PDA

View Full Version : லிகர ளிகர ழிகர கிறுக்கல்

அமரன்
09-06-2007, 05:45 PM
கிளிகள் விளிக்கையில்
தளிர்க்கல.
தளிர்க்கையில் கிளிகள்
விளிக்கல

கிலியுடன் சலிக்கையில்
ஜொலித்தது
ஜொலிக்கையில்மூளியும்
சிலிர்த்தது

ஒளிர்கையில் களிப்புடன்
செழித்தது
செழிக்கையில்கலியினால்
மழித்தது

விழிகளில் துளிர்கையில்
வலிக்கலை
வலிக்கையில் விழிகளில்
துளிர்த்தது

குழிதனை வலியுடன்
பிழிந்தது
பிழிகையில் பொழிப்பது
பொழிந்தது

விகடன்
09-06-2007, 05:48 PM
கிலியுடன் சலிக்கையில்
ஜொலித்தனை
ஜொலிக்கையில் மூளியும்
சிலிர்த்தது

ஏனையவை விளங்குவதுபோல இருந்தாலும் இந்த பகுதிமட்டும் விளங்கவே இல்லை அமரன். தயவு செய்து...

இன்பா
09-06-2007, 05:49 PM
அமரனே இப்படி எல்லாம் கலக்குவீங்களா?
எனக்கு தெறியலையே சாமி...

மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்
நன்றி

அமரன்
09-06-2007, 05:57 PM
ஏனையவை விளங்குவதுபோல இருந்தாலும் இந்த பகுதிமட்டும் விளங்கவே இல்லை அமரன். தயவு செய்து...
விளக்குகின்றேன் ஜாவா!
உங்களுக்கு விளங்கியவற்றை முதலில் பதியுங்களேன்.
பின்னூட்டத்திற்கு நன்றி ஜாவா.

இணைய நண்பன்
09-06-2007, 06:53 PM
அடடா...பிரமாதம்.இலக்கிய நயம் மிகுந்த கவி வரிகள்.

அமரன்
09-06-2007, 06:54 PM
அடடா...பிரமாதம்.இலக்கிய நயம் மிகுந்த கவி வரிகள்.
இது நேற்று மன்றத்தில் படித்த பாடத்தின் விளைவு இகராம்....நன்றி....

விகடன்
09-06-2007, 06:59 PM
விளக்குகின்றேன் ஜாவா!
விளக்குங்கள். அதைத்தான் எதிர்பார்த்தேன்

உங்களுக்கு விளங்கியவற்றை முதலில் பதியுங்களேன்.

இதுதான் ஆப்பு எங்கிறதா அமரன்?

அந்த வரிகளைமட்டும் விளக்குங்கள். எனக்கு விளங்கியவற்றுடன் தருகிறேன்.

அமரன்
09-06-2007, 07:05 PM
கிலியுடன் சலிக்கையில்
ஜொலித்தனை
ஜொலிக்கையில்மூளியும்
சிலிர்த்தது
காதல் கிடைக்காதா என்ற கிலியில் சலிப்படைகையில் நீ என்கண்முன் ஜொலித்தாய்.
அப்படி நீ ஜொலிக்கும்போது என் மூளையில் மூளி சிலிர்த்தது. உணர்வு உதித்தது...
இப்போ உங்க கருத்தைச் சொல்லுங்க ஜாவா.

சிவா.ஜி
10-06-2007, 04:38 AM
ஆஹா அமரா அழகான வார்த்தை விளையாட்டு.ழவும், லவும்,ளவும் கூடிகும்மியடிக்கும் கவிதை. வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அர்த்தமும் இணையும்போது அதன் சுவையே தனி.

குழிதனை வலியுடன்
பிழிந்தது
பிழிகையில் பொழிப்பது
பொழிந்தது
இந்த வரிகளில் குழி என்பது இதயத்தைதானே குறிக்கிறது? பொழிப்பது பொழிந்தது என்றால் கண்ணீரா?

