PDA

View Full Version : வேலை



shivasevagan
09-06-2007, 11:50 AM
ஆறுமுகநாவலர் அருளிய குட்டிக் கதை

சம்பத்து உடையவனாகிய ஒரு வர்த்தகன் இருந்தான். அவன் தன் பல்லக்குச் சுமக்கிற ஆட்களை அழைத்து, "பசுமாட்டுக்கு நாள்தோறும் புல்லுவெட்டிக் கொண்டுவந்து போடுங்கள்" என்றான். அதற்கு அவர்கள் "நாங்கள் பல்லக்கு மாத்திரம் சுமப்போம். வேறு வேலை செய்யமாட்டோம்" என்றார்கள்.

இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் பசுவின் கன்று வெளியில் ஓடிப்போயிற்று. அப்பொழுது வர்த்தகன் அந்தச் சிவிகையாட்களைப் பார்த்து, "கன்றைத் தேடிப்பிடித்துக்கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, அவர்கள் "நாங்கள் பல்லக்குச் சுமக்கிறவர்களோ, மாடு மேய்க்கிறவர்களோ" என்றார்கள். அப்பொழுது வர்த்தகன் அவர்களுக்குப் புத்தி வரும்படி செய்யவேண்டுமென்று யோசித்து, மத்தியான வேளையிலே பல்லக்குக் கொண்டு வரச் சொல்லி, அதிலே தான் ஏறி, கன்றைத் தேடும்படி நெருஞ்சிமுள் இருக்கிற காட்டு பார்க்கமாய்ப் போகச் சொன்னான். அப்படியே போய்த் திரிந்து வருந்துகையில், வர்த்தகனிடத்தில் முறையிட்டார்கள். அதற்கு அவன் "பல்லக்குச் சுமக்கிறது உங்கள் கடமை, கன்றைத் தேடுகிறது என் கடமை" என்று சொல்லி, அவர்கள் பல்லக்கை நிறுத்தாமற் சுமக்கும் படி செய்தான். ஆன்று முதல் அவர்கள் நல்ல புத்தி அடைந்து, எசமானன் ஏவும் எந்தக் காரியத்தையும் செய்வது கடமை என்று ஒப்புக் கொண்டார்கள்.

மூலம்: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பாலபாடம்

ஓவியா
09-06-2007, 12:02 PM
நல்ல எசமான், நேர்மையான காரியம் என்றால் கட்டுப்படுவது நமது கடமைதான், ஆனால் நேர் எதிர் என்றால், எப்படி!!!

தற்ப்பொதுள்ள காலகட்டத்தில் சுயபுத்திதான் நமக்கு எசமான். நல்லது கெட்டதை பிரித்துப்பார்க்க நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

வாழ்க்கைப்பாடம். நல்ல குட்டிக்கதை. நன்றி.

அக்னி
09-06-2007, 12:06 PM
குட்டிக் கதை அருமை...
இன்னும் இதுபோன்ற கதைகளை இவ்வாறான எளிய நடையில் தாருங்கள் அன்பரே...
நன்றியும் பாராட்டுக்களும்...

shivasevagan
09-06-2007, 12:08 PM
தருகிறேன் நண்பர்களே!

rajaji
06-07-2007, 02:07 AM
நண்பரே இக் காலத்தில் இது வேறு விதமாக நிகழ்கின்றது. சிலர் இருக்கிறார்கள் பக்கத்து வீட்டில் தீ பிடித்தாலும் என்னவென்று பார்க்க மாட்டார்கள், காரணம் அது தங்கள் கடமையில்லை என்ற மனப்பாங்கு. இது ஒன்று மட்டும் அல்ல இன்னும் பல வடிவங்களில் பல இடங்களில் இது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியான நேரங்களில் அவர்கள் மனதை மாற்ற இப்படிப்பட்ட நீதிக் கதைகள்தான் தேவை. மேலும் உங்கள் ஆக்கங்கள் தொடர நல்வாழ்த்துக்கள்.

விகடன்
09-08-2007, 06:52 AM
சந்தர்ப்பத்தை அறிந்து எதையும் கதைக்க வேண்டும். ஒரு விடயத்தை சொல்வதற்கு முன் அதை சொன்னால் வரும் நன்மை தீமைகளை பற்றி அலசி ஆராய்ந்தே சொல்ல வேண்டும்.

மிகவும் பயனுள்ள தகவல்........ சிந்திக்கத்தெரிந்து கொண்டால் சிறப்புடன் வாழலாம்.

கருத்துப் பரிமாற்றத்திற்கு நன்றி.

ஓவியன்
10-08-2007, 11:03 AM
இன்றுதான் என் கண்ணில் பட்டது இந்த பதிவு.........
கதை சிறிதானாலும் இதில் ஒளிந்துள்ள கருத்துக்கள் மிகப் பலமானவை.......
பாராட்டுக்கள் சிவசேவகரே!.

தங்கவேல்
11-08-2007, 01:47 AM
சிவசேவகன் வந்துட்டீங்களா ? வாங்க வாங்க....

aren
11-08-2007, 02:26 AM
நல்ல கதை. இது என் வேலையல்ல நான் இதில் தலையிடமாட்டேன் என்று சிலர் பேசுவது அலுவலகத்தில் தினம் நடக்கும் விஷயங்களுள் ஒன்று. மக்கள் இந்தக் கதையைப் படித்து புரிந்துகொண்டாலே பல விஷயங்களை எளிதாக அலுவலகத்தில் நாம் கையாளமுடியும்.

தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

தளபதி
13-08-2007, 01:38 PM
இந்த கதையை நான் எனது நண்பர்களுக்குச் சொல்ல அனைவரும் மிகவும் ரசித்ததுடன் அதை அவர்கள் வேலை பார்க்குமிடத்தில் சொல்லி நல்ல பலன் கிடைத்ததாகக் கூறினார்கள். நன்றி.

leomohan
13-08-2007, 02:05 PM
நல்ல management பாடம். நன்றி சிவசேவகன்.