தசாவதாரம் mp3

பதிவிறக்கம் செய்யமுடியாமல்த்தான் இருக்க்கிறது.
அங்கே, மூலப்பிரதியை வாங்கச் சொல்லி சொல்லப்பட்டிருக்கிறது. பாடல்களை ஒன்லைனில் மட்டும் கேற்ற்கும்படி வழிவகை செயப்பட்டுள்ளது.
 
என்னால் பதிவிறக்க முடிகிறதே..!!
அந்த பாடல்களில் உள்ள சுட்டியை அழுத்தினால் இலகுவாக பதிவிறக்கத்துக்காகக் கேட்கிறதே..!!

பகிர்ந்தமைக்கு நன்றிகள் அன்பரே..!! :)
 
பிராடிக்கு என் நன்றி..
நானும் பதிவு இறக்கம் செய்து விட்டேன்..
எந்த சிரமும் இல்லையே..
 
தசாவதாரம் பாடல்கள்

இந்தியாவில் இருப்பவர்கள் இலகுவாக பாடல் இறுவட்டுக்களைப் பெற்றுவிடலாம். வெளிநாட்டு நண்பர்களுக்காகத்தான் இந்த இணைப்பைக் கொடுத்தேன்.

அத்தோடு ஒரு சுட்டியை மட்டும் இணைப்பதால் எமது மன்றத்துக்கு காப்புரிமைப் பிரச்சனை வந்துவிடும் என்று தோன்றவில்லை. இது தவறாக இருப்பின் இணைப்பை விரைவில் நீக்கிவிடலாம்.
 
தசாவதாரம் பாடல்கள்

தசாவதாரம் பாடல்கள் அருமையாக உள்ளன. பாடல் வரிகளும் அபாரம். கல்லைக் கண்டு பாடல் வரிகளில் அழுத்தம் அதிகம். ஹிமேஷின் ரீமிக்ஸ் மட்டும் அவ்வளவாக எனக்குப் பிடிக்கவில்லை. உங்கள் கருத்துக்கள் எப்படி?
 
இருங்க பாஸ்...
இப்பத்தான் அணு அணுவாக கேட்டு ரசிக்க துவங்கி உள்ளேன்.. விரைவில் சொல்றேன் பாட்டு எப்படின்னு..
 
நன்றி தலைவா...
தங்கள் உதவியால் அனைத்து பாடல்களும் கேட்டேன்..


உணர்வு பூர்வமான பாடல்கள்..

வித விதமான பாடல்கள்..


பாடல்களின் மூலமும் இது ஒரு சாதாரண மசாலா படம் அல்ல என்ற உறுதியை சொல்லாமல் சொல்கிறது..

தமிழக செய்திகளை விட.. இப்பட செய்தி.. உலக செய்திகளில் இடம் பிடிக்க ஆரம்பித்திருப்பது.. தமிழனாக இருந்து ஒரு தமிழனை வாழ்த்துகிறேன்..

பாடல்களை கேட்பதற்கு முன்.. யார் இந்த இசை அமைப்பாளர் என்றே தோன்றியது..
ஆனால் பரவாயில்லை..
விருமாண்டிக்கு எப்படி கிராமிய மணம் வீசியதோ.. அதை போல் இக்கதைக்கு ஏற்ற வாறு பல விதங்களில் பாடல்கள் உள்ளது..

இதில் பாடல் வரிகளை சொல்லியே ஆக வேண்டும்... வரிகளை கேட்க விடாமல் இரைச்சல் அதிகம் கலக்காமல் அதே நேரத்தில் பாஸ்ட் பீட் அமைத்த இசை அமைப்பாளரை பாராட்டுகிறேன்..

வாலிக்கும் வைரமுத்துவுக்கும்.. சரியான போட்டி தான்..

வரிகள் அருமை..

எனக்கு.. வைர முத்துவின் வரிகள் தான் ரொம்ப பிடிக்கும்..

இப்படத்தை பொறுத்த வரை..