விகடன்
10-06-2007, 05:03 AM
கண்கள் பார்க்கையில் காதல் மலரவில்லை. காதல் மலரும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

-------
அமரனின் விளக்கம்

காதல் கிடைக்காதா என்ற கிலியில் சலிப்படைகையில் நீ என்கண்முன் ஜொலித்தாய்.
அப்படி நீ ஜொலிக்கும்போது என் மூளையில் மூளி சிலிர்த்தது. உணர்வு உதித்தது...
-------

காதலுடன் இருக்கையில் இன்பம் அளவின்றி வளர்ந்தது. அப்படியாக வளர்கையில் பிற இன்னல்களால் அதற்கு பங்கமுண்டாகியது.

பழய காலங்களை எண்ணும்போது சிறையாக இருந்தது, அந்த வலி உறுத்துகையில் கண்களில் நீர் அரும்பியது.

நெஞ்சை அடைத்து உயிரை சித்திரைவதை செய்தது. அதன் பிரகாரமாக கண்களால் கண்ணீர் மழையாக கட்டுக்கடங்காது வழிந்தது.

ஆதவா
10-06-2007, 05:52 AM
நல்ல முயற்சி அமரன்.. ஒரே நாளில் நன்றாக மாறிவிட்டீர்கள். சில வார்த்தைகள் மட்டும் எழுத்துக்கள் மாற்றப்படவேண்டும்.

ஜொலித்தனை - ஜொலித்தன. (தது)
மழித்தனை - மழித்தன. (ஆனாலும் இவ்விரு வார்த்தைகளும் ஒரே அர்த்தம்தான்,)

வலைக்கலை ???? இது என்ன?

இன்னும் கொஞ்சம் குழப்பம் இருந்தாலும் சொல்ல வந்த கருத்து காதல் தானோ என்று யோசிக்க வைக்கீறது.. ஏனெனில் அதற்கான அறிகுறிகள் உள்ள வார்த்தைகள் எனக்குத் தோன்றவில்லை.. நான் கூட ஏதோ எண்ணை சமாச்சாரம் என்று நினைத்துக் கொண்டேன்.

வார்த்தைகளை அழகாக பொறுக்கி எடுத்து போட்டமைக்கு ஒரு சபாஷ்.. லிகர, ழிகர வார்த்தைகள் அழகாக இருக்கிறது,.

அளவாகவும்
அழகாகவும்
பலமாகவும்

வார்த்தைகள் இட்ட அமரனுக்கு பாராட்டுக்கள்..

அமரன்
10-06-2007, 12:25 PM

நன்றி ஆதவா.
நல்லதை பாராட்டி குறைகளைச் சுட்டியதற்கு.
இன்னும் கொஞ்சம் காத்திருந்து எழுதியிருக்கலாம் போலும்.
பெரு ஏறி இருக்கும்..கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன்..
வலைக்கலை இல்லை அது வலிக்கலை. தட்டச்சும்போது ஏற்பட்ட சிக்கல்.
மழித்தது என்று குறிப்பிட்டது.... சவரம் செய்வதை மழிப்பது என்று சொல்வார்கள். ஆனால் அது முற்றாக அழிவதில்லையே...அதையே குறிப்பிட்டேன்.......
எழுத்துத் தவறுகளைக் களைந்து விட்டேன்...
மீண்டும் நன்றி ஆதவா...

அமரன்
10-06-2007, 12:26 PM
அமரனே இப்படி எல்லாம் கலக்குவீங்களா?
எனக்கு தெறியலையே சாமி...

மிகவும் ரசித்தேன்
வாழ்த்துக்கள்
நன்றி

நன்றி வரிப்புலி...

அமரன்
10-06-2007, 12:30 PM
ஆஹா அமரா அழகான வார்த்தை விளையாட்டு.ழவும், லவும்,ளவும் கூடிகும்மியடிக்கும் கவிதை. வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அர்த்தமும் இணையும்போது அதன் சுவையே தனி.

