PDA

View Full Version : அன்னையைக் காண்கிறேன்

இனியவள்
08-06-2007, 04:37 PM
சோகங்கள் எல்லம் சென்றுவிட்டன
உன்னைச் சந்தித்த பின்பு

கவலைகள் எல்லாம் மறந்தேன்
உன்னுடன் கதைக்கும் போது

உன் அன்பில் என் அன்னையைக்
காண்கிறேன் இப்பொழுது

அறிஞர்
08-06-2007, 04:59 PM
உன் அன்பில் என் அன்னையைக்
காண்கிறேன் இப்பொழுது
அன்னைக்கு இணையாருண்டு...
அன்னையை காணும் இடத்தில்
என்றும் நிறைவே...

அமரன்
08-06-2007, 05:02 PM
மன்றத்தில் இதே சாயலில் அண்மையில் ஒரு கவிதை படித்ததாக நியாபகம். பாராட்டுகள்....

விகடன்
08-06-2007, 05:14 PM
இனியவளின் கவிதை சொல்வதுபோல் அன்னையிடம் போனால் எந்த இன்னலுமே வராது. சந்தோசத்தைத்தவிர எதையும் காணமுடியாது. பாராட்டுக்கள்.

அறிஞர் சொல்வதுபோல் அன்னையைப்போல் ஓரிரு குணாதிசயங்களில் ஓரளவிற்கு இன்னொருவரை இனங்காணலாம். ஆனால் அன்னைக்கு ஈடாக முடியாது.

அன்னையைப்போல் கவிதை எத்தனை எழுதினாலும் கசக்குமா அமரன்?
சாயலில்த்தானே இருக்கிறது

இனியவள்
08-06-2007, 05:37 PM
அன்னைக்கு இணையாருண்டு...
அன்னையை காணும் இடத்தில்
என்றும் நிறைவே...

அன்னையவளை நினைக்கும் போது
துன்பங்கள் எல்லாம் தூசாக காணாமல் போகின்றது
ம்ம் நீங்கள் சொல்வது சரி தான் அறிஞர் அவர்களே

இனியவள்
08-06-2007, 05:38 PM
இனியவளின் கவிதை சொல்வதுபோல் அன்னையிடம் போனால் எந்த இன்னலுமே வராது. சந்தோசத்தைத்தவிர எதையும் காணமுடியாது. பாராட்டுக்கள்.

அறிஞர் சொல்வதுபோல் அன்னையைப்போல் ஓரிரு குணாதிசயங்களில் ஓரளவிற்கு இன்னொருவரை இனங்காணலாம். ஆனால் அன்னைக்கு ஈடாக முடியாது.

அன்னையைப்போல் கவிதை எத்தனை எழுதினாலும் கசக்குமா அமரன்?
சாயலில்த்தானே இருக்கிறது

அன்னை அவள் அன்புக்கு முன் சொர்க்கம் கூட ஈடாகது