PDA

View Full Version : தமிழ் எழுத்துகள் தெரிய என்ன செய்யவேண்டும

vimal100
09-06-2007, 05:19 AM
உலக தமிழ் நன்பர்களுக்கு... என் கேள்வி?

நாம் ஏதாவது தமிழ் பாண்ட் வைத்து எழுதினால் அதே பாண்ட் உள்ள

கம்ப்யூட்டரில் மட்டுமே எழுத்துக்கள் தெளிவாக தெரிகிறது ஆனால் நம்

கம்ப்யூட்டரில் உள்ள பெய்ண்ட் ஓப்பன் செய்து அதில் இமேஜ் ஓப்பன்

செய்து அந்த இமேஜ் மேல் தமிழ் எழுத்துகளை எழுதி சேவ் செய்து இந்த

பைலை ஒரு இமெயிலுகோ அல்லது அனைத்து வகையான

செல்போனுகளுக்கு அனுப்பும் பொழுது எந்த ஒரு பாண்ட்டும் இல்லாமல்

தமிழ் எழுத்துக்கள் தெரிகிறது இது எப்படி? இதே போல் வேர்ட்டில்

எழுதும் தமிழ் எழுத்துகளும் எந்த பாண்ட் இல்லாமல் அனைத்து கம்ப்யூட்டரிலும் தெரிய வேண்டும் இதற்கு ஏதேனும் வழி உள்ளதா?

ஆதவா
09-06-2007, 05:52 AM
அதை PDF கோப்புகளாக மாற்றீனால் உங்கள் பிரச்சனை எளிதாகும்.. அதிலும் PDF மென்பொருள் உள்ள கணிணியில்தான் திறக்க முடியும்... ஒரே வழி. (இதன் மென்பொருள் PDFCamp எழுத/ திறக்க Acrobat )

உங்கள் ஆக்கத்தை Bitmap/Image ஆக பதித்தீர்களானால் எங்கும் திறக்கலாம்..

இதயம்
09-06-2007, 06:15 AM
எந்த ஒரு எழுத்தையும் பெயிண்டில் எழுதி அதை சேமித்தால் அது இமேஜ் கோப்பாக மட்டுமே சேமிக்கும். அதன் பிறகு அந்த கோப்பில் எழுத்துக்கள் என்பதை இனம்காண முடியாது. காரணம், அது புகைப்படம் போல் ஆகிவிடுவதால். ஆனால் நீங்கள் கூறியபடி செய்து அதில் படம் மட்டும் தெரிந்து அதில் உருவாக்கிய எழுத்து வரவில்லை என்பது ஏற்கமுடியாத முரண்பாடு. ஒருவேளை நீங்கள் எழுத்தில்லாத கோப்பை பயன்படுத்தி இருக்கலாம். நன்றாக சோதித்து பாருங்கள்.

எந்த ஒரு எழுத்துருவின் அவசியமில்லாமல் தமிழ் படிக்க, எழுதவேண்டுமென்றால் சுலப வழி யுனிகோடை பயன்படுத்துவது தான். Tavultesoft keyman என்ற நிறுவனம் கொடுக்கும் தமிழா என்ற மென்பொருள் யுனிகோடில் எழுத மிக சிறப்பானது. PDF என்பது படிக்க மட்டுமே பயன்படக்கூடியது. எனவே தமிழா என்ற மென்பொருளை பயன்படுத்துவது சிறப்பாக இருக்கும். இதை தங்கிலீஷில் தட்டலாம் என்பது கூடுதல் சிறப்பு.

அரசன்
10-06-2007, 10:14 AM
உலக தமிழ் நன்பர்களுக்கு... என் கேள்வி?

நாம் ஏதாவது தமிழ் பாண்ட் வைத்து எழுதினால் அதே பாண்ட் உள்ள

கம்ப்யூட்டரில் மட்டுமே எழுத்துக்கள் தெளிவாக தெரிகிறது ஆனால் நம்

கம்ப்யூட்டரில் உள்ள பெய்ண்ட் ஓப்பன் செய்து அதில் இமேஜ் ஓப்பன்

செய்து அந்த இமேஜ் மேல் தமிழ் எழுத்துகளை எழுதி சேவ் செய்து இந்த

பைலை ஒரு இமெயிலுகோ அல்லது அனைத்து வகையான

செல்போனுகளுக்கு அனுப்பும் பொழுது எந்த ஒரு பாண்ட்டும் இல்லாமல்

தமிழ் எழுத்துக்கள் தெரிகிறது இது எப்படி? இதே போல் வேர்ட்டில்

எழுதும் தமிழ் எழுத்துகளும் எந்த பாண்ட் இல்லாமல் அனைத்து கம்ப்யூட்டரிலும் தெரிய வேண்டும் இதற்கு ஏதேனும் வழி உள்ளதா?

நீங்க என்ன ஃபாண்டில் எழுதியிருக்கிறீர்கள் என்பதையும் மெயிலுடன் சேர்த்து அனுப்புங்கள். பயன்படுத்துபவர் என்ன ஃபாண்ட் என்பதை அறிந்து அதை பயன்படுத்துக் கொள்வார்கள்.