குழிதனை வலியுடன்
பிழிந்தது
பிழிகையில் பொழிப்பது
பொழிந்தது
இந்த வரிகளில் குழி என்பது இதயத்தைதானே குறிக்கிறது? பொழிப்பது பொழிந்தது என்றால் கண்ணீரா?
நன்றி சிவா....
குழி என்பது இதயத்தையே குறிக்கின்றது...
நினைவுகள் இதயத்தை வலிக்குமாறு பிழிந்தது. அதனால் பொழிப்பு (பாட்டு என நினைத்தே எழுதினேன். உங்கள் கருத்தும் சரியாகப் பொருந்துகின்றது சிவா.) மழை போல பொழிகின்றது.

அமரன்
10-06-2007, 12:34 PM
கண்கள் பார்க்கையில் காதல் மலரவில்லை. காதல் மலரும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவில்லை.

-------
அமரனின் விளக்கம்

காதல் கிடைக்காதா என்ற கிலியில் சலிப்படைகையில் நீ என்கண்முன் ஜொலித்தாய்.
அப்படி நீ ஜொலிக்கும்போது என் மூளையில் மூளி சிலிர்த்தது. உணர்வு உதித்தது...
-------

காதலுடன் இருக்கையில் இன்பம் அளவின்றி வளர்ந்தது. அப்படியாக வளர்கையில் பிற இன்னல்களால் அதற்கு பங்கமுண்டாகியது.

பழய காலங்களை எண்ணும்போது சிறையாக இருந்தது, அந்த வலி உறுத்துகையில் கண்களில் நீர் அரும்பியது.

நெஞ்சை அடைத்து உயிரை சித்திரைவதை செய்தது. அதன் பிரகாரமாக கண்களால் கண்ணீர் மழையாக கட்டுக்கடங்காது வழிந்தது.

ஒரே அலை வரிசையில் இருவரும் உள்ளோமோ?. ரொம்ப நெருக்கமாக இருக்கின்றது....பாராட்டுகளும் நன்றியும்....

ஓவியா
10-06-2007, 12:35 PM
அருமையான கவிதை போலும், சும்மா ஒன்னும் தெரியாமல், புரியாமல் 'அருமையான கவிதை, வார்த்தைகளின் வரிகள் அழகு' என்று ஒரு பின்னூட்டம் போட எனக்கு விருப்பமில்லை. மன்னிக்கவும் அமரன்.

ஆதவா, ஷீ-நிஷி, அக்கினி, மற்றும் யாறேனும் சற்று விரிவான விமர்சனம் போட்டால் மகிழ்வேன். நன்றி.

அமரன், உங்க திறமையை கண்டு வியந்துப்போனேன். நன்றி.

அமரன்
10-06-2007, 12:37 PM

பின்னூட்டங்களை வாசித்துப்பாருங்கள் ஓவி. புரியலாம் என நினைக்கின்றேன்..

ஓவியா
10-06-2007, 12:45 PM
நான் ஒரு திரியில் அனைத்து பின்னூட்டங்களையும் வாசித்துவிட்டுதான், பின்னூட்டமிடுவேன். 100 பக்கங்கள் இருந்தாலும் வாசிப்பேன். இங்கும் வாசித்தேன். ஆனாலும் புரியவில்லை. நன்றி அமர்.

பின் குறிப்பு
நல்ல கவிதைக்கு ஒரு அருமையான விமர்சனத்தை அடியேன் எதிர்ப்பார்க்கிறேன், விமர்சனம் உங்கள் கவிதையை உயர்த்தும்.

அமரன்
10-06-2007, 12:47 PM

நன்றி ஓவியாக்கா..

இதயம்
10-06-2007, 01:11 PM
உங்கள் கவிதையை வாசித்ததில் என் நாக்கு சிக்கிக்கொண்டுவிட்டது. அத்தனை சிக்கலான ள, ல,ழகரம் கொண்டு வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள். இந்த கவிதை உங்களுடைய தமிழ் மற்றும் கவிப்புலமையை காட்டுகிறது. இந்த கவிதை என்னுடைய தமிழ் வறுமையை காட்டுகிறது. எத்தனை முறை படித்தாலும் சுயமாய் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

புதுமையாய் கவிதை செய்து கவிதையில் புதுமை செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் நண்பர் என்பதில் எனக்கு பெருமை. உங்களுடைய கவி பண்டித்யத்தை காட்ட அவ்வப்போது இது போன்ற கவிதையும் கொடுங்கள். நாங்கள் ரசித்து சுவைக்க எப்போதும் எளிமையான கவிதை கொடுங்கள். பாராட்டுகள் அமரன்..!!

ஷீ-நிசி
10-06-2007, 02:01 PM
எனக்கு இந்த பாணி கவிதை முற்றிலும் புதிதாய் இருக்கிறது அமரன்.. உண்மையாகவே சொல்கிறேன். எனக்கு புரியவில்லை. ஆதவா இதை இன்னும் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும்.. ஆனால் வார்த்தை ஜாலங்கள் என்னை ரசிக்க வைத்தன!

ஓவியா
10-06-2007, 02:04 PM
ஓவி அபீட்டு, ஷீயும் அப்பீட்டு,,

ஆதவாவும் அக்கினியும் அலசினால்தான் உண்டு.

அமரன், கவிதை பிரமாதம் காரணம்

ஷீ: வார்த்தை ஜாலங்கள் என்னை ரசிக்க வைத்தன.

அமரன்
10-06-2007, 02:06 PM
உங்கள் கவிதையை வாசித்ததில் என் நாக்கு சிக்கிக்கொண்டுவிட்டது. அத்தனை சிக்கலான ள, ல,ழகரம் கொண்டு வார்த்தைகளில் விளையாடி இருக்கிறீர்கள். இந்த கவிதை உங்களுடைய தமிழ் மற்றும் கவிப்புலமையை காட்டுகிறது. இந்த கவிதை என்னுடைய தமிழ் வறுமையை காட்டுகிறது. எத்தனை முறை படித்தாலும் சுயமாய் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.

புதுமையாய் கவிதை செய்து கவிதையில் புதுமை செய்திருக்கிறீர்கள். நீங்கள் என் நண்பர் என்பதில் எனக்கு பெருமை. உங்களுடைய கவி பண்டித்யத்தை காட்ட அவ்வப்போது இது போன்ற கவிதையும் கொடுங்கள். நாங்கள் ரசித்து சுவைக்க எப்போதும் எளிமையான கவிதை கொடுங்கள். பாராட்டுகள் அமரன்..!!
தலைவா...ஏதோ கிறுக்கினேன். அதற்குப் போய் இப்படியா? பாராட்டு மாதிரியான வாரலா? இல்லை வாரல் போன்ற பாராட்டா? எப்படி இருந்தாலும் நன்றிங்க..

அமரன்
10-06-2007, 02:08 PM
ஓவி அபீட்டு, ஷீயும் அப்பீட்டு,,

ஆதவாவும் அக்கினியும் அலசினால்தான் உண்டு.

அமரன், கவிதை பிரமாதம் காரணம்

ஷீ: வார்த்தை ஜாலங்கள் என்னை ரசிக்க வைத்தன.
உண்மைதான் ஓவி. கவிதையில் கருவில் சில வேளைகளில் நான் தோற்று விட்டாலும் வார்த்தை ஜாலத்தில் ஜெயித்துவிட்டேன் என நினைக்கின்றேன். நிஷியின் பின்னூட்டம் அதை உறுதிப்படுத்துகின்றது. நன்றி நிஷி உங்க பின்னூட்டம் என் தமிழுக்கு ஊட்டம்.

விகடன்
10-06-2007, 02:16 PM
ஒரே அலை வரிசையில் இருவரும் உள்ளோமோ?. ரொம்ப நெருக்கமாக இருக்கின்றது....பாராட்டுகளும் நன்றியும்....

பாராட்டுக்களுக்க நன்றி.

ஒரே அலைவரிசையில் இருவரும் இருக்கிறோந்தான். ஆனால் நீரோ அலையை உருவாக்குவராகவும் நானோ அதனை நுகர்வோரில் ஒருவருமாகவல்லவா இருக்கிறேன்.:4_1_8: