PDA

View Full Version : அவலின் சோகம்



தீபா
09-06-2007, 07:09 AM
யாரோ ஒருவனால்
பிறந்த என்னை
வளர்ப்பால் மெலிந்த
என்னை
காண்வார் யாருளர்?


உன்னோடு இணைந்து
இனிப்பாகி
சில சீவல்களால்
பல ஜீவன்களின்
கணத்திற்கு
உயிர்ப்பாகி
அந்த நாட்கள்
மீண்டும் வருமோ?


என் உடன்பிறப்புகளின்
நித்தியபலன்களை
கண்டு பொறாமை கொள்கிறேன்.


தனியே
என்னைத் தீண்டுவாரில்லை
நீயோ அப்படியில்லை.


என் சோகத்தை
யாரிடம் சொல்வேன்?

சிவா.ஜி
09-06-2007, 07:19 AM
உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை. மன்னிக்கவும். எதை உருவகப்படுத்துகிறீர்கள்?

தீபா
09-06-2007, 07:20 AM
சிவ சிவ
அண்ணா
பொருளனைத்தும் உள்ளது
எம் கவிதைத் தலைப்பில்..

சிவா.ஜி
10-06-2007, 12:41 PM
மன்னிக்கவேண்டும் தங்கையே. மேலோட்டமாக பார்த்ததில் அவல் என்பதை அவள் என்று நினைத்துவிட்டேன். அழகான கவிதை.அதுவும் கூடப்பிறந்த அரிசிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அவலுக்கு கிடைக்கவில்லை என்பதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

ஷீ-நிசி
10-06-2007, 02:50 PM
அவலின் சோகத்துக்கு நல்லா பொரி வச்சிருக்கியே தென்றல்....

தாமரை
10-06-2007, 02:53 PM
அவள் பொரி(றி)யாதே!
பெங்களூர் வரவும், சித்ரான்னமாக்கி விழுங்க பலர் காத்திருக்கின்றனர்.

இளசு
10-06-2007, 02:59 PM
தென்றலின் கவிதையும்
ஷீ-நிசி, தாமரை சிலேடையும்
வெல்லத்துகள் சேர்த்த அவலாய் ருசிக்கிறது!

ஷீ-நிசி
10-06-2007, 03:01 PM
தென்றலின் கவிதையும்
ஷீ-நிசி, தாமரை சிலேடையும்
வெல்லத்துகள் சேர்த்த அவலாய் ருசிக்கிறது!

அவல் பொரிந்தது உமக்கு வெல்லமாய் ருசிக்கறதா?!:062802sleep_prv:

இளசு
10-06-2007, 03:09 PM
அவல் பொரிந்தது உமக்கு வெல்லமாய் ருசிக்கறதா?!:062802sleep_prv:

பொரிந்தால் பாவம்
மென்றால் போகும்
இதுதான் என் கட்சி!

தாமரை
10-06-2007, 03:12 PM
பொரிந்தால் பாவம்
மென்றால் போகும்
இதுதான் என் கட்சி!


விழுங்கத் தனியா யாரையாவது வச்சிருக்கீங்களா?

வெறும் வாயை மெல்லும் ஊருக்கு அவல் கிடைத்திருக்கு.. மெல்லுங்க மெல்லுங்க..

ஆனால் அவல் பசி தீர்ப்பது எப்போது?(இரு கோணங்களில் காண்க)

ஷீ-நிசி
10-06-2007, 03:14 PM
பொரிந்தால் பாவம்
மென்றால் போகும்
இதுதான் என் கட்சி!

நானும் அந்த கட்சிதான்! :musik010:

இளசு
10-06-2007, 03:24 PM
விழுங்கத் தனியா யாரையாவது வச்சிருக்கீங்களா?

வெறும் வாயை மெல்லும் ஊருக்கு அவல் கிடைத்திருக்கு.. மெல்லுங்க மெல்லுங்க..

ஆனால் அவல் பசி தீர்ப்பது எப்போது?(இரு கோணங்களில் காண்க)


கிளி கிடைக்காமல்
அவலிடம் வந்ததற்கா
இந்த அக்கப்போர்..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=6994

அக்கக்கா... இது தாங்காதக்கா!

