PDA

View Full Version : பிரிவு



இனியவள்
09-06-2007, 08:31 AM
என் உயிரே உன் காதலால்
என் இதயம் காயமானதே!
உன்னை என் வாழ்க்கைக்கு
துணையாகக் காதலித்தேன்..
நீயோ நான் ஏழை என்பதால்
ஓட அலையவிட்டு
என்னை ஒதுக்கிவிட்டாய்..
நீர்த் தூளியான நம் நட்பை
வாடிய இதழ்கள் ஆக்கிவிட்டாய்..
இன்றோ ஊமைக் காற்றாக
கனவிலும் கானம்பாடி
உன் பிரிவின் தனிமையில்
தவித்து கண்ணீர் வடிக்கிறேன்..

அமரன்
21-07-2007, 09:21 AM
நீங்களே சொல்லி விட்டீர்களே..நீர்துளிதான் நட்பென்று...அதுதான்...வறுமையின் வெப்பம் தாங்காது காய்ந்து விட்டது...
பிரிவு வேதனையானது. வேதனையை தாங்கிய கவிதை இனிமையானது. பாராட்டுக்கள் இனியவள்.

இனியவள்
21-07-2007, 11:11 AM
நீங்களே சொல்லி விட்டீர்களே..நீர்துளிதான் நட்பென்று...அதுதான்...வறுமையின் வெப்பம் தாங்காது காய்ந்து விட்டது...
பிரிவு வேதனையானது. வேதனையை தாங்கிய கவிதை இனிமையானது. பாராட்டுக்கள் இனியவள்.

நன்றி அமர்

அக்னி
21-07-2007, 11:17 AM
வடித்த கண்ணீரில்,
வடிகட்டப்பட்டு தேங்கிய,
உன் நினைவுகள்...
வெடித்த இதயத்தை,
மூடிவிட்ட நீங்காத,
என் சோகங்கள்...

பாராட்டுக்கள் இனியவளே...

இனியவள்
21-07-2007, 11:19 AM
வடித்த கண்ணீரில்,
வடிகட்டப்பட்டு தேங்கிய,
உன் நினைவுகள்...
வெடித்த இதயத்தை,
மூடிவிட்ட நீங்காத,
என் சோகங்கள்...
பாராட்டுக்கள் இனியவளே...

அக்னி பதில் கவி
அருமை :icon_clap:

வாழ்த்துக்களோடு கூடிய நன்றிகள்

சிவா.ஜி
21-07-2007, 01:16 PM
ஒதுக்கிய உறவுக்காக தனித்து கண்னீர் வடிக்க வேண்டாம்.
செல்வத்தில் ஏழையானாலும் அன்பில் குறைவில்லாத காதலிக்கு
அதே என்னமுடைய காதலன் கிடைக்காமலா போய்விடுவான்.
வாடி நின்றது போதும்
வாழ்க்கை இன்னும் இருக்கிறது
வாழ்ந்துவிடு!
பிரிவின் வலி சொல்லும் அழகு கவிதை இனியவள்.

இனியவள்
21-07-2007, 02:20 PM
நன்றி சிவா

lolluvathiyar
21-07-2007, 02:58 PM
உன்னைவிட ஏழைய காதலித்து விடு பிரச்சனை இல்லீல*

இனியவள்
22-07-2007, 09:19 AM
உன்னைவிட ஏழைய காதலித்து விடு பிரச்சனை இல்லீல*

வாத்தியாரே உங்கள் லொள்ளு தாங்க முடியேலை
இப்படியே போனால் உங்க லொள்ளை கீழே வைத்து
விடுவேன் உங்களிட்டையே ஓடி வந்திடும் :sport009: