம்?
வாழ்க்கைத் துணைவியை
தூண்டிலிடுவதா?

இனியவள்
09-06-2007, 08:35 PM
நீயும்
நானும்
காதலித்துக் கொண்டிருந்தோம்
மணமாகும் வரை.

நானும் நீயும் காதலித்து கொண்டிந்தோம்
மரணம் எம்மை அழைக்கும் வரை

ஆதவா
10-06-2007, 05:32 AM
நானும் நீயும் காதலித்து கொண்டிந்தோம்
மரணம் எம்மை அழைக்கும் வரை

எங்கேயோ சிலர்
சொல்லிக் கொள்கிறார்கள்
மரணம்வரை காதல்

சிவா.ஜி
10-06-2007, 05:52 AM
நானும் நீயும்
காதலித்தோம்
நானாய் நீயாய் இருக்கும் வரை

ஆதவா
10-06-2007, 06:00 AM
நானும் நீயும்
காதலித்தோம்
நானாய் நீயாய் இருக்கும் வரை

நானாய் இருக்கும்வரை
சாதலில்லை
நீயாய் இருக்கும்வரை
காதலில்லை.

சுட்டிபையன்
10-06-2007, 06:02 AM
நானும் நீயும் காதலித்தோம்
இருவர் கணவன் மனைவிவும்
அறியும்வரை :D:D:D

ஆதவா
10-06-2007, 06:04 AM
நானும் நீயும் காதலித்தோம்
இருவர் கணவன் மனைவிவும்
அறியும்வரை :D:D:D

நானும் நீயும் காதலித்தோம்
இருவரும் கணவன் மனைவி
ஆகும் வரை

(இதத்தான் முதல் கவிதையில் சொல்லியிருப்பேன். :D )

சுட்டிபையன்
10-06-2007, 06:06 AM
ஹீ ஹீ முதல் கவிதையே இப்போதான் புரிஞ்சிருக்கு :D

சிவா.ஜி
10-06-2007, 06:08 AM
நானாய் இருக்கும்வரை
சாதலில்லை
நீயாய் இருக்கும்வரை
காதலில்லை.
நாமாய் இருப்போம்
காதலுக்கு சாவில்லை!

ஆதவா
10-06-2007, 06:09 AM
நாமாய் இருப்போம்
காதலுக்கு சாவில்லை!

நாமாய் இருந்தால், இல்லாவிடினும்
காதலுக்கு சாவில்லை.
அது நம் காதலில்லை.

சிவா.ஜி
10-06-2007, 06:20 AM
காதலோடு வாழ்வோம்
சாவில்லை நமக்கு!

ஆதவா
10-06-2007, 06:28 AM
காதலோடு வாழ்வோம்
சாவில்லை நமக்கு!

சாதலில்லா
காதல் ஏது உலகினில்?

இனியவள்
10-06-2007, 07:44 AM
சாதலில்லா
காதல் ஏது உலகினில்?

காதல் நினைவுகள் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கும்
எனவே காதலுக்கு மரணம் இல்லை

அக்னி
10-06-2007, 07:46 AM
காதலுக்கு மரணம் இல்லைதான்...
ஆனால்,
மரணிக்காத காதலர் உண்டோ..?

சிவா.ஜி
10-06-2007, 07:49 AM
காதலுக்கு மரணம் இல்லைதான்...
ஆனால்,
மரணிக்காத காதலர் உண்டோ..?

அதனால்தான் காதலால் இணந்து காதலாகவே மாறிவிட்டால் காதலோடு சேர்ந்து காதலர்க்கும் மரணமில்லையல்லவா?

சுட்டிபையன்
10-06-2007, 07:51 AM
அடடா காதல் அனுபவஸ்தார்கள்
நடத்துங்கள் நடத்துங்கள்

ஆதவா
10-06-2007, 07:56 AM
காதல் நினைவுகள் மூலம் வாழ்ந்து கொண்டு இருக்கும்
எனவே காதலுக்கு மரணம் இல்லை


காதலுக்கு மரணம் இல்லைதான்...
ஆனால்,
மரணிக்காத காதலர் உண்டோ..?

ஒவ்வொரு முறையும்
மரணிக்கிறது காதல்
பலரால்
மீண்டெழுகிறது
சிலரால்.

சிவா.ஜி
10-06-2007, 07:58 AM
மீண்ட காதல் மரணிப்பதும்,மாண்ட காதல் உயிர்த்தெழுவதும் அந்த காதலினாலேயன்றி காதலர்களால் அல்ல.

ஆதவா
10-06-2007, 07:59 AM
மீண்ட காதல் மரணிப்பதும்,மாண்ட காதல் உயிர்த்தெழுவதும் அந்த காதலினாலேயன்றி காதலர்களால் அல்ல.

காதலர்களால் வருவது
காதல்
காதலர்களால் வருவது
சாதல்
இதில் காதலுக்கேது
காதல்?