தீபா
16-06-2007, 02:33 PM
அன்புள்ளம் படைத்த
அனைத்து மக்களுக்கும்
அடியேனின்
அடிபணிந்த வணக்கங்கள்
அவலை ருசித்தீர்களா?

சிவா.ஜி
16-06-2007, 02:50 PM
அன்புள்ளம் படைத்த
அனைத்து மக்களுக்கும்
அடியேனின்
அடிபணிந்த வணக்கங்கள்
அவலை ருசித்தீர்களா?

வெறும் வாய்க்கு அவல் கொடுத்த கர்ணியே(கர்ணனுக்கு பெண்பால்)நீ வாழ்க

ஆதவா
16-06-2007, 02:57 PM
வாம்மா தென்றல்.. என்ன ரொம்ப நாளா உங்களை ஆளைக் காணோம்? யாருமேல கணைகள் வீசப்போறீங்க?

அதுசரி அதென்ன அவலின் சோகம்? நான் இப்பத்தானப்பு பார்க்கிறேன். திங்கிற அவலா? என்னமோ போங்க.. எதிர்கவிதை எழுதலாம்னு வந்தேன்.. எழுத முடியலை.. சரி போறேன்...

(பென்ஸை நன்றாக கடிக்கவும்.. :D )

தாமரை
16-06-2007, 03:01 PM
வெறும் வாய்க்கு அவல் கொடுத்த கர்ணியே(கர்ணனுக்கு பெண்பால்)நீ வாழ்க


அவல் தந்தவர் குசேலர்... வேணும்னா குசலான்னு சொல்லுங்க.. (பழைய(இந்திரா காந்தி அம்மையார் கால) ராணி வார இதழ் வாசகர் யாராச்சும் இருக்கீங்களா?

ஆதவா
16-06-2007, 03:02 PM
தென்றலே!
உங்களை

ஆதவா
16-06-2007, 03:02 PM
தென்றலே!
உங்களை யாரோ

ஆதவா
16-06-2007, 03:03 PM
தென்றலே உங்களை யாரோ குசலாம்பா என்று சொல்கிறார்... என்னவென்று வந்து கேளுங்கள்.

அமரன்
16-06-2007, 03:04 PM
தென்றலே உங்களை யாரோ குசலாம்பா என்று சொல்கிறார்... என்னவென்று வந்து கேளுங்கள்.
ஆதவரே இதுதான் தவணை முறையில் (போட்டுக்) கொடுப்பதோ

தாமரை
16-06-2007, 03:04 PM
இல்லீங்க அதில நாட்டு நடப்பைப் பற்றி ஒரு கார்ட்டூன் வரும். அதில் இந்திராகாந்தியை குறிக்கும் ஒரு படைப்பு குரங்கு குசலா

ஆதவா
16-06-2007, 03:07 PM
இல்லீங்க அதில நாட்டு நடப்பைப் பற்றி ஒரு கார்ட்டூன் வரும். அதில் இந்திராகாந்தியை குறிக்கும் ஒரு படைப்பு குரங்கு குசலா

அண்ணன் பயந்துட்டாரு போல....:D :D சரி சரி.. குரங்கு குசலா... பேரு அழகா இருக்கே....

அமரன்
16-06-2007, 03:10 PM
அண்ணன் பயந்துட்டாரு போல....:D :D சரி சரி.. குரங்கு குசலா... பேரு அழகா இருக்கே....
எங்க பயந்தாரு. குசலாம்பலோட இன்னொன்றையும் சேர்த்திருக்காரே:sport-smiley-007: :sport-smiley-007: :sport-smiley-007:

ஆதவா
16-06-2007, 03:11 PM
அவலின் சோகம் கடைசியில் அவளின் சோகம் ஆகிவிடப்போகிறது...

சூரியன்
16-06-2007, 03:35 PM
வித்தியாசமான கவிதை கருத்துள்ள கவிதை

தீபா
05-08-2007, 07:53 AM
நன்றிகள்
அனைவருக்கும்
சேரும்