PDA

View Full Version : ஐபோன் வருதுங்கோ!!!



மயூ
09-06-2007, 04:42 PM
அதிகமாக எதிர்பார்க்கப்ட்ட ஐபோன் வெளியாகும் திகதி கலிபோர்ணியாவில் அமைந்துள்ள நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் விலை $499 (251) முதல் $599 வரை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொபைல் ஃபோனும் PDA யும் சேர்ந்த அமைப்பாகும். இந்த கருவி முழுக்க முழுக்க தொடுகையை உணர்ந்து செயற்படக்கூடியதாகும்.

விளம்பரத்திலே வீடியோ பார்த்தல், இணையத்தை துளாவுதல், விரல்களை சுட்டியாகப் பயன்படுத்தி மின்னஞ்சல் பார்த்தல் என்பன காட்டப்பட்டது. அப்பிள் கம்பனி இதன் மூலம் தொலைபேசி சந்தையிலும் தடம்பதிக்கப் போகின்றது.
http://asymptotia.com/wp-images/2007/01/iphone_2.jpgiTunes music & Video களஞ்சியத்துடன் செயற்படக்கூடியதாக இருப்பதால் இன்னமும் பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஐரோப்பா, மற்றும் உலகின் மற்றய பகுதிகளுக்கான வெளியீட்டுத் திகதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை!!!

மனோஜ்
09-06-2007, 05:00 PM
அருமை குறுங்கணிணி கைகளில்
தகவலுக்கு நன்றி மயு

விகடன்
09-06-2007, 05:12 PM
நல்லதொரு தகவல்.
அப்படியென்றால் ஓ2 எல்லாம் ஓரம் கட்டப்போகிறது என்று சொல்லுங்கள்.

இணைய நண்பன்
09-06-2007, 06:55 PM
தகவலுக்கு நன்றி நண்பரே

aren
10-06-2007, 04:34 AM
நான் இப்பொழுது Blackberry கை தொலைபேசியை உபயோகிக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மின்னஞ்சல் நேரடியாக நம் கை தொலைபேசிக்கு வந்துவிடுவதால் பல முக்கியமான முடிவுகளை எடுக்க வசதியாக இருக்கிறது.

இந்த i-phone கூட இந்த வகையைச் சார்ந்ததே. ஆனால் கொஞ்சம் அதிக மேம்பாட்டுடன் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இது மாதிரி பல புதுமைகள் வருகின்றன. இனிமேல் அலுவலகம் செல்லாமலேயே எல்லா விதமான முடிவுகளையும் உடனடியாக எடுக்கமுடியும் என்று நினைக்கிறேன். இதன்மூலம் வாழ்க்கைத் தரம் உயர்ந்து பல குடும்பங்கள் உடைவதிலிருந்து காப்பாற்றப்பட்டால் உலகிற்கு இது ஒரு நண்மையே.

நன்றி வணக்கம்
ஆரென்

மயூ
10-06-2007, 09:07 AM
இது சில வேளைகளில் தோல்வியைத் தழுவலாம் என்றும் கருதப் படுகின்றது... ஏனெனில் நாக்கியா, சாம்சுங் போன்ற நிறுவனங்கள் தங்கள் பங்கை அப்பிளுக்கு அவ்வளவு இலகுவாக விடடுவிட மாட்டார்கள்.

ஷீ-நிசி
10-06-2007, 01:52 PM
நல்ல தகவல் மயூ!

மேலதிக படங்களுக்கு

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7967