PDA

View Full Version : மழை நினைவுகள்....!



வசீகரன்
09-06-2007, 10:04 AM
அந்தி மழைக்கு ஒதுங்கினேன் உன் வீட்டு தாழ்வாரத்தில் மழை நின்ற பின் புறப்பட எத்தனித்தபோது முகம் பார்த்தேன் பூ பூத்தாய் புதிய தடம் கால்கள் தயங்கின... பழகி நெருங்கி மகிழ்ந்து நெகிழ்ந்த நேற்றைய பொழுதுகள் மறுபடியும் பூக்காதா....? மழை பொழிகிறது நான் நனைகிறேன் நீ....?

விகடன்
09-06-2007, 10:07 AM
கண சந்தர்ப்பத்தில் உண்டான இதயப் பறிகொடுப்போ பரிமாற்றமோ என்ற இக்கட்டான நிலையினை உணர்த்தும் கவிதை அருமை.

வடிவந்தன் செதுக்கப்படல் வேண்டும்.

வசீகரன்
09-06-2007, 10:13 AM
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.......!

ஓவியா
09-06-2007, 11:24 AM
அந்தி மழைக்கு
ஒதுங்கினேன்

உன்
வீட்டு தாழ்வாரத்தில்
மழை

நின்ற பின்
புறப்பட
எத்தனித்தபோது
முகம்
பார்த்தேன் - பூ
பூத்தாய்

புதிய தடம்
கால்கள் தயங்கின...

பழகி
நெருங்கி
மகிழ்ந்து
நெகிழ்ந்த
நேற்றைய பொழுதுகள்
மறுபடியும் பூக்காதா....?

மழை
பொழிகிறது
நான்
நனைகிறேன்
நீ....?

அன்பு வசீகரன்,

கவிதைகளை இப்படி பதிங்கள். அப்பொழுதுதான் படிக்க வசதியாக இருக்கும்.

பதிப்பதில் எதேனும் பிரச்சனை இருந்தால் தயங்காமல் உதவி கேளுங்கள். மன்ற நண்பர்கள் உதவுவார்கள்.

நன்றி,


கவிதை அருமை, ரசித்தேன். :music-smiley-010:

பின் குறிப்பு
தங்களுடைய அனைத்து கவிதைகளையும் எடிட் செய்து மற்றிவிடுங்கள்.

ஆதவா
09-06-2007, 03:24 PM
கவிதையில் வார்த்தைகளை ஏன் அடுக்குகிறோம்?

நீண்டு எழுதியிருந்தால் அது சென்றடையும் பார்வை குறைவாகவே இருக்கும். படிப்பவர்களுக்கும் ஒரு கவிதைத் தனமாக அந்த வரிகள் தெரியாது. எப்படி எழுதினாலும் கவிதை என்று புதுக்கவிதை இலக்கணமிட்டு செல்வதால் இத்தகைய பிரச்சனைகள்.. இலக்கணங்கள் முறைப்படி வேண்டாம். படிப்பதற்கு ஏதுவாகவாவது கொடுக்கலாமே?

எப்படியும்
கவிதை அருமை வசீகரன்.. ஆனால் ஓவியாக்காவின் உழைப்பில்தான் படிக்கமுடிந்ததே தவிர உங்கள் வரிகளை நீங்கள் எழுதி எம்மால் படிக்க இயலவில்லை.

கவிதை நடைக்கு மாற்ற முடியும் உங்களால்... மாற்றூங்கள்..

நன்றி.