நோக்கியா N97

செல்போன் உலகில் பெரிய நிறுவனமான நோக்கியாநிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனுக்கு போட்டியாக நோக்கியா புதிய செல்போன் ஒன்றை சந்தைக்குள் களம் இறக்கியுள்ளது அதுதான் நோக்கியா N97.
இந்த மாடல்தான் திரையின் அளவும் சரி, விலையும் சரி ஐ-போனை ஒத்து இருக்கிறது.ஆனால் வசதிகளை பொறுத்தவரையில் ஐ-போனில் உள்ள திரையை போலவே 3,5“ இன்ச் திரை அளவுடன் ஐ-போனை தூக்கி சாப்பிடும் அளவுக்கு "5 mega pixels camera,Ambient Light Sensor,Compass,Slide-out QWERTY Key Mat,PictBridge,Visual Radio,32 GB memory" என்று ஐ-போனில் இல்லாத பலவசதிகள் நோக்கியா N97 போனில் உள்ளது.

மேலும் திரையில் WIDGETS என்ற அப்ளிகேஷன் மூலம் வானிலை நிலவரங்கள்,லேட்டஸ்ட் செய்திகள்,மற்றும் போனில் உள்ள முக்கிய அப்ளிகேஷங்களை முன்பக்கத்திற்கு கொண்டு வந்து எளிதாக பயன்படுத்த முடியும்,குறிப்பாக தூசி,கீறல் போன்றவற்றிலிருந்து போனின் திரையை பாதுகாக்க முடியும்.

மேலதிக தகவல்களுக்கு

[media]http://www.youtube.com/watch?v=R3AUiVhq7BI[/media]​
 
வாங்கிட்டேன் வாங்கிட்டேன் வாங்கிட்டேன். விரைவில் என் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறேன்.
 
வாங்கிட்டேன் வாங்கிட்டேன் வாங்கிட்டேன். விரைவில் என் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்கிறேன்.

வாங்கப்போறேன்.... வாங்கப்போறேன்.. வாங்கப்போறேன்...

உங்க அனுபவங்களை சீக்கிரமாப் பகிர்ந்து கொள்ளுங்கள் மோகன்.

ஆபிள் ஐ போனா.. நொகியா 97.. முடிவு செஞ்சிடலாம்.
 
வாங்கப்போறேன்.... வாங்கப்போறேன்.. வாங்கப்போறேன்...

உங்க அனுபவங்களை சீக்கிரமாப் பகிர்ந்து கொள்ளுங்கள் மோகன்.

ஆபிள் ஐ போனா.. நொகியா 97.. முடிவு செஞ்சிடலாம்.

ஹா ஹா அமரா இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா,

நானும் சீக்கிரம் எண்டோட ஓட்டை N95 8GB தூக்கி வீசிட்டு 97 தான் வாங்கனும், ஐ போனை விட 97 சிறப்பாக இருப்பதாகதான் என்னுடைய நண்பனும் சொன்னான் வாங்கி பார்த்தால்தான் தெரியும்:icon_rollout:
 
என் தற்போதைய அலைபேசியின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிகிறது சுட்டி. இதையே நீட்டிப்பு செய்தோ புதிதாக ஒப்பந்தம் போட்டோ தீரவேண்டும். அப்படிச் செய்யும் போது 100 அல்லது 150 யூரோக்களுக்கு (சில நேரம் இலவசமாக) N97 ஐப் பெறலாம். தனியாக வாங்குவதாயின் 679 யூரோக்கள். அப்பிள் ஐ போனும் இதே போல்தான். (ஏற்கனவே ஒன்று வாங்கி ஒருவருக்குப் பரிசளித்தாயிற்று:))அதான் இந்த அவசரக் கூவல். எழுத்துகள் மூலம் மக்கள் இணைப்பான் சிறப்பான் என்றே தெரிகிறது. எனினும் அனுபவம் மூலம் அறிதல் நன்றன்றோ.
 
(ஏற்கனவே ஒன்று வாங்கி ஒருவருக்குப் பரிசளித்தாயிற்று:))
எனக்கு உடனடியாகப் பரிசளிக்க வேண்டும் என்ற அவசரம் வேண்டாம் அமரா...
ஒரு வாரம், இரண்டு வாரங்கள் போனாற்கூடப் பரவாயில்லை... ;):rolleyes:
 
Back
Top