PDA

View Full Version : கவிதைகள்



aromabest
09-06-2007, 03:08 PM
நீ தான்

தென்றல் காற்றும் நீ தான்
வான வில்லும் நீ தான்

வண்ண மயிலும் நீ தான்
மெல்லிசையும் நீ தான்

வாடாத மல்லிகையும் நீ தான்
தேன் ஊற்றும் நீ தான்

என் உள்ளத்திலும் நீ தான்
என் உயிரிலும் நீ தான்

அரோமா பெ(b)ஸ்ட்

மனோஜ்
09-06-2007, 03:14 PM
மனதில் நீ தான்
மனிமுத்தும் நீ தான்
வான் மழையும் நீ தான்
வரிகள் மலந்திடும் நீளமாய் நினைத்தாலே காதலியை
நன்றி

ஓவியா
09-06-2007, 03:21 PM
நீ நீதான்
நான் நாந்தான்
இதில் மாற்றமில்லை

மயிலு மயிலுதான்
குயிலு குயிலுதான்
இதிலும் மாற்றமில்லை

பின் எதற்க்கு மாற்றமொன்றே மாற்றமற்றது என்று ஒரு வரி????

ஓவியா
09-06-2007, 03:21 PM
நீ தான்

தென்றல் காற்றும் நீ தான்
வான வில்லும் நீ தான்

வண்ண மயிலும் நீ தான்
மெல்லிசையும் நீ தான்

வாடாத மல்லிகையும் நீ தான்
தேன் ஊற்றும் நீ தான்

என் உள்ளத்திலும் நீ தான்
என் உயிரிலும் நீ தான்

அரோமா பெ(b)ஸ்ட்

அரோமா, கவிதை நன்று.

ரசித்தேன். நல்ல ரசனை.

ஆதவா
09-06-2007, 03:29 PM
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

இனியவள்
09-06-2007, 08:21 PM
நீ தான்
தென்றல் காற்றும் நீ தான்
வான வில்லும் நீ தான்
வண்ண மயிலும் நீ தான்
மெல்லிசையும் நீ தான்
வாடாத மல்லிகையும் நீ தான்
தேன் ஊற்றும் நீ தான்
என் உள்ளத்திலும் நீ தான்
என் உயிரிலும் நீ தான்

அரோமா பெ(b)ஸ்ட்

கானம் பாடும் குயிலும் நீ தான்
இசையில் ஒலிக்கும் நாதமும் நீ தான்
பூவுக்குள் இருக்கும் வாசமும் நீ தான்
தென்றாலாய் வருடும் காற்றும் நீ தான்
எனக்காக பிறந்த என் தேவதையும் நீ தான்

கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்

ஓவியா
09-06-2007, 08:38 PM
கானம் பாடும் குயிலும் நீ தான்
இசையில் ஒலிக்கும் நாதமும் நீ தான்
பூவுக்குள் இருக்கும் வாசமும் நீ தான்
தென்றாலாய் வருடும் காற்றும் நீ தான்

எனக்காக பிறந்த என் தேவதையும் நீ தான்

கவிதைகள் அருமை வாழ்த்துக்கள்

தேவதை பெண்பாலா? ஆண்பாலா?

நீங்கள் பெண்பாலேன்றால், இது கொஞ்சம் இடிக்குதே தோழி.

ஆதவா
09-06-2007, 08:40 PM
தேவதை பெண்பாலா? ஆண்பாலா?

நீங்கள் பெண்பாலேன்றால், இது கொஞ்சம் இடிக்குதே தோழி.

பெண் கவிஞர்கள் பெண்களை வைத்து மட்டும் தான் எழுதவேண்டுமா என்ன?

அமரன்
09-06-2007, 08:40 PM
தேவதை பெண்பாலா? ஆண்பாலா?

நீங்கள் பெண்பாலேன்றால், இது கொஞ்சம் இடிக்குதே தோழி.
காதல்(தேவதை) ஆண்பாலா பெண்பாலா!
கவிதை பெஸ்ட் அரோமா பெஸ்ட்

இனியவள்
09-06-2007, 08:49 PM
தேவதை பெண்பாலா? ஆண்பாலா?

நீங்கள் பெண்பாலேன்றால், இது கொஞ்சம் இடிக்குதே தோழி.

தேவதை ஆண் பால் தான் ஒவியா
நான் ஒரூ வர்ணனைக்கு கூறினேன்

இனியவள்
09-06-2007, 08:51 PM
பெண் கவிஞர்கள் பெண்களை வைத்து மட்டும் தான் எழுதவேண்டுமா என்ன?

