PDA

View Full Version : உயிர்

இனியவள்
09-06-2007, 08:33 AM
வாழ்க்கை என்பது கவிதை..
அதில் இருக்கும் வரிகள் நீ
கவிதைக்கு அழகு சோர்ப்பது வரிகள்
என் வாழ்க்கைக்கு உயிராய்
இருப்பது உன் நினைவுகள்

ஆதவா
09-06-2007, 03:32 PM
ஒப்புமை இனிமை இனியவள் அவர்களே
கவிதையை வாழ்க்கைப் படுத்தும் நீங்கள்
அழகு சேர்க்கும் வரிகளை சோர்க்க வைத்துவிட்டீர்களே.. இறுதி வரிகள் சற்று மாற்றமிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. நேரடியாக நினைவுகளுக்குச் செல்வதை விட கவிதைக் கரு அல்லது நடை இது சம்பந்தமாக ஏதும் எழுதியிருக்கலாம்..
மன்னிக்க.

மனோஜ்
09-06-2007, 03:50 PM
வாழ்க்கை கவிதையில்
வரிகள் நீ
கவிதைக்கு அழகு வரிகள்
என் வாழ்விற்கு உயிர்
உன் நினைவுகள்
என்று வந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்
நன்றி

இனியவள்
09-06-2007, 06:51 PM
ஒப்புமை இனிமை இனியவள் அவர்களே
கவிதையை வாழ்க்கைப் படுத்தும் நீங்கள்
அழகு சேர்க்கும் வரிகளை சோர்க்க வைத்துவிட்டீர்களே.. இறுதி வரிகள் சற்று மாற்றமிருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.. நேரடியாக நினைவுகளுக்குச் செல்வதை விட கவிதைக் கரு அல்லது நடை இது சம்பந்தமாக ஏதும் எழுதியிருக்கலாம்..
மன்னிக்க.

நன்றி ஆதவா

அமரன்
21-07-2007, 09:23 AM
நினைவு வரிகளிட்டு இனியவள் தந்த வாழ்க்கைக் கவிதை இனிமை.
பாராட்டுக்கள்.

சிவா.ஜி
21-07-2007, 10:08 AM
வாழ்க்கை கவிதையின் அழகு வரிகளை அடிக்கடி வாசித்துக்கொண்டேயிருங்கள் இனியவள்.
பின் அதை எங்களுக்கும் வாசிக்கத்தாருங்கள்.
காதல் கவிதாயினி இனியவளுக்குப் பாராட்டுக்கள்.

இனியவள்
21-07-2007, 10:49 AM
நினைவு வரிகளிட்டு இனியவள் தந்த வாழ்க்கைக் கவிதை இனிமை.
பாராட்டுக்கள்.

நன்றி அமர்

இனியவள்
21-07-2007, 10:50 AM
வாழ்க்கை கவிதையில்
வரிகள் நீ
கவிதைக்கு அழகு வரிகள்
என் வாழ்விற்கு உயிர்
உன் நினைவுகள்
என்று வந்திருந்தால் அருமையாக இருந்திருக்கும்
நன்றி

நன்றி மனோஜ்

கவியின் மாற்றம் அழகாக
இருக்கின்றது

இனியவள்
21-07-2007, 10:50 AM
வாழ்க்கை கவிதையின் அழகு வரிகளை அடிக்கடி வாசித்துக்கொண்டேயிருங்கள் இனியவள்.
பின் அதை எங்களுக்கும் வாசிக்கத்தாருங்கள்.
காதல் கவிதாயினி இனியவளுக்குப் பாராட்டுக்கள்.

நன்றி சிவா

அக்னி
21-07-2007, 10:58 AM
கவிதை வாழ்க்கையானால்...
வரிகள் நீ...
ஆனால்,
வரிகள் இன்னும் வற்றவில்லை,
கவிதையில்...
வாழ்க்கை வற்றியே போனது,
நீ வாராததில்...

பாராட்டுக்கள்...

இனியவள்
21-07-2007, 11:00 AM
கவிதை வாழ்க்கையானால்...
வரிகள் நீ...
ஆனால்,
வரிகள் இன்னும் வற்றவில்லை,
கவிதையில்...
வாழ்க்கை வற்றியே போனது,
நீ வாராததில்...

பாராட்டுக்கள்.....

நன்றி அக்னி

வரிகள் வற்றினால்
எப்படி கவிதை வரும்:grin:

இன்பா
21-07-2007, 11:04 AM
கவிதைகளுக்கு அழகு வரிகள்
வரிகளுக்கு அழகு கற்ப்பனைகள்
கற்ப்பனைகளுக்கு அழகு பொய்...

கவிதையில் வரியாய் நீ
கற்ப்பனையாக நான்
பொய்யாக...?

அக்னி
21-07-2007, 11:06 AM
நன்றி அக்னி

வரிகள் வற்றினால்
எப்படி கவிதை வரும்:grin:

செறிவாக வரும்...
உதாரணமாக, உப்புகரைந்த நீரை, நன்றாக வற்ற வைத்துப் பார்த்தால்,
உப்பின் செறிவு அதிகரித்தே காணப்படும்...
அதேபோல,
இன்பத்தில் வற்றாத வார்த்தைகள் விளையாடும் கவிதைகளைவிட,
துவண்ட துன்பத்தில், வற்றிய வார்த்தைகளில் வரும் கவிதைகள்...
மனதில் அழுத்தமாகவே பதியுமல்லவா..?

இனியவள்
21-07-2007, 11:08 AM
கவிதைகளுக்கு அழகு வரிகள்
வரிகளுக்கு அழகு கற்ப்பனைகள்
கற்ப்பனைகளுக்கு அழகு பொய்...

கவிதையில் வரியாய் நீ
கற்ப்பனையாக நான்
பொய்யாக...?

பொய்யாக காதல்
வரலாம் வராமலும்
போகலாம்

இனியவள்
21-07-2007, 11:09 AM
செறிவாக வரும்...
உதாரணமாக, உப்புகரைந்த நீரை, நன்றாக வற்ற வைத்துப் பார்த்தால்,
உப்பின் செறிவு அதிகரித்தே காணப்படும்...
அதேபோல,
இன்பத்தில் வற்றாத வார்த்தைகள் விளையாடும் கவிதைகளைவிட,
துவண்ட துன்பத்தில், வற்றிய வார்த்தைகளில் வரும் கவிதைகள்...
மனதில் அழுத்தமாகவே பதியுமல்லவா..?

ம்ம் ஆமாம் அக்னி
நீங்கள் சொல்வதும்
சரியே..:icon_clap: