மயூ
New member
கூகிள் கம்பனி பல ஆயிரம் செலவழித்து தயார்த்த அந்ரொயிட் மென்பொருள் இப்போது அப்பிள் இரக தொலைபேசிகளுக்குப் போட்டித் தொலைபேசிபேசி தயாரிக்கும் நிறுவனங்களின் தாரக மந்திரம். சாம்சுங், எச்.டி.சி போன்ற நிறுவனங்கள் இந்த கைத்தொலைபேசி இயங்குதளத்தைப் பாவிக்கின்றன. இவற்றை விட கூகிள் நிறுவனமே கூகிள் நெக்சஸ் என்று ஒரு தொலைபேசியை வெளியிட்டுள்ளது.
அந்திரொயிட் மென்பொருள் இயங்குதளம் திறந்த மூலம் என்பதனால் நாளைக்கே நீங்கள் ஒரு செல்பேசி நிறுவனம் திறந்தாலம் உங்கள் செல்பேசியிலும் இலவசமாகப் பாவித்துக்கொள்ளலாம். அத்துடன் உங்களுக்குத் தேவையான மாற்றங்களையும் செய்துகொள்ளலாம்.
எல்லாம் சரிதான் ஆனால் இந்த தொலைபேசிகளை வாங்குவதற்கு கொள்ளை விலை கொடுக்கவேண்டியிருக்கும். இத்தனை நாளும் இந்தக் காரணத்தால் நொக்கியாவே தஞ்சம் என்று இருந்துவிட்டோம்.
அண்மையில் ஸ்மார்ட் நகர்பேசி வாங்கவேண்டும் என்ற சிரங்கு வருத்தம் மிக உச்சியை அடைந்துவிட்டது. பெருமளவில் பணம் செலவழிக்கவும் விருப்பம் இல்லை ஆகவே சந்தையில் எந்த தொலைபேசியை வாங்கலாம் என்று விசாரிக்கத் தொடங்கினேன்.
பல ஆராய்ச்சிகளின் பின்னர் அண்மையில் பத்தாயிரம் இந்திய ரூபாய்களுக்கு LG OPTIMUS எனும் அன்ரொயிட் தொலைபேசியை வாங்கினேன்.
இதில் முக்கிய விடையம் என்னவென்றால் அந்திரொயிட் 1.6 இயங்கு தளமே உள்ளது. சந்தையில் இப்போது அன்ரொயிட் 2.2 தொலைபேசிகளும் வந்துவிட்டன. ஆனாலும் இணையத்தில் கணனிமூலம் தொலைபேசியை இணைத்து உங்கள் LG OPTIMUS இன் இயங்குதள பதிப்பை 2.1 க்கு ஏற்றிக்கொள்ளலாம்.
தொலைபேசில் நான் விரும்பும் முக்கிய விடையங்கள்
1. GPS: ஹைதராபாத்தில் தலையை சுற்றி பேக்காட்ட வெளிக்கிடும் ஆட்டோக் காரப் பசங்களைக் கண்காணிக்க மிகவும் உகந்த கருவி உள்ளமைந்துள்ளது.
2. பாடல் கேட்கும் வசதி. இது பல தொலைபேசிகளிலும் இப்போது இருக்கும் ஒரு வசதி.
3. பேஸ்புக், ஜிமெயில் போன்ற இணையத்தளங்களை மின்னல் வேகத்தில் பார்க்க கூடிய தன்மை
4. தொலைக்காட்சி விளம்பரத்தில் வருவதுபோல பார்கோட் ஸ்கானர், மொழிமாற்றி போன்ற பல செயலிகள்
5. 3 மெகா பிக்சல் கமிரா உள்ளது. புகைப்படங்களில் தரம் பரவாயில்லை. ஆகா ஓகோ என்று இல்லாவிட்டாலும் ஓரளவு தரமாகவே உள்ளது.
6. 3ஜி வலையமைப்பில் 7 Mbps வேகத்தில் இணையலாம்
7. wi-fi ஆதரவு உண்டு
8. DivX காணொளிகளை இயக்கும் வல்லமை
மேலும் அறிய http://www.gsmarena.com/lg_gt540_optimus-3081.php
வழமை போல தமிழ் ஆதரவு பூச்சியம். ஒபேரா மினி மூலம் தமிழ் தளங்களை வாசிக்கலாம். மன்றத்தையும் பார்த்தேன் அழகாகத் தெரிகின்றது. ஆனால் உள்ளிடுவதில் சிக்கள் உள்ளது.
கொடுத்த பணத்திற்கு மிகவும் திருப்தியாக இந்த தொலைபேசி உள்ளது. :icon_b:
ஏதும் கேள்வியிருந்தால் கேளுங்கள் விடை கொட்டப்படும்.

Last edited: