PDA

View Full Version : எங்கும் எப்போதும்...



கலைவேந்தன்
08-06-2007, 05:07 PM
எங்கும் எப்போதும்...

எனக்குப் பிடிக்குமென
என் மனைவி ஆசையாய் சமைத்த
கத்தரிக்காய் குழம்பு கசக்கிறது...

எப்போதும் மனம் கவரும்
என் மகனின் மழலை மொழி
எள்ளளவும் ருசிக்கவில்லை...

நான் விரும்பிப் பார்க்கும்
அரட்டை அரங்கம்
நாராசமாய் ஒலிக்கிறது...

தங்கைக்கு மகன் பிறந்த
தொலை பேசித் தகவல்
தங்கவே இல்லை மனதில்...

தங்கை திருமண
கடனும் வட்டியும் தான்
இங்கும் அங்கும் எங்கும் எப்போதும்...

அமரன்
08-06-2007, 05:14 PM
எப்போதும் மனம் கவரும்
என் மகனின் மழலை மொழி
எள்ளளவும் ருசிக்கவில்லை...


யாழினிது
குரலினிது
என்பார் தம்
மழலைமொழி
கேளாதோர்-
அப்படியான மழமையின் மொழி கசக்கின்றது வட்டிக்கடன் நெருங்(க்)கும் போது.
பாராட்டுக்கள் வேந்தன்.

இணைய நண்பன்
08-06-2007, 07:48 PM
கவிதையின் இறுதியில் காரணத்தை மிக இலகுவாக எடுத்துச்சொன்ன விதம் அற்புதம்.பாராட்டுக்கள்

சிவா.ஜி
09-06-2007, 05:26 AM
சுமைகள் சுவையைக்கூட மறைத்து விடுகிறது.தேவையில்லையெனில் உதறிவிட இது செருப்பு அல்ல பொறுப்பு.சுமையானாலும் சுமந்துதான் ஆகவேண்டியிருக்கிறது. நல்ல கவிதை கலைவேந்தன், பாராட்டுக்கள்.

கலைவேந்தன்
14-06-2007, 07:56 PM
பாராட்டுக்கு நன்றி நண்பர்களே!

ஷீ-நிசி
15-06-2007, 04:10 AM
மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் வட்டியில் மூழ்கிய இதயத்தினை... இறுக்கமான மனதால் எதையுமே ரசிக்கமுடியாது... நிஜம்.

அக்னி
15-06-2007, 04:15 AM
பணப் பிரச்சினை வாழ்வின் வசந்தங்களை ரசிக்கமுடியாததாக்குவதை மிக அழகாக வடித்துள்ளீர்கள்...

பாராட்டுக்கள் வேந்தே...

பிச்சி
15-06-2007, 05:46 AM
நல்ல சமூக கவிதை. எனக்கும் இப்படி ஒரு கவிதை எழுத ஆசை

lolluvathiyar
15-06-2007, 08:39 AM
கலைவேந்தனின் வார்த்தை அருமை, பல் அண்ணன்களின் உன்மை மண ஓட்டங்கள்
(அதுக்குதான் ஆத்துல போட்டாலும் அளந்து போடனும்னு ஒரு பழமொழி உண்டு)

கலைவேந்தன்
15-06-2007, 08:54 AM
பாராட்டிய பண்பட்ட இதயங்களுக்கு நன்றிகள்.

மதுரை மைந்தன்
25-07-2012, 09:03 AM
இந்த கவிதை உங்களுடைய முதல் கவிதையா?. பணம் மனிதனுக்கு மகிழ்ச்சியை தரும் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் பணம் இல்லாமை நிச்சயம் துயரத்தை கொடுக்கும் என்பதற்கு உங்கள் கவிதை ஒரு சான்று. உங்களுடைய எல்லா படைப்புகளையும் காண ஆவலாயுள்ளேன். வாழ்த்துக்கள்.

மதி
25-07-2012, 11:02 AM
வட்டியும் கடனும் மனிதனின் வாழ்க்கையில் எப்படி விளையாடுகிறது.. கடனை வாங்கி வட்டி கட்டி எல்லாம் இருந்தாலும் எதுவும் இல்லை..! நல்ல கவிதைக்கு நன்றி.

கீதம்
25-07-2012, 11:06 AM
வெள்ளைத் தாளில் கரும்புள்ளியாய் வாழ்வின் இனிமைகளை மறக்கடித்துவிடுகிறது அல்லது வெறுக்கவைத்துவிடுகிறது ஒரு கவலையின் உள்ளிருப்பு.

நடுத்தர வர்க்கத்தின் நிலையிலிருந்து மிகவும் ஆழமாய் மனம் புகுந்த கவிதை. பாராட்டுகள்.

சுகந்தப்ரீதன்
25-07-2012, 01:29 PM
கடன்பட்டார் நெஞ்சம் எப்படியெல்லாம் கலங்கும் என்பதற்க்கு எடுத்துக்காட்டாய் அமைந்த அனுபவ கவிதை..!!

வாழ்த்துக்கள் கலையண்ணா..!!:icon_b: