PDA

View Full Version : இதயங்களின் யுத்தம்....!



வசீகரன்
09-06-2007, 10:36 AM
உன் இமைகள் வேகமாகக்
படபடக்க காரணம்....!

பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென

எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்...!!

ஓவியா
09-06-2007, 02:05 PM
உன்
இமைகள்
வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல்
களவாடிய
என்
இதயத்துடிப்போடு
நீ
விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்.......!

நன்பாரே இப்படி பதிக்கலாமே!!!!

நல்ல சிந்தனை, பாராட்டுக்கள்.

மன்றம் காதல் கவிதைகளை குவித்துக்கொண்டு இருகின்றது. ம்ம்ம் :smilie_abcfra:

மனோஜ்
09-06-2007, 02:09 PM
அசத்தல் வாக்கியம் கவிதைஆனது
நன்றி

சிவா.ஜி
09-06-2007, 02:11 PM
காதலுக்கு நிறைய கவிதை வருகிறது. கத்திரிக்காய்க்கு கவிதை எழுதச்சொன்னால் நம்ம மனோஜ் நல்லா எழுதுவார். இதயத்துடிப்போடு அவள் விளையாடும் ஆபத்தான காதல் விளையாட்டு வெறும் துடிப்போடு நிற்காமல் மண'முடிப்பில்' முடியவேண்டும்.

ஆதவா
09-06-2007, 03:10 PM
கவிதை நன்றாக இருக்கிறது. ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதலாமே?

lolluvathiyar
09-06-2007, 03:20 PM
ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதலாமே?

கவிதைக்கு எல்லை வகுக்க கூடாது என்பார்கள்
இவர் கவிதை வரிகளுக்கு எல்லை வகுக்கவில்லை போலும்

ஓவியா
09-06-2007, 03:31 PM
கவிதைக்கு எல்லை வகுக்க கூடாது என்பார்கள்
இவர் கவிதை வரிகளுக்கு எல்லை வகுக்கவில்லை போலும்

இது தான் ரசனை. :sport-smiley-014: