தமிழ் விசைப்பலகை (Tamil Keyboard layout)

நாம் உபயோகப் படுத்தும் விசைப் பலகை (Keyboard) ஒலியியல் (Phonetic) விசைப் பலகை, அதன் மூலம் தமிழில் எப்படி எழுத்துக்களை கோர்ப்பது, என்ற பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.

anjalkbd.gif
 
Last edited:
நன்றி இராசகுமாரன்; படித்து பயனுறுகிறோம். திரைக்குப் பின்னணியில் மட்டும் வந்து போகும் தாங்கள் அடிக்கடி திரைமுன்னும் இதுபோல் வந்தால் மகிழ்ச்சியே! :)
 
நன்றி நண்பரே.. அறிஞருக்கு 'ஞ' போட முடியாமல் திணறிக்கொண்டிருந்தேன்.. இப்ப எல்லா எழுத்துக்களும் தடை இல்லாமல் எழுதலாம்..
அன்புடன்
மன்மதன்
 
kavitha said:
நன்றி இராசகுமாரன்; படித்து பயனுறுகிறோம். திரைக்குப் பின்னணியில் மட்டும் வந்து போகும் தாங்கள் அடிக்கடி திரைமுன்னும் இதுபோல் வந்தால் மகிழ்ச்சியே! :)

இவருக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கை கவி,
இவரின் சேவையும் தமிழ் தொண்டும் நம்மை ஒன்று சேர்த்து
வைத்தது கண்டு அவரும் கண்டிப்பாக மகிழ்வு கொள்வார் என
நானும் மனதார எதிர்பார்க்கிரேன்.

மனோ.ஜி
 
pkchandran said:
நீங்கள் கடவுள் ஜ்யா

நண் pkchandran,
யாரைக் கூறுகிறீர்கள்?
இது ரொம்ப மிகப் படுத்தப் பட்ட சொல்.
மனிதன் மனிதனாக இருந்தாலே போதும்.
 
Is there any software which can translate what i type in english - which means i too can express myself in tamil.
 
Is there any software which can translate what i type in english - which means i too can express myself in tamil.

There is no Tamil To English Translation.

ஆனால் நீங்கள் ஆங்கிலத்தில் ammA என்று அடித்தால் தமிழில் அம்மா என்று வரும். இதற்கு eKalappai என்று மென்பொருட்களை பயன்படுத்தலாம். அல்லது இந்த மென்பொருள் இறக்கி உபயோகிக்கலாம்.

Code:
http://theni.etheni.com/MSPhi.msi
 
Is there any software which can translate what i type in english - which means i too can express myself in tamil.
உங்களுடைய எண்ணங்களை (ஆங்கிலத்தில் உள்ளதை) முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்க... எந்த மென்பொருளும் இல்லை.

மோகன் கூறுவது போல்..... இகலப்பை உபயோகியுங்கள்.. ஆங்கிலத்தில் டைப் செய்து.. கீழ் காணும் யுனிகோட் கன்வெர்ட்டர் மூலம் தமிழுக்கு மாற்றுங்கள்
 
அறிஞர்;168870 said:
உங்களுடைய எண்ணங்களை (ஆங்கிலத்தில் உள்ளதை) முழுவதுமாக தமிழில் மொழிபெயர்க்க... எந்த மென்பொருளும் இல்லை

ஆம், ஐயா, அதே போல தமிழில் voice recognition அதாவது குரல் கேட்டு அதனை தமிழில் தானாக தட்டச்சு செய்யும் மென்பொருளும் உருவாக்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் தமிழில் OCR (Optical character recognition)அதாவது தமிழ் அச்சிட்ட பக்கங்களை பார்த்து டைப் செய்யாமல் அதை வருடி மூலம் ஒரு பைலாக சேமித்து பின் திருத்தும் படியாக மாற்றித்தரும் ஒரு தமிழ் மென் பொருள் பொன்விழி இந்திய அரசு நிறுவனம் இலவசமாக் வெளியிட்டதை எவ்வளவு பேர் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.
 
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?

விச்சு
 
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?

விச்சு
கிரந்த எழுத்துக்களை நாம் அதிகமாக உபயோகிப்பதில்லையே விச்சு...

கிரந்த எழுத்து என்றால் என்ன என பலர் கேட்பார்கள்... அவர்களுக்காக இதோ...

Grantham_Vowels.jpg
 
நன்றி அறிஞரே. நான் இதுவரை அறிந்துகொள்ளாத புதிய விடயம். தமிமன்றத்தில் உங்கள் மூலம் அறிந்துகொண்டேன். ரொம்ப நன்றி.
 
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?

விச்சு

அநேகமாக விச்சு அவர்கள் வடமொழி எழுத்துக்களை குறிக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஷ ஸ ஜ ஹ ஸ்ரீ க்ஷ ஸ்ர த்ர போன்றவை. சரிதானே
 
கிரந்த எழுத்துக்களை எப்படி உபயோகிப்பது?

விச்சு

நண்பரெ,

இந்த திரியின் முதல் பதிப்பில் உள்ள படத்தில் உள்ளதே? கவனிக்கவில்லையா? அது திஸ்கி எழுத்துருவுக்கானது. இருந்தாலும் அது யூனிகோடுக்கும் பொருந்தும்.

ஜ = ja
ஹ = ha
ஸ = Sa
ஷ = sha
ஸ்ரீ = sr
 
அநேகமாக விச்சு அவர்கள் வடமொழி எழுத்துக்களை குறிக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஷ ஸ ஜ ஹ ஸ்ரீ க்ஷ ஸ்ர த்ர போன்றவை. சரிதானே
பொதுவாக இவற்றை வடமொழி எழுத்துக்கள் என்போம்..

கிரந்த வார்த்தைகள் என்று குறிப்பிட்டதால்... இந்த வார்த்தைகளை தேடிக்கொடுத்தேன்.
 
ஃபொனட்டிக் முறை பழக இலகு என்றாலும் வரைவில் தமிழ் 99 அல்லது பாமினி முறைக்கு மாறுவது நன்று.. இதன் மூலம் கீ ஸ்ரோக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறையும் என்பதால் வேகமாகத் தட்டச்சிடலாம்..

ஆயினும் தற்போது இருக்கும பிரைச்சனைப்படி பயனர்களைத் தமிழில் தட்டச்சிட வைக்க ஃபொனட்டிக்குடன் ஆரம்பிப்பது பரவாயில்லை!!
 
Back
Top