ம்ம் சரியாக கூறினீர்கள் ஆதவா

அமரன்
09-06-2007, 08:53 PM
தேவதை ஆண் பால் தான் ஒவியா
நான் ஒரூ வர்ணனைக்கு கூறினேன்
இதனாலா?

இனியவள்
09-06-2007, 08:56 PM
தேவதை ஆண் பால் தான் ஒவியா
நான் ஒரூ வர்ணனைக்கு கூறினேன்

மன்னிக்க வேண்டும் பெண் என்று கூறுவதற்கு பதிலாக ஆண் என்று கூறிவிட்டேன்

ஓவியா
09-06-2007, 09:06 PM
மன்னிக்க வேண்டும் பெண் என்று கூறுவதற்கு பதிலாக ஆண் என்று கூறிவிட்டேன்

நல்லது.

அக்னி
10-06-2007, 07:43 AM
கானம் பாடும் குயிலும் நீ தான்
இசையில் ஒலிக்கும் நாதமும் நீ தான்
பூவுக்குள் இருக்கும் வாசமும் நீ தான்
தென்றாலாய் வருடும் காற்றும் நீ தான்
எனக்காக பிறந்த என் தேவதையும் நீ தான்

ஆனால் இந்தக் கவியை உடன்பிறந்த ஒரு பெண் குழந்தைக்கான வர்ணிப்பாக எடுத்துக்கொண்டால், பொருத்தமே...

aromabest
04-08-2007, 08:07 AM
பிரியமானவளே!

பிரியமானவளே!
நீ வருவாய் என − நான்
பார்வை ஒன்றே போதும் என்று
ஆசையாய் காத்திருந்த வேளை
நினைத்தேன் வந்தாய் போல*
மின்னலே என −நீ
அமர்களமாய்
வந்தாய் − கலமெல்லாம்
காதல் வழ்க என்று

ஆஹா...
பார்த்தாலே பரவசமாய்..
நான் உண்ணைக்
கண்டதும்−சமுத்திரத்தில்
நீந்துவது போல குஷியானேன்
கண்ணுக்குள் நிலவய்....

உயிரே..
அந்தரோஜா வனத்தில்
பூவெல்லாம் உன் வாசமடி−உன்னில்
நேசம் கொண்டு − ராஜ
நடை போட்டு
பாஷ்ஷா மாதிரி
மன்னன் நடை நடந்து
பத்ரியாய் நான் − உன்னில்
லவ்டுடே சொல்ல
ஒன்ஸ்மோராய் − ஜீன்ஸ் போட்டு
டூயட் பாடி நான் வருவேன்
லேடீஸ் அன்ட்
ஜென்டில்மனாய்..

சினேகிதியே....
பயணங்கள் முடியாத
கிழக்கே போகும் ரயிலில்
பூவே உனக்காக − ஈரமான்
ரோஜாவோடு....
ப்ரியமுடன் − காதல்
கவிதை எழுதி − சொன்னால்
தான் காதலா என்று
முதல்வன் போல்
நிம்மதி இழந்தேன்
உன்னைப் பிரிந்து − உன்
நினைவிருக்கும் வ*ரை.

தஜ்மஹால் − இல்
சாஜஹானய் − உள்ளத்தை
அள்ளித் தா (ந்ததால்) − காதலே
நிம்மதி என்று − ஆசையில்
ஒர் கடிதம் எழுதி − அங்கே
சிடிசன் ஆகிடுவோம்.

பெண்ணின் மானதைத் தொட்டு
உள்ளம் கொள்ளை போனதால்
லூட்டி அடித்து − காதல்
தேசத்தில் − விண்ணுக்கும்
மண்ணுக்கும் − வான்வில்(லால்)
காதல் கோட்டை கட்டி
வண்ணத் தமிழ்
பாட்டுப் பாடி − காதலுக்கு
மரியாதை செய்து − காதலர்
தினத்தில் − கதலன்
காதல் பரிசோடு − காதலி(க்கு)
குட்லக் சொல்ல − அவள்
வருவாளா? (ள்) − என
மெளன ராகம்
இசைத்து − கலமெல்லாம்
காத்திருப்பேன்.

அன்புடன்.....
ஆளவந்தன்.

அமரன்
04-08-2007, 08:18 AM
சினிமாவில் பெயரால்
அரோமா தந்த கவிதை
பெஸ்ட் ரகம்.

பாராட்டுக்கள் அரோமாபெஸ்ட்.

இனியவள்
04-08-2007, 08:21 AM
வாழ்த்துக்கள் அரோமாபெஸ்ட்..

படத்தின் தலைப்புகளைச்
சூடி கவிதைகள் வாழ்த்துக்கள்