PDA

View Full Version : இனிமையான சில நேரங்கள்இனியவள்
09-06-2007, 08:26 AM
இரவின் இருட்டில் நிலவின் ஒளியில்
பனியின் சாரலில் நெஞ்சோடு இருக்கக்
கட்டிய என் கைகளின் நடுவில்
நீயும் உன் நினைவுகளில்
உலவிய நேரங்களும்...

பேருந்தில் பயணிக்கும்
சில மணி நேரங்களில்
இறுக்க மூடிய கண்களுக்குள்
உனை அடக்கி உலகம் மறந்து
மெளனமாய் பேசிய நேரங்கள்.....

கோயிலில் தரிசன வரிசையில்
பல மணிநேரம் நிற்கும் நேரங்களின்
கடவுளின் பெயருக்கு பதிலாய்
உன் பெயரை உச்சரித்த நேரங்கள்..........

கடற்கரையில் அலையின்
ஆவேசமும் மனிதர்களின்
இரைச்சல்களுக்கும் நடுவே
எனக்கு மட்டும் எல்லாமே
நிசப்தமாய் என்
நினைவுகளை நீ மட்டுமே
நிரப்பிய நேரங்களில்..

காதலனும் காதலியும்
காதல் பாட்டு பாட
திரை அரங்கினுள்
கண்கள் மட்டும்
திரையை பார்க்க
மனம் என்னவோ
உன் நினைவுகளில்..
களித்திருக்கும் நேரங்களில்......

என்னின் எத்தனை நேரங்களை
இனிமை ஆக்குகிறாய் நீ.....
என்னுடன் எப்போதும் நீ
இருந்தால் எத்தனையும் அத்தனை
ஆகுமே என்னவனே.....!!!

இதயம்
09-06-2007, 08:32 AM
காதல் என்ற இந்த மாய உறவு செய்யும் கண்கட்டு வித்தைகள் தான் எத்தனை.. எத்தனை.? ஒருத்தியாய் உள் புகுந்து உலகமாய் மாறிப்போகும் மாயாஜாலம் இதில் மட்டும் தான் நடக்கிறது. பெற்ற தாய், உருவாக்கிய தந்தை இவர்கள் மரணம் இளைஞர்களுக்கு கொடுப்பது சில சொட்டு கண்ணீரும், சில நாள் சோகமும். ஆனால், முகம் தெரியாமல் அறிமுகமாகும் காதலியின் மரணத்திற்கு பரிசாக தன் மரணத்தையல்லவா தந்துவிடுகிறார்கள்..?

காதலின் வீரியத்தை, எதார்த்தத்தை, அழகை, இனிமையை சொன்ன சிறப்பான கவிதை இது. பாராட்டுக்கள்..!!

தீபா
09-06-2007, 08:34 AM
நிலவின் மடியில்
சாரல் துளிர்க்க
நானும் உன் நினைவுகளோடு
உலவிய காலத்தை
உசுப்பிப் பார்க்கிறேன்


பேருந்துப் பயணங்களின்
இமை மூடிய தருணங்களில்
பேருந்துதலாய் வந்த
மெளனப் பேச்சுகளை
உளமாறப் கேட்க்கிறேன்


கடவுள் நாமத்தை
மறந்த உன் இதழ்கள்
தரிசனத்தில் என்னை
நினைத்த நிமிடங்கள்
கடவுளே தந்துவிடுவான்
எனக்கு...
மீண்டும்.


அலைகளின்
ஆவேசங்களில்
நீ நுழைந்த தருணங்களை
சப்தமின்றி எட்டிப் பார்த்த
நினைவுகளைத் தாலாட்டிய போது
எனக்கு மட்டும் எல்லாமே
உன் குரலாய் கேட்டது.


என்னில் இனிமை உண்டாக்கும்
நீ
என்னோடு அனைத்தையும்
உரிமை ஆக்கு நீ
உடன் இருந்தால்
உறவு செழிக்கும் என்னவளே

-------------------


ஆழமாய் அமர்ந்து
அக்கவிதை எழுதிய
சகோதரிக்கு
இந்த சகோதரி எழுதிய
மறு கவிதை
உங்கள் ஆக்கத்தை
மறுக்காத கவிதை
அனைத்துவரிகளும்
செழுமை துள்ளும்
தாலாட்டுகள்..


இனியவளின்
இனிமை..
அக்கவிதையில்

சிவா.ஜி
09-06-2007, 09:10 AM
கவிதை தந்த சகோதரிக்கும்,கவிதையில் பதிலலித்த இந்த சகோதரிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இனியவள்
09-06-2007, 01:40 PM
காதல் என்ற இந்த மாய உறவு செய்யும் கண்கட்டு வித்தைகள் தான் எத்தனை.. எத்தனை.? ஒருத்தியாய் உள் புகுந்து உலகமாய் மாறிப்போகும் மாயாஜாலம் இதில் மட்டும் தான் நடக்கிறது. பெற்ற தாய், உருவாக்கிய தந்தை இவர்கள் மரணம் இளைஞர்களுக்கு கொடுப்பது சில சொட்டு கண்ணீரும், சில நாள் சோகமும். ஆனால், முகம் தெரியாமல் அறிமுகமாகும் காதலியின் மரணத்திற்கு பரிசாக தன் மரணத்தையல்லவா தந்துவிடுகிறார்கள்..?

காதலின் வீரியத்தை, எதார்த்தத்தை, அழகை, இனிமையை சொன்ன சிறப்பான கவிதை இது. பாராட்டுக்கள்..!!

காதலே ஒரு மாயை போன்றது தானே நண்பரே
நன்றி

இனியவள்
09-06-2007, 01:43 PM
பதில் கவிதை மிகவும் நன்று தென்றல் வாழ்த்துக்கள்
நன்றி

ஓவியா
09-06-2007, 01:48 PM
இனியவளின் கவிதை அருமை, தென்றலில் கவிதை தூள், இதயத்தின் பின்னூட்டம் இனிமை..

நன்றி நண்பர்களே.

கவிதை என்னுள் பதிந்ததோ இல்லையோ, என் எண்ணங்கள் அதனுள் பதிந்தன. :traurig001:

ஆதவா
09-06-2007, 03:19 PM
நல்ல கவிதை இனியவள்.
காதலி/காதலனாக ஊடுறுவி துளைத்து வருகிறது வரிகள். ஒரு காதலி உணர்ந்து எழுதினால் எப்படி இருக்குமோ அந்த உணர்வுகள் கொட்டிக் கிடக்கின்றது கவிதையில். வார்த்தைகளை அடுக்கி, கவிதைகள் எழுதி காதலைத் தொலைத்து நிற்கும் ஆண்களும் காதலுக்குப் பாவை அல்ல என்று நிரூபித்தமை சுருதி சுத்தம்.
நின்று போகும் அலைகளும் உச்சரிக்கும் மாற்று கடவுள் நாமமும் யதார்த்தமாக பேருந்து நினைவுகளும் நெஞ்சைத் தடவிச் செல்லும் மென் காற்று.
வாழ்த்துக்கள் இனியவள்.. பெயருக்கெற்ப இனிமையான கவிதை.
மன்றத்தில் காதல் கவிதைகளின் பெருக்கம் அதில் உள்ள சுத்தம் சமீப காலத்தில் நிறைந்திருக்கிறது. அதற்கு உங்கள் போன்றவர்களே காரணம்
------------------------
யம்மா தென்றல்.. ஆரம்பிச்சிட்டீங்களா? இனி முடிக்க மாட்டீங்களே??