கைப்பேசி எண்ணை வேறு சேவை நிறுவனத்திற்கு பெயர்ப்பிப்பது (mobile portability) எப்படி?

p.suresh

New member
கைப்பேசி உபயோகிப்பாளர்கள் வசதிக்காக வரும் சன 20 2011 முதல் கைப்பேசி எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் வசதி அறிமுகம் படுத்தப்பட உள்ளது.

அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:


1.நாம் முதலில் PORT <MOBILENUMBER> என்று 1900 எண்ணுக்கு sms அனுப்ப வேண்டும்.

2.நம் கைப்பேசிக்கு ஒரு பெயர்ப்பித்தல் எண் கிடைக்கப்பெறும்.

3.அதனை நாம் மாற விரும்பும் சேவை நிறுவனத்திற்கு sms செய்ய வேண்டும். அந்த எண் ஒரு சில தினங்கள் மட்டுமே உயிர்ப்பித்தலில் இருக்கும்.

4.இப்போது நம்முடைய தற்போதைய சேவை நிறுவனம் நிலுவையில் உள்ள பிரச்சினைத் தொடர்பாக ஆராய்ந்த பின்னர்,வேறு நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ள அனுமதி கிடைக்கும்.

5.புது சேவை நிறுவனத்திடமிருந்து நம் எண்ணை பெயர்ப்பிக்கும் தேதி மற்றும் காலம் பற்றிய தகவல்கள் smsல் கிடைக்கப்பெறும்.

6.இந்த நடைமுறை நாம் விண்ணப்பித்த 4 தினங்களுக்குள் கிடைக்கப்பெறும்.

7.பெயர்ப்பித்தலின்போது நம் கைப்பேசி 2 மணி நேரத்துக்கு செயலிழப்பில் இருக்கும்.


இதற்க்கு 19ரூ மற்றும் முறையான சான்றிதழ்கள் மட்டுமே தேவை.
 
மிகவும் உபயோகமான சேவை இது. இது இந்தியாவில் முதன்முதலாக ஹரியானாவில் ஆரம்பிக்கபட்டுவிட்டது. சென்ற வருடமே வரப்போவததாக அறிவிக்கப்பட்ட இந்த சேவை சில விதிமுறைகள் வகுக்கபட்டு இப்பொழுதுதான் வரப்போகிறது.தரமற்ற சேவை தரும் கைபேசி நிருவனங்களிடம் இருந்து வேறு நிருவனத்திற்க்கு எளிதாக மாறிக்கொள்ளலாம்.பெயர்ப்பித்தல் எண்னை எவ்வாறு நாம் விரும்பிய கைபேசி சேவை நிருவனத்திர்க்கு எந்த முறையில் (sms number) அனுப்ப வேண்டும் என்பதை சுரேஷ் பின்பு விளக்குவார் என நம்புகிறேன்.
பதிவை பதிக்க விசைபலகையில் நடனமாடிய உங்கள் விரல்களுக்கு என் நன்றி
 
நாம நேரடியாக போக வேண்டிய அவசியமில்லையா? ஒரு sms அனுப்பி வேறு நிறுவனத்தின் சேவையை பெற்றுக் கொள்ளலாமா?
 
அவ்வளவு எளிதாக மாற்றிவிடமாட்டார்கள். நிச்சயம் மக்களுக்கு இது மன உளைச்சலையே கொடுக்கும் என்று நினைக்கிறேன்.
 
இந்தியாவில் எந்த அளவுக்கு இது செயல் முறையில் நடக்கிறது என்பது கேள்விக்குறியே:smilie_abcfra:
 
Back
Top