வாலி கொஞ்சம் முந்தி கொண்டார் என கருதுகிறேன்..
கல்லை மட்டும் கண்டால் பாடலை... வாலி எழுதி கலக்குவார் என்று எதிர் பார்க்க வில்லை...
ராமனுஜர் பாடும் பாடல் அது... அருமை..

உலக நாயகன் பாடல்.. கமலை.. உயர்த்தும்.. ரசிகர்களின் பாடல்... அதில் வரும் வரிகளும்.. நன்று..

முகுந்த.. முகுந்தா..
மீண்டும் ஆன்மீகர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் பாடல்..
மகா நதி யில் வந்த ச்ரி ரஙனாதனின் ..
பாடலுக்கு அப்புறம் வரும் பக்தி பாடல்..

காட்டை திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு

இந்த பாடல்களின் வரிகளும் அருமை..



பாடல்களில் அனைத்தும் அருமை தான்..

ஆனால்.. என்னை பாதித்தது....
உலக நாயகன்..................................................................................95 மதிப்பெண்
கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது............95 மதிப்பெண்
முகுந்த முகுந்தா..... ........................... 95 மதிப்பெண்...

ஓ சனம்....... கமல்.............................................. 90 மதிபெண்
கா.. கருப்பனுக்கும்............................................................ 85 மதிப்பெண்
ஓ சனம் ரீமிக்ஸ் ... .........................................................................80 மதிப்பெண்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
Last edited:
ஆகா!!!!இப்பொழுதுதான் கலைஞர் தொ.காட்சியில் பாடல் வெளியீட்டு விழாவை பார்த்துவிட்டு வந்து தமிழ்மன்றத்தில் உட்கார்ந்தேன். உடனே பாடல்களையும் கேட்கும் அதிர்ஷ்டம் கிட்டிவிட்டதே. அதுதான் நம் தமிழ்மன்றம்
மிக்க நன்றி நண்பரே
 
முகுந்த.. முகுந்தா..
மீண்டும் ஆன்மீகர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் பாடல்..
மகா நதி யில் வந்த ச்ரி ரஙனாதனின் ..
பாடலுக்கு அப்புறம் வரும் பக்தி பாடல்..

காட்டை திறக்கும் சாவிதான் காற்று
காதை திறக்கும் சாவி தான் பாட்டு
இந்த பாடல்களின் வரிகளும் அருமை..

இந்தப் பாடலின் இறுதியில் கமல் கிழவியின் குரலில் பாடியிருப்பார். பாடல் காட்சியிலும் கமல் கிழவியாகவும் வருகிறார்.

ஐ.பி.எல். போட்டிகள் காரணமாக படத்தின் வெளியீடு june மாதத்துக்கு தள்ளிப்போயிருக்கிறது. கிரிக்கெட் விசிறியான எனக்கே கிரிக்கெட் போட்டிகள்மீது எரிச்சல் வரவழைத்திருக்கும் நிகழ்வு இது.
 
அற்புதம்.

பாடல் காட்சிகளும் பிரமாதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. அற்புதம்.
 
தசாவதாரம்....சூப்பர் படம்,,,பிரமாதம்,,,பிரமாண்டம்,,,சொல்ல வார்த்தைகள் வற்றிப்போனதே!!! முகுந்தா..முகுந்தா.......கமல் என்றென்றும் அதிரவைக்கும் கலைமகன்....!!!ஆஆஆ
 
தசாவதாரம்....சூப்பர் படம்,,,பிரமாதம்,,,பிரமாண்டம்,,,சொல்ல வார்த்தைகள் வற்றிப்போனதே!!! முகுந்தா..முகுந்தா.......கமல் என்றென்றும் அதிரவைக்கும் கலைமகன்....!!!ஆஆஆ


வாருங்கள் மலர்விழி.. வரவேற்புகள். உங்களைப் பற்றி இங்கே அறிமுகம் கொடுக்கலாமே?


http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38
 
Back
Top