சிவா.ஜி
10-06-2007, 08:04 AM
காதலர்களால் வருவது
காதல்
காதலர்களால் வருவது
சாதல்
இதில் காதலுக்கேது
காதல்?

காதலர்களால் வருவதல்ல காதல்
காதலருக்கு வருவது காதல்
அப்படியேதான் சாதல்
காதலியை காதலி
காதலனை காதலி
காதலும் காதலிக்கப்படும்

ஆதவா
10-06-2007, 08:08 AM
காதலர்களால் வருவதல்ல காதல்
காதலருக்கு வருவது காதல்
அப்படியேதான் சாதல்
காதலியை காதலி
காதலனை காதலி
காதலும் காதலிக்கப்படும்

காதலர்கள் இன்றி காதலேது?
ஆக
காதலர்களால்
காதலர்களுக்கு
வருவது
காதல்.

சிவா.ஜி
10-06-2007, 08:12 AM
காதலர்கள் இன்றி காதலேது?
ஆக
காதலர்களால்
காதலர்களுக்கு
வருவது
காதல்.

வருவதுதான் காதலெனில் வராது போகட்டும்
இதயத்தில் இருப்பதுதான் காதலெனில்
இருக்கட்டும்,இருக்கும்

ஆதவா
10-06-2007, 08:14 AM
வருவதுதான் காதலெனில் வராது போகட்டும்
இதயத்தில் இருப்பதுதான் காதலெனில்
இருக்கட்டும்,இருக்கும்

அன்போ டன்பியைந்ததே
காதல் அன்றி
ஒற்றை இதயம் காதலல்ல.

வருவது ஒருபால் அன்பு
வந்தால் அதுவே காதலெனும் பூ!

சிவா.ஜி
10-06-2007, 08:20 AM
அன்போ டன்பியைந்ததே
காதல் அன்றி
ஒற்றை இதயம் காதலல்ல.

வருவது ஒருபால் அன்பு
வந்தால் அதுவே காதலெனும் பூ!

காதலெனும் பூ
வளரத்தேவை அன்பு
அதை பாய்க்க்கத்தேவை இதயம்
பறிக்கத்தேவை பார்வை

ஆதவா
10-06-2007, 08:25 AM
காதலெனும் பூ
வளரத்தேவை அன்பு
அதை பாய்க்க்கத்தேவை இதயம்
பறிக்கத்தேவை பார்வை

காதலெனும் பூ பாய்க்க
இதயமென்றால்
அன்பு எங்கே இருக்கும்?
பறிக்க பார்வை என்றால்
கண்கள் எதற்கிருக்கும்?

சிவா.ஜி
10-06-2007, 08:30 AM
காதலெனும் பூ பாய்க்க
இதயமென்றால்
அன்பு எங்கே இருக்கும்?
பறிக்க பார்வை என்றால்
கண்கள் எதற்கிருக்கும்?

அன்பை பாய்க்கத்தான் இதயம்
காதல் பூவை பறிக்கத்தான் பார்வை
கண்களும் இருக்கும் பார்வையும் இருக்கும்
அன்பும் இருக்கும் காதலும் இருக்கும்!

ஆதவா
10-06-2007, 08:32 AM
அன்பை பாய்க்கத்தான் இதயம்
காதல் பூவை பறிக்கத்தான் பார்வை
கண்களும் இருக்கும் பார்வையும் இருக்கும்
அன்பும் இருக்கும் காதலும் இருக்கும்!

அன்பு பாய்க்க என்றால்
அன்பிருக்கும் இடமேது?
பறிக்கத்தான் பார்வை என்றால்
கண்களுக்கு இடமேது?

சிவா.ஜி
10-06-2007, 08:48 AM
அன்பு பாய்க்க என்றால்
அன்பிருக்கும் இடமேது?
பறிக்கத்தான் பார்வை என்றால்
கண்களுக்கு இடமேது?

அன்பிருக்க இதயமன்றி இடமேது?
இங்கிருந்து அங்கு பாயவில்லையெனில்
காதல் மலர்வதேது?
கண்களின்றி பார்வையேது?
பார்வையின்றி பரிமாற்றங்கள் ஏது?

ஓவியா
10-06-2007, 12:41 PM
அன்னைத்து கவிதைகளும் அருமை. கவிஞர்களுக்கு பாராட்டுக்கள்..

அமரன்
10-06-2007, 12:55 PM
அன்னைத்து கவிதைகளும் அருமை. கவிஞர்களுக்கு பாராட்டுக்கள்..
ஏங்க ஓவி. உங்ககிட்ட இருந்தும் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கோம்.

ஓவியா
10-06-2007, 01:10 PM
ஏங்க ஓவி. உங்ககிட்ட இருந்தும் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கோம்.

அனைத்து கவிதைகளையும் படித்ததும் நானும் ஒரு கவிதை எழுத முயன்றேன்... அxxxxxx மட்டுமே வந்தது, விட்டு விட்டேன்..

ஒரே காதல் வாசம், :mad: